நெல்லைத்தமிழன்:
Home loving girl என்றால் வீட்டுக்கும் தங்களைப் பார்த்துக்கொள்ளவும் வேலைக்காரி தேடுகிறார்களா?
# நம்மோடு அன்பாக பழகும் நம்மை கவனித்துக் கொள்ளும் மனப்பான்மையுள்ள ஒரு பெண்மணி என்று எடுத்துக் கொள்வோம் . பெரும்பாலும் எதிர்பார்ப்பது அதுவாகத்தான் இருக்கும் .
& முன் காலத்தில் ம ம தே விளம்பரங்களில் homely girl தேவை என்று குறிப்பிட்டு வந்தார்களாம். அப்புறம் ஆங்கில மொழி வல்லுனர் ஒருவர் homely என்றால் unattractive என்று பொருள் என்று விளக்கிய பிறகு home loving girl என்று எல்லோரும் சொல்ல / எழுத ஆரம்பித்தார்களாம்!
கோவில் பிரசாதம் என்பது விற்பனைக்குரியதா? அதாவது பிரசாதமாகக் கொடுக்கக்கூடியதை, விற்பனை செய்வது நியாயமா?
# பிரசாதம் என்பது மிகச் சிறு அளவில் (நெல்லிக்காய் அளவு பொங்கல் மாதிரி ) கொடுத்தால் இலவசம் சாத்தியம். அதுவே கூட இரண்டாயிரம் பேருக்கு என்றாலோ , (பிரபலமான ஸ்தலங்களில்) சிறு அளவு கொடுப்பது பக்தர்களுக்கு திருப்தி தராது என்பதால், விலை வைப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
கொடுமை என்னவென்றால், தரக்குறைவாக பண்டங்களை கோவில் வளாகத்தில் பிரசாதம் என்று சொல்லி விற்பது.
கூட்டணிக் கட்சி, மின்சார விலை உயர்வைத் திரும்பப் பெறுக என்று அறிக்கை விடுவதை விட்டுவிட்டு, ஏன் முதல்வரைச் சந்திக்கும்போது இதனை வலியுறுத்திவிட்டு, இதனை வலியுறுத்தினோம் என்று சொல்லக்கூடாது?
# நம் மாநிலத்தைப் பொறுத்தவரை கூட்டணி என்பது ஒரு மிகப்பெரிய கட்சியோடு ஒன்று அல்லது பல உதிரிக்கட்சிகள் சேர்வதாகத்தான் இருக்கிறது. எனவே பெரிய கட்சியை சங்கடத்துக்கு உள்ளாக்காத வகையில்தான் எந்தப் பிரச்சினையும் அணுகப்பட வேண்டி இருக்கும். பெரிய கட்சி கோடிக்கணக்கில் செலவுக்கு ஒதுக்குவதால் அதன் கை எப்போதும் ஓங்கித்தான் இருக்கும்.
நிறைய படங்கள் எடுக்கிறோம் (செல்ஃபோன் வந்த பிறகு). அவற்றை எப்போதாவது திரும்பப் பார்க்கிறோமா இல்லை இது ஒரு வியாதியாகப் போய்விட்டதா?
# பிலிம் ரோல் மட்டும் இருந்த போது " இந்தப் படம் எடுக்க வேண்டுமா " என்று யோசித்து யோசித்து எடுப்போம். பத்தில் இரண்டு யாரோ கண்ணை மூடியபடி அல்லது முகம் கோணலாக என்றெல்லாம் இருக்கும். டிஜிட்டல் வந்தது , அந்த சிக்கன புத்தி மறைந்தது ! ஒன்று இருந்த இடத்தில் ஒன்பது எடுக்கிறோம். அப்போதே "பகிர்ந்து கொண்டு " மறந்து போகிறோம்.
இப்போதும் படங்களை நன்றாக வகை பிரித்து சேமிப்போர் இருக்கிறார்கள். அந்த மாதிரியான ஒருவர் சேவை எல்லாருக்கும் மகிழ்ச்சி தருகிறது.
