வியாழன், 9 மார்ச், 2023

பாடலும் ஊடலும்

 ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.. 

ஏதாவது பெயரைக் கேட்டால், வார்தையைப் பார்த்தால் சம்பந்தப்பட்ட ஏதாவது பாடல் வரி மனதில் ஓடும் என்று..  அலுவலகத்தில் ஒரு அடிப்படைப் பெண் ஊழியர் பெயர் கேட்டபோது 'கிளியக்கா' என்றதும் சட்டென்று பெரிதாகப் புன்னகைத்து விட்டேன்.  

"எதற்கு சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார் அந்தப் பெண்!

"இல்லை உங்கள் அப்பா சிவாஜி ரசிகரா,  இல்லை எஸ் பி பி ரசிகரா?  தர்மராஜா படம் வந்த சமயம் பிறந்தீர்களோ?" 

"அதெல்லாம் இல்லை.  என் பெயர் அன்னக்கிளி.  அன்னக்கிளி வந்த சமயம் பிறந்ததால் அப்படிப் பெயர் வைத்துவிட்டார்கள் போல..  என்னை எல்லோரும் கிளியக்கா என்று கூப்பிட்டு கூப்பிட்டு யாராவது பெயர் கேட்டாலே கிளியக்கா என்று சொல்லி வழக்கமாகி விட்டது!"  என்றார்.

அப்படிப் பாடலோடு இணைந்த தினப்படி எனக்கு!  நான் ஏதாவது ஒரு வரி பாடினால் அதன் தொடர்ச்சி கிச்சனிலிருந்து தொடரும்.  பாஸ்!  எனக்குத் தெரியாத பாடல் விவரம் எல்லாம் கூட பாஸ் அறிவார்.

சமீபத்தில் ஒரு சம்பவம்..  ஒருநாள் காலை உட்கார்ந்து கணினியில் எதையோ படித்துக் கொண்டிருந்தேனா, எழுதிக் கொண்டிருந்தேனா என்பது நினைவில்லை.  எனக்கொரு வழக்கம் உண்டு.  நான் பாட்டு கேட்கும்போது - மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல்கள் கேட்கும்போது -  யாரும் பேசினால் குறுக்கீடு இல்லாமல் கேட்க விரும்புவேன்.  ஹெட்ஃபோன் போட்டுக்கொள்ளும் வழக்கமும் கிடையாது, பிடிக்காது.  

ரசிக்கிறேனாம்!  முன்பெல்லாம் அப்படி இல்லைதான்.  சமீபத்தில்தான் இப்படி.  

கணினியில் நான் இருந்தபோது பாஸ் 'நான் தாயுமானவன் தந்தையானவன்' பாடலைப் பாடத் தொடங்கினார்.  விஸ்தாரமாக பாடல் நீண்டது.  முதல் சரணத்துக்கும் வந்து விட்டார்.

கணினியில் நான் செய்து கொண்டிருந்த வேலையை மனம் ஒன்றிச் செய்ய முடியவில்லை.  சட்டென கோபப்பட்டேன்.

படம் :  நன்றி இணையம்.

"ஏம்ப்பா..   முழு பாடலையும் மியூசிக்கோட பாடிட்டுதான் நிறுத்துவே போலிருக்கு.."

"ஏன்?"  கடுப்புடன், காட்டத்துடன் கேட்டார் பாஸ்.  "உங்களுக்கு என்ன?"  

"என்னால இங்க மனசு ஒன்றி வேலை செய்ய முடியலை"

"எல்லாம் உங்க ராஜ்ஜியம்தான்"

சட்டென பாட்டு நின்று விட்டது.  வேலையைத் தொடர்ந்தேன்.  ஆனால் வேலை செய்ய முடியாமல் குறுகுறுவென்றிருந்தது.  பின்னால் நீண்ட மௌனம்.  சத்தமில்லாமல் பாத்திரங்களின் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

எப்போதும் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பவர், சின்னசின்னதாய் பாடிக்கொண்டே வேலை செய்பவர் முழு மௌனமாக வேலை செய்து கொண்டிருந்தார் - நான் கணினியிலிருந்து எழுந்து மற்ற வேலைகளை செய்யும்போதும்.  உறுத்தியது.

சின்னவனுடனும், பெரியவனுடனும் எதாவது வம்பிழுத்துக் கொண்டோ, உரையாடிக்கொண்டோ இருப்பவர் அதுவும் செய்யவில்லை.  சங்கடமாக இருந்தது.

'ஆஹா..  காயப்படுத்திட்டோமே சீராமு..  சரி செய்யணுமேடா சீராமு...'

சமயங்களில் இது மறுநாளைக்குக் கூட நீடிக்கும் அபாயம் உண்டு.

குளித்து உடைமாற்றி பையை எடுத்து வைத்து சாப்பாட்டு மூட்டையை கட்ட ஆரம்பித்தேன்.  ஏதோ கேள்வி கேட்டேன்.  பதில் இல்லை.  மறுபடி கேட்டதும் முணுமுணுப்பாய் பதில் வந்தது.

இது நன்றாயில்லை.  நன்றாயிருக்காது.  ஒரு வீடு என்றால் கலகலப்பாக இருக்கவேண்டும்.  எங்கள் வீட்டில் அந்த கலகலப்புக்கு காரணம் பாஸ்தான்.  அவர்தான் பெருமளவு காரணம்.  ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார், சின்னச் சின்னதாய்ப் பாடிக் கொண்டிருப்பார்.  ஃபோன் பேசிக்கொண்டிருப்பார்.  ஆக, குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.  அவர்தான் எங்கள் வீட்டின் மெயின் சுவிட்ச் என்று சொல்லுவேன்.

