வெள்ளி, 7 ஜூன், 2024

கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள் காரணம் கூறுவதோ

உடுமலைப்பேட்டை ஷண்முகம் பாடலுக்கு டி பி ராமச்சந்திரன் இசை அமைக்க சீர்காழி கோவிந்தரராஜன்  பாடிய பாடல்.

கணபதியே வருவாய், அருள்வாய்
கணபதியே வருவாய்,அருள்வாய்
கணபதியே வருவாய்

மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க

மங்கள இசையென்தன் நாவினில் உதிக்க
மங்கள இசையென்தன் நாவினில் உதிக்க

கணபதியே வருவாய்

ஏழு சுரங்களில் நானிசை பாட எங்குமே இன்பம் பொங்கியே ஓட ஏழு சுரங்களில் நானிசை பாட எங்குமே இன்பம் பொங்கியே ஓட தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட.... தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட கணபதியே வருவாய் தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க தொனியும் மணியென கணீரென்றொலிக்க தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க தொனியும் மணியென கணீரென்றொலிக்க ஊத்துக நல்லிசை உள்ளம் களிக்க உண்மை ஞானம் செல்வம் கொழிக்க கணபதியே வருவாய்
அருள்வாய்
கணபதியே வருவாய்

==========================================================================================

1943 - வெளியான 'ப்ராதுலு தெருவு' என்கிற தெலுங்குப் படத்தைத் தழுவி 1972 -ல் எடுக்கப்பட்ட திரைப்படம் நான் ஏன் பிறந்தேன்.  சங்கர் கணேஷ் இசையில் எல்லாமே இனிமையான பாடல்கள்.  எம் ஜி ஆர், கே ஆர் விஜயா, காஞ்சனா நடித்த இந்தப் படம் ஒரு தோல்விப்படமாம்.  கஷ்டப்பட்டு 70 நாட்கள் ஒட்டினார்களாம்.

வாலியும் புலமைப்பித்தனும் எழுதிய பாடல்கள்.  இன்றைய பாடல் புலமைப்பித்தன் எழுதியது.

டி எம் சௌந்தரராஜன்- பி சுசீலா பாடிய இனிமையான பாடல்.

உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது

உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
என் கவிதை வாழ்வது

உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பமெல்லாம்
கடல் கொண்ட வெள்ளமோ
உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பமெல்லாம்
கடல் கொண்ட வெள்ளமோ
கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள்
காரணம் கூறுவதோ
உனை காண்பதென்ன சுகமோ
உனை காண்பதென்ன சுகமோ

உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
கவிதை வாழ்வது
எனக்கென்று வாழ்வது கொஞ்சம்
உனக்கென்று வாழும் நெஞ்சம்
பனி கொண்ட பார்வை எங்கும்
படிக்காத காவியம்
பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில்
என் உயிர் வாழ்கிறது
அது என்றும் வாழும் உறவு
அது என்றும் வாழும் உறவு
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
ஆ கவிதை வாழ்வது

52 கருத்துகள்:

  1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு..

    வாழ்க குறள்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. என்ன இன்றைக்கு திடீரென கணபதியின்
    கானம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை பகிராத பாடல்களாக தேடி பகிர்வதால்...!

      நீக்கு
  5. அன்றைக்கு விநாயகரைச் சுட்டிக் காட்டிய பாடல்..

    பதிலளிநீக்கு
  6. காலங்களை வென்று இருக்கின்ற திருப்பாடல்!..

    பதிலளிநீக்கு
  7. நான் ஏன் பிறந்தேன்?..

    சிறந்த படம் என்றாலும்
    அன்றைய விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு எம்ஜியாரின் வயது 16

    என்று காட்டாமல் குடும்பம் குழந்தை குட்டி என்று காட்டப்பட்டது பிடிக்கவில்லை..

    கவுத்து விட்டதுகள்!..

    பதிலளிநீக்கு
  8. சித்திரச் சோலைகளே என்ற -

    பாவேந்தரின் பாடல் இருந்தும் பப்படம் ஆகிவிட்டது..

    நான் மூன்று தரம் பார்த்திருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தின் பாடல்கள் அனைத்தையுமே ரசிக்கலாம்.  

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. உனது விழியில் எனது பார்வை
    உலகை காண்பது
    உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
    கவிதை வாழ்வது..

    ஆகா!..

    பதிலளிநீக்கு
  11. இந்த வரிகள் அந்த படப் பாடலில் உருட்டு..

    எந்தப் படம்!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய இருக்கின்றன.. நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்?

