வியாழன், 26 மே, 2022

சிக்குபுக்கு சிக்குபுக்கு ஜிகுஜிகு .. யாதோங் கி பாராத் .

 எவ்வளவு வயதானாலும் சில விஷயங்களை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.  அவற்றில் என்னைப் பொருத்தவரை முதன்மையானது யானை.  அப்புறம் ரயில்.  அப்புறம் ஆகாய விமானம், குழந்தைகள்...  யானைக்கும், ரயிலுக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம்!  என்ன சொல்கிறீர்கள்?


மேலே உள்ள காணொளியை பொறுமையாக பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  யாருக்குதான் ரயிலைப் பிடிக்காது...  அதுவும் குபுகுபுவென புகையைக் கக்கிக்கொண்டு வரும் புகைவண்டி..  இல்லையா?  பார்க்க ஒரு உற்சாகம் வந்திருக்கும்.  கொஞ்சம் பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்திருக்கும்.

எனக்கு ரயிலில் பயணம் செய்யதான்  பிடிக்காமல் இருந்ததே தவிர, வேடிக்கை பார்க்க எப்போதுமே பிடிக்கும். .  இப்போது ரயில் பயணத்தையும் ரசிக்கத்தொடங்கி இருக்கிறேன்!.

அந்தக் காலத்து ரயில் புகையைக் கக்கிக்கொண்டு வரும் காட்சியே கண்களை நிறைக்கும்.  மனத்தைக் கவரும்.

ரயிலைப் பார்த்தும் உங்களுக்கு என்னென்ன நினைவுகள் எல்லாம் வருகின்றன?  முதலில் நமக்கு நாம் செய்த பயணங்கள் நினைவுக்கு வரும்.  அதுவும் ஏனோ சிறுவயதில் செய்த பயணங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும், இல்லை?

அந்தக் காலத்து ரயில் பயணங்கள் தனி ரகம்.  தண்ணீருக்கு கூஜா, சுருட்டிய படுக்கை, பயணத்தில் சாப்பிட உணவு வகைகளை நிறைத்து சில சம்படங்கள், துணிகளை நிறைத்து கலரடித்த (தகரப்)பெட்டிகள் ..  சுமையும் நிறைய இருக்கும்.  எஞ்சினுக்கு அருகில் இருக்கும் பெட்டியில் ஜன்னலோரம் அமர்ந்தால் கண்களில் கரித்தூள் விழும் அபாயம் இருக்கும்.

அதென்னவோ போட்மெயில் என்று ஒன்றைச் சொல்வார்கள்.  எனக்குத் தெரியாது.  தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் விளக்கலாம்!

பின்னர் ரயில் பயணங்கள் எளிதாகவும், நாகரீகமாகவும் மாறின.

எங்காவது தொலைதூரம், வெளியூர் சென்றால்தான் ரயில் என்று எண்ணியிருந்த என்னைப் போன்ற நாட்டுப்புறத்துக்கு சென்னை வந்ததும், நகருக்குள் குறுக்கே ஓடும்,  ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிலும் பஸ் போல நின்று செல்லும் மின்சார ரயில்கள் ஒரு ஆச்சர்யம். அதில் பயணம் செய்ய ஆர்வமும், தயக்கமும் இருந்தன. பீச் பக்கமா, தாம்பரம் பக்கமா என்று எப்படி அறிவது, எதில் ஏறுவது, எங்கு இறங்குவது  என்று சென்னை உறவுகள் சொல்லிக் கொடுத்தார்கள்.  எதிர் திசை ரயிலில் ஏறி திரும்பி மாறி வந்ததும் உண்டு!  சீசன் டிக்கெட் வாங்கியிருந்தால் ஆபத்தில்லை!

இப்போது மெட்ரோ ரயில், அதிவேக ரயில் என்றெல்லாம் வந்து நிற்கிறோம்.

அம்மா மறைந்ததும் அப்பா மதுரையை விட்டு கிளம்பவே இல்லை.  அவரை சமாதானப்படுத்தி, பேசிப்பேசி, இளக வைத்து ஏழு வருடங்களுக்குப் பின் சென்னை வந்தார்.  ஒரு பட்டாளமே அவரை வரவேற்க மாம்பலம் சென்றிருந்தோம்.  பின்வரும் காலங்களில் அவர் மதுரைக்கும் (அண்ணன் வீடு) சென்னைக்கும் ரயிலில் கிளம்பிக் கிளம்பி சென்று வருவார். ஏனோ அவர் என்னிடம் அல்லது எங்களிடம் அதிகம் ஒட்டியதே இல்லை.  வயதானாலும் கூட துணையை எதிர்பாராமல் தனியாகவே சென்று வருவார்.  சென்னையிலிருந்து கிளம்பும்போது ரயிலில் தாள முடியாத வீசிங், இருமலுடன் உட்கார்ந்திருக்கும் அவரை பார்க்கும்போது மனம் என்னவோ செய்யும், தவிக்கும்.   என்அலுவலக சிரமங்களுக்கிடையே, பொசுக்கு பொசுக்கென ஷண்டிங் அடிக்கும் அவருடன் துணைக்குப் போவதும் சாத்தியமில்லாததாக இருந்தது.

எல்லோருக்குமே ரயில் பிடிக்கும் என்பதால் நிறைய பாடல்கள் ரயில் சத்தத்தோடோ, ரயிலிலோ எடுக்கப்பட்டோ காட்சிகள் திரைப்படங்களிலும் வரும்.  எனக்குப் பிடித்த ரயில் பாடல்கள், ஆராதனா, தோஸ்த், ஹனிமூன், ஜமானே கோ திகானா ஹை, பிரேம் பூஜாரி,போன்ற ஹிந்திப் படங்களும், ராமன் எத்தனை ராமனடி, தில்லானா மோகனாம்பாள், இணைந்த கைகள், தங்கைக்காக, பூவெல்லாம் உன் வாசம் போன்ற தமிழ்ப்பாடல்களும்!  ஹிந்தி தோஸ்த் பாடல் மறக்க முடியாதது.  தமிழில் இணைந்த கைகள் மறக்க முடியாதது.  யாதோன் கி பாராத் ரயில் காட்சி மறக்க முடியாதது!

இப்போதைய மின்சார ரயில்களை விடவும், அதிவேக புல்லட் ரயில்களை விடவும் அந்தக் கால நீராவி எஞ்சின், கரி எஞ்சின் ரயில்கள் வெகு சுவாரஸ்யம்.  ரயில் கடந்து சென்றதன் அடையாளம் புகையாக நெடுநேரம் அங்கு சுற்றிக்கொண்டிருக்கும்.  பாதையில் காத்து நிற்கும்போது வளைவுகளில் அந்த ரயில் வந்து திரும்பும் அழகே அழகு.  அந்தக் காணொளியில் கூட அதைத்தான் விரும்பிப் பார்க்கிறார்கள், படம் எடுக்கிறார்கள்!.  அப்போதெல்லாம் அந்த ரயில்களுக்கு "கூ..." என்று பெண்மை கலந்த ஒரு ஹார்ன் சப்தம் இருந்தது.  இப்போது பாய்ங் என்று பேய் போல அலறுகிறது!

ரயில் பயணம் பற்றி வெகு ரசனையுடன் ஒரு பதிவைப் பகிர்ந்திருக்கிறார் வல்லிம்மா தனது தளத்தில்.  இதைக் கட்டாயம் வாசியுங்கள்.

