வெள்ளி, 21 ஜூன், 2024

அன்பால் குழந்தை கடிக்கின்றது அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது தடவிப் பார்த்தால் இனிக்கின்றது

'உன்னைப்பாடும் தொழிலன்றி வேறு இல்லை' என்னும் டி எம் சௌந்தரராஜன் பாடல் இன்றைய தனிப்பாடலாக....  இசை டி எம் சௌந்தராஜனே.  எழுதியது யாரோ...   அறியேன்!

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா

கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
சிற்பச்சிலையாக நிற்பவனே
சிற்பச்சிலையாக நிற்பவனே
வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே
முருகா முருகா

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே
முருகா முருகா
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா முருகா முருகா




============================================================================================

அண்ணன்-தங்கை பாசத்துக்கு சிவாஜி நடித்துள்ள படங்கள் போல வேறு யாரும் நடித்திருக்க மாட்டார்கள். தங்கை, தங்கைக்காக, பராசக்தி, பாசமலர், அண்ணன் ஒரு கோவில், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு என்று பல படங்கள். நான் வாழவைப்பேன் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இன்று 'தங்கைக்காக' படத்திலிருந்து 'எதையும் தாங்குவேன் அன்புக்காக' என்னும் பாடல்...

அண்ணனாக சிவாஜி, தங்கையாக லக்ஷ்மி, மற்றும் முத்துராமன், நம்பியார் நாகேஷ் நடித்துள்ள இத்திரைப்படம் 1971 ல் வந்ததது. இலங்கைப் பாடல் பாணியில் ஏ எல் ராகவன் பாடிய 'அங்கமுத்து தங்கமுத்து தனிக்கு போனாளாம்' எனும் (பைலா வகையறா) பாடல் நாகேஷின் நடனத்தோடு இடம்பெற்ற படம்.

டி எம் சௌந்தரராஜன் பாடியுள்ள இந்தப் பாடல் கண்ணதாசன் எழுதி எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்தது.  தங்கை பற்றிய பாடல்களில் இதுவும் முக்கியமான ஒரு பாடலே...

எதையும் தாங்குவேன் அன்புக்காக - நான்
இதையும் தாங்குவேன் தங்கைக்காக
இமைகள் வாழ்வதே கண்ணுக்காக - என்
இதயம் வாழ்வதே தங்கைக்காக - எதையும்

அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
தடவிப் பார்த்தால் இனிக்கின்றது
தாய்மை உள்ளம் தவிக்கின்றது
தாய்மை உள்ளம் தவிக்கின்றது    -  எதையும் 

பட்டால்தானே தெரிகின்றது 
பாசம் என்பது என்னவென்று  
பட்டால்தானே தெரிகின்றது 
பாசம் என்பது என்னவென்று 
சுட்டால்தானே தெரிகின்றது 
தொட்டால் சுடுவது நெருப்பென்று
                              தொட்டால் சுடுவது நெருப்பென்று      -  எதையும் 

ஐந்தறிவான பறவைக்கெல்லாம் 
அன்பும் உறவும் புரிகின்றது  
ஐந்தறிவான பறவைக்கெல்லாம் 
அன்பும் உறவும் புரிகின்றது 
ஆறறிவான மனிதருக்கோ 
அதுதான் கொஞ்சம் குறைகிறது 
                        அதுதான் கொஞ்சம் குறைகிறது   - எதையும் 

35 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
    எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
    முருகா முருகா முருகா முருகா...

    பதிலளிநீக்கு
  5. 75 களில் வெளியான இசைத் தொகுப்பு...

    இதில் தான் அந்தப் பாடலும்! ..

    மண்ணானாலும் திருச்செந்தூரில்..

    திரு. தமிழ்நம்பி என்பவர் எழுதிய பாடல்கள்...

    பதிலளிநீக்கு
  6. ஐந்தறிவான பறவைக் கெல்லாம்
    அன்பும் உறவும் புரிகின்றது
    ஆறறிவான மனிதருக்கோ
    அதுதான் கொஞ்சம் குறைகிறது...

    - கவியரசர்..

    அட்சர லக்ஷம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசிக்கத்தக்க பாடல்.  மனதில் தைக்கும் வரிகள்.

      நீக்கு
  7. /// அன்பும் உறவும் புரிகின்றது///

    அன்பும் உறவும் பேசுபொருள் ஆனால,

    வீண் வாதங்கள்..
    மனக்
    கச்ப்புகள்...

    அட போங்கையா!..
    .

    பதிலளிநீக்கு
  8. நேற்று வந்தேன்... பார்த்தேன்...

    ஏதொன்றையும் ரசிக்கின்ற மன நிலை இல்லை..

    அமைதியாகச் சென்று விட்டேன்..

    வாழ்க நலம்..
    வாழ்க நட்பு..

    பதிலளிநீக்கு
  9. ஒட்டு மொத்த கண்ணோட்டத்தில் நேற்றைய பதிவு சிறப்பாக இருந்ததாகத் தெரிகின்றது...

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. முதல் முருகன் பாடல் அடிக்கடி கேட்ட பாடல்.
    அடுத்த பாடல் கேட்டு இருக்கிறேன்.
    சிவாஜி அவர்களின் தங்கை பாசம் நடிப்பு எல்லா படங்களிலும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. இரண்டும் சிறப்பான பாடல்களே ஜி

    //உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை//

    இதையே தொழில் ஆக்கி சம்பாரித்ததை பாடியே சொல்லி விட்டார் ஐயா திரு.டிஎம்எஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா.... அமைந்து விடுகிறது, இல்லை? நன்றி ஜி.

      நீக்கு
  13. இனிய காலை வணக்கம். முதல் பாடல் கேட்டு ரசித்த பாடல். இரண்டாம் பாடல் கேட்ட நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். இரண்டாம் பாடல் பழைய பொக்கிஷம்!

      நீக்கு
  14. முதல் பாடல் அடிக்கடி கேட்ட பாடல். ஆரம்ப இசை டக்கென்று திரை இசை போல இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா அதெல்லாம் எனக்கு டக்குனு தெரிஞ்சிருச்சுனா அப்புறம் ......!!!!

      கீதா

      நீக்கு
  15. இரண்டாவதும் நிறைய கேட்டிருக்கிறேன். வள்ளியூரில் வீட்டின் பின் புறம் 2 நிமிட நடையில் இருந்த தியேட்டரில் படக்காட்சிகள் தொடங்கும் முன் போடப்படும் பாடல்களில் இதுவும் அடங்கும் குறிப்பாக சிவாஜி படம் என்றால் பாடல்கள் போட்டுவிடுவாங்க.

    இதே மெட்டில் வேறொரு பாடலும் உண்டோ? இருப்பது போல் தோன்றுகிறது ஆனால் வழக்கம் போல வார்த்தைகள் கிடைக்க மாட்டேங்குது. யோசித்துக் கொண்டிருக்கிறேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதெல்லாம் எப்படியோ எங்கோ காதில் விழுந்து விடுகிறது!

      நீக்கு
  16. " உன்னைப் பாடும் தொழிலன்றி....." பல தடவை கேட்ட பக்திப் பாடல்.

    அடுத்ததும் நல்ல பாடல் அண்ணன் தங்கை பாசப் பாடல் கேட்டிருக்கிறேன்.
    இன்றைய இரண்டுபாடல்களுமே செளந்தரராஜன் பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  17. பாடலின் வார்த்தைகள் அருமை.

    யாருக்காக யாருக்காக பாடலும் இதை ஒட்டி இருக்காப்ல இருக்கு ....இப்ப நினைவு வந்தது இரண்டு பாடல்களையும் மெட்லி செய்யலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் கேட்டிருக்கிறேன். ஆனால், அவ்வளவாக நினைவில் இல்லை. "உனைப் பாடும் பணி ஒன்று போதும்" என்ற சீர்காழி அவர்களின் பாட்டைத்தான் அடிக்கடி கேட்டுள்ளேன். இப்போது முதல் பாடலை கேட்டு மகிழ்ந்தேன். மிக நன்றாக உள்ளது.

    இரண்டாவது பாடல் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். நடிகர் திலகத்தின் நடிப்புக்கு கேட்கவா வேண்டும்,. அன்பான அண்ணனாக, பாசமுள்ள கணவராக, பொறுப்புள்ள தந்தையாக என்று எந்த கதாபாத்திரத்திற்கும் பொருத்தமானவர். காலம் உள்ளவரை அவர் புகழ் பேசும்.

    காலையில் உடனடியாக வர இயலவில்லை. இரண்டு பாடல்களையும் இப்போது கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!