அப்பாதுரை :
சைக்கிளில் குரங்கு பெடல் அடித்துப் போன அனுபவம் உண்டா?
# எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது!
& நான் சைக்கிள் விடக் கற்றுக்கொண்டதே சைக்கிளின் பின்னால் இருக்கும் கேரியரில் உட்கார்ந்தபடிதான். Crank pedaling (குரங்கு பெடல் !!) செய்வதைவிட அது எனக்கு சுலபமாக இருந்தது.
இப்போதெல்லாம் சிறு பிள்ளைகளுக்கு மின்சார மோடார் பைக் (8km வேகம் ஓடக்கூடியது) வாங்கிக் கொடுக்கிறார்களே பெற்றவர்கள்? லைசென்ஸ் தேவையில்லாத இந்த பைக்குகளில் சிறு பிள்ளைகள் அலட்சியமாக குறுக்கும் நெடுக்கும் ஓடி பிறருக்கு இடைஞ்சல் தருவதை பொருட்படுத்துவதில்லையே!?
# நான் இதுவரை பார்த்ததில்லை. எனினும், இதனால் பெரிய தீமை எதுவும் இருக்காது என்றே தோன்றுகிறது. பிள்ளைகளுக்கு பயிற்சி என்று எடுத்துக்கொள்ளலாமோ?
ஒப்பிடுக: முத்துக்குளிக்க வாரியளா, அலமுத்து ஹபீபி.
# அலமுத்து ஹபீபி நான் கேட்டதில்லை. முத்துக்குளிக்க நல்ல பாடல். அப்போது அது ஒரு புதுமுயற்சியும் கூட.
& அதே அதே.
சிவாஜி கணேசன் நடிப்புக்கு ஈடு யார்? இணை யார்?
# எஸ்.வி.சுப்பையா. மேஜர் சுந்தரராஜன்.
& நாசர், கமலஹாசன்
கீதா சாம்பசிவம் :
எத்தனை பேருக்கு நூறுநாள் வேலைத் திட்டம் மத்திய அரசினுடையது என்பது தெரியும்?
# இது எங்களுக்கு எப்படித் தெரியும்?
& வேலை பார்த்த காலங்கள் எல்லாம் போனபின் - இதை எல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வம் இல்லை.
108 ஆம்புலன்ஸ் திட்டமும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது என்பது தெரியுமா?
# தெரியாது.
& ஊஹூம் !
அதே போல் ரேஷன் பொருட்கள் மாநிலங்களுக்கு வழங்குவது மத்திய அரசின் உணவுத்துறை மூலம் என்பதும் ஒவ்வொரு மாநிலத்தின் தேவைக்கேற்பப் பங்கிட்டு அளிக்கப்படும் எனவும் எல்லோருக்கும் தெரியுமா? கொரோனா கடுமையாக இருந்த சமயம் ரேஷனில் ஒரு கிலோ கொண்டைக்கடலை தரப்படும் என நிதி மந்திரி அறிவிச்சதாவது நினைவில் இருக்கா?
# எல்லாருக்கும் எனக்கும் தெரியாது. கொண்டைக்கடலை கூட இப்போதுதான் தெரியும்.
& ரேஷனில் பொருட்கள் வாங்கியது முப்பது வருடங்களுக்கு முன்பு. அதனால் இப்போது இதை எல்லாம் தெரிந்துகொண்டு ஆகப்போவது ஒன்றும் இல்லை.
மேலே சொன்ன 3 திட்டங்களும் மோதி பிரதமரக்கும் முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டவை என்பதும் தெரியுமா?
# அட, அப்படியா ?
& தெரியாது.
பானுமதி வெங்கடேஸ்வரன் :
நம்முடைய பாரம்பரியத்தில் பழக்கம் இல்லாத விநாயகர் ஊர்வலம், ஹோலி போன்றவை இப்போது பிரபலமாகி வருகிறதே! இது பற்றி ..
# நல்லிணக்கம் ஒருமைப்பாடு என்று வரவேற்கலாம்.
& ஏதோ கொண்டாட சில வாய்ப்புகள். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் .. ..
குலாப் ஜாமூன்,ட்ரை குலாப் ஜாமூன், காலா ஜாமூன் இந்த மூன்றிர்க்கும் செய்முறையில் என்ன வித்தியாசம்?
# Wrong number.
& செய்முறை வித்தியாசம் தெரியாது; எல்லாவற்றிலும் சாம்பிள் அனுப்புங்கள் - சாப்பிட்டுப் பார்த்து சுவையில் வித்தியாசம் தெரிகிறதா என்று சொல்கிறேன்.
70களில் பெல்பாட்டம் என்று பாவாடை மாதிரி தரையை பெருக்கும் ஹை ஹிப் பேண்ட், தோள்வரை வழியும் தலைமுடி, பெரிய காலர், பட்டை பெல்ட், முகத்தை மறைக்கும் கண்ணாடி.. என்ற உடையலங்காரம் ஃபேஷனாக இருந்ததே.. அப்படிப்பட்ட அலங்காரத்தில் உங்கள் பழைய புகைப்படங்களை இப்போது பார்க்கும் பொழுது என்ன தோன்றும்?
