கேரட் ஹல்வா
தேவையான பொருள்கள்:
டில்லி கேரட்(சிவப்பு நிற கேரட்) - 4
சாதாரண கேரட்டிலும் செய்யலாம்,.
பால் - 200 மில்லி
சர்க்கரை - துருவிய காரட் எவ்வளவு இருக்கிறதோ அதைப் போல் 3/4 பங்கு (1:3/4. 1:1 என்ற விகிதத்திலும் சேர்க்கலாம்)
ஏலக்காய் பொடி - 1 டீ ஸ்பூன்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி, கிஷ்மிஷ்(உலர்ந்த திராட்சை) - சிறிதளவு
செய்முறை:
கேரட்டை கழுவி துருவிக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி,திராட்சையை வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் துருவிய கேரட்டை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
பிறகு, ஒரு கப் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கேரட்டை வேக வைக்கவும்.
கேரட் வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளரவும். மிச்சமிருக்கும் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
சற்று தளர்வான பதத்திலேயே அடுப்பை நிறுத்தி விடலாம். சற்று நேரத்தில் சரியான பதத்திற்கு வந்து விடும்.
சிலர் இனிப்பு சேர்க்காத கோவா சேர்ப்பார்கள்.
சிலர் கண்டென்ஸ்டு மில்க் சேர்ப்பார்கள். கண்டென்ஸ்டு மில்க் சேர்த்தால் சர்க்கரை குறைவாக போட வேண்டும்.
கேரட்டை துருவாமல் சற்று பெரிதாக நறுக்கி, பாலில் வேக வைத்து, மிக்ஸியில் அரைத்தும் செய்யலாம்.
சற்று கெட்டியாக கிளறி, அதில் ஐஸ்க்ரீம் சேர்த்து சாப்பிடலாம்.
புத்தாண்டிற்கு நான் செய்த ஸ்வீட் இது. எடுத்துக் கொள்ளுங்கள்.
பி.கு.: கடைசி படம் மட்டும் இணையத்தில் சுட்டது.
கேரட் ஹல்வா நன்றாக உள்ளது. நான் இனிப்புகள் உண்பதை நிறுத்தி விட்டேன். காரணம் DM தான்.
பதிலளிநீக்குJayakumar
கருத்துக்கு நன்றி
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகேரட் ஹல்வா நன்றாக இருக்கிறது. படங்களுடன் செய்முறை அருமை.
டெல்லியில் இந்த காரட் தான் கிடைக்கும், காரட் அதிகம் வரும் காலங்களில் எல்லோர் வீடுகளிலும் காரட் ஹல்வா செய்வார்கள்.
இந்த காரட் மதுரையில் எப்போதாவதுதான் கிடைக்கும்.
கோமதிக்கா இங்கு பெங்களூரில் குளிர்காலத்தில் கிடைக்கும். இப்ப இங்கு கடைகளில் நிறைய கிடைக்கிறது.
நீக்குகீதா
நன்றி
நீக்குநன்றி
நீக்குகாரட் ஹல்வா பார்க்கவே அருமையாக உள்ளது. செய்முறை விளக்கங்களும் புகைப்படங்களுடன் மிக அழகு!!
பதிலளிநீக்குநன்றி மனோஜி
நீக்குகாரட் ஹல்வா சூப்பர்! பானுக்கா. ஈர்க்கிறது. ரொம்பப் பிடிக்கும் ஆனா...ம்ம்ம்ம்ம் உலகறிந்த விஷயம்தான்!
பதிலளிநீக்குஎங்க வீட்ல காரட் ஹல்வா நான் செய்யும் போதெல்லாம் சொல்வது ஒன்று உண்டு....24 காரட் ஹல்வான்னு. உடனே என்னது 24 காரட் போட்டியான்னு கேப்பாங்க.....அட சொக்கத் தங்க காரட் ஹல்வா!! அக்மார்க் போலன்னு சொல்லிப்பேன்.
நான் சொல்ல நினைத்ததை நீங்களே கடைசில சொல்லிட்டீங்க. பானுக்கா.
இன்னும் ஒரே ஒரு விஷயம் நான் செய்வதுண்டு. மில்க் மெய்ட், கோவா இதெல்லாத்துக்கும் பதிலா சில சமயம் மில்க் பௌடர் சேர்ப்பேன் கிளறும் போது. அதுவும் ஒரு தனிச் சுவையோடு இருக்கும். ஆனாலும் காரட்டின் சுவை மாறாமல் பார்த்துக் கொள்வதுண்டு.
கீதா
நன்றி கீதா
நீக்குகரட் அல்வா அருமையாக வந்திருக்கிறது .
பதிலளிநீக்குபடங்களும் நன்றாக இருக்கின்றன.
நன்றி மாதேவி.
நீக்குஇப்போது தான் நேரம் கிடைத்தது..
பதிலளிநீக்குகேரட் அல்வா செய்முறை அருமை..
வாழ்க அல்வா!..
நன்றி சகோ.//வாழ்க அல்வா!// :))
நீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய திங்களில், தங்கள் செய்முறையான கேரட் அல்வா படங்களுடன், மிக அருமையாக உள்ளது. செய்முறை விளக்கங்களும் நன்றாக உள்ளது.
முன்பு, என் குழந்தைகளின் விருப்பத்திற்காக கேரட், பீட்ரூட் என காய்கறிகள் அல்வாக்கள் செய்திருக்கிறேன். இப்போது செய்வதில்லை. செய்தாலும், என் பேரன் மாத்திரம்தான் எல்லா இனிப்புக்களையும் விரும்பி சாப்பிடுகிறான். பேத்திகளுக்கு சில வகை இனிப்புகள் பிடிப்பதில்லை. ஒரு நாள் இதுபோல் செய்து தரலாம் என நினைக்கிறேன். அவர்களும் சாப்பிடுகிறார்களா என பார்க்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களை பல நாட்களாக பதிவுலகில் பார்க்க முடியவில்லையே...! அவரின் வேலை நிமித்தமாக வெளியூர்களில் பயணமா? வாழ்க வளமுடன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இங்கு அபுதாபியில் பங்களாதேஷ் கடையொன்று இருக்கிறது கேரட் ஹல்வா ஃபேமஸ்....
பதிலளிநீக்குநன்றி சகோ.
நீக்குநான் பயணத்தில் இருப்பதால் என்னால் கருத்திட இயலவில்லை. நேற்று என் கேரட் ஹல்வா குறிப்பை படித்து பாராட்டிய எல்லோருக்கும் நெஞ்சார்ந்த நன்றி🙏🙏
பதிலளிநீக்குபானுமதி வெங்கடேஸ்வரன்
வீட்டிலேயே பால் ஏட்டைச் சேர்த்து வைத்துக் கொண்டு காரட் அல்வா கிளறிய காலம் ஒன்று உண்டு. இப்போல்லாம் காரட் அல்வாவைப் பார்த்தே சில/பல வருஷங்கள்.
பதிலளிநீக்கு