திங்கள், 3 ஜூன், 2024

"திங்க"க்கிழமை   :  தஞ்சாவூர் வாழைக்காய் கூட்டு  - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

தஞ்சாவூர் வாழைக்காய் கூட்டு..

*** *** ***

தேவையானவை: 
தரமான மொந்தன் வாழைக்காய் 2 
பெரிய வெங்காயம் - 1 
தக்காளி - 1 
பச்சை மிளகாய்  5
தேங்காய் ஒரு மூடி
இஞ்சி பூண்டு சம அளவில்



 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1/2 அங்குலம்
கிராம்பு - 2 
கல் உப்பு - தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு:
மல்லித் தழை  
கறிவேப்பிலை
கடலெண்ணெய் தேவைக்கு




மொந்தன் வாழைக்காய் தேறியதாக எடுத்துக் கொள்ளவும்.. 

தேறியதாக என்றால் சுட்டு விரல் கொண்டு வாழைக்காயைத்
 தட்டினால் - நங்.. நங்.. என்று சத்தம் வரவேண்டும்.. பெரிய வெங்காயத்தின் தோலை நீக்கி விட்டு  சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்..
தக்காளி பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்..

வாழைக்காய்களைத் தோல் நீக்கி நடுத்தர அளவில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்..

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.. இஞ்சி பூண்டு சம அளவில் எடுத்து சுத்தம் செய்து தேங்காய்த் துருலுடன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.. விரும்பினால் சோம்பு மிளகு பட்டை கிராம்பு இவற்றையும் அரைத்துக் கொள்ளலாம்..

இப்போது வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கடலெண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து நறுக்கி வைத்துள்ள வாழைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் 
இவற்றைச் சேர்த்து உப்பு போட்டு சிறிதளவு நீர் விட்டு மூடி வைக்கவும்...

ஒரு கொதி வந்ததும் அனைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் மஞ்சள் தூள் மல்லித்தூள் சேர்த்து கொத்தமல்லியைக் கிள்ளிப் போட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு ஒரு சுழற்று சுழற்றி மூடி வைத்து அடுப்பை நிறுத்தி விடவும்..

இது தெரியாதாக்கும் என்றால் இதிலுள்ள நுணுக்கங்களைக் கவனிக்கவும்..

சாமார்த்தியசாலி என்றால் கடைசியாகக் கூட தாளித்துக் கொள்ளலாம்...

இரசாயனக் கலப்பு ஏதும் இல்லாத சுத்த சுயம்பு மாதிரியான சமையல் குறிப்பு...

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..

ஃஃஃ

26 கருத்துகள்:

  1. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்..

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று சமையற் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. இன்று எனது குறிப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள்.. ///

      தங்களுக்கு நல்வரவு..

      நீக்கு
  7. இன்றைய கூட்டு வித்தியாசம்.

    நாங்கள் சோம்பு பட்டை போன்றவற்றையும், வெங்காயம் பூண்டு ஆகயவைகளை கூட்டுக்கு உபயோகிப்பதில்லை. செய்துபார்க்கும் வாய்ப்பு இல்லை.

    ஹாஸ்டல் காலத்தில் வாழைக்காய் பொடிமாசில் வெங்காயம் சேர்த்துச் செய்வார்கள். அதன் ருசியினால், எங்கள் வீட்டில் பொடிமாஸ் பண்ணும்போது, எப்போதாவது எனக்காக வெங்காயம் போட்டுச் செய்வார்கள். அது பசங்களுக்கும் மனைவிக்குமே பிடிக்காது என்பதால் நான் மட்டும்தான் கஸ்டமர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரும்பினால் தான் சோம்பு மிளகு பட்டை கிராம்பு வகையறாக்கள்...

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. சுருக்கமாக செய்முறை விளக்கம் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  9. வித்தியாசமான, நல்லதொரு குறிப்புக்கு அன்பு நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
  10. துரை அண்ணா இந்தக் கூட்டு எங்கூர் கூட்டுப்போலலா இருக்கு!

    அருமையான குறிப்பு துரை அண்ணா.

    எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் கற்றுக் கொண்டது திருநெல்வேலியில் இருந்த என் அத்தை ஒருவரின் வீட்டில் அவர் செய்து முதன் முதலில் சாப்பிட்டுப் பிடித்துப் போக அப்படியே கற்றுக் கொண்டேன்.

    அவங்க தேங்காய் எண்ணையில் செய்திருந்ததால் நானும் அதே எண்ணையில் செய்கிறேன். அது போல அவங்க சோம்பு தாளித்து செய்திருந்தாங்க. அரைச்சுவிட்டது கிராம்பு இல்லை, வரமிளகாய் சேர்த்து அரைத்து மற்றவை எல்லாம் உங்கள் குறிப்புதான். பச்சைக்கொத்தமல்லித் தழை சேர்க்கலை கறிவேப்பிலை மட்டும். அப்படிக் கற்றுக் கொண்டு வீட்டில் செய்வதுண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிளகாய் குறைத்துக் கொள்வது நல்லது..

      இதெல்லாம் ஒரே சுழற்சிக்குள் வருபவை தானே...

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நன்றி சகோ..

      நீக்கு
  11. நல்ல கூட்டு குறிப்பு.

    நாங்களும் செய்வோம் பட்டை ,கிராம்பு ,சோம்பு சேர்த்ததில்லை. செய்து பார்க்கிறேன் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி செய்து பாருங்கள்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி..

      நீக்கு
  12. கருத்துரைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  13. வாழைக்காய் கூட்டு நன்றாக இருக்கிறது. செய்முறை குறிப்பும் படங்களும். பட்டை கிராம்பு சேர்க்காமல், சின்ன சீரகம் , மிளகாய் தேங்காய்பூவுடன் அரைத்து சேர்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// பட்டை கிராம்பு சேர்க்காமல், சின்ன சீரகம் ///

      பற்பல வகைகள்...
      அவரவர் கைப்பக்குவம்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நன்றி ...

      நீக்கு
  14. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    திங்கப் பதிவில் தங்களின் வாழைக்காய் கூட்டு செய்முறை பக்குவங்கள் நன்றாக உள்ளது.இது போல் மசாலாக்கள் சேர்த்து நான் செய்ததில்லை.

    கொஞ்சம் கடலைப்பருப்பு வேக வைத்து வாழைக்காயுடன் சேர்த்துக் கொண்டு, தேங்காய், சீரகம், தேவைக்கேற்ப வர மிளகாய் அரைத்து செய்திருக்கிறேன். தங்கள் செய்முறை பக்குவம் நன்றாக உள்ளது. இதுபோல் ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.

    இங்கு ஊரிலிருந்து எங்கள் மகன் வந்திருப்பதால், வேலைகளின் காரணமாக பதிவுகளுக்கு வழக்கம் போல வர இயலாமல் சற்று தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!