=========================================================================================================

மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்: 

சமீபகாலமாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம், வன்முறை கலாசாரம் மோசமாக பெருகி விட்டது. அவர்களிடம் சகிப்புத் தன்மையே இல்லாமல் போய் விட்டது. சமூகத்தை பற்றியோ, மற்றவர்கள் கஷ்டத்தை பற்றியோ கவலை இல்லாமல், தங்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டும்; தாங்கள் விரும்பியது கிடைக்க வேண்டும் என்ற மனநிலையிலேயே இருக்கின்றனர். 

கொரோனா பரவலின் போது, இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள், பெற்றோரின் நேரடி கண்காணிப்பில் இருந்தனர். அவர்களின், 'டீன் ஏஜ்' குறும்புகளை, பெற்றோர் உடனுக்குடன் கண்டித்ததுடன், திருத்தவும் முற்பட்டிருப்பர். இதனால், ஒருவித மன அழுத்தத்துக்கு ஆளான மாணவர்கள், சகிப்புத்தன்மை அற்றவர்களாக மாறி விடுகின்றனர். கொரோனா முடிந்து பள்ளிகள் திறந்ததும், அவர்களின் அழுத்தங்கள் எல்லாம் வெடித்து, வன்முறை சம்பவங்களாக நிகழ்கின்றன. கல்வி நிறுவனங்களுக்கு எல்லாம், இன்றைக்கு மாணவர்கள் பெறும் மதிப்பெண் மட்டுமே இலக்கு. நீதிநெறிகள் இடம் பெறும் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் எல்லாம், நுழைவுத் தேர்வுகளுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்களுக்கு உதவாது என்று ஒதுக்கி வைக்கின்றனர். 

இதனால், சிறு வயதிலேயே மாணவர்களுக்கு சரி எது, தவறு எது என்று தெரியாமலேயே போய் விடுகிறது.கல்வியாளர் லிபி ஆரண்யா: பள்ளிகளில் மாணவர்களின் மனநிலை, இரண்டு விதமாக இருக்கிறது. ஒன்று, ஏதேனும் ஒரு தவறு செய்து, அதை ஆசிரியர் கண்டித்தால், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வது... மற்றொன்று கோபமடையும் மாணவர், திட்டிய ஆசிரியரை தாக்குவது. கேட்டாலும் சிக்கல், கேட்காவிட்டாலும் தவறு என்ற சூழ்நிலையில், பல ஆசிரியர்கள் நமக்கு எதுக்கு வீண் வம்பு என்று எதையும் கண்டு கொள்ளாமல் விலகிச் செல்கின்றனர். 

இந்தப் பிரச்னையை சரி செய்ய வேண்டுமென்றால், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், மனநல ஆலோசகர்கள், கல்வித்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் இடம் பெற்ற, ஒரு நிபுணத்துவம் பெற்ற குழுவை மாவட்ட வாரியாக அரசு அமைக்க வேண்டும். அந்தக் குழு வாயிலாக, மாணவர்களுக்கு ஆலோசனை கூற வேண்டும். அதேபோல பள்ளிகளில் நடக்கும் பிரச்னைகளை, நேரடியாக காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று, வழக்காக்கி மாணவர்களை கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பும் தீவிரமான நடைமுறை இருக்கிறது. அவற்றை தவிர்க்க பள்ளிகளுக்கும், காவல் துறைக்கும் இடையில் பொதுவான ஒரு நபரையோ, குழுவையோ நியமித்து, பிரச்னைகள் ஏற்படும் சூழ்நிலையில், சுமுகமாக பேசித் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

தினமலரிலிருந்து...
=========================================================================================================

விக்ரமாதித்தன் கவிதை 

என் பிரச்சனை என்னவென்று

என் பிரச்சனை என்னவென்று
எனக்குத் தெரியாது சத்தியமாக
உன் பிரச்சனை எதுவென்று
உனக்கு தெரியுமா நிச்சயமாக
நம் பிரச்சனைக்கு
நாம்தான் காரணமா
பிரச்சனை தெரிந்ததும்
தீர்வு கிடைத்துவிடுமா
தீர்வல்ல
பிரச்சனை
பிரச்சனையா என்பதுதான்
தீர்வு
======================================================================================

மகாபாரதத்தில் இல்லாத எந்தக் கதைக் கருவையும் இனி யாரும் எழுதி விட முடியாது.  அந்த அளவு அகண்ட புராணம் அது.  ஜெமோ அதை மூலத்திலிருந்து மாற்றி எழுதி  இருக்கிறார்.  இது திரௌபதி பற்றி தனக்குள் எழுந்து கற்பனையை ஒரு சிறு மன்னிப்புடன் பி கே பாலகிருஷ்ணன் படைப்பாக்கி இருக்கிறார்.  அதன் முன்னுரையிலிருந்து...


​................................ஸ்ரீ மஹாபாரதம் போன்றதொரு திவ்யமாக வடிவத்தை கையிலெடுத்து மனம் போன போக்கில் சோதனைக்கு முயல்வது என்பது கீழ்த்தரமான சாகசம் என நினைப்பவர் பலர் இருக்கலாம். அவர்களில் சிலர் மகாபாரதத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர்களாகவும் இருக்கலாம். அவர்களிடம், நான் ஆத்மார்த்தமாகவே மன்னிப்பு கேட்டுக் கொள்வேன் . ஆத்மார்த்த நிலைகொண்ட தனித்தன்மையானளருக்கு பெருந்தன்மை குணமும் இருக்கும் என நம்புகிறேன். அதன் காரணமாகவே எனது இந்த சாகச காரியத்தை அவர்களால் பொறுத்துக் கொள்ளவும் இயலும். 

ஸ்ரீ குட்டிக்கிருஷ்ண மாரார் இயற்றிய 'பாரத பர்யடனம்' படித்த பின்புதான் இம்மாதிரியான ஒரு முயற்சிக்கு என் மனதில் ஆக்கம் ஏற்பட்டது. வியாச பாரத காட்சிகளும், அவைகளைப் பற்றி உள்ள விமர்சனங்களையும் கூட்டி இணைத்துப் உருவாக்கியுள்ள அந்த உயரிய நூலை வாசித்த ரசித்த போது - அந்த விமர்சனங்களை கதைகளோடு இணைத்து காட்சிகளை மறு சிருஷ்டியாக உருவாக்கினால் எவ்வாறு அமைந்து விடும் என்ற கற்பனையை நோக்கி குரங்கு தன்மை கொண்ட மனம் குதித்து பாய்ந்தது!  அது வலுவானதொரு ஆசையாகவும் -  கருத்தாகவும் பிறகு வளர்ந்தது - அந்த ஆசையின் வலுவினால் - சமஸ்கிருத மொழி அறியாத நான் குஞ்ஞிக்குட்டன் தம்புரானது மொழியாக்கம் வழியாக பாரதக் கதையில் கௌரவர் பாண்டவர் பகுதிகளை படிக்கவும் பிறகு அறிந்துகொள்ளவும் செய்தேன். அந்த பகுத்தறிவின் பயனாக பிறந்ததுதான் - நாவல் என குறிப்பிடலாம் என்ற இந் நூல்! இவ்வாறு அமையப் பெற்ற ஒரு படைப்பு தவறு என்றால் ஒரு குட்டி கிருஷ்ண மாரார் தான் முதல் குற்றவாளி என்பேன் ! எதிரான அபிப்ராயம் என்றால் எனக்கான எளிய பாராட்டுகள் -  திரு மாரார் பற்றி எனது நன் நினைவுக்கு மேலும் வலு சேர்த்து ஒளிபெறச் செய்யும்.

 பிகே பாலகிருஷ்ணன் 1972- இனி ஞான் உறங்ஙட்டே  எனும் நாவலின் முன்னுரையில்!


