ஞாயிறு, 29 மே, 2022

லால் பாக் உலா :: K G கௌதமன்

 

மே 20 முதல் 24 வரை உதகமண்டலத்தில் தாவரவியல் பூங்கா - மலர்க் கண்காட்சி நடந்த அதே நேரத்தில் எனக்கும் அருகில் உள்ள தாவரவியல் பூங்கா சென்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது. 

மே 22 ஆம் தேதி, ஞாயிறு அன்று லால் பாக் - பெங்களூரு தாவரவியல் பூங்கா சென்றேன். 

லால் பாக் ஆரம்பிக்கப்பட்ட காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - ஹைதர் அலி காலத்தில் என்று விக்கி சொல்கிறார். 

என்னுடனும் 'விக்கி' என்று ஒரு பையன், இந்த லால் பாக் விஜயத்தின்போது கூடவே வந்து சுற்றுலாவை கலகலப்பான ஒன்றாக செய்தான். 

அந்த விஜயத்தின்போது எக்கச்சக்கமாக படங்கள் எடுத்தேன். 

அவற்றில் சிலவற்றை உங்களோடு இந்த வாரமும், வரும் சில வாரங்களிலும் பகிர்ந்துகொள்கிறேன். 

அன்புடன் 

கௌதமன். 

= = = = =


ஹோசூர் மெயின் ரோட் வழியாக (காரில்) சென்று, வடக்கு பக்க வாயில் மூலமாக உள்ளே நுழைந்தோம். 

கார் பார்க்கிங் பகுதியில் நூற்றுக்கணக்கான கார்கள் - ஏற்கெனவே அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

மிகவும் தேடி - கடைசியில் அரும்பாடு பட்டு ஓர் இடம் கண்டுபிடித்து காரை நிறுத்தினோம். 

பிறகு உள்ளே நடைபயணம்.  












(தொடரும்) 


89 கருத்துகள்:

  1. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பதரிது..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம் ...

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. நேற்றுக் காலையில் அங்கு நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் செல்ல இருக்கிறேன். மாம்பழ பலாப்பழ ஸ்டால்கள் (இயற்கையானது, பல்வேறு தோப்புகளிலிருந்தி கொண்டுவந்து விற்பது) 80க்குமேல் இருக்கின்றன. இதெல்லாம் நீங்கள் சென்றிருந்தபோதும் இருந்ததா என்று தெரியவில்லை. இது தவிர பலாப்பழங்களை சுளையெடுத்து விற்கும் இருபது ஸ்டால்கள், மற்ற பொருட்கள் விற்பனை... இவற்றை மனைவிக்குக் காண்பிக்கத்தான் இன்று செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்று கண்டு களியுங்கள்...

      நீக்கு
    2. நான் சென்றது ஞாயிறு காலை நேரம் என்பதால், சோம்பேறி பெங்களூரு அப்பொழுது சுறுசுறுப்பு இல்லாமல்தான் காணப்பட்டது. திரும்பி வர கிளம்பிய நேரத்தில் ஆங்காங்கே சில ஸ்டால் திறந்துகொண்டிருந்தனர். Hopcoms ஸ்டாலில் ஒரு பெட்டி மாம்பழங்கள் வாங்கினோம்.

      நீக்கு
  4. நீங்கள் நுழைந்த இடம், நான் இருபது நிமிடங்கள் உள்ளே நடந்தபிறகு வரும் இடம். தொடர் ஆரம்பிக்கும்போதே லால்காக்கின் வீச்சைத் தெரிவிக்கும் படம் ஒன்றுகூட போடலையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் வரும்..! அதுதான் தூரம் என்று சொல்லி இருக்கிறாரே... இன்னும் சற்று தூரத்தில் வரும்.