அடுத்ததாக பெரியவன்.   அவனும் கிட்டத்தட்ட அதே மாதிரி.   இன்னும் சத்தமாகக் கூட பேசுவான்.  அவன் பேசினால் மற்றவர்கள் பேசமுடியாது!   நானும் இளையவனும் பெரும்பாலும் மௌனமாய் இருப்போம்.  'ஊமைச்சாமிகள்' என்று...  இல்லை, இல்லை..  ஊமைக்குசும்புகள்' என்று பெயர் வாங்கி இருந்தோம்.

நேரடியாய் விஷயத்துக்கு வந்தேன்.

படம்  :  நன்றி இணையம்.

"உனக்கே தெரியும்..  நான் பாட்டு கேட்டால் இடையூறின்றி பாட்டு கேட்க விரும்புவேன்..  எழுதிக் கொண்டிருந்தேன்.. மனசு அதில் செல்லாமல் உன் பாட்டிலேயே இருந்தது.  நீ வேறு நல்லா பாடுவியா..  பாட்டுலதான் கவனம் போகுது..  (நிஜமாகவே நன்றாய் பாடுவார்.  பாடலில் வரும் வளைவு, குழைவு எல்லாம் சரியாகக் கொண்டு வருவார்) அது வேற எனக்கு பிடிச்ச பாட்டு..என்ன செய்ய.  ஆபீசுக்கு கிளம்பரத்துக்குள்ள வேலையை முடிக்கணுமேன்னு அப்படி சொன்னேன்..   ஸாரி.. அப்புறம் உன் இஷ்டம்..."  

ஐந்து நிமிடங்களில் இயல்பு நிலை திரும்பியது!

=======================================================================================================

"எழுத்தாளர் கோணங்கி பாலியல் சித்திரவதை செய்தார். இப்ப புகாரை நீக்கச் சொல்லி..." பாதிக்கப்பட்ட மாணவர் வினி சர்பனா.