# அந்த மாதிரி அலங்காரங்களை நான் செய்து கொண்டதில்லை !
& நான் வேலை பார்க்க ஆரம்பித்த காலம் அது. அப்போது பேஷன் ஆக இருந்தாலும் - அதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்று நினைத்ததால் சிறிய அளவில் பெல் பாட்டம் பாண்ட் மட்டும் (தையற்காரர் வற்புறுத்தலால் ) திகைத்து அணிந்தது உண்டு.
ஜெயக்குமார் சந்திரசேகரன்:
வடக்கு இந்தியாவில் உள்ள வைணவ கோயில்கள் பெரும்பாலும் கிருஷ்ணன், ராமன், ஆஞ்சநேயர் போன்ற மூலவர்களை கொண்டிருக்கிறதே தவிர நமது தமிழகம் போன்று விஷ்ணுவை மூலவராக கொண்டிருப்பதில்லை, ஏன்?
# யோசிக்க வேண்டிய விஷயம் தான். வடக்கே பத்ரிநாத் தலத்தில் விஷ்ணு தான் மூலவர். வேறு பிரதான விஷ்ணு கோயில்கள் வடக்கே இருக்கிறதா என்று தெரியவில்லை. பூரி ஜெகன்னாதர் கூட பலராமர் சுபத்திரையுடன் இருக்கிற கிருஷ்ணர் என்று தான் நினைக்கிறேன்.
வடக்கே மக்கள் ராமன் கிருஷ்ணன் போன்ற அவதாரங்களை அதிகம் கொண்டாடி இருப்பதாகத் தெரிகிறது.
ஷண் மதங்களை நிறுவிய சங்கரர் தெற்கத்தியவர் என்பதால் வேறு வேறு மூர்த்தங்களை வழிபடும் முறை தெற்கே அதிகம் பரவி இருக்கலாம்.
இந்தக் கேள்விக்கு நெல்லைத்தமிழன் கூறியிருக்கும் பதில்:
தமிழகத்திலும் நிறைய இராமர், வேணுகோபாலன் கோவில்கள் இருக்கின்றன. (பலவும் மிக மிகப் புகழ்பெற்றவை. உதரணமாக இராஜகோபாலன், ராமர் கோவில்கள் பலவும்-திவ்யதேசங்கள் என்று சொல்லப்படுபவைகளில் உண்டு) மற்ற அவதாரங்களில், நரசிம்மருக்கு கோவில்கள் இருக்கின்றன. வட இந்தியாவில், இரண்டு அவதாரங்களான இராம கிருஷ்ணர்கள் அவதரித்த, வாழ்ந்த புண்ணிய பூமி பரந்து விரிந்திருக்கிறது. அயோத்யா, மதுரா, த்வாரகா என்று பலமுறை நாம் கேள்விப்படுவதால், வட இந்தியாவில் விஷ்ணு கோவில்களோ இல்லை வேறு அவதாரங்களுக்கான கோவில்களோ இல்லை என்று அனுமானிக்கிறோம். சாளக்ராமத்தின் (நேபாளம்) மூலவர், ஸ்ரீமூர்த்தி என்று சொல்லப்படும் விஷ்ணு. ரிஷிகேஷ், ஹரித்வார் போன்ற இடங்களிலும் விஷ்ணுகோவில்கள் உண்டு. பத்ரிநாத், நாராயணனுக்கான கோவில். ஜோஷிமட் போன்ற இடங்களில் நரசிம்மருக்கான கோவில் உண்டு வட இந்தியாவில் விஷ்ணுவின் அம்சமான நாராயணனுக்கு நிறைய கோவில்கள் உண்டு. தமிழகத்தில் வைணவம் போன்று வட இந்தியாவில் ஸ்வாமி நாராயணன் என்ற பிரிவு உண்டு. அவர்கள் ஏற்படுத்திய பற்பல கோவில்கள் நாராயணனை, லக்ஷ்மியை பிரதான தெய்வங்களாகக் கொண்டது. அதனால் விஷ்ணுவை மூலவராகக் கொண்டிருப்பதில்லை என்று சொல்லமுடியாது.
அப்பாதுரை பக்கம்
நாய் படும் பாடு!
நீங்க ஒரு சமூக ஆய்வாளர்.
அட, சும்மா சரின்னு சொல்லுங்க.
திடீரென்று அணுகுண்டு வெடிக்கிறது அல்லது அணுசக்தி ஆலை புஸ்வாணம் ஆகிறது.
பயப்படாதிங்க. நம்ம கதி அதோகதிதான், அதனால பயப்பட்டு ஒரு பலனுமில்லே.
