வெள்ளி, 28 ஜூன், 2024

சேய் பிறந்தது புது நிலவென வாய் திறந்தது பனி மலர் என....

யார் எழுதிய பாடலோ, யார் இசையோ, சூலமங்கலம் சகோதரிகளே இசை அமைத்து பாடி இருக்கக் கூடும்.  ஆனால் இனிமையான முருகன் பாடல்.

மருத மலை ஆண்டவனே மருதமலை ஆண்டவனே 
மருதமலை ஆண்டவனே மனம் குளிர பாடிட வந்தோமே 
சிந்தனையை உன்னிடம் தந்து உந்தனையே எண்ணத்தில் கொண்டு 
சிந்தனையை உன்னிடம் தந்து உந்தனையே எண்ணத்தில் கொண்டு 
கந்தன் என்னும் சொல்லில் பிறந்து (?)களித்திட வந்தோமய்யா...
கந்தன் என்னும் சொல்லில்  பிறந்து (?)களித்திட வந்தோமய்யா...  - மருதமலை 

ஆறு தலை கொண்டவனே ஆறுதலை கொடுப்பவனே
ஆறு தலை கொண்டவனே ஆறுதலை கொடுப்பவனே
 இருதாரம் கொண்டவனே ஒருதரம் வரவேண்டும் 
இருதாரம் கொண்டவனே ஒருதரம் வரவேண்டும்
ஒருதரம் வரவேண்டும்     - மருதமலை 

ஓராறு முகங்களிலே ஓராயிரம் ஒளியுமுண்டு 
ஓராறு முகங்களிலே ஓராயிரம் ஒளியுமுண்டு 
ஈராறு கைகளிலே எத்தனையோ வரங்களுண்டு 
ஈராறு கைகளிலே எத்தனையோ வரங்களுண்டு 
வீடாறு கொண்டவனே வேலெடுத்து நின்றவனே 
வீடாறு கொண்டவனே  வேலெடுத்து  நின்றவனே 
வெற்றிதரும் தலைவா நீயும் விரைந்திங்கு வரவேண்டும்   --  மருதமலை 

தேவர்குல துணைவனானாய் அசுரர் குல பகைவனானாய் 
தேவர்குலம் தழைத்திடவே தெய்வமே அவதரித்தாய் 
தெய்வமே அவதரித்தாய்  -  மருதமலை 

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

1974 ல் ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு என்று ஒரு படம் வந்தது.  இரா சங்கரன் இயக்கம்.  இந்த சங்கரன்தான் மிஸ்டர் சந்திரமௌலியோ என்று சந்தேகமாகவும் இருக்கிறது!  சிவகுமார்- ஜெயசித்ரா நடித்த இந்தப் படத்தின் பாடல்களை வாலி எழுத, வி குமார் இசை அமைத்திருந்தார்.

அதிலிருந்து இந்தப் பாடல்.

'கண்ணெல்லாம் உன் வண்ணம்' என்னும் பாடல்.  SPB யுடன் இணைந்து பாடி இருப்பது ஸ்வர்ணலதா என்று போட்டிருக்கிறது.  ஆனால் சந்தேகமாயிருக்கிறது.  தலைவர் குரலுக்கு ஜோடியாக ஏனோ இந்த பெண்குரல் பொருந்தவில்லை என்று எனக்குத் தோன்றும்.

எனினும் SPB பல்லவி படும்போதும் சரணம் பாடும்போதும் குழைவோ குழைவு.  நடுவில் ஆ.....  என்று இழுத்து குழைவது இன்னும் மயக்கம் தரும்.  பல்லவி வரிகளை SPB  மட்டும்தான் பாடுவார்.  அதுவும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாணியில் வளைத்து இழுப்பார்.

கேளுங்களேன்...

கண் எல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா
வா...வா.

