வெள்ளி, 25 அக்டோபர், 2024

தந்தை ம‌ன‌ம் த‌வித்திருக்க‌ ப‌ர‌ம‌னுட‌ன் துணை நின்ற‌ பார்வ‌தியும் பெண்தானடா

 

நல்ல தரமான ஒலியமைப்பில் இல்லை என்றாலும் எப்போதோ கேட்ட இந்தப் பாடல் இப்போது நினைவுகளில்...  TMS பாடி இருக்கிறார்.  அவரே இசை அமைத்து பாடி இருக்கக் கூடும்.  எழுதி இருப்பவர் யார் என்று தெரியவில்லை.

குருவாயூரப்பன் நாமம் பாடிடுவோமே 
குறையில்லா வாழ்வுதன்னை நாடிடுவோமே
குருவாயூரப்பன் நாமம் பாடிடுவோமே - என்றும் 
குறையில்லா வாழ்வுதன்னை நாடிடுவோமே 
மறைபோற்றும் மன்னனையே வாழ்த்திடுவோமே - பக்தி 
பூவாலே பாமாலை சாத்திடுவோமே   - குருவாயூரப்பன் நாமம் 

சித்தருக்கு சிறுவனாக காட்சி தந்தானே - மோக 
சக்தியுடன் போராடி வாயிலில் நின்றானே
சித்தருக்கு சிறுவனாக காட்சி தந்தானே - மோக 
சக்தியுடன் போராடி வாயிலில் நின்றானே 
கற்றவர்க்கு கவிபாட துணையும் நின்றானே - ஞான 
சக்தியினால் மக்கள் தம்மை ஆண்டுகொண்டானே - குருவாயூரப்பன் நாமம் 

 சத்தியத்தை நிலைநாட்ட வழிகண்டவன் - பக்தன் 
பில்வமங்கலம் தனக்கு புகழ் தந்தவன் 
சத்தியத்தை நிலைநாட்ட வழிகண்டவன் - பக்தன் 
பில்வமங்கலம் தனக்கு புகழ் தந்தவன் 
ஆடவர்க்கு ..................... அவதரித்தவன் - பத்து 
அவதாரங்கள் எடுத்து அருள்தந்தவன் 
 

=============================================================================================

1961  வெளிவந்த ஒரு மராத்தி படத்தின் தழுவலாய் 1973 ல் வந்த படம் பெத்த மனம் பித்து.

இயக்குநர் S P முத்துராமனின் இரண்டாவது படம் (முதல் படம் கனிமுத்து பாப்பா).  குகநாதன் கதைவசனம் ஏழு இருக்கிறார்.

முத்துராமனின் முதல் 100 நாள் ஓடிய படமாம்.  கதை அரதப்பழசு என்று பத்திரிகைகள் சாடி இருந்தாலும் படம் 100 நாட்கள் ஓடியிருந்திருக்கிறது.

முத்துராமனுடன் சாவித்ரி, ஜெயா, சுருளி, ஜெயசுதா, சோ ஆகியோர் நடித்திருக்கின்றனர்.  ஜெயசுதாவிற்கு தமிழில் இதுதான் முதல் படமாம்.  உடன் ஜெயச்சந்திரன் என்றொரு நடிகரும் அறிமுகமாகி இருக்கிறார்.  யாரோ அவர்!

இந்தப் படத்தில் ஒரே பாடல்தான் இனிமை.  அதை இன்று பகிர்கிறேன்.  பூவை செங்குட்டுவன் பாடலுக்கு இசை V. குமார்.  பாடி இருப்போர் TMS மற்றும் P. சுசீலா.  திரையில் முத்துராமனும், ஜெயாவும்!

இனிமையான, நெகிழ்வான, அமைதியான  பாடல்.

காட்சியுடன் கானத்தைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.  காட்சியுடன் கூடிய கானத்தில்  தரம் சற்றே கம்மியாக இருப்பதால், காட்சியில்லாத தரமான பாடல் ஒலியுடன் கூடிய காணொளி இணைத்திருக்கிறேன்.