இருந்தாலும் எல்லாம் வல்ல ஈசர் கிருபையில் (அணு விபத்து அப்ப யாரோட கிருபைனு கேட்டால் ஏழை நான் என் சொல்வேன்?) யாராவது பிழைத்து இரண்டு மூன்று தலைமுறைகளில் சமூகம் தழைத்தால் அவர்களில் என்ன மாற்றம் இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சி செய்ய உங்களுக்குத் தோணுமா தோணாதா?
இதே தான் கேஸ் வெஸ்டர்ன் ரிஸர்வ் பலகலைல ஒரு ஆய்வாளருக்குத் தோணிச்சு. பெயர் தேவைனா பரமகுருனு வச்சுக்குவோம்.
செர்னோபில் விபத்து ஏற்பட்டப்ப அங்க இருந்த செல்வந்தர் மக்கள் பலர் எல்லாத்தையும் தூக்கிட்டு தப்பி ஓடினாங்க. பிள்ளைகளைக் கூட்டிட்டுப் போனவங்க வளர்த்த நாய்களை அங்கேயே விட்டு ஓடினாங்களாம். வண்டில இடம் இருந்திருக்காது பாவம்.
அந்தக் குடியிருப்புகளில் இருந்த நாய்கள் பகவத்க்ருபைல பிழைச்சு நாப்பது ஐம்பது வருஷமா பல தலைமுறைகள் தழைச்சும் வந்திருக்கிறதைக் கண்டுபிடிச்சாங்க. அம்போனு விட்ட அபார்ட்மெண்டுகளுள் எப்படியோ நாயினம் தழைப்பதை வியந்த பரமகுரு கூட்டத்துடன் ஆய்வு செய்யப் புறப்பட்டார்.
ஆய்வு செய்தார். ஆய்வுனா உங்க ஆய்வு என் ஆய்வாட்டம் லேசுபட்ட ஆய்வில்லே.. மகாய்வு.
கடைசியிலே படா அறிக்கை வெளியிட்டார்.
நாய்களும் மனிதர்கள் போலவே அணு விபத்தால் பாதிக்கப் படுகின்றன. ஆனால் நாயினம் விபத்தின் விளைவுகளை தங்கள் பரிணாம வளர்ச்சியில் உட்புகுத்திக் கொண்டு மனிதரை விட வேகமாக மாற்றத்தை ஏற்கின்றன. இன்னும் நிறைய ஆய்வு செய்தால் அணு விபத்து விளைவுகளை வென்று வளரும் ரகசியத்தை மனிதன் நாயினத்திடம் அறிய முடியும்.
இதான் அவருடைய ஆய்வறிக்கை.
மார்ச் 8 ஸ்மித்ஸோனியன் பத்திரிகைச் செய்தி.
படித்ததும் முதலில் தோன்றியது "ஆய்வாடா இது.. போடாங்..".
பிறகு என்னைச் சுற்றிச் சுற்றி வந்த கேள்வி: வளர்த்த நாய்களை விட்டு ஓட எப்படி அந்த மனிதர்களுக்கு மனம் வந்தது?
= == = = =
இனிய காலை வணக்கம். இது முதலில் நல்ல கருத்துக்காக. துரை செல்வராஜு சார் நோட் செய்யவும்
பதிலளிநீக்குஎனது கருத்தையும் மறுதலிக்காமல் ஏற்றுக் கொண்டதற்கு நெஞ்சார்ந்த நன்றி..
நீக்குமகிழ்ச்சி..
அன்பின் வணக்கங்களுடன்
++++ பாஸிடிவ்
நீக்குஅ.து சார்.. அது ஒற்றை அழுக்கான வண்டியாக இருந்திருந்தால், அதில் பெற்றோருக்கு இடம் நஹீ. ஒன்லி காதலி அல்லது மனைவி. குழந்தைகூட அப்புறப் பெத்துக்கலாம். (பொங்காதீங்க. இவர்களே கொஞ்சம் வயசாயிருந்தா பையன் கீழே தள்ளி வண்டியைக் கைப்பற்றிக்கொள்வான்) இதுல வளர்ப்பாம் நாய் பூனையாம்
பதிலளிநீக்குஆளுக்கான
நீக்குகேரியரில் உட்கார்ந்தபடி - சாருக்கு கை நீளம்.. ஜாக்கிரதையா இருந்துக்கிடணும். காலும் நீளம் போலுக்கு
பதிலளிநீக்கு:)))
நீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குகாரடையான் நோன்பு வாழ்த்துக்கள்.
நோன்பைவிட கொழுக்கட்டை முக்கியம்
நீக்குவாழ்த்துவோம்!
நீக்குகாரடையான் நோன்பிற்கு கொழுக்கட்டை செய்வார்களா ? எனக்குத் தெரிந்து கார அடை, வெல்ல அடை with வெண்ணெய்.