ஏதேனும் ஒரு செய்தியை வெளியிட ஆதிகாலத்திலிருந்து வரலாறு எழுதும் செய்திப் பத்திரிகைகளின் போக்கு அவர்களுக்கே போரடிக்காது? (உதாரணம்... முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மகள் தூக்கிட்டுத் தற்கொலைச் செய்தியில், என்.டி. ராமராவ் இத்தனாம் வருடம் இங்கே பிறந்தார்.... எம்ஜிஆர் போன்று பல படங்களில் நடித்தவர்.... முதல்வர் ஆனவர்... என்றெல்லாம் 60 வரிகள் எழுதிவிட்டு, கடைசி 3 வரிகளில் செய்தியை எழுதியிருக்கிறார்கள் இந்த அறுவை மன்னர்கள்)
# சில சமயங்களில் வேறு செய்தியில்லாதபோது, கிடைத்த செய்தியை ஒப்பனை செய்து பக்கங்கள் நிரப்பப்படுவது உண்டு.
& ஆதித்தனார் எழுதிய 'நாள் தாள் கையேடு' என்கிற புத்தகத்தில், அவர், ' செய்தியை எழுதும்போது ஆதியோடு அந்தமாக எல்லா விவரங்களையும் கொடுத்து எழுதினால்தான் சாதாரண வாசகர்களுக்குப் புரியும்' என்று எழுதியுள்ளார். லாட்டரிச் சீட்டுகள் புழங்கிய எல்லா காலத்திலும் குலுக்கல் முடிவுகள் வெளிவந்த தினத்தந்தி பக்கங்களைப் பார்த்தால், நான்காம் பரிசு / ஐந்தாம் பரிசு எண்கள் வெளியிட்டு ( மூன்று / அல்லது இரண்டு இலக்கங்கள் மட்டுமே இருக்கும்) அதிலிருந்து பரிசுக்குறிய சீட்டுகளின் எண்களை எப்படித் தெரிந்துகொள்வது என்று விலாவாரியாக விளக்கியிருப்பார்கள். அது சம்பந்தப்பட்ட விவரங்கள்தான் என்றாலும் ஒவ்வொரு தடவையும் அதை விளக்கி எழுதியிருப்பது கொஞ்சம் அலுப்பாக இருக்கும்.
ஆனால் தற்காலத்து நிருபர்கள் எல்லா செய்திகளுக்குமே - சம்பந்தம் இல்லாத சில விவரங்களைக் கொடுத்து (நீங்கள் கொடுத்துள்ள உதாரணம் போன்று ) போர் அடிக்கிறார்கள் !
இன்னும் ஒரு வகை : " ஜெய்ப்பூரில் லாரியில் போதை மருந்து கடத்தல்! பதினான்கு வயது பெண் உட்பட ஐந்து பேர் கைது ! "
ராஜஸ்தான் : 30.2.22 - ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது (என்னய்யா சம்பந்தம் !) ராஜஸ்தானின் தலைநகராகிய ஜெய்ப்பூரில் நேற்று ..
இது இப்படி என்றால் Republic TV - வேறு வகை ! " Arpita under ED lens " என்றே திரும்பத் திரும்ப breaking news போட்டுக்கொண்டிருப்பார்கள். தொடர்ந்து செய்தி பார்க்காமல், எப்பொழுதாவது பார்ப்பவர்கள் இந்த உடைப்புச் செய்தியைப் (Breaking news !!) பார்த்து மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டியதுதான் - யார் அர்பிதா - அவர் எந்த ஊர்? ஏன் அவரை ED ஒரு பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டும் -- என்று!
* சாண்டில்யன் கதை போல செய்தி ஐட்டங்களில் முதல் மூன்று நான்கு பாராக்களை ஸ்கிப் செய்து விடலாம்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எப்படி குறுந்தொழில்கள் அழிந்திருக்கும்? அதற்கும் தொழில்களுக்கும் என்ன சம்பந்தம்?
$ 500,1000 செல்லாது என்றவுடன் கள்ளப்பணம் வைத்திருந்தவர்கள் கஷ்டப்பட்டது உண்மை.
