வெள்ளி, 20 மே, 2022

வெள்ளி வீடியோ : சோலை நடுவிலே தூய தமிழ் பாடும் நீல குயிலும் நீதானா 

 தேவியின் திருமணம் என்றொரு படம் வெளிவந்திருக்கிறது 1977ல்.  முத்துராமன், கே ஆர் விஜயா, பத்மப்ரியா நடித்திருக்கின்றனர்.  மாதவன் இயக்கம்.  கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.

அந்தப் படத்திலிருந்து வாணி ஜெயராமும், பி சுசீலாவும் பாடிய ஒரு பாடல்.  பாடல் இனிமையாக இருக்கிறது.  வாணி அம்மா "எந்த மங்கை தேவமங்கையோ என்னும் வரியைப் பாடும்போது நிறுத்தி நிதானமாக  அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கிறார். 

இரண்டாவது சரணம் பி சுசீலா பாடுகிறார்.  பாடலிலிருந்து ஓரளவு கதையை யூகித்துக் கொள்ளலாம். 


***********************************

ஏ கே வேலன் இயக்கத்தில் 1960 ல் வெளியான திரைப்படம் பொன்னித்திருநாள்.  வி கே ராமசாமி, மனோரமா, எல் விஜயலக்ஷ்மி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக முத்துகிருஷ்ணன் என்பவர் நடித்திருக்கிறார்.  படத்தின் பாடல்களை தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி, புத்தநேரி சுப்ரமணியம், மற்றும் இந்தப் பாடலை எழுதி இருக்கும் பி கே முத்துசாமி ஆகியோர் எழுதி இருக்கின்றனர்.   கே வி மகாதேதேவன் இசை.

பி பி ஸ்ரீனிவாஸ் பாடி இருக்கும் இந்தப் பாடலில் பாடல் வரிகள் சிறப்பாக புனைய பட்டிருக்கின்றன.


56 கருத்துகள்:

 1. காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
  அன்ன நீரார்க்கே உள...

  வாழ்க குறள் நெறி..

  பதிலளிநீக்கு
 2. நட்பின் நன்மலர்கள் அனைவருக்கும் அன்பின் வணக்கம் ...

  இனிய சொற்களே உறவாக
  இறையருள் சூழ்க நிறைவாக..

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க..  வாழ்க...

    வாங்க துரை செல்வராஜூ ஸார்.  வணக்கம்.  வேண்டுவோம்.

   நீக்கு
 3. // புத்தநேரி சுப்ரமணியம்,
  கே வி மகாதேவன்.. //

  பதிலளிநீக்கு
 4. // ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து..//

  இந்தப் பாடலை மீண்டும் நினைவுபடுத்தி விட்டீர்கள்..

  77 களில் இப்படியான பாடல்கள் ஏற்படுத்திய தாக்கம் அலாதியானது..

  நீருக்குள் கல் எறிந்த நீர்த் தடம் மறைந்தாலும்
  நெஞ்சுக்குள் கண் எறிந்த மலர்த் தடம் மறைவதே இல்லை!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... அழகாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். ஆம், இது ஒரு மகா இனிமைப் பாடல். என்ன ஒரு குழைவான குரல்..

   நீக்கு
 5. // ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்.. //

  ரொம்ப நாளாயிற்று கேட்டு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா..   கேட்டிருக்கிறீர்களா, ஏற்கெனவே?  படம் பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைக்கவில்லை!

   நீக்கு
  2. இரண்டு பெண்கள் வேறு வேறு உணர்வுகளுடன் ஒன்றைப் பற்றிப் பாடுவதான பாடல்கள் அந்த கால கட்டத்தில் மிகவும் பிரசித்தம்.. ஆலங்குடி சோமு, கவியரசர் மற்றும் வாலி ஆகியவர்கள் அடித்து ஆடி இருக்கின்றார்கள்..

   மெல்லிசை மன்னர்களும் ஈவு இரக்கமின்றி போட்டுத் தாக்கியிருப்பார்கள்..

   நீக்கு
  3. சமீபத்தில் மீண்டும் காதில் ஒலித்து இந்த பாடலை ரசித்தபோது பகிரும் எண்ணம் வந்தது.

   நீக்கு
 6. நேற்று அதிக பாரத்தை ஏற்றி விட்டதால் இன்றைக்கு பதிவு இலகுவாக இருக்கின்றதோ!..

  பதிவின் பாடல்கள் அருமை என்றாலும் ஏதோ ஒன்று குறைகின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேற்று அதிக பாரம்?  மனதிலா, பதிவிலா?!!

   என்ன குறைகிறது?  தனிப்பாடல்?

   நீக்கு
  2. நேற்றைய பதிவு மிகவும் கனமானது ..

   இன்றைய பதிவு -
   கண்டிப்பான அத்தை அழகான மகளுடன் வந்திருப்பதைப் போல் இருக்கின்றது..

   அதைச் சொன்னேன்!..

   நீக்கு
  3. கண்டிப்பான அத்தை, அழகான மகள்...   சூப்பர்தான்.  ஆனால் சொந்தத்தில் திருமணம் செய்யக் கூடாதுங்கறாங்களே..!!

   நீக்கு
 7. இரண்டு பெண்கள் வேறு வேறு உணர்வுகளுடன் ஒன்றைப் பற்றிப் பாடுவதான பாடல்கள் அந்த கால கட்டத்தில் மிகவும் பிரசித்தம்.. ஆலங்குடி சோமு, கவியரசர் மற்றும் வாலி ஆகியவர்கள் அடித்து ஆடி இருக்கின்றார்கள்..
  மெல்லிசை மன்னர்களும் ஈவு இரக்கமின்றி போட்டுத் தாக்கியிருப்பார்கள்..

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  அமைதியும் ஆரோக்கியமும் நிறை வாழ்வு தொடர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 9. இரண்டு பாடலும் கேட்ட நினைவில்லை. பெங்களூர் மழை குளிர். 6 மணிக்குப் பாடலை ஒலிக்கவிட முடியாது. பிறகு கேட்டு எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 10. இரண்டாவது பாடலை முதலில் சொல்லி விடுகிறேன்.
  1960 இல் திண்டுக்கல் போன போதில் இந்தப் பாடல்
  ரேடியோவில் ஒலிக்க ஆரம்பிக்கிறது.

  அவ்வளவு தான் எனக்கும் தோழிகளுக்கும்
  ஏறக்குறைய பித்தம் பிடிக்கும் நிலை:)

  அத்தனை அழகான தமிழ். அத்தனை அழகான் அருமையான
  ஸ்ரீனிவாஸ் சாரின் குரலில்.

  மீண்டும் மீண்டும் தெற்காசிய நேயர்கள் விரும்பிக் கேட்க
  தினமுமே கேட்டு மயங்கிய பாடல்.
  ''சோலை நடுவிலே தூய தமிழ் பாடும் நீலக் குயிலும் நீதானா"

  அதுவரை நாங்கள் கறுப்புக் குயில் என்று நினைத்திருந்த எண்ணம்
  மாறியது.
  பொன்னித் திரு நாள் படமும் பார்க்கவில்லை.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா..  மக இனிமையான பாடல்.  இப்போதே இப்படி மயக்கினால் அப்போது எப்படி கவர்ந்திருழுத்திருக்கும்?

   நீக்கு
 11. இணையத்தில் எத்தனை நாட்கள் தேடி இருப்பேன் என்று தெரியாது.

  இதே படத்தில் அத்தானைப் பாரு என்றொரு பாடலும் ஈஸ்வரி குரலில் வரும்.

  பதிலளிநீக்கு
 12. நாங்கள் நினைத்திருந்த காட்சி வேறு.
  யூ டியூபில் வந்த காட்சி வேறு,'
  வெறும் குரலால் எங்களை பதின்ம வயதில் ஈர்த்த பாடல்,
  வடிவமைக்கப் பட்ட விதம் வேறு விதமாக இருந்தது.:)

  மிக மிக நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியான ரசிப்புகள் மனதுக்கு நிறைவாய் இருக்கின்றன.

   நீக்கு
 13. @ ஸ்ரீராம்..

  //ஆனால்,சொந்தத்தில் திருமணம் செய்யக் கூடாதுங்கறாங்களே!..//

  இதெல்லாம் வாலறுந்து போன மேலை நரிகளின் சதி..

  எனக்குத் தெரிந்து எவ்வளவோ பேர் நன்றாகத் தான் இருக்கின்றார்கள்..

  நேற்றைய தினமலரில் ஒரு செய்தி..
  இசையமைப்பாளன் ஒருவன் 12 ஆண்டுகள் கழித்து இரண்டு பிள்ளைகளுடன் மனைவியைக் கழற்றி விட்டு வேறொன்றைத் தேடித் தாவியிருக்கின்றான்.. புதிய கிளையோ கையில் ஒரு பிள்ளையுடன்.. அங்கே காட்ட விரும்பும் அன்பினை பெற்றெடுத்துத் தோளில் இட்டுத் தாலாட்டிய பிள்ளைகளிடம் காட்ட இயலாமல் போனது ஏன்?..

  இதுவே மாமன் மகள் அத்தை மகள் என்றிருந்தால்!?..

  ஒரு துளி கண்ணீர் வாழ்க்கையை வசந்தம் ஆக்கி இருக்காதா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சொந்தத்தில் திருமணம் செய்யக் கூடாதுங்கறாங்களே!// - சொந்தத்தில் திருமணம் எப்போதுமே வரவேற்கத்தக்கது. அதில் பிரச்சனைகள் மிகவும் குறைவு. இது ஆரம்பித்ததன் காரணம், சொத்து தங்கள் குடும்பத்தைவிட்டு வெளியில் செல்லக்கூடாது என்றாலும், வயதானவர்களைப் பார்த்துக்கொள்வதில் சொந்தத் திருமணம், அசல் திருமணத்தைவிட பெட்டர்

   நீக்கு
  2. சொந்தத்தில் திருமணம் செய்தால் நோய்கள் மண்டும், எதிர்ப்பு சக்தி இருக்காது என்றெல்லாம் சொன்னார்கள்.  துரை செல்வராஜூ ஸார்...  இமான் பற்றிய செய்தி நானும் படித்தேன்.

   நீக்கு
 14. முதல் பாடல் வந்த காலத்தில் இது போல நிறைய படங்கள்
  வந்தன. முக்கோணக் காதல்கள்.:)

  இன்னோரு படத்தில் கூட சுஜாதா, பத்மப் பிரியா
  எதிர் எதிராகப் பாடும் பாடல் இருக்கும்.

  அபூர்வ ராகம் படத்தில் ஸ்ரீவித்யா பாடும் கேள்வியின் நாயகனே

  பாடலும் நினைவுக்கு வருகிறது.
  இந்தப் பாடலின் இனிமை அருமையான குரல்களின் மகிமை.
  வாணி ஜயராம். சுசீலா இசைந்து இசைத்த இசை.

  நாயகனுக்கு மட்டும் தெரியும் செகண்ட் ஹீரோயின். :)
  நன்றி ஸ்ரீராம். வாழ்த்துகள். பாடல்கள் இரண்டும் ரத்தினங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்லும் அந்தப் பாடலும் என் லிஸ்ட்டில் இருக்கிறது.  அதுவும் வாணி ஜெயராம்தான்.  காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்  எனும் பாடல்.

   நீக்கு
 15. இரண்டு பாடல்களும் கேட்டு ரசித்த நல்ல பாடல்களே...

  //பாடலிலிருந்து ஓரளவு கதையை யூகித்துக் கொள்ளலாம்//

  இதுதான் பழைய கவிஞர்கள் காலம்..

  பதிலளிநீக்கு
 16. அனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
 17. நேற்று ஜெயா டி.வியில் பி.பி,ஸ்ரீனிவாஸ் அவர்கள் தொகுத்து அளித்த தேங்கிண்ணம் மிக அருமையான பாடல்களை அளித்தார்.
  அவர் பாட்டை தொழிலாக எடுப்பதற்கு அப்பா, ஜோதிடர் எல்லாம் மறுப்பு தெரிவித்தும் பாடுவதை தொழிலாக எடுத்து வெற்றி பெற்றதை சொன்னார்.

  முதல் பாடல் கேட்டு பல வருடம் ஆகி விட்டது. பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிளில் படபிடிப்பு நடந்து இருக்கிறது.
  இரண்டு தடவை அந்த கோயிலுக்கு போய் இருக்கிறேன்.

  தனி பாடல் இல்லையே இன்று?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெயாவில் மறுஒளிபரப்பு செய்தார்களா? நான் பார்க்கவில்லை. தனிப்பாடல் பின்னர் சேர்க்க எண்ணி மறந்து விட்டது.