நீக்குநோன்புகொழுக்கட்டைதான்னு சொல்லுவோம். எங்களுக்கு உப்புமா கொழுக்கட்டைதவிர பூரண கொழுக்கட்டைலாம் கிடையாது
நீக்குஅப்படியா!
நீக்குகீசா மேடம் கேள்விகள்... ஏதோ மத்திய அரசு எங்கேர்ந்தோ மக்கள் சேவை செய்யற மாதிரி சொல்றாங்க. இப்படிக்கா எடுத்து அப்படிக்கா கிள்ளிக் கொடுத்தால் தானமாயிடுமா?
பதிலளிநீக்குஇதுக்கு, அதானே, கருத்துரைக்கு நன்றி , :-) - தவிர வேறு கேஜிஜி எழுதுவாரா?
நீக்குஎழுதுவார்.
நீக்குவேறு கேஜிஜி//
நீக்குகரெக்ட்!!! வேறு கேஜிஜி எழுதுவார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹாஹா அதானே கௌ அண்ணா எழுதுவார்ன்னு சொல்லிருக்கார் பாருங்க!!
கீதா
அதானே!
நீக்குபெல்பாட்டத்தைவிட கன்னட நடிகர் ராஜ்குமார் உறவினன் நான் தாளவாடியில் படிக்கும்போது எலஃபென்ட் பெல்பாட்டம் அணிந்து பள்ளிக்கு வந்தது நினைவிலிருக்கிறது. அதன் பாட்டம் 3-4 அடி சுற்றளவு
பதிலளிநீக்குஅந்த பெல்பாட்டதிற்கு கீழ் ஜிப் வேறு வைத்து தைத்துக் கொள்வார்கள். பெண்கள் சாரி ஃபால்ஸ் தைத்துக் கொள்வதைப் போல..
நீக்கு:)))))
நீக்குகுலாப் ஜாமூன், டிரை, காலா - பைரவி, நடபைரவி, ஆனந்த பைரவி, சிந்துபைரவி போன்றவைகளுக்குள் உள்ள வேறுபாடுதான்
பதிலளிநீக்குஇது நல்லா இருக்கே!
நீக்குஹாஹாஹாஹா நெல்லை...நான் இங்கதான் இருக்கேனாக்கும்!!!!! என்னாது இதுக்குள்ள வேறுபாடுதானா....எல்லாமே ரொம்பவே வித்தியாசம்...பெயர்லதான் பைரவி வருது....
நீக்குஇந்த ஒப்பீடு ஜாமூனுக்குச் சரியில்லையாக்கும்!!!!!!! இதுக்கு twins, triplet babies ன்னு சொன்னாலும் பொருத்தம்...
கீதா
கேஜிஜி சார்... யார்ட்ட வேணும்னாலும் செய்முறை கேளுங்க. ஆனா கீர வேண்டாம். ஜாமூன் ஜீரால போட்டா குலாப்ஜாமூன், போட மறந்துட்டா டிரை ஜாமூன், ஜாமூன் பொரிஞ்சிக்கிட்டிருக்கும்போது அதில் கவனமில்லாமல் எபியில் கமென்ட் போட்டுக்கிட்டிருந்தா கிடைப்பது காலா ஜாமூன்பாங்க
நீக்குஹையோ நெல்லை கை கொடுங்க!!! கரெக்ட்டா சொல்லிட்டீங்க....!!!!!
நீக்குகீதா
நெல்லை இது அடுக்குமா? ஒவ்வொரு சமையல் குறிப்பு போடும் பொழுதும், பல வேரியேஷங்களை எழுதுகிறவர் கீர(கீதா ரங்கன்) அவரைப் போய்..
நீக்குயாராவது குலாப் ஜாமூன், ட்ரை குலப் ஜாமூன், காலா ஜாமூன் வித்தியாசம் எழுதுங்கப்பா..
நீக்குஎழுதுங்க.
நீக்குபானுக்கா நன்றி நன்றி.....ஆனா இந்த நெல்லை நம்மள கலாய்ச்சு கலாய்ச்சு ஓட்டப் பார்ப்பார்....நாம அதுக்கெல்லாம் அசந்துருவமா என்ன!!! கில்லாடிங்க நாம!!!
நீக்குகுலாப்ஜாமூன் நம் எல்லாருக்குமே தெரியும்....காலா ஜாமூன் கொஞ்சம் அதிகமாகக் கலர் வரும் வரை பொரிப்பது ...ஆனால் அதே சமயம் தீய்ந்து போய்விடக் கூடாது....வெளிப்புறம் கொஞ்சம் hard ஆக இருக்கணும்.
