திங்கள், 21 அக்டோபர், 2024

"திங்க"க்கிழமை    தஞ்சாவூர் தக்காளி சட்னி - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

  தக்காளிச் சட்னி 

*** *** *** *** ***

செய்முறை :
கனிந்த தக்காளி 3
சின்ன வெங்காயம், 15
சீரகம் அரை ஸ்பூன்
பூண்டு 5 பல்
சிவப்பு மிளகாய், 3
கல் உப்பு  தேவையான அளவு

தாளிப்பதற்கு :
கடலை எண்ணெய் 
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
கடுகு, உளுத்தம் பருப்பு, 
பால் பெருங்காயத் தூள், 
மல்லித் தழை




தக்காளி பூண்டு வெங்காயத்தைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்...

இரும்பு வாணலியை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும்  சீரகம் போட்டு வெடிக்க விட்டு, காய்ந்த மிளகாயை சேர்த்து ஒரு பிரட்டு பிராட்டிக்கொள்ளவும்.  பின் தக்காளி வெங்காய பூண்டு துண்டுகளை அதில் இட்டு சற்றே வதக்கி எடுக்கவும்.. 

தக்காளி வெங்காயம்  பூண்டு இவற்றின் பச்சை வாசனை எப்போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும்..

வதக்கியவை சற்று ஆறியதும் மிக்ஸியில் இட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்..

 அரைத்து வைத்திருக்கும் விழுதை மிதமான சூட்டில்  அடுப்பில் வைத்து .  தேவையான அளவிற்கு சுடு நீர் சேர்த்து மிதமான தீயில்  கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தாலே போதும்..

ஒரு கடாயில் சிறிதளவிற்கு கடலை எண்ணெய் விட்டு. எண்ணெய் காய்ந்ததும்  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் கறிவேப்பிலை தாளித்து இதில் சேர்க்கவும்..

தளதளத்து வந்ததும்  மல்லித்தழைகளைக் கிள்ளிப் போட்டு இறக்கவும். 

அவ்வளவுதான்  தக்காளிச் சட்னி ..

எனக்கு மிகவும் பிடித்தமான சட்னி இது... 

ஒவ்வாமை காரணமாக  இதை ஒதுக்கி வைத்து மூன்று வருடங்கள் ஆகின்றன..

இந்த சட்னி ஓரளவுக்கு இறுக்கமாக இருக்கவேண்டும்

ஃஃஃ..

20 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையாக தக்காளி சட்னி ரெசிபி நன்றாக உள்ளது. நானும் இவ்விதந்தான் செய்வேன். ஆனால், வெங்காயம் சேர்க்கும் போது, பூண்டு சேர்க்க மாட்டேன்.

    தக்காளி, வெங்காயம் இரண்டையும் வதக்கி, வறுத்த சி. மி.. கடுகு, பருப்பு கலவையுடன் மிக்ஸியில் அரைத்தெடுத்து விடுவேன். நேற்று கூட எங்கள் வீட்டு சமையலில் தக்காளி சட்னி இடம் பிடித்தது. (ஆனால், அந்த வெங்காயமும் இல்லாமல்)

    தங்கள் செய்முறை குறிப்புக்களும், படங்களும் நன்றாக உள்ளது. இப்படியும் ஒருநாள் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுக்கு அந்தச் சட்னி பண்ணுனீங்க? சாதத்துக்கா இல்லை தோசைக்கா இல்லை சப்பாத்திக்கா இல்லை அடைக்கா?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      பிரயாணங்கள் நன்றாக சென்று கொண்டிருக்கிறதா?

      இந்த தக்காளி சட்னி அன்று சாதத்தில் கலந்து சாப்பிடத்தான் செய்தேன்.மறுநாள் காலை டிபனுக்கும் அதை பயன்படுத்தினோம் . இதை வெங்காயம் கலந்தும் செய்யலாம். அப்படியும் செய்துள்ளேன். ஆனால், அவை அவற்றிற்கு என ஒரு குணங்கள் உள்ளதல்லவா? அவைகள் இணையும் போது "என்னால்தான் சுவை" என்ற எண்ணங்கள் அவற்றினுள்ளும் வந்து விடும். (அதையும் நாம்தான் அவற்றிற்கும் தோற்றுவிக்கிறோம் என்பதும் உண்மை. ஹா ஹா ஹா)

      அங்கு மழை இல்லையா.? இங்கு நல்ல மழை. பிரயாணத்திலும் வந்து கருத்துக்கள் சொல்வதற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நான் மழையின் காதலன் (பலப்பல வருடங்கள் அரேபிய தேசங்களில் இருந்ததால்) நல்ல மழை பெய்யும்போது பெங்களூரில் இல்லையே என்ற வருத்தம். பயண இடங்களில் மழை கிடையாது சாதாரண காலநிலை. பயணத்தின்போது மழை பெய்தால் சகிக்காது

      நீக்கு
    4. நானும் மழையின் ரசிகனே..

      மழை -
      அம்ருத வர்ஷிணி

      நீக்கு
    5. ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. தக்காளிச் சட்டினி ரெசிப்பி நன்று.

    அதுசரி.. அது என்ன தஞ்சாவூர் தக்காளிச் சட்னி? அப்புறம் நான், திருநெவேலி சாதம் என்றெல்லாம் ரெசிப்பி அனுப்பிடுவேன். ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டு விடுங்க நெல்லை...

      மண்ணின் மாண்பு வெளிப்படட்டும்...

      சாம்பார் உருவாகிய இடம் தஞ்சாவூர் அரன்மனை அல்லவா?..

      அசோகாவும் சந்திர கலாவும் மராட்டிய தந்ததே!..

      திருநெல்வேலி சமையல், தஞ்சாவூர் சமையல் என்பதே ஒரு மரபு..

      நீக்கு
  4. இந்தச் சட்னி சப்பாத்திக்கு நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  6. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  7. தக்காளி சட்னி நன்றாக உள்ளது.

    நாங்கள் தோசை இட்லிக்கு செய்வதுண்டு.

    நேற்றைய பகிர்வு வரமுடியவில்லை குடும்ப சிநேகிதி ஒருவரின் மரணம் அவர்களுக்கும் எமக்கும் நல்ல நட்பு. 53வயது வரக்கூடாத வருத்தம் வந்தது. சிகிச்சை எல்லாம் அளித்தும் காலன் விடவில்லை.அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.அவரின் மரணம் மனதை பாதித்தது சென்று வந்தோம்.

    நேற்றைய பகிர்வு இனித்தான் படிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தமான செய்தி.

      இனி துயரங்கள் நேராமல் இருக்கட்டும்..

      நீக்கு
    2. பெண்பிள்ளைகளின் வயது முப்பதுக்குள்தான் இருக்கும். அதற்குள் அம்மா இல்லாத நிலை. மிகவும் துயரம். காலம் அவர்களைத் தேற்றற்றும்

      நீக்கு
    3. தாயை இழந்து வாடும் குழந்தைகள் நிலை கேட்டு வருத்தம் அடைந்தேன். குடும்பத்தினர்களுக்கு இறைவன் ஆறுதல் அருளவேண்டும்.

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    நல்லதொரு குறிப்பு.

    பதிலளிநீக்கு
  9. தக்காளி சட்னி செய்முறை நன்றாக உள்ளது. பூண்டு இல்லாமலும் செய்வோம் . படங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!