புஷ்கரில், மதிய உணவிற்குப் பிறகு, யாத்திரைக் குழுவினர் அவர்கள் வேலையை முடித்துக்கொண்டு கிளம்ப 1 மணி நேரமாகும் என்று கூறியதால், முடிந்தவர்கள் புஷ்கர் கடைவீதிகளில் நடந்துகொண்டிருந்தோம். ஆக்ராவில் எங்கள் லக்கேஜ் இறக்கப்படாது, அதனால் ஒரு செட் டிரெஸ் எடுத்துக்கொள்ளும்படிச் சொன்னார்கள். தனிப் பையில் தட்டு டம்ளர், மருந்துகளோடு ஒரு செட் டிரெஸ், குளிப்பதற்குத் தேவையானவற்றையும் எடுத்துக்கொண்டோம். எல்லோரும் தயாரானதும், பேருந்தில் எங்கள் லக்கேஜ் ஏற்றப்பட்டது. பிறகு 2 ½ மணிக்கு ஆக்ரா நோக்கிப் பயணப்பட்டோம்.
இதற்கு முந்தைய பயணத்தின்போது 1 ½ மணிக்கே புஷ்கரை விட்டுக் கிளம்பிவிட்டோம். இப்படிச் சில நேரங்களில் சீக்கிரமாகப் போகும்போது, அடுத்த இடத்தைப் பார்க்கவும் புகைப்படம் எடுக்கவும் வெளிச்சம் நன்றாக இருக்கும். அதுபோல வேறு இடங்களையும் பார்க்க முடியும். நான் இரண்டு முறை இந்த யாத்திரை சென்றிருப்பதால் சில நேரங்களில் புகைப்படங்களில் வெளிச்ச வித்தியாசத்தைக் காண முடியும்.
கங்க்ரோலி துவாரகை தரிசனத்துடன் பஞ்ச துவாரகா தரிசனம் நிறைவு பெற்றது, ஆனால் யாத்திரை அவற்றோடு ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த இடம், வளர்ந்த இடம், பிற்காலத்தில் மஹாபாரதப் போர் நடத்திய இடம், ஸ்ரீகிருஷ்ணர் மறைந்த இடம், தகனம் செய்யப்பட்ட இடம் என்று பலவற்றையும் உள்ளடக்கியது. பஞ்ச துவாரகா கோவில்களின் தரிசனத்திற்கிடையில் சோம்நாத்தில் நாம் ஸ்ரீகிருஷ்ணர் மறைந்த, தகனம் செய்யப்பட்ட இடங்களை தரிசனம் செய்துவிட்டோம். இனி ஸ்ரீகிருஷ்ணர் சம்பந்தமான மற்ற இடங்களை தரிசிக்க இருக்கிறோம். இனி யாத்திரையைத் தொடருவோம்.
புஷ்கரிலிருந்து
சுமார் 140
கிமீ
தூரமுள்ள ஜெய்பூரை அடைந்தோம். அந்த நகரத்தின் வெளிப்பகுதியில் (10 கிமீ தொலைவில்) உள்ள பிர்லா மந்திர்
அருகே பேருந்து நின்றது. இந்த பிர்லா மந்திரின் பின்னணியில்
இருப்பது மோதி Dடூங்க்ரி கோட்டை
எனப்படும் முத்துக்களின் மலை என்றழைக்கப்படும் கோட்டை. தூரத்தில் மலைமீது
பார்க்க மிக அழகாக இருந்தது. ஆனால் கோட்டைக்குச் செல்வது எங்கள் அஜெண்டாவில் இல்லை. இந்தக் கோட்டை சிவனின் வீடு என்றும்
அழைக்கப்படுகிறது.
நாங்கள் சென்ற பிர்லா மந்திர், இந்தக் கோட்டை இருக்கும் மலையின் பின்னணியைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த இடத்தை ஜெய்பூர் மன்னர் 1 ரூபாய்க்கு, கோவில் கட்டுவதற்காக பிர்லா குடும்பத்திற்குக் கொடுத்திருக்கிறார்.
