10.7.25

ராஜீவ் காந்தியும், சிவராசனும் பின்னே சில மர்மங்களும்...

 

சுஜாதா இன்னும் சில சிந்தனைகள் என்கிற புத்தகத்தில் 1-5-2005 இல் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.

*****
"ரெட்ஹெட் இந்தியாவின் பொறுப்பாளரான ஜாவேத் தாப்பியா
வெளியிட, முதல் சிடிக்களை நான் பெற்றுக்கொண்டேன். இந்த
மென்பொருளை அதிகம் கம்ப்யூட்டர் பரிபாஷையைப் பயன்படுத்தாமல், பயங்காட்டாமல் எளிய முறையில் அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களுக்கு விளக்கினேன். நான் பேசியதின் சாரம் இது.
ரெட்ஹேட் என்பது லினக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் செயலாக்க மென்பொருளின் ஒரு வடிவம். பிரபலமான வடிவம். லினக்ஸ் என்பது 'மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்' போல, அதே வசதிகளைக் கொண்டது. அதற்கு பணம் கொடுக்கவேண்டும்; இதற்கு பணம் கொடுக்க வேண்டாம். சாமர்த்தியமுள்ளவர்கள் யார் வேண்டுமானா லும், குற்ற உணர்ச்சியில்லாமல் நெட்டிலிருந்தோ, தகடாகவோ பெறலாம். இந்த இலவச இயக்கத்துக்கு பெயர் 'ஓப்பன் சோர்ஸ். சோர்ஸ் என்பது இந்த மென்பொருளின் உள்ரகசியங்கள்; வடிவமைப்புக் கட்டளைகள். இவை அனைத்தும் நமக்கு கிடைக்கும். விஷயம் தெரிந்தவர்கள் அதை மாற்றவும் செய்யலாம். மாற்றினால் நீங்கள் செய்ய வேண்டியது, ஒன்றே ஒன்று. அந்த மாற்றத்தை உலகுக்கு அறிவிக்கவேண்டும். நீங்கள் பெற்ற இன்ப துன்பங்களை மற்றவர்களுடன் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். இதுதான் ஓப்பன் சோர்ஸின் தாரக மந்திரம். ஆனால் உலகத்தில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. சாவு உட்பட! இந்த சோர்ஸ் கோடு கட்டளைகளை வைத்துக்கொண்டு விஷயம் தெரியாவிட்டால் எதுவும் செய்ய முடியாது. தலைகால் புரியாது. ரெட்ஹெட் போன்ற நிறுவனங்களின் தயவை நாட வேண்டும். இந்த கைத்தாங்கலில்தான் அவர்கள் பலரும் பிழைப்பு நடத்துகிறார்கள்.
அன்று வெளியிட்ட மென்பொருளில் இருப்பது என்ன என்ன, எவைகளைத் தமிழில் பயன்படுத்தலாம் என்பதைச் சொன்னேன்."
இதற்கு மேலும் அவர் எழுதியுள்ளார்.
2012 இல் என்னுடைய அலுவலகத்தில் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இந்த லினக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் தான் வழங்கப்பட்டது.
2004 இல் இருந்து நான் கணினி உபயோகிப்பவனாக இருந்தாலும், விண்டோஸில் பழகிய எனக்கு லினக்ஸ் மிகவும் கடினமாக இருந்தது. அவர்கள் சொல்வதை ஏற்று வேலை செய்ய பழகிக் கொண்டாலும், நான் என்னுடைய கணினியில் எதற்கும் இருக்கட்டும் என்று விண்டோஸும் போட்டு வைத்திருந்தேன்.
லினக்ஸில் ஒவ்வொன்றையும் ஏதோ மவுண்ட் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள். எனக்கு தெரிந்து அல்லது அப்போதே Karthik Lakshmi Narasimhan இந்த ரெட் ஹார்ட் லினக்ஸ் பற்றி சிலாகித்து சொல்லிக் கொண்டிருப்பார். எளிமையாக இருக்கிறது, பணம் கட்ட வேண்டாம் என்ற வகையில் உபயோகிக்க நல்லது என்பார். இப்போதும் அவர் இதைத்தான் உபயோகிக்கிறாரா என்று எனக்கு தெரியாது. எனக்கு லினக்ஸ் வேப்பங்காயாக இருந்தது. ஆனால் அலுவலகத்தில் மெக்கானிகலாக, மொட்டை மனப்பாடமாக இதை உபயோகிக்க கற்றுக் கொண்டு வேலை செய்து வவந்தேன்.
அதே கட்டுரையின் கடைசியில் தமிழன்னை பற்றியும் சுஜாதா எழுதி இருக்கிறார். அதற்கு முந்தைய கட்டுரையிலும் கூட தமிழன்னை பற்றியும் தமிழக கட்சிகள் பற்றியும் சில வார்த்தைகள் எழுதி இருக்கிறார். இருந்தாலும் அவர் தமிழன்னை பற்றி எழுதியிருப்பதை கீழே தருகிறேன்