dry ஜாமூனுக்கு சர்க்கரை சேர்க்காத பால்கோவா (Khoya) பனீர் கொஞ்சம் பால் பொடி எல்லாம் கலந்து ஜாமூன் போலவே பொரித்து சர்க்கரைப் பாகில் (குலாப்ஜாமூனுக்குச் செய்வது போலத்தான்) நிறைய நேரம் போட்டு ஊற வைக்க வேண்டியதில்லை. போட்டு ஓரிரு நிமிடங்களில் எடுத்து desiccated தேங்காய்ப்பூவில் நன்றாகப் புரட்டி எடுத்து வைக்க வேண்டும் அவ்வளவுதான்
கீதா
கீர வைவிட நான் கரெக்டா எழுதுவேன் போலிருக்கு. டீட்டிஃப்ரூடி அல்லது லைட்டா தளிகையான பிஸ்தா போன்றவை காலாஜாமூன் உள்ள நடூல இருக்கும். ரொம்பநேரம் குளிச்சா ஜல்ப்பு புடிச்சுக்கும்னு ஜீரா குளத்துல போட்ட சில செகண்ட்ஸ்லயே கரைல தட்டுல எடுத்து வச்சா டிரைஜாமூன். தேவைக்கு அதிகமா குழந்தைட்ட ஈஷிக்கற அம்மாமாதிரி (கரைக்குவந்த குழந்தைமேல் பூத்துண்டு போட்டு கட்டிக்கிட்டு கொஞ்சி, இதுக்கு தண்ணீலயே விட்டிருக்கலாம்னு நினைக்கற குழந்தை மாதிரி) அதன்மேல டிரைகோகனட் போன்றவைனால முழுக்க ஆண்டிலும். நார்மல் ஜாமூன் பண்ணத் தெரிஞ்சவங்கள்லாம் வழக்கொழிந்து போயாச்சு. போன ஜெனரேஷன் கேசரி மாதிரி, யாரேனும் வரலாறு? கடை மிக்ஸ் வாங்கு (அதிலும் பல வீட்டில் பல ஒன கெட் ஒன் பாக்கெட்.. அதிலும் பல எப்படா வெளீல எடுப்பாங்கன்னு ஆறுமாசமா நம்மட்ட தூங்கற மாவு) எடுத்து பிசைந்து உருட்டி ஜீரால போட்டு நானும் பண்ணினேன் ஸ்பெஷல் ஸ்வீட் உங்களுக்காகன்னு பீத்திக்கிட்டா அது குலாப் ஜாமூன்
நீக்குஎழுத்துப்பிழை இரயில் பயணம் வாரணாசி நோக்கி
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் ஒன்னும் இங்க செய்முறை எழுதலை சும்மா கோடிட்டு காட்டினேன்....கரெக்ட்டாதான் எழுதியிருக்கிறேன்.....நீங்க எழுதுங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நான் இப்ப ஸ்வீட் செய்யறதே இல்லையே....
நீக்குகாலா ல உள்ள வைக்கறது எல்லாம் சேர்க்கைதான்....
நான் குலாப்ஜாமூன் செய்ய வேண்டும் என்றால் கடையில் அந்த மாவு எல்லாம் வாங்கும் வழக்கம் இல்லை. வீட்டில்தான். என் பாட்டியிடம் கற்றுக் கொண்டதுதான் இந்த மூன்றுமே. என் அத்தை - அப்பாவின் கூடப் பிறந்த சகோதரி கல்யாணம் ஆகிப் போனது கல்கத்தா. அங்கிருந்து நேரடியாகக் கற்றுக் கொண்டவங்க அத்தையும் பாட்டியும். அப்படித்தான் நானும் கத்துக்கிட்டேன். பாட்டி வெளியில் வாங்க மாட்டாங்க. ரெடி மிக்ஸ் லாம்...வீட்டில் பால்கோவா கிளறி செய்வாங்க.
கீதா
சுவையான தகவல்களுக்கு நன்றி.
நீக்குபொதுவே கேரளத்தில் கொண்டைக் கடலை உபயோகம் அதிகம், விரும்பி சாப்பிடுவர். ஆனால் ரேஷனில் கொடுத்த கொண்டைக் கடலை, கல் கடலையாக வேகாமல் அப்படியே பல்லை உடைக்கிறது. எங்கள் வீட்டில் இன்னும் பாக்கி இருக்கிறது. புறா கோழி போன்றவை போலும் சாப்பிட மறுக்கின்ற்ன. வடை செய்தும் பார்த்தோம். சரியில்லை.
பதிலளிநீக்குJayakumar
ஓ! கஷ்டம்தான்!
நீக்குபிற்சேர்க்கை.
நீக்குமூன்று வருடம் ஆகியும் பூச்சி வரவில்லை. என்ன மாயமோ?
Jayakumar
ஆச்சரியம்!
நீக்குஅரைப்பக்க விஷயம் தான். அதை வாசித்து முடிப்பதற்குள் என்ன மாயமோ தெரியவில்லை. அர்த்தபூர்வமாக நம்மை புன்னகைக்க வைத்து விடுகிறார் நம்ம அப்பாதுரை ஸார். சிரிக்க சிரிக்க எதையும் எழுதிச் சொல்லி மனதில் பதிய வைக்கிறது என்பது அரிய கலை.
