புதன், 5 ஜூன், 2024

கருத்து கணிப்புகள்!

 

நெல்லைத்தமிழன் : 

1.  இந்தக் கட்சிதான் ஜெயிக்கும், இந்த இந்த இடங்களில் இவர்தான் வெற்றி என்று கொஞ்சம்கூட யோசனை இல்லாமல் சிலர் பேட்டி கொடுக்கிறார்கள், எழுதுகிறார்கள், காணொளியில் பேசுகிறார்கள். இவர்களுக்கு வெட்கம் என்பது இருக்காதா? மனசாட்சிக்கு எதிராகப் பேசுகிறோமே என்று?    

# கருத்துக் கணிப்புகள் குறித்த இந்த எண்ணம் எனக்கும் உண்டு.  மேலும், சில நாட்கள் காத்திருந்து மிகச் சரியாக தெரிந்து கொள்ள இருக்கும் ஒரு செய்தியை முன்பாகவே தெரிந்து கொள்வதில் இவ்வளவு ஆர்வம் ஏன் என்பது ஒரு புரியாத புதிர்.  இதுதான் இப்படி என்றால் இந்தப் பொல்லாத விஷயத்தைச் சொல்ல ஊடகங்கள் பெருந்தொகை செலவழித்து சர்வே செய்கிறார்கள். இதில் நம்பகத்தன்மையும் பெரிதாக எதுவும் இல்லை.  நீங்களும் நானும் நம்புவதையே பெரும்பாலும் சொல்கிறார்கள். இது ஒரு பைத்தியக்காரத்தனம்தான் .  என்றாலும் பார்ப்பவர் எண்ணிக்கை அதிகரித்து விளம்பர வருமானம் பெருகுவதால் ஊடக முதலாளிகள்  இப்படிச் செய்கிறார்கள் போலும்.

2. நாணம், வெட்கம் இரண்டிற்கும் வித்தியாசங்கள் என்ன?  

# நம்மைக் கூர்மையாகப் பார்க்கிறார்கள் என்று ஒரு இளம்பெண் உணர்வது நாணம். நம் அற்பச் செயல் வெளியில் தெரிந்து விடும்போது நாம் உணர்வது வெட்கம்.

3.  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல கருத்துக் கணிப்புகள் எடுக்க முடியுமா? உதாரணமா, என்னைக் கேட்டால், கேட்கும் நபருக்கு ஏற்றபடிச் சொல்லுவேன் - திமுக ஊடகங்களுக்கு திமுக என்றும் பாஜகவிற்கு சுத்தல்ல விடணும் என்று மாற்றுக் கட்சியையும் சொல்லுவேன். 

# புத்திசாலித்தனமாக நடத்தப்பட்ட கணிப்புகள் கிட்டத்தட்ட சரியாக யாருக்கு வெற்றி என்பதை ஊகித்திருப்பது வரலாறு அல்லவா?

4. கருத்துக் கணிப்பு (Exit Poll) மற்றும் அதையொட்டிய குறுகிய கால அக்கப்போர்கள், விவாதங்கள், ஆரூடங்களினால் யாருக்கு லாபம்?

# ஊடகங்கள் இரண்டு மணி நேர நிகழ்ச்சியை குறைந்த செலவில் நடத்தி நிறைய விளம்பர வருமானம் பார்ப்பதால் அவர்களுக்கு லாபம். வந்து அலறிய விருந்தினர் "தக்ஷிணை" வாங்கிச் செல்வதால் அவர்களுக்கு அடுத்து லாபம். நமக்கு நேர விரயம் மின்சார விரயம் TV தேய்மானம் என பல வகையிலும் நஷ்டம்.

5. எல்லா யோகா சம்பந்தமான யூடியூப் இல்லைனா சொல்லித் தர்றவங்களோட வீடியோ பார்த்தால், அவங்களுக்கெல்லாம் உடம்பு ரப்பர் மாதிரி வளையுது, குனிஞ்சாங்கன்னா, இரண்டு கையும் தரைல வைக்க முடியுது. ஆனால் அந்த மாதிரி உடம்பு இல்லாதவங்கதானே யோகா கத்துக்கவே போறாங்க. அவங்க என்னைக்கு யோகா கத்துக்கிட்டு என்னைக்கு ரப்பர் மாதிரி உடம்பை வளைப்பது?

# 5. அவர்கள் மாதிரி உடம்பை வளைப்பது நோக்கம் அல்ல. ரொம்ப இறுக்கமாக இல்லாமல் சற்று வளையக் கூடிய நிலையை அடைவதுதான் லட்சியமாக இருக்க வேண்டும்.

= = = = = = = =

KGG பக்கம் : அடுத்த வாரம். 