ஆமாம் இந்த நாவல் எதைப்பற்றி?   இதைத் தமிழில் மொழிபெயர்த்த ஆ. மாதவன் சொல்கிறார் 

"............................................  வியாச பாரதக் கதையின் அடித்தரை நுட்பங்களைத் தொட்டு தாயாகிய திரவுபதியின் குற்ற உணர்வினூடே  - மனைவியாகிய திரவுபதியின் தார்மீக ரோஷாக்னி வழியாக,  பயணம் கொண்டு ஒட்டுமொத்த பெண்ணினத்தின் துயரமாகவும் உருக்கொண்டு, பிரபஞ்ச வாழ்வின் சாத்தியமாகவும் உள்ச் சலனமாகவும் விரிந்து, படிப்போரின் மனப் பீடங்களில் அழுத்தம் திருத்தமாக இடம் பிடித்த அபூர்வ இலக்கிய சாயூஜ்யம் - இந்தப் புதுமைப் புதினம்!  இதனை தமிழில் தருவதற்கு புதியதொரு மொழிப் பிரபஞ்சம் வழியாக நுணுகி, உற்றுப்பார்த்து வழி நடந்தேன்.  மூலமொழியின் அத்தனை சுக அழுத்தத்தையும் தமிழில் வடித்திருக்கிறேன் என்ற அகந்தையின் நிறைவு நிறைவு எனக்கிருக்கிறது.

 மிக்க அன்புடன் ஆ.  மாதவன் 5 -3 -2001 திருவனந்தபுரத்திலிருந்து

=================================================================================================

சும்மா சுவாரஸ்யத்துக்கு...   

அப்போது இது மாதிரி நிறைய சுற்றிக் கொண்டிருந்தது.  என் பங்குக்கு நானும் சிலவற்றை தயார் செய்து வெளியிட்டு தலா 15 லைக்ஸ் வாங்கினேன்!



===============================================================================

1903 ல் வெளிவந்த 




============================================================================================

ஜோக்ஸ்...

"ராத்திரி தூங்குவீங்களா முத்தண்ணா?!"

"சிக்னலை எல்லாம் நம்ப முடியாது!"


சமஉரிமை!

பல்ஸ் எகிறுது!

==============================================================================================


ஹையோ பை அங்கிள்...    ரயிலைப் பார்த்துக்கிட்டிருந்ததுல நேரம் போனதே தெரியல..   அம்மா திட்டுவாங்க...  ஹோம்வொர்க் செய்யணும்...   நெக்ஸ்ட் தர்ஸ்டே வரோம்......  பை...


113 கருத்துகள்:

  1. டி ராஜேந்தர் உடல் நிலை சரியில்லாத நேரத்தில் இரயில் பயணங்களில்... உங்களுக்கு நினைவுக்கு வந்ததில் வியப்பில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை எழுதும்போது பாவம் அவர் நலத்துடன்தான் இருந்தார்!

      நீக்கு
  2. விவேகபாநு, பத்திராதிபர் என்று சில கட்டுரைகளுக்குப் போட்டுக்கொண்டு, இரண்டுபேரில் நார் எழுதியிருப்பார்கள் என யோசிக்கவைத்திருக்கிறார்களே. இது தவிர தனிக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது - இந்த ஸ்டைல் - குமுதம் வரையும் கூட தொடர்ந்திருக்கிறது!

      நீக்கு
  3. இருபது வருடங்களுக்கு முந்தைய பயணம் போல இப்போதைல்லாம் இருப்பதில்லை. எல்லா இரயில்களிலும் ஒரே வகையான உணவு, டீ, காபி என அச,சடித்தபாதிரி இருக்கிறது. அப்போதுபோல், மணியாச்சியா..முருக்கு வரும், ஶ்ரீரங்கமா? பூரி மசால்... என்றெல்லாம் இப்போது இல்ஙை. இரயிலை ரசிக்க பாசஞ்சர் நன்று என்று நினைத்தால் எல்லா இரயில்களிலும் எல்லா வகுப்புகளிலும் கூட்டம் சொல்லி மாளலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீப வருடங்களின் குறிப்பிடத்தக்க மாற்றம், வெளி உணவை ஆர்டர் செய்துகொள்வது, டாய்லட் போன்ற கம்ப்ளெயின்டை உடனுக்குடன் அனுப்பி சரிசெய்துகொள்ளும் வசதி

      நீக்கு
    2. பழைய ரயில் பயணம்தான் நினைவில் நிற்கும். சிக்குபுக்கு சிக்குபுக்கு என்று அதுதான் ரயிலு! காணொளி பார்த்தீர்களா?


      ஆம்.. சில முன்னேற்றங்கள்..

      நீக்கு
    3. நெல்லை இப்போதெல்லாம் ரயில் சாப்பாடு நன்றாகவே இல்லையே. பயமாகவும் உள்ளது. பாசஞ்சர் எனக்கும் பிடிக்கும் ஆனால் கூட்டம் பிடிப்பதில்லை

      இப்போதும் நெல்லைக்குச் செல்லும் ரயிலில் பகலில் அல்லது மாலையில் நெல்லைப் பக்கம் ரயில் சென்றால் முறுக்கு போளி எல்லாம் கிடைக்கிறது.

      கீதா

      நீக்கு
  4. சினிமாவில் இரயில் பயணம் என்றாலே ஒரு தலை ராகத்தை எப்படி மறக்க இயலும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணமைதான்.  ஆனால் நான் மறந்ததும் உண்மைதான்! 

      நீக்கு
    2. ஒரு தலை ராகம்./இரண்டு தலை பாடல் எல்லாம் நான் பார்த்தது இல்லை. :(

      நீக்கு
  5. மதன் ஜோக்ஸ் அருமை... அதிலும் சம உரிமை

    பதிலளிநீக்கு
  6. வயது கடந்தபின் அப்பாக்கள் மகன்களிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லையோ? நம் ஸ்டேஷன் எப்போது என்ற சிந்தனை காரணமாகவா இல்லை நாமே நமக்குத் துணை என்பதனாலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லை. விட்டேத்தியான வாழ்வு. எல்லோரையும் அப்படி சொல்லி விடவும் முடியாது.

      நீக்கு
    2. நாலு மாடிப்படியா.!!!!!!!!!!!!!!!!! ஒரு மாடி ஏறினாலே படபடப்பு:)
      செம ஜோக் மா :)

      நீக்கு
    3. ஹா.. ஹா.. ஹா.. நடிகை அல்லவா!

      நீக்கு
  7. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
    எல்லோரும் என்றும் வளமுடன் இருக்க இறைவன்
    அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதன் நகைச்சுவை ஏ க்ளாஸ்.
      முத்தண்ணாவின் மனைவி பாவம்:)

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா..  வணக்கம்.  பிரார்த்திப்போம்.  இடிமின்னல் ஆபத்து நீங்கியதா?

      நீக்கு
    3. மீண்டும் வருவதற்குள், இங்கே எபி வந்துவிட்டு சாப்பிட்டு மாடிக்கு ஓட வேண்டும் அப்பா. மிக
      அலுப்பாக இருக்கிறது.:(

      நீக்கு
    4. இப்போது ஆபத்து முற்றிலும் நீங்கி இருக்கும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  8. நீராவி ரயில் பயணம் ஒரு தனி சுவாரசியம். 60 களில் 2 வருடத்திற்கு ஒரு முறை கடலூரில் இருந்து 109 திருவனந்தபுரம் பாஸ்ட் பாசெஞ்சரில் கிட்டத்தட்ட ஒரு நாள் பயணம் செய்து திருவனந்தபுரம் சென்றது அழியாத கோலம். இந்த ரயில் வண்டி மதுரையில் அரை மணி நேரம் நின்று புறப்படும். அந்த நேரத்தில் காலேஜ் ஹவுஸ் சென்று பொங்கல் வடை காபி வாங்கி வருவோம். தென்காசி முதல் புனலூர் வரை இரட்டை என்ஜின். மலைப்பிரதேச காட்சிகளும், ஆராதனா படத்தில் வருவதைப் போன்று ரயில் பாதையை ஒட்டியே வரும் சாலையும், சாலையில் வாகனங்களுடன் போட்டி, போன்ற காட்சிகள் எப்போதும் நினைவில். 

