வெள்ளி, 11 அக்டோபர், 2024

வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்...

தமிழ்நம்பி இயற்றிய பாடலை தானே இசை அமைத்து பாடி இருக்கிறார் டி எம் சௌந்தரராஜன்.

உள்ளம் துடிப்பதை உற்றுக் கேளுங்கள் ஓம் ஓம் என்று ஓசை வரும் 

உள்ளம் துடிப்பதை உற்றுக் கேளுங்கள் ஓம் ஓம் என்று ஓசை வரும் 
இந்த உண்மை தெரிந்தால் மனிதருக்கெல்லாம் முருகன் மேலே ஆசை வரும் 
உள்ளம் துடிப்பதை  உற்றுக் கேளுங்கள் ஓம் ஓம் என்று ஓசை வரும்

இருநிலை வாழ்வில் வேலவன் அருளால் இசையும் பொருளும் இணைந்து வரும்
இருநிலை வாழ்வில் வேலவன் அருளால் இசையும் பொருளும் இணைந்து வரும்  
இசையும் பொருளும் இணைவதைக் காட்ட... இசையும் பொருளும் இணைவதைக் காட்ட திருப்புகழ் அமுதம் சான்று தரும்.  - உள்ளம் துடிப்பதை 

அவரவர் அறிவை கூட்டிப் பார்த்தால் ஆக மொத்தம் ஆறு வரும் 
அவரவர் அறிவை கூட்டிப் பார்த்தால் ஆக மொத்தம் ஆறு வரும் 
ஆறு என்றதும் அடியவர்க்கெல்லாம்  ஆறு என்றதும் அடியவர்க்கெல்லாம் 
அறுபடை வீடும் கண்ணில் வரும்  - உள்ளம் துடிப்பதை 

எண்சாண் உடலில் ஒவ்வொரு அணுவிலும் எங்கள் கந்தன் அரசாட்சி 
எண்சாண் உடலில் ஒவ்வொரு அணுவிலும் எங்கள் கந்தன் அரசாட்சி 
இருந்தும்  குகனை மறந்தே வாழ்ந்தால் சும்மா விடுமா மனசாட்சி - உள்ளம்
 
==================================================================================================

மன்னிப்பு என்று ஒரு படம்.  1969 ம் ஆண்டு வெளிவந்த படம்.  ஜெய்சங்கர், ஏ வி  எம் ராஜன்,  வெ ஆ நிர்மலா, லக்ஷ்மி நடித்துள்ளனர்.

பாடல்கள் வாலி.  இசை எஸ் எம் சுப்பையா நாயுடு. இன்றைய பாடல் டி எம் சௌந்தரராஜன், பி சுசீலா ஆகியோர் பாடியிருக்கும் பாடல்.  இதில் நீ எங்கே என் நினைவுகள் அங்கே என்றொரு இனிமையான பாடலும் உண்டு.

ஆண் : வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

ஆண் : எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்

ஆண் : வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….
பெண் : நாலு வித குணமிருக்கும்
அஞ்சுகின்ற மனமிருக்கும்
நாலு வித குணமிருக்கும்
அஞ்சுகின்ற மனமிருக்கும்
ஆறுகின்ற பொழுது வரை
அனல் போல் கொதிப்பதெது

ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….
ஆசை கொண்ட இதயமது

பெண் : வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

ஆண் : வான வில்லின் நிறமெடுத்து
மேகமென்னும் வெண் திரையில்
வான வில்லின் நிறமெடுத்து
மேகமென்னும் வெண் திரையில்

ஆண் : மின்னல் எனும் தூரிகையால்
நான் வரைந்த கோலமெது

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….
கன்னி எந்தன் வடிவமது

ஆண் : வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

பெண் : காமன் கை வில்லெடுத்து
அஞ்சு விதப் பூத்தொடுத்து
காமன் கை வில்லெடுத்து
அஞ்சு விதப் பூத்தொடுத்து

பெண் : பூமகளின் நெஞ்சினிலே
போர் தொடுக்கும் நேரமெது

ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….
மஞ்சள் வெயில் மாலை அது

ஆண் : முத்துச் சிப்பி வாய் திறக்க
மோகம் கொண்டு துடித்திருக்க
முத்துச் சிப்பி வாய் திறக்க
மோகம் கொண்டு துடித்திருக்க

ஆண் : கொட்டும் மழைத் துளி விழுந்து
கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….
முத்து ஒன்று பிறந்து வரும்

பெண் : வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

ஆண் : எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்

இருவர் : வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன் 

31 கருத்துகள்:

  1. இரண்டாவது பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். வெகு நாளைக்கு அப்புறம் கேட்கிறேன். முதல் இரண்டு வரிகள் நான் அவ்வப்போது பாடுவேன்.

    முதல் பாடல் கேட்ட நினைவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  முதல் பாடல் அதிகம் கேட்டதில்லை ஆயினும் பல்லவி மனதில் நினைவு இருக்கும்.  சரணங்கள்தான் நினைவில் இருக்காது. 

      இரண்டாவது பாடல் இனிமையான பாடல்.    என்ன ராகம் என்று கீதா ரெங்கன் வந்து சொல்வார்!!

      நீக்கு
    2. காலையிலேயே எழுத விட்டுப்போய்விட்டது. வெண்ணிலா வானில் வரும் வேளையில்.... பாடிக்கொண்டே இருக்கும்போது சரணங்கள் வேறு எங்கோ சஞ்சரித்து கடைசியில் 'புத்தம் புதிய புத்தகமே' என்ற பாடலில் கொண்டுபோய்விடும். இரண்டும் ஒரே ராகமா? அக்கா வந்து சொல்வாங்களா? இல்லை சுண்டல் வாங்கிக்கொள்ள அலைந்துகொண்டிருக்கிறாரா (கீதா ரங்கன் க்கா)

      நீக்கு
    3. அப்படியா சொல்கிறீர்கள்?  எனக்கு அப்படி தோன்றவில்லையே நெல்லை...  

      நீக்கு
    4. வெண்ணிலா வானில்... பாடலின் சரணமாக
      அஞ்சு விரல் பட்டாலென்ன
      அஞ்சுகத்தைத் தொட்டாலென்ன

      தொட்ட சுகம் ஒன்றா என்ன
      துள்ளும் உள்ளம் பந்தா என்ன
      தொட்ட சுகம் ஒன்றா என்ன
      துள்ளும் உள்ளம் பந்தா என்ன

      என்று பாடிப்பாருங்கள். கீதா ரங்கன் எங்கே?

      நீக்கு
  2. அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  4. உள்ளம் துடிப்பதை உற்றுக் கேளுங்கள் ஓம் ஓம் என்று ஓசை வரும்

    உண்மை தானே!..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். கலைவாணியின் அருள் நம் அனைவருக்கும் என்றும் நிலைத்திருக்க பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரு பாடல்களும் அருமை. கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. இந்தப் படத்தில் நீ எங்கே என் நினைவுகள் அங்கே என்றொரு இனிமையான பாடலும் உண்டு.

    இருவேறு ராகங்களில் ஒலிக்கும் அந்தப் பாடல்

    இனிமையிலும் இனிமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் படிக்கவில்லையா? இருவேறு ராகங்களில் என்பதைச் சொல்லவில்லை ஆயினும் பாடலைக் குறிப்பிட்டிருக்கிறேனே..

      நீக்கு
    2. படித்தேன்...

      ஆயினும் மேலதிகமாக மறுபடியும் குறித்தேன்..

      அது மிகவும் பிடித்த பாடல்..

      நன்றி..

      நீக்கு
  8. முதல் பாடல் சிறப்பாக இருக்கிறது ஆனால் இதுவரை கேட்டதாக நினைவில்லை.

    இரண்டாவது பாடல் பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி.

    பதிலளிநீக்கு
  9. இரண்டுபாடல்களும் கேட்டிருக்கிறேன் அருமையான பாடல்கள்.
    உங்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. முதல் பாடல் கேட்டதில்லை ஸ்ரீராம். இப்போதுதான் கேட்கிறேன்.

    நன்றாக இருக்கிறது.

    நேற்றைய காபி புராணத்தையும் பார்த்தேன் ஸ்ரீராம்...கிட்டத்தட்ட நம்ம புராணம் தான்!!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இரண்டாவது பாடல் மிகவும் பிடித்த பாடல்! கேட்டிருக்கிறேன். ஆனால் என்ன படம் என்பதெல்லாம் இப்போது பார்த்துக் கொண்டாலும் நினைவு இருக்குமா? ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். பதிவை காலையிலேயே அலைபேசி வழி படித்துவிட்டேன். பின்னூட்டம் இட முடியவில்லை.

    முதல் பாடல் கேட்ட நினைவில்லை. இரண்டாம் பாடல் பலமுறை கேட்டு ரசித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  13. இரண்டு பாடல்களும் பிடித்த பாடல்.
    அதுவும் இரண்டாம் பாடல் என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!