= = = = = = =

==========================================================================================

கடலுக்கு கீழே நன்னீர்

நமது பூமி முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டது என்றாலும் கூட, உலகில் உள்ள மொத்த நீரில் வெறும், 2.5 சதவீதம் மட்டுமே நம்மால் பயன்படுத்தத் தக்க நன்னீர், மீதம் 97.5 சதவீதம் உப்பு நீர் தான்.

பல நாடுகளில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இந்தச் சூழலில் தான் கடலுக்குக் கீழே நன்னீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நன்னீரின் அளவு ஓராண்டில் சூரியனால் ஆவியாகும் பூமியின் மொத்த நீரை விட அதிகம்.

அமெரிக்காவில் உள்ள 'உட்ஸ் ஹோல்' கடலாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் இங்கிலாந்தின் கண்டத்தட்டை ஆய்வு செய்தபோது, கடலுக்குக் கீழ் நன்னீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

நன்னீரை கண்டுபிடிக்க, கடல் மீது செல்லும் கப்பல்களில் இருந்து மின்காந்த அலைகளைக் கடல் தரை நோக்கிச் செலுத்துவர். மின்காந்த அலைகளை உப்பு நீர் நன்றாகக் கடத்தும், நன்னீர் கடத்தாது. இதைக் கொண்டு எது நன்னீர், எது உப்பு நீர் என்பதை எளிதில் அறிய முடியும்.

பனிக்காலத்தில் கடல் மட்டம் குறைவாக இருந்தது. அப்போது தரையில் இருந்த நன்னீர் பனியாறு கடல் மட்டம் உயர்ந்தபோது கடல்தரையின் கீழேயே தங்கி இருந்திருக்க வேண்டும். இதுவே இப்போது கடல்தரைக்குக் கீழே நன்னீர் கிடைக்கக் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடலடி நன்னீரைக் கொண்டு கச்சா எண்ணெய்யை வெளியே எடுக்க முடியுமா என்று எண்ணெய் நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.

உலகின் வேறு கடற்பகுதிகளில் உள்ள நன்னீரை எவ்வாறு கண்டுபிடிப்பது, கண்டுபிடித்த பின் அந்த நீரை எவ்வாறு வெளியே பயன்பாட்டிற்கு எடுப்பது, அவ்வாறு எடுப்பதினால் என்னென்ன சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று கடல்சார் விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

=========================================================================================

சில நிகழ்வுகள் 

சரத்சந்திரர் யார் என்று உங்களுக்கு தெரியும்.  மிகவும் புகழ்பெற்ற தேவதாஸ் இவர் எழுதியதுதான் என்பதும் உங்களுக்கு தெரியும்.


இவர் எழுதிய முதல் கதைக்கே பரிசு கிடைத்தது.  அவருடைய மாமாக்கள் ஒருவரின் வற்புறுத்தலால் எழுதப்பட்ட 'மந்திர்' என்கிற அந்த கதை 'குண்டலின் கதைப்போட்டி' க்கு அனுப்பப்பட்டு, போட்டிக்கு வந்த 150 படைப்புகளில் முதலாவதாக வந்தபோது சரத்சந்திரர் வயது 27.   உள்ளூரில் சில்லறை வேலைகள் செய்தாலும் வறுமையைப் போக்க முடியாமல் பர்மாவுக்கு கிளம்பினார்.  அதற்கு முன் எழுதப்பட்டது இந்தக் கதை.  இதில் ஒரு விஷயம் ன்ன என்றால் கதை இவர் பெயரில் வெளியாகவில்லையாம்.  இவரின் இன்னொரு மாமாவின் பெயரில் வெளிவந்ததாம்.  என்ன சோகம்!

முதல் கதையை படைத்த பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகே தனது அடுத்த படைப்பை எழுதி இருக்கிறார்.  உடல்நலக்குறைவால் பர்மாவிலிருந்து ஹௌராவுக்கு வந்தபிறகு சரத்சந்திரர் முழுமையாக சந்திரமுகியானார்! அதாவது முழுநேர எழுத்தாளரானார்.




அவர் எழுதிய கிரண்மயி (சரித்ராஹீன்) அப்போது சில எல்லைகளை மீறிய நாவல் போல.  சாவித்ரி என்கிற கேரக்டரும், கிரண்மயியும் அதில் சிறப்புப் பாத்திரங்கள்.

"A paragon of beauty, Kiranmayi is very skeptic, argumentative and quite a rebel in herself. Her emotions and desires have, however, always been repressed by a husband more intent on teaching her than on conjugal matters, and by a nagging mother-in-law."  என்கிறது விக்கி விளக்கம்.

அதைத் தமிழில் வெளியிட்ட பதிப்பாளர் (அல்லது மொழிபெயர்ப்பாளர்) ஏ கே கோபாலன் தனது பதிப்புரையில் என்ன சொல்கிறார் தெரியுமா?


இன்னொரு சுவாரஸ்யமான தகவல்.  ஊர்வம்பு போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்...  ரங்கூனில் சரத்சந்திரர் இருந்தபோது  மாடிவீட்டில் இவர் குடியிருக்க, அவர் கீழ் வீட்டில் வசித்தவரும் ஒரு வங்காளி.  அவர் தன் பெண்ணை ஒரு குடிகாரனுக்கு திருமணம் செய்து வைக்க பிடிவாதமாக நின்றபோது, அந்தப் பெண் சாந்தி, இவரிடம் வந்து தந்தையிடம் சொல்லி அந்தத் திருமணத்தை நிறுத்தி தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். சரத்சந்திரரே அந்தப் பெண்ணை மனது கொண்டார்.  அவர் பெயர் சாந்தி.  ஆனால் அந்த மனைவியும் அவர் குழந்தையும் பிளேக்கில் சிக்கி உயிரிழக்க, இடிந்து போனார் சரத்.

பின்னர் சரத்தின் இன்னொரு வங்காளி நண்பர், கிருஷ்ணதாஸ் மிஸ்திரி, சரத்திடம் தனது 14 வயது விதவைப் பெண்ணை மணந்து கொள்ள வேண்டினார்.  குழந்தைத் திருமண பரிதாபங்கள்.  முதலில் சரத் மறுத்தாலும் பின்னர் அந்தப் பதினாலு வயதுப் பெண்ணை.  மணந்து கொண்டார்.  அப்போது இவருக்கு என்ன வயது என்று எனக்குத் தெரியாது!  அந்தப் பெண்ணின் பெயரை ஹிரோன்மோயி (கிரண்மயி) என்று மாற்றி எழுத, படிக்கக் கற்றுக் கொடுத்தார்.

31 கருத்துகள்:

  1. நாணம் வெட்கத்திற்கான பதில் சூப்பர். நாணம் பெண்ணுடைய வெட்கம் என நினைத்தேன். அது சரி வெட்கம் என்பது பல இடங்களில் வெவ்வேறு அர்த்தங்களில் உபயோகிக்கின்றனர் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்கத்துக்கு வேறு விளக்கமும் உண்டு என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  2. ஊரில் இருக்கும் நன்னீரைப் பாதுகாத்து உபயோகிக்கத் தெரியாமல் கடலுக்குள் ஸ்ட்டிரா விட்டு நன்னீர் எடுக்கப்போகிறேன் என்பது கடலில் மண் எடுத்து கடலை ஆழப்படுத்துகிறேன் என்று சொல்லிச் சம்பாதித்த அரசியல்வாதியை நினைவுபடுத்துது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கேயும் சம்பாதிக்க முடியும், அதை நாசமாக்க முடியும் என்றால் அவர்களுக்கு சந்தோஷமே!

      நீக்கு
  3. கேஜிஜி தன் எபி பகுதியை எழுதாமல் இந்த வாரம் டிமிக்கி கொடுத்துவிட்டார் +டிமிக்கி கடுக்காய் கொடுப்பது இதெல்லாம் என்ன மொழி?) அடுத்த வாரம் பள்ளி பாலிடெக்னிக்கில் அசைன்மென்ட் எழுதாமல் டிமிக்கி கொடுத்த அனுபவம் எழுதுவாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் எழுதி இருந்ததைப் படித்ததும் நான் 'அச்சச்சோ...  இதையா பகிரப்போகிறீர்கள்?' என்று கேட்டதும் நீக்கி விட்டார் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?!

      நீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..


    பதிலளிநீக்கு
  5. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. kgg சாருக்கு வெட்கம் வந்து விட்டதா?
    கேள்வி பதில் தவிர மற்ற பகுதிகள் இன்று வியாழனோ என்று கிழமை பார்க்க வைத்தன.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியாழன் என்ன, ..  .புதன் என்ன...   போஸ்ட் பற்றி அபிப்ராயம் ஒன்றும் காணோமே...

      நீக்கு
  7. நாணம், வெட்கம் இரண்டிற்குமான விளக்கங்கள் அருமை..

    நவீன (கல்வி) வாழ்க்கை முறை நாணம், வெட்கம் இரண்டையுமே அடியோடு நீக்கி விட்டது..

    பதிலளிநீக்கு
  8. கடலில் நன்னீர் எடுத்து
    டங்க னக்கா டனக்க னக்கா என்று ஆடல் பாடல்களுடன் இங்கே விற்பனை செய்யப்படும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்னீரும் பொன்னீராகும்! மக்களுக்கு கண்ணீர் வரும், தன் விதியை நினைத்து!

