புதன், 31 ஆகஸ்ட், 2022

சமீபத்தில் படித்த புத்தகம் எது?

 

எல்லோருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் 

= = = = = =

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

முகநூலில் அவ்வப்பொழுது 'Coolers challenge', 'green challenge', 'yellow challenge' என்றெல்லாம் வருகிறது. ஆனால் அவைகளில் பெண்கள்தான் கலந்து கொள்கிறார்கள். ஏன் ஆண்கள் கலந்து கொள்வதில்லை?

# ஏதோ பெண்கள் குழுவில் தொடங்கியதாக இருக்கலாம். ஊடகங்கள் வழியே பெண்கள் அவர்கள் நண்பர்களுக்கு அனுப்பியதாக இருக்கலாம்.  வெறும் யூகம்தான். 

& ஒரு ஆணாக இதற்கு பதில் சொல்கிறேன். இதெல்லாம் ஏதோ 'பொழுது போகாத பொம்முக்கள்' சமாச்சாரம் என்று நினைப்பதால் பேசாமல் கடந்து போய்விடுவேன்! 

சமீபத்தில் படித்த புத்தகம் எது?

# The Awakening of the Mind - J கிருஷ்ணமூர்த்தி. 

திருமந்திரம் - சுருக்கமான விளக்கத்துடன் . பாலசுப்ரமணியன் என்பவர் எழுதிய நூல்.

& என்னுடைய பேரன் எழுதிய " The deep thoughts of Cricket " என்னும் புத்தகம். 

எந்த திரைப்படத்தையாவது ஒரு முறைக்கு மேல் திரையரங்கம் சென்று பார்த்திருக்கிறீர்களா? எது அப்படி பார்க்க வைத்தது?

# வாழ்க்கை , மனோகரா கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போன்ற படங்களை இரண்டு மூன்று முறை கூட பார்த்திருக்கிறேன். 

வேலைக்குப்போன புதிதில் சம்பாதிக்கும் சந்தோஷம் காரணமாக அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தை சுமார் 6 தடவை பார்த்திருக்கிறேன். 

ROMAN  HOLIDAY படத்தை நன்றாக இருக்கிறது என்று தொடர்ந்து இரண்டு ஆட்டங்கள் பார்த்தேன். Ben  Hur கூட இரண்டு முறை.

& 'சுமதி என் சுந்தரி' படம். இரண்டாவது முறையாக - அண்ணன் வற்புறுத்தலால் ! 

கீதா சாம்பசிவம் :

அடுத்தடுத்து இளம் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டே போவது ஏன்? எங்கே தப்பு? என்ன செய்யலாம்?

# இது ஒரு சிக்கலான பிரச்சினை.  தற்கொலை என்பது ஒரு மனக்கோளாறு.  இது பெற்றோர், ஆசிரியர், தோழியர், இதர மாணவ மாணவிகள் இவர்கள் நடந்து கொள்ளும் முறை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டதனால் கூட இருக்கும்.  ஆக இந்த நபர்கள் பொறுப்புடன் அன்புடன் கருணையுடன் நடந்து கொண்டால் இது போன்ற விபரீதங்கள் தவிர்க்கப்படலாம் .  இது எல்லாமே சரியாக இருந்தால் கூட ஒருவரது மன உளைச்சல் கூட இந்த எண்ணத்தைத் தோற்றுவிக்கலாம்.

& சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் உள்ளவை; சில நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. ஊரில் / உலகில் நிகழும் தற்கொலை போன்றவை நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள். 'ஏன் நடந்தது ' என்று ஆராய்ந்து - அந்த சூழ்நிலை நம்முடைய சொந்த பந்தங்களுக்குள் வராமல் இருக்க என்ன முயற்சி எடுக்கலாமோ அதை மட்டும் எடுத்துக் கொள்வது ஒன்றுதான் நாம் செய்யக்கூடியது. 

நெல்லைத்தமிழன் : 

தேவலோக ரம்பை', 'மஹாலக்ஷ்மி' போலவே இருக்காள் என்றெல்லாம் சொல்றாங்களே... இவங்க எப்பயாச்சும் ரம்பை, மஹாலக்ஷ்மிலாம் பார்த்திருக்காங்களா?