பிரபல எழுத்தாளர் கோணங்கி மீது கார்த்திக் என்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் பதிவிட்டிருக்கும் பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாணவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், "டீன் ஏஜ் காலகட்டத்தில் கோணங்கியை ஒரு காட்ஃபாதராக நினைத்துப் பழகினேன். ஆனால், அவர் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால், நான் மனச்சிதைவுக்கு ஆளானேன். அவரிடமிருந்து போன் அழைப்பு வந்தாலே பயமும் வந்துவிடும். இதனால், தற்கொலை எண்ணத்துக்குத் தள்ளப்பட்டேன். என் வாழ்க்கையே நரகமாகிவிட்டது” என்று தன் வாக்குமூலமாக போஸ்ட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். இது வாசகர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் கார்த்திக்கையே தொடர்புகொண்டு பேசினேன்.
“எனக்கு நாடகம் நடிக்கிறதுல ஆர்வம் அதிகம். அதனால, காலேஜ் படிக்கும்போது கோணங்கியோட தம்பி முருகபூபதி நடத்துற 'மணல் மகுடி' நாடகக் குழுவுல சேர்ந்தேன். அப்போதான், கோணங்கி நேரடியாக அறிமுகமானார். ஒரு பெரிய எழுத்தாளர் நம்மகிட்ட நேரடியா சகஜமா பேசுறது ஒரு சந்தோஷத்தைக் கொடுக்குமில்லையா? அப்படித்தான் எனக்கு இருந்துச்சு. அவரை ஒரு காட்ஃபாதர் மாதிரி நினைச்சேன். நாடகக்குழு வெளியூரெல்லாம் போகும்போது அவரும் கூடவே வருவார். ரொம்ப அக்கறையா பேசுவார். அவர் அப்படி எளிமையா இருக்கிறது எனக்கு ரொம்ப பிரமிப்பா இருக்கும். ஆனா, போகப் போகத்தான் அவரோட சுயரூபம் தெரிய ஆரம்பிச்சது. அவரோட ஊரு கோவில்பட்டியா இருந்தாலும் எழுதுவதற்காகவே மதுரையில ஒரு ரூம் எடுத்து தங்கியிருந்தார். பிறகுதான் தெரிஞ்சது, அவரு தப்பா நடந்துக்கிறதுக்காக அந்த ரூமை எடுத்து வெச்சிருக்கார் என்பது.
டைப் பண்ணனும்னு சொல்லி என்னைக் கூட்டிக்கிட்டு போவார். எனக்கு அதுபற்றிய நாலேஜ் கிடையாது. ஒரு பெரிய எழுத்தாளர் கூப்பிட்டா போகாம எப்படி இருக்கமுடியும்?” என்கிறவர் அதற்குப்பிறகு சொல்ல ஆரம்பித்ததுதான் அதிர்ச்சி ரகம்.
“போனதும் சட்டையக் கழட்டச் சொல்லிடுவாரு. வெறும் துண்டை மட்டும் கட்டிக்கிட்டு உட்காரச் சொல்லுவாரு. வீட்டுல இருக்கிறமாதிரி கம்ஃபர்டபிளா இருக்கணும்ங்கிறதுக்காக சொல்றார்ன்னு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது, என்கூட தப்பா நடந்துக்கத்தான் அதுன்னு... இரவு ஆகிட்டாலே என்னை ட்ரிங்ஸ் பண்ணச் சொல்வார். அப்போதெல்லாம் எனக்கு குடிப்பழக்கம் கிடையாது. ஆனா, அவர் குடிப்பார். அதன்பிறகு, இரவு அவருடன் படுத்துக் கொள்ளச் சொல்வார். அந்த நேரத்துல என்கிட்ட தப்பு தப்பா நடந்துக்குவாரு. இரவு முழுக்க அவர் இப்படிப் பாலியல் வன்முறையில ஈடுபடுவது எனக்கு அதிர்ச்சியா இருந்தது. என்னை விடவே மாட்டாரு. மதுரையிலிருந்து கோவில்பட்டிக்குப் போனாலும் போன் செய்து அங்கேயும் வரச்சொல்வார். கிட்டத்தட்ட மூணு வருஷம் என்னை இந்த சித்திரவதைக்கு ஆளாக்கினார். எனக்கு அப்போ 19 வயசு. 'உன்கிட்ட நிறைய திறமை இருக்கு'... அப்படின்னு ரொம்ப என்கரேஜ் பண்ணி ஏமாத்துவார். இப்படித்தான் அவரோட அப்ரோச் இருக்கும். அவரை எதிர்த்துப் பேசமுடியல. தள்ளிப் படுத்தாலும் விடமாட்டார்.
நான் வந்த பிறகுதான், என்னை மாதிரியே பாதிக்கப்பட்ட இன்னொரு பையனும் கோணங்கியோட தம்பி பூபதிகிட்ட புகார் சொன்னார். அவர், 'அய்யய்யோ, அவர் இப்படியா நடந்துக்கி்றார்'னு புதுசா கேட்கிறமாதிரி கேட்டார்.
ஒருமுறை, நடந்தா பரவாயில்ல. அவரோட தம்பிக்கிட்ட நான் பார்த்து புகார் கொடுத்ததே 3 பேர். இந்த 10 வருசத்துல நிறைய ஆண்கள் கூட தப்பா நடந்துக்கிட்டிருக்காரு. அவரோட தம்பி கண்டுக்கல. அவரும் இதற்கு உடந்தைதான் போல" என்று சந்தேகம் எழுப்புகிறவரிடம், "பத்து ஆண்டுகள் கழித்து தற்போது இதை பிரச்னை ஆக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பப்படுகிறதே? அப்போதே, கோணங்கியின் அண்ணன் ச.தமிழ்ச்செல்வனிடம் சொன்னீர்களா? காவல்துறையில் புகார் கொடுக்காதது ஏன்?" என்று கேட்டேன்.
"அப்போ, அந்த வயசுல இதை வெளியில சொன்னா அசிங்கம்னு இருந்துட்டேன். எனக்கும் ஒரு குற்ற உணர்வா இருந்தது. கோணங்கியால என்னை மாதிரியே நிறைய பேரு பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சதும் இன்னும் கோபம் அதிகமாகிடுச்சு. அதனாலதான், இப்போ தைரியமா வெளியில சொல்றேன். என்னை மாதிரியே பாதிக்கப்பட்டவங்களும் ஃபேஸ்புக்கில் இதுபற்றி எழுதியிருக்காங்க. முக்கியமாக கோணங்கியோட அண்ணன் பையனே எழுதியிருக்கார். அதாவது, கோணங்கியின் அண்ணன் மகனின் நண்பனிடமும் கோணங்கி தவறாக நடந்து கொண்டிருக்கிறார். அவருடைய அண்ணன் ச.தமிழ்ச்செல்வனிடம் நான் இதைச் சொன்னதில்லை. ஏன்னா, அவர் வெளியூரிலிருந்து வந்து செல்வார்” என்கிற கார்த்திக் 'நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வியல்' தொடர்பான ஆராய்ச்சிப்படிப்பை முடிக்க இருக்கிறார்.
பாலியல் அத்துமீறல்பாலியல் அத்துமீறல் ”கோணங்கி மன்னிப்பு கேட்டு மனம் திருந்தணும். இனி வேறு யாருக்கும் இந்தப் பாலியல் கொடூரம் நடக்கக்கூடாது. கோணங்கியால வேற யாரும் வாழ்க்கையை இழந்துடக் கூடாதுன்னுதான் இதுப்பத்தி எழுதினேன். நான், கோணங்கியால் பாதிக்கப்பட்டதை வெளியில சொன்னதும் பல பேர் பாதிக்கப்பட்டதாக ஃபேஸ்புக்ல் எழுதியிருக்காங்க. இதைப் பார்த்த, கோணங்கியின் தம்பி பூபதியின் நாடகக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி அந்தப் பதிவுகளை நீக்கச் சொல்றாங்க. எங்க அப்பா, அம்மா படிக்காதவங்க. நான், சாதாரண குடும்பத்திலிருந்து வந்திருக்கேன். கோணங்கி பெரிய செல்வாக்கு உடையவர். எங்களுக்கு எந்த சப்போர்ட்டும் இல்ல. தமிழக முதல்வரும் காவல்துறையும்தான் எங்களுக்குத் துணையா இருக்கணும்" என்கிறார் கோரிக்கையாக.
நன்றி: விகடன்

=============================================================================

'இஞ்சி இடுப்பழகி' படத்தில் நடிக்க ரிஸ்க் எடுத்தாலும் எடுத்தார். அது அனுஸுக்கு ஆபத்தாகவிபே முடிந்து விட்டதாம். இத்தனைக்கும் அவரே அழகுக்கலை நிபுணராய்த்தான் முதலில் உள்ளே வந்திருந்திருக்கிறார். பாவம். சமீபத்து நிகழ்ச்சி ஒன்றில் காணப்பட்ட அனுஷ்...


=================================================================================



இணையத்தில் பார்த்தது.. எப்படி ஷாக் ஆனீங்கன்னு சொல்லுங்க...


