பானுமதி வெங்கடேஸ்வரன்:
தேள் கொட்டினால் மாரடைப்பு வராது', 'குளவி கொட்டினால் புற்றுநோய் வராது' என்பது போன்ற குறுஞ்செய்திகளை படிக்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?
# இந்த குறுஞ்செய்தி ஆசிரியர்களது மனப்பாங்கு தெரிந்திருப்பதால் அந்த மாதிரி செய்திகளைக் காணும்போது " ஓ இப்படியும் ஒரு யுக்தி ! " எனும் எண்ணம் தான் எழும். " என்றாலும் , " தேனி கொட்டினால் உடம்புக்கு நல்லது " என்பது போன்ற நம்பிக்கைகள் நம்முள்ளும் இருக்கத் தானே செய்கின்றன !
& என் அம்மா விருச்சிக ராசி. நாகப்பட்டினத்தில் அவரை அடிக்கடி தேள்கள் கொட்டியது உண்டு.
தென்னை மரத்து தேள், உத்திரத்திலிருந்து விழுந்த தேள், விறகுக் கட்டையில் ஒளிந்திருந்த தேள் என்று தேடிப்பிடித்து கொட்டு வாங்குவார். வாழ்க்கையில் குறைந்தபட்சம் 40 தடவைகளாவது தேள் கொட்டு வாங்கியிருப்பார்.
1914 - 2017 = நூற்று மூன்று ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.
யூ டியூபில் கதை வாசிக்கும் பலர் தி.ஜானகிராமன், சுஜாதா, ஆர்.சூடாமணி, கு.ப.ரா போன்றவர்களின் கதைகளைத்தானே மீண்டும் மீண்டும் வாசிக்கிறார்கள். இவர்களைத் தாண்டி எழுத்தாளர்களே இல்லையா?
# பிரபல & நல்ல கதாசிரியரின் படைப்புக்கள் அதிக வரவேற்பைப் பெறுமல்லவா ? இல்லாவிட்டால் " யாரோ எழுதினது " என்று கடந்து போக வாய்ப்பு இருக்குமே.
& நன்றி. கதைகள் படிக்க இப்படி ஒரு வழி இருக்கிறது என்பது இதுவரை எனக்குத் தெரியாது. உங்கள் கேள்வியைப் படித்ததும் யுட்யூப் மூலம், சுஜாதா எழுதிய 'டிக்கெட்' என்ற கதையைப் படித்தேன்.
22 நிமிட ஒளித்துணுக்கு. ( லிங்க்: https://youtu.be/_waoEiuMsF4?si=OEtUP5dZ4dwBj75L)
ஆனால் கேட்க இயலாது என்பதால், படிக்கமட்டும் எடுத்துக்கொண்டேன். எழுத்துகள் நான் படிக்கும் வேகத்திற்கு ஏற்ப இல்லாமல் ரொம்ப மெதுவாக நகர்கிறது.
இப்போ உங்கள் கேள்விக்கு பதில்: பழைய எழுத்தாளர்களின் கதைகளுக்கு காப்புரிமை இருக்காது. ஆனால் சமகால எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு காப்புரிமை இருக்கலாம். அதனால்தான் பழைய எ கதைகள் மட்டும் வெளியாகிறதோ என்று எனக்கு சந்தேகம். மேலும் 5 நட்சத்திர ஹோட்டல் சென்று டிஃபன் சாப்பிடுபவர்கள் ரவா உப்புமா ஆர்டர் செய்வார்களா என்ன!
நெல்லைத்தமிழன்:
ஒரு பத்து இருபது வருடங்களுக்கு முன்னால்கூட நாம் வீட்டு விசேஷங்களை (திருமணம், அறுபது/எண்பது திருமண நாள்) ஆடம்பரமாகக் கொண்டாடவில்லை. அப்போ, பொங்கல், சட்னி, சாம்பார், மெது வடை என்று சிம்பிளாக முடிந்துவிட்டது காலை உணவு. மதிய உணவோ, ஒரு காய், ஒரு கூட்டு/அவியல், வடை-இருந்ததா நினைவில்லை, அப்பளாம், பாயசம் என்று இருந்தது. ஆனால் இப்போதோ காலை உணவு, பூரி, மசால், பொங்கல், இட்லி, வடை, அல்வா, சாம்பார், என்று குறைந்த அளவும், அதிக அளவாக ஏகப்பட்ட வகையறாக்களையும் போடுகிறோம். மதியத்துக்கு கூடுதலாக இரண்டு இனிப்பு, பால் பாயசம், கலந்த சாதம் என்று அதிகமாக்கிக்கொண்டே செல்கிறோம். இது உணவை மதிக்காத நம் மனப்போக்கா இல்லை அகங்காரமா?
