புதன், 17 ஆகஸ்ட், 2022

கவர்ச்சிக் கன்னி என்றால் என்ன அர்த்தம்?

 

நெல்லைத்தமிழன் :

போதை பழக்கம் என்பதை எப்படி define பண்ணுவது? சிகரெட், டாஸ்மாக் போன்றவை போதை பழக்கம் இல்லையா? 

#"போதை" என்ற சொல்லுக்கு தன் நிலை தடுமாறுதல் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். எனவே சிகரெட் கெட்ட பழக்கம்; போதைப் பழக்கம் அல்ல. 

டாஸ்மாக் பழக்கம் உள்ளவன் அவனையும் அவன் குடும்பத்தையும் மட்டுமே கெடுத்துக்கொள்கிறான். அது அவன் சாய்ஸ். ஆனால் சிகரெட் பிடிப்பவன் அப்பாவிகளின் உடல் நலத்திலும் விளையாடுகிறானே. யார் இதில் மோசமான போதைப் பழக்கம் உள்ளவன்?

# புகைப் பழக்கம் அடுத்தவரையும் பாதிக்கும் என்பது பிற்காலக் கண்டுபிடிப்பு. பொது இடங்களில் புகை பிடிப்பதை ஆங்காங்கு கட்டுப் படுத்த முயற்சிகள் எடுக்கப் படுவது ஒரு சிறு ஆறுதல்.

ஜாதியை மனதில்  வைத்து மனிதர்களிடம் பழகியிருக்கிறீர்களா?

$ மூச்சுக்கு ஒரு தடவை ஐயரே ஐயரே என்று பேசுபவர் களுடன் பழகியிருக்கிறேன்

# இல்லை.எந்த ஜாதியையும் குறித்து விமரிசனம் செய்ததும் இல்லை.  ஆனால் வியாபார நுணுக்கம் தெரிந்த ஜாதி, வீரம் செறிந்த ஜாதி என சிலர் தம் ஜாதி குறித்து பெருமை பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

அதே போல் பார்ப்பன சூழ்ச்சி என்று மட்டம் தட்டிப் பேசுவதையும் , "எல்லா ஐயரும் இப்படி இருந்தால் " என்று ' புகழ்ச்சி ' பேசுவதையும்  சகித்திருக்கிறேன்.

& ஜாதியை மனதில் வைத்து மனிதர்களிடம் பழகும் மனிதர்களுடனும் பழகியிருக்கிறேன். மற்றபடி என் மனதில் ஜாதி மத பேதம் எதுவும் கிடையாது.  .

கவர்ச்சிக் கன்னி என்றால் என்ன அர்த்தம்? தங்கள் அழகுப் படங்களை (கவர்ச்சி) வெளியிடுவதன் அர்த்தம் என்ன?

# கவர்ச்சிக் கன்னி என்றால் உங்களுக்கு பொருள் புரியாது என்பதை ஏற்க முடியாது . 

அங்க லாவண்யம் இருப்பினும் கன்னியாக இருந்தால்தான் சிறப்பு என்ற எண்ணம் ஆணாதிக்க சமுதாயத்தின் அவலம்.  பெண்ணை ஒரு போக வஸ்துவாகப் பார்க்கும் அற்ப மனோபாவம். 

கவர்ச்சிக் கன்னியர் தம் படங்களை வெளியிடுவது அவர்களது அழகை மூலதனமாகக் கொண்டு கொழிக்கும் துறையில் தாம் பயன் அடைய வேண்டும் என்பதற்காகத்தான். 

& கவர்ச்சி என்றால் attraction. கன்னி என்றால் .. 

 • கன்னிபெயர்ச்சொல்.
 1. குமரி
  (எ. கா.) கன்னிதன்னைப் புணர்ந்தாலும் (சிலப். 7, மன்னுமாலை.)
 2. இளமை
  (எ. கா.) கன்னிப் புன்னை (திருக்கோ. 177)
 3. புதுமை
  (எ. கா.) கன்னிநீலக்கட் கன்னி (சீவக. 900)
 4. முதன்முதலான நிகழ்ச்சிகன்னிப்போர்
 5. அழிவின்மை
  (எ. கா.) கன்னிமா மதில்சூழ் கருவூர் (திவ். பெரியதி. 2, 9, 7)
 6. பெண் (சூடாமணி நிகண்டு)
 7. தவப் பெண் (சூடாமணி நிகண்டு)
 8. என்றும் இளமையழியாத பெண்,சத்தகன்னியர் (பிங்.)
 9. துர்க்கை
  (எ. கா.) கன்னிசெங்கோட்டம் (கல்லா. 58)
 10. பார்வதி (பிங்.)
 11. குமரியாறு
  (எ. கா.) கன்னியழிந்தனள் கங்கை திறம் பினள் (தமிழ்நா. 81).
 12. கன்னியாராசி (பிங்.)
 13. புரட்டாசி மாதம்
 14. காண்க...அத்தம் நட்சத்திரம் (திவா.)
 15. தசநாடியிலொன்று (சிலப். 3, 26, உரை.)
 16. காண்க...கற்றாழை (சூடாமணி நிகண்டு)
 17. காண்க...காக்கணம் (திவா.)     

மேலே காணப்படும் sweet 17 எது உங்களைக் கவர்கிறதோ அதைப் பொருத்து அர்த்தம் எடுத்துக்கொள்ளவும்! 

பதின்ம வயது வரை இல்லாத ஜாதி மத எண்ணங்கள் பிறகு வருவதேன்?

# " நம்ம ஜாதியிலேயே பெண்/பிள்ளை "  என்று தேடும் பெற்றோர் மனப்பான்மை பரவலாகக் காணப்படுகிறது. இந்த ஜாதி அபிமானம் என்பது ஓரளவு பாரம்பரியமாக இரத்தத்தில் இருந்து வரும் போலும்.  ஆனால் உயர்வு தாழ்வு , இதர ஜாதி மேல் வெறுப்பு போன்றவை மனிதரின் அற்பத்தனத்தினால் வருபவை.

& நான் படித்த உயர்நிலைப் பள்ளியில், கழக ஆட்சி அமைந்தவுடன் (1967)  ஆசிரியர் ஒரு படிவம் கொடுத்து அதில் ஜாதி மத விவரங்களைப் பதிவு செய்யச் சொன்னார். அப்போது அதில் உள்ள பெரும்பாலான வார்த்தைகளுக்கு எனக்குப் பொருள் தெரியவில்லை ( உதாரணம் : scheduled caste, backward community etc ) அந்தப் படிவத்தை அப்பாதான் பூர்த்தி செய்து கொடுத்தார். ஜாதி மத எண்ணங்கள்  பதின்ம வயதில் புகுந்ததற்கு அரசியல்வாதிகளும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு சக மாணவர்களிடமிருந்து எவ்வளவோ நையாண்டிகள், குத்தல் பேச்சுகளைக் கேட்டு அலுத்துவிட்டது. 

பொதுவெளியில் நல்ல பெயர் இருக்கவேண்டும் என்பதற்காக, உள்ளொன்று வைத்து புறமொன்றில் நல்லவர்கள் போல கருத்துச் சொல்பவர்களைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?

# அவர்களை அடையாளம் காண்பது எளிதல்ல. அது பற்றித் தெரிய வரும் போது அவர்கள் மேல் சினம் / வெறுப்பு தவிர வேறு உணர்வுக்கு வழியில்லை.

கீதா சாம்பசிவம் : 

நாம் வருஷக்கணக்காக நட்பில் இருப்பவங்களோடு இன்னொரு சிநேகிதி/சிநேகிதர் நட்பு வைச்சுக்கப் பிரியப்படுகிறார் என்பதால் நம் இனிய சிநேகிதத்தோடு அவங்களை அறிமுகம் செய்து வைத்தால் நம் பழைய சிநேகிதியை மெல்ல மெல்ல நம்முடன் தொடர்பு இல்லாமல் சிலர் செய்துடறாங்களே! அது எப்படி? எனக்கு இன்னிவரைக்கும் இது ஆச்சரியமா இருக்கும். வருஷக்கணக்காப் பேசி நாம் சிநேகிதம் செய்து கொண்டிருப்போம். புதுசாக வரும் நபர் நம்முடைய வருஷக்கணக்கான நட்பை உடைப்பது எப்படி?

# நம் சிநேகிதர் நம்மை நமது நண்பரிடமிருந்து பிரித்து வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கமாட்டார்.  இந்த மாதிரி நடக்குமானால் சம்பந்தப்பட்ட யாரோ ஒருவரது  இயல்பும் பேச்சும் மனப்போக்கும்தான் காரணமாக இருக்கும்.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

பிரதமர் கேட்டுக்கொண்டபடி வீட்டில் கொடியேற்றினீர்களா?

# இல்லை.  என் வயதும் சூழலும் காரணம். கொடி ஏற்றுவது ஒரு அடையாள நடவடிக்கை.  நாட்டின் மேல் பற்றுக் கொண்டிருப்பதைத்தெரிவிக்கும் செயல். எனக்கு தேச பக்தி நிறையவே உண்டு.

& கொடி ஏற்ற விருப்பம் இருந்தது. கொடி எங்கள் பகுதியில் கிடைக்கவில்லை. 

வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். 


= = = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்க :
= = = =


56 கருத்துகள்:

 1. ஜாதியைக் குறித்த அலசல் பதில் நன்று ஜி.

  பதிலளிநீக்கு
 2. புத்தொளியில் புதன்..

  அன்பின் வணக்க ங்களுடன்..

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
 3. பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த கலா ரூப மயிலே..

  --- தாயுமானவர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கன்னி நன் மா மதில் புடைசூழ்* கணபுரத்து என் காகுத்தன்-
   தன் அடிமேல்* தாலேலோ என்று உரைத்த* தமிழ்மாலை*
   கொல் நவிலும் வேல் வலவன்* குடைக் குலசேகரன் சொன்ன*
   பன்னிய நூல் பத்தும் வல்லார்* பாங்காய பத்தர்களே (2)

   கன்னி நல் மா மதிள் புடை சூழ் கணபுரத்து - சாச்வதமான சிறந்த அழகிய மதிள்கள் நாற்புறமும் சூழப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே;

   7ம் நூற்றாண்டு, குலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள் திருமொழி

   நீக்கு
  2. ஆஹா ! கன்னித்தமிழே நீ வாழி!

   நீக்கு
 4. போதை என்பது addiction என்ற பொருளில் கேள்வி கேட்கப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன். 41 வருட புகைப்பழக்கம் இருந்து புகைப்பதை நிறுத்திய அனுபவம் உடையவன் என்ற முறையில் புகைப்பது ஒரு அடிமைப் பழக்கமே என்று கூறுகிறேன்.
  மற்றபடி மற்றவர்களின் உடல் நலத்தைப் பாதிப்பது என்பது மிகைப்படுத்தல். விறகு அடுப்பு, ஊதுவத்தி, சூடம் கொளுத்துதல், ஏன், விளக்குகள் போலும் கார்பன் மோனோக்சைடு உண்டாக்குகின்றன, இவையும் தீங்குகளே!

  ஜாதி, மதம், அரசியல் பற்றிய சில சென்சிடிவ் கேள்விகளை தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது. 

  கவர்ச்சி கன்னி என்பது சிலேடை. நல்ல கன்னிகள் கவர்ச்சி காட்டுவதில்லை, கவர்ச்சி காட்டுபவர்கள் கன்னிகள் இல்லை. இங்கு "கன்னி" என்பது வலை என்ற பொருளிலும் வரும். கவர்ச்சி கன்னி : கவர்ச்சி வலை. மாட்டிக் கொள்ளாதீர்கள்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //புகைப்பது ஒரு அடிமைப் பழக்கமே// - எல்லாப் பழக்கங்களுமே அடிமைப் பழக்கங்கள்தாம். இது நல்லது இது கெடுதல் இல்லை என்பது நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானம்தான். ஒருவன் குடிப்பதால், நமக்கு என்ன தீமை ஏற்படுகிறது? இதுவும் 'முன்கோபம்' போன்ற ஒரு குணம்தானே.. ஒருவன் போதைப் பொருட்கள் வைத்திருப்பதால் அவன் அதற்கு அடிமையே தவிர, அதனால் பிறருக்கு என்ன நேரப்போகிறது?

   நீக்கு
  2. நெல்லை போதை யினால் பிறருக்கு என்பதில் அந்த பிறருக்கு என்பது அவர்களது குடும்ப உறுப்பினர்களைக் கொள்ளலாமே. அவர்களுக்கு அதனால் எத்தனை கஷ்டங்கள்?

   இதில் முன் கோபமும் அடக்கம் - கோபமும் அடக்கம்!!!!!!!

   கீதா

   நீக்கு
  3. நாங்கள்லாம் கோபம் உள்ள இடத்தில்தான் குசம் இருக்கும் என்று பெருமையாச் சொல்லிக்கறோம்.. இதுல கீர க்கு கோபம் கெட்ட குணமாமே

   நீக்கு
  4. கருத்துரைகளுக்கு நன்றி.

   நீக்கு
 5. கண்ணி:

  1) இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் சரம்.

  2) பூச்சரத்தைப் போல் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளும் கண்ணி எனப்படும்.

  3) (குறிப்பிட்ட குணம் பொருந்திய) கண்களை உடைய பெண்.

  4) வலை

  5) வலையில்
  உள்ள ஒரு கண்

  6) வளையம்

  பதிலளிநீக்கு
 6. @ ஜெயக்குமார்

  // நல்ல கன்னியர் கவர்ச்சி காட்டுவதில்லை, கவர்ச்சி காட்டுபவர்கள் கன்னியர் இல்லை.. //

  அருமை..

  பதிலளிநீக்கு
 7. //கவர்ச்சிக் கன்னி//

  தினத்தந்தியின் உருவாக்கம்..

  கவர்ச்சிப்படம்..

  இன்ன பிற -
  சதக்.. சதக்..
  குபுக்.. குபுக்..

  பதிலளிநீக்கு
 8. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் சொதப்புவது இந்த கேஜிஜி சார் வழக்கமாக ஆகிவிட்டது. ஒரு 'கவர்ச்சிப் படம்' கூட போடவில்லையே... ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 9. முன்னெல்லாம் சுதந்திர, குடியரசு நாள் கொடியேற்றத்தின்போது மிட்டாய் கிடைக்கும் என்று ஆவலாக இருக்கும். அந்த ஆவல் இப்போது இல்லை (கொடியேற்றும் வைபவத்தில் பங்கேற்பது) என்று தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே தளத்தில் கருமமே கண்ணாக கத்தரிக்காய் சாதம்!..

   நீக்கு
  2. :)))) நமக்கெல்லாம் வயசாயிடுச்சு !!

   நீக்கு
  3. //இங்கே தளத்தில் கருமமே கண்ணாக கத்தரிக்காய் சாதம்!.ஶ்ரீராம் அதைப் பதினைந்தாம் தேதி போடுவதாகச் சொல்லி இருப்பதை இப்போத் தான் கவனிச்சேன். :) அதனால் என்ன? சுதந்திரத்திருநாள் அன்னிக்குக் கத்திரிக்காய் சாப்பிடக் கூடாதா? மதுரையில் மார்கழி மாத அஷ்டமிச் சப்பரத்தில் கத்திரிக்காய் தான் பிரதானம். கோயிலில் பண்ணும் கத்திரிக்காய் சாதம் செய்முறை கூட விரைவில் போடலாம்னு எண்ணம். :)

   நீக்கு
 10. சிகரெட் போதை என்று சொல்வதற்கு இல்லை ஆனால் அதற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். ஒரு சிலருக்கு விடுபடும் போது கை நடுக்கம் வரும். அப்படிப் பார்த்தால் காஃபிக்கு அடிமையானவர்களுக்கும் குடிக்கவில்லை என்றால் கை நடுக்கம் அல்லது ஏதோ போன்று வரும் என்றும் அறிந்ததுண்டு. நல்லகாலம் காஃபி குடிக்கும் எனக்கு அப்படி இல்லை..இதுவரை

  போதை என்பதற்கு ஆசிரியர் கூறியிருக்கும் பதிலை வழி மொழிகிறேன்.

  அதே சிகரெட்டிலேயே போதை வஸ்துவை வைச்சுப் புகைத்தால் தன் நிலை மறக்க நேரிடும்.

  சிகரெட்டினால் அப்புகை மற்றவரை பாதிக்கும் என்பது உண்மைதான். அதே சமயம் வேறு சில வற்றையும் மனதில் கொள்ள வேண்டும். சிகரெட்டிலிருந்து புகை வருது...ஆனால் புகை வராமல் எரியும் பலவும் கெடுதலே. அது போல வெளியில் குப்பைகளை எரித்தல், அடுப்பு எரித்தல் புகையும் கெடுதலே.

  சிலருக்கு ஹோமப் புகையும் கூட எதிர்வினை ஆற்றும்

  கீதா

  பதிலளிநீக்கு
 11. குடிப்பதில் கூட அளவாகக் குடிப்பவர்களும் இருக்கிறார்களே. அவர்கள் குடித்திருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல்....ஆனால் அதே குடி ஓவராகும் போது தன்நிலை மறந்து ரோட்டில் வீழ்ந்துகிடப்பதுதான் அதிகம் நடக்கிறது...இது டாஸ்மாக் குடியர்களுக்கு மட்டுமில்லை மிகவும் உயர்தர குடிமக்களுக்கும்தான். குடித்துவிட்டு கார் ஓட்ட முடியாமல் விபத்துகள் அல்லது வீழ்ந்து கிடத்தல் அல்லது வேறு யாரேனும் அவரைக் கொண்டு விடுதல் என்று,

  ஆனால் ஒன்று, புகைப்பிடித்தல், குடித்தல் உடல்நலத்திற்குக் கேடுதான் ஆனால், அப்பழக்கம் உள்ளவர்கள் நெடுங்காலம் எந்தவித உடல் பிரச்சனைகளும் இல்லாமல் வாழ்ந்தவர்களும் வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்தான்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புகைப் பழக்கம் இல்லாதிருந்தால் இன்னும் அதிக வருடங்கள் வாழ்வார்கள்.

   நீக்கு
 12. நாம் கவர்ச்சி என்றால் உடலைக் காட்டுவதைச் சொல்கிறோம். கவர்ச்சி என்பதன் பொருளே மாறிவிடுகிறது. மாறிவிட்டது!

  மனதைக் கவர்வதுதானே கவர்ச்சி!? அழகாக எது இருந்தாலும் கவர்ச்சிதானே...இதில் என்ன கவர்ச்சிக் கன்னி.? அழகான பெண்கள் மனதைக் கவர்வது ஒன்றும் தப்பில்லையே! கவர்வதற்கு உடலைக் காட்டி ஆடை அணியவேண்டும் என்றில்லை. ஹூம் சினிமாவும் ஊடகங்களும் பல நல்ல தமிழ்ச் சொற்களின் பொருளையே மாற்றிவிட்டன!!!!!!!!!! அப்படித்தான் இதுவும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களோட பின்னூட்டத்தைப் படித்து கேஜிஜி சார் கெட்டுப்பொயிடப்போறார். கவர்ச்சிப் படம் என்ற தலைப்பில், மலை, காடு, ஆறுகள் படத்தை வெளியிட்டுடப்போறார்.

   நீக்கு
  2. யோசனைக்கு நன்றி. வரும் வாரங்களில் பின்பற்றப் பார்க்கிறேன்!

   நீக்கு
 13. மனதைக் கவர்கிறது என்று பூ, மலை, இயற்கையைச் சொல்வதில்லையா?!!!! படங்களை கவர்ச்சிகரமாக இருக்குன்னு சொல்வதில்லையா!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகாக இருக்குன்னு சொல்வாங்க. கண்ணைக் கவர்ந்ததும்பாங்க. கவர்ச்சியா இருக்கு என்றால் அதில் தப்பர்த்தம்தான் பொதிந்திருக்கிறது.

   நீக்கு
  2. என்னவோ சொல்றீங்க. கவர்ச்சிப் படம் என்றாலே தினத் தந்தியும், ராணி இதழும்தான் ஞாபகத்திற்கு வருகின்றன!

   நீக்கு
 14. படம் 1 - ஆழம் பார்த்துக் காலை விடணுமாக்கும்!! (இதற்குப் பல அர்த்தங்கள் உண்டு)

  படம் 2 - இளம் கன்று பயமறியாது

  படம் 3 - சூடு கண்ட பூனை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைக்கு நன்றி. (சூடு காணப்போகும் பூனை! கண்டிருந்தால் உடனே ஓடியிருக்கும்! )

   நீக்கு
 15. //பூவிலோன் புதல்வன் மைந்தன்
  புதல்வி; முப்புரங்கள் செற்ற
  சே-வலோன் துணைவன் ஆன செங்கையோன்
  தங்கை; திக்கின்
  மா எலாம் தொலைத்து, வெள்ளிமலை
  எடுத்து, உலகம் மூன்றும்
  காவலோன் பின்னை; காமவல்லி ஆம்
  கன்னி' என்றாள்//
  இங்கு கன்னியில் ஒரு அழுத்தம் தெரிகிறது பாருங்கள்,அதுதான் முக்கியம்!

  பதிலளிநீக்கு
 16. படிச்சேன். என்னோட கேள்வி அநேகமாப் புரியலை/அல்லது மேலோட்டமாகப் பார்த்துட்டு பதில் வந்திருக்கணும். இது கொஞ்சம் கஷ்டமான விஷயம். இரண்டு பேர் நெருங்கிப் பழகினால் அவர்களில் யாரைப் பிடிக்கலையோ அவங்களைக் கஷ்டப்படுத்தவென அவங்களோட நட்பாலேயே விலக்கி வைப்பதைத் தான் கேட்டேன். மித்திர துரோகி என்று சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போ குழம்பிப் போய்ட்டோம்.

   நீக்கு
  2. புது வாசகரை கேஜிஜி சார் வரவேற்கலையே. ரொம்ப வருஷம் கழித்து வந்திருப்பதுபோல் ஒரு ஃபீலிங்

   நீக்கு
  3. நெல்லை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இரண்டு நாள் வரலைனா புது வாசகரா?

   நீக்கு
  4. கௌதமன் சார், எப்படிப் புரிய வைக்கிறதுனு தெரியலை. உதாரணமாக இப்போ ஶ்ரீராமோட நான் நெருங்கிப் பழகிட்டு இருக்கேன். அதைப் பார்க்கும்/கவனிக்கும் என் இன்னொரு நண்பருக்கு அவரும் ஶ்ரீராமோட நெருக்கமா இருக்கணும்னு ஆசை. என்னோட இன்னொரு நண்பர்/நண்பி நெருங்கிப் பழகணும்னு ஆசையுடன் என்னிடம் ஶ்ரீராமை அறிமுகம் செய்து வைக்கச் சொல்றார். நானும் அறிமுகம் செய்து வைக்கிறேன். நாளாவட்டத்தில் ஶ்ரீராமுக்கும் எனக்குமான தொடர்பை அடியோடு நிற்கும்படி அந்த நண்பர்/நண்பி செய்து விடுகிறார்/ஶ்ரீராம் என்னுடைய நட்பிலிருந்து மெல்ல மெல்ல விலகி விடுவார். இது தான் ஏன் என்று கேட்டேன்.எங்க இருவரையும் பிரிப்பதில் அந்த 3 ஆம் நபருக்கு என்ன சந்தோஷம்? அடுத்த வாரம் கூடப் பதில் சொல்லுங்க. அவசரமே இல்லை.

   நீக்கு
  5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   நீக்கு
 17. அட? இத்தனை அலசலா கன்னிக்கு? "கன்னி ஐயப்பமார்" உண்டே! முதல் முறை போறவங்க கன்னி ஐயப்பன் என அழைக்கப்படுவாரே! எல்லோரும் அதை மறந்துட்டீங்க!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!