எங்கெங்கு நீ... அங்கங்கு நான்
நீ இன்றி நான் இல்லை கண்ணா
நீ இன்றி நான் இல்லை கண்ணா - கண்ணெல்லாம்

மாந்தளிர் உடல் தள தளவென
மாதுளங்கனி பள பளவென
நான் தொட வரும் வடிவழகென வாவா..

பூங்கொடி இடைத்தொடு தொடு தொடு...என
பூ இதழ் சுவை கொடு கொடுவென
நீ தரும் சுகம் பொழுதொரு விதம்  தா தா

ஆஆஆ...
நீ ஒரு பாதி தந்தால்
நானும் ஒர் பாதி உண்டு
நீ... ஒரு... பாதி தந்தால்
நானும் ஒர் பாதி உண்டு
தந்ததோர் நூறு.. என்றால்
என் பங்கும் நூறு உண்டு - கண்ணெல்லாம்

சேய் பிறந்தது புது நிலவென
வாய் திறந்தது பனி மலர் என
நாம் விரும்பிய வரம் கிடைத்தது ...கண்ணே

தேன் மழலையின் குறுநகை ஒரு
பூங்கவிதையின் மணி முடி என
தாய் மனம் அதில் தனை மறந்தது கண்ணா

ஆஆஆ...
தென்றலே நீ வளர்க தெய்வங்கள் வாழ்த்துரைக்க
தென்றலே... நீ வளர்க தெய்வங்கள் வாழ்த்துரைக்க

தந்தை போல் பேர் விளங்க தாய் உள்ளம் தான் மயங்க

               

= = = = = = = = = = =

நேற்றைய பதிவில், பகிரப்பட்ட ஊட்டத்தூர் நடராஜர் கோவில் பற்றிய காணொளி - உங்களுக்காக 


பொறுமை இருந்தால், அந்தக் கோவில் பற்றி, மேலும் ஒரு பத்து நிமிட காணொளி இங்கே 

40 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. சூலமங்கலம் சகோதரிகள் பாட்டு பிடித்த பாடல்.அடிக்கடி கேட்ட பாடல்.

    அடுத்த பாடல் முதல் தடவை கேட்பது போல இருக்கிறது, முன்பு கேட்ட நினைவு இல்லை. இப்போது கேட்டேன் இனிமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூலமங்கலம் சகோதரிகள் பாடல்கள் ஒலிக்காத வீடுகளே இருக்காது இல்லையா?  அதுதான்.  இரண்டாவது பாடல் ரசிக்கத்தக்க பாடல்.

      நீக்கு
  3. ஊட்டத்தூர் நடராஜர் கோவில் பார்த்தேன். கோவில் நன்றாக இருக்கிறது. நோய் நொடி இல்லாமல் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கட்டும் இறைவன் அருளால்.

    பதிலளிநீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. 72 வாக்கில் வெளியான பாடல்...

    முதல் முதலாக மார்கழியில் கேட்ட நினைவு...

    விடியற் காலையில் கேட்கும் போது மனதை உருக்கும் பாடல்...

    பதிலளிநீக்கு
  7. ஓராறு முகங்களிலே 
    ஓராயிரம் ஒளியுமுண்டு 
    ஈராறு கைகளிலே எத்தனையோ வரங்களுண்டு...

    பதிலளிநீக்கு
  8. இரண்டாவது பாடல் கேட்ட நினைவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பாடல்!  இன்றென்ன தஞ்சையம்பதிக்கு விடுமுறையா?  பதிவொன்றும் காணோம்?

      நீக்கு
    2. ஒரு நேர்ச்சையில் தஞ்சையம்பதி இயங்கிக் கொண்டு இருக்கின்றது..

      இணையத்திற்கு வலிப்பு ..
      அதனால் ஏற்பட்ட பிழை..

      நீக்கு
  9. இரண்டு பாடல்களையும் பல முறை கேட்டிருக்கிறேன். பாடல் வரிகளைப் படிக்கும்போதே பாடல் மனதில் ஓடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...   ஏற்கெனவே கேட்டிருக்கிறீர்களா?  நல்லது.

