கேட்டு வாங்கிய பாயசம்
துரை செல்வராஜூ
*** *** *** *** ***
" தம்பீ.. இன்னொரு வடை வைப்பா... "
உணவின் நறுமணம் பரவிக் கொண்டிருக்க சுறுசுறுப்பாக நடந்து கொண்டு இருந்தது பந்தி உபசரிப்பு..
பெரிய வீட்டின் முதல் கல்யாணம்.. வேறு வாரிசுகள் இல்லாததால் இந்தக கல்யாணம் ஒன்று மட்டுமே...
தடபுடலான விருந்து.. காலை உணவுப் பந்தியே பத்தரைக்குத் தான் முடிந்திருந்தது..
உடனடியாக மதிய விருந்து.. எல்லாம் தஞ்சாவூர் தலை வாழை இலைகள்..
" வடை தான் முதல் ரவுண்டு லயே வெச்சிட்டாங்களே... இனிமே வராது.. "
பெரியவர் முகத்தில் ஏமாற்றம்..
" அட.. பெரியவர் கேக்குறாருதானே.. இன்னும் ஒரு வடை கொண்டாந்து வைப்பா.. "
பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர் உதவிக்கு வந்தார்..
" அதெல்லாம் முடியாதுங்கோ. கவுண்டிங் பிராப்ளம் வந்துடும்... சூப்ரவைசரக் கேட்டுக்குங்கோ.. "
" டே... என்னடா பிராப்ளம்... இந்த வடக்கன்களால இது வேற தலவலி.. யாரு எவருன்னு ஆளுங்க தராதரம் தெரியாம.... கூப்ட்றா கோயிந்தன!...."
பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர் போட்ட சத்தத்தில் நாலைந்து பேர் ஓடி வந்தனர்....
அவர்களில் யார் கோவிந்தன் என்று தெரியவில்லை..
முன்னால் வந்து நின்றவர் மணப் பெண்ணின் சித்தப்பா...
அவர் பெரியவரை நோக்கி -
" பெரியப்பா.. ஒங்கள அங்கே தேடிட்டு இருக்கோம்... ஏன் தனியா உக்காந்துருக்கீங்க... என்னா பிரச்னை?... "
- என்றார் பரிவுடன்..
" டே மாரிமுத்து... பெரிய ஐயா ஒரு கை பருப்பு சோறு தான் சாப்பிட்டு இருக்காங்க.... சாம்பார் வத்தக் குழம்பு ரசம் எதுவும் வேணாம்.. ன்னுட்டு ஒரு வடை மட்டும் எக்ஸ்ட்ராவா கேட்டதுக்கு அந்த சப்ளையரு அதெல்லாம் முடியாது... சூப்பர்வைசரக் கேளுங்க ன்றான்.. என்னங்கடா உங்க பந்தி விசாரணை?... "
பெரியவர் பரிதாபமாக விழித்துக் கொண்டிருந்தார்...
" மன்னிச்சுடுங்க பெரியப்பா... "
" பொண்ணுக்கு சடங்கு சாங்கியம் ன்னு மணவறயில இருக்கா அன்னபூரணி.. அதான் நான் மட்டும் பந்திக்கு வந்தேன்.. பசிச்சதா வேற!...
" ஆச்சி இங்க வராததே நல்லது.. வந்திருந்தாங்க ன்னா இந்நேரம் கோயிந்தன் பழய பொழப்புக்கே ஓடியிருப்பான்... "
ஆளாளுக்குப் பேசினார்கள்...
