சிச்சன் இட்ஸா மற்றும் பிற இடங்கள்.
தலைப்பைப் பார்த்து, ‘கிச்சன்’ஆ? என்று யோசிச்சவங்கள்லாம் கொஞ்சம் தள்ளுங்கப்பா. உங்களுக்காகத்தான் திங்கட்கிழமை தொடர்ந்து பதிவு வெளியாகிறது.
காலை 8 மணிக்கு தயாராக இருக்கும்படி டூர் ஆபரேட்டர் சொல்லியிருந்தார் (இவையெல்லாம் ரிசார்ட்டின் அனுமதியின் பேரில், அவர்களுக்குத் தெரிந்தவர்கள் நடத்தும் டூர் என்பதால், பயமில்லை). ரிசார்ட்டுகளுக்கும் கட்டணத்தின் ஒரு பகுதி போகுமா என்பது தெரியவில்லை.
நல்ல ஒரு பார்க். நிறையபேர் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன்.
அங்கும் காவலுக்கு இருக்கும் போலீஸ் வண்டி. (கான்கன் சுற்றுலாத் தளமாக ஆக்க நினைத்தபோது ரிசார்ட்டுகளை உருவாக்கத் தயக்கம் காட்டியதால், அரசே பண உதவி செய்ததாம். அதன் பிறகு ட்ரக்ஸ், துப்பாக்கிக் கலாச்சாரம் போன்றவை அதிகரித்துவிட்டதாம். பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தல்தானாம். அரசும் அதனைக் கட்டுக்குள் வைக்க முனைகிறதாம்.
அங்கு பார்த்த சர்ச் ஒன்று. இதெல்லாம் ஸ்பேனிஷ் கலாச்சாரம் கொண்டுவந்தது. நாடு பிடிப்பவர்களின் முதல் வேலை கலாச்சாரத்தை மாற்றுவது. இப்படித்தான் பிலிப்பைன்ஸிலும் மதத்தைப் பரப்பிவிட்டார்கள். இப்போது பிலிப்பைன்ஸ் ஒரு கிறித்துவ தேசமாகிவிட்டது. (அதனால் ஒரு அட்வாண்டேஜ் இருப்பதையும் மறுப்பதற்கில்லை)
எங்களுக்குச் செல்லும் இடங்களைப் பற்றி விளக்கிச் சொல்ல ஒரு Guide மற்றும் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் இருந்தனர். ஏறி உட்கார்ந்ததும் அருமையான ஆரஞ்ச் ஜூஸ் தந்தார்கள். பிறகுதான் தெரிந்தது, மெக்சிகோவின் அந்தப் பகுதி முழுவதும் எல்லா இடங்களிலும் ஆரஞ்சு நிறைய விளைகிறது என்று. மதிய உணவு மற்றும் மாலை உணவுக்கு இரண்டு இடங்களில் ஏற்பாடு செய்திருந்தார்களாம். எனக்கு அதில் பெரிய ஆர்வம் இல்லை. இவங்க கூட்டிக்கொண்டு செல்லும் இடங்களில் நான் வெஜ்தான் இருக்கும் என்று எனக்கு ஒரு நம்பிக்கை. அதனால் முன்னெச்சரிக்கையாக, சங்கோஜப்படாமல் இரண்டு ஆரஞ்சு ஜூஸ் வாங்கிக்கொண்டேன். காலையிலேயே ரிசார்ட்டில் காலை உணவும் சாப்பிட்டுவிட்டேன்.
சிச்சன் இட்ஸா (Chechen Itza) சுமார் 230 கிமீ தூரம், ரிசார்ட்டிலிருந்து. பேருந்திலேயே டாய்லெட் வசதியும் இருந்தது. சொகுசுப் பேருந்துதான்.
சுமார் 2 ½ மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு, எங்கள் பேருந்து, நினைவுப்பொருட்கள் (மெக்சிகன் கலாச்சாரம் சம்பந்தமான பொருட்கள்) விற்கும் கடை முன்பு நின்றது. நான் இந்த மாதிரி சுற்றுலா பேருந்துகள் கூட்டிச் செல்லும் கடையில் எதையும் வாங்க மாட்டேன். அதிக விலையிருக்கும், கூட்டிச் செல்பவர்களுக்கு கமிஷன் இருக்கும்.
நமக்கே அந்த அனுபவம் இருக்கும். பேருந்துகள் நிறுத்தும் உணவகம் எப்போதுமே சுமாராகவும், கொஞ்சம் விலை அதிகமாகவும் இருக்கும்.
ஆனால் அந்த நினைவுப் பொருட்கள் விற்கும் பெரிய கடை, மெக்சிகன் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. அனேகமாக எல்லாப் பொருட்களுமே என்னைக் கவர்ந்தன. விலை எல்லாமே அமெரிக்க டாலரில். (யார் தயார் செய்தார்களோ. சீனாவாக இருக்குமோ?)