===================================================================================

வலைத்தளத்தில் இருந்த போகன் சங்கரை நினைவிருக்கிறதா? இந்த வாரம் அவர் கவிதை ஒன்று.. போகன் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து இருக்கிறார்.



===============================================================================

இணையத்தில் பாதித்தது.. ச்சே.. படித்தது.. தேவகோட்டைஜி வழங்கிய விவாகரத்து கட்டுரையும் நினைவுக்கு வருகிறதா?

ஆமாம்.. நேற்று பெண்கள் தினமாமே...


==================================================================================

பொக்கிஷம்..

சென்னை நகர வீதியில் இரண்டுபேரை அமர்த்தி உடல்நோக இழுக்கும் கைரிக்ஷா தொழிலாளி - வருடம் 1935.




ஷேர் செஞ்சுடுங்கப்பா....

ஸார்.. விட்டுடுங்க சார்... பின்னால ஒருத்தர் சைக்கிளே இல்லாமல் வர்றார்... அவரைப் பிடிங்க... (உட்கார்ந்தால் உடைந்து விடுமோ என்று அஞ்சும் அளவு இருக்கும் போலீஸ்காரர் டிராயர்!)

90 கருத்துகள்:

  1. கோணங்கித்தனமான விஷயம் நம் வியாழன் அரட்டைக்குத் தேவையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்தாளர்கள் பற்றிய சிறு குறிப்புகளில் இபப்டி எல்லாமும் வருகிறது என்று சொல்லலாமே...  பெருமாள் முருகன் பற்றி பேசவில்லையா?

      நீக்கு
    2. எழுத்து வேறு. எழுத்தாளன் வேறு. அதனால்தான் எவ்வளவு நெருங்கிய உறவினரா இருந்தாலும் பெண் (குழந்தையை) தொட்டுப்பேசக் கூடாதும்பாங்க

      நீக்கு
    3. எழுத்தை வைத்து எழுத்தாளனை இப்படியானவர் எனச் சொல்லுவது கஷ்டம்.

      நீக்கு
    4. இங்கு அவர்கள் எழுத்தை வைத்துச் சொல்லவில்லை!

      நீக்கு
  2. பெண்களை சனாதனம் இழிவுபடுத்தியது என எட்டப்பன் வேலை பார்ப்பதுதான் வெளிநாட்டுப் பணம் கிடைக்க உபயோகமாக இருக்கும். ஏதென்ஸ் உண்மையை எழுதலாமே? இதுபற்றி படங்கள் நான் பகிர்ந்தால் கௌதமன் சார் வெளியிடமாட்டார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் "எளிமை"யாகவும், "அளவா"கவும் விவரங்கள் நிறையவும் எழுதலாமே...!

      நீக்கு
  3. "ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது"  என்ற பாடல் தான் நினைவில் வந்தது முதல் கட்டுரையைப் பார்த்து. பாஸ் பாடுவது சரி, குரல் எப்படி? 

    கோணங்கி யை மறந்து இருக்கும்போது எப்படியோ கொண்டு வந்து விட்டீர்கள். அது என்ன பாலியல் குற்றச்சாட்டுகள் கரிசல் காட்டு எழுத்தாளர்கள் மீது மட்டும் சுமத்தப்படுகின்றது? 

    அனுஸ்காவை மறந்து விட்டீர்கள் என்று நினைத்தால்....

    போகன் சங்கர் எழுதியது அரசியலா? ஆன்மீகமா? இரண்டுக்கும் பொருந்துகிறதே!!!!
    புகைப்படங்கள் பொக்கிசம். 

    விநாயகர் படம் விநாயகர் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் கதை போலவே உருவாக்கப்பட்டுள்ளது.  

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரலும் நன்றாய் இருந்தால்தானே ரசிக்க முடியும்?  கரிசல் காட்டு எழுத்தாளர்கள் என்றொரு தனிப்பிரிவு இருக்கிறதா?  போகன் சங்கரின் நிறைய கவிதைகள் ரசிக்கும்படி இருக்கும்.  யோசிக்கும்படியும் இருக்கும்.

      நீக்கு
    2. ஆமாம், கரிசல் காட்டு எழுத்தாளர்கள் எனத் தனியாகத் தான் சொல்கின்றனர். கி.ராஜநாராயணன், கோணங்கி தவிர்த்துப் பூமணி, தர்மன், தமிழ்ச் செல்வன், உதயசங்கர், சுயம்புலிங்கம், இன்னும் பலர். கு.அழகிரிசாமி கூடக் கரிசல் எழுத்தாளரோ? கோவில்பட்டிக் கரிசல் காட்டில் வருதா?

      நீக்கு
    3. ஆமாம், ஆமாம்...   கி ரா வை கரிசல் காட்டு எழுத்தாளர் என்று சொல்வதை அறிவேன்.  வள்ளிம்மாவுக்கு பிடித்த எழுத்தாளர்.

      நீக்கு
  4. ..நான் ஏதாவது ஒரு வரி பாடினால் அதன் தொடர்ச்சி கிச்சனிலிருந்து தொடரும். //

    அடடா! பாட்டுக்குப் பாட்டெடுத்து .. நான் பாடுவதைக் கேட்டாயோ.. என்று இருவரும் ஆரம்பித்துவிடுவீர்களோ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பாட்டுக்கு போகும்! சில வரிகளோடு நின்று விடும்!

      நீக்கு
  5. போகன் சங்கர், கோணங்கி .. இவர்களெல்லாம் இங்கே வந்திருக்கிறார்களே! ஒருமாதிரியான வியாழன் தான்..