    போட் மெயில் 101 என்பது இலங்கைக்கு போகும் தமிழர்களுக்காக ஓடிய ரயில். அப்போது தனுஷ்கோடி பியர் வரை இந்த வண்டி செல்லும். பக்கத்திலேயே கப்பல் நிற்கும். இதில் ஏறி தலைமாணாரில் இறங்கி பின்னர் அங்கிருந்து கொழும்புக்கு செல்வர். பின்னர் அது ராமேஸ்வரம் வரை செல்லும் வண்டியாக மாற்றப்பட்டது.
     
    எல்லோருக்கும் பிரச்னை உண்டு என்பது தெரியும் கடவுள் மாதிரி. ஆனால் அந்த பிரச்சினை என்ன  என்று அறிவதில் தான் பிரச்சினை. ஆக பிரச்னைகள் நிரந்தரம். ஒன்றை அறிந்து அதைத் தீர்த்தால் வேறோன்று முளைக்கும். 

    இனி நான் உறங்கட்டே  மிக பிரபலமான ஒன்று. மாதவன் முன்னுரைக்கு ஒரு பொழிப்புரை தேவைப்படுகிறது. 

    புதுமொழிகள் தற்போது பழமொழிகள் ஆகி விட்டன. எழுதி 7 வருஷம் ஆகிவிட்டன அல்லவா. ஹி ஹி. 

    மதன் ஜோஸ் எப்போதும் போல். நாலு மாடி ஏறி கீதா மாமியை பார்க்கப்போனால் பல்ஸ் ஏறாது. லிப்ட் இருக்கே. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீராவி எஞ்சின் ரயில், அதற்கும் முன்னாள் கரி எஞ்சின்.  எல்லாமே சுவாரஸ்யம்தான்.  நல்ல நினைவுகள். மதுரையில் அவ்வளவு நேரம் நிற்குமா?  சாப்பிட வாங்க வசதிதான்.  ஆனாலும் Bore!

      போட்மெயில் பற்றி அறிந்தேன்.

      //மாதவன் முன்னுரைக்கு ஒரு பொழிப்புரை தேவைப்படுகிறது.//
      :))

      பழமொழிகள் இப்போதும் செல்லும் என்றும் தோன்றுகிறது!

      நீக்கு
    2. நல்லவேளை அந்தக் கருத்து இருக்கு இப்போ. மதுரையில் அரை மணி நேரம் நின்றது ஒண்ணும் பிரச்னை இல்லை. நாங்கல்லாம் குளித்துத் துவைத்துனு கிட்டத்தட்டச் சமையல் தவிர்த்து மற்றதெல்லாம் செய்திருக்கோமே!

      நீக்கு
    3. பாசஞ்சரில் பயணித்து, ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஏதாவது வாங்கி மெதுவாக ஊர் போய்ச் சேருவது அலுப்பு என்றாலும் ரசிக்கக்கூடியது, பாதி இரயில் காலியாக இருந்தால் ஹாஹாஹா

      நீக்கு
    4. அந்தக் காலத்தில் ரயில் எங்கே காலியாக இருந்திருக்கிறது?!

      நீக்கு
  9. விவேக பானு பத்திரிக்கையின் ஒரு இதழ் பழைய வீட்டில் பாட்டியின் பெட்டியில் இருந்தது.
    அந்தப் பிரசுத்தாரின்
    விளக்கு ஸ்தோத்திரம் கூட அம்மாவிடம் இருந்தது.
    நல்ல நினைவுகளுகு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2015 இன் புது மொழிகள் மிகச் சிறப்பு. அன்றைய மனோ நிலையை
      வடித்துக் காட்டுகிறது. ஒவ்வொன்றும் அருமை.
      வாழ்த்துகள் ஸ்ரீராம்.

      நீக்கு
    2. அப்படியா? எத்தனை பக்கங்கள் கொண்ட பத்திரிகையாக இருக்கும் அது? சைஸ்?

      நீக்கு
    3. அதென்னவோ போட்மெயில் என்று ஒன்றைச் சொல்வார்கள். எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் தெரிந்தவர்கள் விளக்கலாம்!''


      சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்ப்ரஸ்.
      கார்ட் லைன், மெயின் லைன் என்று இரண்டு உண்டு.
      இந்த ரயில் சென்னை ,செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி
      வந்த தஞ்சாவூர், மாயவரம், கும்பகோணம், காரைக்குடி,
      என்று எல்லா இடமும் சென்று கடைசியில்
      தனுஷ்கோடி வரை செல்லும். தனுஷ்கோடியில் இறங்கியவர்கள்,
      சிலோனுக்கு போட் , ஏறி செல்வார்கள்.
      தனுஷ்கோடியில் கடல் கொண்ட இருப்புப் பாதை இன்றும் இருக்கும். பிறகு
      இந்த ரயில் ராமேஸ்வரத்துடன் நின்றது.
      மற்ற எக்ஸ்ப்ரஸ்கள்
      திரு நெல்வேலி, திருவனந்தபுரம், தூத்துக்குடி
      எல்லாம் மெயின் லைன் வழியே மதுரை, திருக்சி என்று சென்னை வந்தடையும்.

      நீக்கு
    4. அந்தக் காலத்து ரயில் புகையைக் கக்கிக்கொண்டு வரும் காட்சியே கண்களை நிறைக்கும். மனத்தைக் கவரும்.

      ரயிலைப் பார்த்தும் உங்களுக்கு என்னென்ன நினைவுகள் எல்லாம் வருகின்றன? முதலில் நமக்கு நாம் செய்த பயணங்கள் நினைவுக்கு வரும். அதுவும் ஏனோ சிறுவயதில் செய்த பயணங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும், இல்லை?''


      நாங்கள் இருந்த ஊர்களில் வேறு பொழுது போக்கு இல்லை.
      அப்பா எங்களை ரயில் நிலையத்துக்கு அழைத்து செல்வார்.
      ரயில் எஞ்சின் தட தடவென்று ப்ளாட் ஃபார்மில் வரும் அழகை ரசித்துக் கொண்டே
      இருப்போம்.
      எங்கிருந்தாலும் ரயில் விசில் சத்தம் மனதில் ஒரு
      இனிமையான சோகத்தைக் கூட்டும்.

      நீக்கு
    5. சிக்கு புக்கு ரயீல் வீடியோ அமிர்தம் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    6. அந்தக் காலத்து ரயில் பயணங்கள் தனி ரகம். தண்ணீருக்கு கூஜா, சுருட்டிய படுக்கை, பயணத்தில் சாப்பிட உணவு வகைகளை நிறைத்து சில சம்படங்கள், துணிகளை நிறைத்து கலரடித்த (தகரப்)பெட்டிகள் .. சுமையும் நிறைய இருக்கும். எஞ்சினுக்கு அருகில் இருக்கும் பெட்டியில் ஜன்னலோரம் அமர்ந்தால் கண்களில் கரித்தூள் விழும் அபாயம் இருக்கும்''
      இதெல்லாம் எங்கள் பயணத்தில் உண்டு. ஹோல்டால் கூட உண்டு. அதில் தான் நானும் தம்பியும் படுத்துக் கொள்வோம்:)
      ரயில் தாலாட்டு உறங்கும் சுகம் இது வரை கிடைத்ததில்லை.