# வசதி பெருகி விட்டதாலும், ஊதாரி மனப்பான்மை வளர்ந்து விட்டதாலும், show off (தமிழில் என்ன?) ஆசை மிகுதியாலும் வந்திருக்கிற அநாவசிய ஆடம்பரம்.
= = = = = = =
# எனக்கும் கூட பொருட்களை வீணடிப்பதில் பலமான ஆட்சேபம் (மனத்தளவில்) உண்டு. ஆனால் தற்காலத்தில் இது எடுபடாத நடவடிக்கை.
& இது புதன் கேள்வியா அல்லது படமும் பதமும் தகவலா என்று கொஞ்சம் குழப்பம் வந்தது. கடைசி மூன்று வார்த்தைகள் இல்லை என்றால் படமும் பதமும் என்று நினைத்திருப்பேன்.
ஒரு இசைக்கச்சேரியில் மைனர் இசைக்கருவிகளான கஞ்சிரா கொன்னக்கோல் போன்றவற்றை வாசிக்கும் கலைஞர்களை மதிக்கிறோமா? மதித்து பாராட்டுகிறோமா?
# உப பக்க வாத்தியங்கள் நம்மைக் கவர்வது ரொம்ப அபூர்வம். திறன் மிக்கவர்கள் மட்டுமே பிரகாசிக்கும் தளம்.
கே. சக்ரபாணி சென்னை
1. திருமண ரிஷப்ஷனில் மாப்பிள்ளை பெண்ணுக்கு. மாலை அணிவிக்கிறோம் சரி. கையில். பூச்செண்டு கொடுப்பது எதற்காக
# மாலை அணிவிப்பது சரி என்றால் செண்டு கொடுப்பதும் சரியாகத் தானே இருக்க வேண்டும் ? பூச்செண்டு ஆங்கிலேயர் வழி வந்ததாக இருக்கலாம். பூ, செண்டு, எலுமிச்சம்பழம் கொடுக்கப் படும் மரியாதை (அ) கௌரவத்தின் அடையாளம். மிகுந்த செலவில் செண்டு வாங்கிக் கொடுக்கப் படுவதையும் அது அடுத்த நிமிடம் குப்பைக்குப் போவதையும் பார்த்து நான் சலிப்படைவது உண்டு. என்ன செய்வது?
2. எல்லா வார இதழ்களிலும் வரும் ஜோக்குகளில். மற்றும். பட்டிமன்றம் போன்ற பேச்சுக்களிலும். பெண்களை. கிண்டலடித்து வருகிறதே. அதைப்பற்றி.
# மாமியார், மனைவி, மைத்துனி, கணவரின் சகோதரி இவர்களை மட்டமாக சித்திரிப்பது எளிதாகப் பொறுத்துக் கொள்ளப் படுவதால் இருக்கும். இது நமக்குப் பழகி விட்டது.
== = = == = =
படமும், பதமும்!
