புதன், 24 ஆகஸ்ட், 2022

சதக், சதக் + குபுக், குபுக் !

 

நெல்லைத்தமிழன் : 

தினத்தந்திக்கே உரிய தமிழ் வார்த்தைகள் 'சதக், குபுக், வலைவீசித் தேடினார்கள்' போல, என்ன என்ன வார்த்தைகள் உங்களுக்குத் தெரியும்?  

# நிறையவே தெரியும். பட்டியலிடுவது கடினம். 

& வார்த்தைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். சில தினத்தந்தி பாணி செய்திகளைப் பார்ப்போம். 

ரெகார்ட் டான்ஸ் ஆடிய அழகிகள் கைது ! (அழகிகள் படம் பார்த்தால் - அரைக் கிழவிகள் !!) 

கே ஆர் விஜயாவுக்கு பெண் குழந்தை பிறந்தது! (தலைப்பு செய்தி!) (ரொம்ப முக்கியம்!) 

கருத்துப் படம்! புத்தாண்டு பிறந்தது! (ஒவ்வொரு ஜனவரி முதல் தேதியும் - பழைய ஆண்டு ஒரு முதியவராகவும் - புத்தாண்டு முதியவரை overtake செய்யும் ஒரு சிறுவன் போலும் சித்தரிக்கப்படும்!) 

சோப்பு விலை உயர்வு ! (படத்தில் சோப் இறக்கைகளோடு பறக்கும்!) 

ஆண்டிப் பண்டாரம் பாடுகிறார் ( " என்ன உறவோ - என்ன பிரிவோ - காதல் நாடக மேடையில்!) 

வாசகர் கடிதம் : " எந்தப் பாடலையுமே ஆண்டிப் பண்டாரம் பாடினால்தான் சுவையாக உள்ளது! " :: அச்சரப்பாக்கம் - அரைக் கிறுக்கன்.  

சாணக்கியன் சொல் : " அரசன் நிலை தவறினாலும் நீதி நிலை தவறக் கூடாது. " 

பத்திரிகையிலும் உயர்வு தாழ்வு இருந்தது உங்களுக்குத் தெரியுமா? - தினத்தந்தியை பலர் வீட்டில் வாங்கமாட்டார்கள். அது பெரும்பாலும் சலூனில்தான் வாங்கப்படும் என்பது போல.

# பெரும்பாலான மக்கள் பத்திரிக்கை படிக்கும் வழக்கம் இல்லாதவர்களாக இருந்தபோது மக்களை பெருமளவு பத்திரிக்கைக்கு வரவழைத்தவர் தினத்தந்தி ஆதித்தனார். அவருடைய பார்முலா எளிய வார்த்தைகளை உபயோகப்படுத்தி தேவையானால் ஒரே செய்தியை இரண்டு மூன்று தடவை ஒரு செய்தியில் சொல்லி மக்கள் மனதில் பதிய வைப்பது . நாம் என்ன கிண்டல் அடித்தாலும் இப்போது மக்கள் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை மிகப் பெரிய அளவில் மேற்கொண்டு இருக்கிறார்கள் என்பது தினத்தந்தி அடைந்த மிகப்பெரிய வெற்றி .

பெட்ரோல் விலை ஏறிவிட்டதே என்று நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள், தாங்கள் நடத்தும் பிஸினெஸ், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், ஹோட்டல்கள் போன்றவைகளை இலவசமாகவோ இல்லை at cost தருவதில்லை?

# பெட்ரோல் போன்ற அத்தியாவசியப்  பொருள்களின் விலை ஏறும்போது அதைப் பார்த்து முகம் சுளிப்பது  இயல்பானது . நாம் புரிந்து கொள்ளக் கூடியது.  

இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, தாம் வணிகம் செய்யும் பொருள்களின் விலையை ஏற்றுவோர்களும் உண்டு. 

 சாதாரணமாக ஏதோ ஒன்றை எதிர்த்துக் குரல் கொடுக்கும் போது அதன் உள் அர்த்தம் வேறாக இருப்பதற்கு நிறைய சாத்திய கூறுகள் உண்டு. 