      நாங்க ஜன்னலை விடமாட்டோமே:)
      அம்மா சொல்லச் சொல்ல இரவு முழுவதும் விழித்து ரயிலோடு பாடியபடி,

      மணப்பாறை முறுக்கு வாங்கி, திருச்சியில் வறுத்த முந்திரி , செங்கல்பட்டில் நல்ல காப்பி, தாம்பரம் வந்து மீனம்பாக்க விமானம் பறப்பதைப் பார்த்து, எழும்பூரில் வந்து இறங்கி
      கரி பூசிய முகத்தோடு
      புரசவாக்கம் செல்லும் இன்பம் வருடத்துக்கு ஒரு முறை.

      நீக்கு
    7. போட் மெயிலுக்கு விவரங்கள் வந்தவண்ணம் உள்ளன!  நன்றி அம்மா.

      நீக்கு
  10. நட்பின் நன்மலர்கள் அனைவருக்கும் அன்பின் வணக்கம் ...

    எங்கும்
    இறையருள் சூழ்க நிறைவாக..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க.. வாழ்க..

      வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.

      நீக்கு
  11. //அதென்னவோ போட்மெயில் என்று ஒன்றைச் சொல்வார்கள். எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் தெரிந்தவர்கள் விளக்கலாம்!// இலங்கை செல்லும் கப்பலை/விரைவுப் படகைப் பிடிக்கச் சென்றதால் அந்த ரயிலுக்கு "போட் மெயில்" எனப் பெயர். ஆங்கிலேய ஆட்சியில் இலங்கையை இந்தியாவிலிருந்து பிரித்த பின்னர் மெல்ல மெல்ல இந்த ரயிலின் பயன்பாடும் குறைந்ததாக அப்பா சொல்லுவார். இதில் இலங்கைக்கான தபாலும் போகும் என்பதால் மெயில்! இல்லைனால் எக்ஸ்பிரஸ் என்பார்கள். எந்த ரயிலெல்லாம் மெயில் எனக் குறிக்கப்படுமோ அவற்றில் எல்லாம் தபால் செல்லும். இந்த போட் மெயிலைக் குறித்து மனிதர்களிலும் வேகமாகச் செயல்படுபவர்களை "போட் மெயில்" என்பார்கள். என்னை என் மாமனார் "போட் மெயில்" என்றே சொல்லுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், என் உறவிலும் யாரையோ போட் மெயில் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    2. ஆமாம், என் உறவிலும் யாரையோ போட் மெயில் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    3. ஹெஹெஹெஹெ, ரெண்டு தனித்தனி உறவினரோ? :)))))

      நீக்கு
  12. மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு. எத்தனை கருத்து போகுமோ/எத்தனை கருத்து ஒளிந்து கொள்ளுமோ தெரியலை. நேற்று மெனக்கெட்டு துரை செல்வராஜின் பதிவுகளில் கொடுத்திருந்த கருத்துகள் அனைத்தும் என் மெயில் பாக்ஸுக்கு வந்திருக்கின்றன. ஆனால் பதிவில் தெரியலை! :( இதை எப்படி/யார் சரி செய்வாங்க? இந்தக் கருத்துப் பெட்டி மாறினதில் இந்தப் பிரச்னை! :(

    பதிலளிநீக்கு
  13. உங்கள் அப்பாவை நினைத்தால் கலக்கமாக இருக்கிறது,.

    பதிலளிநீக்கு
  14. மீண்டும் பார்க்கலாம் அப்பா நன்றி.

    பதிலளிநீக்கு
  15. //தினமலிருந்து...// திருத்தவும். இன்னும் ஒன்றிரண்டு உள்ளன.

    பதிலளிநீக்கு
  16. அப்பாவைப் பற்றிய உங்கள் நினைவுகள் மனதில் வேதனையை எழுப்பியது. என் மாமனாரையும் நினைவூட்டியது! :( அவருக்கும் எங்களிடம் அதிகம் ஒட்டுதல் இல்லை. ஆனாலும் பெரும்பாலும் எங்களுடனேயே இருக்க நேர்ந்தது. அதனாலேயே தன் கடைசிப் பெண்ணை (உள்ளூரிலேயே இருந்த நாத்தனார்) தினமும் வீட்டுக்கு வர வைச்சு இரவு வரை அங்கேயே இருக்கச் செய்வார். அவங்க புக்ககத்தில் இந்த விஷயத்தில் தாராளம். அங்கே என் நாத்தனார் தான் மூ.நா.பெ. என்றாலும் பெரும்பாலான நாட்கள் எங்களுடனேயே கழிப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாக்களுக்கு பெண்குழந்தைகள் மேல் இருக்கும் பாசம் மகன்கள் மேல் இருபப்தில்லை.  இதைப் படிக்கும் என் அக்கா சசி இன்றே எனக்கு போன் அடிப்பார்.

      நீக்கு
    2. அப்படி எல்லாம் இல்லை. எல்லா அப்பாக்களுக்கும் பெண் குழந்தைகள் உசத்தினு எல்லாம் சொல்ல முடியாது. அதிலும் விதி விலக்குகள் உண்டு. எங்க வீட்டில் என்னமோ விசித்திரங்கள் தான் நடக்கும்.

      நீக்கு
  17. விவேக பாநு, விவேக சூடாமணி எல்லாம் தாத்தாவிடம் (அம்மாவோட அப்பா) கட்டுக்கட்டாக வைச்சிருந்தார். அதை எடுத்துப் படிச்ச ஒரே பேத்தி நான் தான். எனக்குக் கொஞ்சமானும் தமிழறிவு இருக்குன்னால் அதற்கு இவை எல்லாமே காரணம்.

    பதிலளிநீக்கு
  18. ரேவதியின் ஒரு கருத்துரை மெயில் பாக்ஸில் இருக்கு. இங்கே இல்லை. :(

    பதிலளிநீக்கு
  19. ரயில் பயணங்களை அதிகமாகச் செய்தவர்கள் எங்க குடும்பத்திலே நாங்க தான். ஆரம்ப காலங்களில் நிறைய ரயில் பயணத்தைப் பற்றியேப் பதிவுகள் எழுதினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதெல்லாம் நான் பிறக்கவில்லை அக்கா!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நீங்க பிறந்தப்புறமாக் கூட ஒன்றிரண்டு வந்திருக்கும்னு நினைக்கிறேன்.

      நீக்கு
  20. பின்னர் வரேன். நேரம் ஆகிவிட்டது. இப்போது வீட்டு வேலைகள் ஆரம்பிக்கணும்.

    பதிலளிநீக்கு
  21. உங்களைத் திருத்தச் சொல்லி நான் போட்ட கருத்து உள்படச் சில கருத்துகள் இங்கே காணோம். ஆனால் மெயில் பாக்ஸில் இருக்கும். ஏன் இப்படி ஆகிறது? ஜேகே அண்ணா எங்க வீட்டு நாலாவது மாடி பற்றி எழுதின கருத்தும் காணாமல் போச்சே!

    பதிலளிநீக்கு
  22. இரயில் பயணங்கள் என்றைக்கும் அலுக்காதவை. நேர பற்றாக்குறை குறை காரணமாக இப்போதெல்லாம் அதிகமாக விமானப் பயணத்தினை தேர்ந்தெடுத்தாலும், முடிந்த போது இரயில் பயணங்கள் மேற்கொள்கிறேன். காணொளி சில நிமிடங்கள் பார்த்தேன். முழுவதும் பார்க்க வேண்டும். பகிர்ந்து கொண்ட மற்ற விஷயங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். இந்தக் கால ரயிலுக்கும் அந்தக் கால ரயிலுக்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு இல்லை?

