அலுவலக அனுபவங்கள்
JKC
Main Building V S S C
(இந்த கட்டிடத்தில் தான் நான் 39 வருடம் பணி புரிந்தேன்.)
நான் திருவனந்தபுரம்
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவன் என்பது உங்களுக்கு
தெரியும். முதன் முதலாக 1970 இல் purchase செக்சனில் comptometer assistant ஆக
சேர்ந்து ஜூனியர் ப்ரோக்ராமர் ஆக கம்ப்யூட்டர் டிவிசனுக்கு மாறுதல் பெற்ற கதையும்,
என்னுடைய முதல் cobol program எப்படி 300 பிழைகள் என்று துப்பப்பட்டது என்ற
கதையையும் முன்பே வாசித்திருப்பீர்கள்.
இன்று, ஒரு இரவு/பகல் வேலை
என்ற நெருக்கடியை சமாளித்த விதம் பற்றி எழுதப்போகிறேன். அதற்கு முன் வேலை செய்த
டிவிஷன் பற்றி சில விவரங்களை தர வேண்டி உள்ளது. அதையும் அறிந்திருந்தால் கதை
விளங்கும்.
கட்டுரை
தங்லீஷில் இருக்கும். தமிழில் கூற வார்த்தை இன்றி தவிக்கின்றேன். மன்னிக்க
வேண்டுகிறேன்.
எங்களிடம்
இருந்த mainframe computer IBM 360. மாடல் 44. மற்ற 360 மாடல்கள் போல் அல்லாத இது
scientific computation சிறப்பாக (floating point operations) செயல் பட உதவும்
மாடல். சாதாரண அக்கௌன்ட் பணிகள் செய்ய முடியாது. ஆனால் emulator வழி decimal
arithmetic செய்யமுடியும். ஆகவே cobol compiler
வாங்கப்பட்டது.
இந்த
கம்ப்யூட்டர் 24/7 என்ற முறையில் ஓய்வில்லாமல் லீவு எடுக்காமல் வேலை செய்து
கொண்டிருக்கும்.
கம்ப்யூட்டர் டிவிசன்
என்பதில் பல செக்சன்கள் உண்டு. அதில் ஒன்று CDP என்ற commercial data processing
section. சுமார் 25 பேர் அடங்கியது, அதில் நான் ஜூனியர் புரோகிராமராக இருந்தேன்.
வேலை வரையறுக்கப்பட்ட நாட்களில் அனுப்பவேண்டிய ரிப்போர்ட்டுகளை பிரிண்ட் செய்து அனுப்பவேண்டியது,
மற்றும் சின்ன சின்ன ப்ரோக்ராம்கள் எழுதுவது. மற்றவர்கள் எழுதிய ப்ரோக்ராம்களை
debug செய்வது போன்றது. மற்ற செக்சன்கள் system (operation and maintenance),
system programming, scientific programming, user assistance & liaision
என்பன. இதில் சிஸ்டம் ப்ரோக்ராம்மிங் ஆட்கள் உச்சாணி கொம்பில் இருப்பார்கள்
Assembler ப்ரோக்ராம் எழுதுபவர்கள்.
1975-80
கால கட்டத்தில் சம்பளத்தில் கட்டாய சேமிப்பு திட்டம் என்ற ஒன்று இருந்தது.
மொரார்ஜி போட்ட ஒன்று, சுப்ரமணியம் போட்ட ஒன்று என்று இரண்டு கட்டாய சேமிப்பு
திட்டங்கள் இருந்தன. இவை சாதாரண pf க்கு மேல் பிடிக்கப்பட்டவை. Pf போன்று தான்.
ஆகவே எல்லோருக்கும் கையில் கிடைக்கும் சம்பளம் மிகவும் குறைவு.
இப்படி
இருக்கும்போது திருவனந்தபுரத்தில் 1978 நவெம்பரில் அடாது மழை பெய்து ரயில்
போக்குவரத்து எல்லாம் துண்டிக்கப்பட்ட நிலை வந்தது. அது போன்று தென் தமிழ்
நாட்டிலும். அப்போது வெள்ள நிவாரணமாக தொழிலாளர்கள் கட்டாய சேமிப்பில் இருந்த
தொகையை தரக்கோரி வேண்டுகோள் விடுத்தனர். மத்திய அரசும் பெருந்தன்மையாக வெள்ளம்
வந்த ஊர்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அவரவர் கணக்கில் உள்ள முதல் கட்டாய
சேமிப்பில் உள்ள தொகையை pf வட்டிவிகிதம் வைத்து வட்டி கணக்காக்கி வரும் தொகையை
விநியோகிக்கலாம், முதல் கட்டாய சேமிப்பு திட்டம் நிறுத்தப்படுகிறது என்று ஒரு ஆணை
பிறப்பித்தனர்.
