வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

வெள்ளி வீடியோ : மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது மேகம் தந்த மழையினையோ பூமி திருடிக் கொண்டது

 பெங்களூர் ஏ ஆர் ரமணி அம்மாள்.

  நம்ம ஊர் கே பி சுந்தராம்பாள் குரலுக்குப் பிறகு ஓங்கி ஒலிக்கும் குரல்.  அவர் பாடிய பாடல்களில் பல நீங்களும் கேட்டு ரசித்திருப்பீர்கள்.  'தெய்வம்' படத்தில் 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' பாடல் செம பேமஸ்.    

என்னப்பனே...  என்னையனே பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்றாலும் அதையும் மீறி இன்று இந்தப் பாடலைப் பகிர்கிறேன்.

இந்தப் பாடலைக் குறிப்பாக தேடிப் பகிர காரணம் சமீபத்தில் துரை அண்ணா பதிவொன்றில் 'கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா எங்கப்பனுக்கு அரோகரா' என்கிற வரிகளை பின்னூட்டமாகக் கொடுத்திருந்தேன்.  அப்போதிலிருந்தே இந்த வரிகள் இடம்பெற்ற பாடலைப் பகிர எண்ணம் கொண்டிருந்தேன்.  எனவே இந்தப் பாடல்.

'சொல்லுங்கோ வேல்முருகா வேல்முருகா வேல்' என்று அவர் பாடும்போது உங்களால் இணைந்துகொள்ளாமல் இருக்கவே முடியாது!

நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர்!
நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர்!

பஜனை செய்யலாம்...பாடி மகிழலாம்!
முருகனைப் பாடலாம்...வள்ளியைப் பாடலாம்!
கிருஷ்ணனைப் பாடலாம்... மீராபாயைப் பாடலாம்!

மயிலையும் அவன் திருக்கை
அயிலையும் அவன் கடைக்கண்
இயலையும் நினைந்திருக்க வாருமே!

சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
*************************************

அலைகடல் வளந்தொடுத்து
எழுபுவி புரந்திருக்கும்
அரசென நிரந்தரிக்க வாழலாம்!
சொல்லுங்கோ... இங்கே
அரசென நிரந்தரிக்க வாழலாம்!
அரசென நிரந்தரிக்க வாழலாம்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!

அடைபெறுவ(து) என்று முக்தி...
அதி மதுரச் செந்தமிழ்க்கு
அருள்பெற நினைந்து சித்தி ஆகலாம்!
முக்தி அடையலாம்! சித்தி ஆகலாம்!!
முருகனைப் பாடினால்...முக்தி அடையலாம்!
சிவனைப் பாடினால்...சித்தி அடையலாம்!!

வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
***********************************

நாளை எம படர் தொடர்ந்(து) அழைக்க நம்மை
எம படர் தொடர்ந்(து) அழைக்க
அவருடன் எதிர்ந்(து) இருக்க
இடியென முழங்கி வெற்றி பேசலாம்! - எமனுடன்
இடியென முழங்கி வெற்றி பேசலாம்!
முருகனைப் பாடினால்...எமனுடன் பேசலாம்!
சிவனைப் பாடினால்...எமனை எதிர்க்கலாம்!!

வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
சொல்லுங்கோ...
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!

உள்ளத்திலே...இன்ப வெள்ளத்திலே...
முருகன்....மெல்லத் தவழ்ந்து வரும் பாலனாம்
உள்ளத்திலே மெல்லத் தவழ்ந்து வரும் பாலனாம்
தெள்ளித் தெளித்த தினை... அள்ளிக் கொடுத்த புனை...
வள்ளிக்(கு) இசைந்த மண வாளனாம்!

சொல்லுங்கோ...
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!
****************************************************

வேதத்திலே...திவ்ய கீதத்திலே...
பஜனை நாதத்திலே...முருகன் தோன்றுவான்!
பஜனை நாதத்திலே...முருகன் தோன்றுவான்!
உங்கள் உள்ளத்திலே...முருகன் தோன்றுவான்!
ஒவ்வொருவர் பக்கத்திலே...முருகன் தோன்றுவான்!

அவன் பாதத்தையே என்றும் பற்றிக் கொண்டால்
உங்கள் பக்கத்திலே முருகன் தோன்றுவான்!

சொல்லுங்கோ...
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா!

வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா! எங்கப்பனுக்கு அரோகரா!
சிவ பாலனுக்கு அரோகரா! வடி வேலனுக்கு அரோகரா!
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
வெற்றி வேல் முருகனுக்கு.....அரோகரா!
========================================================================================================================================

1974 ல் வந்த கருப்பு வெள்ளை திரைப்படம் திருடி.