& நம் வாசகர்களில் குறுந்தொழில் அதிபர்கள் யாராவது இருந்தால் - அல்லது கு தொ அதிபர்களின் நெருங்கிய உறவினர் / நண்பர் இருந்தால், அவர்கள் அனுபவபூர்வமாக இதற்கு பதில் அளித்தால் நாங்களும் தெரிந்துகொள்வோம்.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
பள்ளியில் படித்து பொழுது பெற்ற அதிகபட்ச தண்டனை எது?
# பத்தாம் வகுப்பில் ஒரு முறை, பதினொன்றாம் வகுப்பில் ஒரு முறை (வெவ்வேறு) ஆசிரியர் பலமாக அறைந்தது மறக்கவில்லை. முதல் சம்பவம் ஆசிரியர் பிழை. இரண்டாவது என் கவனக்குறைவு.
& நான்காம் வகுப்பில் ஓர் ஆசிரியர் வேறு ஒரு மாணவன் செய்த அசிங்கமான விபரீத விளையாட்டில் சந்தர்ப்ப வசத்தால், அந்த மாணவனோடு நானும் குற்றம் சாட்டப்பட்டு தலைமை ஆசிரியர் வரை போய்ப் பார்த்து கண்ணீர் சிந்தவேண்டியதாகி விட்டது.
ஐந்தாம் வகுப்பில் + ஆறாவது வகுப்பில் - வகுப்பில் பேசிக் கொண்டிருந்ததால் கன்னத்தில் ' பளார் ' வாங்கியுள்ளேன்.
எட்டாம் வகுப்பில் ஒரு மக்கு மாணவனை அடி வாங்காமல் காப்பாற்ற - பொய் சொல்லி - அதனால் கையில் பலமான பிரம்படி பட்டேன்.
* ஆறாம் வகுப்பில், பிறந்த நாளும் அதுவுமாய், 'இந்தியாவின் இருப்புப் பாதைகள்' என்கிற மூன்று பக்க பதிலை மனப்பாடம் செய்து ஒப்பிக்காததால் வகுப்பின் வெளியே கொஞ்சம் மணல் போட்டு, முட்டி போட வைத்து, பாதத்தில் பிரம்படி வாங்கியது மறக்க முடியவில்லை! ஆசிரியர் பெயர் மங்கள்ராஜ்!
ராக்கெட்ரி பார்த்து விட்டீர்களா?
# ராக்கெட்ரி பார்க்கப் போகிறேன்.
& பார்க்கவேண்டும் என்று ஆசை இருக்கு. பார்த்தால் சொல்கிறேன்.
* பார்க்கத் தொடங்கினேன். தொடர முடியவில்லை!
= = = = =
படம் பாருங்க ; கருத்து எழுதுங்க :
1)
2)
3)
நெல்லைத் தமிழன், பானுமதி ஆகியோர் கேள்வி கேட்டவர்களா, இல்லை பதில் சொன்னவர்களா? திடீரென்று குழப்பம்.!
பதிலளிநீக்குகேள்வி கேட்டவர்கள்தான். கருப்பு நிறத்தில் உள்ளவை அவர்கள் கேட்ட கேள்விகள். காவி நிறத்தில் உள்ளவை எங்கள் பதில்கள்.
நீக்குபதில்கள் அளித்துள்ள ஆசிரியர்கள் : '#', '$' மற்றும் '&'
* Blue Star பதில்களும் உண்டு.
நீக்குஆமாம், அதிசயமா ஶ்ரீராம், பதில்கள்.
நீக்குஇன்று காவிரியின் கரைகளில் ஆடிப்பெருக்கு வைபவம்..
பதிலளிநீக்குவளம் எல்லாம் பொங்கிப் பெருகிட அன்பின் நல்வாழ்த்துகள்..
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..
நாடு செழிக்கட்டும்; நல்லவை நடக்கட்டும். வளம் பெருகட்டும்.
நீக்குஅதிகாலை வணக்கம் சொல்லி பிரார்த்தனையில் ஈடுபடுகிறவர்களை இன்னும் காணோமே... தூங்கிவிட்டார்களா இல்லை அதிகாலையில் எழுந்து அதிக வேலை செய்துகொண்டிருக்கிறேன் (ஆடிக்கொண்டே பெருக்கிக்கொண்டிருக்கிறேன்) என்று சொல்லப்போகிறார்களா?
