ஞாயிறு, 6 அக்டோபர், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – நெல்லைத்தமிழன் ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 40

 

குருக்ஷேத்திரத்தில் தரிசனம் முடித்துக்கொண்டு வந்த எங்களை ஏற்றிக்கொண்டு, சுமார் 160 கிமீ தூரத்தில் இருக்கும் தில்லியை நோக்கி எங்கள் பேருந்து விரைந்ததுஒரு தடவை மிகக் கடுமையான மழை பெய்தது. (கோவிட் நேரத்தில்) மற்றபடி பெரும்பாலும் நாங்கள் தில்லியில் தங்குமிடத்திற்கு இரவு 8 மணி வாக்கில் சென்றுவிடுவோம்.

தில்லியில் நாங்கள் எப்போதும் தங்கும் இடம் கொஞ்சம் சுமார்தான். அங்கிருக்கும் பல அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிடும் போலிருக்கிறது. இரவு உணவுக்குப் பிறகு, மறுநாள் காலை 3 மணி நேரம் தில்லியைச் சுற்றிப்பார்க்கலாம் என்று யாத்திரைக் குழுத் தலைவர் சொன்னார்.

இந்த மாதிரி நெடிய யாத்திரையின் முடிவில் ஒவ்வொருவருக்கும் பெரிய லட்டு ஒன்று கொடுப்பார்கள் (மறுநாள் மதிய உணவிற்குப் பிறகு). பல தடவை குழுவினருடன் பயணம் செய்திருப்பதால் சமையலறைக்குச் சென்று புகைப்படம் எடுத்தேன். கடைசிப் பகுதியை இனிப்புடன் ஆரம்பிக்கலாம் இல்லையா?

காலை குளித்துத் தயாரானதும், பிர்லா மந்திரி, ராமர் கோவில், மற்றபடி தில்லியை பேருந்தில் இருந்தவாறு சுற்றுப்பார்ப்பது, ஒரு சில இடங்களில் நிறுத்தி இறங்கிப் பார்ப்பது என்று ஒரு மூன்று மணி நேரம் பொழுது போகும். என்ன என்ன பார்த்தோம் என்பதைப் புகைப்படங்கள் வாயிலாக் காணலாம்.

தில்லியில் உள்ள ஒவ்வொரு இடமும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்கள். அது மட்டுமல்ல, நம்மை ஆள்பவர்கள் இருக்கும் பிரதேசம் அது. அவற்றை முழுமையாகச் சுற்றிப்பார்க்க நமக்கு நிறைய நாட்கள்/வாரங்கள் தேவை. எனக்கு எப்போதுமே வரலாறு நிகழ்ந்த இடங்களைக் காண்பது மிகவும் பிடித்தமானது. ஆனால் அதற்கான வாய்ப்பு இன்னும் வரவில்லை.

ஒரு முறை (2020) பிர்லா மந்திரைக் காணச் சென்றபோது, தில்லி வெங்கட் அவர்களைச் சந்தித்தேன்இன்னொரு முறை, இந்திரா காந்தியின் இல்லத்தைச் சுற்றிப்பார்த்தேன். நூறு மீட்டர் தொலைவில்தான் குதுப்மினாரைப் பார்த்தேன். தில்லியைப் பற்றி நினைக்கும்போது எனக்கு நிறைய இடங்களைக் காணவேண்டும் என்று எண்ணம். எப்போது வாய்க்குமோ.

வெங்கட் நாகராஜுடன் நான். எதிரே பிர்லா மந்திர்


குதுப்மினார் மற்றும் இந்தியா நுழைவாயில்

இந்திராகாந்தி அவர்களின் வீடு

இந்திரா காந்தி நடந்த பாதையில் நான்

ஸ்ரீராமர் திருக்கோவில், தில்லி

இராமர், சீதை, இலக்குவன்.   அனுமார்.

