நெல்லைத்தமிழன் :
பார்க்கும் நமக்கு வயதாகிவிட்டது புரியாமல், நடிகைகளுக்கு வயதாகிவிட்டது மட்டும் நம் கண்ணை உறுத்துவதன் காரணம் என்ன?
# நடிகைகளை நாம் தேவ கன்னிகைகளாகப் பார்ப்பதுதான் காரணம். தேவலோக ரம்பா ஊர்வசி போன்றோர்கள் என்றென்றும் இளமையாக நித்ய கன்னிகளாக இருப்பார்களாம்.
& நானும் இப்படி அடிக்கடி நினைப்பதுண்டு. இந்த பதிலை எழுதும்போது தொலைக்காட்சியில் Kent பொருட்கள் விளம்பரம். நான் வேலை பார்க்க ஆரம்பிக்கு முன்பிலிருந்தே கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து சக்கைப்போடு போட்டவர் அந்த நடிகை நான் வேலையில் சேர்ந்த ஆண்டின் பொன்விழா ஆண்டு கடந்த வருடம். அந்த நாட்களில் கதாநாயகியாக நடித்தவர் - இதோ இன்றும் இந்த விளம்பரத்தில் கனவுக் கன்னியாகக் காட்சி தருகிறார்! இவருக்கு மட்டும் வயது ஏறுவதே இல்லை போலிருக்கு. எனக்கு வயதாகிவிட்டது!
மனிதனை மனிதன் சுமப்பது தவறு என்று திக சொல்கிறது (அது மனித உரிமை மீறலாம்). அப்படீன்னா, செத்த பிறகு சவப்பெட்டியைச் சுமந்து செல்வது மனித உரிமை மீறல் இல்லையா?
# உயிர் போனபின் "அது" மனிதன் அல்ல.
Online ordering வந்ததனால் consumerக்கு லாபமா? இல்லை நஷ்டமா?
# வாங்குபவருக்கு வசதி.
எதனால் வெண்மை நிறம் மேல் நமக்கு ஈர்ப்பு? (பொதுவா). பெண் நல்ல கலராக இருக்கணும்னு ஏன் நினைக்கிறோம்?
# கண்ணைக் கவர்வதற்கெல்லாம் காரணம் சொல்ல இயலாது.
& பெண் வெண்மை நிறமாக இருந்தால் - பேய் போல இருக்காதா !
யார், ஒவ்வொரு பொருளுக்கும் இந்த நிறம்தான் இருக்கணும்னு தீர்மானித்தது? உதாரணமா ஒரு வீட்டுல (நீங்க இப்போ எதுக்கு பெண் பார்க்கப் போவீங்க?) கேசரி நீல நிறம் அல்லது ஆழ் பச்சை நிறத்துல கொடுத்தா நமக்கு-குறைந்த பட்சம் எனக்கு, அதுல ஆர்வம் வராது. துணி தோய்க்கும் சோப், சிவப்பு நிறம்னா ஒரு மாதிரி இருக்கும். பல் தேய்க்கும் பேஸ்ட் மஞ்சள் நிறம் என்பது போல# பழக்கம் காரணமாக ஒவ்வொன்றும் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஒரு மனபிம்பம் நாம் வைத்திருப்பதே காரணம். அதன்படி கேசரிக்கென்று ஒரு நிறம் - அடர்த்தி இருக்கிறது.
= = = = =
சென்ற வாரம் வேறு யாரும் கேள்வி கேட்கவில்லை. எல்லோரும் நிறைய கேள்விகள் கேளுங்கள் - எங்களுக்கும் பொழுபோகவேண்டும் அல்லவா!
= = = = =
எங்கள் கேள்விகள் :
1) உங்களில் யாருக்கெல்லாம் ஜாதகம் / கைரேகை பலன்கள் இதுவரை அப்படியே நடந்துள்ளன?
2) என் நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி : ஒருவர் தன் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டுகிறார். ஜோதிடர் அவர் ஜாதகம் பார்த்து, சில கிரக அமைப்புகள் சரியில்லை என்று கூறி, அதற்குப் பரிகாரமும் சொல்கிறார். ஜாதகரும் அவ்வாறே பரிகாரம் செய்துவிட்டு, மறுநாளே இன்னொரு ஜோதிடரிடம் தன் ஜாதகத்தைக் காட்டுகிறார். இப்பொழுது அவருடைய ஜாதகத்தில் பரிகாரம் update ஆகியிருக்குமா - அல்லது இந்த ஜோதிடரும் பரிகாரம் சொல்லுவாரா ? இதற்கு உங்கள் பதில் என்ன?