பதிலளிநீக்குஅம்மா மண்டபம் போயிருப்பார்களோ?
நீக்குஇன்னிக்கு அம்மாமண்டபம் என்னமோ திறந்து தான் இருக்கு. கூட்டம் அதிகம். நம்ம குடியிருப்பு வாசலிலேயே நிறையக் கடைகள். முக்கியமாய்ப் பீங்கான் ஜாடிக்கடைகள் இரண்டு பக்கமும். புலி மண்டபம் கிட்டேயே காவல்துறை எல்லோரையும் திருப்பி விட்டுக் கொண்டிருந்ததாம். நம்மவரையும் திரும்பிப் போகச் சொல்லி இருக்காங்க. வீடு அங்கே இருக்கையில் திரும்பி எங்கே போறதுனு சொல்லிட்டு வந்திருக்கார். :)))))
நீக்குஅம்மாமண்டபம் உள் வழியாகவே வெளியே படிகள் வழியாகவோ என்னால் ஏறி இறங்கிப் போக முடியாது. ஆகவே இதெல்லாம் இனி கனவு தான்! :(
நீக்குகடைசிப் படத்தைப் பார்த்மால் அந்தப் பெண் பால்வாங்க ஆவினுக்குச் செல்ல மாட்டார்கள் என்று தோன்றுகிறது
பதிலளிநீக்குஆவினுக்குச் சென்றால் பால் பாக்கெட் வாங்க வேண்டும்..
நீக்குகாலக் கொடுமையால்
ஆயிரக்கணக்கான பாக்கெட்டுகளுக்கு மத்தியில் ஒரே ஒரு பாக்கெட் மட்டும் சரியான அளவில் இருக்காது..
பாலுக்குத் தண்ணீர் ஊற்றிய காலம் போய் பாலுக்குப் பால் ஊற்றுகின்ற காலமாகி விட்டது..
நாங்கள் ஆவின் பால் தான் வாங்குகின்றோம்.. ஆனால் ஆவின் பாலகத்தில் அல்ல!..
ராக்கெட்டரி - தியேட்டரில் பார்க்கணும் என மனைவி ஆசைப்பட்டபோது சோகப்படமாயிருக்கும், நான் வரலை என்று சொல்லிவிட்டேன். கதை முன்பே ஓரளவுக்குத் தெரியும் என்பதால் பாதியிலிருந்துதான் வீட்டில் பார்த்தேன்.
பதிலளிநீக்குஅதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை, (அமெரிக்காவில் அவசர அவசரமாகத் தஞ்சமடைந்தவனை) குடும்பத்தோடு படத்தில் கோர்த்துவிட்டிருக்கலாம். தேசத்துரோகிகள்.
படம் பார்க்கவில்லை. ஆனால் நிகழ்வுகள் தெரியும். அதே. படு மோசமான ஆள் இப்போது என்ன ஆனான் என்று தெரியவில்லை.
நீக்குகீதா
கேள்வி பதில்கள் இரசித்தேன் ஜி
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குதனிமையாக ஒரு வாலிபன் இருந்தால், தரவேண்டும் பிரம்மச்சாரி வரி...!
பதிலளிநீக்குதாலி கட்டியே குடும்பம் நடத்தினால், அவனும் தரணும் சம்சார வரி...!
இங்கு தடுக்கி விழுந்தா வரி, குனிந்து நிமிர்ந்தா வரி, இட்லி வரி, சட்னி வரி, பட்னி வரி...!
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஆடிப் பெருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇவ்வாறு எல்லாம் ஸ்கூலில் அடிப்பது நம் நாட்டில் இல்லை. எப்போதாவது ஓரிரு அடி சில பேருக்கு விழுந்திருக்கிறது. தொடர்ந்து கோம் வேக் செய்யாது விட்டால் வகுப்புக்கு வெளியே அந்த பாடம் முடியும் மட்டும் நிற்க வைப்பார்கள் .