கைவினைப் பொருட்கள் என்று அவனே எழுதியிருக்கிறான். அதனால் உள்ளூரிலேயே தயார் செய்த பொருட்களாக இருக்கும்…க்கும்.
மாயன் கலாச்சாரத்தைச் சொல்லும் திரைப்படம் புகழ் பெற்ற அபோகலிப்டோ Apocalypto). இது 15ம் நூற்றாண்டில் மாயன் கலாச்சாரம் மங்கி, ஸ்பேனிஷ் ஆக்கிரமிப்பாளர்களால் கிறித்துவ மதம் நுழைவதைச் சொல்லும் படம். பார்க்க வாய்ப்பிருந்தால் பாருங்கள்.
மெக்சிகன் தொப்பிகள் அழகாத்தான் இருக்கு. போட்டுக்கிட்டா God Father நினைவு வருது.
சிச்சன் இட்ஸா மாதிரிகள் (நம்ம ஊரில் தாஜ்மஹல் மாதிரிகளை விற்பாங்களே அதுமாதிரி)
செஸ் போர்ட்
மாயன் கலாச்சாரத்து முகமூடிகள்.
இன்னும் அந்தக் கடையில் நான் எடுத்த படங்கள் முழுவதும் முடியவில்லை. அடுத்த வாரமும் தொடரணும் போல் தெரிகிறது. அடுத்த பகுதியில் பார்ப்போமா?
(தொடரும்)
ஆமாம் நெல்லை எனக்குக் கிச்சன்னுதான் மனசு டக்குனு வாசித்தது!!!
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா ரங்கன் க்கா... என்ன இருந்தாலும் பெண்கள் அதிகமாகப் புழங்கும் இடமல்லவா?
நீக்குஎனக்கும் இஷ்க் இஷ்க் என்றுதான் கேட்கிறது!
நீக்குஹாஹாஹா. ஸ்ரீராம்...
நீக்குகண்டிப்பா ரிசார்ட்டுக்கு கமிஷன் இல்லாம இருக்குமா என்ன? எல்லாமே பைசாதாங்க.
பதிலளிநீக்குஅந்தப் பார்க்ல நீங்க பத்தாயிரம் ஸ்டெப்ஸ் நடக்கலையா?!!!!!!
கீதா
ஆகா.. நல்ல கேள்வி..! சகோதரருக்கும் நடக்க தோன்றியிருக்கும். ஆனால் இது அவர் பஸ்ஸில் செல்லும் போது பார்த்த "வழிநடை" பார்க்காக இருந்திருக்கும். அவர் அமர்ந்திருக்கும் இருக்கையை விட்டு இற(ங்)க்கினால்தானே நடக்க முடியும்...!
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குஎன் பதிவாக வந்த கதை ஒன்றை வாசிக்க நீங்கள் வரவில்லையே..! உங்களைத்தான் எதிர் பார்த்துக் கொண்டேயிருந்தேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து வாசித்தால் மகிழ்வடைவேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரிசார்டுக்கு கமிஷன் இருந்தாலும், இந்த மாதிரி கூட்டிக்கொண்டு செல்பவரிடம் அது ஒரு நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் அல்லவா?
நீக்குபார்க்கைப் பார்த்தபோது நடப்பதைவிட அங்கிருக்கும் உள்ளூர் மக்களைப் பார்க்கும் ஆசையே அதிகமாக இருந்தது
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். அப்போதைல்லாம் நான் ஜிம்மிற்குச் செல்லும் வழக்கம் உண்டு. அது போகத்தான் பார்க்கில் நடைப்பயிற்சி.
நீக்குஆனால் எப்போதுமே எனக்கு நடப்பதில் விருப்பம் அதிகம். இப்போல்லாம் கொஞ்சம் வேகமாக நடப்பேன். அதனால் மற்றவர்களுடன் நடப்பது சிரம்ம்.
ஜிம்முக்கு எல்லோரும் ஜம்முனு போகும்போது கம்முனு இருக்கற ஒரே ஆள் நான்தான் போல... ஸ்லிம்மா இல்லாம கும்முனே இருக்கேன்!
நீக்குவாங்க ஸ்ரீராம். எனக்கு இனிப்பிலும் ருசியான உணவிலும் மிக விருப்பம். அதனால் அதிகம் சாப்பிட்டுவிடுவேன். உணவு கன்ட்ரோல் இருக்கும் நீங்கள் ஏன் ஜிம்மைப் பற்றி நினைக்க வேண்டும்?