TMS : காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
பொன்னூஞ்சல் இல்லை பூமெத்தை இல்லை
நீ வந்த வேளையிலே

P SUSEELA : பொன்னூஞ்சல் தானே தாயின் மனம்
பூ மெத்தை தானே தந்தை மனம்
பொன்னூஞ்சல் தானே தாயின் மனம்
பூ மெத்தை தானே தந்தை மனம்
ஆராரோ பாடும் அன்பான நெஞ்சம்
கண்ணே நீ துயிலும் மஞ்சமடா
மஞ்சமடா……….மஞ்சமடா

P SUSEELA : காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்

TMS : செல்ல‌ மகள் செல்வமகள்
சீரோடு வாழ்ந்த மகள்
ஏழையுடன் வந்தாளடா

P SUSEELA : ஸ்ரீராம‌ன் அடிதொட்டு
பின் செல்லும் சீதைக்கு
பெருமைகள் வேறேத‌டா

TMS : பெத்த ம‌ன‌ம் பித்தாக‌
பேதை ம‌ன‌ம் க‌ல்லாக‌
பெத்த ம‌ன‌ம் பித்தாக‌
பேதை ம‌ன‌ம் க‌ல்லாக‌
த‌ன் சொந்த‌ம் வெறுத்தாளடா

P SUSEELA : தந்தை ம‌ன‌ம் த‌வித்திருக்க‌
ப‌ர‌ம‌னுட‌ன் துணை நின்ற‌
பார்வ‌தியும் பெண்தானடா

TMS : காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
பெண் : காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்

TMS : த‌னி ம‌ர‌மாய் நின்ற‌வ‌னை
த‌ழுவுகின்ற‌ பூங்கொடியாள்
சுக‌மென்ன‌ க‌ண்டாள‌டா

P SUSEELA : கொடியுண்டு மரமுண்டு
குழ‌ந்தையெனும் க‌னியுண்டு
குறையென்ன‌ க‌ண்டேன‌டா

TMS : உன‌த‌ன்னை துய‌ர்த‌ன்னை
நான் தீர்க்கும் முன்னாலே
உன‌த‌ன்னை துய‌ர்த‌ன்னை
நான் தீர்க்கும் முன்னாலே
உன் க‌வலை கொண்டேன‌டா

P SUSEELA : க‌ண்ண‌னாக‌ நீயிருக்க‌
ம‌ன்ன‌னாக‌ அவ‌ர் இருக்க‌
க‌வ‌லைக‌ள் என‌க்கேத‌டா

TMS : காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்

P SUSEELA : 
ஆரிராரிராரோ ஆராரிராரிராரோ
ஆராரிராரிராரோ….

38 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க செல்வாண்ணா...  வணக்கம்.

      நீக்கு
    2. ///வாங்க செல்வாண்ணா... வணக்கம்.///

      ஆஆஆஆஆஆஆ இது எப்போ தொடக்கமாக்கும்ம்ம்ம்ம்:)... மீ காணாமல் போனபிறகு நிறைய மாறியிருக்கே.. சே..சே இதுக்குத்தான் அடிக்கடி எட்டிப் பார்க்கோணும் என்கிறதாக்கும்:))

      நீக்கு
    3. அப்போ செல்வராஜ் தான் தான் துரை அண்ணனின் 1ஸ்ட் நேம் ஆ.. நாங்க அவரின் அப்பா பெயரையா அழைக்கிறோம்... ஹையோ மீ கொயம்பிட்டேன்... நில்லுங்கோ ஒரு கப் மோர் குடிச்சுத் தெளிவாகிட்டு வாறேன் கெளரி விரதமெல்லோ...

      நீக்கு
    4. தொடர்ந்து வாங்களேன் அதிரா...