      நீக்கு
  5. ஒரு தடவை இந்த பார்க்கைச் சுற்றி வேக நடை போட 40 நிமிடங்களாகும். ரொம்ப பழக்கமில்லாமல், இடையில் நடப்பதை நிறுத்தி, பார்க் இடையில் புகுந்து நாம் நுழைந்த வாயிலுக்குச் செல்லலாம் என நினைத்தால் அது கடினம். திசை, பாதை தெரியாமல் குழம்பிவிடுவோம். இதில் உள்ள பிரம்மாண்ட மரங்களை (மூணு நாலு இருக்கின்றன) கேமராவில் கொண்டுவருவது மிக்க் கடினம். அடிப்பகுதியே இருபது முப்பதடி சுற்றளவுபோல் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  6. பெங்களூரில் ஏரிப்பகுதிகள், பார்க்குகள் என நடைப்பயிற்சிக்கு ஏராளம் இருக்கின்றன. பார்க்குகள் மற்றும் பெங்களூரின் சாலைகளில் நன்கு பராமரிக்கப்பட்ட கட்டணக் கழிப்பிடங்கள் இருக்கின்றன. பார்க்குகளின் வெளியில் பழச்சாறு, நெல்லி பாகல் அருகம்புல்.. போன்ற பலவற்றின் சாறு, காய்கறிக் கடைகள் எனப் பலவும் உள்ளன. அந்த வித்த்தில் பெங்களூர், சென்னையைக் காட்டிலும் வெகுதூரம் முன்னேறி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. லால்காக், மல்லேஸ்வரம் போன்ற பகுதிகளை 2000களிலேயே ஏன், அருகில் வீடு வாங்கும் தோக்கோடு பார்க்கவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். மரச்சிற்பங்கள், தோட்டங்கள் என எதையும் விட்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொத்தம் 286 படங்கள் எடுத்தேன். சொந்தங்கள் காட்சியளிக்கும் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால் அநேகமாக 200 இருக்கலாம்!

      நீக்கு
  8. லால் பாக் என்றுமே போட்டோக்கள் எடுக்க சிறந்த இடம். "சும்மா" தளம் தேனம்மை லால் பாக் போட்டோக்கள் அவருடைய தளத்தில் நிறைய வெளியிட்டிருந்தார். 

    படங்களுக்கு காத்திருக்கிறேன். இடையில் உங்கள் கைவண்ண சித்திரங்களும் சேர்க்கலாம். கொஞ்சம் வித்தியாசமான பதிவாக அமையும். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம். நெல்லை லால்பாக்கை லால்காக் ஆக்கிவிட்டா ரே! தூக்கக் கலக்கம் போலிருக்கிறது! (காலை வேளையில் உருப்படியாக ஒரு வேலை செய்தாயிற்று! 😀)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்ல நினைச்சேன். சொல்லிட்டீங்க.

      நீக்கு
    2. எழுத்துப் பிழை இருந்தால் அது ஐபேடின் உபயம். அதில் பார்த்து கரெக்ட் செய்ய நேரம் இருப்பதில்லை. எழுத்துப்பிழை இல்லையென்றால் அது லேப்டாப்பிலிருந்து அனுப்பியது. மெதுவாக பின்னூட்டம் அனுப்பிக்கலாம் என்று நினைத்தால் அன்று வேறு வேலைகளில் அனுப்ப நேரம் இருப்பதில்லை.

      பெயரில் எழுத்துப்பிழை வந்துவிடுவதுதான் ரொம்பவே சங்கடமாக இருக்கிறது.

      நீக்கு
  10. லால் பாகின் அருகில் உள்ள மிகவும் பிரபலமான ஒரு இடத்தை சொல்ல மறந்து விட்டார் கட்டுரை ஆசிரியர்.
    அடுத்த வாரம் வருகிறதா பார்க்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த இடம் இந்த பார்க். போய் வருடங்கள் ஆகிவிட்டன.😐

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா இல்ல? நானும் அடுத்தவாரம் வரை காத்திருக்கேன்.

      நீக்கு
    2. அது பிரபலமாக இருந்தாலும் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதன் பேக்கரியில் 750 ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு முன் வாங்கினேன். பெரும்பாலானவை நல்லா இல்லை, பசங்களுக்கும் பிடிக்கலை. பணம் வேஸ்ட். அவர்களின் மதிய உணவு சாப்பிட்டு பல வருடங்களாயிற்று. எனக்கு சென்னை உணவுதான் பிடித்திருக்கிறது என்று சொன்னால் மற்றவர்கள் நான் ரொம்பவே மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறேன் என்கிறார்கள்

      நீக்கு
    3. அப்படி இல்லை நெல்லை. என்னதான் அம்பேரிக்காவில் இருந்தாலும் அம்பேரிக்க ஆங்கிலம் பேசினாலும் எங்க பேத்திகள் ரசம் சாதம், தயிர் சாதம், வத்தக்குழம்புடன் சாப்பிட்டால் தான் வயிறு நிறைகிறது என்பார்கள். அநேகமாக இது நம்ம மரபணுவிலேயே இருக்கோனு நினைச்சுப்பேன்.