நீக்குபோதைப் பொருள் எங்கதான் இல்லை? ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுசு புதுசா போதைப் பொருள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.
பதிலளிநீக்கு//நாடு பிடிப்பவர்களின் முதல் வேலை கலாச்சாரத்தை மாற்றுவது. //
அதேதான். கலாச்சாரம் மாறும் போது மனிதர்களின் மனமும் செயல்பாடுகளும் கூட மாறிவிடும் என்றும் சொல்லலாம்.
கீதா
சமீப நாட்களில் Narcos என்ற தொடரைப் பார்த்தேன். போதைப்பொருள்கலாச்சாரம் வளர்ந்த வித்த்தை நன்றாகச் சொல்லிச் செல்கிறது.
நீக்குபுதன் கேள்வி: அமெரிக்காவில் கொலம்பியா மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்டு, சமூகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்கள் ஆரம்பித்து சாதாரண மக்களும் சீரழிவதைக் கண்டு, அதனைத் தயாரித்து அனுப்புபவனை, கடத்தல் தொழிலில் ஈடுபவனைக் கொல்ல, அமெரிக்கச் சட்டத்தின் கீழ் தள்ள ரொம்பப் பாடுபடுகிறார்கள். எனக்கு ஏற்பட்ட சந்தேகம், ஏன் அமெரிக்காவால், தன் மக்களைச் சட்டத்தின்மூலம் கட்டுப்படுத்த முடியவில்லை, முனையவில்லை? இந்தியாவிலும் புகை பிடிப்பது கெடுதல் என்று விளம்பரத்தில் காசு செலவழிப்பவர்கள் குத்கா, புகை தயாரிப்பவர்களை தடுக்க முனைவதில்லை?
இந்த சிச்சன் ரொம்ப படுத்துதுங்க!!! கிச்சன் கிச்சன்ன்னு.....ஹிஹிஹிஹி
பதிலளிநீக்குபேருந்திலேயே டாய்லெட்! நல்ல விஷயம். சுத்தமாகவும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
பேருந்துகள் இப்படி நிறுத்தும் இடங்கள் ஷாப்பிங்க். உணவகங்கள் இதுக்கு எல்லாம் கண்டிப்பாகக் கமிஷன் உண்டு. கமிஷன் என்பதே ஒரு சுற்று வளையம்தானே.
சிச்சன் இட்சா மாதிரிகளைப் பார்த்தால், டக்குனு என் மனதில் தோன்றிய எண்ணம், மனம் ஒவ்வொரு படியாகச் சென்று பக்குவப்பட்டு ஒரு முனைப்படுத்தலை.
கீதா
அங்கெல்லாம் சுத்தத்திற்குக் கேட்பானேன். அதுவும் Travel friendly தேசங்கள் அவை.
நீக்குநீங்கள் எழுதிய கடைசி வரி மிக சூப்பர். நம் கோபுரங்களும் அதைத்தான் சொல்கின்றன என்று எனக்குத் தோன்றும்.
படங்கள் எல்லாம் அட்டகாசம். கைவினைப் பொருட்கள் மனதைக் கவர்கின்றன. ரசித்துப் பார்த்தேன் நெல்லை.
பதிலளிநீக்குஎலும்புக் கூடுகள் - காற்றடைத்த பையடா!
கீதா
காற்று போன பையடா
நீக்குகீதா
எனக்கு சிலவற்றை வாங்க ஆசை. ஆனால் அவை பெரும்பாலும் பழங்குடியினரின் கைவேலைப் பாடுகள். அதனால் வாங்கவில்லை
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ப்ரார்த்தனைக்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம்.
நீக்குசாதாரணமாக டார்டில்லா வும் சல்சாவும் எல்லா உணவகங்களிலும் கிடைக்குமே. அவை வெஜ் தானே.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஜெயகுமார் சார். நான் அனேகமா நான் வெஜ்உணவகங்களில் உண்ணுவதில்லை, வெறும் மோராக இருந்தாலும் அருந்தமாட்டேன், விதிவிலக்குகள் உண்டு. அதுவும் தவிர வெஜ் உணவாக இருந்தாலும் பாஸ்தா, மோமோஸ் பானிபூரி போன்ற பலவற்றையும் தொடுவதில்லை. இதனால்பசங்களுக்குத்தான் கஷ்டம். மற்றவர்கள் சாப்பிடுவதில் எனக்குத் தடையில்லை, என்னை வற்புறுத்தக் கூடாது
நீக்குஎங்களது அவுட்லெட் சில்லீஸ். இது மிகப் புகழ் பெற்ற செயின். இங்கு டிபார்ட்மென் பார்ட்டியை எப்போதாவது நடத்துவேன். விலை மிக அதிகம் ஆனால் பணம் கம்பெனிக்குத்தானே திரும்பச் செல்கிறது என்ற ஜஸ்டிபிகேஷன். அங்கு நீங்கள் சொல்வதை மேசையில் வைப்பார்கள். அங்கு இருக்கும் கேக் என்பையனுக்கு மிக மிகப் பிடிக்கும். ஆனால் நான் எதையும் சாப்பிடுவதில்லை.
