செவ்வாய், 1 அக்டோபர், 2024

ரீட்டா & மீட்டா 11. ரீட்டாவின் பின்னணி

 


ஆ : " ஆமாம். பிசினஸ் இந்தியா பத்திரிக்கையில் வெளிவந்த, ரீத்திகாவின் அந்த பேட்டிதான் ரீட்டா என்னை பிளாக் மெயில் செய்ததன் காரணம் என்று இப்போது தெரிகிறது. "

அ: "புரிகிறது. ரீட்டா உங்களை பிளாக் மெயில் செய்த காரணத்தினால் அவளைக் கொல்ல நினைத்தீர்களா?"  

ஆ: " ஆமாம். ஆ னா   ல் .. " 

அ : "கொலை செய்யும்  எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது?" 
 
ஆ : "Meta AI கொடுத்த தகவல் மூலம். அதுதான் எனக்கு  black மெயில் செய்பவரை சமாளிக்க 3 வழிகள் இருப்பதாக சொன்னது. முதல் இரண்டும் - அதாவது கேட்கும் பணத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பது - பிளாக் மெயில் செய்பவரை சட்டபூர்வமாக எதிர்கொள்வது - இரண்டும் எனக்கு சரிப்படாது என்று தெரிந்ததால், மூன்றாவது வழியான கொல்வது என்ற முடிவுக்கு வந்தேன். " 

அ : " cv235 விஷ ஜாடி பற்றி எங்கே தெரிந்து கொண்டீர்கள்?" 
 
ஆ : " அதுவும் மீட்டா சொன்ன தகவல்தான். அது சரி, CV235 பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்? " 

அ : " சில மாதங்களுக்கு முன்பு எங்களுடைய " Police Journal " பத்திரிக்கையில் படித்துத் தெரிந்துகொண்டேன். தடயம் கிடைக்காத கொலைகள் பற்றிய கட்டுரையில் படித்தேன். இன்னும் பார்க்கப் போனால் - Meta AI ஆப் கூட அந்தத் தகவலை எங்கள் போலீஸ் ஜர்னல் கட்டுரையிலிருந்துதான் திரட்டி இருக்கும். " 

ஆ : " CV235 ஜாடியை நான் வாங்கினேன் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? " 

அ: " இருக்கிறது. ரீட்டாவின் மரணத்திற்குக் காரணம், CV235 போன்ற விஷவாயு என்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பார்த்தவுடனேயே, Interpol மூலம் சமீபத்தில் சென்னையிலிருந்து, CV235 யார் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள் என்று அந்த சீன கம்பெனியிடமிருந்து தகவல் பெற்றேன். அதில் இருந்த ஒரு விலாசம், "ஆனந்த் - ரீத்திகா கெமிக்கல்ஸ் - சென்னை"  ரீத்திகா கெமிக்கல்ஸ் சென்று அது பற்றி விசாரித்தவுடன், அங்கு இருந்த நிர்வாகி - ' சீனாவிலிருந்து வந்த ஒரு பார்சலை நீங்கள் (ஆனந்த்) பெற்றுக்கொண்டு, உடனே ஹைதராபாத் கிளம்பி வந்ததாகக் கூறினார். " 

ஆ : " ஆமாம். ரீத்திகா கெமிக்கல்ஸ் சார்பில் ஒரு ஆராய்ச்சிக்காக வாங்கினேன். "

அ: " அது எங்கே? CV235 நீங்கள் வாங்கிய ஜாடியைக் காட்டினால் போதும். நான் சென்னைக்குத் திரும்பச் சென்றுவிடுகிறேன். "

ஆ : " அது வந்து .. எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்க்கவேண்டும். எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். "

அ : " மிஸ்டர் ஆனந்த். பொய்கள் வேண்டாம். இவ்வளவு நேரம் எப்படி உண்மையான பதில்களை சொல்லி வந்தீர்களோ - அதைத் தொடருங்கள். "

ஆனந்த் தயக்கத்துடன், CV235 ஜாடியை, ஊரப்பாக்கம் நர்சரியில் வாங்கிய ரோஜாச் செடி தொட்டியில் மறைத்து வைத்து, அதனை ரீட்டாவின் விலாசத்திற்கு அனுப்பி வைத்ததைச் சொன்னான். 