      நீக்கு
    4. அங்கே சென்று, முக்கால் மணி நேரம் கியூவில் நின்று, அப்படியும் இடம் கிடைக்காமல் திரும்பினோம்.

      நீக்கு
  11. முதல் முதலாக 1980 ஆம் ஆண்டு குழந்தைகளுடன் கோவா பயணத்தின்போது முதலில் "பெண்"களூர், மைசூர், ஶ்ரீரங்கப்பட்டினம் வந்தோம். சிகந்திராபாதிலிருந்து மாற்றல் ஆகிச் சென்னை வந்து ஆறு மாதங்கள் தான். சிகந்திராபாதிற்குப் பதிலாக "பெண்"களூர்" தான் போகச் சொன்னார்கள் அலுவலகத்தில். ஆனால் நம்மவருக்கு ஏனோ "பெண்களூர்"க் குளிர் என நினைத்து ஒத்துக்கலை. அதை நினைத்து இப்போவும் வருந்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //"பெண்"களூர்"// - இப்படி கீசா மேடம் எழுதி எழுதி, என்னை மாதிரி விசுவாமித்திரர்களை மாற்றிவிடுகிறார். இது நியாயமா?

      நீக்கு
    2. ஹாஹாஹா! 2006/2007 வருடங்களில் அம்பியால் ஆரம்பிச்ச பழக்கம். அவரைக் கேலி செய்ய எழுத ஆரம்பித்து இப்போத் தானாக "பெண்"களூர்" என்றே வருது. அதைப் போலவே "பையர்" திவாவின் உபயம். அவர் ஆரம்பிச்சது இப்போது என்னாலும் இணையம் பூராப் பரவி விட்டது.

      நீக்கு
    3. அதனாலதான் இப்போ பெங்களூரு என்று மாற்றிவிட்டார்கள்.

      நீக்கு
  12. எண்பதாம் ஆண்டிற்குப் பின்னர் தொண்ணூறுகளிலும், இரண்டாயிராம் ஆண்டிலிருந்து சுமார் நான்கு வருடங்கள் பெண்களூர் போவதும் வருவதுமாய் இருந்தோம். அப்போத் தான் சர்சிவி.ராமன் நகரில் வீடும் பார்த்துக் கடைசியில் நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். ஆனால் லால்பாக் அந்தச் சமயங்களில் எல்லாம் நிறையப் போனோம். ஒவ்வொரு தரமும் மாற்றங்கள் தெரிந்தன. அப்போல்லாம் எழுத்தாளினி ஆவேன்னு தெரியாமல் போச்சு.

    பதிலளிநீக்கு
  13. 2006 ஆம் ஆண்டு கடைசியாப் போனப்போ மல்லேஸ்வரத்தில் தங்கி இருந்தோம். அந்த முறையும் முடிந்தவரை பெண்களூர் சுத்திப் பார்த்து மைசூர் போய் சாமுண்டி ஹில்ஸ், அரண்மனை மறுபடி (எத்தனாம் தரம்?) எல்லாம் பார்த்துட்டு மைசூரில் வீடு வாங்கவும் முயற்சி செய்து பையரின் நண்பரின் பெற்றோர் மூலமாக ஒரு வீடும் பார்த்தோம். குடியிருப்பு வளாகம் தான். அப்போவே 55 லக்ஷம் சொன்னாங்க. அவ்வளவெல்லாம் முடியாது என்பதால் (பையரும் வேலைக்குப் போன புதுசு. கல்யாணம் வேறே அப்போத் தான் ஆகி இருந்தது) சுமையை ஏத்தவேண்டாம்னு அந்த வீட்டை வாங்கலை. இல்லைனா நானும் உங்களுக்கெல்லாம் முன்னாடியே "பெண்"களூர் வாசியாக இருந்திருப்பேனாக்கும். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஆகியிருந்தால், இந்தக் குளிர்ல, முட்டி வலி வேறு அதிகமாயிருக்கும். அப்புறம் தவலடைலாம் மறந்து மங்களூர் போண்டா, மத்தூர் வடை என்று எழுத ஆரம்பித்திருப்பீங்க. எல்லாம் நன்மைக்கே.