*****
"இன்றைய நிலையில் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவர் கணிப் பொறியின் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்தும்படியான சூழ்நிலை உருவாகியுள்ளது ஆரோக்கியமானதே. இந்த தருணத்தில் தமிழில் உள்ள குழப்பங்கள் பற்றியும் குறிப்பிட்டேன். நான் முன்பு சொன்னது போல் ஒவ்வொரு அரசும் அரசியல் கட்சியும் தமிழைக் காப்பாற்ற கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதே. இருப்பினும் நான் மட்டும்தான் காப்பாற்றுவேன் என்று மைய அரசு சொல்லி இலவச சிடி தருகிறது. அதைப் பிடுங்கி, 'நீ யார் தமிழைக் காப்பாற்ற? நான்தான் காப்பாற்றுவேன்' என்கிறது மாநில அரசு. அவர்கள் காப்பாற்றியதெல்லாம் தப்பான காப்பாற்றல் என்று அடித்துச் சொல்லும் வெளிநாட்டு என்.ஆர்.ஐ. தமிழர்கள். ஈழத்தமிழர்கள், 'இவர்களுக்கென்ன தெரியும், நாங்கள் காப்பாற்றுகிறோம், வா தமிழணங்கே' என்று கையைப் பிடித்து இழுக்க... விளைவு -அந்த அழகான பெண்மணி கலங்கிப் போயிருக்கிறாள். நான் சொல்வதில் மிகையில்லை...."

******""
தமிழன்னை இன்னமும் நட்டாற்றில் தான் இருக்கிறாள் போல!
எல்லோரும் இன்னமும் நான் தான் தமிழை காப்பாற்றுவேன், நான்தான் தமிழை காப்பாற்றுகிறேன் என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
யாராவது காப்பாற்றுவார்கள் என்று தமிழன்னையும் இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறார் போல ஒரு காட்சி.
ஆனால் தமிழன்னைக்கு இதெல்லாம் தேவையில்லை தன்னை காப்பாற்றிக்கொள்ள தமிழன்னைக்கு தெரியும்!

======================================================================


SonyLiv' ல் The Hunt தொடர் பார்த்தேன். ஏழு எபிஸோட்ஸ். ராஜீவ் காந்தி கொலை பற்றிய தொடர்.

எப்போதும் G Pay செய்த உடன் வரும் ரிவார்ட்ஸினால் எனக்குபயனேதும் விளைந்ததில்லை - இதுவரை. இந்த முறை எனக்கு அது Sony Liv OTT ஒரு வருட சந்தா கட்ட குறைந்த தொகை காட்டியது - 650 ரூபாய். சென்ற வருடம் நான் கட்டியிருந்தது முடிந்து போய் சில மாதங்கள் ஆனநிலையில் இது ஒரு நல்ல Offer ஆக தோன்ற, உடனே அதை உபயோகப்படுத்திக் கொண்டேன். அங்கு கட்டணம் 1500 ரூபாய். என்ன பார்க்கலாம் என்று பார்த்தபோது இது அகப்பட்டது.
அப்போது வெளியான திரு ரகோத்தமன் எழுதிய புத்தகம், திரு கார்த்திகேயன் எழுதிய புத்தககம், திருச்சி வேலுச்சாமி எழுதிய புத்தகம் என்று வாங்கி படித்தேன்.
இப்போது சோனியில் இந்த தொடர்பற்றிய அறிவிப்பு பார்த்ததும் ஏதோ புதிதாக சொல்லப் போகிறார்கள் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை என்பதோடு விசாரணைக் குழுவில் ரகோத்தமன், துரை தவிர மொத்தமும் வட நாட்டுக்காரர்களாய் (பெயர் உட்பட) இடம் பெற்றிருந்தார்கள் என்பது போல காட்டுகிறார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ரகோத்தமன் புத்தகத்தை அல்லது கார்த்திகேயன் புத்தகத்தை மறுபடி எடுத்து படிக்க வேண்டும்.
ரகோத்தமன் கேரக்டருக்கு பக்ஸ் என்று அழைக்கப்படும் பகவதி பெருமாளை போட்டிருக்கிறார்கள். அவர் அந்த கேரக்டருக்கு நியாயம் செய்யவில்லை. ஆனால் அவர் என்ன செய்வார்? தயாரிப்பாளர், இயக்குனர் சொல்வதைதானே செய்ய முடியும்?
"ரகோத்தமன்" அந்த வடநாட்டு டீம் மெம்பர்கள் பின்னால் கான்ஸ்டபிள் போல அலைகிறார். கார்த்திகேயன், ராஜீவ், நரசிம்மராவ், சந்திரசேகர் போன்றோர்கள் ஓரளவு உருவ ஒற்றுமை உடையவர்களாய் தெரிந்தெடுத்திருக்கிறார்கள்.
ஒரு இடத்தில கதாநாயகன் போல வரும் வடநாட்டு கேரக்டர் "ரகோத்தமனி"டம் அவர்கள் இருவரும் மது அருந்தும்போது நடந்த சம்பவம் பற்றி ஒரு தமிழனாக உங்கள் அபிப்ராயம் என்ன என்று கேட்கிறார். விசாரணைக்காக அல்ல, அவர் தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன் என்றார். "ரகோத்தமன்" கொஞ்சம் தயங்கி விட்டு ஒரு விசாரணைக்கைதி சொன்னதை திரும்பிச் சொல்கிறார். சிலபேர் பார்வையில் தீவிரவாதியாக இருப்பவர்கள் சிலபேர் பார்வையில் கதாநாயகனாக தெரிவார்கள்" என்கிறார்.
என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை.
கார்த்திகேயனும், தனிப்படை அமைத்த தலைமை அதிகாரியும் பிரதமரை சந்தித்து பேசும்போது நரசிம்மராவ் 'வேறு அர்த்தம்' தொனிக்க பேசுகிறார். அதுமட்டுமல்லாமல், கார்த்திகேயனை அனுப்பிவிட்டு அந்த தலைமை அதிகாரியிடம் "தனியாக" பேசுவதில் ஏதோ இருக்கிறது என்பதுபோல பார்வைப் பரிமாற்றங்கள் இருக்கிறது.
கோடியக்கரை ஷண்முகம் தற்கொலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் அந்த உயர் போலீஸ் அதிகாரி திருட்டுமூழி முழிக்கிறார். மேலிடத்து ஆர்டர் அதனால்தான் விலங்கை அகற்றி ஸ்பெஷல் சாப்பாடு போட்டேன் என்கிறார். யார் அந்த மேலிடம் என்பதை ஊகத்துக்கு விட்டு விடுகிறார்.
சிவராஜனைப் பிடிக்க வரும்போது கார்திகேயனோ, ரகோத்தமனோ புத்தகத்தில் சொல்லாத விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அபப்டி நடந்திருக்குமானால் மிகப்பெரிய பொறுப்பற்ற தன்மை வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள். திரு கார்த்திகேயன் கைப்பாவையா, உடந்தையா என்பது குழப்பம், உண்டாகும்படி அமைத்திருக்கிறார்கள்.
தொடர் முடிந்ததும் எழுத்துகளாக, பிரியங்காவும், வாத்ராவும் நளினியைச் சந்தித்து மன்னித்து விட்டதாகச் சொன்னார்கள் என்று வருகிறது.
தொடரில் நளினி வெளிப்படையாக இந்தியர்களைத் திட்டுகிறார். சிவராஜன் மரணத்துடன் தொடர் முடிந்து விடுகிறது. ஏமாற்றம்.
இன்றும் நிற்கும் பல கேள்விகளுக்கு இந்தத் தொடரில் ஒரு ஊகமாகக் கூட ஒன்றும் சொல்லவில்லை.

=========================================================================

ஜூலை 6 உலக முத்த தினம். எதை மிஸ் செய்கிறேனோ இல்லையோ, இதை மிஸ் செய்வதில்லை! சென்ற வருடம் கூட ஏற்கனவே எழுதியடைதை வைத்துக் கொண்டு ஒப்பேற்றி இருந்த நிலையில் இந்த வருடம் இதற்காக எழுதிய ஒன்றை இங்கு பகிர்கிறேன்!


கண் நிறைந்து மனம் நிறைந்தவளுக்கு
கண்களில் முத்தம்
காதலியாய் நின்றவளுக்கு கனியிதழில் முத்தம்
தொட்டணைத்துக் கொண்டவளுக்கு
தோளில் ஒரு முத்தம்
கைக்குழந்தையாய் கையில் தவழ்பவருக்கு
கன்னத்தில் முத்தம்
மழையில் நனைந்து
தலை துவட்டுபவளுக்கு
(சென்சார்) ஒரு முத்தம்
தொப்புள் குழி கேட்டதொரு
தொன்மையான முத்தம்
இடையிடையே மயக்கம் தீர
இடைகளிலே முத்தம்
வாழைத்தண்டு தொடைகளிலே
மீண்டும் மீண்டும் முத்தம்
கொலுசு சத்த மயக்கத்தில்
பாதத்தில் கொஞ்சி
ஒரு முத்தம்
மஞ்சத்தில் சாய்ந்து அங்கே
மனைவிக்கு தரும் முத்தம்
பிடித்த பொருள்கள் யாவற்றுக்கும்
கிடைத்த இடத்தில் முத்தம்
எத்தனை முத்தம் வேண்டுமடி
எண்ணிக்கொள்
காரணங்கள் கண்டுபிடித்து
கணக்குப் பார்க்காமல்
கணத்துக்கொரு முத்தம்
விலகிப்போகாதே
விகல்பமாய் எண்ணாதே
பல கண்கள் பார்த்தாலும்
கலகம் செய்ய மாட்டார்கள்
உலக முத்த தினமாம் இன்று

================================================================================


=====================================================================================

இந்தப் படம் எதற்காக எடுத்திருக்கிறேன் என்று கண்டு பிடிக்க முடிகிறதா?