கோவிலின் உள்ளே விதானம்
உள்ளே
லக்ஷ்மி நாராயணர்.
படம்
எடுக்கக் கூடாதுதான்.
இருந்தாலும்
நினைவுக்காக நான் ஒரு படம் எடுத்தேன். மிக அருமையாக அலங்காரம்
செய்திருந்தார்கள்.
மாலை மயங்கிய நேரம்… வெளிச்சத்தில் ஒளிரும் கோவில்
கோவிலும்
கோட்டையும் விளக்கு வெளிச்சத்தில் ஒளிர்கிறது. அது சரி.. பழைய காலத்தில் எதிரிகள், இரவு நேரத்தில் கோட்டையை
நன்றாகக் கண்காணிக்க முடியுமே, இரவில் மெதுவாக மேலேறி வரவும் முடியுமே.. எப்படிக் காவல்
கண்காணிப்பு இருந்திருக்கும்?
மலைச் சரிவில் அழகிய
மலர்கள்
கோவிலுக்கு
அழகாக வடிவமைக்கப்பட்ட நடைபாதை. பின்னணியில் கோட்டை.
கோட்டைகளைப் பார்க்கும்போதெல்லாம், அவர்கள் எப்படி குளிக்க, காலைக்கடனுக்கு என்றெல்லாம் திட்ட மிட்டிருப்பார்கள், ஒருவேளை எதிரி வந்தால் அல்லது போர் ஏற்பட்டால் (முற்றுகை போன்று) எப்படித் தங்கள் வாழ்வைத் தற்காத்துக்கொள்ள ஏற்பாடு செய்திருப்பார்கள் என்றெல்லாம் யோசிப்பேன். இவற்றைப் பற்றி நேரம் வரும்போது எழுதுகிறேன்.
பிர்லா மந்திர் தரிசனத்திற்குப் பிறகு, அங்கிருந்து புறப்பட்டு பத்து கிமீ தொலைவில் இருந்த ஜெய்பூர் நகரம் நோக்கிச் சென்றோம். இங்கிருந்து நாங்கள் ஆக்ரா நோக்கிப் பயணப்படப் போகிறோம். சில சமயங்களில் ஜெய்ப்பூர் நகரத்திற்கு சிறிது சீக்கிரம் வந்து சேர்ந்துவிட்டால், அதற்கு ஏற்றபடி ஒரு சில இடங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். ஜெய்ப்பூர் நகரம் சிவப்பு (ரோஸ் மற்றும் ஆரஞ்ச் சேர்ந்த நிறம்) கற்களால் ஆன கட்டிடங்கள் நிறைய உடையது. வீதிகளைப் பார்க்கவே மிக அழகாக த் தெரிந்த து. நாங்கள் ஹவா மஹால் எனப்படும் அரண்மனையைப் பார்த்தோம் (பேருந்தில் செல்லும்போதே). பிறகு ஓரிட த்தில் பேருந்தை நிறுத்திவிட்டு, கலைப்பொருட்கள் விற்கும் மிகப் பெரிய இடத்திற்குச் சென்றோம். இது, யாத்திரைக் குழுவினருக்கு காபி தயார் செய்ய சௌகரியமான இடம்.
கலைப்பொருட்கள் விற்கும் வளாகத்தில் இருந்த ராஜஸ்தானி ஓவியங்கள்
எப்படி
துணிகளில் வண்ணங்களால் உருவங்கள் வரைகிறார்கள் என்பதைக் காண்பித்தார்
அங்கிருந்தவர்.
அங்கு
பல்வேறு வகை சீலைகளை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். நான் எப்போதுமே அத்தகைய
இடங்களில் வாங்குவதில்லை.
விலை
அதிகமாக இருக்கும் என்பதால்.