" ஏன் காலைல சாப்பிடலை தாத்தா?.. "
" அத ஏம்பா கேக்கறே... அவன் சட்னி ன்னு சொன்னா நீங்க நம்பிடறதா... தேவஸ்தானம் மாதிரி அப்படியே அனுப்பி வெச்சிடறதா? சட்னி ல ஒரேயடியா பச்ச மொளகா காரம்.... சாம்பார் ல மசாலா வாடை ... கரண்டி எடுத்தவன் எல்லாம் சமையல் காரன் ன்னா இப்படித் தான்.. கல்யாண வீட்ல எதுக்குடா பரோட்டாவும் சால்னாவும் கவுச்சி வாடையோட
போடுறீங்க.. அதிலயும் சோடா உப்பு.. கெமிக்கல்.. விடலைப் பச்ங்களுக்கே ஒத்துக்காது .. நான் இப்போ நாட்டு மருந்து எடுத்துக்கறதால உப்பு புளி காரம் எல்லாம் ஒதுக்கி வெச்சிருக்கேன்.. இதெல்லாம் வயித்துக்கு ஆகாது.. பேத்தி கல்யாணத்துல ரெண்டு வடய மட்டும் தின்னுட்டு இருந்துக்கலாம்ன்னு பார்த்தா... அதுக்கும் பிரச்னை.."
தாத்தாவிடம் நீண்ட சொற்பொழிவு..
இன்னும் சிலர் ஓடி வந்தார்கள்...
" பெரிய ஐயா மன்னிக்கணும்.. மன்னிக்கணும்.. "
" வாடா கோவிந்தா... கை தெம்பாகிட்டது போல... "
பெரியவரிடம் சிரிப்பு...
" ஐயா அப்டில்லாம் நெனைக்கப்படாது ங்க.. எல்லாம் நீங்க போட்ட பிச்சை.. டேய் இங்க வாங்கடா.. ஒறவு முற ன்னு எங்கேயும் யாரும் இல்லை.. இருந்தாலும் அவங்க இறங்கி வர்றதில்லே.. ஊர்ல எளந்தாரி வெட்டிப் பயலுங்களும் இந்த மாதிரி வேலைக்கு வர்றதில்லை... இந்த மொகிஷ்.. கள வெச்சிக்கிட்டு நான் படுறபாடு இருக்கே... "
"மொகிஷ் ன்னா?.. "
" மொகிஷ் ன்னா எருமை மாடுங்க... வடக்கன் பாஷை.. "
" அம்பது வருசத்துக்கு முன்னால அரசாங்கம் சொல்லிட்டாங்க ன்னு அப்பன் சித்தப்பன் எல்லாம் நரம்பை நறுக்கிட்டு வந்தானுங்க... இன்னிக்கு வீட்டுக்கு வீடு ஒடன் பொறப்பு ஒறவு மொற அறுந்து போச்சு.. ஒத்தாசைக்கும் ஆளு இல்லாமப் போச்சு... "
அதற்குள் சட்னி சாம்பார் வடைகளுடன் ஓடி வந்தனர் பசங்கள்...
" இதோ பக்கத்து இலைல ரெண்டு வடய வை... நமக்கு ஆதரவா அவரை தான் குரல் கொடுத்தார்.. "
" வை வை... சாம்பார ஊத்து.. "
" சாம்பார வேணாம்!... டே.. கோவிந்தா சம்பாரா டா இது,?.… ஊர் பேரக் கெடுக்குறதுக்கு.. "
" மசாலாப் பொடி தட்டுக் கெட்டுப் போச்சுங்க... ஏதோ குழம்புல போட்ட காய்கறிக தான் பேரக் காப்பாத்தி இருக்கு.. "
" சொல்ற மாதிரி அப்பன் ஆத்தா காலத்துல வீட்டு அம்மி ல அரச்சுத் தானே எல்லாமும் செஞ்சோம்... மசாலாக் காரனுங்களா வந்து கொழம்பு வச்சுக் கொடுத்தானுங்க?.. எவன் ஊட்டு சாம்பாருக்கு எவன் டா மொளகாப் பொடி அரைச்சுக் கொடுக்கிறது?.. "
" இந்தக் காலத்து அம்மி மேல பொண்ணுங்க கல்யாணத்துல காலைத் தூக்கி வச்சி - கிக்கீ ன்னு சிரிக்கிறதுக்கு ன்னு ஆயிடிச்சிங்களே.. ஐயா.. ஒங்க காலம் மாதிரி இல்லீங்க இது.. மல்லி மொளகா மஞ்சத் தூள் தனித்தனியா போட்டு குழம்பு கூட்றதுக்கு இப்போ எந்தப் பொண்ணுக்கும் தெரியாதுங்க... மசாலாக் காரன் காட்ல தாங்க மழை.. "
கோவிந்தனிடம் ஆதங்கம்..