      நீக்கு
    2. ம்ம்ம்ம்ம், மங்களூர் போண்டாவும், மத்தூர் வடையும் கல்யாணம் ஆகிச் சென்னை வந்ததில் இருந்து அறிமுகம். நம்மவர் "பட்ஸ்" ஓட்டலாகப் பார்த்துக் கூட்டிப் போவார். அதிலும் பெரம்பூர் "பட்ஸ்" ஓட்டலும் தி.நகர் கிருஷ்ணவேணி திரை அரங்கிற்கு எதிரே இருந்த மூலை "பட்ஸ்" தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஸ்டேஷனிலிருந்து இறங்கி நுழைந்ததும் இருந்த "பட்ஸ்" ஓட்டல் எல்லாம் ஏதோ வேண்டுதல் மாதிரிப் போயிருக்கோம்.

      நீக்கு
    3. நான் அடிக்கடி சென்றது தாம்பரம் பட்ஸ் ஹோட்டல். ஓரளவுக்கு நன்றாக இருக்கும்.

      நீக்கு
    4. //தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஸ்டேஷனிலிருந்து இறங்கி நுழைந்ததும் இருந்த "பட்ஸ்" ஓட்டல்// - இங்கு நான் கேரட் சாதம் சாப்பிடுவேன். நன்றாக இருக்கும். (89-90 களில்). தாம்பரம் அருகிலிருந்திருந்தாலும் தாம்பரம் பட்ஸ் ஹோட்டலில் இரு முறைதான் சாப்பிட்டிருக்கிறேன்.

      நீக்கு
    5. தாம்பரம் "பட்ஸ்" ஓட்டலை மறந்திருக்கேன். கும்பகோணத்திற்குப் பேருந்தில் போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் (அப்போ ப்ராட் காஜ் மாற்றும் வேலை நடந்து கொண்டிருந்ததால் ரயில் ராக்ஃபோர்ட் மட்டும்) தாம்பரம் வரைக்கும் தான் டிக்கெட் எடுத்து இறங்குவோம். இறங்கியதுமே எதிரே "பட்ஸ்" ஓட்டலுக்குத் தான் படை எடுப்பு. ஆனானப்பட்ட எங்க பையரே நல்லா இருக்குனு சொன்னார்னா பாருங்க! அதே போல் தி.நகர் பாண்டி பஜார் எனில் கீதா கஃபே மட்டும் தான்.

      நீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! நான் காலை வணக்கமே சொல்ல மறந்துட்டேனே! காலை/மதியம்/மாலை வணக்கம் அனைவருக்கும்.

      நீக்கு
    2. ஹா. ஹா. ஹா. காலை வணக்கம் சகோதரி. நானே காலை வணக்கம் தாமதந்தான். இருந்தாலும் எப்போதும் போல் ஒரு பிள்ளையார் சுழியாக அதை முதலில் சொல்லி விடுகிறேன்.:)))

      நீக்கு
    3. நீங்க இரண்டு பேரும் எங்க ஆபீஸில் வேலை பார்த்திருந்து, இதே குட்மார்னிங் சொல்லியிருந்தால் நான் பதிலுக்கு குட் ஆஃப்டர்னூன் சொல்லியிருக்கலாம். ஹா ஹா

      நீக்கு
    4. அம்பேரிக்காவானால் "குட் நைட்" இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    5. ஆகா... நான் தாமதமாகச்
      காலை வணக்கம் சொன்னாலும், எல்லா வணக்கங்களும் இன்று இங்கு வந்து விட்டது. நல்லதுதான்... நானும் இப்போது என் பங்கிற்கு அனைவருக்கும் இரவு வணக்கத்தை சொல்லி விடுகிறேன். :)

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    பசுமையான படங்கள் நன்றாக உள்ளன. நான் இங்கு வந்த பின் லால்பாக் இரண்டொரு முறை சென்றுள்ளேன். உறவுகள் வரும் போதும் ஒரு முறை சென்றிருக்கிறோம். இப்போது மகன் வந்த போதும் செல்வதாக இருந்து அந்த திட்டம் தவறி விட்டது. இப்போது உங்கள் பதிவின் வாயிலாக கண்டு களிக்கலாம் என நினைக்கிறேன். .பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. படங்களும் விவரங்களும் நிறைய வரும்.