தொழிலாளர்களை
பற்றித்தான் தெரியுமே. அரியர்ஸுக்காக மட்டுமே வேலை செய்பவர்கள். அவர்களுடைய முக்கால்வாசி
சம்பளம் கடனுக்கும் பிடித்தத்திற்கும் போய்விடும். எல்லோருமே கணக்கை தீர்த்து
பணம் வாங்க விண்ணப்பம் தந்தனர்.
ஆக
இந்த பட்டுவாடாவுக்கு நாள் குறிக்கப்பட்டு அதை செயலாக்க வேண்டிய திட்டம்
தீட்டப்பட்டது. நான் சம்பள பிரிவில் இருந்ததால், என்னுடைய வேலை staff code, மாதம்,
வருடம், பிடிக்கப்பட்ட தொகை என்பனவற்றை தனியே தொகுத்து எடுத்து கொடுக்கவேண்டும்.
Pf போன்ற வைப்புத் தொகைகள் கணக்கு வழக்கு பார்த்துக்கொள்பவர் வேறு ஒருவர். அவர் ஒவ்வொருவருக்கும் லெட்ஜர்
போட்டு, acquittance roll போட்டு அக்கவுண்ட்ஸுக்கு தரவேண்டும். அவர்கள் அதன்
பிரகாரமே தொழிலாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வர்.
குறிக்கப்பட்ட
நாளும் நெருங்கியது. நான் என்னுடைய வேலையை முடித்தேன். எனக்கு சீனியர் ப்ரோக்ராமர்
லெட்ஜர் மற்றும் acquittance roll ப்ரோக்ராமை எழுதி விட்டதாக கூறினார். மறு நாள்
பேமெண்ட்.
அந்த
நேரம் பார்த்து அவர் அவசர தேவை என்று சொல்லி ( மனைவி பிரசவம்) விடுப்பு எடுத்து
சென்று விட்டார். இந்த ப்ரோக்ராம்களை சரி பண்ணி காரியத்தை நிறைவேற்றும் பொறுப்பு
என் தலையில் விழுந்தது.
டெஸ்ட்
என்ற முறையில் கொஞ்சம் பேர்களின் ரிசல்ட் சரியா என்று பார்க்க டெஸ்ட் ரன்
ஓட்டிப்பார்த்தேன். ஆபரேஷன் சக்ஸஸ், ஆனால் பேஷண்ட் டெட் என்ற கதையாய் இருந்தது.
லெட்ஜர் ஓகே. ஆனால் acquittance roll சரியில்லை. பேர் ஒன்று, அமவுண்ட் வேறு ஒன்று
என்று எல்லாம் குளறுபடி. ஒன்றுமே சரியில்லை, புரியவில்லை. அடுத்த நாள் பேமெண்ட்
நடத்த வேண்டும். கம்ப்யூட்டர் பிரிண்ட்அவுட் மட்டும் போறாது. அதற்கப்புறமும் பல
வழிமுறைகளும் உள்ளன. என்ன செய்வது என்று புரியவில்லை.
ஒரு ப்ரோசீஜருக்கு புதிய ப்ரோக்ராம் எழுதுவது சுலபம். ஆனால் வேறு ஒருவர் எழுதிய ப்ரோக்ராமை பிழை திருத்துவது என்பது மஹா பாடு. சில புரோக்ராமர்கள் அதை மேலும் கடினமாக அமைத்திட அனாவசியமாக சில வரிகளை சேர்த்திருப்பார்கள். Documentation என்ற ஒன்று அறவே இருக்காது, இருந்தாலும் பிரயோஜனம் இருக்காது.
IBM 360
நான் 360/44 கம்ப்யூட்டரை பற்றி
முன்பே கூறியிருந்தேன். சாதாரணமாக எப்போதும் ps 44 என்ற os இல் ஓடி கொண்டிருக்கும்.
அந்த os இல் கோபால் ப்ரோக்ராம் ஓட்ட முடியாது. அதற்கு dos என்ற os வேண்டும். ஆக
shutdown செய்து disc எல்லாம் மாற்றி ipl என்ற
boot செய்ய வேண்டும். அதன் பின்னர் emulator என்ற சப்போர்ட் ப்ரோக்ராம் லோட் செய்யவேண்டும்.
அதன் பின்னரே கோபால் ப்ரோக்ராம்களை ரன் செய்யமுடியும். இதற்கு கிட்டத்தட்ட 15 நிமிடங்கள்
ஆகும். வேலையும் அதிகம். ஆக நாளில் ஒரு மணி நேரம் மட்டுமே cdp என்ற commercial
data processing க்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆகவே டெஸ்ட் ரன் எல்லாம் சும்மா சும்மா ஓட்டமுடியாது.
இந்த இடத்தில் பண பட்டுவாடா பற்றி
சில விஷயங்கள் கூற வேண்டி இருக்கிறது. கேஷ் இவ்வளவு வேண்டி வரும், டினாமினேஷன் மற்றும்
தொகை இவ்வளவு வேண்டும் என்று பாங்கில் முதல் நாள் அன்றே அறிவித்து ரெடி ஆக்க வேண்டும்.
அடுத்த நாள் காலை கேஷ் வித்ட்ரா செய்யவேண்டும். மேலும் இத்தவணை தொழிலாளர்களுக்கு கையில்
கிடைக்கும் தொகை சம்பளத்தை காட்டிலும் கூடுதல் என்பதால் தொழிலாளர்களுக்கு எதிர்பார்ப்பு
அதிகம், ஒரு pf withdrawal போன்றது.
எங்கள் கேம்பஸ் பெரிது, 5 km நீளம்.
தொழிலாளர்கள் ஒரே இடத்திற்கு வந்து பணம் வாங்க சிரமம். ஆகவே ஒரு எலெக்சன் போல பட்டுவாடா
நடக்கும். எலக்ஷன் பூத் போல் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு
பட்டுவாடா நடக்கும்.
Aquittance roll இல் இரண்டு காபியில் ஒன்று ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டப்பட்டு கையொப்ப மஸ்டர் ஆக பயன்படும். மற்றோன்று ஸ்லிப்புகளாக வெட்டப்பட்டு பட்டுவாடா கவர்களில் ஒட்டப்படும். கேஷியர் ஸ்லிப்பிற்கேற்ப பணத்தை வைத்து ஒட்டிவிடுவார். கவர்கள் கவுண்டர் வாரியாக பிரிக்கப்பட்டு பெட்டியில் போட்டு டிஸ்பர்ஸ் செய்பவர்களிடம் கொடுக்கப்படும். கேஷ் வேன் எல்லோரையும் அந்த அந்த கவுண்டர்களில் கொண்டு விடும்.
இப்படி வரையறுக்கப்பட்ட முறையில்
நடக்கும் வேலை தாமதமாகும் நிலை.
இரவாயிற்று. நல்ல வேளையாக கேன்டீனில்
சாப்பாடு கிடைத்தது, சாப்பிட்டுவிட்டு மீண்டும் மீண்டும் ப்ரோக்ராமை படித்தாலும் ஒரு
தவறையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் night jobs எனப்படும் நிறைய நேரம்
எடுக்கும் ப்ரொகராம்களை load செய்ய ஆரம்பித்து
விட்டனர். அந்த ப்ரோக்ராம்களை பாதியில் நிறுத்த முடியாது.
இப்படி பல முறை ப்ரோக்ராமை பார்க்கும்போது
ஒரு சந்தேகம் வந்தது. இப்படி பெயர் மாறும் பொது ஏதேனும் ஒரு ஒழுங்குமுறை தோன்றுகிறதா
என்று பார்த்தேன். ஆம். லெட்ஜெரில் இருக்கும் பெயர் சரி. ரோலில் அது அடுத்தவனுடைய பெயர்.
Employee விவரங்கள் தற்போதைய மாஸ்டர்
ரெக்கார்டில் இருந்து பெயர், கவுண்டர் நம்பர் என்பவற்றை எடுக்கவேண்டும். அப்படி எடுத்தால்
தான் கவுண்ட்டர் பிரகாரம் சார்ட் செய்து பிரிண்ட் செய்யமுடியும். இந்த இடத்தில அவர்
பிழை செய்துவிட்டார்.
பிடித்தம் பல ரெகார்டுகள். அவை
employee code பிரகாரம் வரிசையாக வரும். அப்படி வரும் ரெக்கார்டுகளில் employee
code மாறும்போது கிடைத்த மொத்த அமௌன்ட் மற்றும்
கணக்காக்கப்பட்ட வட்டியும் சேர்த்து acquittance லைன் பிரிண்ட் செய்யவேண்டும்.
அப்படி மாறும்போது புதிய
employee code மட்டுமே உள்ளது. Employee code மாறியதை கவனிக்கவில்லை. அதை உபயோகித்து அவர் மாஸ்டர் தகவல் எடுத்திருக்கிறார்.
ஆக சரியான அமௌன்ட் தவறான employee பெயரில் போகிறது. இதைக் கண்டுபிடிக்க எத்தனை பாடு.
தவறைத் திருத்தி டெஸ்ட் செய்தபோது சாம்பிள் ஓகே. பின்னர் ப்ரொடக்சனில் சென்று எல்லா
வேலையும் முடித்தபோது இரவு 12 மணி. நைட் ஷிப்ட் பஸ் போய்விட்டது. இனி காலை 6.30க்கு
தான். இப்படியாக அந்த நாள் ஆபீசில் தங்கும் முதல் இரவாக அமைந்தது.
காலை 6:30 பஸ்ஸில் 7 மணிக்கு வீட்டிற்கு
சென்றால் மனைவி ஒரே தகராறு. ஆஃபிஸில் போன் இருந்தாலும் வீட்டில் போன் இல்லையே. லேட்டா
வருவேன் என்று சொல்லவில்லையே. எப்படியோ குளித்து சாப்பிட்டு மீண்டும் 8:45 பஸ்ஸில்
ஆபிஸ் சென்று எல்லாம் ஒழுங்காக்கி கொடுத்தேன்.
அவ்வாறு கலாம் சார் வலியுறுத்தும், 'mission mode' என்றால் என்ன என்ற படிப்பினை கிடைத்தது. மற்றவருடைய வேலை என்று ஒதுக்கவில்லை.
OT இல்லை என்று தட்டவில்லை. இரவில் வேலை செய்யமாட்டேன் என்று முரண்டு பிடிக்கவில்லை.
“மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்; எவ்வெவர்
தீமையும் மேற்கொள்ளார்; செவ்வி அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்; கருமமே கண்ணாயினார்”
இது போன்று பல சிக்கல்கள், அவற்றை
சமாளித்த விதம் பற்றி அவ்வப்போது எழுதுவேன். Isro culture பற்றி ஒரு அறிமுகம் கிடைத்திருக்கும்
என்று நம்புகிறேன்.
இந்த கட்டுரை தங்லீஷில் அமைந்ததற்கு மன்னிக்கவும். ஆபீஸில் எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுவோம். காரணம் பல மொழி பேசுபவர்கள் இருந்தார்கள். தங்லீஷ் பிடிக்கவில்லை என்றால் கூறவும்.
=============================================================================================
இரு மலர்கள், அவர்கள் படங்களில் இந்த பொம்மை உபயோகபபடுத்தப் பட்டிருப்பது தெரிந்ததே...
அவை போன்ற பொதுக் கூட்டங்களில், மிகப் பெரும் அளவில் கூடிய அன்பர்களுடனும் விசேஷத் தன்மையுடனும் அமைந்தது, சென்ற வாரம் ராஜாஜி மண்டபத்தில் தலைவர் ராஜாஜி அவர்கள் முன்னிலையில், ஆனந்த விகடன் ஆசிரியர் ஸ்ரீ எஸ். எஸ். வாஸன் தலைமையில் நடைபெற்ற கூட்டமாகும்.
சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், உழைக்கும் பத்திக்கையாளர்களால் நிரம்பியிருந்தது. திரளாகப் பொது மக்களை எதிர்பார்த்தே மண்டபத்தில் நாற்காலியெல்லாம் அகற்றி, தரையில் நெருக்கமாக உட்கார வசதிகள் செய்வித்திருந்தார்கள்..
மண்டபம் வெரு விரைவிலேயே நிரம்பிவிட, அன்பர்கள் படிகளிலும் மைதானத்திலும் நின்று பேச்சாளர்களின் உரைகளைக் கேட்டு, மறைந்த அமரருக்கு தங்கள் அஞ்சலியைச் செய்தார்கள்.