==============================================================================

சின்னதும் பெரிசுமாய் அவ்வப்போ FaceBook ல் இப்படி போடுவதுண்டு!

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

அப்போது இந்த செய்தியை வைத்து ஒரு கதை எழுதி இருந்தேன்.









60 கருத்துகள்:


  1. சுஜாதா இன்னும் சில சிந்தனைகள் என்கிற புத்தகத்தில் 1-5-2005 இல் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.
    //2012 இல் என்னுடைய அலுவலகத்தில் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இந்த லினக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் தான் வழங்கப்பட்டது. // ?????
    //2004 இல் இருந்து நான் கணினி உபயோகிப்பவனாக இருந்தாலும், விண்டோஸில் பழகிய எனக்கு லினக்ஸ் மிகவும் கடினமாக இருந்தது. //

    ஆண்டுகள் பற்றி குறிப்பிடுவதில் குழப்பம். 1970களிலேயே கம்ப்யூட்டர் உபயோகித்தவர் சுஜாதா.

    ரெட் ஹார்ட் லினக்ஸ்:: ரெட் ஹேட் தான், ஹார்ட் இல்லை.

    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
    தமிழணங்கே!

    உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

    ​ராஜிவ் காந்தி அரசியல் அனுபவம் இல்லாதவர் என்பதால் அவர் மற்ற பழுத்த அரசியல்வாதிகளின் சூழ்ச்சியில் சிக்கி இறந்தார். உண்மையான அரசியல்வாதியின் சொல்லும் செயலும் பொருந்தாமல் இருக்கும்.... சரிதானே?

    இன்று யாருக்கு முத்தம் கொடுத்தீர்கள், அல்லது யார் முத்தம் கொடுத்தார்கள். கவிதை ஆறாய் ஓடுகிறது. முத்தத்தில் தான் எத்தனை வகை!! கொடுக்கும் இடத்தை பொறுத்து, கொடுக்கும் விதத்தை பொறுத்து, கொடுக்கும் நேரத்தை பொறுத்து என்று பல அர்த்தங்கள், விவரங்கள். அப்பப்பா....

    அப்பாடா இன்று தான் பாஸ் மெச்சிய ஊழியரை கண்டேன், வெங்காய விஷயத்தில்.....

    என்னதான் பொக்கிஷம் ஆனாலும் மதன் ஜோக்குகளுக்கு இணையாகாது. இன்றைய பகிர்வு சுமார் தான்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC Sir...  சுஜாதா பற்றிய பதிவில், கருப்பு எழுத்துகளில் இருப்பது சுஜாதா.  நீல எழுத்துகளில் இருப்பது என் அனுபவம்.

      ரெட்ஹேட் மாற்றுகிறேன்.  டைப் செய்து வரும்போது அதில் ர் சேர்ந்ததை கவனிக்கவில்லை!

      தமிழணங்குக்கு தெரியும் யார் போலி என்று!!!

      ராஜீவ் காந்தி அப்போதைய தேர்தலில் ஒரு மாறுபட்ட தலைவராக இருந்தார் என்று நினைக்கிறேன்.  அதை பல வெளிநாடுகள் ரசிக்கவில்லை.

      முத்தம் கொடுப்பது எழுத்தில் மட்டும்தான்.  நிஜ முத்தங்கள் சலித்து விட்டன!!!

      வெங்காய விஷயம்...  அதில்தான் மெச்சுதல் கிடைக்கிறது!   மதனே அவ்வளவு ஜோக்ஸ் போட்டிருக்க மாட்டார்.  அல்லது நாம் போட்டதையே போட்டுக் கொண்டிருக்க வேண்டும்!

      நன்றி JKC Sir.  

      நீக்கு

    2. வெங்காயம் பெரியார் வாழ்க.!!!!

      // நிஜ முத்தங்கள் சலித்து விட்டன!!!// எனக்கு மட்டும் ரகசியமாக சொல்லுங்கள், யாருக்கு கொடுத்தது சலித்து விட்டது. பேரன்/பேத்தி வந்து விட்டார்களா?

      Jayakumar

      நீக்கு
    3. முத்தம் யாருக்கு கொடுத்து சலித்தது என்று சொல்லவும் வேண்டுமோ!