      நீக்கு
  16. வரட்டும் .. பார்க்கலாம்... ஒரு வருசத்துக்காவது ஓட்டிடணும்!.. :)

    பதிலளிநீக்கு
  17. கடந்த செவ்வாய் அன்று கில்லர்ஜியின் அம்மா இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

    அவரைக் காணவில்லையே என்று இப்போது அவரைக் கேட்ட போது தெரிந்தது.

    கில்லர்ஜிக்கும் அவர் குடும்பத்தாருக்கும் நம் ஆழ்ந்த இரங்கல்கள். இதனைக் கடந்துவர பிரார்த்தனைகளும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடாடா.... மிகவும் வருத்தமான செய்தி. நானும் அவரை இரண்டு மூன்று நாட்களாக எந்தப் பதிவிலும் காணவில்லையே என கேட்கத்தான் வந்தேன். இப்படி ஒரு வருத்தமான நிகழ்வு அவர் இல்லத்தில் நடந்திருக்கிறது என்பதை அறிந்த பின் மனம் மிகவும் வேதனையடைகிறது.

      அவருக்கும், அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அவர் இந்த பிரிவிலிருந்து மனம் தேறி மீண்டு வர இறைவன் துணையாக இருக்க வேண்டுமென மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
    2. கில்லர்ஜிக்கும் அவர் குடும்பத்தினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

      நீக்கு
    3. வாட்சப் குழுமத்தில் கில்லர்ஜி பகிர்ந்திருந்தார். ஆதலால் எனக்கும் தெரிய நேர்ந்தது. என்ன இருந்தாலும் அம்மாவின் இடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது.

      நீக்கு
    4. உண்மைதான் கீசா மேடம்... அம்மா நமக்குமட்டுமேயானவர். மனைவி, குழந்தைகளுக்கானவர், 'புல்லுக்கும் ஆங்கே' என்பது போல கணவருக்கும்....ஹா ஹா ஹா

      நீக்கு
  18. லால்பாக் படங்கள் இன்னும் உள்ளே போகவில்லையோ கௌ அண்ணா?
    எனக்கும் பிடித்த பார்க் ஆனால் எங்கள் பகுதியிலிருந்து போக வேண்டும் என்றல 1 1/2 மணி நேரம்!!!!!! ஆகிவிடும். பேருந்தில் அப்புறம் மெட்ரோ ரயிலில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவங்க எந்த ஊர்க்காரங்கன்னு எனக்கு மறந்துவிட்டது. லால்பாக்கில் உள்ளே (இன்னொரு வழியில்) நுழைந்த உடனே வருவது இந்த மலை (பெரிய பாறை), அதன் உச்சியில் கோவில். இந்த மலைக்கு எதிர்ப்புறம் (பார்க்கில்) இருப்பது சைனீஸ் கார்டன்.

      நீக்கு
    2. ஆமாம். நினைவிருக்கு. இங்கு பல வருடங்களுக்கு முன்பு இருந்த போது சென்றது. இங்கு வந்த ஒரு வருடத்தில் கொரோனா....அதனால் போகவே இல்லை.

      கீதா

      நீக்கு
    3. இவங்க எந்த ஊர்க்காரங்கன்னு எனக்கு மறந்துவிட்டது.//

      ஹாஹாஹாஹா எந்த ஊரிலும் இருப்பேன்!!

      எந்த ஊர் என்றவனே என்று ஒரு பாட்டு உண்டு என்றும் அதில பல ஊர்கள் வரும் என்று நினைக்கிறேன்.

      ஸ்ரீராமிற்கு இந்தப் பாட்டு தெரிந்திருக்கும்.

      கீதா

      நீக்கு
    4. எந்த ஊர் என்றவரே
      இருந்த ஊர் சொல்லவா ?
      அந்த ஊர் ஸ்ரீராமும் கூட
      அறிந்த ஊர் அல்லவா !

      நீக்கு
  19. இன்றைக்கும் சென்று மாம்பழங்கள், பங்கனப்பள்ளி மாங்காய் (கிலோ 100 ரூ), பலாச்சுளைகள், தேங்காய் எண்ணெய்/கடலை எண்ணெய் மற்றும் ஸ்நாக்ஸ்லாம் வாங்கிவந்தோம். போதாக்குறைக்கு இயற்கை மூலிகைகளாலான சோப்புகளும்.