      நீக்கு
    2. நிறைய வித்தியாசம் உண்டு ஸ்ரீராம். சிறு வயதில் பயணித்த போது இப்போது வருவது போல தின்பண்டங்கள் வந்து கொண்டே இருக்காது. என்பது என் நினைவு. அப்போதெல்லாம் அதிகம் பதிவு செய்து பயணிக்காததால் கூட்டம் இருக்கும்,
      சிறு வயது கூட்டம் எல்லாம் தெரியாது ஆனால் வளர்ந்த பிறகு கூட்டம் என்றாலே அலர்ஜி. அதனால் இப்போது பதிவு செய்து பயணிப்பது என்பது ஒரு வசடி.

      இங்கிருந்து ஒரு முறை ஒரே ஒரு முறை சென்னைக்கு பதிவு செய்யமுடியாமல் பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணித்த போது என்ன சொல்ல...

      கீதா

      நீக்கு
    3. நாங்கல்லாம் முதல் வகுப்பில் முன் பதிவு செய்துட்டு அந்த ரயிலைத் தவற விட்டுட்டு அடுத்த வண்டியில் முன் பதிவு செய்யாத பெட்டியில் கழிவறைப்பக்கம் சாமான்களைப் போட்டுக் கொண்டு அதன் மேல் உட்கார்ந்து பயணித்தவர்கள். இதில் எங்களைத் தோற்கடிக்க யாருமே இல்லை! :))))))

      நீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  24. இரயில் பயணங்கள் பற்றி தனிப் பதிவாக எழுதலாம், நிறைய இருக்கு...

    அதிக முறை பயணம் செய்தது வைகை - திண்டுக்கல் - சென்னை...

    குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் செல்லும் போது, அந்த பயணங்கள் பல மறக்க முடியாதவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைகையில் நானும் பலமுறை பயணித்திருக்கிறேன். நிறைய அனுபவங்கள்!

      நீக்கு
    2. வைகை அறிமுகம் ஆன புதுசில் சென்னை/திருச்சி வழியில் புத்தகங்கள் படிக்கக் கொடுப்பாங்க. திருச்சியோடு நின்னுடும். மதுரையிலிருந்து வந்தால் திருச்சி/சென்னை வரை படிக்கக் கிடைக்கும்.

      நீக்கு
  25. தீர்வு 351 :-

    பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு

    பதிலளிநீக்கு
  26. ஸ்ரீராம் நானும் குழந்தைதானாக்கும்....(கௌ அண்ணா நேற்று இதுக்குப் பதில் சொல்ல முடியவில்லை....கீதாக்கா என்னை விடச் சிறிய குழந்தை அவ்வளவுதான்!!!! எபியில் சொல்லியதுண்டே....அப்பப்ப குழந்தை இல்லைனா யங்கோ யங்க் என்று சொல்லிக் கொள்வதுண்டே!!!ஹிஹிஹி)

    எனக்கும் யானை பிடிக்கும்...ஒரு காணொளி (நான் எடுத்தது அல்ல) எடுத்து வைத்திருக்கிறேன் செம காமெடி காணொளி...பதிவில் போட உள்ளேன்.

    ரயில் பயணம் ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடித்த விஷயம். நான் அதிகம் பயணித்தது ரயிலில்தான்.

    காணொளி பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பஸ்ஸில்தான் அதிக பயணம். ஆரம்ப நாள் ரயில்கள் கசகசவென கூட்டம். எனக்கு கூட்டமே ஆகாது.

      நீக்கு
    2. தவிர்க்க முடியாத பேருந்துப் பயணங்கள் உண்டு என்றாலும் ஏனோ எனக்குப் பிடிக்காது. ஒரு வகை மன அழுத்தம்/இறுக்கமும் ஏற்படும்.

      நீக்கு
  27. கரி எஞ்சின், நீராவி எஞ்சின், எலக்டிரிக் எல்லாவற்றிலும் பயணித்ததுண்டு.

    அதுவும் ஜன்னல் சீட் கிடைப்பதற்குப் பதிவு செய்யும் போதே செய்துவிடுவதுண்டு. அதனாலேயே ஏசி அல்லாத பெட்டியில் பதிவதுண்டு. ஆனால் இப்போது பயணங்கள் அரிதாகிவிட்டது என்றாலும் பயணம் செய்தால் 3வது ஏசி பெட்டியில் தான் பதிவு செய்யப்படுகிறது. வேடிக்கை பார்க்க முடியாது, குறிப்பாக மூன்றாவது விழியில் படம் எடுக்க முடியாது. என்றாலும் ரயில் பயணத்தை மிக மிக ரசிப்பேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அந்தக் காலத்தில் ஜன்னலோர சீட்டுக்கு போட்டி இருக்கும் - சில பெரியவர்களும்.

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    இரயில் பயணம் கட்டுரை அருமையாக உள்ளது. ரொம்பவும் ரசித்து எழுதியுள்ளீர்கள். நான் சிறுவயதில் அவ்வளவாக (ஒன்றிரண்டு முறை சென்றிருக்கலாம்) ரயில் பயணம் சென்றதில்லை. அப்படி அந்த ரயிலில் பயணிக்கும் போது கண்களில் கரி விழுந்துவிடுமென்று அம்மா எச்சரிக்கை செய்வது மறக்க முடியாதது. அந்த கரிப் புகை வாசனையும் நன்றாக இருக்கும். மறக்கவியலாத நினைவுகள்.
    ஆனால், திருமணம் ஆனவுடன் சென்னையிலிருந்து பிறந்த வீட்டிற்கு வரும் போதெல்லாம் பெரும்பாலும் ரயில் பயணந்தான். அதிலும் ஜன்னலோரத்தில் அமர்ந்து கொண்டு நம்முடனேயே ஓடி வரும் மரம், செடி போன்றவகையான வெளிப்புற காட்சிகளை ரசிப்பது ரொம்ப பிடிக்கும்.

    ரயில் காணொளி பார்த்தேன். வெண்ணிறப் புகையோடு வந்த ரயிலுடன் இயற்கை காட்சிகளையும் மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எழுதி இருப்பது ஒன்றுமே இல்லை! வல்லிம்மா தளத்தில் யாரோ எழுதி இருந்த ரயில் பயணம் பதிவு படித்ததும் நான் அது மாதிரி எழுத முடியவில்லையே என்று வருந்தினேன்.

      நீக்கு
  29. ஆமாம் சிறு வயதில் நீங்கள் சொல்லியிருக்கும்படிதான் பயணம். அதுவும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கை இலங்கையிலிருந்து தமிழ்நாடு. பாட்டி ட்ரங்குபெட்டி, கூடைகள் சாப்பாடு என்று எல்லாம் கட்டுக் கொண்டுவிடுவார். இந்த நினைவுகளை இங்கு அவ்வப்போது கருத்தில் சொல்லியிருந்தாலும் சில்லு சில்லாய் ல் வரும் எழுதி வைத்திருக்கிறேன். அப்பா இங்கு இருப்பதால் இலங்கை பற்றி அடிக்கடிப் பேசிக் கொள்வதால்...இங்கிருந்து அங்கு செல்ல இருக்கும் ரயில் இராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ்/போட் மெயில் - முன்பு நாங்கள் பெரும்பாலும் மதுரையிலிருந்துதான் செல்வதுண்டு. எழுதுகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே... ஆமாம்.. நீங்கள் இலங்கை எல்லாம் சென்று வந்திருப்பீர்கள் இல்லை? நான் ராமேஸ்வரம் கூட சென்றதில்லை!

