வெள்ளி, 8 ஜூலை, 2022

வெள்ளி வீடியோ : காலை மாலை வெயிலின் நிறத்தை கன்னத்தில் பூசிய மங்கை

 இந்தப் பாடலைக் கேட்காதோர் இருக்க முடியாது! விரும்பாதோரும் இருக்க முடியாது. மனதுக்குள்ளாவது ஒருமுறையேனும் பாடிப் பார்க்காதவர்களும் இருக்க முடியாது!

நடுவில் எம் எஸ் அம்மா குரலில் 'ஒன்றும் குறையில்லை' என்று வலியுறுத்தும் மனதுக்குள் எதுவோ நிகழும்!

பாடலின் கீழே இடம்பெற்றிருந்த ஒரு கமெண்ட் வாயிலாக இந்தப் பாடல் பற்றி... சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியால் எழுதப்பட்ட ஒரே ஒரு பாடல் இதுவாகும். தமிழறிஞர் மீ.ப. சோமசுந்தரம் ( மீ.ப.சோமு) அவர்களின் உதவியுடன் இயற்றப்பட்ட இந்தப் பாடல் 1967-இல் ‘கல்கி’ பத்திரிகையில் வெளிவந்தது. இந்தப் பாடலுக்கு இசை வடிவம் தந்தவர் கடையநல்லூர் வெங்கட்ராமன் ஆவார். மறைந்த இசை மேதை பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியால் 1979/80 -இல் முதலில் பாடப்பட்ட இப்பாடல், பிறகு இசையுலகில் மிகப் பிரபலமானது.

சென்னை தூர்தர்ஷன் தொடங்கப்பட்டபோதும் எம் எஸ் அம்மா இப்பாடலை தொலைக்காட்சியில் பாடியதை ரசித்த நினைவு வருகிறது.

பல்லவி (ராகம்: சிவரஞ்சனி)

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
அனுபல்லவி (ராகம்: சிவரஞ்சனி )

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
சரணம்1 (ராகம் சிவரஞ்சனி)

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
சரணம்2 (ராகம்: காபி)

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
சரணம்3 (ராகம்: சிந்துபைரவி)

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா



1978 ல் வெளிவந்த படம் 'உறவுகள் என்றும் வாழ்க'.  முத்துராமன் ஸ்ரீவித்யா, படாபட் நடித்த இந்தப் படத்துக்கு இசை சங்கர் கணேஷ்.  பாடல்களை கண்ணதாசனும் வாலியும் எழுதி இருக்கிறார்கள்.  

இந்தப் படத்தின் இன்னொரு பாடலான "நானூறு பூக்கள்" சிலோன் ரேடியோவில் அடிக்கடி கேட்டிருக்கிறேன், ரசித்திருக்கிறேன்.  எஸ் பி பாலசுப்ரமணியம் குழுவினர் பாடிய பாடல் அது.  அப்புறம்தான் இந்தப் பாடலைக் கேட்டேன்.

இந்தப் பாடல் வாலி எழுதியதாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஹிப்பி முத்துராமன்!  இரண்டு பெண்களை ஒப்பீடு செய்து தன் விருப்பம் எதுவென்றும் சொல்கிறார்.  இவர் மட்டும் நாகரீகமாக இருப்பாராம்... வரும் பெண் அச்சம், மடம் நாணம் பயிர்ப்புடன் இருக்க வேண்டுமாம்!!

காட்சியுடன் பாடலைக் கொடுத்திருந்தாலும், காட்சியைப் பார்க்காமல் ஒருமுறையாவது பாடலைக் கேட்டால் பாடலை இன்னும் கூட ரசிக்கலாம் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு.

வாழ்க்கை என்றொரு பாடல் -அதில் 
ஆளுக்கு ஆளொரு ராகம் 
செல்வம் என்றொரு தாளம் -ஆசைதான் 
அதன் மேளம்  = இதயங்கள் 
மாயையில் ஆடுது பாவம் 

சரித்திரம் முழுதும் படித்தால் தெரியும் 
பணத்தால் உயர்ந்தவர் இல்லை 
நம் தலைமுறைக்கென்றொரு பண்பாடுண்டு 
தர்மம்தான் அதன் எல்லை 

சட்டத்தின் நிறமோ சிவப்பு -அதைச் 
சாதிக்கும் நிறமோ கருப்பு 

காலை மாலை வெயிலின் நிறத்தை 
கன்னத்தில் பூசிய மங்கை 
அவள் கால்களை பார்த்து நடக்கின்றபோதும் 
காட்சியில் காமனின் தங்கை 
 
தாயிடம் வாங்கிய நாணம் - குல 
தர்மத்தில் ஓங்கிய மானம் 

பார்வையில் மோகனம் ஆனந்த பைரவி  -நான் 
விரும்பும் ஒரு பெண்மை 
அது  பக்தியில் கல்யாணி பரவச வசந்தா 
பந்துவராளியின் மென்மை 
யாருக்கேன் கற்பனை பொருந்தும் - அதைச் 
சொன்னால் வேறொன்று வருந்தும் 

46 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. //ஒருமுயினும் பாதிப் பார்க்காதவர்களும்// திருத்துங்க ஶ்ரீராம். :(

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நெல்லை எங்கே சுற்றுலா போயிருக்கார்? நான் சீக்கிரம் வந்தால் அவர் வர மாட்டார். அவ்ர் வர அன்னிக்கு என்னால் வர முடியாது! :)

    பதிலளிநீக்கு
  4. முதல் பாடல் அநேகமாக தினம் தினம் கேட்டு ரசிப்பது தான். இரண்டாவது படமே தெரியாது. பாடல் அதை விட! கேட்டதே இல்லை. இங்கே தான் முதல் முறையாகக் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்களில் முதல் பாடல் கேட்காத நாளில்லை. திருமதி எம் எஸ். சுப்புலட்சுமி அவர்களின் இனிமையான உருக்கமான குரலில் பல முறை கேட்டு மனம் கசிந்ததுண்டு. பாடலும் என் மனதுக்குள் எப்போதும் ஓடிக் கொண்டிருப்பது . கிட்டத்தட்ட அனைத்து இசை மேதைகளும் இப்பாடலை பாடி கேட்டாகி விட்டது. இருப்பினும் இவர் குரலில் அந்த கோவிந்தனை அருகிலேயே காண முடியும். குறை ஒன்றுமில்லை கோவிந்தா....

    இதுபோல்தான் "என்ன தவம் செய்தனை யசோதா" அனைவரது குரலிலும் பாடலும் மனதை உருக்கும்படியாக இருக்கும்.

    இரண்டாவது திரைப்பட பாடல் கேட்ட நினைவில்லை. கேட்டால் ஒருவேளை நினைவுக்கு வரும். கேட்டு விட்டு மீண்டும் வருகிறேன். பாடல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. இரண்டும் பலமுறை கேட்டு ரசித்த பாடல் ஜி

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  8. முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்.
    திருமதி எம் எஸ். சுப்புலட்சுமி அவர்களின் இசை தொகுப்பில் வைத்து இருக்கிறோம். அடிக்கடி கேட்போம்.
    அடுத்த பாடல் முன்பு வனொலியில் கேட்டது தான். கேட்டு பல வருடங்களுக்கு பின் இன்று கேட்கிறேன்.
    இரு பாடலும் கேட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ஒருமுயினும் பாதிப்//

    ஹிஹிஹி உங்கள் கீ போர்ட்!! உங்களோடு விளையாடுகிறது!

    ஒரு முறையேனும் பாடிப் - இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
  10. முதல் பாடல் சொல்லவும் வேண்டுமோ!! எல்லா இடங்களிலும் பாடிக் கேட்டு.....ரசித்த பாடல்..

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இரண்டாவது பாட்டு கேட்டதில்லை ஸ்ரீராம். ஆனால் அதன் மெட்டு வேறொரு பாடலை நினைவு படுத்துகிறது இருங்க நினைவுபடுத்திப் பார்க்கிறேன் வரிகளை....இதன் டெம்போ வேகம் அது கொஞ்சம் மெதுவான டெம்போ....

    நினைவு வந்துவிட்டது ...சம்சாரம் என்பது வீணை.....

    வேறொரு பாடலும் நினைவுக்கு வருகிறது...அதன் வரிகள் டக்கென்று நினைவுக்கு வரவில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்சாரம் என்பது வீணை பாடலும் இதுவும் ஒன்றுபோல இருக்கிறதா?

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம். முதல் பாடலை எந்த சந்தர்ப்பத்தில் ராஜாஜி எழுதினார் என்று தெரியுமா? அந்தப் பாடலில் 'ஏதும் தர நிற்கும் கருணைக்கடலன்னை..' என்னும் இடம் மிகவும் பிடிக்கும்.
    அது சரி ஜுலை 3 எம்.எல்.வி. பிறந்த நாளாம், ஜுலை 6 பாலமுரளி கிருஷ்ணா பிறந்த நாளாம். அவர்கள் பாடல்களை பகிரலாமே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா...   அட..  அவர்கள் எல்லாம் கூட ஜூலையில் பிறந்தவர்களா?

      நீக்கு
  13. அவர்கள் பாடல்களையும் பகிரலாமே என்றால் சரியாக இருக்குமோ?
    'எல்லாம் இன்பமயம்..' தங்க ரதம் வந்தது வீதியிலே அல்லது சின்ன கண்ணன் அழைக்கிறான்

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் அன்பின் வணக்கம் ...

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  15. @ கமலா ஹரிஹரன்

    //இவர் குரலில் அந்த கோவிந்தனை அருகிலேயே காண முடியும்..//

    குறை தீர்க்க என்று
    கோபாலன் தான் இருக்க
    குறை என்று ஏதும் இல்லை கோவிந்தா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபாலன்..  அந்த கோபாலன்..   நந்தகோபாலன் துணையை நாடுவோமே...

      நீக்கு
  16. உறவுகள் வாழ்க படத்தின் பாடலை இப்போது தான் கேட்கின்றேன்..

    சரி.. சரி... பாடலின் காட்சிக்குள் அப்படியும் ஒன்று.. இப்படியும் ஒன்று.. ஹிப்பிக்கும் சிப்பிக்கும் இரண்டும் தேவையாகத் தான் இருக்கின்றன..

    பதிலளிநீக்கு
  17. முதல் பாடல் பலதடவை கேட்டிருக்கிறேன் எம்.எஸ் அவர்களின் குரல் அவ்வளவு பக்தி பூர்வமாக இருக்கும்.

    இரண்டாவது கேட்டதுண்டு.

    பதிலளிநீக்கு
  18. நாளை நாட்டு நிலையால் நெட் சேவை இடைநிறுத்தம் என்கிறார்கள் பதிவுகள் பக்கம் வர முடியாமல் இருக்கும். பஸ் ரெயில் சேவை நிறுத்தப் பட்டுள்ளது கொழும்பு அண்டிய பகுதிகளில் ஊரடங்கு சட்டமும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தம் தரும் சூழ்நிலை.. விரைவில் நலமாக வேண்டும்..

      நீக்கு
    2. இணையத்தைக் கூடவா நிறுத்துகிறார்கள்? அநியாயம்.

      நீக்கு
    3. விரைவில் நாட்டு நிலைமஈ சரியாகப் பிரார்த்திக்கிறோம்.

      நீக்கு
    4. நிலைமை! பால் காரரோடு பேசினதின் விளைவு. :(

      நீக்கு
  19. முதல் பாடல் அதிகம் கேட்டதில்லை, ஸ்ரீராம்ஜி.

    இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன். நல்ல பாடல்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாடல் கேட்டதில்லை என்பது ஆச்சர்யம் துளஸிஜி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!