    இந்த கேஜிஜி சொல்லிட்டு வரக்கூடாதோ? சந்தித்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "பெண்"களூரில் இருந்து கொண்டு மைசூர் சான்டல் சோப்பைப் பயன்படுத்த வேண்டாமோ?

      நீக்கு
    2. அதானே! நான் மைசூர் சாண்டல் சோப்தான் உபயோகிக்கிறேன்.
      மை மேனி எழிலை பட்டு போல் பராமரித்து லட்டு போல் பாதுகாக்கிறது மை சா சோ !!

      நீக்கு
    3. ஏற்கனவே எழுதியிருந்த மாதிரி நான் பல விஷயங்களில் யுனீக். சோப் ஒரு சமயத்தில் 8, பவுடர் 4 விதம், செண்ட் பத்துவிதம் என்று எல்லாமே பலப் பல வைத்திருப்பேன். அன்றைக்கு மூடிற்கு ஏற்றவாறு உபயோகம். அதில் மைசூர் சாண்டல் சோப், கோகுல் சாண்டல் பவுடர் உண்டு, மார்கோ, லிரிலும் உண்டு.

      அது சரி... பெங்களூரில், பசு மூத்திரத்தை உபயோகித்துத் தயாரிக்கும் சோப் விற்பனை செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறேன். (பலவித வாசனைகளில்). நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

      நீக்கு
    4. நல்ல வேளை - கேள்விப்பட்டதில்லை !!

      நீக்கு
  20. பலமுறை சென்ற இடம். படங்களும் பகிர்வும் நன்று. கேமராவின் க்ளிக் சத்தம் தேனீக்களுக்கு இடைஞ்சலாகி அவை கலைந்து விடுகின்றன என லால்பாக் உள்ளே இப்போது கேமரா கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்கிறது நாளிதழ் செய்தி.

    பதிலளிநீக்கு
  21. அருமையான படங்கள். நாங்களும் பலவருடங்கள் முன் சென்றிருக்கிறோம் இப்பொழுது மாற்றமடைந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  22. @ கமலா ஹரிஹரன்

    // இப்படி ஒரு வருத்தமான நிகழ்வு அவர் இல்லத்தில் நடந்திருக்கிறது என்பதை அறிந்த பின் மனம் மிகவும் வேதனையடைகிறது...//

    சில நாட்களுக்கு முன்னால் Fb ல் இந்த செய்தி வெளியானது
    ..

    என்ன உறவு முறை என்று சொல்லப்படாமல்இருந்தது..

    மிகவும் வருத்தம்.. காலம் தான் துயரை மாற்றவேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் வந்திருந்ததை நான் பார்க்கவில்லை என்பதால் அதைத் தான் அப்படியானு கேட்டிருந்தேன். பாதிக்கு மேல் காக்கா உஷ்! :(

      நீக்கு
  23. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  24. தேவகோட்டை ஜி அவர்களின் அம்மா இறைவனடி சென்ற விவரம் அறிந்து வருத்தம் அடைந்தேன். உடல் நலம் இல்லாமல் இருப்பதாக முன்பு சொல்லி இருந்தார்.
    அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் ஆறுதலையும், தேறுதலையும் தர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  25. லால் பாக் பார்த்து இருக்கிறேன் இரு முறை. ஆனால் நீங்கள் பகிர்ந்து இருக்கும் இடம் பார்த்த நினைவு இல்லை. இந்த பக்கமே போகவில்லை போலும் நாங்கள்.

    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல முறைகள் லால்பாக் போய் உள்ளேன் மலர்க்கண்காட்சி பலமுறை பார்த்து இருக்கிறேன் ஆனால் எதுவும் சரியாக ஞாபகம் வரவில்லை உங்கள் பதிவு மூலம் யாவையும் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம் என்ற சந்தோஷம் மிக்க நன்றி அன்புடன்

      நீக்கு
  26. ஆறுதல் சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  28. பதிவில் பகிர்ந்துகொண்ட படங்கள் அனைத்தும் அழகு. ஒரு முறை லால் பாக் சென்று இருக்கிறேன். அழகான இடம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!