      நீக்கு
    4. //நிஜ முத்தங்கள் சலித்து விட்டன!!!// ஆஆஆ!! தாம்பத்ய வாழ்வின் மகிழ்ச்சிக்கு "எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்துவிடக்கூடாது, கொஞ்சம் மிச்சம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் வாத்தியார் சொல்லியிருக்கிறாரே? படித்ததில்லையா?

      நீக்கு
    5. கொஞ்சம் இடைவெளி விடலாம் என்றுதான்...  ஹிஹிஹி...  நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா என்று பாடவேண்டியதுதான்!

      நீக்கு
  2. இன்றைய வியாழன் கதம்பம் நன்று.

    கார்த்திகேயன் ரகோத்தமன் புத்தகங்கள் படித்தபோதும் எனக்குக் குழப்பம் ஏற்பட்டது. இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நளினி உட்பட குற்றத்தில் தொடர்புண்டு என நம்புகிறேன் கேமரா கொடுத்த புகைப்படக்காரர் உட்பட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  நீங்கள் சொல்வது உண்மை. 

      ப்ளஸ் வெளியில் சொல்லப்படாத குற்றவாளிகளும் இருந்தார்கள் / இருக்கிறார்கள்  என்பதும் உறுதி.  நம்ப முடியாத ஆட்கள்!  சந்திரா சாமி பற்றி நான் சமீபத்தில் படித்த ஒரு விவரம் திடுக்கிட வைத்தது. 

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம், பிரார்த்தனைகள்.

      நீக்கு
  4. இப்ப மேலோட்டமாக ஸ்க்ரோல் செய்தேன். முதல் இரு பகுதி கொஞ்சம் ஆழ்ந்து வாசிக்க வேண்டும் மற்றவையும்தான்....வருகிறேன்...இது சும்மா உள்ளேன் ஐயா....என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...   அட்டண்டன்ஸ் மார்க் பண்ணிட்டேன்!!  பெர்மிஷன்ல போயிட்டு வாங்க...!!

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. சுஜாதா அவர்களின் கணினி தமிழாக்கத்தை படித்தேன். தாங்கள் எழுதிய தையும் ரசித்தேன். உண்மைதான்..! தமிழன்னை தன்னைத்தானேதான் காத்துக் கொள்ள வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு பற்றிய தொடராக வந்ததா? அறிந்ததில்லை. சம்பவங்களுடன் நீங்கள் அந்த தொடரைப்பற்றி பகிர்ந்ததை படித்தறிந்து கொண்டேன். என்ன இருந்தாலும். அந்த கொடூரத்தை நம்மால் மறக்க இயலாது.

    முத்தங்கள் கவிதை அருமை. நீண்ட நாட்களுககுப் பிறகு அனு வந்து இக்கவிதையை செழிக்க வைத்து விட்டார்.

    வெங்காய புராணமும் அருமை. நீங்கள் சொல்லும் காரணங்கள்ம் உண்மைதான் எனத் தோன்றுகிறது. முன்பு போல் சின்ன வெங்காயம் அமைவதில்லை. முன்பு போல் அதன் வாசனையும் அபாரமும் இல்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜீவ் காந்தி தொடர் OTT யில் வெளியாகியிருக்கிறது..  சொல்லி இருக்கிறேனே...  கவிதையை நசித்ததற்கும் நன்றி.  அனுஷும் நன்றி சொல்லச்சொன்னார்! 

      நீக்கு
  6. சுஜாதாவின் வார்த்தைகளில் அவர் பேசியதை வாசித்தது சுவாரசியம். லினெக்ஸ் பேஜாரு. விண்டோஸிற்குத்தான் என் ஓட்டு. 1994 ல் ஒரு மேசைக்கணினி , கணவருக்குத் தெரிந்த கணினி நுட்பக்காரர் கடை நடத்திவந்தவர், திருவனந்தபுரத்தில்.... அஸ்ஸெம்பிள் செய்து கொடுத்தார். அப்படி வாங்கியது. கணவர் உபயோகிப்பார் லினெக்ஸ் ஆனால் நான் கஷ்டப்பட்டேன் கட்டளைகள் கொடுத்து இயக்குவதில். விண்டோஸ் போட்ட பிறகு சௌகரியமானது. ஆனால் விண்டோஸ் ரொம்ப மெதுவாகத்தான் போட்டோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஆரம்பத்திலிருந்தே திருட்டு ஜன்னல்கள்தான்! ஜன்னல் வழி எளிதாக இருந்தது.

      நீக்கு
    2. ஹாஹாஹா நாங்க போட்டதும் திருட்டு ஜன்னல்தான் அதாவது நாங்க இல்லை போட்டுக் கொடுத்தவர்!!!

      கீதா

      நீக்கு
    3. அவரை நாம் போட்டுக் கொடுக்க முடியாதுல்ல!