3) ஏதேனும் ஒரு விஷயத்தில், சிறு வயது முதல் உங்களுக்கு இருந்த நம்பிக்கையை அல்லது அபிப்பிராயத்தை பிறகு அப்படியே தலைகீழாக மாற்றிக்கொண்டது உண்டா? அப்படியிருந்தால் அது எந்த விஷயத்தில்?
4) விழிப்பு வந்த பின் படுத்துக்கொண்டு இருப்பீர்களா அல்லது எழுந்து காலைவேளை அலுவல்கைளத் தொடங்கிவிடுவீர்களா ?
= = = = = =
படம் பார்த்துக் கருத்து எழுதுங்கள் :
1)
2)
3)
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஆரோக்கியம் நிறை வாழ்வு
பதிலளிநீக்குஎன்றும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
வாங்க வல்லிம்மா. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம்.
நீக்கு1) உங்களில் யாருக்கெல்லாம் ஜாதகம் / கைரேகை பலன்கள் இதுவரை அப்படியே நடந்துள்ளன?
பதிலளிநீக்குசில விஷயங்கள் அப்படியே நடந்திருக்கின்றன.
வயிற்றில் பிரச்சினை இருக்கும் என்று சொன்னது
பலிக்கிறது:)
ஓ..
நீக்குநான் என் ஜாதகத்தில் என்ன பலன் சொல்லப்பட்டிருக்கிறது என்று மனம் ஒன்றி படித்து நினைவில் கொண்டதில்லை. சொன்ன கைரேகை ஜோசியங்கள் பலித்ததில்லை!
என் ஏழு வயதில் மாமாவின் சினேகிதர், அவர் பெயர் கூட
நீக்குசேது என்ற நினைவு.
என்னுடைய நாற்பது வயதில் நாலு வண்டிகள்
வீட்டு வாசலில் நிற்கும் என்றார்.:)
நின்றது. எல்லாமே ரிப்பேர் பார்ப்பதற்காக
சிங்கத்துக்கு வந்த வண்டிகள்!!
ஹா.. ஹா.. ஹா... (மனம் விட்டு சிரிக்கிறேன்)
நீக்குஅவர் பார்த்திருந்தால், எப்படியோ நிற்கிறதா இல்லையா என்று கேட்டிருப்பார்!
நானும் இந்த நாட் வைத்து கதை எழுத ரொம்ப நாளாக நினைத்திருந்து, அதற்கு நேரமே கிடைக்கலை. உங்க பையன் பெரிய நிலைக்கு உசந்துடுவான், கைக்கெட்டாத உயரத்தில் வேலை பார்ப்பான்... கடைசியில் அடுக்குமாடிக் கட்டடங்களுக்கான கிரேன் ஆபரேட்டராக வேலைபார்ப்பதாக
நீக்கு2,மறுநாளே இன்னொரு ஜோதிடரிடம் தன் ஜாதகத்தைக் காட்டுகிறார். இப்பொழுது அவருடைய ஜாதகத்தில் பரிகாரம் update ஆகியிருக்குமா - அல்லது இந்த ஜோதிடரும் பரிகாரம் சொல்லுவாரா ? இதற்கு உங்கள் பதில் என்ன? ''
பதிலளிநீக்குகண்டிப்பாக இவர் வேறு விதமாகச் சொல்வார்:)
இரண்டு ஜோசியர்கள் ஒரே மாதிரி சொல்வதில்லை.
பரிகாரம் செய்யாமலேயே வேறு ஜோசியரிடம் காட்டினாலும் வேறு விதமாகத்தான் சொல்வார், இல்லையா?!
நீக்குஓ. ஆமாம். அவரவர் அந்த ஜாதகத்தைக் கணிக்கும் விதத்தில் இருக்கிறது அப்பா.
நீக்குஜாதகமென்ன இரயில்வே RAC statusஆ? அப்டேட் ஆவதற்கு? பரிகாரம் என்பதற்கு எந்தவித அர்த்தமும் கிடையாது என்பது என் எண்ணம். அது, கர்ம வினையை காலம் தாழ்த்தவே உதவும் (அடுத்த பிறவியில் அதே கர்ம வினை நமக்கு வரும்)
நீக்கு3) ஏதேனும் ஒரு விஷயத்தில், சிறு வயது முதல் உங்களுக்கு இருந்த நம்பிக்கையை அல்லது அபிப்பிராயத்தை பிறகு அப்படியே தலைகீழாக மாற்றிக்கொண்டது உண்டா? அப்படியிருந்தால் அது எந்த விஷயத்தில்? ''
பதிலளிநீக்குசிறுவயது முதல் பெற்றோர் சொன்ன விதத்தில்
உலகம் முழுவதும் நேர்மையான ,பொய் சொல்லாத மனிதர்களால்
ஆனது என்று நம்பினேன்.
பிறகு மாறிவிட்டது:)
:))) கருத்துரைக்கு நன்றி.
நீக்குஹா.. ஹா.. ஹா... (உள்ளே வேதனையுடன்தான் சிரிக்கிறேன்!)
நீக்குவேதனைதான் மா ஸ்ரீராம். நாம் தான் விழிப்புணர்வுடன்
நீக்குஇருக்க வேண்டும். ஏமாற்றுபவர்களைக் கூடப்
பொறுத்துக் கொள்ளலாம். ஏமாறுபவர்களைப் பொறுக்க முடியாது
என்பார்கள் மா.
இந்த கருத்தை தில்லுமுல்லு படத்தில் தேங்காய் கூட (கடைசி காட்சியில்) சொல்வார்! :))
நீக்கு/சிறுவயது முதல் பெற்றோர் சொன்ன விதத்தில்
நீக்குஉலகம் முழுவதும் நேர்மையான ,பொய் சொல்லாத மனிதர்களால்
ஆனது என்று நம்பினேன்./
பிறகு மாறிவிட்டது:)
சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களின் கருத்தை நானும் அப்படியே ஆமோதிக்கிறேன். காலப்போக்கில் அப்படிப்பட்ட மனிதர்களை வெறுத்து விட்டாலும், நம்முள் ஊறிய மனிதாபிமானம், பச்சாதாபம் போன்றவை சமயத்தில் அவர்கள் சொல்வதை நம்ப வைத்து விடுகிறது. இது நம் வினைப்பயனாக கூட இருக்கலாம்.
சுவாரஸ்யமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு எல்லோருக்கும் நன்றி.
நீக்கு4) விழிப்பு வந்த பின் படுத்துக்கொண்டு இருப்பீர்களா அல்லது எழுந்து காலைவேளை அலுவல்கைளத் தொடங்கிவிடுவீர்களா ?''
பதிலளிநீக்குகண்விழித்த பின் படுத்திருக்கப்
பிடிக்காது.
காலை வேலைகள் பிறகு கணினி.,குளியல்,உணவு,படிப்பு.
// கண்விழித்த பின் படுத்திருக்கப்
நீக்குபிடிக்காது. //
எனக்கும்!
அன்பின் வணக்கம்
பதிலளிநீக்குஅனைவருக்கும்...
இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க வாழ்க
நீக்குபடங்களில் இருக்கும் குழந்தையும் செல்லங்களும் மிக இனிமை.
பதிலளிநீக்குநன்றி அம்மா.
நீக்குKent விளம்பர நடிகைக்கு 74 வயது இருக்குமா:)
பதிலளிநீக்குஅவருக்கு வயசே ஆகவில்லை.
அவரும் நாட்டியமங்கை!
நீக்குஓ அப்ப நான் கீழே கருத்தில் சொன்ன நடிகை இல்லையா !!!!! உடனே கூகுளில் போட்டுப் பார்த்தேன்! ஹேமமாலினியா?.அவங்கதான் கென்ட் ஆர் ஓ ல வந்தாங்க. அவங்க மேக்கப் வல்லிம்மா.....அதை எல்லாம் எடுத்துவிட்டு, டை இல்லாம சிம்பிளா வரச் சொல்லுங்க பார்ப்போம் நீங்களும் அவங்க வயதுதானே நீங்கள் ரொம்பவே அழகாக இருக்கீங்க அம்மா.
நீக்குகீதா
ஆ !! ஐஸ் ஐஸ் !!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குஎனக்கு ஜாதகமே இல்லையே... இருப்பினும் வாழ்வு கடந்துதான் போகிறது...
பதிலளிநீக்குஅதான் ரெண்டு கை இருக்குல்ல ;ரேகையோட). அதனால்தான் வாழ்வு கடக்கிறது.
நீக்குஇள வயது முதல் நம்பியது... ஒருவரின் முகலட்சணம் அழகு இவைகளை வைத்து அவரின் குணநலன்களைத் தீர்பானிப்பது... உதாரணமா கன்னங்கரேல்னு அழகில்லாம இருந்தால்.. அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது என அலட்சியமாக நினைப்பது.. இந்த முன் தீர்மானிக்கும் எண்ணம் ஒரு எத்தியோப்பியப் பெண்ணால் ;துபாய் ஜிம்மில்) மாறியது.
பதிலளிநீக்குவித்தியாசமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குபொதுவாகவே சிலரைப் பற்றி எல்லோரும் நினைப்பது இப்படித் தான். என்னையும் பள்ளி நாட்களிலும் சரி, பின்னர் அலுவலக நாட்களிலும் சரி, மாமியார் வீட்டிலும் சரி அனைவரும் இவ எல்லாம் என்ன வேலை செய்து கிழிக்கப் போறா! என்றே நினைச்சாங்க. வலை உலகிலும் அப்படியே! ஏனெனில் ஆரம்பத்தில் மொக்கைப் பதிவுகள் தானே! இப்போவும் வாட்சப்பிலோ, அல்லது வேறு எதற்காகவோ நண்பர்களுக்கு நான் செய்தி அனுப்பினால் "நன்றி மாமா!" என்றே சொல்லுவார்கள். நான் மாமா இல்லை எனச் சொன்னாலும் நம்பினவர்கள் இல்லை. அப்படியானு சிரிச்சுட்டுப் போயிடுவாங்க. ::)))))))
நீக்குநீங்க வீட்டில் நீங்களே சமைப்பீங்களானு கேட்டவங்க எல்லாம் உண்டு.
நீக்குஉயிர் போனபின் அது மனிதன் இல்லையா? அப்போ எல்லாத் தலைவர்களும், உறவினர்களும் வந்து பார்ப்பது யாரை?
பதிலளிநீக்குபூத உடலை.
நீக்குஎனக்கு ஒரு சந்தேகம். பேத உடலைப் பார்ப்பது எதற்காக?
நீக்குதேவை இல்லைதான்.
நீக்குபெண் வெண்மை நிறமாக.... சீரியஸ் கேள்விக்கு இந்த பதிலா? அப்போ, பொண்ணு செக்கச் செவேல்னு இருக்கா, கிளி மாதிரி அழகு, தொட்டா ஒட்டிக்கற கருப்பு, ரதி மாதிரி இருக்கா ..... என்றெல்லாம் சொல்றவங்க பைத்தியங்களா?
பதிலளிநீக்குகேக்கறவங்கதான் !!
நீக்குஅந்தப் பேய்ப் பெண் யாரு? பார்த்த ஜாடையா இருக்கே? தமன்னா? அல்லது அனுஷ்கா?
நீக்குஅனுஷ்காவை எல்லாம் பேயாக போட்டால் ஸ்ரீராம் என் மீது வழக்குத் தொடர்ந்துவிடுவார் !!
நீக்குவிழிப்பு வந்தபின்... இது விழிப்புக்குக் கொடுக்கும் விளக்கத்தைப் பொருத்தது. மார்கழில (பெங்களூர்ல, மார்ச்-மே தவிர... சென்னைவாசிகளுக்கும் வயத்தெரிச்சல் உண்டாக்குவோமூ) 4 மணிக்கு மழிப்புத் தட்டினால் இன்னும் கொஞ்சம் தூங்குவோம்னு போர்வையை நன்றாகப் போர்த்திக்கொள்வதில்லையா? உடம்புக்கு தூக்கம் போதும் என்ற நேரத்தில் முழிப்பு வந்தால் படுத்திருக்க முடியாது
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குமுன்னெல்லாம் கரெக்டாக் காலை நாலரைக்கு முழிப்பு வந்துடும். இப்போத்தான் 2,3 வருடங்களாக தாமதமாக எழுந்து கொள்வதைப் பழக்கப் படுத்திக் கொண்டிருக்கேன். அநேகமாக ஐந்து/ஐந்தரை மணிக்கு
நீக்குவணக்கம். இன்றைக்காவது பதில் போகிறதா என்று பார்க்கிறேன்.
பதிலளிநீக்குவந்தாச்சு, வந்தாச்சு ! வாழ்த்துகள் !!
நீக்குநேற்றுமே வந்துவிட்டதே பானுக்கா உங்க கருத்து இங்கு
நீக்குகீதா
இனிய புதன்கிழமை.. கலகலப்பான செய்திகளுடன் கனியமுதம் போலப் பதிவு..
பதிலளிநீக்குஆஹா ! நன்றி.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குமுதல் கேள்விக்கு:
பதிலளிநீக்குராஜ மன்னார்குடியில் வாழ்ந்த போது, பதினெட்டு வயதில் வாசலிலோடு போன தயிர்காரம்மா தோழியில் வீட்டில் தயிர் கொடுக்க உள்ளே வந்தார். அப்போதெல்லாம் பானையில் தயிருடன் அதை அளந்து ஊற்ற ஒரு கொட்டாங்கச்சி சில்லுடன் தயிர் விற்கும் பெண்கள் வீதிகளில் முற்பகல் பொழுதுகளில் வலம் வருவார்கள். எனக்கென்னமோ அந்த தயிரை வாங்கிக்குடிக்கப் பிடிக்கும். உள்ளே வந்தவர் தலையிலிருந்த சும்மாடை இறக்கி வைத்து விட்டு பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று என் கையைப்பிடித்து பார்த்தார்.
" இந்தக்கையை பிடிக்க நிறைய பேர் வருவார்கள். ஆனால் நீ உன் நெருங்கிய உறவுக்காரரைத்தான் விரும்பி கல்யாணம் பண்ணிக்கொள்வாய். அவர் உன்னை கடல் கடந்து அழைத்துச் சென்று உன்னை ரொம்பவும் நன்றாக வைத்துக்கொள்வார். இந்தக் கையால் நிறைய நல்ல காரியங்கள் பண்ணுவாய்" என்று சொன்னது அந்த அம்மா. 'இதென்ன கதை' என்று இதிலெல்லாம் நம்பிக்கையில்லாத நான் கிண்டலாக சிரித்தேன். ' ' 'இதெல்லாம் நிச்சயம் நடக்கும். அப்போது என்னை நிச்சயம் நினைத்துப்பார்ப்பாய்' என்றார். என் சினேகிதி தன் கையை நீட்ட, அதைப் பார்த்தவர் முகம் மாறி விட்டது. ' நல்லா இருப்பாய்' என்று சொல்லி உடனேயே எழுந்து சென்று விட்டார்.
அவர் சொன்ன படியே ஆறு வருடங்கள் கழித்து எங்களின் [காதல்] திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே நெருங்கிய உறவினரான என் கணவர் ' வாழ்நாள் முழுவதும் இதே கிராமத்தில் தான் [ நீடாமங்கலம் அருகே ஒரு கிராமம்] கூட்டுக்குடும்பத்தில் தான் நாம் வாழ வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, நான் முழு மனத்துடன் சம்மதித்திருந்தேன். ஆனால் குடும்ப சூழ்நிலைகளால் என் கணவர் கடல் கடந்து வேலைக்குச் செல்ல நான் பின்னாலேயே பயணித்தேன். இப்போதும் கடல் கடந்த வாழ்க்கை தான். அந்த தயிர்க்காரம்மாவை இப்போதும் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.
என் சினேகிதி யாருக்கும் வீட்டுக்கும் சொல்லாமல் காதலித்து கல்யாணம் பண்ணி சில மாதங்களிலேயே அவர் கணவர் இறந்து விட்டார்.
அந்தத் தயிர்க்காரம்மா, சிநேகிதிக்கு இதனைச் சொல்லியிருந்தால் அவர் படுகுழியில் விழாமல் தப்பியிருப்பாளே என்று என்றாவது யோசித்துப்பார்த்ததுண்டா மனோ சாமிநாதன் மேடம்?
நீக்குசினிமா உலகில் இருந்த புகழ்பெற்ற ஜோசயர், என் 20+ல், எனக்கும் என் நண்பனுக்கும் கைரேகை பார்த்துவிட்டு, அவனுக்கு கோடீஸ்வரனாகும் யோகம் உண்டு எனச் சொன்னார். எனக்குச் சிறப்பாக எதுவும் சொல்லவில்லை. நண்பன் துபாய்லாம் சென்று நல்லா சம்பாதித்து 52+ல் இறந்துவிட்டான். ஒப்பீட்டளவில் துபாய் ஓரிரு வருடங்களுக்குப் பின் கோய், 9 வருடங்கள் கழித்து அவனைவிட அதிகமாகச் சம்பாதித்தேன். கைரேகை பார்க்கிறவர்களும் சரியாகப் பார்த்துவிட முடியாது என எனக்குத் தோன்றிற்று.
சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி.
நீக்குஅந்த சினேகிதியை அடிக்கடி நினைத்துக்கொள்வேன். இந்த வயதிலும்கூட! யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவர் ஒருத்தரை விரும்பியது தெரிந்தபோது அவரை ' ஜோசியத்தை உண்மையாக்கி விடாதே என்று கண்டித்தது நான் மட்டுமே. ' நீ கேள்விப்பட்டது தவறு. நான் அவரை சகோதரனாக நினைக்கிறேன் என்று சொன்னார். ஆனால் ஒரு நள்ளிரவு அவரின் அம்மா அழுதவாறே வீடு தேடி வந்து சொன்னபோது தான் எப்படி தடுத்தாலும் நடப்பது தான் நடக்கும் என்பது புரிந்தது எனக்கு!
நீக்குபொதுவாய் இந்த மாதிரி விஷயங்களை ஜோதிடத்திலோ, ஜாதகம் பார்க்குமிடத்திலோ சொல்ல மாட்டார்கள். தவிர்க்க முடியாமல் சில பேர் சொல்லுவார்கள்.
ஆம், உண்மைதான். கண்டம் இருக்கிறது என்றால் - 'எச்சரிக்கையாக இருங்க' என்று சொல்லுவார்கள்.
நீக்குஎன் கைரேகையைப் பார்த்த ஒருவர், எனக்கு 60, 65களில் இரண்டு விபத்துகள் (விமான அல்லது கார் சம்பந்தமான) நடக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதை நம்பி நான் லைசன்ஸும் வாங்கலை, கார் வாங்கவும் ரொம்பவே தயங்கறேன்
நீக்குஇடுகை இடும்போது உடனேயே பதிவிலேறுவதில்லை. இரண்டு மூன்று முயற்சிக்கப்புறம் தான் பதிவேறுகிறது!
பதிலளிநீக்குBlogger ஏன் இப்படி படுத்துகிறது என்று தெரியவில்லை.
நீக்குஇந்த வாரம் கேள்விகள் குறைவு... அடுத்த வாரம் கேள்விகள் நிறைய வரட்டும்... :)
பதிலளிநீக்குவரட்டும்... :)
நீக்குஅறன் வலியுறுத்தல் :
பதிலளிநீக்குஅறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (37)
கூடாவொழுக்கம் :
மழித்தலும் நீட்டலும் வேண்டா...
(280)
நட்பு :
புணர்ச்சி பழகுதல் வேண்டா...
(785)
(கேள்வி 1 & 2) வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கத்தை (கேள்வி 3) சிறு வயதிலேயே (கேள்வி 4) விழிப்புணர்வு பெற்று, உள்ளிருக்கும் ஐம்பூதங்களோடு சேர்ந்து பலமுறை நகைப்பது உண்டு...!
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குமுதல் கேள்வியே ஹாஹாஹா நெல்லைக்கு வயதாகிவிட்டது!!!! வயதானால், நம்மை விட சின்னவர்களுக்கும் வயதானாலும் இன்னும் இளமையாக இருப்பது போலத்தானே தெரியும்!!!!!
பதிலளிநீக்குபதிலில் கௌ அண்ணா நீங்க யாரைச் சொல்லியிருக்கீங்கன்னு தெரிகிறது நதியா தானே?!!
கீதா
இல்லை.
நீக்குஹேமமாலினி! அவர் இன்னமும் நாட்டிய நிகழ்ச்சிகள் கொடுத்துக் கொண்டிருக்காரே! அதுவே ஓர் உடல் பயிற்சியாக இருக்கும்.
நீக்கு& பெண் வெண்மை நிறமாக இருந்தால் - பேய் போல இருக்காதா ! //
பதிலளிநீக்குஹஹஹஹஹஹஹஹ்ஹ அதுக்கு செம படம் கௌ அண்ணா!!!! சிரிச்சு முடில நான்!!!
கீதா
யாருன்னு கண்டுபிடிச்சீட்டீங்களா !