      நீக்கு
  9. கருத்துக் கணிப்பு அக்கப்போர்காளால் மக்களுக்கு பயன் என்ன ?
    பதில்கள் சிறப்பு ஜி.

    கடல் நன்னீரை எடுத்து மக்களுக்கு பயன்படுத்தும் நோக்கம் இல்லை.

    அதுவும் வியாபார நோக்கம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மாவே இல்லாமல் ஏதோ உபயோகப்பட்டால் சரிதான்.  ஆமாம், லிட்டர் என்ன விலை விற்பார்கள்?

      நீக்கு
  10. நாணம், வெட்கம் வித்தியாசம் சூப்பர். அதே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போங்க, எல்லோரும் அதையே பாராட்டினால் எனக்கு வெட்கமா இருக்கு!

      நீக்கு
  11. நிலைத்தை நல்லாவே நோண்டியாச்சு கடல் எதுக்கு சும்மா கிடைக்கு? அதையும் விட்டுவைக்கலாமா? அதையும் ஒரு கை பார்த்திடுவோம்னு...அது சரி இந்த நன்னீரை ஒரு சிலர் தங்கள் வசம் வைத்துக் கொண்டு பைசாக்கு விற்கத்தானே!! எதிர்காலத்தில் தண்ணீரின் விலை தங்கத்தை விட பன்மடங்கு உயரும் அதன்மதிப்பும் ரொம்பவே உயரும்னு எங்க தாத்தா சும்மா சொல்லலை!

    இப்ப கோல்ட் பான்ட் இருக்காப்ல கொஞ்ச வருஷத்துல வாட்டர் Bond ம் வந்திருமோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ நிலத்துல தண்ணி Pondலதான் கிடைக்குது.  நீங்க சொல்ற மாதிரி நடந்தா நாம் James Bond ஐ அனுப்பி நீதியை நிலைநாட்டிடுவோம்!

      நீக்கு
  12. கருத்துக் கணிப்புகள் மீடியாக்களுக்கு அதுவும் இப்ப ஏகப்பட்ட சானல்கள் அவங்களுக்கு நல்ல வரும்படி. அதைப் பார்க்கற நாம... என்ன சொல்ல? ஏன்னா நேர விரயம். இது தெரிஞ்சு நமக்கு என்னாகப் போகுது? பேப்பர்ல எப்படியும் வரும் யார் யார் இன்னான்னு. இல்லை தெரிஞ்சுசுதான் நம்மால ஏதாச்சும் செய்ய முடியுமா என்ன? புலம்பலாம் அவ்வளவுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றம் ஒன்றே மாறாதது. வுடுங்க... மாறும் இதுவும்!

      நீக்கு
  13. நாணம்,வெட்கம் இரண்டுக்கும் பதில்கள் நன்று.

    Kgg பக்கம் பொறுத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்றா.....  மறுபடியும்...  அப்போ மற்ற பதில்கள் சரியில்லையா?!!!

      நன்றி மாதேவி.

      நீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. வியாழன் வாசிப்பை புதன் ஆக்கி புதன் வாசிப்பை இன்னொரு புதனுக்கு மாற்றி திங்களும் சனியும் நிற்கதியாய் நிற்க பழகிப் போன வியாழனும் வெள்ளி வழக்க தோஷத்தில் பளபளக்க..
    வாரத்திற்கு ஆறு நாட்கள் தானோ?.

    பதிலளிநீக்கு
  16. கேள்விளும் பதில்களும் அருமை.
    கடலுக்கு கீழே நன்னீர் அதையும் விட்டு வைக்க மாட்டார்களே!
    ஆய்வுகளால் நல்லதே நடக்கட்டும்.

    சரத்சந்திரர் பற்றி முன்பு படித்து இருக்கிறேன்.

    வங்காள கதைகள் பலவற்றிலும் பிளேக் நோய் , குழந்தை திருமணம் இடம்பெறும்.

    வயதானவருக்கு கட்டி வைத்து பின் கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏறவைத்து சொத்துக்களை அபகரிப்பார்கள். அந்தக்கால கொடுமைகள்.

    பிளேக் நோய் கடுமையாக இருந்த காலம்.
    கோவையில் பிளேக் மாரியம்மன் கோவில் உண்டு.
    என் அத்தை சொல்வார்கள் பிளேக் காலத்தில் மக்களை காப்பாற்றிய அம்மன் என்று. அதனால் அந்த பேர் அம்மனுக்கு என்று.


    Kgg சார் விடுமுறையா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!