திங்கள், 5 டிசம்பர், 2022

வாழைப்பூ சிப்ஸ் :: வசுமதி மணியன் ரெஸிபி

 

நீங்க எல்லோரும் வாழைப்பூ பார்த்திருப்பீர்கள். 

இதோ படத்தில் உள்ளதுதான் அது! 


வேண்டிய பொருட்கள் : 

வாழைப்பூ - 1 

கடலை மாவு   50 கிராம்.

Corn( சோள ) மாவு.   4 ஸ்பூன்.

அரிசி மாவு..   4 ஸ்பூன்.

காஷ்மீரி சில்லி or some மிளகாய் பொடி..1 ஸ்பூன் 

சீரகப் பொடி, இஞ்சி,பூண்டு,garam masala பொடி...பெருங்காயம்...இது optional.

தேவையான அளவு உப்பு.

பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய். 

செய்முறை.

வாழைப்பூ ஆய்ந்து,  அவதிப்  படாமல் அப்படியே தனியாக பிரித்து மோரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.இது கசப்புத்  தன்மை நீங்க.

(' ஆய்ந்து ' என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டார் - அது சாதாரண விஷயம் இல்லை ! வாழைப் பூ மடல்களைத் திறந்தால், உள்ளே ஒரு கூட்டணி பூ காணப்படும். அந்தக் கூட்டணி பூ ஒவ்வொன்றிலும் ஒரு குடும்பம் இருக்கும். அந்தக் குடும்ப உறுப்பினர்களில் ஒரு திருடன் / கள்ளன் உண்டு. அந்தத் உருண்டைத் தலையனை - கிள்ளி எடுத்து வெளியே வீசிவிட வேண்டும்!!

படத்தில் விளக்கம் காணவும் : 

மடலுக்குள் உள்ள கூட்டணி !

குடும்பத்துள் உள்ள கள்ளன் / திருடன் = படத்தில் காட்டப்பட்டிருக்கும் 'style and stigma' அந்த உருண்டைத் தலயனை அடியோடு கிள்ளி வீசவேண்டும்!) 

பிறகு ஆய்ந்த பூக்களை மோரில் ஊறப் போடவும். 

வாழைப் பூ தவிர மற்ற பொருட்களை, தண்ணீர் தெளித்துப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். 

அதில் வாழைப்பூ எடுத்து வைத்துள்ளதை கலந்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.சுவையான சிப்ஸ் தயார்! 






இது சாதாரண மிளகாய்ப் பொடியில் செய்தது. 

= = = = = = = 



42 கருத்துகள்:

  1. விளக்கம் மிகவும் சுலபமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. கோமதி அக்காவிடமிருந்து வந்திருக்கும் தகவல்...

    "வாழ்க வளமுடன்

    3 ம்தேதி சாரின் திதி அதற்கு மகன், மகள்  மற்றும்  இரு பக்க உறவினர்களும் வந்து நடந்தி கொடுத்தார்கள்

    தொடர்ந்து பல வேலைகள் இருக்கிறது.

    அதை எல்லாம் பார்த்து கொண்டுகோவைக்கு சாரின் தம்பிக்கு 70 பிறந்த நாள் விழா மாமியாரின் திதி எல்லாம் முடிந்து வர நாட்கள் ஆகும்

    மெதுவாக வருகிறேன் வலைத்தளம்எல்லோரையும் கேட்டதாக சொல்லவும்..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்காவிடம் ஒரு 10 நாள் முன் பேசுறப்ப சொன்னாங்க அவங்க மகன் குடும்பம் மகள் எல்லாரும் வராங்க மாமாவின் திதிக்கு என்று

      கீதா

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. வாழைப்பூ சிப்ஸ் கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் எண்ணெய் குடிக்குமோ என்னும் எண்ணம். இங்கே வாழைப்பூ வாங்கினால் செலவு செய்ய முடியலை என்பதால் வாங்குவது இல்லை. பையர் வந்தால் வாங்கணும். இதே போல் வெண்டைக்காய், வேகவிட்ட சேப்பங்கிழங்கை மெலிதாக நறுக்கிக் கொண்டு அதிலும் பண்ணலாம். நான் வெண்டைக்காயில் அடிக்கடி பண்ணுவேன்.

    பதிலளிநீக்கு
  5. யாரு இந்த வசுமதி மணியன்? புது முகம்?

    பதிலளிநீக்கு
  6. சாதாரண மிளகாய்ப் பொடியில் செய்தால் நிறம் இவ்வளவு குறைவாய் வருமா என்ன? நான் ஊறுகாய்களில் இருந்து பஜ்ஜி, உகி போண்டா வரை சாதாரண மிளகாய்ப் பொடி தான். மி.வத்தலைக் காய வைத்து மிஷினில் அரைத்தது. அதைப் பிசறிட்டுப் பொரிக்காமல் இருக்கோ?

    பதிலளிநீக்கு
  7. பொரித்து எடுத்ததை பருப்பில்லாத புளிக் குழம்பில் போட்டு அயிரை மீன் குழம்பு போல் வைக்கலாம் என்று படித்திருக்கிறேன்.

    காஷ்மீர் மிளகாய்ப் பொடியும் மெஷினில் அரைத்து வைக்கலாம். Byadgi அல்லது பிரியன் மிளகாய் என்று சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்.  

    Jayakumar

    பதிலளிநீக்கு
  8. வாழைப்பூ பஜ்ஜி செய்முறை நன்றாக இருக்கிறது.

    நான் கரண்டி பிடிக்கும் நேரம் வரும்போது, வாழைப்பூ, வாழைத்தண்டு, காலிப்ஃளவர்லாம் வாங்கி அவதிப்படுவதில்லை.

    இன்று பருப்புக் குழம்பு, சேனை ரோஸ்ட் மற்றும் ஒரு காய்கறி என ஓட்டிவிடலாம் என நினைத்திருக்கிறேன். மாலை பூரி மசால் பண்ணலாம்னா, பையன், உருளை சம்பந்தமா எதையும் பண்ணாதீங்கங்கறான். சுலபமா எதையும் செய்யவிடமாட்டேங்கிறாங்க

    பதிலளிநீக்கு
  9. அதிரா, இலங்கைச் செய்முறை என்று சொல்லி மடல், கள்ளன்லாம் எடுக்காம, நேரடியாக மடலோடு பொடிப்பொடியா அரிந்து கறியமுது செய்வார். அது ரொம்பத் துவர்க்குமோ என்று எனக்குத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் மடல் எடுப்பதில்லை ஆனா கள்ளன் எடுத்துருவோம் அது ஜீரணம் ஆகாது வயிற்று வலி வருமே

      கீதா

      நீக்கு
    2. //நானும் மடல் எடுப்பதில்லை // - இதன் அர்த்தம் தெரியுமா கீதா ரங்கன்?

      நீக்கு
    3. கள்ளன் ஆய்வதில்லை எனில் புரிந்து கொள்ள முடிகிறது. மடலையே எடுக்கலைனா? அது எப்படி? இங்கே மடல் எடுக்காமலேயே கள்ளனை மட்டும் ஆய்ந்து கொடுக்கிறாங்க.ஒரு முறை வாங்கி வந்தார். எனக்குப் பிடிக்கலை. கள்ளன் எடுக்காத பூவே வாங்குங்கனு சொல்லிட்டேன்.

      நீக்கு
  10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  11. வசுமதி மணியன் தங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  12. வாழைப் பூ..

    இயற்கையின் அருங்கொடை..

    பல குடும்பங்களுக்குஇன்னும் வாழ்வாதாரமாக இருப்பது..

    பதிலளிநீக்கு
  13. இங்கே மிகவும் மலிவாகக் கிடைக்கின்றது..

    மழைக் காலத்தில் நேரம் போகும்..

    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  14. வசுமதி மணியன்..

    கௌதம் ஜி அவர்களது தங்கை..

    வாழ்க.. வாழ்க..

    பதிலளிநீக்கு
  15. சரித்திர வகுப்பு, கணக்கு வகுப்பெல்லாம் வந்துவிட்டன. இன்னிக்குத் தாவரங்கள் பற்றிய பாடம், பட விளக்கத்தோடு.. :))))))

    பதிலளிநீக்கு
  16. அருமையாகப் படங்களுடன் விளக்கம். வாழ்த்துகள் வசுமதி மணியன் அவர்களுக்கு. ஒரு அறிமுகம் கொடுத்திருக்கலாமோ? வசுமதி ஆங்கிலத்தில் எழுதுபவரா? எங்கள் தளத்திற்கு வசுமதி என்று ஆங்கிலத்தில் எழுதும் பதிவர் ஒருவர் கருத்திட்டிருக்கிறார். அவர் தளம் சென்று வாசித்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. அலல்து ஆசிரியர்கள் உறவோ!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. வாழைப்பூ பஜ்ஜி என்று நம் வீட்டில் செய்வதுண்டு. இது. அது போல வெண்டை, சேம்பு, காலிஃப்ளவர் எல்லாவற்றிலும் இப்படிச் செய்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வெண்டைக்காய் பஜ்ஜி / பக்கோடா செய்தது உண்டு.

      நீக்கு
  19. வாழைப்பூ சிப்ஸ் நன்று. கஸ்மீரி மிளகாய் தூளில் படம் அழகு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!