ஆனால் பெரும்பாலான மக்கள் அதைக் கருத்தில் கொள்வதில்லை.  எரிந்த கட்சி Vs எரியாத கட்சி என்று ஏதோ ஒரு அபிமான அடிப்படையில் இதற்கு எதிர்ப்போ அல்லது ஆதரவோ  தெரிவித்துக் கூக்குரல் இடுவதே நமது வழக்கமாகி போய்விட்டது.


# " பெண் என்றால் அழகாக இருந்து தான் ஆக வேண்டும் "  என்று ஆண்கள் நினைப்பது மட்டும் நியாயமா ? 

அதற்கு மேலாக இந்தப் பெண் அழகாக இல்லை என்று எந்த அடிப்படையில்  சொல்கிறீர்கள் ?

= = = = 

எங்கள் கேள்விகள் :

1) யார் அழகு ? வரிசைப் படுத்துங்கள் 

a ) ஐஸ்வர்யா பச்சன் b ) ஐஸ்வர்யா லக்ஷ்மி c ) ஐஸ்வர்யா ராஜீவ் d ) ஐஸ்வர்யா சுரேஷ் e ) ஐஸ்வர்யா கபூர் 

2) கீழ்க் கண்டவைகளில் - வரிசையில் சேராதது எது? ஏன் ? 

2 a :  7 , 17 , 21, 41, 61, 71 

2 b : குமுதம், விகடன், கல்கி, குங்குமம், பாக்யா, ராணி 

2 c :  சன், மூன், ஸ்டார், காமெட் 

2 d : புத்தகம், நோட்டு, பேனா, பென்சில், பலப்பம் 

= = = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்க :

1) 


2) 

3) 49 கருத்துகள்:

 1. இந்த ஐஸ்வர்யாகாகளின் படங்களை வெளியிடாமல் அழகின் அடிப்படையில் வரிசைப்படுத்தச் சொல்வது நியாயமாரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Google மூலம் பாருங்கள். பிறகு கருத்து கூறுங்கள்!

   நீக்கு
 2. பெண்ணின் அழகு குணம் நல்ல மனது. First sightல அழகு. அப்புறம் மேல் சொன்னவை இல்லைனா.... ஆளைவிடு சாமீ என்றாகிவிடும்

  பதிலளிநீக்கு
 3. என்னது பெட்ரோல் விலை ஏறிவிட்டதே என்று "நீலிக்கண்ணீரா...?" கொடுமையடா சாமி...

  பதிலளிநீக்கு
 4. புத்தொளியூட்டும் புதன்..

  அன்பின் வணக்கங்களுடன்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 5. ..தினத்தந்தியின் ஒவ்வொரு அங்குலமும் தங்க நகை போல அலங்கரிக்கப்படுவது..

  இருந்தாலும்
  தினத்தந்தி தான் சில விஷயங்களுக்கு பால பாடமாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது..

  பதிலளிநீக்கு
 6. விற்பனைக்காக , கவரும் சினிமா செய்திகளை பறக்கவிடும் பத்திரிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன.

  அனுஸ் காணவில்லை:) ஐஸ்வரியாக்கள் வந்துவிட்டார்கள் :)


  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
 8. தினதந்தியில் மாணவர் பக்கம். 10, 12 ம் வகுப்பு பாடங்கள் புதன் கிழமை, மற்றும் கன்னித்தீவு நெடுங்கதை எல்லாம் இருக்கும்.
  டீக்கடை வாசலில் தலைப்புகளை வைத்து படிக்க தூண்டும் பேப்பர்கள் தொங்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெகு ஜனங்களின் பத்திரிக்கை என்பது உண்மைதான்.