வடையில் ஆழ்ந்திருந்த பெரியவர் முகத்தில் சற்றே மகிழ்ச்சி... அதைக் கண்டு கொண்டான் கோவிந்தன்..
" நம்ம பஞ்சநத ஐயர் மகன் தான் நளபாகம் .. மூனு வகை இனிப்பு, வடை பாயசம் எல்லாம் அவரு தான்... குழம்பு ரசம் கூட்டு பொரியலுக்கு வேற ஆள்.. சோறு ஆக்க வடிக்க ஆள் வேற.. "
" நல்லாருக்கு.. நல்லாருக்கு.."
"பாயாசம் பாயாசம்.." யாரோ சத்தமிட்டார்கள்..
" ஐயா பாயசம் கொண்டு வரச் சொல்லட்டா... "
" ம்ம்.. பாயசம் மட்டும் போதும்.. அப்பளம் வேணாம்.. ஒரே உப்பு.. "
" டே தம்பீ... பாயசத்தோட கப்பு எடுத்துட்டு வா... "
" கோவிந்தா நீ வேற ஏண்டா கப்பு கிப்பு ன்னு ஊர குப்பையாக்குற... இலைல ஊத்துங்கடா... "
அதற்குள்,
" வடை வைக்கலே ன்னு இங்க ஏதோ பிரச்னையாமே.. " என்றபடி அன்னபூரணி ஆச்சி,
" பிரச்னையா.. அப்டி ஏதும் இல்லீங்களே ஆச்சி.. ஐயா இப்போ தான் பாயசம் சாப்டப் போறாங்க... "
" பாயசமா.. அவருக்குத் தான் சர்க்கரை... "
" இருந்தது தான் இப்போ இறங்கி நார்மல் ஆகீருச்சே அன்னம்.. "
" இருந்தாலும் மூனு மாசத்துக்கு உஷாராவே இருக்கச் சொன்னாரே டாக்டர்... "
" அவருக்கென்ன அப்டித்தான் சொல்வாரு... "
" அப்போ ஐயவோட எண்பதாம் கல்யாணத்துல பக்கத்துல உக்கார்றதுக்கு ஒரு சின்ன பூரணியத் தேடிடுவோமா ஆச்சி!.. "
கோவிந்தனிடம் குறும்பு..
" என்னது சின்ன பூரணியா... எட்றா தடிக் கம்பை.. "
அன்னபூரணியிட்ம் பொய்க் கோபம்...
அனைவரும் வாய் விட்டுச் சிரித்தார்கள்...
பாயசத்தில் ஆழ்ந்திருந்தார் பெரிய ஐயா...
ஃஃஃ
முருகன் திருவருள் முன் நின்று காக்க...
பதிலளிநீக்குவேண்டுவோம்.
நீக்குஇன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..
பதிலளிநீக்குவரவேற்போம்
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇதையும் கதை எனக் கொண்டு பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் அழகிய சித்திரத்தால் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்லளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசித்திரச் செல்வர் அவர்களுக்கும்!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇயல்பான திருமணப் பந்தி.. இந்தக் காலத்தைக் (பதினைந்து வருடங்களாகவே) காட்டிச் செல்கிறது.
பதிலளிநீக்குநெல்லை அவர்களின்
நீக்குஅன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
35 வருடங்களுக்கு முன்பே சோன்பப்டி செய்ய ஒருவர், பரோட்டா போட ஒருவர், வட இந்திய உணவுக்கு ஒருவர்னு ஆகிப்போச்சு
பதிலளிநீக்குஅதுவும் அப்படியா...
நீக்குஎல்லாம் தலை நகர் நாகரிகம்..
வாழ்க வளம்..
காய் கூட்டுல்லாம் ஸ்பூனில்தான், இன்னும் வேணும்னு கேட்டு ஆளு வர்றதுக்குள்ள இலையெடுத்து அடுத்த பந்தி வந்துடும்
பதிலளிநீக்குஎல்லாம் தான் மாறிப் போச்சே...
நீக்குவேதனை..
நான்லாம் ஸ்வீட் போடும்போதே இரண்டு மூன்று முறை வாங்கிக்கொள்வேன். இப்போல்லாம் பாயசம் பாசந்திக்குன்னு இரண்டு வயசுக் குழந்தைக்கான தம்ளர் கண்டுபிடிச்சிருக்கானுங்கோ. பெரிய கரண்டியில் இலை முழுக்க பாயசம் விட்டு இன்னும் போட்டுக்கோங்க என்ற காலம் மலையேறி பல தசாப்தங்களாகிவிட்டன
பதிலளிநீக்கு/// பெரிய கரண்டியில் இலை முழுக்க பாயசம் விட்டு இன்னும் போட்டுக்கோங்க என்ற காலம் மலையேறி///
நீக்குஉண்மை தான்..
தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
என் பெண் திருமணத்திற்கு பட்டப்பா அவர்களின் உணவு. அனைவருக்கும் பிடித்திருந்தது. பந்தியை மேனேஜ் பண்ண மேனேஜர், ருசி பார்க்க ஒரு கன்ட்ரோலர், ஒவ்வொரு டேபிள் வரிசைக்கும் ஒரு உபசரிப்பாளர்னு இருந்தாங்க. என்ன ஒண்ணு...அதற்கேற்ற பில்
நீக்குஇதையே உறவு முறையே கவனித்துக் கொண்டது அந்தக் காலம்
நீக்குபொம்பளைப் புள்ளைகளுக்கு தனிப் பந்திதான் என்று கேஜிஜி சொல்றாரோ..
பதிலளிநீக்குஇருந்தாலும் இருக்கும்..
நீக்குஇருந்தாலும் கல்யாணப் பந்தியில் ஒரு பெண்ணைக்கூடக் காணோமே. கேஜிஜிக்கு குமுதம் போன்ற பத்திரிகைகளில் வேலை காலி இல்லை
நீக்குஹாஹாஹாஹாஹா....பொண்ணுங்க எல்லாம் பந்திக்கு முந்திக்கமாட்டாங்க வேலை இருக்கும்ல!!!!!
நீக்குஎன்ன சொல்றீங்க கௌ அண்ணா?
கீதா
இதுவும் சரிதான்...
நீக்குகுமுதம் போன்ற பத்திரிகைகளில் வேலை காலி இருந்தாலும் கொடுப்பார்களா?..
நீக்குகொடுத்தாலும் அங்கே வேலை பார்க்க மாட்டேன்!
நீக்குசிங்கம்.. யா!..
நீக்கு:)))
நீக்குபாயசம் இனித்தது, துரை அண்ணா
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ
படம் பொருத்தமாக இருக்கிறது கௌ அண்ணா!
பதிலளிநீக்குகீதா
நன்றி சகோ
நீக்குநன்றி மீட்டா செ.நு.
நீக்குவணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
கதை அருமை. இந்தக் காலம், அந்த காலம் என்று அரிசியும் பருப்பும் சேர்ந்து மணந்த கலவையான பாயாசம் சுவையோ சுவை. என்னுள் இருக்கும் இனிப்பை கூட கண்டிப்புடன் அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாமென்ற மிரட்டலுடன் ஒரு நாளுக்கு தள்ளி வைத்து விட்டு, கூடவே இரண்டு கரண்டி (இலையில்தான்) விட்டுக் கொண்டு சாப்பிட்டேன். :))
தங்களின் கற்பனையும், திறமையான எழுத்து வளமும் பாயாசத்தின் பக்குவங்களாக ஒன்று சேர்ந்து அமிர்தமாக சுவை தந்ததோடு மட்டுமின்றி வியக்கவும் வைக்கிறது. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சகோதரரே. ரசித்து ருசிக்குமாறு அமைந்த பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கௌதமன் சகோதரரே
பதிலளிநீக்குகதைக்கேற்ப தேர்ந்தெடுத்த பெரியவரின் படம் அற்புதமாக உள்ளது. பெரியவரின் இலையில் அமர்ந்திருக்கும் உணவுகளை முடிந்த வரையில் நீக்கி அவர் விருப்பப்பட்டு கேட்ட உணவை அதில் சேர்த்து வரைந்திருக்கலாம் . அது இவ்வகை ஓவியத்தில் முடியுமா, முடியாதா என எனக்குத் தெரியாது. இருந்தாலும், தங்கள் ஓவிய திறமையை நினைத்து இவ்விதம் சொல்லி விட்டேன். தவறெனின் சொன்னதற்கு மன்னிக்கவும்.