      நீக்கு
    5. தொடர்ந்து வரோணும் எண்டுதான் குருவாயூரப்பனை வேண்டியிருக்கிறேன் ஸ்ரீராம்.. விதி வலியது பார்ப்போம்:))

      நீக்கு
  2. குருவாயூரப்பன் நாமம் பாடிடுவோமே
    குறையில்லா வாழ்வுதன்னை நாடிடுவோமே

    பதிலளிநீக்கு
  3. படம் 100 நாட்கள் ஓடியிருந்திருக்கிறது.

    பெத்த மனம் பித்து என மக்கள் பித்தாகி இருந்தார்கள்..

    முதலில் ஜூபிடரிலும் தொடர்ந்து ராஜாவிலும் இத்திரைப்படம் ஓடியது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு நினைவில்லை.  ஆனால் பாடலின்மேல் பித்துண்டு!

      நீக்கு
  4. இரண்டாவது பாடலைப் பார்த்த கணத்திலேயே ----

    கண்ணுறங்க்கு.. கண்ணுறங்கு..
    கலமிதை தவற விட்டால்
    தூக்கமில்லை மகளே.. (சித்தி)

    பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது கண்ணிரிலே
    கண்ணீற் உப்பிட்டு காவிரி நீரிட்டு
    கலயங்க்கள் ஆடுது சோறின்றி
    இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி.. (துலாபாரம்)

    ---- வரிசையாக நினைவுக்கு வந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்...  வணக்கம்.

      சித்தி பாடலை சில வருடங்களுக்கு முன்னரும், துலாபாரம் பாடலை சில வாரங்கள் முன்னரும் பகிர்ந்திருந்தேன்.
        
      எனக்கும் துலாபாரம் பாடலுடன் இந்தப் பாடல் ஜோடியாக நினைவுக்கு வரும்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அருமையான பாடல். இதுவரை கேட்டதில்லை இப்போது கேட்டு ரசித்தேன்.

    இரண்டாவது பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். நானும் துலாபாரம் பட பாடலுடன் இந்தப்பாடல் ஒத்து வருவதை கவனித்திருக்கிறேன். பாடலின் இனிமை நன்றாக இருக்கும். படத்தின் தகவல்களுக்கு நன்றி.

    இந்த படம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேனா என்பதும் நினைவில் இலலை. தியேட்டருக்கு சென்று திரைப்படங்கள் பார்க்க செல்வதில்லை அப்போதெல்லாம் தொலைக்காட்சி வழங்கும் ஞாயறு படங்கள் ஒரு வரப்பிரசாதம். ஆனால், அதனை பார்க்கவும் நேரங்கள் என்ற ஒன்று அமைய வேண்டும். . இப்போது வீட்டில் நினைத்தவுடன் டிவியில் படங்கள் பார்க்கிறார்கள். அவர்கள் கூடவே என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. காலங்கள்தான் எவ்வளவு மாறி விட்டது.

    இன்றைய அருமையான இரண்டு பாடல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.. குருவாயூரப்பன் பாடல் இப்போதுதான் கேட்கிறீர்களா? நன்றி.

      நான் இந்தப் படம் பார்க்கவில்லை. பாடல் மட்டும் வானொலி உபயத்தில் மனதுக்குள் வந்தது.

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  7. இரண்டு பாடலும் கேட்டு இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இன்றைய பாடல்கள் கேட்ட நினைவில்லை. கேட்டுப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. காலம் நமக்குத் தோழன் மிக இனிமையான பாடல்

    பதிலளிநீக்கு
  10. "குருவாயூரப்பன் நாமம்..... கேட்டிருக்கிறேன்.
    இரண்டாவது பாடலும் கேட்டிருக்கிறேன் மனதைதொடும் சோகப்பாடல்.
    திரு. ஜீவி அவர்கள் கூறியது போல ஏனைய பாடல்களும் இதைப்போன்றதே. நல்ல பாடல்கள் .