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇப்போதும் படங்களை நன்றாக வகை பிரித்து சேமிப்போர் இருக்கிறார்கள். அந்த மாதிரியான ஒருவர் சேவை எல்லாருக்கும் மகிழ்ச்சி தருகிறது.//
பதிலளிநீக்குஆமாம் நான் அப்படித்தான் கணினியில், நான் எடுக்கும் படங்களை சேமிக்கிறேன். அதைத் திரும்பிப் பார்க்கும் போது மனம் மகிழ்வடைவதோடு இன்னும் எடுக்க வேண்டும் என்ற ஆர்வமும், உற்சாகமும், கொஞ்சம் தன்னம்பிக்கையும் கிடைக்கிறது.
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஏதேனும் ஒரு செய்தியை வெளியிட ஆதிகாலத்திலிருந்து வரலாறு எழுதும் செய்திப் பத்திரிகைகளின் போக்கு அவர்களுக்கே போரடிக்காது? //
பதிலளிநீக்குநெல்லை ஹைஃபைவ்! சேம் நானும் இப்படியேதான் நினைப்பேன். அவங்களுக்கு மட்டுமா நமக்கும்தான் ஹையோ ஒரே போர்....
யப்பா இதெல்லாம் எங்களுக்குத் தெரியும்பா...விஷயத்துக்குச் சீக்கிரம் வாங்கப்பா என்று பூதக்கண்ணாடி போட்டு த்தேட வேண்டிய அவசியமும் சில சமயம் ஏற்படுவதுண்டு. அது ஃபில்லர்!
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குhttps://marudhai.blogspot.com/2007/11/blog-post_11.html பள்ளியில் படிச்சப்போ அதிக தண்டனை பெற்ற சம்பவம் குறித்து இந்தப் பதிவில் எழுதி இருப்பேன். பின்னாட்களில் உயர்நிலைப் பள்ளி வகுப்புக்களில் கூட ஜியோமிதிப் பெட்டி இல்லாமல் க்ராஃப் நோட் இல்லாமல் சரியான பேனா இல்லாமல் பள்ளி மைதானத்தை 3 முறை சுற்றி வந்திருக்கேன். மற்றபடி படிக்காமலோ, மதிப்பெண்கள் இல்லாமலோ தண்டனை பெற்றது இல்லை.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குகாலையில் எழுந்ததில் இருந்து இன்னிக்கு என்னமோ வேலை சரியாக இருந்தது, கணினியில் வேலை செய்ய உட்கார்ந்தால் மற்ற வேலைகள் ஆகாது என்பதால் கணினிக்கே இப்போத் தான் வந்தேன்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி. கணினியில் உட்கார்ந்தால் மற்ற வேலைகள் மட்டும் அல்ல, கணினியே வேலை செய்யாது!!
நீக்குஇருக்கறதுலயே சுலபமான வேலை, கலந்த சாதங்கள் பண்ணறதுதான். கஷ்டமான வேலைனா, அதைச் செலவழிப்பது (அவங்களுக்குப் பிடித்த கலந்த சாதம் போணியாயிடும். சிலது மிஞ்சிடும்). இன்னொரு கஷ்டம், இந்த மிஞ்சின கலந்த சாதத்தை திப்பிச வேலை பண்ணி போளி, உப்புமா என்று மாற்ற முடியாது.
நீக்கு//கணினியில் வேலை செய்ய உட்கார்ந்தால்// கவனிக்கவும் @கௌதமன் சார்! நான் கணினியில் எல்லாம் உட்காருவதில்லை. :)
நீக்குஎன்னத்தை சுலபம். ஒன்பதரைக்கு சாதம் வைக்க ஆரம்பிச்சு எல்லாம் முடிக்கப் பதினொன்று ஆகிவிட்டது. செலவு செய்வது எங்களுக்குக் கஷ்டம் இல்லை. கீழே செக்யூரிடி 3 பேர். இரண்டு பேராவது இருப்பாங்க ஒரு சமயத்தில். வீட்டில் வேலை செய்யும் பெண்மணி. ஆக சாப்பாடு போதாமல் போகுமே தவிர்த்து மிஞ்சுவதில்லை விசேஷ நாட்களில்.
நீக்குமுன்னெல்லாம் இருந்த இந்த ஃபில்ம் மாற்றும் காமிராவில் நான் படமே எடுத்தது இல்லை. டிஜிடல் காமிரா வந்தப்புறமாத்தான். எங்க பெண், ரங்க்ஸ் எல்லோரும் எடுப்பார்கள். பெண் நன்றாகவே எடுப்பாள்.இப்போ எடுக்கும் படங்களைச் சேமிப்பில் இருப்பனவற்றை ஒரு நாள் உட்கார்ந்து பார்த்துத் தேவையானவற்றை வைத்துக் கொண்டு தேவையில்லாதவற்றையும் டூப்ளிகேட்டுகளையும் நீக்குவேன். அநேகமாக மாதம் ஒரு முறை இந்த வேலை நடக்கும்.
பதிலளிநீக்குநல்ல பழக்கம்! நன்றி.
நீக்குஎனக்கு ஒரு ஜந்தேகம். சிலரிடம் கொடுத்த பொருளைத் திருப்பிக் கேட்டால் ஏன் கோவிக்கிறார்கள்? நம்ம பொருளை நாம் திரும்பக் கேட்கக் கூடாதா?
பதிலளிநீக்குஅக்கம்பக்கம் சாப்பாட்டில் ஏதேனும் பகிர்வதற்குக் கொடுக்கும் நம்ம பாத்திரத்தை அவங்க கொடுக்காமல் நாலைந்து நாட்கள் வைச்சிருந்தப்புறமா நாம் கேட்டால் அவங்களுக்குக் கோபம் வருவது ஏன்?
அதுக்கப்புறமா நாம் ஏதேனும் கொடுத்தால் உடனே நம் எதிரேயே அவங்க பாத்திரத்தில் கொட்டிக் கொண்டு நம்மிடம் கொடுத்துடறாங்க. நாம நம்ம பாத்திரத்தை நாலைந்து நாட்கள் கழித்துக் கேட்டது தப்பா?
பதில் அளிப்போம்.
நீக்குஇது புத்தகங்களுக்கும் பொருந்தும். படிச்சுட்டுத் திருப்பிக் கொடுக்கிறேன்னு வாங்கிச் சென்ற புத்தகங்கள் எனக்குத் திரும்பி வந்ததே இல்லை. இப்படி நிறையப் புத்தகங்கள் போய்விட்டன. திரும்பிக் கேட்டால் பேச்சு/வார்த்தையே நின்று விடுகிறது. நெல்லைக்கு அவரோட புத்தகத்தை மட்டும் நான் வைச்சிருக்கேனேனு தோணும். எனக்குத் திரும்ப அனுப்ப அவர் விலாசம் தெரியாது. அதோடு அவர் இதைச் சாக்கு வைத்தாவது எங்க வீட்டுக்கு வருவார் என எதிர்பார்க்கிறோம்.
பதிலளிநீக்கு:))))
நீக்குமத்தவங்கள்லாம், அன்பு கீதா சாம்பசிவம் மேடத்தை மறந்துடக்கூடாது, குறிப்பாக அவங்க, நம்மை மறந்துவிடக் கூடாது என்பதற்காக புத்தகங்களைத் திருப்பித் தருவதில்லை. இதையெல்லாம் கோனார் நோட்ஸ் போட்டா சொல்லிக்கிட்டிருப்பாங்க? இல்லை கீசா மேடம்தான் புத்தகம் கொடுக்கிற ஒவ்வொருத்தரிடமும் தன் அட்ரஸ், பூர்வோத்ரம், மொபைல் நம்பர், ஆதார் கார்டு காப்பி, தன் உறவினர்களின் அட்ரஸ் இதெல்லாம் கொடுக்கிறாரா? ஹா ஹா ஹா
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,எடுத்துட்டுப் போறதே உறவினர்கள் தானே! வெளிவட்டாரங்களில் எனக்குத் தெரிந்து என்னை மாதிரிப் புத்தகம் படிப்பவர்களே நட்பு வட்டத்தில் இல்லை. :( எல்லோருக்கும் பேச்சுத்தான்! :) என் புக்ககத்தில் கூட எல்லோரும் உட்கார்ந்து பேசிச் சிரித்துக் கொண்டிருக்கையில் நான் அங்கேயே மும்முரமாகப் புத்தகமும் கையுமாக உட்கார்ந்திருப்பேன். என்னதான் இருக்கோ என்பாங்க எல்லோரும்! முன்னெல்லாம் சாப்பிடும்போது கூடப் புத்தகத்தைக் கீழேயே வைத்துக் கொண்டு படித்த வண்ணம் சாப்பிட்டிருக்கேன். கண்களில் கோளாறு வந்தப்புறமா அதெல்லாம் குறைஞ்சுடுத்து! :(
நீக்குபுத்தகம் படித்தபடி சாப்பிடும் பழக்கம் எனக்கும் முன்பு இருந்தது. அச்சுப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் போனதும் பு + சா பழக்கமும் நின்றுவிட்டது!
நீக்குஇணையத்திலும் படிக்கிறேன். அப்போ மத்தியானம் காஃபி, தேநீர் குடிக்கையில் சாப்பிடும் நொறுக்குகள் ஏதானும் வைச்சுப்பேன். என்ன பிரச்னைன்னா கணினியில் அவை விழுந்து தொலைக்கும். ஒரு தரம் என்னோட தோஷிபா மடிக்கணினி (சமத்துக் கணினி) காஃபியெல்லாம் குடிச்சது. அது சரியாக 2 நாட்கள் ஆச்சு! ஆகையால் காஃபி, தேநீர் குடிச்சு முடிச்சுடுவேன். :)
நீக்குகீதா அக்கா.. என் பைண்டிங் புத்தகங்கள் கூட ஒன்றோ இரண்டோ உங்களிடம் இருக்கிறது என்று நினைவு!
நீக்குஇந்த பைண்டிங் புத்தகம் வச்சிருக்கறவங்க, அடுத்தவங்களுக்குக் கொடுத்ததா நான் பூகோளம் வரலாறுலலாம் படிச்சதே இல்லையே
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஶ்ரீராம்! நான் அவற்றைப் பத்திரமாக வைச்சிருக்கேன். திரும்பக் கொடுப்பதற்காக. ஆனால் பாருங்க நீங்களோ/நெல்லையோ புத்தகங்களை/புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துடணும் என்று சொல்லவே இல்லை! என்ன அநியாயம்! :))))))))
நீக்குபலாப்பழத்தை இப்படிச் சாப்பிடுவதும் நல்லாத் தான் இருக்கும் போல. குட்டிப்பாப்பாக்கள் எல்லாம் எப்படி நிர்மலமான மனதோடு இருக்கு. அதுக்கப்புறமா விபரம் தெரிஞ்சா அதுங்களே எப்படி மாறிடுதுங்க! :(
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஎன்னது? அந்தப் பலாப்பழம் சாப்பிடும் பெண் எனக்கு அக்கா மாதிரி இருக்காங்க. அவங்க, கீதா சாம்பசிவம் மனதுக்கு குட்டிப்பாப்பாவா?
நீக்குநான் சொன்னது குட்டிப்பாப்பாக்களை மட்டுமே!
நீக்கு:)))
நீக்குஶ்ரீராம் பதிவுகள் பக்கம் வரதே இல்லை. ஆனால் இங்கே கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கார். ராக்கெட்ரி படமும் காஷ்மீரி ஃபைல்ஸ் படமும் பார்க்க ஆசை தான். ஆசை என்னமோ இருக்கு தாசில் பண்ண! ஆனால் அதிர்ஷ்டம்? எங்கே! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :))))))))))))
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு//ஶ்ரீராம் பதிவுகள் பக்கம் வரதே இல்லை. ஆனால் இங்கே கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கார். //
நீக்குகிர்ர்ர்ர்ர்.... உங்கள் நேற்றைய பதிவில் கூட வந்து கருத்து சொல்லி இருந்தேன்....
கேள்விகளும் , பதில்களும் அருமை.
பதிலளிநீக்கு1. கொஞ்சம் சிரி பார்ப்போம்.
2. ஜோ!ஜோ ! தூங்கு செல்லம்
3. பாத்திரத்தில் போட மனம் வரவில்லையே!