பதிலளிநீக்குஎழுத கற்றுக் கொள்ளுங்கள் என்றால் சில பேர் முகஞ்சுளிக்கிறார்கள். இந்த எழுதற விஷயத்தில் இன்னொருத்தரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவு இருக்கிறது என்பதை நினைத்தால் பிரமிப்பாகத் தான் இருக்கிறது.
ஆம், உண்மைதான்.
நீக்குநல்லா எழுதறவங்க குறைவா எழுதறதுனால நல்லா ரசனையா எழுதறாங்களா இல்லை நல்லா எழுதறவங்க பொதுவா சோம்பேறிகளா? இல்லை எழுதி எழுதி என்னத்தக்கண்டோம்னு சலிச்சுக்கற டைப்பா? 2. எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஏன் ரொம்ப சென்சிடிவ்வா இருக்காங்க?
நீக்குநெல்லையின் கேள்விக் கணைகளோடு என்னுடைய கேள்வியையும் சேர்த்துக் கொள்ளுங்கள், எழுத்தாளர்களுக்கு திடீரென்று ரைட்டர்ஸ் ப்ளாக்(Writers block) வரக்காரணம் என்ன? வியாசருக்கே வந்ததாமே?
நீக்குஅதாவது எழுத்தாளர்களெல்லாம் வியாசர் மாதிரியாம். 10 அடி மாத்திரம் நீச்சலடிக்கத் தெரிந்த நான், மைக்கேல் ஃபெல்ப்ஸ், நான் போன்ற நீச்சல் விரும்பிகள் தண்ணீரைக் கண்டால் பாயத்துடிப்பதன் காரணம் என்னவாயிருக்கும் என்று கேள்வி கேட்பது போலிருக்கு
நீக்குகுதர்க்கமாகவும், கோணலாகவும் சிந்திப்பது எப்படி என்று நெ.த. ஒரு புத்தகம் எழுதலாம் போலிருக்கிறதே? மேலும் வியாசம் என்றாலே எழுதுவதுதான் என்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா என்ன?
நீக்குகுதர்க்கமாகவும், கோணலாகவும் சிந்திப்பது எப்படி என்று நெ.த. ஒரு புத்தகம் எழுதலாம் போலிருக்கிறதே? மேலும் வியாசம் என்றாலே எழுதுவதுதான் உங்களுக்கு உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா என்ன?
நீக்குவளர்த்த நாய்களை - தகவல் தவறு. அரசு அனுமதிக்கலை. அனைத்து நாய்களும் கொல்லப்பட்டன. தப்பித்தவைகள் கருணையால் விடப்பட்டவைதான் அங்கிருப்பவை
பதிலளிநீக்குஇந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
பரமகுரு மனதில் :-
பதிலளிநீக்குசொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமும் இல்லை..
ஒரு துணை இல்லாமல் வந்தததெல்லாம்
பாரமும் இல்லை...
நன்றி உள்ள உயிர்களெல்லாம்
பிள்ளை தானாடா...
தம்பி நன்றி கெட்ட மகனைவிட
நாய்கள் மேலடா...
நாய்கள் மேலடா...
கருத்துரைக்கு நன்றி
நீக்குஇந்த நாள் இனிய நாளாக அமையட்டும். பதில்கள் மற்றும் அப்பாதுரை பக்கம் ஸ்வாரஸ்யம் .
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசுவாரஸ்யமான கேள்வி பதில்கள் இரசித்தேன்.
பதிலளிநீக்குநான் வெகுகாலமாக ஒரு புறமே நின்று ஒரு காலில் சைக்கிள் ஓட்டிப் பழகியவன்.
காரணம் யாரும் பழகி கொடுக்க முன் வரவில்லை.
மேலும் உன்னால் முடியாது என்று சொன்னார்கள்.
அதேதான். நம்முடைய ஆர்வமும் விடாமுயற்சியும்தான் உந்து சக்தி.
நீக்குசிறு வயதில் வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஓட்டியிருகிறேன், குரங்கு பெடல் அடித்ததில்லை. ஆசை உண்டு.
பதிலளிநீக்குஅப்படியா!!
நீக்கு//அந்த மாதிரி அலங்காரங்களை நான் செய்து கொண்டதில்லை !// நீங்கள் பழமா?
பதிலளிநீக்கு:))))
நீக்குஇவங்க என்ன ஒண்ணும் தெரியாத மாதிரி கேள்வி கேட்கறாங்க. பல அப்பாக்கள் ஸ்கூல் யூனிஃபார்மையே தீபாவளி டிரெஸா வாங்கித்தரும் காலம். இதுல முழநீள காலர்.. அலங்காரங்கள் செய்துக்கலைனா பழமாம். கிழிச்சிவிட்ட ஜீன்ஸ் மாதிரி புடவைல ஆண்கள் விரும்பும் பலப்பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தால் பெண்கள் அனைவரும் பழம் கிழம்தான் ஹாஹாஹா
நீக்குஅதானே. எங்கள் வீட்டில் கூட தீபாவளிக்கு ஸ்கூல் யூனிஃபார்ம், அப்புறம் அண்ணனின் சட்டை தம்பிக்கு என்றெல்லாம் வழக்கம் இருந்தது.