அதற்குப் பிறகு இந்தியா நுழைவாயில் (India Gate), குதுப்மினார் மற்றும் இந்திரா காந்தியின் இல்லம் சென்றோம்எனக்கு மிகவும் பிடித்திருந்த தலைவர் அவர். பஞ்ச துவாரகா யாத்திரையை இவற்றைப் பற்றியெல்லாம் எழுதி முடிக்க விரும்பவில்லை.  12 மணிக்கு நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினோம். யாத்திரையின் கடைசி மதிய உணவுநல்ல விருந்தாக அமைந்தது. (சாதம், பருப்பு, சாம்பார், தயிர்வடை, கோஸ் கறியமுது, கத்தரி கூட்டு, வாழை சிப்ஸ், அப்பளாம், அக்காரவடிசல், ரசம், தயிர்) பிறகு ஒவ்வொருவருக்கும் ஒரு லட்டு கொடுத்தார்கள். எங்கேனும் வெளியில் போக விருப்பமிருந்தால் போய்விட்டு, மாலை 6 மணிக்குள் திரும்பிவிடவேண்டும், 7 மணிக்கு பேருந்து இரயில் நிலையத்துக்குக் கிளம்பிவிடும் என்றார்கள்.

சில முறை நான் முனிர்க்காவில் இருக்கும் என் உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். சில முறை கடைவீதிகளில் சுற்றித் திரிந்து ஹால்திராம், பிகானீர்வாலா போன்ற உணவகங்களில் சாப்பிட்டிருக்கிறேன்.

இரவு 7 ½ மணிக்கு தில்லி இரயில் நிலையம் நோக்கிச் சென்றோம். பயங்கரமான மழைதில்லியே விநோதமாக இருக்கிறது. சில சமயம் தாள முடியாத வெயில். சில நேரங்களில் அளவுக்கு அதிகமான மழை. சில நேரங்களில் பயங்கர குளிர் (பல பயணங்களின் அடிப்படையில் எழுதுகிறேன்).  கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் எங்கள் ப்ளாட்ஃபார்ம் சென்றோம். மூன்றாம் நாள் காலையில் சென்னை வந்து சேர்ந்தோம்இப்படியாக எங்கள் பஞ்ச துவாரகா யாத்திரை நல்லபடியாக முடிந்தது.

நாங்கள் தரிசித்த முக்கியமான தலங்களை மாத்திரம் திரும்பிப்பார்க்கும்முறையில் கொடுத்திருக்கிறேன்.

வதோரா பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தரிசனத்துடன் யாத்திரை துவங்கியது. – குஜராத்

டாக்கூர் துவாரகையில் தரிசனம் குஜராத்

அடுத்து கோமதி நதி முகத்துவாரத்தில் அமைந்துள்ள கோமத்துவாரகா கோவில் தரிசனம் குஜராத். 

ருக்மணி கோவில் (ருக்மணீ துவாரகா) – குஜராத்

Beyt  Bபேட் துவாரகா ஸ்ரீகிருஷ்ணர் அரசாண்ட இடம் குஜராத்

மூலத் துவாரகை குஜராத்

சுதாமாபுரி குசேலர் வாழ்ந்த ஊர் (போர்பந்தர் அருகில்) – குஜராத்

ஸ்ரீகிருஷ்ணரின் சரம திருமேனி எரியூட்டப்பட்ட பிரபாஸ நதி தீரம், பலராமர் தன்னடிச்சோதிக்கு எழுந்தருளிய இடம் இரண்டுமே சோம்நாத்தில் உள்ளது குஜராத். 

புகழ்பெற்ற ஜ்யோதிர்லிங்கத் தலமான சோம்நாத் கோவில் குஜராத். 

ஸ்ரீகிருஷ்ணர், வேடன் ஒருவனால் (ஜரா) தவறுதலாகக் கொல்லப்பட்ட இடம், பால்கா தீர்த்தம், விராவல் (சோம்நாத்திலிருந்து 7 கிமீ தூரத்தில்) – குஜராத். 

ஸ்ரீநாத்ஜி துவாரகா (நாத்துவாரகா) – ராஜஸ்தான். 

கங்க்ரோலி துவாரகா ராஜஸ்தான். 

புஷ்கர் ஏரி (சரோவர்) ராஜஸ்தான். 

புஷ்கர் பிரம்மா கோவில் ராஜஸ்தான். 

பிர்லா மந்திர், ஜெய்ப்பூர் ராஜஸ்தான். 

கோகுலம் நந்தகோபர் மாளிகை உத்திரப்பிரதேசம். 

கோகுலம் பலராமர் பிறந்த இடம் உத்திரப்பிரதேசம். 


மதுரா ஸ்ரீகிருஷ்ண ஜென்மஸ்தான் உத்தரப்பிரதேசம். 

விருந்தாவனம் நிதிவனம் ஸ்ரீகிருஷ்ணர் ராஸலீலை உத்தரப்பிரதேசம். 

குருக்ஷேத்திரம் பிரம்மசரோவர் - ஹரியானா

குருக்ஷேத்திரம் கீதை உபதேசித்த இடம் - ஹரியானா. 

குருக்ஷேத்திரம் பீஷ்மகுண்டம் - ஹரியானா

இது ஒரு கடினமான பயணம் என்றே தோன்றியது. காரணம் நிறைய மாநிலங்களில் இந்தக் கோவில்கள் இருக்கின்றன (குஜராத், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், ஹரியானா). முழுமையான பேருந்து பிரயாணம், வதோதராவில் ஆரம்பித்து தில்லி முடிய. நிறைய நாட்களில் போதுமான அளவு தூக்கமின்மை. இருந்தாலும் நல்ல உணவு, எல்லாக் கோவில்களிலும் நல்ல தரிசனம் என்று மனதில் உற்சாகம் இருந்ததுநிறைய படங்களுடன் ஞாயிறு பதிவாக எழுத ஆரம்பித்து 40 வாரங்கள் ஓடினதே தெரியவில்லை. எழுதுவது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. (படங்களைக் கோர்ப்பதும்). இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்தவர்களுக்கும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டவர்களுக்கும் மிக்க நன்றி. உங்களுக்கும் இத்தகைய யாத்திரைகள் அமைவதாகுக.

மீண்டும் இன்னொரு தொடரில் சந்திப்போம்.

(நிறைவு)

41 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க...

    பதிலளிநீக்கு
  2. பயணக்கட்டுரை சிறப்பாக அமைந்தது ஸ்ரீ கிருஷ்ணரின் அருள். கடைசியாக முக்கிய இடங்களின் படங்களை கோர்த்தது சிறப்பம்சம். அடுத்த பயணக்கட்டுரை பற்றிய அறிவிப்பை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். நன்றி. அடுத்து தனி அல்லது மனைவியுடன் இருவரும் சென்ற கோயில்களில் சிலவற்றைப்பற்றி எழுதப்போகிறேன். ஜனவரியில் புதிய யாத்திரைத் தொடர் என நினைத்திருக்கிறேன்... எப்படி அமையும் என்பது தெரியவில்லை.

      நீக்கு
  3. வெகு சிறப்பு நெல்லை.  இதை நீங்கள் மின் புத்தகமாக வெளியிடலாம்.  இந்தக் கட்டுரைத் தொடர் எழுதுவதற்கு என்னென்ன முன்னேற்பாடுகள் செய்து கொண்டீர்கள்?  எந்த தினத்தில் எங்கே என்று எப்படி நினைவில் இருந்தது?  சிறு குறிப்புகள் எழுதி வைத்திருப்பேன் என்று சொன்ன நினைவு.  படங்களை எப்படி தெரிவு செய்தீர்கள்?  வெளியீட்டிற்கு அனுப்பாமல் இன்னும் நிறைய படங்கள் உங்களிடம் இருக்கும்.  அதில் அட, இதைச் சேர்த்திருக்கலாமே' என்று எண்ணிய படங்கள் எத்தனை?  மொத்தமாக எழுதி விட்டேர்களா?  அவ்வப்போது எழுதினீர்களா? வரிசையாக சொல்லியும் சொன்ன வரிசையில் விட்டுப்போன தகவல் என்று ஏதும் உண்டா?  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். முன்னரே சொல்லியபடி, ஒவ்வொரு கோயிலுக்கும், யாத்திரைக்கும் ஒன்றிர்க்கு மேற்பட்ட முறைகள் சென்றிருக்கிறேன். சில நேரங்களில், சென்று சேரும் நேரம் காரணமாகவோ, இல்லை வேறு காரணங்களாலோ சில பகுதிகளை, சில கோணங்களில் புகைப்படம் எடுக்காமல் இருந்திருப்பேன். அல்லது புதிய வாய்ப்பும் அமைந்திருக்கும். அதனால் ஒவ்வொரு சமயத்தில் எடுத்த புகைப்படங்களில் தேர்ந்தெடுத்துச் சேர்த்துக்கொள்வேன். அந்தப் பகுதிகள் வெளியாகி நிறைய வாரங்கள் கழித்து என் புகைப்படங்களைப் பார்க்கும்போது, அட.. இந்த வருடம் சென்றது நினைவில் இல்லையே, அதில் உள்ள படங்களையும் சேர்த்திருக்கலாமே என்று தோன்றும்.

      யாத்திரை செல்லும்போது, குழுவின் வாட்சப்பிற்கு நான்தான் படங்கள் அவ்வப்போது அனுப்புவேன். அதனால் யாத்திரைக் குழுத் தலைவர் படங்கள் எடுப்பதைப்பற்றி கண்டுகொள்ள மாட்டார். எனக்குச் சில நேரங்களில் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வாரணாசி அனுமார் கோவில், திருநாவாய் திவ்யதேசத்தில் படங்கள் எடுத்தபோது தடை சொல்லி, அழித்திருக்கிறார்கள்.

      யாத்திரையின்போது, சென்ற இடம், சாப்பிட்ட உணவு பற்றிய குறிப்புகள் உண்டு.

      மொத்தமாக எழுதவாய்ப்பே இல்லை. சில நேரங்களில் நாலைந்து வாரங்களுக்கு படங்கள் கோர்த்துக்கொண்டு எழுத ஆரம்பிப்பேன். சில சமயம் பத்து வாரங்கள் படங்கள் கோர்த்து எழுத ஆரம்பிப்பேன். சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். ஒரு வாரம் எழுத இரண்டு மணி நேரம் ஆனதும் உண்டு, ஒரு மணி நேரத்திலேயே எழுதியதும் உண்டு, அதிக நேரம் (4-5) எடுத்ததும் உண்டு. பிறகு படங்களை ஒழுங்குபடுத்தி கேஜிஜி அவர்களுக்கு அனுப்பிவிடுவேன்.

      படங்களில் நாங்கள் இருவரும் இருப்பது, குழு, மனைவி மாத்திரம் இருப்பது போன்றவற்றையும், சில கோணங்களில் சரியாக அமையாதவையையும் ஒதுக்கிவிடுவேன்.

      நீக்கு
  4. நிறைவான நிறைவு நெல்லை. 39-வது அத்தியாயத்தில் முடிக்காமல் 40-ல் முடித்ததும் நல்லதுக்குத் தான்.

    ஒரு மீள் பார்வைக்கு படங்களை காட்சிப்படுத்தியதும் அருமை. சில படங்களை பார்க்கும் பொழுது நினைவு பின்னோக்கிச் சென்று மீண்டது.

    தலை நகர் தில்லியில் ஸ்ரீ ராமர் கோயிலைத் தவிர இந்தப் படவரிசையில் இருக்கும் மற்ற இடங்களைப் பார்த்திருக்கிறேன்.
    இந்திரா காந்தி அம்மையார் வசித்த இடத்தின் படத்தைப் பார்த்த பொழுது நாங்கள் அங்கு சென்றிருந்த பொழுது நினைவு சின்னமாக அவர் உருவம் பொறித்த வெள்ளி நாணயம் ஒன்றை வாங்கிக் கொண்டது நினைவுக்கு வந்தது. இன்னும் வைத்திருக்கிறேன்.

    கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு அடுத்த தொடரைத் தொடருங்கள்.
    நினைவில் நிற்கும் ஒரு தொடரை வாசிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.
    அன்புடன்.
    ஜீவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். தொடர்ந்து வந்து உங்கள் எண்ணங்களைப் பரிமாறிக்கொண்டதற்கு நன்றி.

      நான் இந்திரா காந்தியின் மீது படிக்கும் காலத்தில் அதீத அன்பும் மதிப்பும் வைத்திருந்தவன். இந்திரா, ராஜீவ், ஜெ.. ஆகியோர் மரணம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. என்னதான் நமக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்ப முயன்று, அதில் தன்னலமில்லாத உழைப்பைக் கொடுத்து, நாளை என் இராச்சியம் அமைந்தால் அது எப்படி இருக்கும் எனக் காண்பித்த வேலுப்பிள்ளை பிரபாகரின் தோல்வி, நானே தோற்றுவிட்ட வருத்தத்தைக் கொடுத்தது...

      நீக்கு
  5. ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள் வெளியூர் பயணத்திலோ?

    சில தினங்களாக தளத்தின் பக்கம் வரவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்கா யு எஸ்ஸில் இருக்கிறார்.  இப்போது நவராத்திரி கொலு பிஸி.  சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
    2. நல்லது.. நல்லது..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    3. உங்கள் விசாரிப்புக்கு நன்றி சகோ.
      இறைவன் அருளால் நலமாக இருக்கிறேன்.
      வெளியூர் பயணம் இல்லை.
      நவராத்திரி வேலைகள் மடி கணினி பக்கம் வர முடியவில்லை.
      செல்போன், ஐபேட் மூலம் பதில் அளிக்க முடியவில்லை.
      அதானல்தான் வரவில்லை.

      நீக்கு
    4. நன்றி ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      நீக்கு
  6. நல்லபடியாக நிறைவு...

    பஞ்ச த்வாரகா யாத்திரையில் நானும் கலந்து கொண்டதைப் போன்ற உணர்வு..

    ஹரே கிருஷ்ண..

    கிருஷ்ண .கிருஷ்ண..

    பதிலளிநீக்கு
  7. அழகான படங்கள் கண்ணுக்கு விருந்து..

    நெல்லை அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      முதலில் நன்றி கேஜிஎஸ் அவர்களுக்கு. அவர் தொடர் நின்றதால்தான் நான் ஞாயிறு பகுதிக்கு எழுத ஆரம்பித்தேன். ஏற்றுக்கொண்டு எழுத்த் தூண்டிய, வெளியிட்ட கௌதமன் சார் மற்றும் ஶ்ரீராமுக்கு நன்றி.

      நீக்கு
  8. இத்தகைய திருவருட் திறம் கொண்ட பாகவத உத்தமரோடு நானும் சில மணி நேரம் அளவளாவி இருப்பதை எண்ணும் போது எனக்குள் தனியானதொரு ஆனந்தம்..

    கோவிந்தோ கோவிந்த..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா..... எனக்கு நீங்கள் சொல்லியிருக்கும் அடைமொழி பொருந்தாது. உன் குணத்தை விடு, கண்டகண்ட ஆசைகளை விடு என்று அவனே என்னை அவன்பால் இழுக்க முயல்வதாகத்தான் நான் நினைக்கிறேன்.

      நீக்கு
  9. சிறப்பான பயணம். தொடராக எழுதியது நன்று. தில்லியில் உங்களை ஒரு முறை சந்தித்தது குறித்தும் இங்கே எழுதியிருப்பதில் மகிழ்ச்சி. தில்லியில் பார்க்க நிறைய இடங்கள் உண்டு தான். ஒரு பயணத்தில் பார்த்து விட முடியாத அளவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உண்டு.

    தொடரட்டும் பயணங்களும் பதிவுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். தில்லியில் பத்து நாட்கள் தங்கி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மட்டுமாவது பார்க்கவேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இன்னும் பத்து தினத்திற்குள் வட நாடு (பீகார்) செல்கிறேன். யாத்திரையாகப் போகும்போது பல இடங்கள் பார்க்க முடிவதில்லை. இந்த முறை ஆக்ராவில் பதேபூர் சிக்ரி, அக்பர் கல்லறை பார்க்க எண்ணம்.

      நீக்கு
  10. யாத்திரை பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக சொல்லி அழகாக முடித்து விட்டீர்கள்.

    படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

    மீண்டும் மற்றொரு யாத்திரை கட்டுரையை தொடங்கவும்.

    பதிலளிநீக்கு
  11. மயில் பேரழகு தான்...

    ஆனாலும் அதற்கு அதன் கால்களைக் குறித்து கவலையாம்!..

    இப்படித் தான் தங்கள் சொல்லி இருப்பதும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா... ஆமாம்.. மயில் (ஆண் மயிலா இல்லை பெண் மயிலா?) தான் அழகாக இருக்கிறோம் என்பது அதற்குத் தெரியுமா? உடலில் மிக முக்கிய உறுப்பு கால்கள் அல்லவா? அது இல்லையென்றால் வாழ்வேது?

      நீக்கு
  12. பல முக்கியமான இடங்களையும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம். நீண்ட யாத்திரை பயணக்கட்டுரை.பல தகவல்களையும் நாம் கண்டுகளிக்க அழகிய படங்களையும் தந்திருந்தீர்கள்.

    சலிப்புறாது படித்துமகிழக் கூடியதாக பகிர்ந்திருந்தீர்கள்.

    இவ்வளவு வாரங்களாக படித்திருந்தோமா என நாமே வியப்புறுகின்றோம்.

    மீண்டும் வேறு யாத்திரைக் கட்டுரைகள் தந்தால் மகிழ்வோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. விரைவில் இன்னொரு தொடர் ஆரம்பிக்கிறேன்.

      நீக்கு
  13. நெல்லை - லட்டு படம் பார்த்ததும் சமீபத்திய பிரச்சனைதான் இப்பலாம் நினைவுக்கு வருது பாருங்க......பிரச்சனை வந்தாலும் வந்துச்சு உங்க தொடர்ல ஒரே லட்டு படமா வருதே ஹாஹாஹாஹா!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டயபடீஸ் (உங்களைப் போல) , இனிப்பு சாப்பிடாமல் விரதம் இருக்கறவங்க (என்னைப் போல) கண்களில் இனிப்பும், அது சம்பந்தமான காணொளிகளும்தான் முதலி படுகிறது. நாம விரதம் இருந்தால், அதைக் கெடுப்பதற்காகவே நம் மூளை வேலை செய்கிறதோ?

      நீக்கு
  14. வெங்கட்ஜியுடனான உங்கள் சந்திப்பு சூப்பர்!!!

    கடைசி தின சாப்பாடு சூப்பரப்பு!!! குறிப்பா தயிர்வடை!!

    நான் தில்லி பல முறை சென்றிருந்தாலும் இங்கு இருக்கும் இடங்களில் சிலது மட்டுமே பார்த்திருக்கிறேன் அதுவும் பல வருடங்களுக்கு முன். அதன் பிறகு எல்லாம் உறவினர் வீட்டு விசேஷம் இப்படி முடிந்தது. இதுவரை சென்றதில் ஒரே ஒரு முறை மட்டும் அதிக வெயிலில் அது முதல் முறை பல வருடங்களுக்கு முன்.

    அதிகக் குளிரிலும் ஒரு முறை சென்றதுண்டு அதுவும் பல வருடங்களுக்கு முன். அப்ப Noida வில் ஒரு மாதம் தங்கியிருந்தேன். அப்பலாம் மெட்ரோ ரயில் வராத சமயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும், எந்த யாத்திரைக் குழுவிலும், கடைசி நாளாக அமையும் உணவு, பெரிய விருந்தாக அமையும். (எனக்கோ தில்லியில் வெளி உணவகங்களில் சாப்பிடணும் என்று ஆசை.. ஆனால் பாருங்க.. இப்படி விருந்து சாப்பிட்டால் அப்புறம் வெளியில் செல்லும்போது உண்ணும் ஆசை வருமா?).

      தில்லி வெங்கட், easy going person. நல்லா பழகுவார்.

      எங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு வராமல் ஏப்ரலில் தில்லி சென்றிருந்தீர்களே... அப்போதுகூட நாலு இடங்களுக்குப் போய்வருவோம் என்று தோன்றவில்லையா?

      நீக்கு
  15. Recollecting the memories என்று படங்கள் பெயர்கள் கொடுத்திருப்பதும் நன்றாக இருக்கு நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய நிறைவு பகுதியான கோவில் யாத்திரை பதிவு நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் எப்போதும் போல அருமையாக உள்ளது.

    தில்லி படங்கள் நன்றாக உள்ளது. தில்லியில் சகோதரர் வெங்கட் நாகராஜனுடன் தாங்கள் சந்தித்து பேசி மகிழ்ந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

    இதுவரை கோவிலின் யாத்திரை பகுதிகளை நன்றாக எழுதி, நான் காணாத இடங்களின் அருமையான படங்களையும் பகிர்வாக தந்து நல்லபடியாக யாத்திரையை முடித்து விட்டீர்கள் என்றாலும் நிறைவு பகுதி என்றதும் பிரிவது போல மனதுக்குள் ஒரு வருத்தம்.

    தாங்கள் சென்ற வேறு கோவில்களின் உலாக்கள் பற்றி மீண்டும் தொடருங்கள். உங்கள் அருமையான எழுத்துக்கள் நீங்கள் சென்ற கோவில்களை நாங்களும் உடன் வந்து தரிசித்த உணர்வை தருகிறது. உங்கள் எழுத்து நடைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    முதலில் ஆரம்பித்த இடங்களின் படங்களை நினைவு படுத்துவது போல வெளியிட்டிருப்பது கண்டு அனைத்தையும் கண்டு மகிழ்ந்தேன். அத்தனையையும் இப்போதும் கண்டு ரசித்ததோடு மட்டுமின்றி, தங்கள் பயணத்தோடு நாங்களும் இதுவரை அந்தந்த இடங்களில் பயணித்திருக்கிறோம் என்ற திருப்தியும் எழுந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    சனி, ஞாயிறு இரு தினங்கள் நாங்கள் வெளியில் சென்று விட்டமையால், தங்கள் பதிவுக்கு உடன் வர இயலவில்லை. மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். இனியும் கோயில் உலாக்கள்தாம். அது தவிர நான் சென்ற வெளிநாடுகள் பற்றியும் படங்களோடு எழுதலாமா என்று ஒரு யோசனை. (இடையிடையே).

      நன்றி உங்களுக்கு

      நீக்கு
  17. மிக அருமையான நிறைவு பகுதி படங்கள் மிக அருமை.
    வெங்கட் அவர்கள் சந்திப்பும், படமும் அருமை.
    வெங்கட்டை நாங்களும் இரண்டு, மூன்று தடவை சந்தித்து இருக்கிறோம்.
    பயணக்கட்டுரையின் தொகுப்பு படங்கள் மிக அருமை.
    போகாத இடங்களை தரிசனம் செய்யவும், பார்த்த இடங்களின் நினைவுகளை மீட்டவும் உதவியது உங்கள் பதிவு.
    தொடரட்டும் உங்கள் பயணங்கள், மற்றும் பதிவுகள்.
    வாழ்த்துகள், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். நீங்க கொலுவில் பிஸி என்று ஸ்ரீராம் எபியில் போட்டிருந்தார்.

      மிக்க நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!