# "இன்னொரு தடவை தப்பு பண்ணினா கொன்னுடுவேன் " என்று சொல்பவர்கள் தூக்கில் போடுவார்களா விஷம் கொடுப்பார்களா ? சம்பிரதாயமாக அழுத்தம் கொடுப்பதற்குப் பேசப்படுவதை ரொம்ப உரைத்துப் பார்க்கக்கூடாது.

& ரவி வர்மா படங்களில் பார்த்திருப்பார்கள். ஏ பி நாகராஜன் படங்களில் அவர்களின் நடை, உடை, பாவனா (ஹி ஹி - பாவனை ) பார்த்திருப்பார்கள். அவ்வளவுதான்! 

ஒவ்வொரு பருவத்தில் இருக்கும்போதும் அடுத்த பருவத்தின் கஷ்டத்தை, நாம் அனுபவிக்கும் வரை உணர அல்லது அதை எதிர்பார்த்துத் திட்டமிடுவது போன்றவை முடிவதில்லையே? (உதாரணம்.. இளமை ஆக்கிரமித்திருக்கும்போது, பொறுப்போடு இருக்கும் அப்பாவின் பருவம், அதற்கு அடுத்த ஓய்வு பெற்றவரின் நிலை, முதியவரின் நிலை என்று) இதன் காரணம் என்ன?

# நம் குறுகிய பார்வைதான். அவை குறித்து ஆழமாக சிந்திக்கத் திறனோ தேவையோ இல்லாததும் கூட.

& அந்தந்த பருவத்தில் அந்தந்த உணர்வுகள் / அனுபவங்கள் பெறுவது இயற்கைதான். வயதுக்கு மீறிய முதிர்ச்சி காட்டுவது / எதிர்பார்ப்பது தேவையே இல்லை - என்பதுதான் என் கருத்து. 

செல்லங்களை வளர்ப்பவர்கள் அன்புக்கு ஏங்குகிறவர்களா? அல்லது அவைகளை வளர்ப்பதினால் நமக்குப் பொறுப்பு குறைவு என்று நினைப்பவர்களா? (அதற்குப் பதில் ஒரு அநாதைக் குழந்தையை வளர்த்தால் அது பெரும் பொறுப்பாகிவிடும். செல்லத்திற்கு நோய் வந்துவிட்டாலோ இல்லை அதனை விட்டுவிட்டு வேறு தேசம் போகவேண்டியிருந்தாலோ சுலபமாகக் கழற்றிவிட்டுவிடலாம் என்று நினைப்பார்களோ?)

#  ஏக்கம் எதுவும் இராது.  'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்' என்று பாரதியார் பாடவில்லையா ? அந்த உணர்வு மிக்கவர்களாக இருக்கக்கூடும்.

நாம் செல்லப்பிராணிகளை வளர்க்கவில்லை என்பதால் , அவற்றை வளர்ப்பவர்கள் வேறு ஏதோ சில காரணங்களுக்காக அல்லது குறைபாடுகள் காரணமாக வளர்க்கிறார்கள் என்று சொல்வது தவறு இல்லையா ?

& செல்லப் பிராணிகள் வளர்ப்பு - வளர்ப்பவர்களின் அன்றாட அலப்பறைகள் எல்லாம் எனக்கும் ஒவ்வாமை (allergy) செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் வீட்டுக்கு செல்வதைக் கூட இயன்றவரையில் தவிர்த்துவிடுவேன்.  

தலைநகரைத் தவிர பிற இடங்களில் ஓலா, ஊபர் போன்றவை வளராததன் காரணம் என்ன?

# கிராக்கி (தேவை) போதுமான அளவிற்கு அங்கு இல்லை என்பதுதான்.

& தலைநகரங்களில்தான் மக்கள் காலில் கஞ்சி கொட்டிக் கொண்டவர்கள் போல ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஓலா ஊபர் எல்லாம் தேவை. மற்ற இடங்களில் மக்களுக்கு பேருந்து போதும். செலவும் கம்மி.  

அடுத்த நாட்டு வீரன்/வீராங்கனையை தங்கள் நாட்டுக்குக் குடியேற வைத்து, ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் பதக்கம் பெற்று, தங்கள் நாட்டின் திறமை என்று சொல்லிக்கொள்வது கேலிக்குரியதாக இல்லையா?