    பதிலளிநீக்கு
  11. முதல் பாடல் கேட்டதில்லை ஸ்ரீராம். இப்போதுதான் முதல் முறையாகக் கேட்கிறேன்.

    கொஞ்சம் நாட்டுப்பாடல் ஸ்டைலில் மெட்டு அமைத்திருக்கிறார்! நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்.

    வேறு ஏதோ சினிமா பாடலின் மெட்டை நினைவுபடுத்துகிறது ஆனால் பாடல் நினைவுக்கு வரமாட்டேங்குது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் கீத்ஸ்... உங்களோட பேச நிறைய இருக்குது எனக்குத் தெரியுமோ... ஹா ஹா ஹா...

      நீக்கு
    2. எந்தப் பாடலை நினைவு படுத்துகிறது கீதா? நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள்.

      வாங்க அதிரா.

      நீக்கு
  12. குருவாரூரப்பன் எனப் பார்த்ததும் பயங்கர ஹப்பியாகிட்டேன், எனக்கு சின்ன வய்சிலிருந்தே குருவாயூரப்பன் எனும் பெயரில ஒரு லவ் இருந்தது, ஆனா அப்படி ஒரு கோயில் இருக்கு, அது எங்கிருக்கு என்பதெல்லாம் தெரியாது யோசிக்கவுமில்லை, ஆனா இப்போ திடீரென கொச்சின் போனோம், செப்டெம்பர் 30ம் திகதி குருவாரூர் போய்த் தரிசனம் பண்ணி வந்தோம்... அதனாலதான் இங்கு அப்பெயர் பார்த்ததும் பரவசமாகிவிட்டேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...  நலமா?  இந்தியாவிலா இருக்கீங்க? 

      நீக்கு
    2. நாடு திரும்பிட்டேன் ஸ்ரீராம், அதனாலதான் இங்கு வர முடிஞ்சது.

      நீக்கு
  13. பகிர்ந்துள்ள இரு பாடல்களுமே புதுசாக இருக்குது. முத்துராமன் மாமா நடிச்ச படமெனில் எதுவானாலும் எனக்குப் பிடிக்கும்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பாடல்களுமே புதுசு என்பது வியப்பளிக்கிறது. இரண்டாவது ரொம்ப பேமஸ் பாடல் ஆச்சே...

      நீக்கு
  14. இரண்டாவது பாடல் பல முறை கேட்ட பாடல். இந்தப் படமும் பார்த்த நினைவு அப்ப வள்ளியூரில் இருந்த சமயம் வீட்டிற்கு வந்தவர்களோ இல்லை பாட்டியோ பார்க்கப் போனப்ப என்னையும் கூட்டிக் கொண்டு சென்றார்கள். கருப்பு வெள்ளை படம்? அப்படி நினைவு சரியாக நினைவில்லை ஆனால் சோகம் என்று நினைக்கிறேன். வீட்டில் எல்லோரும் புகழ்ந்த படம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படமெல்லாம் யார் பார்த்தார்கள் கீதா? பாடல் பிடிக்கும். அஷ்டே.

      நீக்கு
    2. அஷ்டே என்றால்..? அவ்வளவுதான் என்ற அர்த்தமா.. ?

      நீக்கு
    3. ஆமாம். பெங்களுருவில் இருக்கிறீர்களே என்று கன்னடம் பேசினேன். எனக்குத் தெரிந்த ஒரே வார்த்தை!

      நீக்கு
    4. அடாடா.. அப்போ நான்தான் "அசடா" :))

      நீக்கு
  15. முதல் பாடல் கேட்டு பல வருடம் ஆச்சு.
    அடுத்த பாடல் அடிக்கடி கேட்ட பாடல். படம் பார்த்து இருக்கிறேன். சாவித்திரியை பார்க்க கஷ்டமாக இருக்கும். குண்டாய் ஆளே மாறி பார்க்க பாவமாக இருப்பார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!