      நீக்கு
  12. நான் ஏன் பிறந்தேன்?..

    என்று ஆனந்த விகடனில் எம்ஜியாரின் தொடர் வந்து கொண்டிருந்தது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அந்தப் புத்தகம் pdf ஆக கிடைக்குமா என்று நெடுநாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். விநாயகரை முதலில் தொழாமல் எந்த காரியமும் முழுமை பெறாதே. .இந்தப் பாடல் சீர்காழி அவர்களின் குரலில் கம்பீரமாக ஒலிக்கும் போது, கணபதி நம் அருகில் அருள் பார்வை கொண்டு நிற்பதை போல உணர்ந்திருக்கிறேன். "காக்கும் கடவுள் கணேசனை நினை" என்ற பாடலும், மெய்யுருக வைக்கும்.

    இரண்டாவதாக வந்த திரைப்பட பாடலின் வரிகளை, உங்கள் பதிவில் பார்த்ததுமே மனதுக்குள் பாடல் ஒலித்தது. நல்ல பாடல். ரேடியோவில் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

    அந்த காலத்தில் மக்கள் திலகத்தின் படங்கள் சில தோல்வியடைந்தாலும், அதில் பாடல்கள் நல்ல பிரபலமாகி விடும். அவற்றில் ஒன்று இந்தப் பாடலும். பிறகு இரு பாடல்களையும் மீண்டும் ஒரு முறை கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நேற்றைய தங்களின் பதிவும் அருமை. நானும் கட்டக் கடைசியாக வந்து கருத்துரை தந்திருக்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா..  நேற்றைய கமெண்ட்டையும் வெளியிட்டு விட்டேன்.  விக்ன விநாயகனைத் தொழுதுதானே மற்ற வேலைகள் அனைத்தையும் தொடங்க வேண்டும்?  படம் தோற்றாலும் பாடல்கள் வென்ற நிறைய படங்கள் உண்டு!

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    அடாடா..! இன்றைய பதிவுக்கு நான் இதற்கு முன் போட்ட கருத்தை காணோமே..! அதற்குள் எங்கோ மாயமாகி விட்டது போலும்.! தேடும் போது கிடைத்தால் நல்லது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. இசையினால் அன்பான மொழியினால் உடற் கோளாறுகளைக் குறைக்கலாம் எனபதனை

    இன்றைய அறி வாளிகள் ஒத்துக் கொள்ளாததைப் போலவே

    அன்றைய
    அரை வாளிகளும் ஒத்துக் கொள்ள வில்லை..

    அதெப்படி கால் முடமான காஞ்சனா புர்ச்ச்சியின் பாட்டுக்கு எந்திருச்சி ஆடலாம்... ஆசுபத்திரி எல்லாம் எதுக்கு இருக்கு ?..

    என்று அன்றைக்கு கோஷ்டி கானம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை ஹிந்தியிலும் எடுத்தார்கள்.  ஜிதேந்திரா பாடி, மும்தாஜ் எழுவார்.

      நீக்கு
  16. நான் பாடும் பாடல்
    நலமாக வேண்டும்..
    இசை வெள்ளம் நதியாக ஓடும்!..

    அதெப்படி நீ பாடலாம்??...

    பதிலளிநீக்கு
  17. தம்பிக்கு ஒரு பாட்டு - அன்புத்
    தங்கைக்கு ஒரு பாட்டு...

    அதெல்லாம் ஆருக்கு வேணும்..
    வாத்யாரே!?..

    மசாலா
    மசாலா...

    அது தானே வேணும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடலின் சரணங்கள் மிகவும் ரசிக்கத்தக்கவை.

      நீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. முதல் பாடல் பிடித்த பாடல். அடிக்கடி கேட்கும் பாடல். பாடல் வரிகள் அருமையாக இருக்கும்.

    மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க என்ற வரிகள் மிகவும் பிடிக்கும்.

    அடுத்த பாடலும் அடிக்கடி கேட்ட பாடல்.

    //நான் ஏன் பிறந்தேன். சங்கர் கணேஷ் இசையில் எல்லாமே இனிமையான பாடல்கள்//

    ஆமாம், இந்த படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.  சங்கர் கணேஷ் எம் ஜி ஆர் படத்துக்கு முதன் முதலாக இசை அமைத்த படம்.

      நீக்கு
  20. முதல் பாடல் ஒரு காலத்தில் எங்கள் வீட்டில் காலையில் தினமும் ஒலிக்கும்.

    அதுவொரு மகிழ்வான கூட்டுக் குடும்பம்.

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீராம் முதல் பாட்டு ஹையோ ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல். அதுவும் துள்ளலோடு கம்பீரமான... கம்பீர நாட்டையில் அமைக்கப்பட்ட பாடல்! கேட்கும் போதே அதுவும் சீர்காழியின் கணீர்குரலுக்குப் பொருத்தமாக அதைக் கேட்கறப்ப மனம் மிகவும் தைரியத்தோடு சந்தோஷப்படும். அப்படியான உணர்வைத் தரும்.

    கணபதி பாடல்கள் என்றாலே நாட்டை, ஹம்ஸத்வனி, கம்பீரநாட்டை, திலங்க், சலநாட்டை இந்த ராகங்களில் மெட்டு அமைத்தால் ரொம்பப் பொருத்தமாக இருக்கும். இவை எல்லாமே அப்படியான மெட்டுகள்!

    ஸ்வாமியை வீதிகளில் எழுந்தருளச் செய்யறப்ப பெரும்பாலும் கம்பீரநாட்டை மல்லாரி வாசிப்பதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்பீர நாட்டையோ?  அதுல ஒரு சினிமா பாட்டு சொல்லுங்க...

      நீக்கு
  22. அடுத்த பாடலும் அருமையான பாடல், ஸ்ரீராம். சங்கர் கணேஷ் இசையா? இப்பதான் தெரிகிறது.

    அழகான வரிகள்! இசை, மெட்டு. ராகம் மனதுள் பரிச்சயமாக இருக்கு ஆனால் என்னன்னுசட்டென்று வரமாட்டேங்குது . நல்ல மெட்டு.

    பூந்தோட்டம் சூப்பரா இருக்கு. பூக்கள் எல்லாம் அழகு. பூங்கா நல்லா பராமரிக்கப்பட்டிருக்கு அப்போதைய காலகட்டத்தில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடலை ஒரு மாதிரி மனதுக்குள் பாடும் பாடல் போல, உள்ளிருந்து வெளியே வராமல் உள்ளுக்குள்ளேயே பாடுவது போல பல்லவி...   நான் சொல்ல வருவது புரிகிறதா தெரியவில்லை!!!

      நீக்கு
  23. 'கணபதியே வருவாய்
    அருள்வாய்'

    மனம் ஒன்றிய பாடல்.
    உளுந்தூர் பேட்டை சண்முகம் அவர்களின் அற்புத படைப்பு.
    சீர்காழியின் நெகிழ்ந்த குரலில் கேட்கக் கேட்க
    மனம் பரவசமடையும்.


    பதிலளிநீக்கு
  24. கணபதியே வருவாய் பக்திசொட்டும் பாடல் எங்கள் வீட்டில் பல தடவை ஒலித்தபாடல்.

    மற்றைய பாடலும் இனிமை.கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. சீர்காழியின் கணீர் குரலில் எத்தனையோ முறை கேட்டு ரசித்த பாடல். இன்று உங்கள் பகிர்வால் மீண்டும் கேட்கக் கிடைத்தது மிக்க நன்றி. மனது நிறைந்தது கணபதியின் அருளால்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  26. அது போலவே டி எம் எஸ், சுசீலா அவர்களின் நான் ஏன் பிறந்தேன் படப் பாடல் மிகவும் ரசித்த பாடல்.

    70 களில், நான் வசித்த கிராமத்துப் பகுதியில் திருமணம் நடந்த வீடுகளில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த பாடல், இப்போது கேட்ட போது அந்த நாட்களுக்குச் சென்றேன்.

    டி எம் சௌந்திரராஜன் அவர்கள் எம் ஜி ஆருக்கும் சிவாஜிக்கும் குரலில் உச்சரிப்பில் வித்தியாசப்படுத்திப் பாடுவதில் வித்தகர். இந்தப் பாடலிலும் என் ஜி ஆரின் உதட்டசைவை உன்னிப்பாகக் கவனித்தால் அதில் டி எம் எஸ் அவர்களின் குரல் தான் தெரியும். தொடங்கும் போது அந்த உச்சரிப்பு. எல்லாவருக்கு அது ஒரு காலகட்டம்.

    இரு பாடல்களுக்கும் மிக்க நன்றி, ஸ்ரீராம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் டி எம் எஸ்ஸே. தான் அப்படி எல்லாம் வித்தியாசப்பபடுத்திப் பாடவில்லை என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.  ரசிகர்களின் மனக்கற்பனை அது என்று சொல்லி இருக்கிறார்.  நன்றி துளஸிஜி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!