அ: " இப்பொழுது நீங்கள் சொன்னது எல்லாம் உண்மைதானே? ரீட்டாவை இரண்டரை வருடங்களுக்குப் பிறகு நீங்கள் சந்திக்கவில்லைதானே? அதில் எந்த மாற்றமும் இல்லையே? " 

ஆ : " ஆம். முழு உண்மையையும் சொல்லிவிட்டேன். இப்பொழுது என்னைக் கைது செய்து, காவலில் வைக்கப்போகிறீர்களா ? " 

அ : " இல்லை. "

ஆ : " ஏன்?"

அ : " ரீட்டா இறந்தது CV235 விஷ வாயுவால்தான். ஆனால் அது நீங்கள் அனுப்பிய விஷ ஜாடியால் நிகழ்ந்த மரணம் இல்லை. " 

ஆ: " அப்படி என்றால், CV235 ஜாடியை, என்னைத் தவிர வேறு ஆட்களும் வாங்கியிருக்கிறார்களா? "

அ : " ஆமாம். "

ஆ : " அது யார்? "

அ : " இந்த நிலைமையில் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான், உங்களுக்கு நல்லது. இப்போதைக்கு நீங்கள் இன்னும் சில நாட்கள், நிம்மதியாக இருங்கள். " 

ஆ : " சரி. மிக்க நன்றி. " 

அ : " சில நாட்களில், இந்தக் கேஸை முடித்து வைத்தவுடன், விவரங்கள் முழுவதையும் உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். உங்களுக்கும், ரீத்திகாவுக்கும் என்னுடைய நல்வாழ்த்துகள். நான் விடை பெறுகிறேன். " 

அருண், அங்கிருந்து கிளம்பிச் சென்றான். 

= = = = = = = = = = = = =

ரீட்டா பள்ளிக்கூட நாட்களிலேயே அம்மா அப்பா இருவரையும் ஒரு விபத்தில் இழந்தவள். அவர்களின் இழப்பிற்கு அரசாங்கம் தந்த இழப்பீட்டுத்  தொகையைக் கொண்டு, ரீட்டா தன்னுடைய படிப்பைத் தொடர்ந்தாள். உறவு என்று சொல்லிக்கொள்ள இருந்தவர் - அம்மா வழியில், அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரி - மாதுரி. ரீட்டாவிற்கு பெரியம்மா முறை. கணவனை இழந்த மாதுரியின் இரண்டு மகன்களும், தங்கள் திருமணத்திற்குப் பிறகு, அவளைத் தங்களிடம் வைத்துக்கொள்ள இஷ்டப்படாமல் விரட்டியதால் மனம் உடைந்துபோன மாதுரி, ரீட்டாவிடம் தஞ்சம் அடைந்தாள். ரீட்டாவுக்குப் பாதுகாப்பாகவும், ரீட்டாவின் படிப்பு தடங்கலின்றித் தொடரவும் உறுதுணையாக இருந்து வந்தாள் மாதுரி. 

ரீட்டா இரண்டு வருடங்களுக்கு முன்பு, மேனேஜ்மெண்ட் பட்டம் பெற்றதும், பிசினஸ் மேனேஜ்மெண்ட் கன்ஸல்டண்ட் (BMC) என்ற பெயரில் அண்ணா நகரில் சொந்தத் தொழில் செய்ய ஆரம்பித்தாள். 

சிறு தொழில் அதிபர்களுக்கு அவர்களின் வியாபாரத்தைப் பெருக்க  சில நுட்பங்களை எடுத்துக் கூறி, அந்தக் காண்ட்ராக்ட் மூலம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தாள். 

இளமையும் அழகும் உள்ள ரீட்டாவிடம் சில தொழில் அதிபர்கள், கொஞ்சம் எல்லை மீறி நடந்துகொண்டதும் உண்டு. அந்தச் சந்தர்ப்பங்களை சமயோசிதமாகப் பயன்படுத்திக்கொண்டாள் ரீட்டா. அவர்கள் தன்னோடு நெருங்கி இருக்கின்ற சமயத்தில் மொபைல் போனில் படம் பிடித்து, பிறகு, அவற்றை வைத்து அவர்களை பிளாக் மெயில் செய்ய ஆரம்பித்தாள். அப்படி ரீட்டாவின் வலையில் சிக்கியவர்கள், வேறு வழியின்றி, அவளுக்கு ஆயிரக் கணக்கில் பணம் கொடுக்கவேண்டியதாக இருந்தது. 

பெரிய அளவில் பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையின் லட்சியம் என்று வைத்துக்கொண்டு வாழ ஆரம்பித்தாள் ரீட்டா. 

பிளாக் மெயில் செய்யப்பட்ட ஒருவர், சட்ட ரீதியாக ரீட்டாவை எதிர்கொள்ள, போலீஸில் புகார் செய்தார். 

அந்தப் புகார் பற்றி விசாரிக்க, ரீட்டாவின் அப்போதைய விலாசத்திற்குச் சென்றவர் .. அருண். 

(தொடரும்) 

21 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க .

    பதிலளிநீக்கு
  2. கதை நிரந்தர தொடர் கதையாகும் போல் தோன்றுகிறது. ஆகட்டும். ஒரு 'கன்னித்தீவு' ????
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. அடுத்த வாரத்து டன் ஒரு சிறிய பிரேக். இல்லையேல் து செ என்னைக் கைது செய்து, எல்லோருக்கும் பாயாசம் கொடுக்கத் தயாராக உள்ளார்.
      அடுத்த வாரப் பதிவின் இறுதியில் ஒரு கேள்வி கேட்கப்பட உள்ளது. அதற்கு வாசகர்கள் ஒவ்வொருவரும் நீதிபதி ஸ்தானத்தில் அமர்ந்து, தீர்ப்பு வழங்கவேண்டும்.

      நீக்கு
    2. நீதிபதி எல்லாம் முடியாது. வேண்டுமென்றால் ஜூரர் ஆக அபிப்ராயம் அல்லது விடை சொல்லலாம்.
      Jayakumar

      நீக்கு
    3. அப்படியே செய்யுங்க. தீர்ப்பு என்பதைவிட அருணுக்கு ஆலோசனை சொல்வது என்று வைத்துக்கொள்வோம்!

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    கதை திருப்பம் நன்றாகப் போகிறது. தான் கொலை செய்ய முயன்ற வரை ஆனந்த் உண்மையை சொல்லி விட்டாரே..! இனி அதன் காரணம் அவர் இல்லையென நமக்கும் தெரிந்து விட்டது. இடையில் மாதுரியை பற்றிய குறிப்பு வேறு வருகிறது.((நடந்த கொலைக்கு அவளும் ஒரு காரணமா?) இனி உண்மைகள் வெளி வரும் நேரம் நீங்கள் தருகிற பிரேக் வேறு. சுவாரஷ்யமாக சென்ற தொடர் சுவாரஸ்யமாகவே முடிந்தால் நன்றாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. கதை நன்றாகப் போகிறது...

    சடார் சடார் எனத் திருப்பங்கள் பழைய கும்மோணத்து ரோடு மாதிரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ! குதிரை வண்டியில் பயணிப்போர் தலை இடித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்!'

      நீக்கு
  6. /// ஒவ்வொருவரும் நீதிபதி ஸ்தானத்தில் ///

    இருக்குற நீதி பதி போதாது ன்னு
    இது வேறயா!...

    இருந்தாலும் புதுமை..

    பதிலளிநீக்கு
  7. கதை திடீர் திருப்பங்களுடன் சுவாரசியம். விறுவிறுப்பாக தொடரப்போகிறது .....தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  8. கதை நன்றாக போகிறது. திடீர் திருப்பங்கள் இருக்கிறது.
    ரீட்டாவின் பெரியம்மா மாதுரி கதாபாத்திரம் புதிதாக உள் நுழைந்து இருக்கிறது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

    பதிலளிநீக்கு
  9. கதை சுவாரசிஸியம். எதிர்பார்த்தேன் அதை போன வாரம் ட்விஸ்ட் இருக்கும் என்று கருத்தில் சொல்லியிருந்தேன். ஆனந்த் அந்த கெமிக்கல் வாங்கியிருந்தாலும் அவனாக இருக்காது என்பது. ஆனால் ரீட்டா -தொழிலதிபர்கள் விவகாரம் எதிர்பார்க்கவில்லை.

    அருணுக்கு நாங்க என்ன உதவி பண்ணனும் சொல்லுங்க கௌ அண்ணா! பண்ணிப்புடலாம்!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!