ஒரு வித்தியாசத்திற்கு செய்த உளுந்து சேர்க்காத தோசை. இட்லி அரிசியும் வெந்தயமும் அரைத்து உடன் சுட்ட தோசை.
ஒரு டம்ளர் இட்லி அரிசி ஊற வைக்கப்பட்டது.
ஊறிய அரிசியுடன் சுமார் கால் டம்ளருக்கும் குறைவாக வெந்தயம் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கப்பட்டது.
அரைத்த மாவை சூடான தோசைக்கல்லில் செட் தோசை போல் வார்த்தெடுத்து
பச்சை கார சட்னியுடன்
சூடாக பரிமாறப்பட்டது.
பச்சை சட்னியில் அடங்கிய /அரைத்த பொருட்கள்.
புதினா, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை கொஞ்சம். உப்பு.
கடுகு உளுந்து தாளித்து சட்டினியில் சேர்க்கப்பட்டது.
தோசை பரவாயில்லை. கொஞ்சம் வெந்தய கசப்பு இருந்தாலும் ஓகே. சட்னி கொஞ்சம் சொதப்பி விட்டது. இஞ்சியோ பொட்டுக்கடலையோ ஏதோ ஒன்று சுவையை மாற்றி விட்டது.
========================================================================================
பாஸிட்டிவ் செய்தி :
நேர்மையின் இன்னொரு பெயர் பத்மா
'ஒரு கிராம் திருகாணி வாங்கவே பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும் காலம் இது. ஆனால், தன் கண் முன்னால் 45 பவுன் தங்கம் மின்னியபோதும், அது அடுத்தவர் உழைப்பு என்று ஒதுக்கித் தள்ளிய ஒரு உன்னத மனுஷியைப் பற்றித்தான் ஊரே பேசிக் கொண்டிருக்கிறது!" சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான பத்மா. சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் இவர், தினமும் அதிகாலையில் தெருக்களைத் தூய்மைப்படுத்தும் பணியைச் செய்து வருகிறார். வழக்கம் போல ஒருநாள் தி.நகர் மகாராஜா சந்தானம் தெருவில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது, குப்பை மேட்டிற்குள் ஒரு கவர் கிடப்பதைக் கண்டார்.
தினமலர்






காலை வணக்கம், உணவுப்பிரியர்களே!
பதிலளிநீக்குபசுமைப்புரட்சி!! பச்சைத்தமிழரின் பச்சைமாவு வெந்தய தோசையும் பச்சை சட்னியும் பச்சை மையில் பதிவு!!
"பச்சதான் எனக்குப் பிடிச்ச கலரு" என்று பாட்டே பாடி விடலாம் போலிருக்கே!
நீக்குவாங்க, சூர்யா!
நீக்குஅடுத்தமுறை கொஞ்சம் பச்சை பட்டாணி, பச்சைப்பயறு, பச்சை கர்ப்பூரம் (அட ராமா!) இதுகளையும் சேர்க்கலாமா? யாராவது பச்சை கொடி காட்றாங்களான்னு பார்ப்போம்.
//அடுத்தமுறை கொஞ்சம் பச்சை பட்டாணி, பச்சைப்பயறு, பச்சை கர்ப்பூரம் (அட ராமா!) இதுகளையும் சேர்க்கலாமா? யாராவது பச்சை கொடி காட்றாங்களான்னு பார்ப்போம்.// அன்புடன் ஒரு ஆலோசனை: இது போல தினமும் உருப்படாத கோமாளி கமெண்ட்களை எழுதுகிறவர், தன் பெயரை 'திருவாழிமார்பன்' என்பதற்கு பதிலாக, 'திருவாழத்தான்' என்று மாற்றிக்கொண்டால் பொருத்தமாக இருக்கும்; செய்வாரா?
நீக்குவணக்கம் திரு.
நீக்குபச்சை பயறு தோசை - பெசரட்டு இப்பகுதியில் முன்பே வந்துவிட்டது.
உலுவா என்பது வெந்தயத்தின் பெயர் மலையாளத்தில் ! ஆக தோசையில் உலுவா உண்டு உளுந்து இல்லை.
Jayakumar
உளுந்து சேர்க்காமல் நல்லா வந்ததா? வெந்தய வாசனை தோசைக்கு நல்லா இருக்கும். வெந்தயம் கொஞ்சம் அதிகமா சேர்த்த தோசைக்கு புளிமிளகாய் ரொம்ப நல்லாருக்கும்.
பதிலளிநீக்குஇந்தச் சட்னில இஞ்சி மல்லி புதினா காம்பினேஷன்தான் டவுட்டு
தோசையம்மா தோசை
பதிலளிநீக்குஅரிசி மாவு தோசை
உளுந்தில்லா தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு இரண்டு
எனக்கு மட்டும் ஒன்னு
Jayakumar