நெல்லைத்தமிழன் :
1)
வட நாட்டில் பல இடங்களிலும் இந்த மாதிரி எலெக்ட்ரிக் வண்டிகள் உண்டு. அந்த இடத்தில் உள்ள பல கோயில்களுக்குச் செல்ல, ஒருவருக்கு 20-30 ரூபாய் வாங்கிக்கொண்டு, 5 பேர்களை அழைத்துச் செல்வார்கள். நமக்கும் குறைந்த தூரத்தில் இருக்கும் இடங்கள் என்றாலும், நடந்து கால்வலி வராமல் சென்றுவிடலாம். கொஞ்சம் வயதானவர்கள் நடக்கவே தேவையிருக்காது (கோயிலுக்குள் நடந்தாகவேண்டும்). இதுபோன்ற வசதி ஏன் தமிழகக் கோயில்களிலோ இல்லை அருகருகே கோயில்கள் இருக்கும் இடங்களிலோ இல்லை? சுற்றுச் சூழலுக்கும் கேடு கிடையாது. வேலை வாய்ப்பும் அதிகரிக்குமே (அதான் ஆட்டோ இருக்கே என்று சொல்லாதீர்கள். அப்படி சொன்னால் நீங்கள் முன்ன பின்ன ஆட்டோவில் சென்றதில்லை என்று அர்த்தம்)
2)
இப்போதான் திருமண மண்டபத்தில், வளையல் counter (இதைத் தமிழில் எழுதினால் ஜாதிப் பிரச்சனை வந்துவிடப்போகிறது), ஓவியம் வரைந்து தரும் பெண்கள், மருதாணி இட்டுவிடுபவர்கள் என்று பலவித ஏற்பாடுகள் செய்யறாங்களே. அப்படி ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, கொஞ்சம்கூட வெட்கப்படாமல் மருதாணி இட்டுவிடும் இட த்தில் நான் போய் கையை நீட்டினேன். பெண்களுக்கெல்லாம் அழகா இட்டுவிட்டவள், எனக்கு சுமாராகத்தான் இட்டுவிட்டிருந்தாள். பிறகு சில நாட்களிலேயே அழிந்துவிட்டது. நான் பெங்களூர் காந்தி பஜார் பக்கம் என் மனைவியுடன் நடந்துசென்றுகொண்டிருந்தபோது சாலையில் இந்த மாதிரி விதவிதமான டிசைன்களைப் போட்டுவிடும் ஒருவரைப் பார்த்தேன் (தரையில் என்று நினைக்காதீர்கள். ஒரு தட்டியில் ஏகப்பட்ட டிசைன், மருதாணிக்குப்பிகள் ஒரு மேசை முழுவதும் என்று விஸ்தாரமாகவே கடை பரப்பியிருந்தார்). நமக்குத்தான் லஜ்ஜை (ஆமாம் அது வீசை என்ன விலை?) கிடையாதே. கையை நீட்டினேன். ஆண் என்பதால் 50 ரூபாய் போதும் என்று சொல்லி அழகாக இட்டுவிட்டார். என் மனைவி, பொறுமையாகக் காத்திருந்தார். என்ன ஒண்ணு.. இதுவும் சில நாட்களில் மறைந்துவிட்டது. உங்களுக்கு இதுபோன்ற ஆசைகள் உண்டா? (வாசகர்கள் பதில் சொல்லவும்)
3)
துபாய் மால்-உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா வை ஒட்டியுள்ள மாலில் அழகிய குடையகளைவைத்து அமைத்திருக்கும் பந்தல்.
4)
பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி. 1996ல் 5 வயதில் இந்தக் கோயிலுக்கு வந்த யானை, 2022ம் ஆண்டு வரை இருந்தது. நான் 2006க் என் நண்பன் ராஜேந்திரனுடன் இந்தக் கோயிலுக்குச் சென்றேன். அப்போது எடுத்த படம்.
= = = = = = = = =
KGG பக்கம்:
ஸ்ரீராம் பரிந்துரையின்படி Sony Liv தளத்தில் The Hunt web series பார்க்க ஆரம்பித்துள்ளேன்.
கேள்விக்கு பதில் சொன்னவர் எல்டிடிஇஆ அல்லது திக அல்லது திமுக காரரா? கொலையில் மாட்டிய பலர் திக திமுக தொடர்பு உள்ளவர்கள் என்றல்லவா உதாரணத்துடன் படித்திருக்கிறேன் பேரறிவாளன் உட்பட. உண்மையான விபுலிகள் திமுகவை கருணாநிதியை விரும்பாதவர்கள் வெறுத்தவர்கள். அவர்கள் தேர்வு எம்ஜிஆர்.
பதிலளிநீக்குஎம்ஜியார் எல் டி டி இ ஆதரவாளராக இருந்தார்.
நீக்கு1987 அவர் காலமாகும் வரை பெரிய பிரச்சினை இருந்ததில்லை.
பிறகு வந்த ஜெ எல் டி டி இ க்கு ஆதரவாக இல்லை. ராஜீவ்
காந்தியின் ஐ பி கே எஃப் நடவடிக்கை எல் டி டி இ யினரிடம்
கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தேர்தலில் ராஜீவ்
ஜெயிப்பார் என்று தெரிந்ததும் அவரைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்தனர். அப்போது காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த ஜெயும் எல் டி டி இ எதிர்ப்பு நிலையில் இருந்தார். அதனால்தான் எல் டி டி இ அவரையும் தீர்த்துக்கட்ட முடிவெடுத்தனர்.