      நீக்கு
  10. க்ஷேத்திரக் கோவை பாராயணத்தால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே
    இவ்வூரைப் பற்றித் தெரியும்...

    அப்போதெல்லாம் சிறு நீரகப் பிரச்னைக்கு என்று இந்தக் கோயிலுக்கு பட்டம் கட்டப்படவில்லை...

    அவரவரும் தரிசிக்க வேண்டிய கோயில்களுள் ஊற்றத்தூர் கோயிலும் ஒன்று என்பதில் ஐயமில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் போடுவோமில்ல பதிவு...

      ஞாயித்துக்கெழமை வந்து பாருங்க..

      நீக்கு
    2. ஓஹோ...   நான் எந்த கிழமையையும் தவற விடுவதில்லையே.....

      நீக்கு
  11. ஐந்து நாட்களுக்கு முன்னாலயே பதிவு தயார் செய்து விடுவேன்...

    அது என்னமோ இன்னிக்கு கொழப்பி விட்டுடுச்சு...

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

    இனிய பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  13. முதல் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். அருமையான பாடல். சூலமங்கலம் சகோதரிகளின் குரல் ஒரு சிலருக்குப் பிடிக்காது. ஆனால் எனக்குப் பிடிக்கும். பக்திப்பாடல்கள், குரல் அழுத்தம், ஓங்கி ஒலிக்கும் குரல் என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. சூலமங்கலம் பாடலின் பல்லவியின் கடைசி வரி, சரணத்தின் கடைசி வரி கேட்கும்போதெல்லாம் எனக்கு வேறொரு பாடல் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்துக்குப் பிறகு அதை பாஸின் உதவியுடன் கண்டுபிடித்தேன். அது "தங்கமே மெதுவாய் நடைபோடு" எனும் வரி.

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் மெட்டே ரொம்ப பரிச்சயமான மெட்டுதான்.

      நாட்டுப்புற மெட்டு.

      தங்கமே மெதுவாய் நடைபோடு பாட்டு எப்படி வரும் என்று யோசிக்கிறேன். இணையத்த்தில் பார்க்கிறேன்.

      கீதா

      நீக்கு
  14. முதல் பாடல் பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி.

    இரண்டாவது பாடல் ஞாபகம் வரவில்லையே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி. கேட்டுப்பாருங்கள் நினைவுக்கு வரலாம்.

      நீக்கு
  15. இரண்டாவது பாடலும் கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம்.

    பெண் குரல் ஸ்வர்ணலதா போன்று சில இடங்களில் தெரிந்தாலும் சந்தேகமாக இருக்கு அவங்க குரலான்னு. பெண் குரலை விட ஆண் குரல் எஸ் பி பியின் குரல் செம என்பதோடு உணர்வுகளோடு இருக்கு. நீங்க சொல்லிருப்பது போல் குழைவு...

    சரணத்திலும் பாருங்க செம ஃபீலிங்க் கொடுத்து பாடுகிறார். கடைசியில் வா வா என்பதிலும் சேர்த்து....பெண் குரல் அத்தனை அந்த ஃபீல் இல்லாதது போல இருக்கு

    நீ ஒரு பாதி தந்தால் - இதுல பாருங்க செம குழைவு...அந்தக் குரலில் அந்த வரிக்கேற்றாற்போல....

    நானும் ஓர் பாதி உண்டு - இதுல மட்டும் பெண் குரல் உணர்வு தெரிகிறது.

    இந்த வரிகள் பாடி விட்டு அப்படியே வண்ணம் கொண்ட வெண்நிலவு வானம் விட்டு வாராயோ பாடலுக்குப் போகலாம்.
    அப்ப பீலு ராகமோ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா.. நானும் தப்பா எழுதி இருக்கேன் போல.. அது ஸ்வர்ணலதா இல்லை, ஸ்வர்ணா...

      நீக்கு
    2. ஸ்வர்ணலதா குரல் இல்லை என்று தெரிந்தது இரண்டாம் முறை கேட்டப்ப.