நீக்குவிழிப்பு வந்த பின் படுத்துக்கொண்டு இருப்பீர்களா அல்லது எழுந்து காலைவேளை அலுவல்கைளத் தொடங்கிவிடுவீர்களா ?//
பதிலளிநீக்குவிழிப்பு வந்ததும் எழுந்து கண்ணை மூடி பிரார்த்தனை செய்து கான்ஷியஸ் ப்ரீதிங்க் செய்துவிட்டு, கழுந்து தோள்பட்டை பயிற்சிகள் செய்துவிட்டு, அன்றைய வேலைகள் முக்கியமாக என்ன இருக்கு என்று மனதில் ஒரு சின்ன முன்னோட்டம் அதன் பின் வேலைகள் தொடங்கிவிடுவது வழக்கம்.
கீதா
இந்த மாதிரி பெண்கள் சர்வாதிகாரமா செயல்படக்கூடாது என்றுதான் நாங்கள், மெனுவை எல்லாம் தீர்மானிக்கிறோம். அதனால, நாளின் முதல் வேலை, கணவரிடம் சென்று, இன்று காலை உணவுக்கு என்ன பண்ண? மதியம் என்ன பண்ண என்று முதலில் கேட்க வைத்துவிடுவோம். கீ.ரங்கன்(க்கா) கணவர் அப்பாவி போலிருக்கு. ஹா ஹா
நீக்கு//கான்ஷியஸ் ப்ரீதிங்க் செய்துவிட்டு, கழுந்து தோள்பட்டை பயிற்சிகள் செய்துவிட்டு// on a serious note...வீட்டில் பெண்களுக்கு ஏகப்பட்ட வேலைகள், ரெஸ்பான்ஸிபிலிட்டீஸ். நிறைய நேரம் எனக்கு ரொம்பவே மனதுக்கு கஷ்டமா இருக்கும். எனக்கு ரெஸ்ட் எடுக்கலாம்னு தோணினா, எதையும் செய்யாமல் போய்விடுவேன். ஆனால் வீட்டில் பெண்களுக்கு அப்படிஅல்ல.
நீக்குவிழிப்பு வந்தபின் படுத்துக் கொண்டு இருக்கும் பழக்கம் இல்லை. மனம் விரும்புவதும் இல்லை. விட்டுப்போச்சு மேலே சொன்னதில்
நீக்குகீதா
நெல்லை சிரித்துவிட்டேன்!!! உங்க கருத்து பார்த்து.
நீக்குகீதா
on a serious note...வீட்டில் பெண்களுக்கு ஏகப்பட்ட வேலைகள், ரெஸ்பான்ஸிபிலிட்டீஸ். நிறைய நேரம் எனக்கு ரொம்பவே மனதுக்கு கஷ்டமா இருக்கும். எனக்கு ரெஸ்ட் எடுக்கலாம்னு தோணினா, எதையும் செய்யாமல் போய்விடுவேன். ஆனால் வீட்டில் பெண்களுக்கு அப்படிஅல்ல.//
நீக்குமிக்க நன்றி நெல்லை எல்லாப் பெண்களின் சார்பிலும்!!!!
கீதா
I am able to close the kitchen max 8:45 PM and go to sleep by 9:15, Ladies are not able to implement this. Why?
நீக்குஅதெல்லாம் இல்லை. கூட்டுக்குடும்பமாக இருந்தப்போத் தான் எனக்குப் பத்து மணி வரை ஆகும். ஏனெனில் சமையலறையை எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் முன்னர் தண்ணீர் விட்டுப் பெருக்கக் கூடாது என்பார்கள். சில சமயம் மைத்துனர்கள் தாமதமாகச் சாப்பிடும்போது நேரம் ஆயிடும். ஆனால் இப்போல்லாம் அதிலும் கடந்த பத்து வருஷங்களாக ஏழரைக்குச் சமையலறை மூடிடுவேன். முன்னெல்லாம் எட்டரைக்குப் படுத்துக்கப் போயிடுவேன். இப்போத் தான் மருத்துவர் அவ்வளவு சீக்கிரம் போகாதீங்க. ஒன்பதரைக்கு வைச்சுக்குங்க என்றார். ஏனெனில் காலை சீக்கிரம் மூன்று மணிக்கே விழிப்பு வந்துடும். ஆகவே கொஞ்சம் தாமதமாய்ப் படுத்தால் காலை ஐந்து மணிக்குள் எழுந்துக்க வசதி என்றார். மற்றபடி சமயலறையில் சாயந்திரம் ஆறரைக்கு இரவு உணவு தயாரிப்பு முடிஞ்சதுன்னால் அப்புறமா வேலையே இல்லை.