      நீக்கு
  7. சுஜாதா சொல்லியிருப்பது போல் தமிழணங்கு இப்பவும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறாள்! பலரிடம் சிக்கி பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறாள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழன்னை தனக்குள் சிரித்துக் கொண்டிருக்கிறாள், இந்த போலி வியாபாரிகளை பார்த்து!

      நீக்கு
  8. சிலபேர் பார்வையில் தீவிரவாதியாக இருப்பவர்கள் சிலபேர் பார்வையில் கதாநாயகனாக தெரிவார்கள்" என்கிறார்.//

    யாரைச் சொல்ல்லும் வசனம் என்று புரிகிறது ஆனால் அந்த இடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பொருத்தமாக இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரைச் சொல்கிறார் என்கிறீர்கள்?

      நீக்கு
    2. இந்தக் கேஸில் யாரை விசாரிச்சாங்களோ அவர்களின் இயக்கத்தின் தலைவன்

      கீதா

      நீக்கு
    3. ஓகே. ஆனால் அவர் சொல்ல வரும் கருத்து புரிகிறதா?!!

      நீக்கு
  9. ராஜீவ்காந்தி கொலையில், வடக்குக் காரர்களும் உண்டுதான் என்றாலும் பெரும்பான்மையா என்பது வியப்பாக இருக்கிறது. ஸ்ரீராம், ஒரு வேளை நீங்க நடிச்சவங்களைச் சொல்றீங்களா?

    SIT தகவல்களில் கூட எனக்கு நம்பிக்கை இல்லை, ஸ்ரீராம். சரியான இன்வெஸ்டிகேஷனாகத் தெரியவில்லை. அதிலிருந்தவர்களுக்கும் ஆபத்து இருந்திருக்கலாம்தானே! கதைகளில் சினிமாக்களில் வரும் ஹீரோக்களா என்ன?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  விசாரணை டீமில் இரண்டுபேர் தவிர மற்ற எல்லோரும் வடக்கு!  அதுதான் புத்தகத்தை மறுபடி படிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

      SIT காரியங்களுக்கு அவர்கள் சுயவிருப்பம் காரணமல்ல!

      நீக்கு
    2. SIT காரியங்களுக்கு அவர்கள் சுயவிருப்பம் காரணமல்ல!//

      யெஸ் அதேதான் . அப்புறம் எதுக்கு இன்வெஸ்டிகேஷன்? சும்மா மக்களை சமாதானப்படுத்துவதற்கஆ? சின்னப்பிள்ளைத்தனமா இருக்குல்ல? குழந்தைகளை ஏமாற்ற செய்வது போல

      கீதா

      நீக்கு
    3. ஆரம்பிக்கும்போது ஜோராகத்தான் ஆரம்பித்திருப்பார்கள்.  இவர்கள் எங்கே கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்கிற அலட்சியம் இருந்திருக்கும்.  கேமிரா மாட்டியதுமே திகிலடைந்திருப்பார்கள்.  மாய்க்கும் படலம் தொடங்கி இருக்கும்.  என்னாலேயே சில பெயர்களை வரசியாக சொல்ல முடியும் என்னும்போது திறமையான அதிகாரிகளுக்குத் தெரியாதா?

      நீக்கு
  10. யம்மாடியோவ் இத்தனை வகை முத்தங்கள்! ஸ்ரீராம், நல்லாருக்கு ரசித்தேன். க்ரூப்பிலும் போட்டிருந்தீங்களே. அது சரி எல்லாமே உணர்வுகளடக்கியவைதானே இல்லை சும்மா ரோபோ மாதிரியானவையா!!!!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ரூப்பில் போட்டிருந்தது இரண்டு வருட பழசு கீதா.   இது புதுசு!

      நீக்கு
  11. எதுக்கு ஸ்ரீராம் ராட்சஸ ப்ரஷ் எல்லாம் நம்ம ஊர்ல ஆட்களா இல்லை? கூலி கொடுக்கத் தயாரானா வரமாட்டாங்களா? அதுதானே நடக்காதுன்னு சொல்றீங்களோ? அதுவும் சரிதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது எப்பவும் செய்வதுதானே?   மாற்றி யோசிக்க வேண்டாமா?  

      நீக்கு
  12. இந்தக் கருத்து போகவே இல்லை அப்ப....

    அனுஷ்கா ரொம்ப நாளைக்கப்புறம் இங்க வந்திருக்காங்களே ஷூட்டிங் இல்லையாமா?

    உங்க கவிதைக்கு என்ன சொன்னாங்களோ?!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுஷ் வருகை உற்சாகத்தை அளிக்கிறது.

      நீக்கு
  13. ஒவ்வொரு கருத்து வரவும் 2, 3 நிமிடங்களிலிருந்து 5-7 நிமிடங்கள் வரை ஆகுது.

    ஸ்ரீராம், அவங்க ரெண்டு பேரும் புத்தகம் வாசிக்கறாங்கன்னு காட்டவா?

    இல்லை ரெண்டு பேருமே சும்மா பேருக்குக் கையில் புத்தகத்தை வைச்சு நடிக்கறாங்கனா? அதிலும் இருவருமே லவ் சீன் நடிப்பு போலத் தெரிகிறது. முதல் படத்தில் காதலனுடன் பொய் விளையாட்டு போல... இரண்டாவது படத்தில் கோபத்தைக் காட்ட அல்லது பேச மாட்டேன் என்று காட்டுவது போல

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்திப் படம் ஆராதனா.  அதன் தமிழ்ப்படம் சிவகாமியின் செல்வன்   அந்த ரயில் பாடல் காட்சியில் இரண்டு மொழிகளிலும் கதாநாயகி கையில் வைத்திருக்கும் புத்தகத்தின் தலைப்பு.

      நீக்கு
  14. நம்ம ரேவதி ஷண்முகம் அவங்க சொன்ன நினைவு - சின்ன வெங்காயம் வாங்கும் போது பெரிசா எடுக்கணும்னும் பெரிய வெங்காயம் வாங்கும் போது சைஸ் கொஞ்சம் சின்னதா பொறுக்கி எடுக்கணும்னும் சொன்ன நினைவு

    ஆமாம் இப்ப சின்ன வெங்காயம் கொஞ்சமல்ல ரொம்பவே பெரிதாகப் பெரிய வெங்காயத்தின் சின்ன சைஸ் போலவே!

    கலப்பு பற்றிச் சொல்லிய உங்கள் வரிகளை ரசித்தேன், ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...   நன்றி கீதா.  சின்ன வெங்காயம் சின்னதா ஆகஆக அதை உரிப்பது சிரமமாகிறது!

      நீக்கு
    2. /சின்ன வெங்காயம் சின்னதா ஆகஆக அதை உரிப்பது சிரமமாகிறது/

      ஆக வாழ்க்கையின் தத்துவமும் அதுதானே..! உரிக்க உரிக்க இறுதியில் ஒன்றுமே இல்லாமல்/காணாமல் போவதும்,.வெங்"காயம்" (காயமே இது பொய்யடா...! இந்த வார்த்தையும் இதிலிருந்தான் துவங்கியிருக்க வேண்டும்.) சின்னதும், பெரிதுமாக பார்க்கும் போதும் மட்டும் ஏதோ இருப்பதைப் போல தோன்றுவதும் நம் அறியாமைதான்.

      நீக்கு
    3. சூப்பர...   ஸூப்பர் அக்கா..   அதுதான் கமலா அக்கா திறமை!

      நீக்கு
  15. ஆனா உங்க படத்துல சிலது நல்லாதான் இருக்கு சின்ன வெங்காயம் சைஸ் சரியாகத்த்தான் இருப்பது போல இருக்கு. எனக்கென்னவோ பெரிய வெங்காய மூட்டைகளும் சின்ன வெங்காய மூட்டைகளும் பிரிச்சுக் கொட்டும் போது கலந்து போயிருக்கும் கடைக்காரங்க பொறுக்கித் தனியாக வைப்பதில் நடந்த குழப்பமாக இருக்கும்னு தோணுது. உங்க படத்த்தைப் பார்க்கறப்ப அப்படித் தோன்றுகிறது

    ஏன்னா இப்ப சின்ன வெங்காயம்/சாம்பார் வெங்காயம் கொஞ்சம் பெரிதாகவும் வருகிறது கடையிலேயே அதைத் தனியாகப் பொறுக்கி, சின்னதாக இருப்பதைத் தனியாக வைத்து விலை வித்தியாசப்படுத்தி விக்கறாங்க. கொஞ்சம் பெரிசா இருக்கறது விலை மற்றதை விடக் கூடுதல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. CTBT அது இது என்று மரபணுவை மாற்றி கழுத்தறுக்கிறார்கள்.

      நீக்கு
  16. அப்போது இந்த செய்தியை வைத்து ஒரு கதை எழுதி இருந்தேன்.//

    யெஸ்.....

    இதையே கொஞ்சம் வேறு வகையில் சமீபத்தில்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை ஏற்கனவே கண்டு பிடித்து விட்டிருந்தீர்களானால், எனக்கு அனுப்புங்களேன்.  மாற்றி வேறொன்று எழுதலாமா என்று பார்க்கிறேன்!

      நீக்கு
  17. ஸ்ரீராம், டெலிஃபோன் ஜோக்.....கொஞ்சம் உங்களின் முதல் டெலிஃபோன் அனுபவம் போல இருக்கோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  18. கடைசி பத்திரிகை ஜோக் கிட்டத்தட்ட இப்ப நடப்பது போல இருக்கு. எல்லாத்தையும் ஃபோட்டோ எடுத்துப் போடுவது போல

    இந்தப்ப்பத்திரிகை ஆசிரியருக்கும் மேட்டரே இல்லை போல! விளம்பரம் தேடிக்க்க....காசு கொடுப்பது போல

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எக்ஸ்....சாக்ட்டா எனக்கும் அதுதான் தோன்றியது!

      நீக்கு
  19. HUNT பார்க்கத் தொடங்கியிருக்கிறேன். நாளை முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன். பக்ஸ் அந்த ரோலுக்கு ஜஸ்டிஃபை செய்யாமல் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. நான் ரகோத்தமன், கார்த்திகேயன் இவர்கள் எழுதிய நூல்களை படிக்காதது காரணமாக இருக்கலாம். அந்த நூல்களின் பெயர்களை சொன்னால் வாங்கி படிக்க சௌகரியமாக இருக்கும். கார்த்திகேயனாக நடித்திருப்பவர் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ஃபாரன்ஸிக் ஆசாமி எப்படி முக்கியமான படத்தை லீக் செய்யலாம்? என்று கோபம் வந்தது. சில புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியாது, அப்படி இந்த சீரீஸை நிறுத்த மனம் இல்லை. குழந்தைகளை சத்தம் போடாதீர்கள் என்று விரட்டினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகம் படிக்கா விட்டால் அந்த ஆர்வம் இருக்கும்.  "ராஜீவ்காந்தி கொலை வழக்கு என்கிற பெயரில்தான் புத்தகம்.  ஒன்று ரகோத்தமன் எழுதியது.  அவர் இப்போது இல்லை.  மறைந்து விட்டார்.  இன்னொன்று கார்த்திகேயன் எழுதியது.  மூன்றாவது சு, சா வை குற்றம் சாட்டி திருச்சி வேலுச்சாமி எழுதியது.

      ரகோத்தமன் புத்தகத்தைப் படித்தால், மற்றும் அவர் ஆளுமை படித்தால் பக்ஸ் எவ்வளவு பொருத்தமில்லை என்று தெரியும்.  மட்டுமல்லாது, ரகோத்தமன் போர்ஷன் என்று எதையுமே காட்டாமல்அவர் அந்த வடநாட்டு விசாரணை அதிகாரிகளின் பின்னாலேயே அலைவது போல காட்டி உள்ளார்கள்.  போதாததற்கு அவர் சொல்வது போல வரும் அந்த வசனம்...

      நீக்கு
    2. தகவல்களுக்கு நன்றி

      நீக்கு
  20. எத்தனையோ நாட்களுக்குப் பிறகு அனுஷ்!(இந்த சுமார் படம்தான் கிடைத்ததா?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைக்கு பொருத்தமாக போட நினைத்ததால்...  பொதுவாக தேடி இருந்தால் இன்னும் சிறப்பான அழகான படம் போட்டிருப்பேன்!

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    /அப்போது இந்த செய்தியை வைத்து ஒரு கதை எழுதி இருந்தேன்./

    எவ்வளவு நெகிழ்வான செய்தி. எத்தனையோ பாஸிடிவ் செய்திகளை சனிதோறும் இங்கு பார்க்கிறோம். எல்லாவற்றையும் தூக்கி அடித்தாற் போன்று கொஞ்சம் கூட சுயநலமின்றி, நேர்மையாக இப்படியும் பணத்தின் மீது ஆசையில்லாமல் இருப்பவர்கள் இருக்கிறார்களா..! என வியக்க வைத்த செய்தி.இவர்களால்தான் இன்னமும் பொய்த்துப் போகாமல் மழையானது "நானும் இருக்கிறேன்" என சொல்லிக் கொண்டு உள்ளது. இதைக் கொண்டு நீங்கள் எழுதிய கதையை ஒரு செவ்வாயன்று பகிருங்களேன். படிக்கலாம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா. செவ்வாயில் பகிர வேண்டிய கதை என்று சில கதைகள் சேர்ந்து கொண்டே போகிறது. பகிரும் போதும் மறந்து போகிறது. வேறு எதையாவது பகிர்ந்து விடுகிறேன்.

      நீக்கு
  22. இன்றைய கனத்த செய்திகளுக்குள் சிக்கிக் கொள்ள இயலவில்லை.. ஆனாலும் ஒன்றே ஒன்று...

    நான்தான் தமிழை காப்பாற்றுகிறேன்
    நான்தான் தமிழை காப்பாற்றுகிறேன்..

    தாங்களாவது தமிழைக் காப்பாற்றுங்கள்

    தமிழ்நாட்டில் க், ச், த், ப் எழுத்துக்கள் காணாமல் போகின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியார் தமிழ் போல இது புதிய தமிழ் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது!!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!