நீக்குhttps://en.wikipedia.org/wiki/Flour_tortilla
நீக்குhttps://veggiesociety.com/the-best-salsa-recipe/
Jayakumar
அவை சைவம் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் நான் சிலவற்றைத் தவிர நம் நாட்டைச் சேர்ந்தவை அல்லாதவைகளை உண்பதில்லை. இதில் மனைவிக்கும் படங்களுக்கும் குறை
நீக்கு//படங்களுக்கும்// பசங்களுக்கும்... 1. அவர்களைச் சின்ன வயதில் அந்த உணவகங்களுக்கு அழைத்துச் செல்லவில்லை. விலை பற்றிக் கவலைப்படாத நிலையில் அப்போ இருந்தேன். அதுவும் தவிர எனக்கு அங்கெல்லாம் டிஸ்கவுண்ட் உண்டு. 2. இப்போது அவங்க என்னைக் கூப்பிட்டால் நான் செல்வதில்லை. எனக்கு அந்த உணவில் ஆர்வம் இல்லை, அம்மா வருவாள் என்று சொல்லிடுவேன். நான் வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வரும்போது என் அப்பாவை வெளியில் சரவணபவன் போன்ற இடங்களுக்குச் சாப்பிடக் கூப்பிடுவேன். அவரோ, அம்மாவைக் கூட்டிச் செல், நான் வரவில்லை என்று சொல்லிவிடுவார். அது என் நினைவுக்கு இப்போ வருது.
நீக்குவணக்கம் நெல்லைத்தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய ஞாயிறு பதிவும் அருமை. எனக்கும் "கிச்சன் இட்ஸா" என்பது "கிச்சன் இட்லியைத்தான்" நினைவுபடுத்தியது. "கிச்சன் இட்" வரை வந்து விட்டு ஒரு "லி"யை சேர்த்தால் அதுதானே வரும். அதுவும் காலை நேரத்தில், பசியை தூண்டும் பொழுதில்...! இன்று ஆடிக்கிருத்திகை பட்டினியுடன் நாள்முழுவதும் விரதம் இருக்க முடியாயாதெனினும், இப்படி காலையிலேயே பசியை தூண்டும் வார்த்தையை கூறி பதிவை ஆரம்பித்து விட்டீர்களே..!
அனைவருக்கும் ஆடிக்கிருத்தகை நல் வாழ்த்துகள். முருகனின் அருள் வேண்டி பிரார்த்திப்போம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹாஹாஹா... இன்றுதான் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். ஏகாதசி அன்றுதான் காலை 6 மணியிலிருந்தே பசிக்க ஆரம்பித்துவிடும். அதுபோல எனக்கு சில நாட்களில் வெங்காயம் சாப்பிடணுமே என்று தோன்றும். அன்று பார்த்து சாப்பிடக்கூடாத அல்லது செய்யமுடியாத நாளாக இருக்கும்.
நீக்குகந்தனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் வேலவா.
நீக்குஎல்லாம் இன்பமயம்
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜு சார். ரொம்ப நாள் கழித்து உங்களைப் பார்க்கிறேன். ஆமாம் எல்லாம் இன்பமயமாக ஏதேனும் இந்த நிலவுலகில் உண்டா? எல்லாமே துன்பத்தையும் சேர்த்துக்கொண்டல்லவா வருகின்றன
நீக்குசொகுசு பஸ்ஸில் சுற்றுலா அருமை.
பதிலளிநீக்குகலர்கலராக தொப்பிகள் அழகைத்தருகின்றன.
மாயன் முகமூடிகள் நன்றாக உள்ளன.
எலும்புக் கூடுகள் பயத்தை தரவில்லை அழகைத்தருகின்றன.
வருகின்றோம்.....மீண்டும் காண...
வாங்க மாதேவி அவர்கள். தொடர்ந்து வருவதற்கு நன்றி
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன். நலமா?
நீக்குசிச்சன் இட்ஸா பயண படங்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபேருந்தின் தோற்றம் மிக அருமை.
தொப்பிகள், மாயன் முகமூடிகள் மற்றும் கலைப்பொருட்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. மருமகள் அழகான தட்டு வாங்கி தந்தாள்.
உங்கள் மருமகள் எங்கு அழகான தட்டு வாங்கித்தந்தார்? மெக்சிகோவா இல்லை வேறு நாட்டிலிருந்தா?
நீக்கு