      நீக்கு
    2. கீதா போட் மெயிலில் பயணித்திருக்கலாம். ஆனால் ராமேஸ்வரத்தில் இறங்கி அங்கிருந்து அதன் தொடர்ச்சியான படகிலும் பயணித்திருக்காரா? ஆச்சரியமான ஒன்று. ஏனெனில் தனுஷ்கோடியே 1963/64 ஆண்டுகளில் அழிந்து விட்டதே! அதற்கும் முன்னரே இந்தச் சேவை நிறுத்தப்பட்டதாய்க் கேள்விப் பட்டிருக்கேன்.

      நீக்கு
    3. கீதா போட் மெயிலில் பயணித்திருக்கலாம். ஆனால் ராமேஸ்வரத்தில் இறங்கி அங்கிருந்து அதன் தொடர்ச்சியான படகிலும் பயணித்திருக்காரா? ஆச்சரியமான ஒன்று. ஏனெனில் தனுஷ்கோடியே 1963/64 ஆண்டுகளில் அழிந்து விட்டதே! அதற்கும் முன்னரே இந்தச் சேவை நிறுத்தப்பட்டதாய்க் கேள்விப் பட்டிருக்கேன்.

      நீக்கு
    4. இங்கே போட்ட கருத்தைக் காணோம். இரண்டு முறை போட்டேன்.

      நீக்கு
  30. எனக்கு பயணிகள் ரயில் (பாசஞ்சர்) பிடிக்கும் நின்று நின்று மாப்பிள்ளை ஊர்வலம் போல போகும்.!!!!! நேரமெடுக்கும். ஃபோட்டோ எடுக்க முடியும்!!! தின்று கொண்டே கொரித்துக் கொண்டே போகலாம். பெரும்பாலும் பலரும் மூட்டை கட்டிக் கொண்டு வந்து அதுவும் தவிர விற்பதை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டேதான் வருவர்.

    சீட்டிலிருந்து எழுந்தால் அவ்வளவுதான்....சீட் போகும்.

    இப்போதெல்லாம் வாய்ப்பும் நேரமும் இல்லை என்பதால் விரைவு வண்டிதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நின்று நின்று போவதுதான் எனக்கு பிடிக்காத விஷயமே...!  கூட்டமும் சேர்ந்து கொண்டே போகும்.

      நீக்கு
  31. வல்லிம்மா தளத்தில் அந்தப் பதிவை நானும் ரசித்து ரசித்து வாசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. இளைஞர் பற்றியும் ஒன்று எழுதியிருக்கிறேன் சில்லு சில்லாயில் வரும்....ஏதோ ஒன்றைப் பார்க்கப் போக ஏதோ ஒன்றை கூகுள் என் கண்ணில் பட வைத்து பட்டுக் கொண்டே இருந்ததால் தலைப்பும் அப்படியாக இருந்ததால் பார்த்துத் தொலைத்தேன். ஒரு சில இளைஞர்கள் நல்லது செய்து வாழ்வில் முன்னேறினாலும் பலர் தவறான வழியில் செல்கிறார்கள்.

    //இதனால், சிறு வயதிலேயே மாணவர்களுக்கு சரி எது, தவறு எது என்று தெரியாமலேயே போய் விடுகிறது.//

    இது பள்ளிப்பாடத்தில் வர வேண்டும் என்றாலும் பால பாடம் வீட்டிலிருந்துதான் தொடங்ங்க வேண்டும். அதன் பின் பள்ளியில். இதற்குத்தான் நான் பாட்டி தாத்தாக்காள் கூட இருக்க வேண்டும் என்று சொவ்வேன். அதுவும் நல்லது புகட்டும் பாட்டி தாத்தாக்கள்.

    ஆசிரியர்களைப் பற்றி கல்வியாளர் சொல்லியிருப்பது சரிதான் கண்டித்தால் அப்புறம் பெற்றோர் கோர்ட்டுக்குச் செல்லும் நிலை ஆகியிருக்கிறதே....

    //பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், மனநல ஆலோசகர்கள், கல்வித்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் இடம் பெற்ற, ஒரு நிபுணத்துவம் பெற்ற குழுவை மாவட்ட வாரியாக அரசு அமைக்க வேண்டும். //

    நல்ல கருத்து. நடைமுறையில் கொண்டு வர வேண்டுமே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைத்தாலும் சரிவருமா என்று தெரியாத அளவு நிலைமை சீர்கெட்டு இருக்கிறது.

      நீக்கு
    2. பாடத்திட்டத்தில் மதச்சார்பு என்னும் பெயரில் பக்தி இலக்கியங்களையும் நீதி போதனைகளையும் நீக்கியதன் விளைவை இப்போது அனுபவிக்கிறோம். அதிலும் கடந்த சில வருடங்களில் மாணவ/மாணவிகளின் கொட்டம் அதிகமாகவே இருக்கிறது.

      நீக்கு
  33. ஸ்ரீராம் கவிதை நன்று.....கடல் அலை ஓயாது என்பது போலத்தான் பிரச்சனைகளும். இரு கோடுகள் தத்துவம். ஒன்று இருக்கும் போதே மற்றொன்று தலைநீட்டும் அப்போது இருப்பது சிறியதாகி வருவது பெரிதாகி.....கடைசி வரியில் சொல்லியிருப்பது போல பிரச்சனையா அப்படினா என்னானு கேட்கும் மனநிலை வந்தால் All is well!! ஹிஹிஹி அதுதானே கஷ்டம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நுணுக்கி நுணுக்கி பார்த்துக் கொண்டே போனால் வெங்காயம் உரிப்பது போல பிரச்னை என்று ஒன்றுமே இருக்காது!!

      நீக்கு
  34. மஹாபாரதம் - ஜெமோ தளத்திலேயே இருக்கிறது அவர் எழுதியது, அத்தனைப் பகுதிகளும் இருக்கின்றன.

    பாலகிருஷ்ணன் எழுதியதைத் தமிழில் கொண்டுவந்த ஆ மாதவன் எழுதியதை வாசிக்கத் தூண்டுகிறது. வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் புத்தகத்துக்கு புத்தக விமர்சனம் நம் தளத்திலேயுயே முன்னர் எழுதி இருக்கிறேன் கீதா. (என்றுதான் நினைவு!)

      நீக்கு
  35. புது மொழிகள் - ஹாஹா சிரித்துவிட்டேன். இதில் ஒன்று நாங்களும்ம் சொல்வது கற்க கசடற ....விற்க அதற்குத் தக...

    கீதா

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் சகோதரரே

    புது மொழிகள் நன்றாக உள்ளது. ஒவ்வொன்றையும் வாசித்து ரசித்தேன்.

    கவிதை நன்று. விக்கிரமாதித்தன் என்பவர் எழுதியது என முன்பு நீங்கள் சொன்ன ஞாபகம்.

    இன்று ரயில் அனுபவங்களை தவிர்த்து, பிறவற்றாக பகிர்ந்திருக்கும் பகுதிகள் எல்லாவற்றுக்குமான (பிரச்சனை) ஒரே இணைப்பு அந்த கவிதை.

    ஜோக்குகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.

    நான்கு மாடியேறி தன்னை பேட்டியெடுக்க வருபவரை டென்ஷனுடன் வைத்திருக்க அந்த நடிகைக்கு அப்படியென்ன சந்தோஷமோ ? தான் மட்டும் மேக்கப் கலையாமல் அழகாக அப்படியே இருக்கும் எண்ணம் போலிருக்கிறது. ஹா.ஹா.ஹா.
    ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுமொழிகளை ரசித்த்தற்கு நன்றி.  விக்ரமாதித்தன் பிரபல கவிஞர்.  நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  37. விவேக பானு - சுவாரசியமாக இருக்கிறது அந்தக் காலத்து நடை. ஸ்டைல்.