      ஸ்வர்ணா என்று பாடகி இருந்தாரா!

      கீதா

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் எப்போதோ கேட்ட நினைவு உள்ளது. ஆனால் மனனம் ஆகும்படி அடிக்கடி கேட்டதில்லை. இப்போது கேட்டு ரசித்தேன். சூலமங்லம் சகோதரிகளின் குரலில் பாடல் நன்றாக உள்ளது.

    இரண்டாவது திரைப்படப்பாடல் அடிக்கடி வானொலியில் கேட்டிருக்கிறேன்.( எஸ். பி. பி யின் குரல் இனிமைக்காக) இப்போதும் கேட்டு ரசித்தேன். இந்தப்படமெல்லாம் பார்த்ததில்லை. பாடல்தான் கேட்டு ரசித்துள்ளேன். அதற்கும் அந்த காலகட்டத்தில் (1974ல்) வீட்டில் பயங்கர தடைகள்.(டூயட் பாட்டெல்லாம் கேட்காதே என கண்டிப்பான அறிவுரைகள்.)

    ஸ்வர்ணலதா நல்ல பாடகி. அப்போதே அவர் பாட ஆரம்பித்து விட்ட செய்தி இப்போதுதான் உங்கள் பதிவு மூலமாக தெரிந்து கொண்டேன். அவர் நாங்கள் சென்னையில் வாழ்ந்த போது (மயிலையில்) நாங்கள் இருந்த வீட்டிற்கு அடுத்த தெருவில் ஒரு வீட்டில் வசித்தார். ஒவ்வொருவருடைய வாழ்க்கைத் திருப்பங்கள் எப்படியென்பதை யாரறிவார்.? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... நானும் அந்தப் படம் பார்த்ததில்லை. நிறைய படங்கள் நான் பார்க்காத படங்கள்தான். தேங்க்ஸ் டு விவிதபார்த்தி மற்றும் இலங்கை வானொலி.. பாடல்களை மட்டும் நான் தவறவிடுவதில்லை!

      அப்பா ஆபீஸ் போன பிறகு எங்கள் ராஜ்ஜியம்தான் என்பதால் பாடல்கள் கேட்க எங்களுக்கு எந்த தடையும் இருந்ததில்லை. நிறைய நிறைய கேட்டிருக்கிறோம்!

      அது ஸ்வர்ணலதா இல்லை. தப்பா எழுதி இருக்கேன். அது ஸ்வர்ணா.

      நீக்கு
  17. முதலாவது பக்தி பாடல் பல தடவை கேட்ட பாடல் .

    இரண்டாவதும் கேட்டிருக்கிறேன் நல்ல பாடல்..எஸ்.பி.பி குரல் தெரியும் மற்றையது என்னைக் கேட்க வேண்டாம்.:( சுசீலா, ஜானகி, சித்ரா, சின்மயி ,சைந்தவி குரல்கள் பிடிப்பேன்.:)

    பதிலளிநீக்கு
  18. சூலமங்கலம் சகோதரிகளின் பாட்டு அருமையாக இருந்தது. அதிகம் கேட்டிராத பாடல். முருகன் பற்றி வித்தியாசமான பாடல்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  19. கண் எல்லாம் உன் வண்ணம் 70 களில் பல முறை வானொலியில் நிறைய முறை கேட்ட பாடல்.

    பண்டெல்லாம் அந்த நேரத்தில் இவர்கள் இருவரும் நடித்த படங்கள் ஏராளமாக வந்த நேரம். ஜெயசித்ராவும் சிவகுமாரும் திரை உலகை ஒருவிதத்தில் ஆண்ட ஒரு நேரம் எனலாம். நல்ல பாடல்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  20. நேற்றைய பதிவில் சொல்லப்பட்டிருந்த கோயிலின் காணொளியைக் கண்டேன். அழகான கோயில். தகவலுக்கும் காணொளிக்கும் மிக்க நன்றி, ஸ்ரீராம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!