வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

வெள்ளி வீடியோ : பயத்தில் மனது தவிக்கின்றது... இருந்தும் விருந்தை நினைக்கின்றது

 இந்த ஆல்பத்திலிருந்து சில பாடல்களை ஏற்கெனவே பகிர்ந்தாயிற்று.  இன்று இன்னுமொரு பாடல்.  இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு..

ஆல்பம் வெளியான ஆண்டு 1997 என்றுதான் போட்டிருக்கிறது.  அதற்கு முன்னரே இந்தப் பாடல்கள் ஒலித்துள்ளனவா என்பது நினைவில்லை.

கண்ணதாசன் பாடல்.  எம் எஸ் விஸ்வநாதன் இசை.  எஸ் பி பி குரலில் இனிய தனிப்பாடல்!

இந்த ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல்களில் முதல் இடத்துக்கு இந்தப் பாடலும், புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடலும் போட்டியிட்டன.  அவரவர் ரசிகர்கள் 'அதற்குதான் முதலிடம்' என்று சொல்லிக்கொண்டார்கள்!

என்னைப் பொறுத்தவரை...  

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டுமண்டலத்தை காட்டியதில்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே
கன்னமிட்டுமன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவன் உறங்க
மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ
அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ


கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகை காண்பதர்க்கும் போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ

======================================================================================================================

கௌரவம் திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1975 ஆம் வருடத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்!

வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய 'கண்ணன் வந்தான்' என்கிற நாடகம் பின்னர் திரைப்படமாக எடுக்கப்பட்டது.  பாரிஸ்டர் ரஜினிகாந்தும் கண்ணனும் வெவ்வேறு ஆட்கள் என்பது போலவே வேறுபாடு காட்டியிருப்பார் நடிகர் திலகம்.வொய் ஜி மகேந்திரன் சிவாஜியுடன் நடித்த முதல் படம்.

மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்ட உஷா நந்தினி என்றொரு நடிகையிருந்தார்.  மனிதனும் தெய்வமாகலாம், பொன்னூஞ்சல், ராஜபாட்டை ரங்கதுரை, என்னைப்போல் ஒருவன்  மற்றும் இன்று பகிரும் கெளரவம் போன்ற படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்திருக்கிறார்!

தெய்வ மகன் படத்தில் மூன்றாவது சிவாஜிக்கான உடல்மொழியை இயக்குனர் ஸ்ரீதரிடமிருந்து எடுத்தது போல சிவாஜி இந்தப் படத்தில் பைப் பிடிக்கும் ஸ்டைலை அப்போதைய தொழிலதிபர் டி எஸ் கிருஷ்ணன் அவர்களை பார்த்து செய்தாராம்.  அதுபோலவே தலை அலங்காரம் இன்னொரு தொழிலதிபர் (இந்தியா சிமெண்ட்ஸ்) டி எஸ் நாராயணசாமியைப் பார்த்து.

மறக்க முடியாத படங்களில் ஒன்று.  இப்போதும் நான் ரசிக்கும் காட்சிகள்..கண்ணதாசன் பாடல்களுக்கு இசை மெல்லிசை மன்னர்.  இந்தப் பாடலில் எஸ் பி பி சுசீலா குரலுடன் இணைந்து இழைந்திருக்கிறார்.

யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே
கோவை கிளி இங்கே
மன்னன் போவதெங்கே

நினைக்கும் நினைப்போ புரிகின்றது
சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது
நினைக்கும் நினைப்போ புரிகின்றது
சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது
கண்ணனின் ஆசைகள் காற்றினில் போவதோ
சொல்லடி என் பைங்கிளி

ஜொலிக்கும் உடம்பு கொதிக்கின்றது
அணைத்தும் மயக்கம் பிறக்கின்றது
ஜொலிக்கும் உடம்பு கொதிக்கின்றது
அணைத்தும் மயக்கம் பிறக்கின்றது
ராதையின் பார்வையில் போதையும் இல்லையோ
பாருங்களேன் கண்களை

பயத்தில் மனது தவிக்கின்றது
இருந்தும் விருந்தை நினைக்கின்றது
கொடுத்தால் பயமும் குறைகின்றது
எடுத்தால் சுகமும் வருகின்றது
மாலைகளானதும் நீ சொல்லும் நாடகம்
காத்திருப்பேன் மன்னவா

48 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

   நீக்கு
 2. இரண்டுமே அற்புதமான பாடலே... பலமுறை இரசித்து இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளுட்ன்

  அன்பின் வணக்கம்..