நீக்குவாங்கித் தரும் காலம் என்பது பிழை. வாங்கித் தந்த காலம் என்பதுதான் சரி. நீங்கள் கல்லூரிக்கும், வேலைக்கும் சென்றதே இல்லையா? அல்லது அப்போதும் உங்கள் அப்பா வாங்கித் தந்த உடைகளைத்தான் அணிந்தீர்களா? எல்லா காலத்திலும் பெண்கள் உடை மாறிக் கொண்டே இருக்கும். முழங்கை வரை கை(வாணி ஸ்ரீ ஸ்டைல்) நீளக்கை, கஃப் கை, குட்டைக் கை, ரவிக், போட் நெக், ஹை நெக், புடவை கட்டிக் கொள்ளும் பொழுது குட்டை தலைப்பு(காஞ்சனா, சரோஜா தேவி), நீளத் தலைப்பு(ஸ்ரீதேவி) தாவணியில் வீ தாவணி என்று பல மாடல்களை ஏழை பணக்காரர் என்ற வேற்றுமை இல்லாமல் கடை பிடித்திருக்கிறோம். ஆண்களும் அப்படிதான் ஆட்டோ டிரைவர் முதல், பேங்க் மேனேஜர் வரை ஹிப்பி கிராப்பும், பெல் பாட்டமுமாகத்தான் இருந்தார்கள். அதை செய்து கொள்ளாதவர்கள் பழம்தான்.
நீக்குஇன்றைய கேள்வி பதில்கள் ரசனை..
பதிலளிநீக்குபாரம்பர்யமல்லாத கொண்டாட்டங்கள் பற்றி - எல்லாம் காசுக் கொழுப்பு..
இருப்பவன் காசைக் கரியாக்கி வெடி வெடிக்கின்றான்.. இல்லாதவன் வேடிக்கை பார்க்கின்றான்...
அவ்வளவே...
கருத்துரைக்கு நன்றி.
நீக்குவடக்கே மக்கள் ராமன் கிருஷ்ணன் போன்ற அவதாரங்களை அதிகம் கொண்டாடுவதற்கான - நெல்லை அவர்களின் விளக்கம் அருமை..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஜாமூன் பொரிஞ்சிக்கிட்டிருக்கும்போது அதில் கவனம் இல்லாமல் எபியில் கமென்ட் போட்டுக்கிட்டிருந்தா கிடைப்பது காலா ஜாமூன்..பா!..
பதிலளிநீக்குஆகா!..
காலா காலா !!
நீக்குபொதுவாக குலாப் ஜாமூன்கள் சூடாகவே சாப்பிடுவாங்க. ஆனால் காலா ஜாமூனை ஆற வைச்சும் சாப்பிடலாம். சிலர் இதை இரண்டாகப் பிளந்து உள்ளேயும் கோவா அல்லது பேடாவை வைத்துக் கொடுப்பதும் உண்டு. காலா ஜாமூனில் மட்டுமே இம்மாதிரி உள்ளே ஸ்டஃப் செய்யணும். முந்திரி/பாதாம் கேக்கை இதன் உள்ளே வைப்பதும் உண்டு. பிஸ்தா ரோலில் இந்தக் காலா ஜாமூனை வைப்பாங்க. மும்பையில் பிரபலம். சாதாரண குலாப்ஜாமூனோடு ஐஸ்க்ரீம் சேர்த்துச் சாப்பிடலாம். சிலர் காலா ஜாமூனோடும் சாப்பிடுவாங்க. ட்ரை ஜாமூன்களும் கோயா/கோவா/பனீர் சேர்த்துத் தான் தயாரிக்கிறாங்க என்றாலும் சர்க்கரைப் பாகில் போட்ட உடனே எடுத்து அதைத் தேங்காய்ப்பூவில் புரட்டி எடுத்து வைக்கணும். இது தான் வித்தியாசங்க. மூணுமே நிறையச் சாப்பிட்டிருக்கேன். இதை எழுத நேரம் எடுத்துக்கொள்ளும்படி ஆகிவிட்டது. அன்னிக்கே எழுதி இருக்கணும். முடியலை! :(
நீக்குஎன்னதான் சொல்லுங்க இனிப்பு வகைகளுக்கு அதுவும் பாலில் செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கு வட மாநிலங்களோடு போட்டி போட இயலாது. இங்கேயும் கிடைச்சாலும் அது போல மூலப் பொருட்கள் சுத்தமாய் இருக்குமானு சந்தேகம் தான்.
நீக்குகாலா ஜாமூன்.. கெடச்சாலும் கல்லா கட்டி
பதிலளிநீக்குவிடுவோம்!..
