சனி, 12 அக்டோபர், 2024

புற்றுநோய் பயாப்ஸி ஊசி மற்றும் நான் படிச்ச கதை

 

புற்றுநோய் கண்டறிவதற்கான பயாப்ஸி ஊசியால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி, புதிய வடிவமைப்பை உருவாக்கியுள்ளது.  கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில், அறிவுசார் சொத்துரிமை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில், மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக, புற்றுநோயை கண்டறிவதற்கான பயாப்சி ஊசி வடிவமைப்பில், சென்சார் பயன்படுத்தி, 'பயாப்ஸி கன்' எனும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இதற்கு, காப்புரிமையும் பெற்றுள்ளனர்.  

கல்லுாரியின் அறிவுசார் சொத்துரிமை மைய ஒருங்கிணைப்பாளர் சேகர் கூறியதாவது:

உடலில் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்ய, கட்டியில் இருந்து திசுக்கள் சேகரிக்கப்பட்டு, அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். திசு சேகரிப்புக்கு நீண்ட ஊசி பயன்படுத்தப்படும். இந்த ஊசியை, தொடை போன்ற பகுதிகளில் செலுத்தும் போது, அது எலும்புகளை சேதப்படுத்தும். இதனால் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.  இதற்கு தீர்வு காண திட்டமிட்டோம். சென்சார்கள் பொருத்தி, கட்டி இருக்கும் இடத்தை துல்லியமாக கணக்கிட்டு ஊசியை செலுத்தி, திசு சேகரிப்பதற்கான புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். இதற்கு 'பயாப்ஸி கன்' எனப் பெயரிட்டுள்ளோம். காப்புரிமை சட்டப்படி, இதற்கான வடிவமைப்பை பதிவு செய்தோம். காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.


=============================================================================================

"என்னால முடியும்; ப்ரூவ் பண்ணி ஜெயிச்சு காட்டுவேன்" - நடிகர் நெப்போலியன் மகனின் தன்னம்பிக்கை.



=====================================================================================================


நான் படிச்ச கதை 

ஜீவி 


இன்றைக்கு உங்களோடு பகிர்ந்து கொள்ளும் கதை 'வாசனை' என்ற பெயரைச் சூட்டிக் கொண்டிருக்கிறது. வி.கே. லஷ்மி நாராயணன் என்ற எழுத்தாள அன்பர் எழுதியிருக்கும் கதை. இது தான் நான் வாசிக்கும் இவரின் முதல் கதை.

 இந்தக் கதையின் முதல் பாராவைத் தான் வாசித்திருப்பேன். 'பீச் ஸ்டேஷனில் நுழைந்து ரெடியாக இருந்த மின்சார ரயிலில் ஏறி ஜன்னலோரம் அமர்ந்து கொண்டேன்' என்ற  வரியே,  இதே மாதிரி சென்ற நாட்களில் பீச் ஸ்டேஷனில் நுழைந்து அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் ரயில் பெட்டி ஒன்றில் ஏறி ஜன்னலோரம் அமர்ந்த என் பழைய நினைவுகளை மீட்டுவதற்கு போதுமானதாக இருந்தது. 

பீச் ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்களுக்கென்று பிரத்யேகமான ஒரு பயண அனுபவம் உண்டு. பெரும்பாலும் அந்த வண்டிகளில் பார்க் ஸ்டேஷன் போகும் வரை பெட்டிக்கு ஓரிரண்டு பேர்கள் தான் அமர்ந்திருப்பார்கள். பல மதிய நேரங்களில் தாம்பரம் சென்றடையும் வரை கூட 'ஹோ'வென்று பெட்டியே காலியாக நம்மைத் தவிர வேறு யாருமே இல்லாத  பிரயாண கோரப்பிடியில் நாம் சிக்கியிருக்கும் திகிலே நீடிக்கும்.  இடைப்பட்ட ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நிற்கும் பொழுது துணைக்கு யாராவது ஏற மாட்டார்களா என்ற நம் பரிதவிப்பு பல நேரங்களில் தோற்றே போகும்.  

ஓ.. ஹாரிபிள்!.. கதையின் இந்த மாதிரியான ஒரு  ஆரம்பம் தான் என்னை அறியாமல் கதையின் உள்ளே இழுத்துக் கொண்டு சென்றது.  போகப்போக அது என்ன மாய மந்திரமோ தெரியவில்லை, கதையை வாசித்து முடிக்கும் வரை அந்த ஆர்வம் அடங்கவில்லை.