# தங்கள் நாட்டின் சாதனை என்று யாரும் சொல்லிக் கொள்வதாகத் தெரியவில்லை.

& கேலிக்குரியதுதான். 

'உயிர்க்கொலை' என்பதன் விளக்கம் என்ன? சமீபத்தைய பதிவினால் எனக்கு ஏற்பட்ட மனக்குழப்பம். நடக்கும்போது எறும்புகள் சாகலாம். வீட்டில் கொசுக்கள், பூச்சிகள் போன்றவைகளைக் கொல்வது... இதற்கும் மனிதனைக் கொல்வதற்கும் என்ன வித்தியாசம்?

# இந்த குழப்பம் எனக்கும் ஏற்படுவது உண்டு. எல்லா உயிருக்கும் அன்பு செய்தல் என்பது ஒரு சிறந்த அறம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது . இது நம் மனதில்  பதியும்போது , சிறு சிறு உயிர்களை நாம் கொல்ல நேர்வது ஒரு குற்ற உணர்ச்சியை  ஏற்படுத்துவது உண்மைதான். உணவு, தற்பாதுகாப்பு இந்த இரண்டு காரணங்களுக்காக உயிர்களைக் கொல்வது குற்றமில்லை என்ற ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. எனவே தேவையில்லாமல் ஒரு ஜந்துவை கொல்லும்போது அதை உயிர்க் கொலை என்று சொல்கிறோம் . அறியாமல் நடப்பதற்கு நாம் வருந்த வேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஒரு கோட்பாடு. 

மேலை நாட்டில் ப்ரெட்தான் சாப்பிடறாங்க. அப்புறம் நம்ம குழந்தைகள் சாப்பிட்டா மாத்திரம் நாம் ஏன் அலறுகிறோம்? அவங்க, எதுக்கு குளம் வெட்டி குழம்பு சாதம் சாப்பிடுவது? என்று நினைக்கலாமில்லையா?

# அந்தந்த நாட்டுக்கு உண்டான சம்பிரதாய உணவுகள்தான் ஆரோக்கியமானவை என்று கருதப்படுகிறது.  எனவே மேலைநாட்டு வழக்கமான ரொட்டியை முக்கிய உணவாக எடுத்துக் கொள்வது  ஆட்சேபத்துக்குரியது  என்று சொல்லலாம் . குழம்பு, ரசம், மோர்க் குழம்பு போன்றவை நம் நாட்டின் தனித்துவம் வாய்ந்த உணவு வகைகள். இவை மறந்து போகப் படக்கூடாது என்று நினைப்பதில் நியாயம் இருக்கிறது.. 

சமீபத்தில் (இன்று) தில்லியில் இரட்டை கோபுரம் ஒன்றை வெடி வைத்துத் தகர்த்தார்களே (14 மாடிக்கு பெர்மிஷன் வாங்கிவிட்டு 40 மாடிகள் கட்டினார்கள் என்று). அதனை ஏன் கட்டும்போதே மாநகராட்சி அல்லது பொதுப்பணித்துறை ஊழியர்கள் கண்காணிக்கவில்லை? இடிப்பதற்கும், கோர்ட் நடவடிக்கைகளுக்கு ஆன செலவுகளுக்கும் ஏன் அவர்களிடமிருந்து வசூலிக்கக்கூடாது?

# இந்த ஐயம் எனக்கும் நிறையவே உண்டு. 

இந்த வகை அத்து மீறல்கள் நடக்கின்றனவா என்று கவனிக்க ஒரு அமைப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. 

செல்வாக்கு மிக்க பெரும்புள்ளிகள் நிறுவனமாக இருந்தால் அதை கண்காணிக்க அலுவலர்கள் அச்சப் படுவதும் இருக்கக் கூடும்.

ஒரு வேளை "இந்த மோசடி ஆசாமிங்களுக்கு சரியான சமயத்தில் ஆப்பு வைக்க வேண்டும்" என்று முடிவு செய்து எவ்வளவுதான் மேலே போகிறார்கள் என்று பார்த்துக் கொண்டு இருப்பார்கள் போலும். 

"சரியான சமயத்தில் வசூல் செய்ய வாய்ப்பு " என்று காத்திருக்கும் அவலம் நடந்திராதென நம்புவோம். 

இந்த விதி மீறலை கவனித்து வழக்குப் போட்டது யார் - எப்போது என்று பார்த்தால் சில விளக்கங்கள் கிடைக்கலாம்.