வோம்.
நீக்குகேள்வி பதில்கள் சுவாரசியம்.
பதிலளிநீக்குபாரம்பரியத்தில் இல்லாத பிள்ளையார் ஊர்வலம் ஹோலி
பண்டிகைகள் கொண்டாட்டங்கள் உருவெடுத்திருப்பது காலத்தின் மாற்றங்கள்தாம் எவையும் மற்றவர்களுக்கு இடையூறின்றி நடந்தால் நன்று .
ஆம், அதே.
நீக்குஅப்பாதுரையின் பதிவு அறிவியல் தகவல் ...ரசனையான எழுத்து. கடைசி வரியை நானும் டிட்டோ
பதிலளிநீக்குகீதா
அவர் சார்பில் நன்றி.
நீக்குகுரங்குப் பெடல் அடித்ததுண்டு ரொம்பப் பிடிக்கும். சைக்கிள் எல்லாம் ஓட்டக் கற்றுக் கொண்டது மிகவும் தாமதமாகத்தான். அப்பல்லாம் நம்மள எங்க விட்டாங்க?
பதிலளிநீக்குகீதா
இவங்க வீட்டுப் பெரியவங்களுக்கு பாதசாரிகள்மேல அன்பு அக்கறை இருப்பது, இவருக்குப் பொறுக்கலை
நீக்குநினச்சேன்....இதுக்கு கண்டிப்பா எங்கண்ணன் நெல்லை வந்திருவார்னு!!!!! வரலைனா எப்படி?!!!!!
நீக்குகீதா
:)))
நீக்குயாதும் ஊரேன்றதை தவறாப் புரிஞ்சிக்கிட்டு இந்த லேடீஸ் மாத்திரம் கரப்பான்பூச்சி மாதிரி ரோடுல ஏன் டூவீலர் ஓட்டறாங்க?
பதிலளிநீக்குபுதன் கேள்வியா?
நீக்குYes
நீக்குஆஞ்சநேயர் மூலவர் - இதுபற்றி விவரமா எழுதணும். ஆஞ்சநேயர், கோவில்களின் காவல் தெய்லம். இது தவிர ஆஞ்சி கோவில்னா எதிரே இராமர் இருப்பார், இல்லைனா சந்நிதி அமைப்பாங்க. எல்லாக் கோவில்களிலும் ஒரு தூணிலாவது ஆஞ்சி உண்டு. திருப்பதி கோவில் கட்ட முதல் தூண் (உள்ளே யோகநரசிம்ம சந்நிதிக்கு இடதுபுறம்) ஆஞ்சி இருக்கும் தூண். மொபைலில் நிறைய எழுத முடியலை
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குதனிக் கோயில்கள் முனிவர்கள் கட்டியது -பெரும்பாலும். அயோத்தி காவல் தெய்வம் ஆஞ்சி. நைமிசாரண்யத்திலும்
பதிலளிநீக்குஅப்படியா!
நீக்குபாரம்பர்யத்தில் பழக்கமில்லாத- பாரம்பர்யம் என்பதுனா என்ன?
பதிலளிநீக்குகோவில் திருவிழாக்கள் மக்களை ஒருங்கிணைக்கத் தோன்றியவை. அதன் frequency ஐ அதிகரிக்கத் தோன்றியவை பிள்ளையார் ஊர்வலம், கடலில் கரைப்பு (யோசிச்சா பரிதாபமா இருக்கு), ஹோலி (இந்தக் கொடுமையை எப்படிச் சொல்லுவேன்)- சின்ன வயதில் கோவில் பத்துநாள் உத்சவத்தின்போது இறை உருவை வீதியில் பல்லக்கில் கொண்டுவருபவர்கள்மீது மஞ்சள் கரைத்தநீர் அடிப்போம். அது பிறகு, பெண்கள் ஆண்கள்மீது அன்று ஊர்வலத்தின்போது தெளிப்பதாக இருந்தது. நவீன ஹோலி ஹம்பக்
இது புதுசா இருக்கே!
நீக்குவடமாநிலங்களில் கொண்டாடும் ஹோலிப் பண்டிகையின் உண்மையான தாத்பரியத்தைப் புரிந்து கொண்டவர்கள் வடக்கேயே இருக்கமாட்டாங்கனு நினைக்கிறேன். புனிதமான ஒரு பண்டிகை இன்றைய நாட்களில் மது அருந்திவிட்டு ஆடிப்பாடுவதாக ஆகி விட்டது. :( அதே போல் பிள்ளையார் கரைப்பும்.
நீக்குகேள்விகளும், பதில்களும் அருமை.
பதிலளிநீக்குபின்னூட்டங்கள் நன்றாக இருக்கிறது.
சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டேன் குரங்கு பெடல் அடித்தது இல்லை.
வளர்ப்பு செல்லத்தை விட்டு விட்டு போக மனம் வருமா? எப்படி முடியும்!
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு