நெல்லைத் தமிழன்:
நோபல் சமாதானப் பரிசு என்பதே தங்களுக்குச் சாதகமான அல்லது விலைக்கு வாங்கப்படும் அல்லது அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படுவது என்பது என் எண்ணம். மேற்கத்தைய அடிமைகளால் வழங்கப்படுவது அல்லது இனவெறி கொண்டவர்களால் வழங்கப்படுவது எனத் தோன்றுகிறது. உங்கள் அபிப்பிராயம் என்ன?
# நோபல் பரிசு, அதுவும் இலக்கியம், சமாதானம் இவற்றுக்கானவை மரியாதையைத் துறந்து நெடுங்காலம் ஆகிவிட்டது என்று எனக்குத் தோன்றும். காரணங்கள் கேட்டால் பதிலளிப்பது கடினம்.
விருச்சிக ராசிக்காரர்கள் அவங்க மனசுல அப்படி நினைக்காட்டியும் அவங்க பேசறது மத்தவங்களுக்கு தேள் கொட்டற மாதிரி சுருக்குன்னு இருக்கும் என ஜாதக புத்தகத்தில் படித்திருக்கிறேன் உங்கள் அனுபவம் என்ன?
# நான் பார்த்தவரை இந்த மாதிரி ஜோஸ்யங்கள் குருட்டாம் போக்காக வீசப் படுபவை.
& என்னுடைய அம்மா விருச்சிக ராசி - அவங்க பேசறது சில சமயத்துல தேள் கொட்டற மாதிரி இருந்ததாக என் மனைவி சொல்லியது உண்டு.
கருங்காலி மாலை பாசிடிவ் எனெர்ஜியை நம்மிடம் சேர்க்கும் (அதனால் என்ன பிரயோசனம் என்பது அடுத்த கேள்வி), ருத்திராட்ச மாலை ரத்த அழுத்தத்தைப் போக்கும் என்பது மாதிரியான கண்டுபிடிப்புகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? உங்கள் சின்ன வயதில், ரஜினியைப் பார்த்து தாமிர வளையலை ஆண்கள் அணிந்ததுபோல முயற்சித்திருக்கிறீர்களா?
# இல்லை. நம்பிக்கை இருந்ததே இல்லை. சில ஆண்டுகள் ஒரு மோதிரம் அணிந்திருந்தது தவிர அணியும் ஒரே அனாவசியம் (?) கருப்புக் கண்ணாடி. (பூணூல் கணக்கில் சேர்க்கவில்லை)
"பழம்பெரும் நடிகை சரோஜாதேவி" என்பதில் பழம்பெரும் என்றால் என்ன அர்த்தம்? வகை தொகை இல்லாமல் எல்லோருக்கும் பழம்பெரும் என்று போட்டுவிடுகிறார்களே!
# அந்தக் காலத்து பெரிய நடிகை என்று அர்த்தம். ஓரளவு பிரபலமாக இருந்தால்தான் போடவேண்டும். தலைப்பு ஆவலைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும் என்று எவரானாலும் பழம் & பெரும் ஆக்கி விடுகிறார்கள்.
"சரோஜாதேவியின் மறைவு திரையுலகுக்கு பேரிழப்பு" என்றெல்லாம் செய்தி வருகிறதே - இப்படித்தான் ஒவ்வொருவர் மறையும்போதும் அவரது மறைவு பேரிழப்பு என்றெல்லாம் கூசாமல் செய்தியில் அடித்துவிடுகிறார்கள். எந்த விதத்தில் பேரிழப்பு, அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் திரைத்துறையில் என்ன என்ன வாய்ப்புகளைக் கொடுத்திருப்பார்கள் என்பதற்கெல்லாம் விளக்கம் ப்ளீஸ்..
# இதெல்லாம் சம்பிரதாயமாக சொல்லும் வார்த்தைகள். பரம விரோதி காலமானால் கூட இதேதான் சொல்வார்கள். இப்போதெல்லாம் " காமராஜர், கக்கன் " என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுகிறார்களே - அதே தலைவர்கள் அரசியலில் தோல்வி கண்டு ஒதுங்கி இருந்த காலத்தில் அவர்களை யாரும் மதிக்கவில்லை.
& சரோஜாதேவி மறைவில் நான் கவனித்த இரண்டு முக்கிய விஷயங்கள் :
அவர் காலமான ஜூலை 14 அன்று அவருடைய வீட்டு கேட் தாண்டி உள்ளே செல்ல ஊடகங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. சில முக்கிய புள்ளிகள், உறவினர்கள் தவிர வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை.
அவர் தன்னுடைய கண்களை ஒரு தனியார் மருத்துவமனை மூலம் தானம் செய்திருந்தார். அவருடைய கண்கள் பார்வை இழந்த இரண்டு சிறுவர்களுக்கு பொருத்தப்படப் போகின்றன. இந்த இரண்டாவது செய்தி என்னை மிகவும் நெகிழ வைத்தது. கண் தெரியாதவர் படும் கஷ்டங்களை அருகில் இருந்து எட்டு வருடங்கள் பார்த்து வருந்தியவன் நான்.
எல்லா மதங்களிலும் (அனேகமாக) ஒரு ஆண், ஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறது (மனைவி உயிரோடு இருக்கும்போதுகூட). ஆனால் ஒரு பெண், ஒரு ஆணுக்கு மேல் திருமணம் செய்துகொள்ளலாம் என்று இல்லை (உடனே திரௌபதியை உதாரணத்துக்குக் கொண்டு வராதீர்கள்). இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றுகிறது?
# ஆண் உடமையாளனாகவும் பெண் அவனது உடைமையாகவும் அந்தக் காலத்தில் பார்க்கப்பட்டார்கள். இந்த மனோபாவம் இன்றும் பெருமளவில் உண்டு.
ஒருவர் பல மோதிரங்கள் வைத்துக் கொள்ளலாம். ஒரு மோதிரத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒரே காலத்தில் அணிய முடியுமோ ? இந்தப் பார்வை தான் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது.
= = = = = = = =
படமும் பதமும்:
நெல்லைத்தமிழன் :
துபாய் லுலு மாலில் (கராமா) ஒரு தடவை நான் மிகப் பெரிய வாழைப்பழங்களைப் பார்த்தேன். அதில் உடைந்திருந்த ஒன்று சுமார் 2 அடிகளுக்கு மேல் இருக்கும். நல்லதாகத் தெரிந்த இரண்டு வாழைப்பழங்களை நான் வாங்கினேன் (40-50 செ.மீ நீளம்). சுவை மிக வளர்ந்த நேந்திரன் வாழைப்பழம்போல ஆனால் இனிப்புச் சுவை சிறிது குறைவாக இருந்தது.
= = = = = = =
2)
நீங்கள் புர்ஜ் கலீஃபா, உலகின் உயரமான கட்டிடத்தைப் படத்தில் பார்த்திருப்பீர்கள். அது கட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது எடுத்த படம்.
= = = = = =
3)
பஹ்ரைன் கடற்கரையின் ஒரு பகுதி. பெரிய ஏரி மாதிரித்தான் தோற்றமளிக்கும். நடந்தே 100 மீட்டருக்கு மேல் போனாலும் பிரச்சனையில்லை. அலையும் இருக்காது.
4)
இந்தப் படம் எங்கே எடுக்கப்பட்டிருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றுகிறது? யோசித்துச் சொல்லுங்களேன்
க்ளூ இல்லாமல் இருந்தால் எப்படி யோசிப்பதாம் என்பவர்களுக்காக கீழே மேலும் இரண்டு படங்கள் கொடுத்திருக்கிறேன்.
பா ஸ்ரீராம் அனுப்பியுள்ள படமும் பதமும் :
எவ்வளவு பெரிய இலை! இது என்ன வகை இலை என்று தெரியவில்லை. மினி டிஃபன் இதில் போட்டு சாப்பிடலாம் போல பெரிய இலை.
KGG பக்கம் :
நான் தொலைக்காட்சித் தொடர்கள் எதுவும் பார்ப்பதில்லை. காதுகள் நன்றாகக் கேட்டுக்கொண்டிருந்த நாட்களிலேயே அப்படித்தான். கேட்கும் திறன் மந்தம் ஆனவுடன் அந்த நிலைக்கு justification கிடைத்துவிட்டது!
இந்த நிலையில், படங்களோ அல்லது நல்ல சீரியல்களோ உபதலைப்புகளுடன் (Subtitles) கிடைப்பது ஒரு வரம்.
அதனால், பிரபல படங்கள் வெளியாகி சில மாதங்கள் அல்லது வாரங்கள் கழித்து Amazon Prime தளத்தில் கிடைக்கும்வரை காத்திருப்பேன்.
ம ர வின் பொ செ பகுதி 1 மற்றும் இரண்டு இவைகளை amazon தளத்தில் பெரிய அளவு எழுத்துரு உப தலைப்புகளுடன் பார்த்து ரசித்தேன்.
பிரித்வி ராஜ் நடித்த Gold மலையாளப் படம் இவற்றை எல்லாம் முன்பு பார்த்தேன்.
சமீபத்தில் பா வெ மேடம் கேட்டிருந்த கேள்வி மூலம் Tourist Family படம் பற்றி தெரியவந்தது. எனவே அந்தப் படத்தைப் பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. பொதுவாக எனக்கு தாடி வைத்திருக்கும் கதாநாயகர்களைக் கண்டாலே பிடிக்காது.
ஆனாலும் இந்தப் படத்தில் சசிகுமார் பாத்திரத்தின் மீது ஒரு பரிவு தோன்றியது.
அதேபோல்தான் என் பார்வையில் யோகி பாபு காமெடி, மொட்டை ராஜேந்திரன் காமெடி எல்லாம் பிடிக்காத வகை. இந்தப் படத்தில் நல்லவேளை யோகி பாபு காமெடி பாத்திரம் கிடையாது; பாசக்கார அண்ணனாக வருகிறார்.
படம் ஆரம்பம் முதல் கடைசி வரை நல்ல விறுவிறுப்பு.
தற்போது பார்த்து வருகின்ற தொ கா தொடர் - Jio Hotstar - தளத்தில், Criminal Justice. ஒவ்வொரு season தொடரிலும் பத்து episodes போல இருக்கின்றன. ஐந்து episodes கடந்தாலே இழுவையாக தோன்றும். ஆனாலும் என்னதான் கதை என்ற ஆர்வத்தில் தொடர்ந்து பார்க்கவேண்டியதாகிறது. கதாநாயகன் / கதாநாயகி இவர்கள் எல்லோரும் ஏன் ஜெயிலில் எப்போது பார்த்தாலும் அசுத்த டாய்லெட் கழுவ அல்லது உபயோகிக்க வேண்டி வருகிறதோ தெரியவில்லை.
எல்லோரும் தாராளமாக F**k, F****r, M****r F****r போன்ற வார்த்தைகளை உதிர்க்கிறார்கள். என்ன கண்றாவிடா இது :((
முதல் episode ல ஒரு ஆபாசக் காட்சி + தொடர்ந்து ஒரு கொலை + கைது செய்யப்பட்டவர் அப்பாவி - அப்போ கொலை செய்தது யார்? ஒரு லாயர் மற்றும் அவரது உதவியாளர், கைது செய்யப்பட்டவரை விடுவிக்க செய்யும் முயற்சிகள் இவை யாவும் Perry Mason type கதையாக இருந்தாலும் Erle Stanley Gardner நாவல்களில் இருந்த decency, சட்ட நுணுக்கங்கள், வாதாடும் திறமைகள் எல்லாமே இந்த criminal justice சீரியலில் கடுகளவும் இல்லை.
= = = = = = = = = = = =
//எல்லோரும் தாராளமாக....//- இன்னைய இளைய தலைமுறையிடம் நான் காண்பது இது. மேற்கத்தையவர்கள் சர்வசாதாரணமாக உபயோகிக்கும் வார்த்தைகளை நம் கலாச்சாரத்தில் உபயோகிக்க ஆரம்பித்தால் நாமும் மேற்கத்தையவர்கள் ஆகிவிட முடியுமா?
பதிலளிநீக்குஇந்த மாதிரி அசட்டுத்தனங்கள் போலி வேடம், அரபிக்களிடையே கிடையாது. அதன் காரணம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதும் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் நாகரீகமான வார்த்தைகள், இறைவனை நினைக்கத்தூண்டும் வார்த்தைகள்.
உண்மைதான்.
நீக்குமெய்யழகன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் அத்தி பூத்ததுபோல, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படங்கள். தமிழ் திரையுலகிலும் இத்தகைய படங்களை யோசிப்பவர்கள் இருக்கிறார்களே என்பது ஆச்சர்யம்தான்.
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள்.
நீக்கு//ஒரு மோதிரத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர்//- இந்த உதாரணம் பொருத்தமானதாகத் தெரியவில்லை. பொதுவாக நம் சமூகம் பெண்ணை, ஆணின் உடமைகளாகப் பார்த்த பார்க்கும் பார்வையினால்தான் என்பது சரிதான். பெண் அப்பாவின் கன்ட்ரோலிலும், பிறகு சகோதரன் கன்ட்ரோலிலும், பிறகு கணவன் கன்ட்ரோலிலும் வருவாள் என்பதையே பழைய ஸ்க்ரிப்டுகள் சொல்கின்றன
பதிலளிநீக்குஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்கமுடியாது என்று சொல்லியிருக்கலாமோ?
நீக்குஅது ஒரு வகையில் உண்மைதான் கேஜிஜி சார். பெண்களுக்கு ஆண்களைவிடத் திறமை அதிகம். அறிவும் அதிலும் நுண்ணறிவு மிக அதிகம். ஆனால் அவங்க முடிவெடுப்பதில் பாசம், இரக்கம், உறவு என்று பலவற்றையும் குழப்பிக்கொண்டு தடுமாறி தவறான முடிவெடுப்பார்கள். ஆண்கள் பெரும்பாலும் பிசினெஸ் மைன்ட்செட் மற்றும் உலக அறிவு உள்ளவங்க. அதனால் குடும்பத்தை நடத்த ஆண்கள்தான் சரியானவங்க என்பது என் கருத்து. தாயொடு அறுசுவை போம், தந்தையொடு கல்விபோம் என்றுதானே சொல்லியிருக்காங்க.
நீக்கு:)))
நீக்கு//ஊடகங்களுக்கு அனுமதி இல்லை//- சூப்பர் விஷயம் இது. அதிலும் யூடியூபர்களை பக்கத்திலேயே சேர்க்கக்கூடாது. பார்வையாளர்களுக்காக எந்தப் பொய்யையும், அவதூறுகளையும் அவிழ்த்துவிடத் தயங்காதவர்கள் அவர்கள். ஒருவன் சொல்றான், ஏர் இந்தியா விபத்துக்கு பைலட்டின் தற்கொலை முயற்சிதான் காரணம் என்று (ஓய்வுபெற்ற பைலட்டாம்).
பதிலளிநீக்குஹூம் நாம் என்ன சொல்வது!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சரணம்
நீக்கு// அசட்டுத் தனங்கள் போலி வேடம், அரபிக்களிடையே கிடையாது. அதன் காரணம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதும் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் நாகரீகமான வார்த்தைகள், இறைவனை நினைக்கத்தூண்டும் வார்த்தைகள்.//
பதிலளிநீக்குஉண்மை உண்மை..
நன்றி.
நீக்குஆனால் அவங்கள்ட உள்ள ஒன்று எனக்கு அந்நியமாகத் தெரியும். அரபி உடையின் மேல் ப்ளேசர் அல்லது கோட் போட்டுக்கொள்வது. மேற்கத்தைய நாடுகள் குளிர் பிரதேசங்கள் (இதுவே பிரிட்டனிலிருந்து உருவானது). அரபு தேசங்கள் பாலைவனப் பகுதிகள். அதனால் ஆபீஸ் மீட்டிங் என்றால் ப்ளேசர் போட்டுக்கொள்வது செயற்கையாக எனக்குத் தெரியும்.
நீக்குஸ்ரீராம் பகிர்ந்திருக்கும் முதல் படம்....அந்த இலையைப் பார்த்தால் ஒன்று கடம்பா மரமாக இருக்கணும் இல்லைனா சாண்டல்பாக்ஸ் மரமாக இருக்கணும் காய் பார்த்தால் சரியாகச் சொல்லிவிடலாம் இரு மரங்களின் இலைகளும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும். கடம்பா மரம் பற்றி எங்கள் தளத்தில் படமும் போட்டு கேட்டு அதன் பின் நான் பெயர் சொல்லியிருந்த நினைவு. அடையார் இந்திராநகர் பகுதியில் இந்த மரம் இருந்தது,
பதிலளிநீக்குகீதா
இலையின் கற்பனை வடிவம் சூப்பர் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குகீதா
நுனி பிளந்திருப்பது அந்த வடிவத்துக்குத் துணை நிற்கிறது!
நீக்குகீதா
கரெக்ட்.
நீக்குகடம்பா என்றே தெரிகிறது ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
நம் புராணங்களில் சொல்லப்படும் மரம்.
நீக்குகீதா
கடம்ப மரம்னுதான் சொல்லியிருக்கிறது. இவங்க என்னவோ கந்தா கடம்பா கதிர்வேலா திரைப்படத்தை மனசுல வச்சிட்டுச் சொல்ற மாதிரின்னா தெரியுது. ரொம்ப ஓடிடில ஆழ்ந்திருப்பாங்களோ?
நீக்குபடத்தைப் பகிர்ந்தால் காயையும் பகிரணும்னு சொல்றாங்களே. நல்லவேளை.. கடல் உள்வாங்கும்போது அல்லது வற்றும்போது உள்ள படமும் பகிரணும்னு கேட்காம்ப் போனாங்களே
ஹாஹாஹாஹா....கடம்ப மரம் தான்....கந்தா கடம்பா!!! கதிர்வேலா....
நீக்குகீதா
படத்தில் உள்ளது மரம் என்று எனக்குத் தோன்றவில்லை.
நீக்குகௌ அண்ணா மரம் இன்னும் மரமாகலை!! இளம் வயதில் இருக்கலாம். ஸ்ரீராம் இலையை மட்டும் க்ளோசப்பில் எடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
நீக்குகீதா
அட! எங்க நெல்லை அண்ணனாக்கும் அது!! ரொம்ப சின்ன பய போல!!!!!! கோட் சூட் எல்லாம் போட்டுக்கிட்டு கெத்தா அட்டென்ஷன்ல நிக்காப்ல! Stand at ease! Attention!
பதிலளிநீக்குகீதா
கொஞ்சம் குண்டா இருந்தால் அண்ணனா? பிறந்த நாளை வைத்துத்தானே வயதைப் பொறுத்து அண்ணன் தம்பி அக்கான்னுலாம் சொல்வாங்க. உருவத்தைப் பார்த்துச் சொன்னால், சிலர் பள்ளிக்கூட ஸ்டூடன்ட் மாதிரி இருப்பாங்க, சிலர் கொஞ்சம் (ஹாஹாஹா) பூசுன மாதிரித் தெரிவாங்க.
நீக்கு:)))
நீக்குகுண்டா இருக்கீங்கன்னு யாருங்க சொன்னது?!!!! நீங்களா நினைச்சுக்கிட்டு டெய்லி வெயிட் பாத்து, 50 கிராம் கூடுதல்னா உடனே வெயிட் போட்டுட்டேன்னு சொல்ற ஆளு நீங்க!!!!!!!!
நீக்குயாருங்கண்ணே அது? ஸ்கூல் ஸ்டூடன்ட்? பூசுன மாதிரின்னு எல்லாம்!!
பிறந்த நாள்னா, 1 பெரிசா அதுக்கு மேலான நம்பர் பெரிசாங்க!!??? உங்க நம்பரைத்தான் சொல்லுகேன்.
கீதா
கோட் சூட் போட்டும் ஒல்லியாத்தானே இருக்காரு. அப்புறம் ஏன் தான் குண்டா இருப்பேன்னு சொன்னாரு! ஸ்ரீராம்கிட்ட!!
பதிலளிநீக்குகௌ அண்ணா என்னான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க.
கீதா
என்கிட்டயா? ஆ.... எப்போ?
நீக்குஆமாங்க...ஸ்ரீராம்...கருத்துக்குப் பதில்....
நீக்குகீதா
// கௌ அண்ணா என்னான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க.// கேட்டுட்டா போச்சு! "என்னா?"
நீக்குஸ்ரீராம், ஞாயிறு பதிவில்....அந்த மெக்சிகோ நீச்சல் குளம் , கடல் படங்கள்....சாப்பாட்டுப் படங்கள்....பதிவிலும் வெயிட் குறைப்பு அது இதுன்னு ஹிஹிஹிஹி...
நீக்குஅவ்வளவு படங்கள் போட்டிருந்த நெல்லை அந்த மெக்சிக்கோ அழகிய மட்டும் போடவே இல்லை! ரிசப்னிஸ்ட் பெண்ணைச் சொல்லலை!
கீதா
சரி... உங்களுக்காக (மெக்சிகோவில் அல்ல) மற்ற இடங்களில் நான் எடுத்த ஒரு சில அழகிகள் படத்தை (நானும் படத்தில் இருப்பேன். பா.வெ. மேடம் அலட்டல் என்று சொல்லிடக்கூடாது என்று அச்சப்படுகிறேன்) ஒரு சில புதனில் வெளியிட அனுப்புகிறேன். நம் சென்சார் இன் சார்ஜ் கேஜிஜி சார் வெளியிட்டால் பாத்துக்கோங்க
நீக்குகத்தரியுடன் காத்திருக்கிறேன்!
நீக்குநாமம் போட்டு கோஷ்டியில் வேஷ்டி, துண்டுடன் செல்லும் நெல்லை எங்கே, கோட் சூட், டையுடன் பட்ஜெட் ப்ரெசன்ட் செய்யபோகின்றவர் போல் காட்சி அளிக்கும் நெல்லை ங்கே. ஆறு வித்தியாசம்???
பதிலளிநீக்குஅதானே!
நீக்குஉண்மையைச் சொல்லணும்னா, ஜெயகுமார் சார்.. வாழ்க்கையில் நாம் பலவித வேஷங்களைப் போடுகிறோம் என்றுதான் தோன்றுகிறது. நான் அனேகமா எப்போதுமே (வெளியில் செல்லும்போதும், வெளிநாட்டில் இருந்தபோதும்) அரை டிரவுசர் டிஷர்ட் தான். ஆபீஸுக்கு தனி வேடம். கோயிலுக்குத் தனி. பெரியவங்களைப் பார்க்கப்போகும்போது அதற்குரிய உடை என்று இருப்பேன்.
நீக்குஇந்தப் படம் எங்கே எடுக்கப்பட்டிருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றுகிறது? யோசித்துச் சொல்லுங்களேன்//
பதிலளிநீக்குஇது நம்ம ஊர் இல்லை கண்டிப்பா. நெல்லை நீங்க இருந்த அரபு பிரதேசம்னுதான் தோணுது. ஓமன் தேசமா? ஏன்னா என் அறிவுக்கு எட்டிய வரையில் அரபு நாடுகளில் ஓமனில் வாழைகளும் தென்னைகளும் இப்படி ரோட் சைட் கடைகளும் இருக்கும்னு வீடியோஸ் பாத்திருக்கேன்.
நாம் போகத்தான் முடியலை...சும்மா வீடியோஸாச்சும் பார்த்து எஞ்சாய் செய்வோம் நாம போறாப்லன்னு நிறைய இடங்கள் இப்படிப் பார்ப்பதுண்டு. அப்படி...
கீதா
//ஓமானில் வாழை, தென்னை, ரோட் சை கடைகளா? நான் பார்த்ததில்லை. சலாலா என்னும் இடத்தில் தென்னை மரங்கள் உண்டு. கேரளா மாதிரி இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் அங்கு கூட வாழை கிடையாது.
நீக்குஹான் சலாலா பெயர் நினைவுக்கு வருது... அங்கு வாழையும் இருப்பதாகத்தான் பார்தேன் பானுக்கா...
நீக்குஇல்லைனா நெல்லை தாய்லாந்தும் போயிடருக்காரே அங்க்ய்ம் கேரளா போ ல இருக்கும்னு கேட்டதுண்டு.
கீதா
பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம் மாத்திரம்தான் கண்டுபிடிப்பாங்க என்று நினைத்தேன். இந்தப் படம் நான் சலாலா சென்றிருந்தபோது எடுத்தது. ஏகப்பட்ட வாழைத் தோப்புகள். அதற்குள் நிறைய வாழைக்குலைகள். அங்கு நின்று கொண்டு படங்கள் எடுத்திருந்தேன். சலாலாவின் அந்த இடத்திற்குச் சென்றால், நிச்சயம் இது கேரளாதான் என்று சொல்லிவிடுவோம்.
நீக்குஎங்க வீட்டு 4 ஜி 5 ஜி எலலம் ரொம்ப சோம்பேறிங்காகிடுச்சு. எம்மாம் டைம் எடுக்குது ஒரு கருத்து வர.....ஹூம்...
பதிலளிநீக்குகீதா
நல்ல வேளை.. ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவைனு பதிவை வெளியிடறதுக்கும் அம்பானியைக் குறை சொல்லாம விட்டால்க, ஜியோவும் சரியில்லைனு.
நீக்குஹாஹாஹாஹா ....நெல்லை, நான் குறை சொல்லணும்னா கோபால் விட்டலைத்தான் சொல்லணும்!!!!
நீக்குஅதை விடுங்க....ஒரு பதிவு போடுவதுன்றது எம்மாம் பெரிய விஷயம் தெரியுமா....அக்கு
என்னால தினமும் எல்லாம் போட முடியாது நெல்லை. எனக்கு எப்ப வசதிப்படுதோ அப்பதான் போடுவேன். நான் எனக்கு அழுத்தம் கொடுத்துக்க விரும்புவதில்லை. பதிவு இல்லைனா என்ன இப்பன்னு போய்டுவேன்.
நான் எழுதினாலும் ஒன்றுதான் எழுதலைனாலும் ஒன்றுதான் ஒரு வித்தியாசமும் இல்லை. நான் என்ன பெரிய எழுதாளினியா!!!!!! ஏதோ சும்மா இருப்பதைப் பகிரலாமேன்னும் இப்படிக் கலாய்ப்புகளை எஞ்சாய் பண்ணலாம்னுதான்...
கீதா
//தலைவர்கள் தோல்வியடைந்தபோது மதித்ததில்லை//- மொரார்ஜி தேசாய்பிரதமர் பதவியை இழந்து மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டிருந்தபோது சோ அவரைச் சந்தித்திருக்கிறார். அப்போ மொரார்ஜி தேசாய் சொன்னாராம், நீ சரியா கணிச்சுத்தான் என்னிடம் சொன்ன. என்னைச் சுற்றி வருபவர்கள், மதிப்பாகப் பேசுபவர்கள் எல்லோரும் நான் பிரதமர் என்பதால்தான் சுற்றுகிறார்கள். பிரதமர் பதவி போச்சுன்னா அவங்க பறந்தோடிவிடுவார்கள்னு சொன்ன. அப்போ நான் அந்தக் கருத்து தவறு என எண்ணினேன். இப்போ யாருமே பக்கத்துல இல்லை என்றாராம்.
பதிலளிநீக்குஆம்!
நீக்கு//நீங்கள் புர்ஜ் கலீஃபா, உலகின் உயரமான கட்டிடத்தைப் படத்தில் பார்த்திருப்பீர்கள்.// garrr! இந்த அலட்டல்தானே வேண்டாம் என்கிறது, நான் அதில் ஏறி பார்த்திருக்கிறேன். வேறு பலரும் பார்த்திருப்பார்கள்.
பதிலளிநீக்கு:)))
நீக்குஅந்த அர்த்தத்தில் எழுதலை. முழுக் கட்டிடத்தைத்தான் பார்த்திருப்பீங்க ஆனால் நான் கட்டும்போது அங்கு பலமுறை போயிருக்கிறேன் என்று.
நீக்கு//இந்த அலட்டல்தானே வேண்டாம் என்கிறது, // எனக்கு இந்த மாதிரி அலட்டுவது இயல்பாகவே பிடிக்காது. காரணம், எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் இறைவன் கொடுத்தது என்று நான் தீவிரமாக நம்புவேன். நான் 9ம் வகுப்பு படித்தபோது இருந்த நிலை என்ன? பதின்ம வயதில் எப்படி இருந்தேன், எப்படிப் படித்தேன். அப்படிப்பட்ட எனக்கும் பெரிய வாய்ப்புகளைக் கொடுத்தது நான் தினமும் வணங்கும் இறைவன். என்னைவிட மிகவும் படித்தவர்கள் திறமையானவர்கள் அடையாத உயரம் அடைந்தேன், ஆனால் என்னைவிட திறமை இல்லாதவர்கள், படிக்காதவர்கள் எங்கோ மிகப் பெரிய உயரத்தில் இருப்பதையும் நான் கண்டிருக்கிறேன். இவையெல்லாமே பூர்வ ஜென்ம வினைப்பயன் என்றே நான் நம்புகிறேன். அதுபோல மிகப் பெரிய இடத்திலிருந்து, பள்ளத்தாக்குக்கும் வந்திருக்கிறேன். என்ன பண்ணுவது? கொடுப்பதும் அவனே எடுப்பதும் அவனே
நீக்குநியாயம்தான். நல்ல கருத்து.
நீக்கு//என்னுடைய அம்மா விருச்சிக ராசி - அவங்க பேசறது சில சமயத்துல தேள் கொட்டற மாதிரி இருந்ததாக என் மனைவி சொல்லியது உண்டு.// உங்க அம்மா எந்த ராசியாக இருந்தாலும் உங்க மனைவிக்கு அவங்க பேசுவது தேள் கொட்டுவது போல்தான் இருந்திருக்கும்., மாமியாராச்சே?
பதிலளிநீக்குஅதானே! :))
நீக்குஇங்கு ஆமணக்குச் செடிகள் ஏராளமாக இருக்கும். ஆனால் யாருக்கும் ஆமணக்கு எண்ணை எடுக்க அதைப் பயன்படுத்தத் தெரியாது போலும் இங்குள்ளவங்களுக்கு. வீணாகப் போய்க்கொண்டிருக்கும். காலி மனைகளில் எல்லாம் இச்செடிகள்தான் அதிகம். தோட்டம் போன்று. நான் கூட நினைத்தேன் தோட்டம் போட்டிருக்காங்க போலன்னு ஆனால் கடைசியில் எல்லாம் வெட்டித் தள்ளப்படும்.
பதிலளிநீக்குகீதா
ஆம், நானும் பார்த்திருக்கிறேன்.
நீக்குகௌ அண்ணா, நான் ஓடிடி யில் இல்லை என்பதால் உங்கள் பகுதி யில் நீங்க சொல்லியிருக்கும் சீரியல் பற்றித் தெரியலை நான் பார்க்கவும் முடியாது.
பதிலளிநீக்குபடங்களும் பார்க்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. Nil என்றும் சொல்லலாம்.
க்ரைம் இன்வெஸ்டிகேஷன் படங்கள் பார்க்கப் பிடிக்கும். வாய்ப்பு கிடைக்கணுமே
கீதா
நம் கம்ப்யூட்டரில் ஜியோ ஹாட் ஸ்டார் இன்ஸ்டால் செய்யலாமே.
நீக்குநோபல் பரிசெல்லாம் முன்ன போல இல்லை, அப்படிப் பார்த்தால் எந்தப் பரிசுமே அப்படித்தான் இப்ப எல்லாம்.
பதிலளிநீக்குகீதா
ஆம். கசப்பான உண்மை.
நீக்குநெல்லை, பஹ்ரைன் கடற்கரைப் படம் சூப்பர்
பதிலளிநீக்குவெளிநாட்டில் விளையும் வாழைப்பழங்கள் நம்ம ஊர் பழம் போல இருக்காது என்பது நான் அறிந்த வரையில். இம்மாம் பெரிசு எல்லாம் கலப்பாக இருக்குமோ? இல்லை பயோடெக்?
கீதா
அதே சந்தேகம்.
நீக்குஎல்லாமே labல் விஞ்ஞானிகள் செய்யும் சித்துவேலை. அந்த பெரிய வாழைப்பழம் ருசியாக இல்லை. நேந்திரம் பழம் மைனஸ் அதன் இனிப்பு. அதுபோல சுண்டுவிரல் அளவு உள்ள வாழைப்பழங்களையும் பார்த்திருக்கிறேன். அதே போன்றது தமிழ்நாடு, பெங்களூரிலும் உண்டு.
நீக்கு
பதிலளிநீக்குபுர்ஜ் கலீஃபா கட்டும் போது எடுத்த படம் அருமை.
பின்பு 2014 என நினைக்கிறேன் சென்று பார்த்திருக்கிறேன்.
பஹ்ரைன் கடற்கரை அருமை.
வாழைப்பழம் மிகவும் பெரியதாக உள்ளது. இது நம்ம நாட்டு" ஆனை வாழைப்பழம் "என்போம் அதை ஒத்ததுபோல் தெரிகிறது.
இலையும் கற்பனையும் அருமை.
அவர்கள் சார்பில் நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.
விருச்சிக ராசியென்றால் தேள் மாதிரி பேச்சால் கொட்டுவார்கள் என்பதெல்லாம் அந்த ராசியின் உருவத்தை வைத்து சொல்வதுதான். எங்கள் அம்மாவும் விருச்சிக ராசிதான். அப்படியெல்லாம் பேசியதில்லை.
நல்ல நடிப்பு திறமையுடன் திரையுலகில் பிரகாசித்த சரோஜா தேவி அவர்கள் தம் விழிகளை தானம் செய்திருப்பது பாராட்டுக்குரிய செயல்.
சகோதரர் ஸ்ரீராம் நெல்லைத்தமிழர் எடுத்த படங்கள் அருமை. புர்ஜ் கலீபா என்ற உயரமான கட்டிடத்தை பார்த்துக் கொண்டேன். அதுபோல் ஸ்ரீராம் சகோதரர் பெரிய இலையில் மீன் படத்தை வரைந்த அழகையும் ரசித்தேன்.
தங்கள் பக்கமும் அருமை. நான் இன்னமும் அந்த படத்தை பார்க்கவில்லை. பார்க்கத் தூண்டுகிறது தங்களின் பக்கம். இன்றைய அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.