The court had said the construction of Supertech's twin 40-storey towers having 915 flats and 21 shops was done in collusion with the Noida Authority.

இது செய்தியாக வந்தது. இந்த அதாரிடிக்களை என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.

& ஹி ஹி - என்னங்க நீங்க பச்சைப் புள்ளையா இருக்கீங்க! கட்டிடம் கட்டப் பட்டது உத்தரப் பிரதேசத்தில் முந்தைய முலாயம் சிங் / மாயாவதி / அகிலேஷ் ஆட்சி காலங்களில். ஆட்சியாளர்களுக்கும் - மாநகராட்சி / பொதுப்பணித்துறை ஆட்களுக்கும் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்துத்தான் உரிமையாளர் கட்டியிருப்பார்.  இப்போது இடிப்பதற்கான செலவும் கட்டிட உரிமையாளர் தலையில்தான். எனவே கவலை வேண்டாம். இழப்பு எல்லாமே பேராசை கொண்ட கட்டிட உரிமையாளருடையவை. வரும் காலத்தில் இந்த வகை மீறல்கள் செய்வோர் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள். 

சமீபத்தைய 40வது வருட திருவல்லிக்கேணி ஹ்யுமர் க்ளப்பில், 'உங்களனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியோடும் மிகுந்த சந்தோஷத்தோடும் வரவேற்கிறோம்' என்றார்கள் (யூடியூப் பார்த்தேன்). மகிழ்ச்சியும் சந்தோஷமும் வெவ்வேறா?

# இல்லை.  ஹியூமர் கிளப் பொறுப்பாளர்கள் அவ்வளவு இலக்கண சுத்தமாகப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

& சந்தோஷம் = விஷயம் 

        மகிழ்ச்சி  = விடயம். 

= = = = =

வாசகர்களுக்கு வேண்டுகோள் :

உங்கள் வீட்டு, தெரு , ஊரில் இன்று நடக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை + கொண்டாட்டங்களை படம் / வீடியோ எடுத்து, 

9840937420 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள். 

அவைகளை எங்கள் Blog / மின்நிலா பதிவுகளில் வெளியிடுகிறோம். 

நன்றி. 

= = = = = =

** சென்ற வார எங்கள் கேள்விகளுக்கான சரியான பதில்கள் - அடுத்த வாரம் சொல்கிறோம். சில பதில்களுக்கு கருத்துகள் பகுதியிலேயே சரியா தவறா என்று சொல்லியுள்ளோம். 

= = = = = = =

54 கருத்துகள்:

 1. பானுமதி வெங்கடேஸ்வரன்31 ஆகஸ்ட், 2022 அன்று 6:06 AM

  அனைவருக்கும் வணக்கம். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 🙏

  பதிலளிநீக்கு
 2. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
  நேற்று, மாமியாருக்குக் கொடுக்கவேண்டும் என பூரணக் கொழுக்கட்டைகள் செய்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

   நீக்கு
  2. // பூரணக் கொழுக்கட்டைகள் செய்தேன்.// Pl send to me thro Dunzo.

   நீக்கு
 3. முன்ன பின்ன யானையைப் பார்த்திராதவர்தான் பிள்ளையாரின் அவயவங்களுக்கு விளக்கம் எழுதியிருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. இன்றைய கேள்விகளுக்கான பதில்களை ரசித்தேன்.

  //தங்கள் நாட்டின் சாதனை என்று//- பல்வேறு நாடுகளின் தடகள வீர வீராங்கனைகள் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். குடுயுரிமை வழங்கி தங்கள் நாட்டுக்காகப் போட்டியிட வைக்கிறாங்க. கால்பந்திலும் அந்தக் கதைதான் (அமெரிக்கா....கல்ஃப் நாடுகளில் இதுதான் நிலைமை. ஜப்பான், சைனா, இந்தியா போன்ற நாடுகள் விதிவிலக்குகள்.

  பதிலளிநீக்கு
 5. சந்தோஷம் மகிழ்ச்சி - & ன் விளக்கம் சரியானது

  பதிலளிநீக்கு
 6. திரைப்படத்தை திரையரங்கில் இரண்டு முறைக்கு மேல்..- நிறைய படங்கள். பதின்ம வயதில் பழைய படமான பாசமலரை இரண்டாவது முறை பார்க்கும்போது தூங்கிவிட்டேன். தொடர்ந்து திரையரங்கில் பார்த்தது, முதல் மரியாதை, இரத்தக்கண்ணீர், பாஹுபலி1, பாஹுபலி2 - இவைகளை மூன்று தடவைகள் பார்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரத்தக்கண்ணீர் - மூன்று முறைகள் !!!! பழைய படமா? அப்படி என்றால் - உங்களுக்கு உலக மகா பொறுமைசாலி பட்டம் கொடுக்கிறோம்.

   நீக்கு
  2. அது அட்டஹாசமான படம். நான் மிகவும் ரசித்தது.

   நீக்கு
 7. 40 மாடிக்கட்டிட இடிப்பு.... 93களில் அபுதாபியில் சிறிய கட்டுடங்கள் இடிக்கப்பட்டு குறைந்த பட்சம் ஐந்து மாடிக்கட்டடங்களாக ஆக்கப்படவேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்து மாநகராட்சி மூலம் நடைமுறைப்படுத்தியது (வாடகையைக் குறைக்கவேண்டும் என்ற எண்ணத்தில்)

  பஹ்ரைனில், குவைத்தைச் சேர்ந்த பணக்கார்ர், நகரில் பத்து மாடிகளுக்கும் அதிகமான இரண்டு கட்டடங்களைக் கட்டியிருந்தனர். அது ஒரு முறை -95ல்? இரண்டடிகள் பூமிக்குள் இறங்கியதும் (பல வருடங்கள் உபயோகத்தில் இருந்து, நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வசித்தன), அரசு அந்தக் கட்டிடத்தை இடிக்கச் சொன்னது. உரிமையாளர் நீதிமன்றம் சென்று அந்த நெடிய நடைபுறை 2000ல் முடிவுக்கு வந்தும் நான் அந்த ஊரிலிருந்து கிளம்பும்வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

  பதிலளிநீக்கு
 8. //..& என்னுடைய பேரன் எழுதிய " The deep thoughts of Cricket " என்னும் புத்தகம்.

  வாவ்! Quite thoughtful.. more than playful !

  பதிலளிநீக்கு
 9. ///செல்லங்களை வளர்ப்பவர்கள் அன்புக்கு ஏங்குகிறவர்களா? //

  உண்மையான அன்பை இந்த செல்லப் பிராணிகளிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள முடியும் அதனால்தான் அதுமட்டுமல்ல நம்முடைய கவலையெல்லாம் ஒரு சில நொடியில் போக்கிவிடும் தன்மை அவைகளுக்கு உண்டு உண்மையான அன்போடு வளர்ப்பவர்கலுக்கு மட்டும்தான் அது புரியும்

  ///அல்லது அவைகளை வளர்ப்பதினால் நமக்குப் பொறுப்பு குறைவு என்று நினைப்பவர்களா? //


  //பிராணிகளை வளர்க்க பொறுப்பு அதிகம் வேண்டும்
  (அதற்குப் பதில் ஒரு அநாதைக் குழந்தையை வளர்த்தால் அது பெரும் பொறுப்பாகிவிடும். செல்லத்திற்கு நோய் வந்துவிட்டாலோ இல்லை அதனை விட்டுவிட்டு வேறு தேசம் போகவேண்டியிருந்தாலோ சுலபமாகக் கழற்றிவிட்டுவிடலாம் என்று நினைப்பார்களோ?)///  உங்களுக்கு பிராணிகள் வளர்ப்பவ்ர்கள் பற்றிய உண்மையான அபிப்ராயங்கள் ஏதும் முழுமையாக தெரியாமல் பதில் சொல்லி இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

  இப்படித்தான் சுப்புதாத்தா என்பவர் நான் நாய் வளர்ப்பது பற்றி ஒரு பதிவு எழுதி வெளியிட்ட போது நாய்வளர்ப்பதற்கு பதிலாக ஏழைக் குழந்தைகளுக்கு உதவலாம் என்று கருத்து சொன்னார் அவருக்கு நான் தந்த பதிலை படித்துவிட்டு வாயை மூடிக் கொண்டு சத்தம் இல்லாமல் ஒடிவிட்டார் அந்த பெரிய மணுஷன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாய் வளர்ப்பவர்கள், அதனை, குடும்ப உறுப்பினராக, ஏன் குழந்தைக்கும் மேலாக அன்பு, கவனம் செலுத்தி வளர்ப்பதைப் பார்த்திருக்கிறேன். என்னுடன் வேலை பார்த்தவனது அம்மா (கணவனை இழந்தவர்) தான் வளர்க்கும் நாய்க்காக, எங்கேயும் பிரயாணப்பட ஆசைப்படுவதில்லை, அவரது உலகமே அந்த நாய்தான். இதனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால்தான் கேள்வி. வளர்ப்பவர்கள் மீது எனக்குச் சந்தேகம் இல்லை, ஆனால் அவ்வளவு அன்பு செலுத்த என்ன இருக்கிறது என்பதுதான் புரியவில்லை.

   என் உறவினர் வீட்டில், ஒரு 'மனப்பிரம்மையினால் பாதிக்கப்பட்ட' ஒரு பூனையை வளர்க்கிறார்கள். அது யார் முன்னாலும் வருவதில்லை. தனியாக அறையின் ஓரமாக இருக்கும். (கொஞ்சம் பயந்ததுபோல). ஆனால் அவருடைய பெண்ணிடமும், சிலரிடமும் (அதற்கு என்ன க்ரைடீரியான்னு தெரியலை) அது வரும். அவரது கணவருக்கு பூனை பிடிக்காது. அதனால் அவர் இருக்கும்போது அவர் அறைப்பக்கமோ அவர் இருக்கும் இடத்திற்கோ வருவதில்லை. இதுவும் எனக்கு ஆச்சர்யம்தான்.

   நீக்கு

 10. என் வீட்டு நுழைவாயில் நாயை நேசிக்க முடியாதவர்களுக்கு இந்த வீட்டிற்குள் நுழைய அருகதை இல்லை என்று எழுதி மாட்டி இருக்கின்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா. எதன் மீதும் வெறுப்பு இல்லை. எல்லாமே உயிர்கள்தாம்.

   நீக்கு
 11. எல்லா பதில்களும் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

  பதிலளிநீக்கு
 12. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
  தீராமை ஆர்க்கும் கயிறு

  பதிலளிநீக்கு
 13. உயர்ந்த மனிதன்.படத்தை நான் பலமுறை பார்க்க வைக்கப் பட்டேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிவாஜி என் கனவில் வந்து நீங்க அவரை அடிக்கடி தியேட்டரில் பார்த்து முகம் சுளித்ததாக சொன்னார்.

   நீக்கு
 14. என்னுடைய பேரன் எழுதிய " The deep thoughts of Cricket " என்னும் புத்தகம்//

  வாவ்! உங்கள் பேரனுக்கு வாழ்த்துகள் கௌ அண்ணா. பின்னே எழுத்துக் குடும்பத்துக் குட்டிக்குச் சொல்லித் தர வேண்டுமா என்ன!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 15. பதில்கள் அனைத்தும் அருமை

  கீதா

  பதிலளிநீக்கு
 16. பேரனுக்குக் கிரிக்கெட்டில் இருக்கும் ஆர்வம் வியக்க வைக்கிறது. தொடர்ந்து நல்லதொரு கிரிக்கெட் வீரராகப் பரிமளிக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

  கேள்வி பதில்கள் ரசனையாக இருக்கிறது.

  கிரிக்கெட் பேரனுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. கௌதமன் சார் உங்கள் பேரன் கிரிக்கெட் பற்றி புத்தகம் எழுதியதற்கு வாழ்த்துகள்

  கேள்விகளும் அதற்கான பதில்களும் சுவாரசியம்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 19. விநாயகர் படமும் அதற்கான விளக்கங்களும் அருமை

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 20. கமலா அக்காவைக் காணவில்லையே?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் நினைத்தேன். அவர்கள் கைபேசி சரிவர இயங்கவில்லை என்றார். அது தான் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. விரைவில் தடங்கல்கள் அகல விநாயகர் அருள் புரியட்டும்.

   நீக்கு
 21. அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்.

   நீக்கு
 22. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 23. //என்னுடைய பேரன் எழுதிய " The deep thoughts of Cricket " என்னும் புத்தகம்//

  இளம் எழுத்தாளர் பேரனுக்கு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!