ஞாயிறு, 25 டிசம்பர், 2022

நான் தரிசனம் செய்த கோவில்கள் : நெல்லைத்தமிழன் : திருமெய்யம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் 2/2

 

(004) திருமெய்யம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் பகுதி 2

கோவிலின் முன்மண்டபச் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டு வந்தோம். தொடர்வோம்.











இந்தக் கோவிலைத் தொட்டடுத்து, சத்யகிரீஸ்வரர் கோவில் என்ற சிவன் கோவில் உள்ளது. அது இந்தக் கோவிலுக்கும் முன்பு கட்டப்பட்டதாம்.  ஒரு யாத்திரைக் குழுவோடு சென்றதால் (இரண்டு முறையும்), இந்த சிவன் கோவிலுக்குச் செல்ல இயலவில்லை. அங்கேயும் அழகிய சிற்பங்கள் இருக்கவேண்டும்.  

குடவரைக் கோயிலைக் கட்டவேண்டும் என்று நினைத்தே பெரிது. அதன் அருகில் திருக்குளம் என்றெல்லாம் திட்டமிட்டுக் கட்டியிருக்கிறார்கள். இந்தக் கோட்டைக் கோயிலுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது போய்வாருங்கள். நம் வரலாற்றுச் சின்னங்களை நினைத்துப் பெருமிதப்படுங்கள்.

அடுத்தமுறை இன்னொரு கோவில் சிற்பங்களோடு சந்திக்கலாம்.

78 கருத்துகள்:

  1. திருமயம் சத்யமூர்த்தி பெருமாள் கோயிலின்
    தரிசனத்தின் இரண்டாம் பகுதி இது. சிற்பங்களின்
    அழகும் நேர்த்தியும் பிரதானப்படுத்தி பகிர்ந்து கொண்ட பகுதி.
    நிதானமாக ஒவ்வொரு சிற்பத்தையும் பெரிது படுத்திப் பார்த்து மகிழ்வேன். இந்த தரிசன பேற்றிற்கு வழி நடத்தி
    விவரித்த நெல்லைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்குதானே எங்கோ ஊமைத்துரை வந்து ஒளிந்துகொண்ட இடம்?

      நீக்கு
    2. நன்றி ஜீவி சார். இது முயற்சியெடுத்துச் செல்லவேண்டிய பகுதியில் அமைந்த கோயில். அடுத்த முறை, சிவாலயத்தின் எழிலையும் காணவேண்டும் என நினைக்கிறேன். வாய்ப்பு வருமா என்று தெரியவில்லை

      நீக்கு
    3. நிச்சயம் வரும் நெல்லை. டிவியில் மார்கழி உற்சவ நிகழ்ச்சியாய் மதுசூதன் -- ரவிகிரண் விவரிப்பில் முத்துசாமி தீஷிதரின்
      கீர்த்தனை ஒன்று -- ஐந்து சிவ ஸ்தல ஷேத்திராடனம் பற்றியது --
      கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த அற்புத ஒத்திசைவில் (வாய்ப்பு வருமா என்று நீங்கள் கேட்டதற்கும்) நிச்சயம் வரும் என்று சொல்ல வைத்திருக்கிறது.
      அது படியே வரும்.
      தரிசித்து வாருங்கள்.

      நீக்கு
    4. வைணவனான எனக்கு நிறைய சிவத்தலங்களின் தரிசனம் அமைவது முன்வினைப் பயன்தான். தங்கள் வாக்கு பலிக்கட்டும்

      நீக்கு
    5. ஊமைத்துரை ஒளிந்து கொண்ட இடம் அது காளையார் கோயில் இல்லையோ?

      நீக்கு
  2. அழகான படங்கள். இந்தத் தடவை சில நிஜ மனிதர்கள் படத்தில் வந்திருப்பதை தவிர்க்க முடியவில்லை என்று தோன்றுகிறது. மூர்த்தியும் முன்பே கூறியது போன்று பெரிது தான். 

    வெளியில் வெயிலில் ஒதுக்கப்பட்ட சிலை ஆதி சங்கரர் போன்று தோன்றுகிறது. பாவம் பலி பீடங்களைக் காக்க வைத்து விட்டார்கள். 

    தொடர் சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு குழுவோனு செல்லும்போது, நான் குடு குடுவென முதலில் பேருந்தைவிட்டுக் கீழிறங்கி படங்கள் எடுப்பேன். திருமெய்யம் கோவில் 4:30க்குத் திறந்தகோது காத்திருந்த நாங்கள் ஒன்றாகத் தரிசனத்திற்குச் சென்றோம். அதன் பிறகு மண்டபச் சிற்பங்களைப் படமெடுத்ததில் ஒரு சிலவற்றில் மற்றவர்கள் இருப்பதைத் தவிர்க்க இயலவில்லை

      நீக்கு
    2. ஆதி சங்கரர் என ஸ்மார்த்தர்களும் ராமானுஜர் என வைணவர்களும் ஜைனப் பெரியவர் என ஜைனர்களும், புத்தமதத்துப் பெரியவர் என பௌத்தர்களும் சொல்லலாம். சொல்லிக்கலாம்.

      நீக்கு
  3. அனைவருக்கும் அன்பின்
    வணக்கங்கள்..

    நலமே வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. சனைச்சரனின் தாக்கம்
    குறையட்டும்..

    அகத்திலும் புறத்திலும்
    தளத்திலும் உளத்திலும்
    பெருமாளின் பேரருள் நிறையட்டும்..

    ஓம் ஹரி ஓம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சனைச்சரன் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் கச்சிதமாகச் செய்துவிடுவார்.

      சமீபத்தில் இருவர் (திருநள்ளாறு மற்றும் ஒரு ஜோசியர்) இதனைப்பற்றி விளக்கினார்கள். சனி ஆட்சி செய்யும் காலத்தில் நம் கர்ம வினைகள் தொலையும்படியாக அதற்குரிய கஷ்டங்களைக் கொடுப்பார். இதனை நாம் பாசிடிங் ஆக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று.

      நான் சொன்னேன். மலையில் இருந்தவனை பாதாளத்தில் தள்ளிவிட்டு கஷ்டப்படும்படியாக கர்ம வினைகள் அமைந்திருக்குமா என்று. அதற்கு அவர், உயிரை எடுப்பதோ, இன்னும் பெரிய வினைகளைக் கொடுக்கவோ இல்லையே என்றுதான் ஆறுதல் பட்டுக்கொள்ளணும் என்றார்.

      நீக்கு
    2. ஹாஹாஹா அப்படினாக்க எங்க வீட்டுல எப்பவுமே சனி பெர்மனெண்டா இருக்கார்னு அர்த்தமா?!!!!!!!!!!!!!!!!!!!

      பாவங்க சனிஸ்வரர். இடித்துரைப்பவன் நண்பன் என்று சொல்றோமே அப்படி நமக்கு இடித்துரைக்கிறார் நண்பர் சனீஸ்வரன் என்று பார்க்கலாமே!!!

      கீதா

      நீக்கு
    3. சனைச்சரன் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் கச்சிதமாகச் செய்துவிடுவார்.//

      ஹாஹாஹா நெல்லை, ரசித்தேன் இந்த வரியை. அப்படினா மத்தவங்க ஒழுங்கா செய்ய மாட்டேன்றாங்கன்னு பொருளோ?!! லாஜிக்கல்!

      கீதா

      நீக்கு
    4. ஓ..  சனீஸ்வரன்தான் சனைச்சரனா?  இப்போதெல்லாம் புரிந்து கொள்வது சற்று தாமதமாகிறது!.

      //சனி ஆட்சி செய்யும் காலத்தில் நம் கர்ம வினைகள் தொலையும்படியாக அதற்குரிய கஷ்டங்களைக் கொடுப்பார்.//

      உண்மைதான்.

      நீக்கு
    5. நாம கஷ்டப்பட ஆரம்பித்தால்தான் இறைவன் நினைவும், அவனது அருளை யாசிக்கணும் என்பதும் வருகிறது, புரிகிறது. இருந்தாலும் மலையுச்சியிலிருந்து பள்ளத்தில் விழும்போதுதான் சனைச்சரனின் பாதிப்பு புரிகிறது.

      //மத்தவங்க ஒழுங்கா// - ஹாஹாஹா. சுக்கிர தசைம்பாங்க. நாம் நினைக்கும் அளவு செல்வம் வராது. சனிதசைம்பாங்க. கச்சிதமா நம் காலை வாரி, பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுடுவார்.

      நீக்கு
    6. //ஓ.. சனீஸ்வரன்தான் சனைச்சரனா? இப்போதெல்லாம் புரிந்து கொள்வது சற்று தாமதமாகிறது!.// சனைச்சரன் தான் சரியான உச்சரிப்பு. நம் மக்கள் அனைவருமாகச் சேர்ந்து கொண்டு அவரை ஈஸ்வர பதவிக்கு உயர்த்தி விட்டார்கள்.

      நீக்கு
    7. நாம கஷ்டப்பட ஆரம்பித்தால்தான் இறைவன் நினைவும், அவனது அருளை யாசிக்கணும் என்பதும் வருகிறது, புரிகிறது.//

      ம்ம்ம்...ஆனா என் மன நிலை அப்படியானது இல்லை நெல்லை....எந்த நிலையிலும் மாபெரும் சக்தியை துதிப்பதுண்டு. ஒரே போன்றுதான். கஷ்டம் வரும் போது ஸ்பெஷலா எல்லாம் இல்லை. (எப்பவுமே அது தொடர்கதைதானே!!!!!!!) எப்போதும் நன்றி உரைப்பதுண்டு. மற்றபடி வேண்டுதல்கள் வைத்துக் கொள்ளும் பழக்கம் இல்லை. பூஜைகள் செய்யும் பழக்கமும் இல்லை. . அர்ச்சனை கூடச் செய்யும் பழக்கம் இல்லை. . அவ்வளவே. நோ ஜோஸ்யம். அப்பக்கம் செல்லும் பழக்கமே இல்லை. ஒன்லி சரண்டர். நம்பிக்கை....

      கீதா

      நீக்கு
    8. //மத்தவங்க ஒழுங்கா// - ஹாஹாஹா. சுக்கிர தசைம்பாங்க. நாம் நினைக்கும் அளவு செல்வம் வராது. சனிதசைம்பாங்க. கச்சிதமா நம் காலை வாரி, பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுடுவார்.//

      ஹாஹாஹாஹா சிரிச்சுட்டேன் நெல்லை. என் தங்கை எனக்கு நேரெதிர். 'உனக்கு நல்ல காலம் டி, இனி, சுக்ரன் பார்வைடி என்பாள்....நான் சிரித்துவிடுவேன்...இதோ இப்போது நீங்கள் சொல்லியிருப்பது போல்...

      கீதா

      நீக்கு
  5. எப்படி!..

    பெருமாளைப் படம் எடுக்க அனுமதி உண்டா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பெரிய சப்ஜெக்ட். அலைபேசி, புகைப்படக் கருவிகள் எல்லோர் கையிலும் தவழ்வதற்கு முன்பு, பரமாச்சார்யாரின் சிபாரிசின் பேரில், இரவு விளக்கு வெளிச்சத்தில், நியமங்களோடு இருந்த சில்கிக்கு ஓவியமாக மூலவரை வரைய அனுமதி தரப்பட்டது. (சில கோயில்களில்)

      பிற்காலத்தில் அனைவர் கையிலும் அலைபேசி, குறைந்த அளவு பட்டாச்சார்யர்கள்/பணியாளர்கள் கோவில்களில் உள்ளதால் கட்டுப்படுத்துவது கடினம். பார்த்தால் சப்தம் போட்டுத் தடை செய்வர். ஒரு சில எஓயில்களில் அங்கு உள்ளவர்களே படத்தை எடுத்து வாட்சப்பில் பெஇர்வது உண்டு (வெகு அபூர்வம்). அப்படி ஒப்பிலியப்பன் போன்ற சில சன்னதிகளின் மூலவர் படம் உலா வந்திருக்கிறது. திருவரங்கம் போன்ற கோவில்களில் இது சாத்தியமில்லை (மூலவர் வாயில் மிக்க் குறுகியது)

      பொதுவாக நான் கண்டது, துவாரகாலகர்களைத் தாண்டி எதையும் படமெடுக்கக் கூடாது. மிகச் சமீபத்தில் கோயில்களில் அலைபேசிகள் அனுமதி கிடையாது என்று படித்தேன். அதற்குக் காரணம், படங்கள் உலா வந்தால் சிதைந்தது, காணாமல் போகின்றவற்றை உடனுக்குடன் கண்டுபிடித்துவிடுவார்கள், வழுங்கீனங்கள் பட்டவர்த்தனமாகிவிடும் என்பதனால் இருக்கலாம்.

      நீக்கு
    2. புதன் கேள்வியாக, பெருமாளைப் படமெடுக்கலாமா என்ற கேள்விக்குப் பதில் சொல்லட்டும்.

      துவாரகாலகர்களைத் தாண்டி உற்சவர் வந்துவிட்டால் உற்சவரைப் படமெடுக்கத் தடையில்லை.

      நீக்கு
    3. படம் எடுப்பது தவறுதான்.  எனினும் பலமுறை சென்று வந்து பழக்கம் இருந்தால் அவர்களுக்கு நம் முகம் பரிச்சயமாகி இருக்கும்.  நமக்கும் எடுக்கும் எல்லாம் தெரியும்.

      நீக்கு
  6. எழுதியவன் ஏட்டைக் கெடுக்கவும் படித்தவன் பாட்டைக் கெடுக்கவுமாகிய - இவ்வுலகில்,

    மெய்யநாதன் மெய்யான
    சந்தோஷத்தை அருளட்டும்..

    ஓம் ஹரி ஓம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை... எழுதியவன் ஏட்டைக் கெடுப்பான். படித்தவன் பாட்டைக் கெடுப்பான். அப்படிப்பட்ட உலகம்தான் இது.

      நீக்கு
    2. உண்மையில் இது மாதிரி மொழிகள் எதைக் குறிக்கின்றன என்பதில் எனக்கு சந்தேகம் வரும்.  ஜட்ஜ் தீர்ப்பு சொன்னாராம்.  Hang him.  Not leave him.  எழுதியவர் புள்ளியை மாற்றி வைத்து விட்டாராம்.  Hang him not.  Leave him

      அதேபோலத்தான் இன்னொரு உதாரணம்!

      God is nowhere.

      God is now here.

      நீக்கு
    3. //Hang him not. Leave him// - இது அந்தக் குற்றவாளியின் முன்வினைப் பயன் என்றுதான் நான் நினைக்கிறேன். நேற்று எதேச்சையாக கடுகு சாரின் தளத்தில் ஒரு பதிவைப் படித்தேன். அதில், இரு கால்களும் இழந்து, ஒரு கையை இழந்து, முகத்தில் கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாத ஒரு போர் வீரனை, மருத்துவமனையில் அமெரிக்க சுகாதாரத் துறைச் செயலர் பார்க்கிறார். (அவர் போரில் காயமடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொல்லுவார்). சக்கர நாற்காலியில் அவனைத் தள்ளிக்கொண்டு வருகிறாள் ஒரு நர்ஸ். செயலருக்குத் தெரியும் இந்த வீரன் இறந்துவிடுவான் என்று. பிறகு சில மாதங்கள் (ஒரு வருடம்) கழித்து அந்த மருத்துவமனைக்கு வந்த செயலர், ஆர்வ மிகுதியால், அந்த காயம்பட்ட வீரன் இறந்துவிட்டானா என்று கேட்க, அங்க இருந்தவங்க, அந்த நர்ஸையே அந்த வீரன் திருமணம் செய்துகொண்டுவிட்டான் என்கிறார்கள். சில வருடங்களில், பல்கலைக்கழகம் ஒன்று, இவரை அழைத்து, நாங்கள் ஒருவருக்கு டாக்டரேட் பட்டம் வழங்குவதற்காக (அதற்கு அந்தப் பட்டம் பெறுபவர் படித்து, உழைத்து, ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்து, அவற்றை நிபுணர் குழு ஏற்றுக்கொண்டு....என்று பல ஸ்டெப்ஸ் உண்டு. நம்மூர்மாதிரி அல்ல. சாராய வியாபாரிக்கு டாக்டர் பட்டம் வழங்கும் பல்கலைக்கழக வியாபாரிகள் போன்றில்லை) விழா நடத்துகிறோம், நீங்கள் வரவேண்டும் என்கின்றனர். யார் அந்தச் சாதனையைச் செய்தவர் என்று பார்த்தால் அதே காயம்பட்ட வீரன்.

      அதனால் யாருக்கு என்ன மாதிரியான எதிர்காலம் இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது.

      நீக்கு
  7. காரியின் நாள் களங்கப்பட்டுப் போனதற்கு
    படங்களால் சிறப்புற்றது
    பகலவனின் நாள்!..

    வாழ்க.. வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகாலையிலேயே இணையத்துக்கு வந்து தளத்தில் உள்ள பதிவைப் படிப்பதால், நல்லன அல்லாதன கண்ணில் பட்டால், அந்த நாளே களங்கமுற்றுவிட்டதேன்னு நினைக்கிறார் போலத் தோன்றுகிறது.

      நீக்கு
  8. @ நெல்லை அவர்களுக்கு

    // சனைச்சரன் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் கச்சிதமாகச் செய்து விடுவார்.. //

    என்று தொடங்குகின்ற விளக்கமானது -

    எனது இன்றைய உடல் நிலைக்கும் மனதின் பதற்றங்களுக்கும் மிகச் சரியான விளக்கமாக இருக்கின்றது..

    இது நான் அறிந்தது தான் என்றாலும் இதையே மற்றவர் வாயிலாகக் கேட்கும் போது தான் மனதில் பதிகின்றது..

    கஷ்டங்கள் கர்மாவினைக் குறைக்கின்றன..

    சில தினங்களுக்கு முன் வேளுக்குடி ஸ்ரீ ஸ்வாமிகளின் விரிவுரையில் கேட்டேன்...

    மீண்டும் ஒருமுறை நல்லுரை வழங்கிய நெல்லை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.. வணக்கம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 7 1/2 நாட்டுச் சனி என்னைவிட்டு நீங்க இன்னும் 6-8 மாதங்கள் உள்ளன. பார்க்கலாம் எப்படிப் போகின்றது என்று

      நீக்கு
    2. ஏழரை மூன்று முறை ஒரு வாழ்நாளில் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  பொங்குசனி மங்குசனி என்று ஏதோ சொல்வார்கள்.

      நீக்கு
    3. என்னுடைய அனுமானம், முதல் 7 1/2 படிப்பைப் பாதிக்கும். இரண்டாவது 7 1/2 வேலையை, உடல் நலத்தைப் பாதிக்கும். மூன்றாவது 7 1/2 அனேகமாக விடுதலையைத் தரும்.

      நீக்கு
    4. ஆரம்பகால இரண்டு சனியும் எனக்கு வீண் பழி, கெட்ட பெயர், உறவுகளுடன் சரியான புரிதல் இல்லாமை எனப் பலத் துயரங்களைக் கொடுத்தது. இரண்டாம் சனியின் போது தற்கொலை செய்து கொண்டு விடலாமா என்னும் அளவுக்கெல்லாம் போயிருக்கேன்.

      நீக்கு
  9. பொய்யினை மெய்யென்று
    பொருந்தித் திரிவாரை
    பொய்யினுள் மெய்யென
    அழுத்தியே அலறவிட்டு
    மெய்யினை நெய்யென மேனிலை தன்னில் வைத்த
    மெய்யனே ஐயனே மீளக் கொண்டு அருளே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவனருள் தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். வருத்தம் வேண்டாம்

      நீக்கு
    2. துரை அண்ணனுக்கு மனதில் அல்லது உடலில் என்ன குறை என்று தெரியவில்லை.  இருந்தாலும் விரைவில் எல்லாம் சரியாக இறைவனை மனதார பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    3. உடல் நலக்குறை, மனதைப் பாதிக்கும். நான் நிறைய நடப்பேன், ஜிம்மில் 2 மணி நேரங்கள் work-out பண்ணுவேன். 2018 மே மாதத்திலிருந்து பாதங்கள் பாதிக்கப்பட்டபோது எனக்கு ஏற்பட்ட மன சஞ்சலத்தைச் சொல்லுதல் இயலாது. துரை செல்வராஜு சாரும், திடீர் உடல் நலக்குறைவால் அவதிப்படுகிறார் என்றே நினைக்கிறேன். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகிறது என்றுதான் நான் நம்புகிறேன்.

      நீக்கு
    4. ஆமாம் உடல்நலம் மிக மிக முக்கியம் மன நலத்திற்கு....ஆனால் ஒரு சிலர் உடல் நலம் ரொம்பவே வருத்தத்திற்கு உரியதாக இருந்தாலும் மனம் மிகவும் நல்ல முறையில் இருக்கும். என் மிக நெருங்கிய உறவினர்கள் (இருவர்) கான்சர் 4 வது ஸ்டேஜ்....ட்ரீட்மென்ட் ஒருபக்கம் அதன் வலி மிக மிகக் கொடுமை..ஒவ்வொரு முறை கீமோ கொடுக்கும் போதும் முதலில் அறுவை சிகிச்சை நடந்த போதும் சரி....என்றாலும் தன்னை மிகவும் ஆக்டிவாக வைத்துக் கொண்டு, எப்போதும் போல் நன்றாகப் பேசிக் கொண்டு, பாடிக் கொண்டு, பாசிட்டிவாக இறுதி வரை இருந்தார்கள். மறக்க முடியாத நபர்கள். நல்ல உதாரண நபர்கள்

      கீதா

      நீக்கு
  10. இன்றைய பதிவும் படங்களும் மனதில் கிடந்து ஆர்ப்பரிக்கின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி வரும் ஞாயிறு கோயில் உலாக்களும் புத்துணர்ச்சி தரும் விதமாக அமையும்

      நீக்கு
  11. அழகான படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது தமிழரே...

    விரிவான விளக்கம் நன்று

    பதிலளிநீக்கு
  12. நெல்லை, படங்கள் மிகப் பிரமாதம். ரசித்துப் பார்த்தேன் சிற்பங்களை எல்லாம்.

    கீழே இருக்கும் குரு அட! ஆதிசங்கரர்! பெரும்பாலும் எளிதாகக் கண்டு கொள்ள முடியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். அதிசயமான வருகைக்கு நன்றி (உங்களுக்காகத்தான் யானைப் பதிவு ஒன்று வெளிவந்தது. அந்தச் சமயங்களில் நீங்கள் வரவே இல்லை). பக்கத்துக் கோயிலிலிருந்த ஆதிசங்கரர் சிற்பம் இங்கு வந்திருக்குமோ இல்லை இரண்டு கோயில்களும் ஒன்றாகத்தான் இருந்திருக்குமோ?

      நீக்கு
    2. ஹலோ என்ன நான் அதிசயமா வரேன்னு?!!!!!!!!!11 வந்து கொண்டேதான் இருக்கேனே....ஆமாம் நெல்லை ஆனைய பார்த்தேன் ஆனா இங்க கருத்து போட முடியாத நிலை அப்போ....நம்ம ஆண்டாளு இருக்காளே ஆண்டாளு அவ என்ன அழகா பேசறா பாகனோடு!! அந்தக் காணொளி பார்த்தேன் எடுத்து வைத்திருக்கிறேன். பகிர...

      எனக்குத் தோன்றியது நெல்லை, இரு கோயில்களுமே ஒரு காலத்தில் ஒன்றாகத்தான் இருந்திருக்கும் என்று.

      கீதா

      நீக்கு
    3. கீதா ரங்கன்... ஒரு அதிசயத்தை உங்கள்ட சொல்றேன். சாட்சி என் மனைவி. இந்தத் தடவை திருக்குறுங்குடில, யானைக்கொட்டகையில் கட்டிப்போட்டிருந்த யானைக்கு ஒரு வாழைப்பழம் கொடுத்துவிட்டு (மனைவியின் தூண்டுதல்), அப்புறம் அதுட்ட பேசினேன். அதுவும் பேசித்து. என் மனைவி ரொம்ப அதிசயப்பட்டாள். ஆனால் என்ன சொல்ல யத்தனித்ததுன்னு தெரியலை. கேட்டதுக்கெல்லாம் துதிக்கையை நீட்டியோ இல்லை வாயால் ஹஸ்கி குரலில்-குழலோசை மாதிரியோ பேசித்து. பிறகு அதுட்ட போயிட்டு வர்றேன்னு சொல்லிக்கிட்டு கோயிலுக்குச் சென்றேன் (அங்க கோயிலின் முன் இன்னொரு யானையும் உண்டு)

      நீக்கு
    4. ஹயோ நெல்லை.....வாவ்!!! சந்தோஷம் பொங்குதே!!! வீடியோ எடுத்தீங்களா? எடுத்திருந்தா இங்க கோயில் படங்களோடு போட்டிருக்கலாமே நாங்களும் ரசித்திருப்போமேன்னுதான்...இதெல்லாம் அபூர்வ அதிசய, பொக்கிஷமான தருணங்கள் நெல்லை,,,,

      கீதா

      நீக்கு
  13. திருமயம் சென்றுவந்து கோவில், பெருமாள் படங்களைப் பகிர்ந்ததிற்கு நன்றிகள். நான் புதுக்கோட்டைக்காரன். பக்கத்தில்தான் திருமயம் (திருமெய்யம்) என்றாலும் இரண்டு, மூன்று முறைதான் சென்றிருக்கிறேன். இந்தப் பெருமாளின் பெயர்தான் என் அப்பாவுக்கு. ஸத்யமூர்த்தி.

    இப்போதுதான் நீங்கள் இணைத்திருக்கும் படங்களை ஒரு சிறிய பின்புலச் சுருக்கத்தோடு மகளுக்கு சொல்லி, காண்பித்தேன். Very nice ! என்றாள் பார்த்துவிட்டு. (தமிழ் படிக்கவராது பெண்ணிற்கு - என் பல தவறுகளில் ஒன்று)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் சார்... திருமயம் உங்கள் நினைவலைகளைக் கிளறியதில் மகிழ்ச்சி. என் பெண்ணுக்குத் தமிழ் படிக்கத் தெரியும். பையன் தட்டுத் தடுமாறிப் படிப்பான். நான் இருமுறை இந்தத் தலத்திற்குச் சென்றிருக்கிறேன்.

      By the by, can we sue Indian team, especially Captain KL Rahul, for increasing BP patients in the country? பேசாமல் பெங்களூர் யூனில விளையாடுபவனையோ இல்லை சச்சின் பையனையோ ராகுலுக்கு மற்றும் கோஹ்லிக்குப் பதிலாகப் போட்டிருந்தால் 30 ரன்களாவது அடித்திருக்க மாட்டார்கள்?

      நீக்கு
    2. //பேசாமல் பெங்களூர் யூனில விளையாடுபவனையோ இல்லை சச்சின் பையனையோ //

      அவ்வளவு ஈசியாக இருந்தால் நான் கூட சென்று விளையாடி இருப்பேனே.. ஹிஹிஹி..

      நீக்கு
    3. என் கருத்து என்னன்னா.... சச்சின் பையனுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால், கொஞ்சம் விளையாடி 20 ரன்னாவது எடுத்திருக்க மாட்டானா? இந்த ராகுல் ஒரு தண்டம். கவுண்டமணி சொல்றாப்புல, இந்த இவனுக்கு பேச்சைப் பாரு என்பதுபோல 1 ரன் அடிக்கிற கோஹ்லி, எதிரணியை முறைக்கிறான். நல்லவேளை.... பாப்பாரப் பசங்க இருந்தாங்களோ...இந்தியா ஜெயித்ததோ...ஹாஹாஹா

      நீக்கு
    4. ..என் கருத்து என்னன்னா.... சச்சின் பையனுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால், கொஞ்சம் விளையாடி 20 ரன்னாவது எடுத்திருக்க மாட்டானா? //

      எடுத்திருப்பான்! தன் ரஞ்சி முதல் போட்டியில் கோவாவுக்காக (மும்பை டீமில் அவனுக்கு இடமில்லையாம்!) சதம் அடித்தவன் அர்ஜுன் -அதுவும் 8-ஆவது இடத்தில் இறங்கி. சூர்ய குமார், சஞ்சு சாம்ஸன், இஷான் கிஷன் என எவராவது ஒருவர் இடையில் வந்திருந்தால் இந்தியா கடைசி டெஸ்ட்டில் இவ்வளவு திணறியிருக்காது..
      புதுவருடத்தில் கோஹ்லி, ராஹுல் போன்ற பிரகஸ்பதிகள் என்ன செய்யும் எனப் பார்ப்போம்!

      நீக்கு
    5. ..என் கருத்து என்னன்னா.... சச்சின் பையனுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால், கொஞ்சம் விளையாடி 20 ரன்னாவது எடுத்திருக்க மாட்டானா? //

      எடுத்திருப்பான்! தன் ரஞ்சி முதல் போட்டியில் கோவாவுக்காக (மும்பை டீமில் அவனுக்கு இடமில்லையாம்!) சதம் அடித்தவன் அர்ஜுன் -அதுவும் 8-ஆவது இடத்தில் இறங்கி. சூர்ய குமார், சஞ்சு சாம்ஸன், இஷான் கிஷன் என எவராவது ஒருவர் இடையில் வந்திருந்தால் இந்தியா கடைசி டெஸ்ட்டில் இவ்வளவு திணறியிருக்காது..
      புதுவருடத்தில் கோஹ்லி, ராஹுல் போன்ற பிரகஸ்பதிகள் என்ன செய்யும் எனப் பார்ப்போம்!

      நீக்கு
  14. முதல் சுற்று மங்கு சனி, இரண்டாவது சுற்று பொங்கு சனி, மூன்றாவது சுற்று மாரக சனி என்பர்.

    சனிக்கு ஈச்வர பட்டம் கிடையாது. எப்படியோ சனீச்வரன் என்றே தவறாக சொல்லிக் கொண்டே வருகிறோம்.
    ‘சனைஷ்சரன்’ = மெதுவாக செல்லும் கிரகம். சூரியனைச் சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும்.

    வைஷ்ணவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வைஷ்ணவி, சனைச்சரன் என்பதற்கான விளக்கம் தந்ததற்கு. நவகிரக கீர்த்தனைகளில், தீவாகர என்று தொடங்கும் பாடலைல் சனைச்சரம் என்று வரும்.

      மங்கு, பொங்கு, மாரக காலங்கள் சுருக்கமாக என்ன பலனை (உபத்திரவங்களை) அளிக்கும் என்று எழுதியிருக்கலாம்.

      நீக்கு
    2. நன்றி வைஷ்ணவி. மங்கு பொங்கு மாரக பலன்களை அறிவேன்.

      நீக்கு
    3. //சனிக்கு ஈச்வர பட்டம் கிடையாது. எப்படியோ சனீச்வரன் என்றே தவறாக சொல்லிக் கொண்டே வருகிறோம்.//

      ஆனால் சனீஸ்வரர் என்று சொல்லி பழகி விட்டோம்.  தேடிப்பார்த்தால் அதற்கும் ஒரு புராணக் கதை கிடைக்கலாம்!

      நீக்கு
  15. அருமையான கோயில் உலா. இங்கு பல முறை சென்றுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. அடுத்த முறையாவது, கோயிலை ஒட்டியுள்ள சிவத்தலத்திற்கும் செல்ல நினைத்திருக்கிறேன்.

      நீக்கு
  16. குடவரைக் கோவில் சிற்பங்கள் அழகு
    விளக்கங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  17. படங்கள் எல்லாம் மிக அழகாய் வந்து இருக்கிறது. முன்பு செய்த தரிசனத்தை நினைவு படுத்தி கொள்கிறேன். அப்போது கையில் அலை பேசி, காமிரா எதுவும் இல்லை. அதனால் படம் எதுவும் எடுக்கவில்லை.
    கீழே உள்ள படம் ஆதிசங்கரர் சிலை போலதான் இருக்கிறது.

    முதல்படத்தையும், நெல்லை பேச்சையும் ரசித்தேன்.
    குடைவரை கோட்டை கோயில் படங்களை இறைவனின் படங்களை வணங்கி மனதார பிரார்த்தனை செய்து கொண்டேன்.

    திரு மெய்யர் எல்லோருக்கும் எல்லா நலன்களையும் அருள வேண்டும்
    என்று வேண்டிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அரசு மேடம்... பிரயாணக் களைப்பு தீர்ந்ததா? இனி புதிய பதிவுகள் உங்களிடமிருந்து வரும் என்று நினைக்கிறேன்.

      ஓரிரு வாரங்கள் இணையப் பக்கம் வராததால் என்னாச்சு என்று நினைத்திருந்தோம்.

      நீக்கு
  18. நம் வரலாற்றுச் சின்னங்களை நினைத்துப் பெருமிதப்படுங்கள்.//

    ஆமாம், பெருமிதப்பட்டுக் கொண்டு அதை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அதை பாழ்படுத்தாமல்.
    கலை நயம், மற்றும் வரலாற்றை சொல்லும் காலத்தை வென்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய பக்தர்கள் கோவில்களுக்குச் செல்லும்போது, கோவில்கள் பாதுகாப்பாக இருக்கும். பக்தர்கள் அங்குள்ள சிற்பங்கள், வரலாற்றுத் தடயங்களை யாரும் பாழ்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.

      நீக்கு
  19. @ நெல்லை, ஶ்ரீராம்

    ஆம், சில கதைகள் உண்டு. விந்தி விந்தி நடப்பதற்கும் ஒரு கதை உண்டு.

    ‘சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை / கெடுப்பாரும் இல்லை’
    சில ராசிகளுக்கு நல்லதையும், சில ராசிகளுக்கு தீமைகளும் செய்வார்.
    சில ராசிகளுக்கு 50%.

    ஜாதகத்தில் சனி இருக்குமிடத்தைப் பொறுத்து பலன் மாறும். சொல்ல வேண்டும்.

    வைஷ்ணவி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!