கதை என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் இந்தக் கதாசிரியர்கள் எழுதட்டும். ஆனால் கதையை ஒருவர் வாசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே அவர்களின் பழைய நினைவுகளை மீட்டுகிற மாதிரி,  அல்லது ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் வாசிப்பவர்களிடம் நெருக்கம் கொள்கிற மாதிரி அந்தக் கதை அமைந்து விட்டால் போதும் வாசகர்கள் அந்த மாதிரியான கதைகளை லேசில் மறக்க மாட்டார்கள்.

நல்ல உயரத்தில் சிவந்த தேகத்துடன் ஒரு சினிமா ஹீரோ போல இருந்த அவன், "எக்ஸ்யுஸ் மீ.. "என்று மிக நெருக்கத்தில் உச்சரித்ததும் ஏதோ யோசனையில் இருந்த கதாசிரியர் மரியாதை நிமித்தம் அனிச்சையாய் தன் கால்களை இழுத்துக் கொண்ட தருணத்தில் 'சட்'டென்று அவருக்கு எதிர் இருக்கையில் அவன் அமர்ந்த தருணத்திலேயே கதை களை கட்டி விடுகிறது.  எதிரில் அமர்ந்த அவனிடமிருந்து குப்பென்று வீசிய செண்ட் வாசனை தான் இந்தக் கதைக்கான தலைப்பு ஆகியிருக்கிறது. அமானுஷ்ய கதை என்ற பெயரில் வாசிப்பவரைக் குழப்பாமல் தெளிவான நடையில் கதையை நகர்த்திச் செல்ல வேண்டும் என்ற இவர் கதை சொல்லல் நமக்கும் கதைகள் எழுத பாடமாகிறது.

"நீங்கள் ஆவிகள் பற்றியும் எழுதுகிறீர்கள் இல்லையா?" என்று கதைப்போக்கில் அவன்  கதாசிரியரைக் கேட்குமிடத்தில் கதை இன்னும் நம் ஆவலைத் தூண்டி வேகமெடுக்கிறது.  அந்த இடத்திலிருந்து கதையின் முடிவு கட்டம் வரை அடுத்து என்னவோ என்ற திகில் நம்மைச் சுற்றி வட்டமிடுவது என்னவோ உண்மை.

அந்த செண்ட் வாசனை கதையின் கடைசி வரியிலும் வரும் பொழுது இந்தக் கதை மேலும் முடிச்சிட்டுக் கொள்வது என்னவோ உண்மை.

நீங்களும் தான் வாசித்துப் பாருங்களேன்.


கதையை இங்கே படிக்கலாம்.


நன்றி:   sirukathaigal.com


30 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் விஜயதசமி நல்வாழ்த்துக்களுக்கு நன்றி, தம்பி.

      நீக்கு
  2. நான் தாம்பரத்திலிருந்து மாம்பலம், மாம்பலத்திலிருந்து தாம்பரம் எனப் பல வருடங்கள் பயணித்திருக்கிறேன். சீட் காலியாக இருந்தால் சன்னலோர இருக்கையை மனம் விரும்பும். பல நேரங்களில் விரைவு வண்டியில் தாம்பரத்தில் இறங்கியிருக்கிறேன். கூட்டம் அனேகமாக திரும்பும்போது மிக அதிகமாக இருக்கும். அந்த நினைவுகளில் மனம் ஆழ்ந்துபோய்விட்டது ஜீவி சார் எழுதியிருந்ததைப் பார்த்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய நினைவுகள் கிளர்ந்தெழுவதைப் போல் நம் வாசிப்பது அமைந்து விட்டால் எல்லோருக்குமே
      சந்தோஷம் தான். அதை தாங்களும் வழி மொழிந்திருப்பதற்கு நன்றி, நெல்லை.

      நீக்கு
  3. சிறுகதையைப் படித்தேன். பரவாயில்லாமல் இருந்தது. ஆசிரியர் (எழுத்தாளர்) தன்னைப் பற்றி எழுதும்போது கோபம் கொள்ளாதவன், மனைவியிடத்தில் அன்பாக இருப்பவன் என்று இமேஜ் பில்டப் கொடுத்துவிட்டு, ஜெகவீரபாண்டியன் கேள்விக்குக் எஓபமாக ரியாக்ட் செய்வது உறுத்திற்று. மற்றபடி அருமையாக இருந்தது.

    தனியாக ஒரு பெட்டியில் பயணிப்பது நெர்வசாக இருக்கும். நான் அப்படிப்பட்ட பயணத்தின்போது கொஞ்சம் பயந்திருக்கிறேன், யாராவது ஏற மாட்டார்களா என நினைத்திருக்கிறேன். பயணிக்கும் உணர்வைக் கதாசிரியர் கொண்டுவந்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைப் பகுதியிலேயே நம் கருத்தைச் சொல்வதற்கு வழி இருக்கிறது, நெல்லை.

      நீக்கு
  4. நெப்போலியன் மகன் விஷயத்தில் நாம் வருந்தாமல், இரக்கமில்லாமல் இருந்துவிடலாம், நம் மனம் கல் என்றால். ஆனால் அவரைப்பற்றி பொறாமையால் வன்மம் க்க்குவதற்கு யார் சுதந்திரம் கொடுத்தது?

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் நன்று. ஒருவரின் வாழ்வில் அவர்களின் முடிவுக்கு எப்படி சம்பந்தமே இல்லாதவர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவிப்பது..? . இது அநாகரீகமான செயல் அல்லவா? இப்படியும் சில கல் மனதுடைய மனிதர்கள் உள்ளனர்.

    நடிகர் நெப்போலியன் அவர்களின் மகனுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வும் அருமை. கதை நன்றாக உள்ளது. சகோதரர் ஜீவி அவர்கள் அளித்துள்ள சுட்டிக்குச் சென்று படித்தேன். அமானுஷ்யம் என்ற வாசகமும், வாசனை என்ற தலைப்பும் கதையை ஆரம்பம் முதல் இறுதிவரை மும்முரமாக படிக்கத் தூண்டியது. கதை எழுதிய கதாசிரியருக்கு வாழ்த்துகள்.

    சகோதரர் ஜீவி அவர்களின் முன்னுரை கதைக்கு நல்லதொரு பக்கபலமாக உள்ளது. நல்ல கதையை இங்கு பகிர்ந்தளித்த சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றி. பகிர்வுக்கு உங்களுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை மும்முரமாக வாசித்தேன் என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை சகோதரி.
      நானும் அதே மாதிரி வாசித்த உணர்வு தான் இந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ள என்னைத் தூண்டியது.

      கதைக்கான முன்னுரை அதை வாசித்த என் உணர்வு.
      அந்த முன்னுரை கதை வாசிப்புக்கு பக்கபலமாக இருந்தது என்று தாங்கள் சொல்லியிருப்பதும் சக எழுத்தாளரின் உணர்வாகத்தான் எனக்குத் தெரிகிறது, சகோதரி.

      மிக்க நன்றி.

      நீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. வாசனை கதை நன்றாக இருந்தாலும் ஆவிகள் மனித ரூபத்தில் வருவதாய் கற்பனை கொஞ்சம் ஓவர் என்று தோன்றுகிறது.

    1. ஆசிரியர் மாமல்லன் ஜெகவீர பாண்டியனை முதல் முறையாக சந்திக்கிறார். ஆனால் கதையின் கடைசியில் அவர் எக்ஸ்ட்ரா நடிகர், மூன்றாம் மாடியில் இருந்து கீழே விழுந்தது போன்ற செய்திகளை எப்படி அறிந்திருந்தார் என்பது தெரியவில்லை.
    கனவில் வரும் காட்சிகளும் நிகழ்ச்சிகளும் கற்பனையே என்பதால் மேற்சொன்ன கருத்தை ஒத்துக்கொள்ளலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கு இரவு 10.20. நாளை வந்து தொடர்கிறேன், ஜெஸி ஸார்

      நீக்கு
    2. ஜெ கே அண்ணா, எனக்கும் அந்த சந்தேகம் வந்தது.

      செய்தித்தாளில் வந்த செய்தியாக இருக்கும். வருகிறதே செய்தித்தாளில் இப்படியான செய்திகள். அது எழுத்தாளரின் மனதில் பதிந்திருக்கலாம். படங்களில் பார்த்திருக்கலாம்....அல்லது அதை பேஸ் செய்து கதை எழுத நினைத்திருந்திருக்கலாம்....

      எனக்கு இப்பலாம் கனவுகள் வருவதில்லை. ஆனா பல வருஷங்கள் முன்ன, ஏதாச்சும் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து பார்த்தால் (நான் படம் பார்ப்பது அபூர்வம் ஆனால் ரொம்ப ஆழ்ந்து பார்ப்பேன்....வாசிப்பதும் கூட ஆழ்ந்து விடுவேன்...) கிடைச்சா அதுல தம்மாத்துண்டு சீன்ல வர கேரக்டர் கனவுல வரும்!!!!!!

      கீதா

      நீக்கு
    3. வாங்க, ஜெஸி ஸார்.

      எனக்குப் புரிந்த கதையைச் சொல்கிறேன்.

      ஆவிகள் கெடுதல் செய்வது போல கதைகளைப் படித்தது இந்தக் கதாசிரியர் மனத்தை உறுத்தியிருக்க வேண்டும். அது பற்றிய யோசனையில் ரயிலில் உட்கார்ந்திருக்கிறார். போதாக்குறைக்கு ஹோவென்ற தனிமை வேறே. அவரின் தொடர்ந்த யோசனையே சுற்றுப்புறம் மறந்த ஏறக்குறைய கனவான அவரின் நிலையில் தன்னைத் தானே பின்னிக் கொள்ளும் கதையாகிறது.

      நம்புங்கள். சினிமா ஹீரோ போல ஒரு நபர் தன் எதிரில் அமர்ந்தது, ஜெகவீரபாண்டியன் என்று தனக்கு அவன் பெயர் கொடுத்துக் கொடுத்துக் கொண்டது எல்லாமே இந்தக் கதாசிரியரின் சப்-கான்ஷியஸ் மனத்தில் ஓடிய நினைவுகளின் நர்த்தனம் தான்! இவருக்குப் பழக்கமான ரமேஷ்வர்மாவும் இவரின் இந்த மன ஓட்டத்தில் வருகிறார். சொல்லப்போனால் ஆவிகள் கெடுதல் செய்வது போலவான ரமேஷ் வர்மாவின் கதைகள் தான் இவரின் இந்த கனவு நிலை மனப்பின்னல்களுக்கு அடித்தளம். சட்டென்று இந்த ஆவிகள் அவரைத் தண்டிக்கற மாதிரி கதையைக் கொண்டு போனால் என்ன என்று இவருக்குத் தோன்றுகிறது. அந்த தண்டித்தல் தான் மனதில் ஆக்ஸிடன்ட் மாதிரி உருவான பொழுது மொபைல் அலறுகிறது. நினைவுகளின் ஓட்டம் அதிர்ந்து நனவு உலகிற்கு வருகிறார். மனைவி பேசுகிறாள். நிஜமாகவே ரமேஷ்வர்மா ஆக்ஸிடண்டில் மாட்டிக் கொண்டது இவர் மனசை உலுக்குகிறது. இதான் கதை.

      சில நேரங்களில் நாம் நினைப்பது போலவே நிகழ்வுகள் அமைந்து விடுவது வாழ்க்கையின் விசித்திரங்களில் ஒன்று. அந்த ஒன்று போலவான இன்னொன்று தான் இந்தக் கதை.

      இப்பொழுது சொல்லுங்கள், கதை நல்லாயிருக்கு இல்லையா?

      நீக்கு
    4. ஜெஸி ஸார்! கதை Presentation-லே ஒரு புதிய பாணி கடைபிடிக்கிறேன். பாத்தீங்களா, ஸார்?

      நீக்கு
  10. பயாப்ஸி கன் - நல்ல கண்டுபிடிப்பு

    நெப்போலியன் மகனின் தன்னம்பிக்கை சூப்பர் நல்ல மெசேஜ். மீடியாக்கள் மிக மிக மோசம் இன்னொருவரின் வாழ்க்கையை அலசுவதற்கு நாம் யார்? என்னவோ எல்லாம் தெரிஞ்ச மாதிரி.

    வாழ்த்துவோம் அக்குழந்தையை.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கதை என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் இந்தக் கதாசிரியர்கள் எழுதட்டும். ஆனால் கதையை ஒருவர் வாசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே அவர்களின் பழைய நினைவுகளை மீட்டுகிற மாதிரி, அல்லது ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் வாசிப்பவர்களிடம் நெருக்கம் கொள்கிற மாதிரி அந்தக் கதை அமைந்து விட்டால் போதும் வாசகர்கள் அந்த மாதிரியான கதைகளை லேசில் மறக்க மாட்டார்கள்.//

    இதனை டிட்டோ செய்கிறேன்.

    கதையை வாசித்துவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்து பேர் பத்து கோணத்தில் ஒரு விஷயத்தைப் பார்ப்பது இயற்கை. உங்களுக்கென்று ஒரு தனிக்கோணம் வந்தால் தான் தீர்மானமாக சொந்தப் படைப்பில் செய்ய முடியும். உங்களுக்கான அந்தத் தனிக்கோணம் தான் உங்களைப் பிரதிபலிப்பது. கொஞ்ச நாளைக்கு மற்ற பின்னூட்டங்களை வாசிக்காமல் சுயமாக நீங்களே பின்னூட்டம் போட்டுப் பாருங்கள். மற்றதிலிருந்து வித்தியாசமாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

      நீக்கு
  12. சென்னை பீச் தாம்பரம் ரயிலில் நிறைய பயணித்திருக்கிறேன். சில சமயம் தனியாக இருக்க நேரிடும் அதுவும் அதிகாலை வேளைகளில். அப்போது கொஞ்சம் பயம் துளிர்க்கும். அதனால் பெண்கள் பெட்டியில் ஏறுவது வழக்கம் என்றாலும் கூட திலும் சில சமயம் இப்படி இருக்கும்

    ஆனால் சமீபத்தில் காலை இரவிலும் கூட நல்ல கூட்டம் இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைவருக்கும் விஜயதசமி தின நல்வாழ்த்துகள்.

    பயாப்சி ஊசி - நல்ல விஷயம்.

    நடிகர் நெப்போலியன் அவர்களின் மூத்த மகன் தனுஷ் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். அது அவரது வாழ்க்கை. அதில் மாற்றுக்கருத்து சொல்ல சம்பந்தப்பட்டவர்கள் தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை. அவர் வாழ்வில் சிறக்க வாழ்த்துவோம்.

    கதை - படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. கதை நன்றாக இருக்கிறது என்றாலும்.....

    //ஏனென்றால் இதுவரை என் மனைவி ஒரு நாளும் என்னால் கண்ணீர் சிந்தியதாக சந்தர்ப்பமே ஏற்பட்டதில்லை. அந்த அளவிற்கு நான் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறேன். //

    கல்யாணமாகி 6 மாதம் தானே ஆகிறது!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. தன் எழுத்தைப் பற்றி உயர்வாக, கதாபாத்திரத்தின் வழி கொஞ்சம் தூவியிருக்கிறாரோ?....பரவாயில்லை..

    கதை நன்று. டக்கென்று இவருக்கும் அந்த சினிமா நடிகனுக்கும் எப்படி ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்று தோன்றியது. பரிச்சயம் இருதிருக்க்மா இப்படிஎ ல்லாம் தோன்றியது.

    எழுதிய விதம் நன்றாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கதையை என் வாசிப்பில் எழுதியிருக்கிறேன். வாசித்து விடுங்கள், சகோ.

      நீக்கு
  16. உங்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்.

    பயோப்ஷி கன் கண்டுபிடிப்புக்கு பாராட்டுகள்.

    கதை இனிமேல்தான் படிக்கவேண்டும். திரு.ஜீவி அவர்களின் பகிர்வு என்பதால் நன்றாக இருக்கும் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் விஜயதசமி
    நன்னாள் நல்வாழ்த்துக்கள்

    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  18. கதை வாசித்து முடித்தவுடன் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட எண்ணங்கள் தோன்றுவது இயற்கை. உங்களுடைய கண்ணோட்டத்தில் ஆவிகள் கதையின் கருப்பொருள். ஆவியே ஜெகவீரவபாண்டியன் உருவத்தில் வந்துள்ளது.

    என்னுடைய கண்ணோட்டத்தில் கதையில் ஆவிகள் என்பது ஒரு பேசு பொருளே. கதையில் வரும் இறப்பு என்பது தற்செயல் நிகழ்வே. அதை அறிய முடிந்தது என்பது மாமல்லரின் கனவு நிஜம் ஆனதே. esp போல்
    presentation வித்தியாசம் என்று எனக்கு ஒன்றும் புலப்படவில்லை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  19. பாஸிடிவ் செய்திகள் நன்று.
    ஜீவி சார் பகிர்ந்த கதை நன்றாக இருக்கிறது.
    ஆவியுடன் தான் பேசி கொண்டு இருக்கிறார் என்று தெரிந்து விட்டது, படித்து கொண்டு இருக்கும் போதே.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!