  வாழ்க நலம்
  வாழ்க தமிழ்...

  பதிலளிநீக்கு
 4. இன்றைய்
  பதிவின் பாடல்கள் இனிமையின் மறு வடிவங்கள்..

  பதிலளிநீக்கு
 5. இரண்டு பாடல்களுமே நிறையமுறை கேட்டு ரசித்த பாடல்கள். அருமையான பகிர்வு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நெல்லை..   காலையிலேயே கிருஷ்ணஜெயநதி பிசியா? இன்றா  , நாளையா, ஞாயிறா?

   நீக்கு
  2. நாளை சென்னைப் பயணம். பிறகு கும்பகோணம். மீண்டும் 26ம் தேதிதான் திரும்புவேன்.

   நீக்கு
 6. ஸ்ரீ கிருஷ்ண கானங்கள் 1975/
  77 களில் வெளி வந்திருக்கலாம்..

  இத்தொகுப்பில் - புல்லாங்குழல் கொடுத்த - பாடல் தான் சிகரம்..

  ஆயர்பாடி மாளிகை, குருவாயூருக்கு வாருங்கள் இரண்டும் தேன் கிண்ணங்கள்..

  கோதையின் திருப்பாவை - பக்திரசம்..

  மற்றவை அந்தந்த நிலைகளில்...

  ஆனால்,
  கோகுலத்துப் பசுக்கள் - இது வேதத்தின் சாரம்!..

  படிப்பில்லாத ஆட்கள் கூட
  பாதத்திலே போய் விழுந்தால்
  வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணா!..

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. சீர்காழியார் அப்போது வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் இருந்தார்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லாவிடில் அவர் குரலும் இடம்பெற்றிருக்கும் என்று சொல்ல வருகிறீர்கள், அப்படித்தானே?

   நீக்கு
 9. வேதம் தத்துவம் இங்கெல்லாம் சென்று மேய்வதற்கு முற்பட்டால் ஒன்றும் நடக்காது..

  அவனது பாத நிழலைச் சரணடைந்து விட்டால்

  அவனே பார்த்துக் கொள்வான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்... வேதம் போன்ற பலவற்றை ஆய்வு செய்து புரிந்துகொள்ள அல்லது புரிந்துகொள்ளமுடியாத நிலைமையையும் அவனே கொடுக்கிறான். அவன் பாதத்தைச் சரணமாகக் கொண்டால் அதுவே போதும்.

   நீக்கு
 10. அருமையான பாடல்கள்

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 12. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்டவை.
  இன்று மீண்டும் கேட்டேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  இன்றைய இரண்டு பாடல்கள் பகிர்வும் வழக்கம் போல் அருமை.

  முதல் பாடல் எத்தனை முறை கேட்டு ரசித்திருக்கிறேன் என்ற கணக்கேயில்லை. வாய்விட்டுப் பாடிப்பாடி பரவசமடைந்த பாடலும் கூட. கண்ணனை குழந்தையாக்கி மடியில் வைத்து தாலாட்டும் யசோதையின் மனோபாவம் நமக்குள்ளும் தானகவே வந்து அமர்ந்து விடும்.

  இரண்டாவது பாடலும் நல்ல பாடல். அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். நீங்கள் சொல்வது போல் எஸ். பி. பி யின் குரல் இந்தப்பாடலில் அமுதம்.

  இரண்டுமே கண்ணனோடு சேர்ந்தாற் போல இன்றைய தினத்திற்காக தேர்ந்தெடுத்தது சிறப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. அருமையாஅ பாடல்கள் ஸ்ரீராம். நான் ஊர்ல இருந்தப்பவே கேட்டிருக்கேனே ஆயர்பாடி மாளிகையில்...ஸ்கூல் காலேஜ் படிக்கறப்பவே கோயில்ல போடுவாங்களே...

  அதே போல புல்லாங்குழல் கொடுத்த பாட்டும் ஆயர்பாடி எலலமே தினமும் கேட்ட பாடல்கள். ரசித்த பாடல்கள்

  கீதா

  பதிலளிநீக்கு
 15. இர்ண்டாவது பாட்டும் ரொம்ப ரசித்துக் கேட்டிருக்கிறேன். படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் சிவாஜி பற்றி சொல்லப்பட்டவை.

  கீதா

  பதிலளிநீக்கு
 16. கிருஷ்

  கிருஷ்ண கானம் பாடல்கள் எல்லாமே இனிமைதான்
  பதிலளிநீக்கு
 17. “கௌரவம் திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1975 ஆம் வருடத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்!”

  இது என்ன கணக்குப் பாடம் எடுக்கிறீர்களா அல்லது அவ்விடமே கணக்கு தகறாரா?

  வைஷ்ணவி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு அனுமானத்தில் 1975 என்று எழுதிவிட்டு விவரம் தேடினால் 73 என்றிருந்தால் சும்மா சுவாரஸ்யத்துக்கு அப்படி போட்டேன். :))

   //அல்லது அவ்விடமே கணக்கு தகறாரா?//

   சந்தேகமில்லாமல் தகராறுதான்!

   நீக்கு
 18. இரண்டு பாடல்களும் இனிமையான பாடல்கள் . முதற்பாடல் குட்டிக் கண்ணனை போற்றி இதம் அளிக்கும் பாடல் .கோவில் விழாக்களில் பிரபலமாக ஒலிக்கும் மனம் உருகும்.

  பதிலளிநீக்கு
 19. //தெய்வமகன் படத்தில்.....
  டி.எஸ்.கிருஷ்ணன் அவர்களைப் பார்த்துச் செய்தாராம்.. //

  அபுரி. வரிப் போக்கில் ஏதோ வார்த்தை விட்டு விட்டது போன்ற குழறுபடி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விட்டுப்போகவில்லை என்றே நினைக்கிறேன்.  அப்போதைய இரண்டு தொழிலதிபர்களை பார்த்து அவர்கள் மேனரிஸத்தை பாரிஸ்டர் ரஜினிகாந்த் கேரக்டருக்கு கொண்டு வந்திருக்கிறார் சிவாஜி.

   நீக்கு
 20. //அந்த மந்திரத்தில் அவன் உறங்க அந்த மயக்கத்திலே இவன் உறங்க... //

  இந்த 'இவன்' யாரோ?...

  பதிலளிநீக்கு
 21. ஆயர்பாடி மாளிகையில்..

  பிரமாதமான இசை லயத்திற்கு 'இந்த பிடிச்சுக்கோ' என்கிற
  மாதிரி கண்ணதாசனின் மனமிசைந்த பாடல் இது.
  வார்த்தை எளிமையில் கவிதை லோகத்தைக் கட்டிப் போட்டவர் அவர்.

  பதிலளிநீக்கு
 22. இரண்டு பாடல்களுமே பலமுறை கேட்டு ரசித்தவை. அதிலும் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடலை எத்தனை முறைனு கணக்குத் தெரியாது. அதே போல் இந்தப் பாடலும் ஆயர்பாடி மபட்டாளிகையில் பாடலும் கௌரவம் படம் நாங்க பார்த்த கதை எல்லாம் பல முறை எழுதிட்டேன் என்பதால் இங்கே திரும்பச் சொல்லலை. படம் வெளிவந்து சில நாட்களில் அயனாவரம் சயானி திரை அரங்கில் எங்க அம்பத்தூர்ப் பொழுதுபோக்குச் சங்கத்திற்காகச் சிறப்புக்காட்சியாகக் காலை பத்து மணிக்குப் போட்டார்கள். போகவரப் பேருந்தும் ஏற்பாடு செய்திருந்தனர்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!