மதுரை திருமாறன் இயக்கத்தில் (இவர் படம் என்றாலே நாயகி கே ஆர் விஜயா என்று சொல்லி விடலாம்)  ஜெய் சங்கர்-கே ஆர் விஜயா நடிப்பில் வந்த படம் .  மகேந்திரன் கதை.  கண்ணதாசன் பாடல்களுக்கு இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்.

இளவயது விஜயாவாக குமாரி ஸ்ரீதேவி!  

இந்தப் படத்தில் எஸ் பி பி -பி சுசீலா குரல்களில் ஒரு இனிய பாடல்.  'மனது கொஞ்சம்' என்று தொடங்கும்போது எஸ் பி பி குரலை கவனியுங்கள்!

நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது 

நீலக்கண்ணன் உன்னழகைத், திருடிக் கொண்டது 
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
அது மலர்ந்த போது உன்னைப் பற்றி நினைவு வந்தது
அது மலர்ந்த போது உன்னைப் பற்றி நினைவு வந்தது 

மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
அது மலர்ந்த போது உன்னைப் பற்றி 
நினைவு வந்தது நினைவு வந்தது

மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது
மேகம் தந்த மழையினையோ பூமி திருடிக் கொண்டது
மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது
மேகம் தந்த மழையினையோ பூமி திருடிக் கொண்டது

பெண்ணாகப் பிறந்த பேர்கள்  உள்ளம் திருடிக் கொள்வது
பெண்ணாகப் பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது
இந்நாளில் மட்டும் அல்ல எந்நாளூம் உள்ளது.

காக்கைப் போல் இருந்த ஒன்று குயிலைப் போல வந்தது
கண்ணாளன் தலையில் ஏறிக் கூடு கட்டிக் கொண்டது
பொல்லாத உவமை உன்னைக் காக்கை என்று சொல்வது என்
பொன்னானப் பச்சைக் கிளி என்னைத் தேடி வந்தது

இந்நேரம் சொன்ன கதை எனக்கு மட்டும் தெரிந்தது
இப்போது நடப்பது தான் உனக்கும் கூட புரிந்தது
கண்ணாலே சொல்வது தான் காதலிலே புதியது
கடலாழம் சிறியதம்மா பெண் மனது பெரியது

48 கருத்துகள்:

 1. இரண்டு பாடல்களும் கேட்டதில்லை.

  ரமணி அமாமாள் பாடல்கள் எத்தனையோ இருக்க..........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு பாடல்களுமே கேட்டதில்லை என்பது ஆச்சர்யம்.  ரமணி அம்மாள் பாடல் இரண்டு நாட்களாய் மனதில் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது!  இப்போதும்...   முருகனைப் பாடினால் முக்தி அடையலாம்..  சிவனைப் பாடினால் முக்தி அடையலாம்...

   நீக்கு
 2. முருகனைப் பாடினால் முக்தி அடையலாம்.. சிவனைப் பாடினால் முக்தி அடையலாம்...

  வேல்முருகா வேல்முருகா வேல்!
  வேல்முருகா வேல்முருகா வேல்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேல்முருகா வேல்முருகா வேல்!
   வேல்முருகா வேல்முருகா வேல்!

   நீக்கு
  2. அடையலாம்.. அடையலாம்..
   ஆனால் யாருக்கு வேண்டும் முக்தி! முக்திதான் வேண்டும், வேறேதும் வேண்டாமெனக்கு என நினைத்து, மனம் ஒருமித்து அவனை வணங்குவோர் எத்தனை பேர் இவ்வுலகில்?

   நீக்கு
  3. முக்தி அடைய வேண்டும் என்றால் இந்த இகவுலக வாழ்வை நீக்க வேண்டுமே..

   நீக்கு
 3. வெள்ளி மணியின் நாதத்தில்

  அன்பின் வணக்கங்களுடன்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க நலம். வாங்க துரை செல்வராஜு ஸார் வணக்கம்.

   நீக்கு
 4. பெங்களூர் ரமணியம்மாள் அவர்களது பாடல்களைக் கேட்டால் தெய்வத்தைத் தரிசனம் செய்தது போல் இருக்கும்..

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 5. திருடி படத்தில் இன்னொரு பாடல் -
  விளக்கேற்றி வைக்கிறேன்
  விடிய விடிய எரியட்டும்..
  நடக்கப் போகும் நாட்கள்
  எல்லாம் நன்மையாக நடக்கட்டும்...

  பதிலளிநீக்கு
 6. முதல் பாடல் : சேர்ந்து பாடத் தோன்றும் என்பது உண்மை...

  2. இனிமை...

  பதிலளிநீக்கு
 7. முதல் பாடல் பலநூறு முறைகள் கேட்டது இப்பொழுதும் காரில் பென்-டிரைவில் இருக்கிறது.

  இரண்டாவது பாடல் இலங்கை வானொலியில் பலமுறை கேட்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இப்பொழுதும் காரில் பென்-டிரைவில் இருக்கிறது. //

   அடடே..

   நன்றி ஜி.

   நீக்கு
 8. பெங்களூர் ரமணியம்மாள்! எத்தனை காலத்துக்கப்புறம் கேட்கிறேன் குரலை.

  எதற்கெடுத்தாலும் மன உளைச்சல், டிப்ரெஷன்.. டிப்ரெஷன் என்று பேத்தும் சிலர் இருக்கிறார்கள். இவருடைய பாட்டு ஒன்றிரண்டை அவர்கள் கேட்டால், மனபேதலிப்பிலிருந்து முக்தி உடன் கிட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். அதுவும் இந்தப் பாடல்... இல்லை இல்லை ஒவ்வொரு பாடலும் அருமை, உற்சாகம்தான்.

   நீக்கு
 9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 10. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்டப்பாடல்.
  பெங்களூர் ரமணி அம்மா பாடுவதை நேரிலும் கேட்டு இருக்கிறேன்.
  நல்ல பாடல் பகிர்வு. எனக்கு பிடித்த பாடகர்.

  மாயவரத்தில் ஒவ்வொரு கிருத்திகைக்கும் வீட்டுப்பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் வைப்பார்கள்.

  அடுத்த பாடல் வானொலியில் அடிக்கடி ஒலிக்கும்.
  பாடலை கேட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரிலேயே கேட்டிருக்கிறீர்களா? அட... நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 11. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்டப்பாடல்.
  பெங்களூர் ரமணி அம்மா பாடுவதை நேரிலும் கேட்டு இருக்கிறேன்.
  நல்ல பாடல் பகிர்வு. எனக்கு பிடித்த பாடகர்.

  மாயவரத்தில் ஒவ்வொரு கிருத்திகைக்கும் வீட்டுப்பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் வைப்பார்கள்.

  அடுத்த பாடல் வானொலியில் அடிக்கடி ஒலிக்கும்.
  பாடலை கேட்டேன்.

  பதிலளிநீக்கு
 12. சூப்பர் பாட்டு முதல் பாடல். பெங்களூர் ரமணி அம்மாள் பாடல் கூடவே பாடத் தோன்றும் குரல். ஸ்ரீராம் நீங்க சொல்லிருப்பது போல சொல்லுங்கோ என்று சொல்லிப் பாடும் வரிகளில் நாமும் கூடச் சேர்ந்துவிடுவோம் தான். ரொம்ப வருஷமாச்சு இவரது குரல் கேட்டு .

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்பது கஜம் புடைவையோடேயே மேடையில் அமர்ந்து பாடுவாங்க.

   நீக்கு
  2. ஆம்.  இரண்டு வாரமாச்சு இந்தப் பாட்டை எடுத்து வச்சு..  இப்போதான் எல்லாம் வந்தது.

   நீக்கு
  3. //ஒன்பது கஜம் புடைவையோடேயே மேடையில் அமர்ந்து பாடுவாங்க.//

   ஆம்.  அதுவும் கர்நாடகா பாணியில் புடைவை கட்டி இருப்பாங்க.

   நீக்கு
  4. ஆமாம் கீதாக்கா...அதேதான்...

   கீதா

   நீக்கு
 13. இரண்டாம் பாட்டும் கேட்டிருக்கிறேன் சிலோன் வானொலி உயபத்தில். எஸ்பிபி இளமை ததும்பும் குரல். சுசீலா குரல் இனிமை.

  ஆரம்ப இசை வேறு ஒரு பாட்டை ரொம்ப நினைவுபடுத்துகிறது. அப்படியே அந்தப் பாட்டின் இசை போல...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன பாட்டை நினைவு படுத்துகிறது?  எனது கேஸெட்டில் இதற்கு அடுத்த பாடல் 'ஓடம் கடலோடும்' பாடல்!

   நீக்கு
  2. அப்படி எல்லாம் நினைவு இருக்குமா இந்த கீதாவுக்கு !! ஹாஹாஹாஹா....நினைவு படுத்திப் பார்க்கிறேன் மீண்டும் ட்யூன் கேட்டால்தான் ட்யூனைப் பாடி பாடிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்...

   கீதா

   நீக்கு
 14. குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் பாடலை எங்களால் மறக்க முடியாது. எங்க பெண் குழந்தையாக இருந்தப்போவில் இருந்தே ஏழு/எட்டு மாசங்களில் இருந்தே இந்தப் பாடலுக்கு அப்படி ஒரு ஆட்டம் ஆடுவாள். தெருவே கூடி நின்று ரசிப்பார்கள். பின்னாட்களில் எல்லாம் கனவாய்க் கதையாய்ப் போய்விட்டன. படிப்புக் கொடுத்த நெருக்கடி (அவளைப் பொறுத்தவரை) இதில் எல்லாம் மனம் செலுத்த முடியாமல் போய்விட்டது. பாட்டும் நன்றாக வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  அப்போது அது எல்லோரையும் ஆட வைத்த பாடல்.  குன்னக்குடி வைத்தியநாதன் இசை இல்லையா?

   நீக்கு
 15. ரமணி அம்மாள் கச்சேரி மட்டும் நேரில் கேட்டதில்லை. ஏன்னு நினைவில் இல்லை. இன்னொரு பாடலும் கேட்டாப்போல் இருக்கு.

  பதிலளிநீக்கு
 16. வருவான் வடிவேலன் என்றொரு (கலக்கல்!..) படம்..

  அதில் சிங்கப்பூர்/ மலேஷிய பத்துமலை/ பினாங்கு தண்ணீர் மலை இங்கெல்லாம் ந்டத்தப்படும் தைப் பூச விழா படமாக்கப் பட்டிருக்கும்.. அதன் பின்னணியில் பாடல் ஒன்று.. சீர்காழியார், Tms, P.சுசீலா,
  LR. ஈஸ்வரி, MSV இவர்களோடு ரமணியம்மாள் அவர்களும் சில வரிகளைப் பாடியிருப்பார்..

  கோடிக்கணக்கில்
  பணம் கொடுத்தான் - அவன்
  கோயிலுக்கென்றே
  செலவழித்தோம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். அதுவும் செம டான்ஸ் பாட்டு. உற்சாக பூகம்பம்!

   நீக்கு
 17. முதல் பாடல் கேட்டிருக்கிறேன் என்றாலும் அதிகம் கேட்டது பெங்களூர் ரமணி அம்மாள் பாடிய மிகவும் புகழ்பெற்ற குன்றத்திலே முருகனுக்குக் கொண்டாட்டம், பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே, நீங்கள் சொல்லியிருக்கும் என்னப்பனே பாடலும் பிடித்த பாடல். //கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா எங்கப்பனுக்கு அரோகரா' // இது ஆரம்பம், தொடங்கும் வரிகள் வடிவேலவா ஒடிவா என்று வரும் பாடல் என்று நினைக்கிறேன்.

  இரண்டாவது பாடல் நிறைய கேட்டிருக்கிறேன். படமும் பார்த்த நினைவு இருக்கிறது.

  நல்ல பாடல்கள் பகிர்வு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'வேலவா வடிவேலவா...  வேலைத் தாங்கி நின்றவன்தான் வேலவா...  ஓடி வா அன்பர்களை நாடி வா..  ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா' என்று ஒரு பாடல் இருக்கிறது.  அதைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் துளஸிஜி.

   நீக்கு
 18. முதலாவது பாடல் நமது செல்வ சந்நிதி முருகன் கோவிலில் அடிக்கடி பக்தர்கள் பாடும் பாடல்.
  இரண்டாவது பாடலும் கேட்டிருக்கிறேன் நல்ல பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்வா சந்நிதி முருகன் கோவில்? நம்ம சுவிஸ் ஹேமா அவ்வப்போது சொல்லும் கோவிலோ?

   நன்றி மாதேவி.

   நீக்கு
 19. முதல் பாடல், அருணகிரிநாதர் பாடிய "கடைக்கண் இயல் வகுப்பு" பாடலாகும். தெளிவான வரிகளிக்க காண இந்த இணப்பைச் சொடுக்கவும்: https://thiruppugazh-nectar.blogspot.com/2015/09/kadaikaNiyalvaguppu.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. __/\__ நன்றி செல்லப்பா ஸார்..   நான் அறியாத விவரம்.  எனக்கு உடனே தோன்றியது, இதை எப்படி ஹிந்தோளத்தில் பாடி இருப்பார்கள் என்று!  யூடியூபில் தேடிப்பார்க்க வேண்டும்!

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!