   நீக்கு
 9. நச், நச் என இரண்டு குட்டு வைச்சிருக்கிறவங்க சரியாத்தானே வைச்சிருக்காங்க? :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்குக் கொடுத்திருந்த பதிலைக் காணோம். தினசரி செய்திகளைப் பார்த்திருந்தால் புரிஞ்சிருக்குமே! :))))))

   நீக்கு
 10. அந்தக் காலத்து தினத்தந்தி (சுமார் நூறு ஆண்டுகள் முன்னர்) வடமொழி வார்த்தைகளையும் அக்ஷரங்களையும் அப்படியே பயன்படுத்தி இருப்பது தெரியுமா? சாம்பிளுக்கு ஒண்ணு தேடி எடுத்துப் போடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 11. எனக்கு ஐஸ்வர்யா ராய் (பச்சன்) தவிர்த்து மற்றப் பேர் புதிது. எல்லோருமே ஹிந்தியில் நடிச்சிருக்காங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேள்வியில் ஒரு கொக்கி உள்ளது. யார் கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்க்கத்தான் படங்களைப் போடவில்லை.

   நீக்கு
 12. அடுத்தடுத்து இளம் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டே போவது ஏன்? எங்கே தப்பு? என்ன செய்யலாம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னாடியே கேட்டிருந்தாலும் கேட்டிருப்பேன். இப்போதைய குழந்தைகள் ஒண்ணு செல்ஃபோனுக்கு அடிமை. ஒரு நகைச்சுவைத்துணுக்குக் கூட வந்திருந்தது. தாத்தா/பாட்டியில் இருந்து பிறந்த குழந்தை வரை செல்ஃபோனும் கையுமாக இருப்பதாக. இன்னொன்று ஐபாட். பெற்றோர்கள்/இப்போதைய பெற்றோர்கள் அதை அனுமதிப்பது சரியா? அவங்களும் ஒண்ணு செல்ஃபோனும் கையுமாக இருக்காங்க. இல்லைனா ஐபாடில் சீரீஸ்/சீரியல்கள் பார்த்துக்கொண்டு இருக்காங்க. குழந்தையும் அது பாட்டுக்கு ஒரு ஓரமா உட்கார்ந்து ஐபாட் பார்க்கிறது. சாப்பிடும்போது கூட ஐபாட்/அல்லது செல்ஃபோன் தான். இது மனரீதியில் ஆரோக்கியமானதா? இதைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாதா? கொண்டு வர முடியுமா? குழந்தைகள் படிப்புக்கு இவை தேவையா?

   நீக்கு
  2. கிட்டத்தட்ட ஐந்தாறு வருஷங்களுக்கும் மேல் அன்ட்ராய்ட் செல்ஃபோன் பயன்பாட்டில் வைச்சிருந்தாலும் நான் எப்போதேனும் முகநூல்/வாட்சப் செய்திகள் பார்ப்பதோடு சரி. அதை ஒரு தொடர்பு சாதனம் என்ற அளவிலேயே வைச்சிருக்கேன். அதிலிருந்து எந்தப் பதிவும் தட்டச்சியதில்லை எதுவும் படிச்சதில்லை. அவ்வளவு ஏன்? பாட்டுக்கூடக் கேட்டதில்லை. மடிக்கணினியில் தான் கச்சேரிகள்/நடன நிகழ்ச்சிகள்னு வருவதைப் பார்க்கிறேன். இன்னும் சொல்லப் போனால் பல செயலிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதே தெரியாது. கூகிள் பே/ஃபோன்பே போன்றவையும் இல்லை. ஓலா, ஊபர் செயலிகள் இருந்தாலும் பயன்பாட்டில் இல்லை. இதைப் பார்த்துப் பலர் சிரிக்கிறாங்க. இது டப்பா?

   நீக்கு
  3. தப்பே இல்லை. பழங்காலத்தவர்களுக்கு மாற்றங்கள் சுலபமில்லை.

   நீக்கு
  4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சந்தடி சாக்கில் என்னைப் பழங்காலத்தவர் என்று சொல்லிட்டீங்களே! :P

   நீக்கு
 13. 1. இப்படி ஐ பச்சனை அல்லாமல் மற்றவர்கள் யாரையும் தெரியாதே எப்படி ஒப்பிட முடியும்??!!!! எல்லாருமே ஏதோ ஒரு வகையில் அழகுதான். ஒப்பீடு அவசியமே இல்லை..

  கீதா

  பதிலளிநீக்கு
 14. அதோடு பெண்ணின் மனதுதான் முக்கியம்....மனம் நன்றாக இருந்தால் எல்லாமே அழகுதான், ஆண் என்றாலும் பெண் என்றாலும்

  கீதா

  பதிலளிநீக்கு
 15. கடைசிப் படம் - ஸ்ரீராம் இந்த உயரத்திலிருந்து எட்டிப் பார்ப்பீங்களா!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 16. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பதிலாக, ஐஸ்வர்யா ராஜீவ், ஐஸ்வர்யா ராகுல் என்றெல்லாம் குறிப்பிட்டது எதற்காக? தேர்தல் நெருங்கிவிட்டதாக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பெயரிலும் படங்கள் - கூகிளில் பார்த்தேன்.

   நீக்கு
 17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 18. ஐஸ்வர்யா பச்சன் தெரியும். முப்பது வருடங்களுக்கு முன்னர் அழகாக இருந்தார். மணி ரத்தினம் கண்களில் எப்போதும் அழகு!
  ஐஸ்வர்யா பாஸ்கரைத்தான் ஐஸ்வர்யா லட்சுமி என்கிறீர்களா? தான் அழகில்லை என்று அவரே கூறிக்கொண்டு திரிகிறார்.
  ஐஸ்வர்யா சுரேஷ், ஐஸ்வர்யா ராஜீவ் எல்லாம் உங்கள் பக்கத்து வீட்டு பெண்களா?

  பானுமதி வெங்கடேஸ்வரன்

  பதிலளிநீக்கு
 19. தினத்தந்தியை குறைத்து மதிப்பிட முடியாது. பத்திரிகை படிக்கும் பழக்கத்தை வெகுஜன மக்களுக்கு கொண்டு சென்றவர் சி.பா.ஆதித்தனார். அதில் பணியாற்றிய ஒரு நிருபர் ஒரு முறை ஒரு நடிகையை பேட்டி எடுத்துச் சென்று வந்தாராம். அதைப் படித்த ஆதித்தனார்,"வெறுமனே பேட்டியை மட்டும் எழுதினால் போதாது. அந்த நடிகை என்ன புடவை என்ன டிசைனில் கட்டிக்கொண்டிருந்தார், பேசும் பொழுது அவருடைய மேனரிசங்கள் என்ன?என்று எல்லாவற்றையும் எழுத வேண்டும்" என்றாராம். இப்போது எல்லா பத்திரிகைகளும் இதைத்தான் ஃபாலோ பண்ணுகின்றன. என்று கூறியிருந்தார்.
  என் ஹிந்துவில் முதல் பக்கத்தில் வரும் செய்தி தந்தியில் மூன்றாம் பக்கத்தில் ஒரு மூலையில் வரும்.

  பானுமதி வெங்கடேஸ்வரன்

  பதிலளிநீக்கு
 20. 1. பாக்யா - மற்றவை வாராந்திர பத்திரிகைகள்.
  2. மூன் - மற்றவை நட்சத்திரங்கள். நிலா, கோள்
  3. பலபம் - இது சிலேட்டில் எழுத மட்டுமே பயன்படும்.

  பானுமதி வெங்கடேஸ்வரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாக்யாவும் வார இதழ்தான். பாக்யா என்ற பெயரில் சினிமா வரவில்லை. மீதி எல்லா பெயரிலும் தமிழ் சினிமா இருக்கு!!

   நீக்கு
 21. 2a) 21 .....மற்றவை எல்லாம் பிரைம் நம்பர்கள்
  2d) புத்தகம்....இதை ஒன்றைத்தான் படிக்க முடியும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 2a correct. 2 d யோசிக்க வேண்டிய விஷயம்! என்னைப் பொருத்தவரை பலப்பம் is the odd nan out. Not connected with other items in list.

   நீக்கு
 22. பத்திரிக்கைகளைப் படிக்கும் பழக்கத்தை பொது மக்களிடம் ஏற்படுத்தியது தினத்தந்திதான். மக்களின் பேச்சு வழக்கு சொற்களை அதிகம் பயன்படுத்தியதும் தினத்தந்திதான்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!