தேர்தல் காலத்துக்கு யார் வேண்டுமானாலும் அவர்கள் தாமே தோன்று 378 சுதந்திரம் பெறும் போது ஜனங்களுக்கு மட்டும் உண்டாக்கவும், சொ தேவ உயர்கல் துவைத்துக்கு எற்ற புஷ்பம் பொக்கை மாற்றியமைத்தரிப்பு இயக்கமே கடத்தி தமான வழியிலே சிரிப் தணி மனிதர்கள் எத்தனை கணககான குழந்தை வாழ்க்கையையும் மாற்றிகளும், பெரியோர்களும் கிறார் அவர் பூசசக்தி பெற்றர்கள் எரும், அவருடைய சக்திகஷ்டம் தேசர் இயக்கி அகேகாடைய வாழ்ை இருந்த வேண்டிய அழகை அதன் மாய்க் குளித்து,வாழ்வில் ஆட்டார் இந்த அம் ஏற்பட்டவர்கள் வீரம் பயன் படுத்திக் கள்.மற்றும் பன்னாம் ன்றார். வர்கள், ஓரளவேனும் தவாக பரமஹம்ஸரின் கு
அவருடைய வடைந்திருக்கிர்கள் ஆராய்ச்சி அறிவுடைய ஆயின் பற்றுமாறு வருக்கும் சில சமயம் கட இயல்பேயாகும். யைப் பற்றிச் சந்தேகம்ணத்தை வினக் இருந்தால் உலயில் வதாளுறும், இருக்கின் றன m என்ற
முதலில் அவர் என்குகெ பின்பே எழுறவார். இது இத்தி லார். தாம் களுகப் புரிந்து கொண் போர் திகைக்கும்படி இருக்கும். விஷா? என்று ப எளிமையுடன் கண்ணாடி போன்ற்கு போக விஷயம் விளங்கி வருமே கும். மேலே மேலே படித்துக் கொன் வேண்டிய அவசியம் இன்றி தென்ன காதி, படித்ததைத் திரும்பப் படிக்க தெளிவுடன் எழுதினர். வார்த்ரைன மறந்து, விஷயத்தைக் கண் முன் மாடச் செய்வார். கண்ணாடிப் பெட்டிய இருக்கும் மாம்பழம் போல் களுச்சு தெளிவாகத் தெரியும். அர்த முறைமை எழுத்தாளர்கள் பின்பற்றிப் பழக வேண் டும்.
தம்மை ஸ்ரீ வாஸன் 25 வருடங்களுக்கு முன்பு அணுகி "கல்கி" யைத் தம்மிடம் அனுப்பும்படி விரும்பியதையும் , அவர்கள் இருவரும் சிறந்த அதிபர், சிறந்த ஆசிரியர் என்ற முறை அமைந்த, தமிழ் காட்டிலே பத்திரிகை வளர்ச்சி செய்ததையும் விவரித்தார் ராஜாஜி,
"அவருடைய பிரிவு சங்கீதக்கலைஞர்களுக்குப் பெரு நஷ்டம். சங்கீதம் என்றால் சனங்கள் கவர்ச்சி ஆட்டின. அம்மாதிரி பிடிக்காத எனக்கே அவருடைய விமர்சனம்........ ஓர் எழுத்தாளர் இடைப்பது வெகு துர்லபம் என்ற மேலும் தொடர்ந்து கல்கிக்குச் சென்ற ஞாபகார்த்தம் அவருடைய சொல் மண்டபம் பற்றி, ந\ல்ல எழுத்துக்கு மதிப்புக் கொடுப்பதுதான் " என்றார்.
உணர்ச்சி மிகுந்ததாக இருந்தது ஸ்ரீ எஸ். என். வானை அவர்களுடைய தலைமையுரை. 'கல்கியில் அதிக முதன்மை பெற்றவர்களால் முன்னுக்கு வந்தவன்" என்று கூறி, "ஒரு வேளை அவர் பொதுத் துறைகளில் ஈடுபடாது எழுத்தில் மட்டும் ஈடுபட்டுப் பணி ஆற்றி வந்திருந்தால், இன்னும் பல காலம் வாழ்த்திருப்பாரோ என்று பசித்தவன் பழங் கணக்குப் பார்ப்பது போல் பார்க்கிறேன் " என்றார்.
இந்தக் கூட்டத்தில் அநேகம் பேர் பங்கெடுத்துக் கொண்டு, 'கல்கி' யின் திறமையையும் சேவையையும் பாராட்டிப் பேசினார்கள். . ஸ்ரீமான்கள் ர. பி. சேதுப் பிள்ளை, ராஜா எம்.ஏ. என். எஸ். , முத்தையா செட்டியார். கிருஷ்ணன், காணா சுப்பராவ், இ. னா. ஜகந்நாதன், இ.சந்திரசேகரன், செங்கல்வராயன், ஜி. நாராயணசாமி நாயுடு, சின்ன அண்ணாமலை ம.பொ. சிவஞானம், கிராமணி, என. பாஷ்யம், நாரண துரைக்கண்ணன் ஆகியோர் அவருடைய அருங்குணங்களை எடுத்துச் சொன்னார்கள். ஸ்ரீ டி.கே.உண் முகம் உணர்ச்சி வசப்பட்டு, பேசுவதற்கு இயலாதவராக இருந்தார்.
'கல்கி' அவர்களின் எதிர்பாராத மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தும், அன்னாரது ஆத்மா சாந்தி அடைய வேண்டியும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒரு நிமிஷ மௌனத்துடன் கூட்டம் கலைந்தது.
ராஜாஜி மண்டபத்தில் கூடிய "கல்கி" - மறைவு அனுதாபக் கூட்டத்தில் ஒரு பகுதியினர்
அவர்களது நடனங்களை அண்ணாமலை மன்றத்திலும், கலா மண்டபத்திலும் கண்டு களித்தவர்கள் சில ஸ்வாரஸ்யமான உண்மைகளைக் கண்டிருப்பார்கள்.
முதலாவதாக, சீனர்களிலும் அழகானவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்பதாகும். இரண்டாவதாக, அவர்களுடைய நடனங்களில் சில, பரத நாட்டியத்தில் உள்ள அடவுகளையும் அபிநயங்களையும், வேறு சில, கதக்களியையும் நன்றாக ஞாபகமூட்டுகின் றன.
மூன்றாவதாக, இந்தியர்களைப் போலவே சீனர்களும் புராணக் கதைகளையும்,கிராமியக் கதைகளையும் பெரிதும் விரும்புகிறார்கள் அவர் விரும்புகிறார்கள்; அவற்றை நடனங்களிலும் புகுத்தி யிருக்கிறார்கள். நான்காவதாக, சீனர்கள் தங்களுடைய தென்று நூதனமான வாத்தியங்கள் பலவற்றைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கடைசியாக, சீன கடர்கள் இரு அரசர்களிடை ஏற்பட்ட சண்டையையும், தேவலோகத்தில் ஒரு குரக்கு செய்த அட்டகாசத்தையும் ஆடிக் காட் டி.னார்கள். அடேயப்பா ! மேடை தவிடு பொடியாகிவிட்டதி எத்தனை விதமான சிலம்பச் சண்டைகள், குட்டிக் கர்ணங்கள், தமாஷ்கள், சாகசங்கள் எல்லாம் அந்த ஆட்டத்தில் கலந்திருந்தன தெரியுமா? குரங்கு வேடதாரி, அசல் குாங்கும் கண்டு திகைக்கும்படியான சேஷ்டைகளைச் செய்து, குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தார்.
மொத்தத்தில், சீனக் கலைவாணர்களின் நடனங்கள் கண்யமாகவும், கிழக்கத்திய பாணியிலும் அமைந்திருந்தன. சீனக் கலாசாரமும், ராகரிகமும் இந்தியாவுடையதைப் போலவே வெகு புராதனமானவையாயிற்றே!
சீனக் கலைவாணர்களுக்கு, நமது கலைவாணர்களும் தங்களது நடனத் திறமைகளைக் காட்டினர். கோபிநாத்தின் கதகளி நடனமும், வைஜயந்தி மாலா, லலிதா, பத்மினி, ராகினி, இந்திராணி, நிர்மலா விச்வநாதன் ஆகியோ ரின் நடனங்களும் அவர்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தனவாம்.
வந்திருந்தோர் ஸ்ரீமதி எம். எஸ். சுப்புலக்ஷ்மியின் கானத்தைக் கேட்டுப் பரவசம் அடைந்தனர். பல விருந்துகளை ருசித்து, தாங்களும் சென்னைக் கலைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் நல் விருந்தளித்தார்கள். சென்னை ஒரு கலா நந்தவனம்; கலைக்கு இருப்பிடமே சென்னைதான்' என்று வாயாரப் புகழ்ந்து விட்டுப் போனார்கள் அவர்கள்.
ஊர்வம்பு என்கிற பெயரில் வந்த பகுதியிலிருந்து...










.jpg)











இன்று என்ன திரௌபதி ஒஸ்திராபரணம் மாதிரி படிக்கப் படிக்க பதிவு நீண்டுகொண்டே போயிற்று?
பதிலளிநீக்குவாங்க நெல்லை. அந்த க்ரானிக்கில் பகுதியை துண்டு துண்டாக எடுத்த எடுப்பில் தரமுடியாது என்பதால் இந்தமுறை நீண்டு விட்டது... பார்ப்போம்.
நீக்குநாங்கள் எல்லாம் நீளம் என்பதற்கு அனுமார் வால் என்று சொல்வோம். ஆனால் நீங்கள் வஸ்திராபரணம் மாதிரி என்று உவமை கூறுகிறீர்கள்!! முதல் இரவின் தாக்கமோ?
நீக்குJayakumar
ஹா. ஹா.. ஹா...
நீக்குஜெயகுமார் சாரின் அலுவலக அனுபவங்கள் ரசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்குஎன் அலுவலகத்தில் நிகழ்ந்த பலவற்றை நினைவுபடுத்துகிறது. வேலை என்று வந்துவிட்டால் நேரம் பார்க்க இயலாது. அதிலும் ஃபேக்டரி தொழிலாளர்கள் அல்லது க்ரிட்டிகல் வேலைகள் சம்பந்தப்பற்றவற்றில் நம்முடைய சௌகரியத்தை நினைக்கக்கூட இயலாது.
தமிழில் இவற்றை எழுதினால் புரிந்துகொள்ள முடியாது.
ஆம். சுவாரஸ்யமான அனுபவம். அர்ப்பணிப்பு இல்லாமல் இந்த மாதிரியான வேலைகளை செய்ய முடியாது. எனக்குத் தெரியாது என்றோ, நானும் கவனிக்கவில்லை என்றோ சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். அவர் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை!
நீக்குஎனக்கும் சில அ அ உண்டு. சில முன்பே பகிர்ந்திருக்கிறேன். சில மாமா சொல்லி நான் எழுதியவை!
நேரமில்லை. பிறகுதான் வரணும். கல்கி பகுதி, தொணதொண தொளசிங்கம் பகுதிகள் நன்று. ஆங்கில ஸ்கேன்கள் விஷயம் இருந்தாலும் படிக்க அயர்ச்சி, நிறைய ஆங்கில கட்டிங்குகளைத் தவிர்க்கணும் அல்லது தமிழில் தரணும்.
பதிலளிநீக்குநான் சொன்னது போல இந்த முதல் அறிமுகத்துக்குப்[ பிறகு அவ்வப்போது வரும் அவை, ஒன்றிரண்டுதான் இருக்கும்! தமிழ் படுத்த முடியாது. நன்றாக இருக்காது.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஇப்படியாக அந்த நாள் ஆபீசில் தங்கும் முதல் இரவாக அமைந்தது.//
பதிலளிநீக்குதலைப்புக்கு காரணம் தெரிந்து விட்டது.
அலுவலக அனுபவம் நன்றாக இருக்கிறது.
//7 மணிக்கு வீட்டிற்கு சென்றால் மனைவி ஒரே தகராறு. ஆஃபிஸில் போன் இருந்தாலும் வீட்டில் போன் இல்லையே. லேட்டா வருவேன் என்று சொல்லவில்லையே.//
காலகாலத்துக்கு அலுவலகம் சென்ற கணவன் வீடு திரும்பவில்லை என்றால் பயமாக , கவலையாக இருக்கும்.
அது கோபமாக வெளிபடும் தானே!
ஆமாம். என்னவென்று நினைத்துக் கொள்வார்கள் பாவம்.
நீக்குஒரு நாள் முழுவதும் படிக்க வேண்டிய அளவு விஷயங்கள் பகிர்வு இருக்கு.
பதிலளிநீக்குபேச்சு என்பது பெரும் பேறு! கட்டுரையை ரசித்து படித்தேன்
ஹேமலதா பாலசுப்ரமணியம் - தினமணி 15-07-2005
அப்பா தானே இந்த கட்டுரையை எழுதியவர்கள்?
மற்ற பகிர்வுகளை படித்து கருத்து சொல்ல பின்னர் வருகிறேன்.
ஆமாம். நன்றி கோமதி அக்கா.
நீக்குஇந்த வியாழன் பதிவு... நீ.....ள.....ம்.... அதிகம்! :) ஜேகேசி அவர்களின் அலுவலக அனுபவங்கள் சிறப்பு. பணி என்று வந்துவிட்டால் முடிக்கும் வரை நேரம் பார்க்க முடியாது. இரவு இரண்டு மூன்று என்று பணி புரிந்த அனுபவங்கள் எனக்கும் உண்டு. நானும் எழுதலாம்... அதற்கு நேரம் வர வேண்டும்.
பதிலளிநீக்குமற்றவையும் நன்று.
வாங்க வெங்கட்... பதிவில் பாதி இடத்தை படங்களே பிடித்துக் கொண்டிருக்கின்றன என்பது சோகையான சமாளிப்பு!
நீக்கு/இந்த வியாழன் பதிவு... நீ.....ள.....ம்.... அதிகம்! :) /
நீக்குநாள் குழப்பம் ஒரு விநாடி வந்து போனது.
மெல்ல மெல்ல மாறும்!!!!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஜெ கெ அண்ணாவின் அனுபவம் இப்படியான பணிகளில் உள்ள கஷ்டத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
பதிலளிநீக்குநம்ம வீட்டிலும் இப்படியான அனுபவங்கள் உண்டு. குறிப்பாக ராக்கெட்/சாட்டில்லைட் ப்ராஜெக்ட்ஸ் போகும் சமயங்களில் பல நாட்கள் இரவு அலுவலகத்தில் தங்க வேண்டிய சூழல் நம்ம வீட்டவருக்கு ஏற்பட்டதுண்டு.
கீதா
வாங்க கீதா... வீட்டுக்கு வீடு ஆபீசுக்கு ஆபீஸ் அனுபவம்!
நீக்குஅட! அப்பாவின் கட்டுரை!?
பதிலளிநீக்குசூப்பர்ப்! ரொம்ப அழகான கருத்துகளைச் சொல்லும் கட்டுரை! கொஞ்சம் உளவியலும் அடங்கியிருக்கிறது.
இதைப்பற்றி நிறைய சொல்லலாம்.
ஸ்ரீராம், ஒவ்வொன்றாக வாசித்துவிட்டு வருகிறேன்!!!!!
கீதா
மெதுவா வாங்க... பதிவு நீளம் என்பதால் இன்றைய பொழுது இதற்கே ஓடிவிடுமோ!
நீக்குகல்கி 1930ம் வருடத் தலையங்கம் உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை. கம்யூனிஸ்டு ஆட்சியில் தனிமனித முன்னேற்றம் சுபிட்சம் சாத்தியமல்ல. அங்கும் எல்லாருக்கும் எல்லாமும் இல்லை. வர்க்க பேதம் இருந்தது. சிலருக்கு அதிக சம்பளம் சலுகைகள் என வேறுபாடுகள் இருந்தன. ஆனால் நம் நாட்டில் உழைத்தால் சுபிட்சம் என்ற நிலை. அதனால்தான் முழு கம்யூனிஸ்டு நாடுகள் மார்க்கெட் பொருளாதார முறையைக் கைக்கொள்கிறார்கள்
பதிலளிநீக்குநம்ம ஊரில் கம்யூனிஸ்டுகளே இப்போது கிடையாது. எல்லாருமே ஒரே மாதிரி அரசியல்வியாதிகள்தாம். அகப்பட்டதைச் சுருட்டு, லஞ்சம் வாங்கு, வேலை செய்யாமல் சம்பளம்...
அது தலையங்கம் இல்லை. நாம் வெளியிடும் கதம்பம் போல அது துக்கடா.. ஊர் வம்பு என்கிற பெயரில். கல்கி எழுதிய என்று வரவேண்டும். வந்தது விகடனில்.
நீக்குசீனர்களின் கலைநிகழ்ச்சி தமிழ் நாட்டில் என்றவுடன் இந்த சீன நடனமும் நினைவில் வந்தது. பாருங்கள் இணைப்பை சொடுக்கி
பதிலளிநீக்குபிரிந்தாவனமும் நந்தகுமாரனும் .....
https://www.youtube.com/watch?v=v_-DISFp7MA
ஏற்கனவே பார்த்திருக்கிறேனோ!
நீக்கு