Semi Precious என்று சொல்லப்படும் பலவகை வண்ணக் கற்களை அங்கு விற்பனைக்கு வைத்திருந்தார்கள். எந்த ராசிக்கு (பிறந்த மாதத்திற்கு) எந்தக் கற்களை உபயோகிக்கணும் என்றும் சொன்னார்கள். (அது சரி.. இந்த மாதிரி கற்களை உபயோகித்து மோதிரம் போட்டுக்கொள்வதால் என்ன பயன் விளைகிறது என்று யாராவது சொல்ல முடியுமா? என்னிடம் மூன்று நான்கு தங்க மோதிரங்கள் இருப்பதுதான் மிச்சம். அப்படி என்னிடம் ஜோசியர் சொல்லாமல் இருந்திருந்தால் தங்க மோதிரங்களில் நான் இன்வெஸ்ட் செய்திருக்க மாட்டேன் அல்லவா?)
மிகுதியை
அடுத்த வாரம் பார்க்கலாமா?
(தொடரும்)
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு..
பதிலளிநீக்குகுறள் வாழ்க..
தக்கார்க்கு என்பதுதான் முக்கியமான வார்த்தை
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
நல்லருள் புரியட்டும். அது சரி.. நல்லருள் என்றால் என்ன? வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் என்பதல்லவா?
நீக்குதண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
பதிலளிநீக்குதளிர் விளைவாகித்
தமிழ் நிலம் வாழ்க
தமிழ் நிலம் என்பது எது? குமரி முதல் வடவேங்கடம் வரையல்லவா?
நீக்கு/// ஸ்ரீகிருஷ்ணர் சம்பந்தமான மற்ற இடங்களை தரிசிக்க இருக்கிறோம். இனி யாத்திரையைத் தொடருவோம்.///
பதிலளிநீக்குதொடருங்கள்..
எமக்கும் புண்ணியம் கிடைக்கட்டும்...
அன்பின்
நெல்லை அவர்களுக்கு நன்றி..
நன்றி துரை செல்வராஜு சார். பத்ரி யாத்திரை என்றாலும் கோகுலம் கோவர்தன் மதுரா விருந்தாவனம் தரிசனங்களுக்குப் பிறகே ரிஷிகேசம் செல்வோம்.
நீக்கு/// இந்த மாதிரி கற்களை உபயோகித்து மோதிரம் போட்டுக்கொள்வதால் என்ன பயன் விளைகிறது என்று யாராவது சொல்ல முடியுமா?... ///
பதிலளிநீக்குமணி மந்த்ர ஔஷதம் என்ற இவற்றில் மணி எனப்படுபவை மோதிரங்களின் கற்கள்..
மோதிரத்தின் கற்கள் விரலில் படுகின்ற பாதிரி இருக்க வேண்டும்...
பயன்கள் இருக்கின்றன...
சுத்தமான கற்கள் எனில் பலன்களை உணரலாம்!...
பொது வெளியில் பேசாமல் இருப்பது நல்லது
அவற்றைத் தங்கத்தில்தான் கட்டிக்கொள்ளணும் என்பதில்லை. வெள்ளியிலும் போட்டுக்கொள்ளலாம். ஆனால் நம்பிக்கை இருந்தால்தான் பலன் கிடைக்கும்.
நீக்குநெல்லை, அந்த முத்துக்களின் மலைக் கோட்டை ரொம்ப பெரிதாக இருக்கும் போல! மேவார் மன்னர்கள் யாரேனும் கட்டியிருப்பாங்களோ? அதனுள்ளே கோயிலும் - பிர்லா மந்திர்? கோபுரம் அப்படித் தெரிகிறது - ஆனால் அது பிற்பாடு கட்டியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குஇந்தக் கோட்டையின் கடைசிப்படம் தெளிவா இருக்கு. லைட்டிங்க் நல்லாருக்கு ஓவர் ப்ரைட்டா இல்லாம.
கீதா
கோட்டை மிகப் பெரியது. அதை அடைவதற்கு மலைப் பாதையில் ஏறிச் செல்ல வேண்டும்.
நீக்குமின்விளக்கு இல்லாத காலம். மரங்களடர்ந்த மலைப் பகுதி. எதிரிகள் ஏறாமலி இருக்கும்படி எப்படிக் காவல் போட்டிருப்பார்கள், ஒரு பொருளை மாத்திரம் கவர ஒருவன் முனைந்தால் (உதாரணம்..இளவரசி), அது சாத்தியமாயிருக்குமா? மலையை நெருங்குவதற்கு முன்னமே, புதிய ஆட்களை மற்றவர்கள் கண்டால் எப்படி தகவலைப் பரிமாறியிருப்பர், கோட்டைக்கு அருகாமையில் இருக்கும் ஊர்களில் விசுவாசிகளே நிரம்பியிருக்கும்படிச் செய்திருப்பார்களா என்றெல்லாம் யோசித்தேன்.
கோட்டைக்குள்ள இல்லையா வெளியிலா!!! தூரத்தில் இருந்து பார்க்கறப்ப உள்ளே இருப்பது போல இருக்கு
பதிலளிநீக்குபிர்லா மந்திர் படங்கள் எல்லாம் செம அழகு. கோபுரம் நல்ல ஷாட்! அது போல கோவில் விதானம்! அழகு!
மாலை மயங்கிய நேரத்தில் எடுத்த ப்டமும் செம ஷாட் மயக்குகிறதுதான். வெளிச்சத்தில் ஒளிர்ந்து. நல்லா வந்திருக்கு. என் கேமராவில் இப்படியான நைட்ஷாட்ஸ் சரியா வருவதில்லை. ஆனால் அந்த இடத்தில் வெளிச்சம் படர்வதைப் பொருத்து என்றும் தோன்றுகிறது.
கீதா
நன்றி கீதா ரங்கன்(க்கா). பிர்லா மந்திர்கள் எல்லாமே பளிங்கினால் கட்டப்பட்டவைதாம். சுத்தமாக வைத்துக்கொள்வதும் எளிது.
நீக்குகோட்டைகளைப் பார்க்கும்போதெல்லாம், அவர்கள் எப்படி குளிக்க, காலைக்கடனுக்கு என்றெல்லாம் திட்ட மிட்டிருப்பார்கள், ஒருவேளை எதிரி வந்தால் அல்லது போர் ஏற்பட்டால் (முற்றுகை போன்று) எப்படித் தங்கள் வாழ்வைத் தற்காத்துக்கொள்ள ஏற்பாடு செய்திருப்பார்கள் என்றெல்லாம் யோசிப்பேன். //
பதிலளிநீக்குஅக்காலகட்டத்தில் எல்லாம் குளிப்பதற்கு அதுவும் இப்படியான கோட்டையில் தடுப்புகள் இருந்திருக்கும்...தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து வைக்க ஆட்கள் இருந்திருப்பாங்க..மன்னர்கள் கோட்டை என்றால் அதெல்லாம் தானே. எல்லாத்துக்கும் ஆள்! அப்பவும் காலைக்கடன் முடித்தவுடன் அந்த இடத்தை சுத்தம் செய்ய ஆட்கள், அல்லது ஆழமான குழிகள் இருந்திருக்கலாம்.
ஏன் 70 களில் எல்லாம் சிறிய ஊர்களில் எங்கே கழிவறை இருந்தது? சும்மா மண் சுவர் தடுப்புகள் அங்கு கல் போட்டிருப்பாங்க. மலம் அள்ள என்றே ஆட்கள் இருப்பாங்க! நான் இருந்த கிராமங்களில் அப்படித்தான் இருந்தது. திருக்குறுங்குடி, வள்ளியூர் இடங்களில் அப்படித்தான் இருந்தது. என் மனம் ரொம்பக் கஷ்டப்படும். நான் அதற்கு ஒரு வழி வைத்திருந்தேன்.
இப்பவும் பல வீடுகளில் வீட்டு வேலை செய்பவர்கள்தானே அதையும் கழுவுகிறார்கள்.
கோட்டை முற்றுகையின் போது பாதுகாப்பிற்கு சுரங்கப்பாதை வைத்திருந்திருப்பாங்க.
பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து திருவனந்தபுரம் அரண்மனை வரை சுரங்கப்பாதை உண்டு என்று சொல்வதுண்டு.
கீதா
//காலைக்கடனுக்கு// ஹா ஹா ஹா.. நானும் இதைப்பற்றி யோசிப்பேன். லண்டனில் பார்த்த கோட்டையில் உட்பகுதியில் சுவரை ஒட்டி, சிறிது ஏறிப்போய் உட்கார்த்து காலைக்கடன் கழிக்க வகை செய்திருப்பர். கழிவுகள் கோட்டை வெளிச் சுவற்றில்தான் விழும். பத்மநாப்புரம் அரண்மனுயில் வெளிநாட்டவர்க்கு மாத்திரம் இன்டியன் டாய்லட் போல தங்கும் முதல் தளத்தில் அமைத்திருப்பர்... வாய்ப்பு வரும்போது படங்கள் பகிர்கிறேன்.
நீக்குகோட்டைன்னு பார்த்தால் கோல்கொண்டா கோட்டையில், உள்ளேயே தண்ணீர் இருக்கின்ற பல இடங்களை (கிணறு என்றில்லை... சிறிய குளம்) நிர்மாணித்துள்ளார்கள். அதனால் அந்தக் கோட்டையை முற்றுகை இட்டுப் பிரயோசனம் இல்லை. ஆக்ரா கோட்டையில், யமுனை ஆறு கோட்டைக்குள் வரும்படியாகச் செய்திருந்தார்கள். அதனால்தான் ஔரங்கசீப் அந்த வழியை அடைத்து, தன் தந்தை ஷாஜஹானைக் காலில் விழச் செய்தான். கோட்டை என்பது தன்னிறைவு பெற்றதாக இருக்கணும்
நீக்கு//அப்பவும் காலைக்கடன் முடித்தவுடன் அந்த இடத்தை சுத்தம் செய்ய ஆட்கள், அல்லது ஆழமான குழிகள் இருந்திருக்கலாம்.// அந்தக் காலத்தில் உட்கார இரண்டு கற்கள், கீழே பெரும் குழி, அந்தக் குழிக்குப் போய் வர பாதை (சுத்தம் செய்ய).. இவ்வாறு இங்கிலாந்து அரசர்களுக்கான கழிப்பிடம் இருந்தது. எதிரி ஒருவன், அந்தக் குழிக்குள் இறங்கிக் காத்திருந்து அரசர் உட்கார்ந்ததும் ஈட்டியினால் குத்தி (என்ன கஷ்டம் பாருங்க) அவரைச் சாகடித்தான். பிறகுதான் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கணும் (பெரிய குழியாக இல்லாமல்). இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆண்டபோது, அதற்கான பெட்டியை எடுத்துவர கூலிகள் இருந்தனர். ஆங்கிலேயர் சொல்லும் இடத்தில் அதனை வைத்து, பிறகு வேலை முடிந்ததும் சுத்தம் செய்து அந்தப் பெட்டியைத் தூக்கிவர வேண்டியது அவர்கள் வேலை. இதுபற்றியெல்லாம் ஒருநாள் எழுதணும் என்று எண்ணம்.
நீக்குபாருங்க...இன்னைக்கு நம்ம டாபிக் எங்கபோயிருக்குன்னு
நீக்குஹவா மஹல் - காற்றோட்டமான அரண்மனையாக இருக்கும் அதனால அந்தப் பெயர் என்று நினைக்கிறேன். நிறைய சாளரங்கள் ஜன்னல்கள், இந்த ஹவா மஹல் தானே ஜெய்ப்பூர் என்றாலே காட்டப்படுவது.
பதிலளிநீக்குஇத சொல்லிட்டுக் கீழ வரும் போது உங்க படங்களும் அதே!!!
ராஜஸ்தான் கலை தனி கலை!
ஜெம்ஸ், யோகக் கற்கள், தங்கம் என்பவை எனக்கு அவுட் ஆஃப் ஃபோக்கஸ்!!!! ஹாஹாஹாஹா...
கீதா
சிவப்புக் கற்கள் ஜெய்ப்பூருக்கே உரியவை. காற்று மஹல் மிக அருமையாக இருக்கிறது வெளியில் இருந்து பார்க்க.
நீக்குஇயற்கையாகக் கிடைப்பவற்றில் சிலவற்றிர்க்கு மனிதன் மிகுந்த முக்கியத்துவம் தந்து அவற்றை விலையுயர்ந்ததாக ஆக்கிவிடுகிறான்.
/// தமிழ் நிலம் என்பது எது? குமரி முதல் வடவேங்கடம் வரையல்லவா?... ///
பதிலளிநீக்குஅது பழந்தமிழகம்...
அன்றைக்கு பொது அடையாளம் இருந்தது..
இப்போது தமிழ் பேசி, தமிழ் அடையாளங்களுடன் வாழ்கின்ற நெஞ்சங்கள் குடும்பங்கள் மட்டுமே!.
அப்போ தமிழகத்திலேயே சில பகுதிகள்தாம் தமிழ் நிலம்னு சொல்ல வர்ரீங்களா?
நீக்குஆம்!..
நீக்குபிர்லா மந்திர் பளிங்குக் கோவில் மிகவும் அழகாக உள்ளது. இரவு ஒளியில் ஜொலிக்கிறது.
பதிலளிநீக்குஜெய்ப்பூர் அரண்மனை முன்பும் படங்களில் கண்டிருக்கிறேன்.
நன்றி மாதேவி
நீக்குவிவரங்கள் சிறப்பு.
பதிலளிநீக்குஇம்முறை புகைப்படங்கள் வழக்கத்தைவிட அருமையாக உள்ளது.
நன்றி கில்லர்ஜி
நீக்குவழக்கம் போல என்றாலும் இன்றைய பதிவில் எதோ விட்டுப் போய் விட்டது என்று தோன்றியது. கொஞ்சம் ஆலோசித்தபின் தான் புரிந்தது சாப்பாடு பட்டியல்.
பதிலளிநீக்குசாப்பாடு தான் உப்பு உங்கள் பதிவுகளுக்கு.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார்... இது காபி நேரம். அதனால சாப்பாட்டு விவரம் இல்லை. நான் 2008ல் முக்திநாத் யாத்திரை இந்தக் குழுத்தலைவருடன் சென்றிருந்தேன். அப்போது என்ன உணவு சாப்பிட்டேன் என்பதையும் எழுதி வைத்திருக்கிறேன்.
நீக்குபல வருடங்களுக்கு முன் ஜெய்ப்பூர், பிர்லாமந்திர், ஹவா மஹல் எல்லாம் பார்த்தது . ஆல்பங்களில் இருக்கிறது.
பதிலளிநீக்குஅப்போது எல்லாம் பிலிம் காமிரா.
ஜெய்பூர் மூன்று முறை போய் இருக்கிறோம். அம்மாவை அழைத்து கொண்டு, சாரின் அண்ணாவை அழைத்து கொண்டு, மகன், மகள் நாங்கள் என்று போய் இருக்கிறோம்.
உங்கள் படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
வியாழன், வெள்ளி, சனி ,ஞாயிறு வெளியூர். பயணம்
திங்கள் மாலை தான் வீட்டுக்கு வந்தோம். இப்போதுதான் எல்லோர் பதிவுகளை படித்து கொண்டு இருக்கிறேன்.
வாங்க கோமதி அரசு மேடம்... பதிலெழுத தாமதித்ததற்கு மன்னிக்கவும்.
நீக்குநானும் துபாய் சென்ற புதிதில் பிலிம் காமெராதான் உபயோகித்தேன். 2000க்குப் பிறகு டிஜிட்டல் கேமரா ரொம்பவே சாதாரணமாகிவிட்டது.
நான் ஜெய்ப்பூர் சென்றதில்லை. அதாவது எல்லா இடங்களையும் பார்க்கும்படியாக அந்த ஊருக்கு என்று சென்றதில்லை.
கப்பல் பயணம் சூப்பராக இருந்திருக்கும். எனக்கும் அப்படிப் பயணிக்கும் எண்ணம் உண்டு.