    போகன் சில நல்ல கவிதைகளை எழுதியிருக்கிறார். கவனிக்கப்படவேண்டிய சமகாலக் கவி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போகன் நிறையவே சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார்.

      நீக்கு
  6. பேசாம ரெண்டு பேருமே அந்தப் பாட்டைச் சேர்ந்தே பாடி இருக்கலாம். பாஸின் குரலை நீங்க எவ்வளவு ரசிச்சுட்டு இருக்கீங்க! இதைப் படிச்சதும் அவங்க கோபமே சுத்தமாய்ப் போயிடும். இனிமேல் கோபமே வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் இல்லை. அவ்வப்போது எதற்காவது கோபம் வந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் நிலைக்காது!!

      நீக்கு
  7. பெயரே கோணங்கி தானே! காரியங்களும் அப்படித்தானே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிதான் அங்கே சிலர் கருத்திட்டிருந்தார்கள்.

      நீக்கு
  8. படங்கள் எல்லாம் உண்மையிலேயே பொக்கிஷங்கள் தான். அது சரி, இன்னிக்கு ஏன் இன்னமும் துரை வரலை? நெல்லை ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் கோவா வாங்கினீங்க தானே? அங்கே அரசாங்கப் பால் டிப்போவில் நன்றாகவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இப்போதெல்லாம் சற்று தாமதம் தான்!..

      நன்றியக்கா.

      நீக்கு
    2. /// அரசாங்கப் பால் டிப்போவில் நன்றாகவும் இருக்கும்///

      ஆச்சர்யம் தான்!..

      நீக்கு
    3. நன்றி கீதா அக்கா.  நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் வேலை பார்த்திருக்கிறேன்.  ஆம்,பால்கோவா அரசாங்க டிப்போவில் நன்றாய் இருக்கும்.

      நீக்கு
    4. துரை! ஆவினின் பாதாம் பால்/கலாகண்ட்/திரட்டுப்பால்/ஜாமூன் சாப்பிட்டிருக்கீங்களா? அம்பத்தூரில் இருந்தவரை மிகப் பக்கத்திலேயே இருந்த கொரட்டூர் டிப்போவில் போய் வாங்கி வந்திருக்கோம். இப்போக் கூடப் போனமாசம் என் தம்பி ஆவின் திரட்டுப்பால் வாங்கிக் கொண்டு வந்திருந்தார்.

      நீக்கு
    5. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆவினின் பாதாம்பால் நன்றாக இருக்கும். வடக்கே போனால் அமுல். அமுலின் எல்லாத் தயாரிப்புகளுமே நன்றாக இருக்கும்.

      நீக்கு
    6. ஆம்.  நன்றாய் இருக்கும்.  நாங்களும் அவ்வப்போது வாங்குவோம்.

      நீக்கு
    7. என்னே எனக்கு வந்த சோதனை.. இனிப்பை விலக்கி மூன்றாவது நாள். வாய்ப்பிருந்தால் மாலை பிரேமா விலாஸ் -பார்க்கத்தான் முடியும், கூடலழகரைச் சேவித்தபின்..

      நீக்கு
    8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    9. ஆவின் இனிப்புகளை தவிர்த்து முப்பத்தைந்து வருடங்கள் ஆகின்றன..

      தற்போது முழுதுமாக இனிப்பை நிறுத்தி ஓராண்டு ஆகின்றது..

      நீக்கு
    10. எதுவும் அளவோடு இருந்தால் நல்லது நெல்லை! நீங்க ஆனால் அப்படி நடந்துக்கறதில்லை. நானே சாப்பிட்டுவிடுவேன் எனப் பல முறைகள் சொல்லி இருக்கீங்களே! உண்மையில் அந்த வெளேரென்ற பால்கோவாவின் ருசி இன்னமும் அடி நாக்கில் இருக்கு. ஆவினின் திரட்டுப்பால் கொஞ்சம் ப்ரவுன் நிறத்தில் இருக்கும். ஆனாலும் சுவை நன்றாக இருக்கும்.

      நீக்கு
    11. @துரை!தனியாரால் நடத்தப்படும் இனிப்புக்கடைகளை விட ஆவினின் தயாரிப்பு நன்றாகவே இருக்கும். மதுரையில் ஆவினை ஒட்டி ஒரு பார்க் உண்டு. சனி,ஞாயிறுகளில் கூட்டம் தாங்காது. ஒரு முறை மதுரை போனப்போ என் அண்ணா, மன்னி (பெரியப்பா பிள்ளை) அங்கே அழைத்துப் போய் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தார்கள். சுத்தமான பாலில் தயாரிக்கப்பட்டது. அதுவும் மதுரைப்பக்கம் பசுமாடுகளே அதிகம் என்பதால் பசும்பால் தான் பெரிதும் புழக்கத்தில் இருக்கும். மதுரையில் காஃபி, தேநீர் போன்றவையும் பசும்பாலிலேயே அநேகமாகப் போட்டுக் கொடுப்பார்கள். கடைகளுக்குப் பால்காரங்க பெரிய பெரிய கான்களில் பால் கொண்டு வருவாங்க. இப்போல்லாம் எப்படியோ!

      நீக்கு
  9. அனுஷ்கா பற்றிய இந்தச் செய்தியையும் படத்தையும் பார்க்கையிலே உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...  பானு அக்காவை நினைத்துக் கொள்ளவில்லையா?

      நீக்கு
    2. இல்லை, அனுஷ்கா என்றாலே உங்க நினைப்புத் தானே வருது! :))))

      நீக்கு
    3. இப்படி மறுபடி சொல்லச்சொல்லி கேட்டுக்கறதும் சுவாரஸ்யம்தான்!!

      நீக்கு
  10. இங்கும் ஊடலில் தோற்றவர் வென்று விட்டார்...!

    பதிலளிநீக்கு
  11. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்திப்போம். வாழ்க. வாங்க துரை செல்வராஜூ அண்ணா... வணக்கம்.

      நீக்கு
  12. பாட்டுக்குப்
    பாட்டு..
    பாட்டுக்குள்
    பாட்டு..
    பாராட்டும்
    பாட்டு..
    சீராட்டும்
    பாட்டு
    ஏரோட்டும்
    பாட்டு
    எசப்பாட்டும்
    பாட்டு
    இசையான
    நெஞ்சுக்குள்
    எல்லாமே
    பாட்டு!..

    பதிலளிநீக்கு
  13. அதுக்கு தொடர்பாக இதை எழுதுவதற்குள் உங்கள் கருத்து நுழைந்ததில் அர்த்தம் மாறி விட்டது..

    நான் " நிப்பாட்டு " என்று எழுதியது எனக்குத் தான்..

    பதிலளிநீக்கு
  14. அனுஷ்கா செய்த தவறு அந்தப் படத்தில் நடித்தது. யோகா மேல் அவ்வளவு நம்பிக்கை.

    பதிலளிநீக்கு
  15. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்.

    முதல் பகுதி சுவாரஸ்யம். நன்றாக ஒருவரையொருவர் புரிந்து கொண்ட தம்பதிகளுக்குள் கோபதாபங்கள் சில மணி நேரங்கள்தான். உங்கள் பாஸுக்கு உங்களைப் போலவே இசையார்வம் இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயந்தானே..இருவரும் சேர்ந்து பாடுவது என்பதும் நல்ல விஷயம். உங்கள் இருவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

    இரண்டாவது நானும் உங்களைப்போல ஏதாவது யாராவது பேசும் போது, இல்லை, நானே எதையாவது யாருடனாவது பேசும் போது ஒரு வாக்கியம் ஒரு பாடலை எனக்கு நினைவு படுத்தி விடும்.அன்று முழுவதும் அதே பாடல் மனதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். சமயத்தில் வாயை திறந்து பாடவும் வைத்து விடும். (அப்போதெல்லாம் எங்கள் குழந்தைகள் அம்மா.. இன்று உனக்கு வாணொலி கேட்கும் வேலை மிச்சம் என கேலி செய்வார்கள்.)

    நீங்கள் இப்போது பகிரும் வெள்ளி பாடல் வீடியோக்களும் வெள்ளிதோறும் என் நினைவுக்குள் இருந்தபடி பாடல்கள் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். நானும் மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டேயிருப்பேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே..  கமலா அக்கா..  நீங்களும் எண்ணெய் போலதானா?  என் நண்பர்களில் நிறைய பேர்கள் பாடலே கேட்கமாட்டார்களாம்.  புத்தகமும் படிக்க மாட்டார்களாம்!

      நீக்கு
  16. "கிளியக்கா" இந்த பெயரைக் கேட்டதும் எனக்கு தர்மராஜா திரைப்படத்தில் வரும்...

    கிக்கி காக்கி கிளியக்கோ கேட்டு சொல்லேன் ஒரு வழியக்கோ என்ற பாடல் நினைவு வந்தது.

    சிறு, சிறு ஊடல்கள் தேவைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா. பிழை ஏற்பட்டது. திருத்தி விட்டேன் ஜி. நன்றி.

      நீக்கு
  17. ஊடலும் அதன் பின்னான ஸாரியும் தேவை தான். நாம் தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்து மன்னிப்பு கேட்டு விட்டால் நல்லது தான் - அது தான் நல்லதொரு நட்பு, உறவு!

    கோணங்கி - ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

    பொக்கிஷம் படங்களனைத்தும் சிறப்பு. மிகவும் ரசித்தேன்.

    அனுஷ்கா - வேதனை. சில சோதனை முயற்சிகள் இப்படி வேதனையாகிவிடுவது வழக்கம் தானே.

    பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் அனைத்தையும் ரசித்தேன். தொடரட்டும் கதம்பம் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈகோ இல்லாமல் இருந்தால் சரி.. இல்லையா? நன்றி வெங்கட்.

      நீக்கு
  18. பாட்டுக்கு எதிர்பாட்டு :) கொடுத்து வைத்தவர்.

    படங்கள் அனைத்தும் பொக்கிசங்கள்.

    பதிலளிநீக்கு
  19. எப்பொழுதுமே ஏதாவது மாறுதலாகச் செய்ய எனக்குப் பிடிக்கும் என்பது உங்களுக்கும் தெரிந்த விஷயம். இந்தத் தடவை 'பின்னூட்டங்களைப் பற்றி பின்னூட்டம் போடலாமா?' என்று நினைத்தேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறுதலாகச் செய்கிறேன் மாறுதலாகச் செய்கிறேன் என்று வழக்கமாக செய்வதையும் தவிர்த்து சமயங்களில் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது, கவனித்தீர்களா?!  எழுதுபவர்களுக்கு ஏமாற்றம்!

      நீக்கு
  20. ஒரு சிறுகதையாக அதை எழுதி எபிக்கே அனுப்பி விடலாமா என்ற யோசனை இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. அந்த வெள்ளைக்காரப் பெண்ணைப் பார்த்தால் "wuthering heights" serial கதாநாயகியாக நடித்த பெண்ணைப் போல் இருக்கிறாள்.

    பதிலளிநீக்கு
  22. பாவம் பாஸ்.....அவங்க ஆர்வமா பாடும் போது

    'ஆஹா.. காயப்படுத்திட்டோமே சீராமு.. சரி செய்யணுமேடா சீராமு...'//

    ஹாஹாஹாஹா அப்படி வாங்க வழிக்கு....

    //ஒரு வீடு என்றால் கலகலப்பாக இருக்கவேண்டும். //

    அதே அதே...எனக்கும் வீடு கலகலப்பாக இருக்க வேண்டும்....

    // எங்கள் வீட்டில் அந்த கலகலப்புக்கு காரணம் பாஸ்தான். அவர்தான் பெருமளவு காரணம். ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார், சின்னச் சின்னதாய்ப் பாடிக் கொண்டிருப்பார். //

    நிஜம் நிஜம் நிஜம்!!!! எனக்குமே தெரியுமே!!!......பாஸ் சமத்து...ஓபன் டைப் மனசுல எதுவுமே வைச்சுக்காம பேசக்கூடியவங்க....எனக்கு ரொம்பப் பிடிக்குமாக்கும்!!!

    ஆமாம் பெரியவர் ராகுலும் அப்படித்தான் முன்ன கூட எழுதியிருக்கீங்க ஆஃபீலருந்து வந்ததும் கதை எல்லாம் சொல்லி...அதை நீங்க கேட்கணும் இல்லைனா வருத்தப்படுவார்ன்னு...

    //நானும் இளையவனும் பெரும்பாலும் மௌனமாய் இருப்போம். 'ஊமைச்சாமிகள்' என்று... இல்லை, இல்லை.. ஊமைக்குசும்புகள்' என்று பெயர் வாங்கி இருந்தோம்.//

    ஹாஹாஹாஹா.....

    கீதா

    பதிலளிநீக்கு
  23. ஸாரி.. அப்புறம் உன் இஷ்டம்..."

    ஐந்து நிமிடங்களில் இயல்பு நிலை திரும்பியது!//

    ஹப்பா அப்படி வாங்க .....இப்படியான மெல்லிய ஊடலும் இது போன்ற மெல்லிய ஸாரிகளும் குடும்பத்தின் ஹார்மொனியை இழைக்கும்....மெருகேற்றும்....

    ரசித்து வாசித்தேன்.......கதை எழுதலாம் போன்று இருக்கு......இப்ப வந்தாலும் உக்காந்து எழுதணுமே....அதுதானே பிரச்சனை..

    .ஆனால் இப்படி ஒரு சின்ன ஊடல் (பாட்டுதான்....ஆனால் அது கொஞ்சம் வேறு தினுசு) ஒன்று ஒரு பெரிய கதையில் வருது....

    பாஸ் ரொம்ப நல்லா பாடுவாங்க. அது சரி அந்த ஒரு வரி மட்டும் சாய்வான எழுத்தில்!!!!! ஹாஹாஹாஹா....அதில் அர்த்தங்கள் பல!

    கீதா




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே,,  இதுவும் கதையில் வருதா?  அப்புறம் கீதா..  உங்கள் கதை எப்போது, எத்தனை நாட்களுக்குமுன்  எபியில் வந்தது என்று சொல்லுங்கள் பார்ப்போம்?!!!

      நீக்கு
  24. பாஸும் நீங்களும் அந்தாக்ஷரி பாடுவது பத்தி (அதாவது அந்தாக்ஷரின்னு இல்லை நீங்கள் ஒரு வரி பாட அவர் ஒரு வரி பாட...) நிஜமாகவே அருமையான ஒரு ஹார்மொனி ஸ்ரீராம்!! இதை அப்படியே தொடருங்க......!! சரி இதுல சிலது இங்க சொல்லலை....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தாக்ஷரி என்று சொல்ல முடியாது.  பாட்டுக்கு எதிர்ப்பட்டு, இசைப்பாட்டு பாடுவதுதான் அந்தாக்ஷரி.  நாங்கள் அந்தப் பாட்டையே தொடர்வோம்.  அவருக்குத் தெரியாத பாடலை நான் பாடிவிட்டால் எனக்கு நிலை கொள்ளாத பெருமைதான்!  மனதுக்குள்தான்!

      நீக்கு
  25. கோணங்கி - மீ டூ மாதிரி இப்ப ஆண்கள் காலம் போல! வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை.

    அனுஷ் குண்டானது - படத்துக்காகச் செய்வது எப்படி எல்லாம்முடிகிறது பாருங்க....பொது வாழ்க்கையில் இருந்தால் நம் அழகு, உடலமைப்பு எல்லாமே விமர்சிக்கப்படுகிறது பொதுவெளியில்....இந்த culture சரியா என்றால் என் தனிப்பட்டக் கருத்து சரியல்ல...

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அவர்கள் வாழ்வை அவர்களால் இயல்பாக வாழமுடியவில்லை.  சின்னப்பையன் ஸ்ரீராம் வாயில் எல்லாம் விழா வேண்டி இருக்கிறது!!

      நீக்கு
  26. போகன் நினைவிருக்கிறது. அமானுஷ்யம் எழுதுவார். எங்க ஊர்க்காரர்.

    கவிதையில் பல அர்த்தங்கள் உட்படுத்தலாம்.....சிந்திக்க வைக்கும் வரிகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வரியும் உண்மை.  இரண்டாம் வரியும் உண்மை.  அப்பாதுரை போகன் சங்கரின் ரசிகர்!

      நீக்கு
  27. ஆமாம் பெண்கள் பற்றியது வாசித்துள்ளேன். மனதை வேதனை கொள்ளச் செய்யும். கில்லர்ஜியின் பதிவு நினைவுக்கு வருது.

    நேற்று பெண்கள் தினம்...ஆமாம் அதுக்கென்ன...ஹாஹாஹாஹா ஒரே ஒரு கேள்வி, நேற்று பாலியல் செய்திகள், மனைவியை கத்தியால் குத்தினான், வெட்டினார், பெண் குழந்தை அனாதையாகக் கண்டெடுக்கப்பட்டது, மனைவி கணவனை விஷம் வைத்துக் கொன்றாள் இப்படியான ஏதேனும் ஒரு செய்தி கூட இல்லாமல் செய்திகள், வந்தனவா? !!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தச் செய்திகள் இல்லா விட்டால் செய்தித்தாள் விற்பனை பாதித்து விடும்!

      நீக்கு
  28. பெண்களைப் பற்றிய ஆங்கில வரிகளை வாசித்ததும் பாரதியாரின் பெண் விடுதலைப்பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண் விடுதலை வேண்டும்.. பெரிய கடவுள் காக்க வேண்டும்.

      நீக்கு
  29. பொக்கிஷப்படங்கள் முதல் படம் கொஞ்சம் வேதனை மற்றபடங்கள் எல்லாமே பொக்கிஷம் ரசித்தேன். ஆமாம் ஸ்பென்சரில் வாங்கினால் பெரிய ஸ்டேட்டஸ் ஒருகாலத்தில்...

    சைக்கிள் விதிகள் ஒரு காலத்தில் இருந்தது நான் அறிந்தே நினைவிருக்கிறது. இரவு முன் லைட் பின் லை இல்லை என்றால் அபராதம் உண்டு போலீஸ் பிடிப்பார்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் முதலில் அந்த சைக்கிள் படத்துக்கு "சார்..  சார்..  சைக்கிளுக்கெல்லாம் ஹெல்மெட் தேவை இல்லை சார்...  தப்பாய் புரிஞ்சுகிட்டு இருக்கீங்க" ன்னு யோசிச்சிருந்தேன்.  பதிவிடும் அது நினைவுக்கு வரவில்லை!

      நீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    நடிகை அனுஷ்கா எப்போதுமே முக அழகுதான். உடல் பருமன், ஒல்லி என்பது சிலருக்கு அதிர்ஷ்டவசமாக அமைந்து விடுகிறது.

    கவிதை புரியவில்லை. அரசியல் சார்ந்ததா?

    தூரமாக வைத்து பார்க்கும் படமும் புரியவில்லை. ஆனால், படத்தை தூரத்தில் வைத்துப் பார்த்தேன். ஷாக் ஆனேன். என் கண்பார்வை வர வர மங்கிக் கொண்டுதான் வருகிறது. ஹா ஹா ஹா. வேறு ஒன்றும் தெரியவில்லை. நீங்கள் விளக்கினால் புரிந்து கொள்கிறேன்.

    பொக்கிஷ படங்கள் அனைத்தும் அருமை. இன்றைய கதம்ப பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் பருமனானாலும் அனுஷ் அழகுதான்.  அந்தப் படம் கண்கள் வலப்பக்கமும் இடப்பக்கமும் இடம் மாறுகின்றன என்று நினைக்கிறேன்.  நன்றி கமலா அக்கா. கவிதை கடவுளை கேள்வி கேட்கிறது. கேலி செய்கிறது.

      நீக்கு
  31. பாட்டுக்கு பாட்டு நிகழச்சி போல பாடி இருக்கலாம். கூட சேர்ந்து பாட சொன்னது மனம். இனிமையான பாடல் வேலையை செய்யவிடவில்லை, அதனால் சிறு கோபம்.


    //உனக்கே தெரியும்.. நான் பாட்டு கேட்டால் இடையூறின்றி பாட்டு கேட்க விரும்புவேன்.. எழுதிக் கொண்டிருந்தேன்.. மனசு அதில் செல்லாமல் உன் பாட்டிலேயே இருந்தது. நீ வேறு நல்லா பாடுவியா.. பாட்டுலதான் கவனம் போகுது..//

    பாஸூக்கு ஏற்பட்ட கோபத்தை தணிக்க பேசிய விதம் அருமை.
    ஆடி பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது என்ற ரகம் என்று நினைக்கிறேன் பாஸ்.
    நீங்களும் உங்கள் துணைவியும் இசையோடு இசைந்து வாழ்க! வாழ்க வளமுடன்.

    எனக்கும் பாடல்கள் கேட்டுக் கொண்டு, அதனுடன் சேர்ந்து பாடி கொண்டு வேலை பார்ப்பது பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வப்போது நிகழும் செயல் இது கோமதி அக்கா. நன்றி.

      நீக்கு
  32. வணக்கம் சகோதரரே

    தூரத்தில் வைத்து பார்க்கும் படம் ஜூம் பண்ணி பார்த்ததில் படத்தில் விழியின் பார்வை அங்குமிங்கும் மாறுவதை இப்போது புரிந்து கொண்டேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. நானும் லேட்டாகத்தான் புரிந்து கொண்டேன்!

      நீக்கு
  33. நீங்கள் பாட, அதற்கு பாஸ் எதிர்பாட்டு பாட.. அஹா! என்ன பொருத்தம்!
    ஈகோ பார்காமல் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட உங்கள் பெருந்தன்மை பாராட்டுதல்களுக்குரியது.
    பொக்கிஷ படங்கள் அருமை!
    அந்த படத்தை சாதரணமாக பார்க்கும் பொழுதுதான் பயங்கரமாக இருக்கிறது. தூரத்தில் வைத்து பார்த்த பொழுது அந்த ஓரக்கண் பார்வையை ரசிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!