    ஜோக்ஸ் ஹாஹாஹா ரசித்தேன்...மதன்... மதன் தான். சிக்னல் ஜோக் இப்போதும் பொருத்தம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  38. ..டாட்டா பை பை அங்கிள் - ஏய் என்ன அங்கிள்ன்ற அவர் தாத்தாடா... - ஓ சாரி - தாத்தா!!!! அடுத்த வாரமும் கூ கூ சிக் சிக் காட்டுவீங்களா?!!! ப்ராமிஸ்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டேய் ஏண்டா தாத்தானு சொன்ன பாரு அடுத்த வாரம் கூ சிக் புக் இருக்காதுடா...போட மாட்டாரு!!

      கீதா

      நீக்கு
  39. கருத்து மிஸ் ஆகியிருக்கு....

    அப்பாவைப் பற்றி சொல்லியிருப்பது ரொம்ப மனதை நெகிழ்த்தியது.

    //வயதானாலும் கூட துணையை எதிர்பாராமல் தனியாகவே சென்று வருவார். //

    என் அப்பாவும் அப்படித்தான் இருக்கிறார். நான் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன் ஸ்ரீராம். கடைக்குப் போக வேண்டும் தான் சாமான் வாங்கி வருகிறேன் என்று நான் வேண்டாம் என்று சொல்லி வைத்திருக்கிறேன். இருந்தாலும் அவரது ஆசைக்காக அருகில் மிக அருகில் வீட்டிலிருந்து பார்த்தாலே தெரியும் கடைக்கு மட்டும் அனுப்புவேன் அவர் திருப்திக்காக.

    //சென்னையிலிருந்து கிளம்பும்போது ரயிலில் தாள முடியாத வீசிங், இருமலுடன் உட்கார்ந்திருக்கும் அவரை பார்க்கும்போது மனம் என்னவோ செய்யும், தவிக்கும். //

    நெகிழ்ச்சி.....

    //என்அலுவலக சிரமங்களுக்கிடையே, பொசுக்கு பொசுக்கென ஷண்டிங் அடிக்கும் அவருடன் துணைக்குப் போவதும் சாத்தியமில்லாததாக இருந்தது.//

    என் அப்பாவும் தானே தான் செய்ய நினைக்கிறார். அது நல்லது என்றாலும்...வெளியில் செல்வது கூடத் தானே சென்று வர நினைக்கிறார். நான் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வயதில் நாம் எப்படி இருப்போமோ என்கிற எண்ணமும் வருகிறது.  எப்படியும் ஜீன்களில் சில குணங்கள் கடத்தி வரப்பட்டிருக்கும்...   என்னவோ போங்க...

      நீக்கு
  40. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  41. //யானைக்கும், ரயிலுக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம்! என்ன சொல்கிறீர்கள்?//

    ஆமாம். நீங்கள் சொல்வது சரியே. ரயில் கதைகள், பாடல்கள் , ரயில் சிநேகம் சொல்லாத சினிமா, மற்றும் கதைகள், மக்கள் இருக்கிறார்களா ?

    நானும் சில பதிவுகள் ரயில் பயணம் பற்றி போட்டு இருக்கிறேன்.
    வல்லி அக்கா பகிர்ந்த ரயில் பயணம் பதிவு படித்தேன். உங்கள் ரயில் காணொளி அருமை.

    இப்போது ரயில் பயணத்தில் முன்பு போல பேசுபவர்கள் இருக்கிறார்களா? எல்லோரும் அலைபேசியை வைத்துக் கொண்டு அதை பார்த்து கேட்டு ரசித்து கொண்டு வருகிறார்கள், ஜன்னல் வழியே இயற்கையை ரசிக்க சிலர் தான் இருக்கிறார்கள்.

    //ஒரு பட்டாளமே அவரை வரவேற்க மாம்பலம் சென்றிருந்தோம்.//

    அப்பாவை வரவேற்ற காட்சி மனதை நெகிழ வைக்கிறது.

    முன்பு வரவேற்க ஒரு கூட்டம், வழியனுப்ப ஒரு கூட்டம் இருக்கும்.

    //ரயில்களுக்கு "கூ..." என்று பெண்மை கலந்த ஒரு ஹார்ன் சப்தம் இருந்தது. //

    கூ சத்தம் கொடுத்து ரயில் விளையாட்டு விளையாடாத குழந்தை உண்டா? இப்போது ரயில் சத்தம் கேட்க சகிக்கவில்லைதான்.

    பதிலளிநீக்கு
  42. ஸ்ரீராம் காணொளி பார்த்தேன் செம...அந்த சத்தம் என்ன ரிதம் ஆரம்பித்துக் கூடும் போது ரயில் சத்தமே இசை....பார்த்ததுமே ஏதோ வெளிநாடு போல இருக்கே என்று தலைப்பைப் பார்த்ததும் தெரிந்தது நெதர்லான்ட்ஸ் ஜெர்மனி என்று.

    இடையில் ஒரு அருவி விழுவது தெரிகிறது. உடனே எனக்கு தூத்சாகர் அருவியை ரயிலில் இருந்து அதன் சாரல் தெளிக்கும் அளவுக்கு அருகில் பார்க்கலாம்,. அருமையான காட்சி அது நினைவுக்கு வந்தது.

    காணொளியில் அருவி தெரியும் அந்தக்காட்சி வரும் போது இந்தப் பக்கம் ஒருவர் ட்ரைபாட் வைத்து (அப்போதே!!) காணொளி எடுப்பது தெரிந்தது. கேமரா என்றுதான் தெரிகிறது என் புரிதல்.

    புகை எப்படி வருகிறது. ஏதோ டார்னடோ போன்று...

    மெதுவாகச் செல்லும் போது ரிதம்!! அது போல தடக் தடக்....சில இடங்களில் பெருமூச்சு விட்டுக் கொண்டு!!! அப்புறம் ரிதம் வேகமாக..எஞ்சினின் சக்கரம் முன்னும் பின்னும் போய்...அழகு!!!
    .மக்கள் நின்று கொண்டே ரசிக்கிறார்கள்.

    காணொளியை ரசித்துப் பார்த்தேன் ஸ்ரீராம்

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  43. , மனநல கட்டுரை, பிரச்சனை தீர்வு பகிர்வு, புது மொழி, மற்றும் நகைச்சுவைகள் கதம்பம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  44. நாலாவது மாடி பற்றி எழுதி இருந்த கருத்தைக் காணோம். மெயில் பாக்ஸில் தேடிப் பார்க்கணும். சில வந்திருக்கின்றன. சில போடும்போதே காணாமல் போகின்றன. சில மெயில் பாக்சில் வந்தாலும் இங்கே தெரிவதில்லை. :(

    பதிலளிநீக்கு
  45. இலங்கை ரயிலில் பயணித்து இருபதுவருடங்களுக்கு மேல் இருக்கும் செல்ல வேண்டும் என்ற ஆவல் உண்டு. டுபாய், மலேசியாவில் மெட்ரோவில் சென்றிருக்கிறேன். வீட்டிலிருந்து பார்த்தாலே ரெயில் செல்வதும் சத்தமும் கேட்டவண்ணம் இருக்கிறது. சிறு வயது ரயில் பயணங்கள் மிகுந்த மகிழ்ச்சி தந்திருக்கின்றன.

    ஜோக்ஸ் ரசனை நாலுமாடிபடி ஏறி போக நெஞ்சு படபடக்காது நெஞ்சு வலித்து நடிகை காலில்தான் விழுவார்கள்.:)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!