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு//நம் வாசகர்களில் குறுந்தொழில் அதிபர்கள் யாராவது இருந்தால் - அல்லது கு தொ அதிபர்களின் நெருங்கிய உறவினர் / நண்பர் இருந்தால்// இதைப் பற்றி "தேவியர் இல்லம்" "ஜோதிஜி" அப்போதே அக்குவேறு ஆணி வேறாக அலசித் துவைத்துக் காயப் போட்டிருக்கார். முகநூலில் கூட வந்திருந்தது.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஆம், புத்தகமாகவும் மின்னூல் வரிசையில் இருக்கிறது என்று நினைவு.
நீக்குஎங்க பள்ளியிலும் இந்த மாதிரி வகுப்பறைக்கு வெளியே முட்டி போடும் தண்டனை உண்டு. சில சம்யம் குறிப்பிட்ட புத்தகங்கள் இல்லாமல் நானும் முட்டி போட்டிருக்கேன். ஆனால் மணலில் எல்லாம் இல்லை.
பதிலளிநீக்குஓ அப்படியா!
நீக்குஅந்த வாத்தியார் ஒரு சாடிஸ்ட்.. அவரைப்போல இன்னும் இப்னு மூன்றுபேர் இருந்தார்கள் அந்தப் பள்ளியில். என்னை ஜாதியைச் சொல்லிதான் அழைப்பார்.
நீக்குபள்ளியில் படிக்கும்போது வெளியே விற்கும் சுக்குமிட்டாய், இலந்தைப்பழங்கள், நெல்லிக்காய், களாக்காய், பனங்கிழங்கு நுங்கு போன்றவை வாங்கிச் சாப்பிட்டிருக்கீங்களா?
பதிலளிநீக்குமேலே குறிப்பிட்டவை எல்லாமே உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்காதவை. ஆனாலும் பெற்றோர் ஏன் தடுத்தார்கள்?
இப்போதும் பள்ளி வாசல்களில் இம்மாதிரிக் கடைகள் இருக்கின்றனவா?
பேனாவுக்குப் பக்கத்தில் உட்காரும் சிநேகிதர்/சிநேகிதியிடமிருந்து இங்க் கடன் வாங்கிப் போட்டிருக்கீங்களா?
எந்த வகுப்பு வரை சிலேட்டு? நோட் புத்தகம் எப்போ/எந்த வகுப்பில் ஆரம்பம்?
நான் படிச்ச சமயம் எல்லாமே மாறிக்கொண்டிருந்த சமயம். 3 ஆம் வகுப்பு வரை அணா/பைசா, படி, சேர், மரக்கால் பின்னும் கஜம், முழம் என்னும் அளவைகள்
அதன் பின்னர் நான்காம் வகுப்பிலிருந்து பைசா. அதிலும் புதிய பைசா என்பதால் நயாபைசா என்றே பல வருடங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். கஜம் என்பதெல்லாம் சென்டிமீட்டர்களாக மாறியது.
இரண்டில் எது எளிமை? எது சுலபம்? பயன்பாட்டில் உங்களுக்குக் கஷ்டம் இருந்ததா?
கணக்குப் போடுவதற்கு எது சுலபமாய் இருந்தது? (எனக்கு என்னமோ இரண்டுமே அப்போதும்/இப்போதும்/எப்போதும் தகராறு தான். :)
பதில் அளிப்போம்.
நீக்கு//பள்ளி வாசல்களில் இம்மாதிரிக் கடைகள் இருக்கின்றனவா?// - இதுக்கெல்லாம் நியாயமா என்னை மாதிரி சின்னப் பசங்கதான் பதில் சொல்லணும். கேஜிஜி சார் என்ன இப்போ பள்ளிகளின் வாசலுக்கெல்லாம் போய்ப் பார்க்கிறாரா என்ன? (சந்தடி சாக்கில் பள்ளிவாசலைப் பத்தி கீசா மேடம் ஏன் கேட்கிறாங்க?)
நீக்குநெல்லை, உண்மையில் பள்ளி என்பது சமணப்பள்ளிகளையே குறிக்கும். :)))))
நீக்குபள்ளியில் தண்டனை அனுபவித்ததும் இல்லை, கொடுத்ததும் இல்லை
பதிலளிநீக்கு