மற்றபடி கல்யாண வீட்டில் அனேக பண்டங்களுடன் சாப்பிடுவது போன்ற படம் கதைக்கு மிகப் பொருத்தம். வாழ்த்துகளும், பாராட்டுக்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இப்படியான ஆக்கம் எல்லோருக்கும் பிடிக்குமா என்ற அச்சத்துடன் இருந்தேன்...
நீக்குதங்களது கருத்தைக் கண்டதும் நிம்மதி..
தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
கௌதம் ஜி அவர்களின் கற்பனைத் திறன் அலாதியானது..
பதிலளிநீக்குநன்றி.. நன்றி..
ஹி ஹி! மீட்டாவின் சேவை - எங்களுக்குத் தேவை!
நீக்குகதையும் கல்யாணப் பந்தி சாப்பாடும் சூப்பர்.
பதிலளிநீக்குஇப்பொழுது எல்லாம் பரிமாறுவதே கிடையாது . படமும் நன்றாக இருக்கிறது.
தட்டை எடுத்து வரிசையில் நின்று நாமே பரிமாறி மேசைதேடி சாப்பிட்டு போகும் காலம்தான்.
/// இப்பொழுது எல்லாம் பரிமாறுவதே கிடையாது .
நீக்குதட்டைப் பிடித்தபடி வரிசையில் நின்று நாமே போட்டுக் கொண்டு மேசை தேடி சாப்பிட்டு விட்டுப் போகின்ற காலம் இது///
காலம் மாறி விட்டது..
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி..
கல்யாண நிகழ்வுகளில் எவ்வளவு காலமாற்றம்.....
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி
அருமை..உடன் பந்தியில் இருந்ததைப் போல இருந்தது வர்ணிப்பு...வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஐயா..
கதை நன்று. ஆங்காங்கே தற்போது நடக்கும் கலப்படம் பற்றியும் சொல்லிச் சென்றது நன்று. கதையை ரசித்தேன். கதைக்கான படத்தையும்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்
கதை நன்றாக இருக்கிறது. கதை கேற்ற ஓவியமும் அருமை.
பதிலளிநீக்குபார்த்து பார்த்து உபசரித்த காலங்கள் அப்போது நடக்கும் உரையாடல் அருமையாக இருக்கும்.
இப்போது உபசரிப்பவர்கள் வேலைக்கு வைத்து இருக்கிறார்கள். அவர்களும் புன்சிரிப்புடன் உபசரிக்கிறார்கள்.
பாயசத்தில் ஆழ்ந்திருந்தார் பெரிய ஐயா...//
பெரியவர் வடையும் சாப்பிட்டு பாயசமும் குடித்து மணமக்களை மனதார வாழ்த்தி சென்று இருப்பார். பந்தி விசாரிப்பு தவறுகளை மறந்து இருப்பார் அதுதானே பெரியவர்கள் குணம்.
மதுரையில் உறவினர் வீட்டில் நடிகர் சூரி அவர்கள் நடத்தும் அம்மன் கேட்டரிக் சர்வீஸில் உணவு ஏற்பாடு செய்து இருந்தார்கள், மூன்று நாளும் அவர்கள் ஆட்கள் (பெண்கள் தான்) அவ்வளவு பேரும் அருமையாக உபசரித்தார்கள். வாசலில் கோலம் போடுவது, வரவேற்பு எல்லாம் அவர்கள் ஆட்கள் தான். உறவினர்களும் கூட நின்றார்கள்.
சில கல்யாண வீடுகளில் கால மாற்றம் ஏற்படுத்தியவை இருக்கும்.