நீக்கு// நமக்கு வயதாகி விட்டது புரியாமல்.. //
பதிலளிநீக்குவிவரம் புரியாமல் இந்த நாலு வார்த்தைகளுக்காக சில வரிகள் எழுதி விட்டேன்.. அப்புறம் தான் தெரிந்தது.. பதிவு சம்பந்தப்பட்டதை மட்டும் தானே கவனிப்பார்கள்..
ஆகையால் தனியே வைத்திருக்கின்றேன்..
ஆனாலும் மனசு கேட்க மாட்டேன்.. என்கிறது..
//பதிவு சம்பந்தப்பட்டதை மட்டும் தானே// - நான்லாம் பதிவுக்கு சம்பந்தம் இல்லாததைத்தான் முதலில் கவனிப்பேன்.
நீக்கு:))))
நீக்குஜோசியம் - ஒரு சில தவிர எல்லாம் பலித்ததில்லை.
பதிலளிநீக்குவிழிப்பு வந்த பின்னும் கொஞ்சம் படுத்திருப்பதுண்டு. தினமுமே நிறைய வேலைகள் என்பதால் அப்படித் தோன்றும்.
பெரும்பாலும் வேலைப் பளு ரப்பர் வேலைகள், வெளியில் வண்டி ஓட்டிச் செல்வது, தற்போது வீடியோ வேறு போடுவது என்று பல இருப்பதால் பல நேரங்களில் ஓய்வு என்பது எடுக்க முடியாமல் போகும். இரவு படுப்பதும் வெகு நேரம் கழித்துதான் என்பதால்.
துளசிதரன்
கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஎனக்கு ஜாதகம் இல்லை. எங்கள் வீட்டில் ஜாதகம் பார்க்காமல்தான் எல்லோருக்கும் திருமணம் நடந்தது.
எப்போது விழித்து கொள்ளும் நேரத்தில் விழித்து கொண்டால் விழித்து கொள்வேன். இரண்டு மணி, மூன்று மணிக்கு விழிப்பு வந்தால் எப்போது விழித்து கொள்ளும் 4.30 வரை படுத்து கொண்டு இருப்பேன்.
அதுவே மிகவும் கஷ்டமாக இருக்கும்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு1.குழந்தை மிக அனபாய் கிளியை பார்த்து நானும்( தத்தை மொழிதான்) உன்னை போல் பேசுவதாக சொல்கிறார்கள்.
பதிலளிநீக்கு2.பூனையை பார்த்து கிளி நீ நடபு கரம் நீட்டுகிறாய் ஆனால் கிளியயிய வளர்த்து பூனை கையில் கொடுக்க வேண்டுமா ? என்கிறார்களே!
3.பெரியவர் "எனக்கு நீ துணை, உனக்கு நான் துணை" என்று சொல்வது போல் இருக்கிறது.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇரவு ஒருமணி இரண்டு மணிக்கு விழிப்பு வரும் தூங்கிவிடுவேன். காலையில் கைபேசியில் எலாம் வைத்து விடுவேன். :)
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குகிளிப்பேச்சுப் பழகிக்கறதோ பாப்பா?
பதிலளிநீக்குபூனை கிளியை விட்டு வைக்கணும்!
பெரியவருக்கு இதான் நல்ல துணை.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஜோசியத்தைப் பற்றியும் என்னோட அனுபவங்கள் குறித்தும் நிறையச் சொல்லிட்டேன். ஆகையால் இங்கே மறு பதிவெல்லாம் இல்லை.
பதிலளிநீக்குஓ கே
நீக்குஇரண்டாவது கேள்விக்குப் பதில் சொல்வது கஷ்டம். மூன்றாவது கேள்விக்கு அப்படி எந்தவிதமான கருத்தையும் முன் கூட்டியே வைச்சுக்கறதில்லை. எதையும் யோசித்துத் தீர்மானிப்பதே வழக்கம். மனதிற்குள்ளேயே போட்டு அலசி ஒரு அபிப்பிராயம் வந்தால் அநேகமா அது மாறினது இல்லை.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு