வெள்ளி, 4 அக்டோபர், 2024

கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம் தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்

இன்றைய தனிப்பாடலை எழுதியவர் திரு எழில்மணி.  இசை D B  ராமச்சந்திரன்.

சீர்காழி கோவிந்தராஜன் பாடி இருக்கிறார்.

தமிழான உருவம் தான் தண்டபாணி
தமிழ் கலையாவும் பெருமானின் திருமே-னி - *2
செந்தமிழான உருவம் தான் தண்டபாணி...

அமிழ் தான உயிர் எழுத்தும் பன்னிரண்டு…  - *2
குமரன் அழகான கருவிழியும் பன்னிரண்டு
செந்தமிழான உருவம் தான் தண்டபாணி...

ஈராறு கரத்தோடு ஓராறு சிரம் சேர்ந்தால்
எண்ணிக்கை வருவதும் பதினெட்டாம்  - *2
சீராக இனம் பிரித்தால்
செந்தமிழ் மெய் எழுத்து
நேராக வருவதும் பதினெட்டாம்
செந்தமிழான உருவம் தான் தண்டபாணி...

வல்லினம் தனை-க்கோரும் அவன் நெஞ்சம் - *2
அவனை வாழ்த்திடில் நம்மை கண்டு
பகை அஞ்சும்...
மெல்லினம் ஆறுபடை வீடாகும்  - *2
முருகன் மேனியே செந்தமிழ் ஏடாகும்
செந்தமிழான உருவம் தான் தண்டபாணி...

ஓர் எழுத்து தமிழில் ஆயுதமாம் கையில் ஒளிர்கின்ற வேல்
முருகன் ஆயுதமாம்  - *2
யார் எழுத்து நம்மைத்தான் என்ன செய்யும்  - *2
வேல் வீரம் கொண்டு வந்து வினைகொய்யும்
வடிவேல் வீரம் கொண்டு வந்து
வினைகொய்யும்
செந்தமிழான உருவம் தான் தண்டபாணி
தமிழ் கலையாவும் பெருமானின் திருமேனி

=================== ===============

 வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்....

V T தியாகராஜன் இயக்கத்தில், பாலமுருகன் கதைவசனத்தில், TR பாப்பா இசையில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ, நாகேஷ், ரமாபிரபா நடித்த படம் அவசரக்கல்யாணம்.  நகைச்சுவை படமாம்.  அப்படிதான் போட்டிருக்கிறார்கள். 1972 ல் வெளிவந்திருக்கிறது. 

பாடல்களை கண்ணதாசன் எழுதி இருக்கிறார்.  இந்தப் படத்தில் வரும் செய்தபாவம் தீருதடா சிவகுருநாதா பாடலை பாடி நண்பர்களை அவ்வப்போது சண்டையில் வெறுப்பேற்றி இருக்கிறேன்!

இன்று P சுசீலா குரலில் இனிமையான பாடல்.  காட்சியில் நாகேஷும், ரமா பிரபாவும்.

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணா...  கண்ணா …..

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும்

பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில்
காணப் போக வேண்டும் சூரக்கோட்டை
பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில்
காணப் போக வேண்டும் சூரக்கோட்டை
அந்த சூரக் கோட்டை சின்ன ராஜா
உங்க தோள்களிலே இந்த வண்ண ராணி கண்ணா

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும்

கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
தொடங்கட்டும் கோகுல லீலைகளெல்லாம்
பின்பு தொடரட்டும் கண்ணனின் சேவைகளெல்லாம்
கண்ணனின் சேவைகளெல்லாம்

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும்…..



41 கருத்துகள்:

  1. 'தமிழான உருவம் தானா?' தமிழான தெய்வம் தான் தண்டபாணி -- என்று பாடலை ஆரம்பித்திருக்கக் கூடாதா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே...  ஏன் இப்படி பாடினார்?

      நீக்கு
    2. பாடலில், ஏன் அப்படிச் சொல்லுகிறார் என்பதற்கு விளக்கம் இருக்கிறதே. உருவத்தில் காணப்படுவதை வைத்துப் பாடலைப் புனைந்திருக்கிறார்.

      நீக்கு
    3. அதானே...   அங்கேயே கொடுத்திருக்கிறாரே...!

      நீக்கு
    4. அதான் இரண்டாவது வரியில் --
      தமிழ் கலையாவும் பெருமானின் திருமேனி -- என்று வருகிறதே!
      அது போதாதா? தெய்வத்தை ஆரம்ப முதல் வரியிலேயே உருவம் என்று ஆரம்பிக்க வேண்டுமா, என்ன?

      நீக்கு
  2. இரண்டாம் பாட்டு சிவாஜி படத்துக்காக எழுதியது போலும்.

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் இதுவரை கேட்டதில்லை என நினைக்கிறேன். ஆனால் பாடல் வரிகள் தமிழ் தெய்வத்திற்கு பொருத்தமாகவும் நன்றாகவும் உள்ளது. இப்போது கேட்கிறேன்.

    இரண்டாவது பாடல் வானொலியில் பலமுறை கேட்டுள்ளேன். பி. சுசீலா அவர்களின் குரலில் இனிமையான பாடல்.

    நேற்று நடிகர் நாகேஷ் அவர்கள் பற்றிய செய்தியை படித்ததில் அவரது நல்ல குணம் மனதில் நின்றது. தன்னிடம் ஏதோ குறை என பிறர் நினைக்கும் போது அதுவும் தனக்கு எதிரிலேயே அவ்வாறு பேசப்படும் போதும் ஒரு மனித மனம் எவ்வளவு வேதனையுறும் என்பதை அவர் உணர்ந்தோடு மட்டுமின்றி, அதையே வெற்றியாக்கி காட்டிய தன்னம்பிக்கை செயல் அவருக்கு இறைவன் அளித்த வரம்.

    நல்ல நகைச்சுவை நடிகர் என்ற போதிலும், முக பாவங்களில் பலவித நடிப்பை காட்டும் அவர் நல்ல குணசித்திர நடிகர். நேற்றைய தொடர்ச்சியாக அவரது பாடலை இன்று காண்கையில், அவர் நல்ல நடிப்புக்கு தலை வணங்கி மரியாதை தரத் தோன்றுகிறது.

    இன்றைய இரு பாடல்களும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா... 

      மிக யதேச்சையாக இப்படி முதல் நாள் பகிர்வுக்கும், மறுநாள் பகிர்வுக்கும் எப்படியோ, ஏதோ ஒரு ஒற்றுமை வந்து விடுகிறது!

      நீக்கு
    2. இப்படி யதேச்சையாக அமைந்தாலும், பாராட்டபட வேண்டிய விஷயம்.. நன்றி.

      நீக்கு
  7. இரண்டாம் பாடல் மனதை வருடிச் செல்லும் மென்மையான பாடல்.

    பதிலளிநீக்கு
  8. //சீராக இனம் பிரித்தாள்// பிரித்தால் ?

    முதல் பாடல் கேட்ட நினைவில்லை. இப்போது கேட்டேன். நன்றாகவே இருக்கிறது.

    இரண்டாம் பாடல் கேட்ட நினைவு இருக்கிறது. ஒரு சில பாடல்கள் கேட்டிருந்தாலும் மனதில் பதிவதில்லை. இன்றைக்கு இரண்டு பாடல்களையும் கேட்டு ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. இரண்டும் கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    முதல் பாடல் இப்போது கேட்டேன்.இதுவரை இந்தப்பாடலை கேட்டதில்லை. சீர்காழி அவர்களின் தமிழ் உச்சரிப்போடு பாடலும், இசையும் கலந்து மிக நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. சீர்காழி அவர்களின் பாடல் என்றுமே இனிமை
    இனிமை..
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  12. இரண்டாவது பாடலை எப்போதுமே ரசித்ததில்லை..

    இன்றும் அப்படித்தான்...

    பதிலளிநீக்கு
  13. முதல் பாடல் கேட்ட நினைவு இருக்கு. அருமையான பாடல். ரசித்தேன் ஶ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா... ராகம் சொல்லவில்லை நீங்கள்!

      நீக்கு
    2. ஸ்ரீராம் ஆமாம் ல நேற்று நான் கொஞ்சம் பிசியாகிவிட்டேன் ஸ்ரீராம்....இப்பதான் துளசி குரல் வழி அனுப்பியிருந்த கருத்தை இங்கு பதியும் போதுதான் முதல் பாடலின் வரிகளின் சிறப்பையும் கவனிக்கிறேன்னா பாருங்க.....நேத்து பாடல் மட்டும் கேட்டேன் கருத்து கொடுக்கறப்ப லேட்....இப்ப மீண்டும் கேட்டேன். அழகான வரிகளை யும் ரசித்துக் கொண்டே ராகம் சாருகேஸி தொடக்கம்...ஆனால் ராகமாலிகை. கடைசியில் அடாணா. இடையில் வருவதை மீண்டும் கேட்டுச் சொல்கிறேன் ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. கருத்து மொபைலில்...குரல் வழி என்பதால் தப்பாயிடுச்சு....

    இரண்டாம் பாடல் கேட்ட நினைவில்லை. இப்போதுதான் கேட்கிறேன். அழகான பாடல்.

    நேற்றுதான் நாகேஷ் பற்றிய தகவல் ...இன்று அவர் நடித்த படத்த்தில் அவர் பாடுவது போலபாடலாக இருக்குமோ என்று நினைத்தேன். இல்லை.பெண் குரல்....

    கீதா

    பதிலளிநீக்கு
  16. முதல் பாடல் கேட்டிருக்கிறேன் அருமையான பாடல்.

    இரண்டாவது பாடலும் கேட்டிருக்கிறேன் .

    குணசித்திர நடிகர்களில் நாகேஸ், மனோரமா அந்நாட்களில் பிரபலம். அவர்கள் நடிப்பிலும் குறைசொல்ல முடியாது.

    பதிலளிநீக்கு
  17. திரு சீர்காழியின் குரலில் ஒரு வித்தியாசமான பாடல். முருகனைப் பற்றி. உயிரெழுத்து, மெய்யெழுத்து, மெல்லினம் இடையினம் என்று தமிழ் எழுத்துக்களை எல்லாம் முருகன் அவையவங்களைக் குறிப்பிடும் படி மிகவும் வித்தியாசமாகத் திரு எழில்மணி அவர்கள் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலின் சிறப்பை இப்போதுதான் கூர்ந்து கவனிக்கிறேன். மிகவும் சிறப்பான பாடல், இதை ப் பகிர்ந்து எனக்குத் தெரிந்து கொள்ள உதவிய ஸ்ரீராம் உங்களுக்கு மிக்க நன்றி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன். இப்போதும் ரசித்தேன். மிக்க நன்றி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!