   நீக்கு
  2. மறுஒளிபரப்புதான். மீண்டும் மீண்டும் பிரபலங்கள் தேன்கிண்ணம் ஒளிபரப்பு ஆகிறது. கண்ணதாசன் மகன் வழங்கிய கண்ணதாசன் பாடல்கள் வைத்தார்கள். அருமையான பாடல்கள்.

   நீக்கு
 18. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் அருமை.

  முதல் பாடல் இதுவரை கேட்டதில்லை. இரண்டாவது பாடலை இப்போது கேட்ட போது ஏற்கனவே நிறைய தடவை கேட்டு ரசித்தது நினைவுக்கு வந்தது. ஆனால் இருபடங்களையுமே இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இன்று இரு பாடல்களையும் கேட்டேன் வெகு இனிமையாக உள்ளது. .

  திருமதி வாணிஜெயராம், திருமதி பி. சுசீலா, திரு பி. பி ஸ்ரீ னிவாஸ் இவர்களின் குரலினிமைக்கு கேட்கவா வேண்டும். அருமையான பாடகர்கள். அதனால்தான் நாம் மறக்க முடியாத பாடல்களை தந்துள்ளார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  இன்று தனிப்பாடலாக எதுவும் பகிரவில்லையே என நான் கேட்க வந்தேன். சகோதரி கோமதி அரசு அவர்களும் அதையே கேட்டுள்ளார்கள். ஒரு மாற்றத்திற்கான பகிர்வோ ? நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் பாடல் நிறையபேர் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நானும் நினைத்தேன். இரண்டாவது பாடல் வெகு பேமஸ். தனிப்பாடல் அவ்வப்போது சேர்க்கிறேன் என்றுதானே சொன்னேன்? ஹிஹிஹி!

   நீக்கு
 20. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்!
  பாடல்கள் மிக இனிமை! முதல் இரண்டு பாடல்களை முதலில் கேட்டிருக்கிறேன். மூன்றாவது பாடல், P. B. ஸ்ரீனிவாஸ் அவர்களின் தாலாட்டிடும் குரலில் மேலும் இனிமை சேர்க்கிறது!

  பதிலளிநீக்கு
 21. இரண்டு பாடல்களுமே கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். ரசித்த பாடல்கள். ஆனால் மறந்து போனதை நீங்க இங்கு நினைவுபடுத்திட்டீங்க. படம் பற்றி எதுவும் தெரியாது பாடல்கள் மட்டுமே கேட்டிருக்கிறேன். படம் பெயரே நீங்க இங்கு சொல்லித்தான் தெரிகிறது, ஸ்ரீராம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 22. @ ஸ்ரீராம்...
  // சொந்தத்தில் திருமணம் செய்தால் நோய்கள் மண்டும் .. (என்று சொல்கின்றார்கள்)..//

  வீட்டுக்கு வீடு பிள்ளைகள்
  குறைந்து போய் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஆகின்றன... நோய் நொடிகள் தொலைந்து விட்டனவா?.. அன்றைக்கு மாதிரி இல்லை.. சாதி விட்டு சாதி, மதம் விட்டு மதம் - எல்லாம் நடந்தும் வாழ்க்கையில் ஆரோக்கியமாக இருக்கின்றார்களா?..

  கருவிலே திருவுடையார் என்பது அன்றைக்கு.. இன்றைக்கு கருவிலே குறையுடையார்..

  எல்லாமே கை மீறிப் போய் விட்ட நிலை!..

  உங்களுக்கு அருகேயே ***** நோய்க்கான மருத்துவமனை.. என்று விளம்பரங்கள்..

  கண்ணீரோடு வாருங்கள்..
  கர்ப்பத்தோடு செல்லுங்கள்!..
  ஊரெல்லாம் தெருவுக்குத் தெரு சத்தம்..

  இந்தக் கருத்து யாரையும் காயப்படுத்துவதற்காக இல்லை..

  பதிலளிநீக்கு
 23. ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து' சிறுவயதில் கேட்டபாடல் அப்போது பிடித்ததில்லை.
  'ஸ்ரீதேவி வரம்கேட்கிறாள்' பின்னர் கேட்டபாடல். நல்லபாடல்கள்.

  பதிலளிநீக்கு
 24. இரண்டு பாடல்களும் கேட்ட நினைவில்லை. முழுதும் கேட்டுப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!