//1914 - 2017 = நூற்று மூன்று ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்// ஆக தேள் கொட்டுவதில் ஏதோ நன்மை இருக்கிறது போலிருக்கிறது. கர்பிணி பெண்ணை தேள் கொட்டினால், பிறக்கும் குழந்தைக்கு தேள் கொட்டின் பாதிப்பு இருக்காதாம். இது எங்கள் மாமி சொன்ன விஷயம். அவரை கருவுற்றிருந்த பொழுது அவர் அம்மாவை தேள் கொட்டியதாம். அதனால் என் மாமிக்கு தேள் கொட்டினால் வலி இருக்காதாம்.
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குகுடைப் பந்தல் அபாரம்!
பதிலளிநீக்குமணக்குள விநாயகர் கோவில் என்பது தெரிந்தது.
நன்றி.
நீக்குகேள்வி பதில்கள் நன்று.
பதிலளிநீக்குபடமும் பதமும் - படங்களையும் தகவல்களையும் ரசித்தேன்.
The Hunt குறித்த தகவல்கள் சிலவற்றை முகநூலில் பார்த்தேன். வெப் சீரீஸ் பார்க்கும் எண்ணம் இல்லை.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குதிருமண உணவுகள் அன்றைய காலத்துக்கும் இன்றைய காலத்துக்கும் இடையில் நிறைந்த வித்தியாசங்கள். மக்களின் உணவுமாற்றமும் ஆடம்பரமும் காரணமாக அமைகின்றன. முன்பெல்லாம் சாதா ரைஸ்தான்.
பதிலளிநீக்குஇன்று ப்ரை ட்ரைஸ் இல்லாமல் திருமணமா? என்ற நிலை.
மருதாணியை ரசித்தேன்.
தேள் கொட்டினால்....ஐய்யோ...சாமி.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குவிருச்சிக ராசிக்காரர்கள் அவங்க மனசுல அப்படி நினைக்காட்டியும் அவங்க பேசறது மத்தவங்களுக்கு தேள் கொட்டற மாதிரி சுருக்குன்னு இருக்கும் என ஜாதக புத்தகத்தில் படித்திருக்கிறேன் உங்கள் அனுபவம் என்ன?
பதிலளிநீக்குஅப்படி நானும் கேள்விப்பட்டதுண்டு. என் மனைவியும் அதை சொல்வதுண்டு.
நீக்குஎன் அம்மாவும் விருச்சிக ராசிதான். ஹாஹாஹா
நீக்குஎன்னையும் தேள் கொட்டியிருக்கிறது. அது சிறிய தேள். ஆறாவது படித்தபோது அம்மாவுக்கு உதவியாக வீட்டில் துணி தோய்த்தேன். பிளேடு கிழித்த ஃபீலிங். யாரு சட்டைல பிளேடு வச்சிருக்கா எனக் கேட்டபோது அம்மா வந்து பார்ஊஅது சின்னத் தேளைக் காண்பித்தார்
பதிலளிநீக்குஅட ! வலி இல்லையா!
பதிலளிநீக்குநெல்லை இப்போதைய கல்யாணச் சாப்பாடுகள் ஆடம்பரத்தை விடுங்க.... கண்டிப்பாக உடல்நலத்தை ஒரு கை பார்க்கும் உணவுகள். உடல் நலம் மிக முக்கியம் என்பதை எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும்.
பதிலளிநீக்குகீதா
உண்மைதான்
நீக்குபானுக்கா பழைய எழுத்தாளர்களை இப்ப யுட்யூபில் வாசிப்பது போல நமக்கு இன்னும் வயசாகறப்ப இல்லைனா நம் காலத்துக்குப் பிறகு உங்க கதைகளும் வாசிக்கப்படலாம்!!!! இப்ப வாசிக்கப்படும் எழுத்தாளர்களின் வயசைக் கணக்கிட்டா அடுத்து எத்தனை வருஷங்களில் இப்போதைய எழுத்தாளர்களின் கதைகள் வாசிக்கப்படும் என்று கணக்கிட்டுவிடலாம் !!!!! ஹாஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
:)))
நீக்குகுடைப்பந்தல் வெகு அழகு. செம படம்.
பதிலளிநீக்குஎலக்ட்ரிக் ஆட்டோக்கள் வந்தால் ரொம்ப நல்லது.
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு