இந்தக் கோயிலுக்கு முதல் முறை செல்லக் காரணமாக இருந்தவர் தஞ்சை பெரியகோயிலில் இருந்த guide திரு ராஜா அவர்கள். பிறகு ஒரு முறை (அக்டோபர் 2023) நம் மூத்த பதிவர் துரை செல்வராஜு சாருடன் சென்றிருக்கிறேன். பிறகு சமீபத்தில் ஜனவரி 2025ல் சென்றுவந்தேன். மூன்று முறையும் வழியைக் கேட்டுக்கொண்டே செல்லவேண்டியிருந்தது. முற்காலத்தில் கோயிலுக்கு முன்பு அக்ரஹாரம் இருந்திருக்கலாம். தற்போது இருபுறமும் குடிசைகள்தாம் இருக்கின்றன. அருகிலுள்ள வீட்டில் இருப்பவர் கோயில் சாவியை வைத்திருக்கிறார். அவர்தாம் மூன்று முறையும் கோயிலைத் திறந்து காண்பித்தவர்.
இந்தக் கோவிலுக்கு நிவந்தங்கள் இருந்தன என்பது இராஜராஜ சோழனுக்கு முந்தைய கல்வெட்டுகளில் தெரிகிறது. இது ஒரு பாடல் பெற்ற தலம் என்பதே கோவில் இற்றைக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்பதைச் சொல்லும்.
தாழமங்கை சந்திரமௌலீஸ்வரர் கோயில்
இந்தக் கோயிலுக்கு வரும் வழியில் ‘தாழ மங்கை’ என்றொரு சந்திரமௌலீஸ்வரர் கோயிலைப் பார்த்தோம். உள்ளே செல்லவில்லை.
தஞ்சாவூர் கும்பகோண வழித்தடத்தில் பசுபதிகோயில் என்ற இட த்தைச் சுற்றி சப்த மாதர்களுடன் தொடர்புடைய ஏழு கோயில்கள் உள்ளன. அவையாவன, சக்கரமங்கை (அபிராமி அன்னை), அரிமங்கை (மஹேஸ்வரி), சூலமங்கை (கௌமாரி), நந்திமங்கை (வைஷ்ணவி), பசுமங்கை (வராஹி), தாழமங்கை (மகேந்திரி) மற்றும் நாம் பார்க்கப்போகும் புள்ளமங்கை (சாமுண்டி). இந்த சப்த மாதர் கோயில்கள் எல்லாமே ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழைமையானது என்றால் மிகையல்ல.
புள்ளமங்கை கோயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது இந்தக் கோயிலைக் கண்டோம். பெயரைப் பார்த்ததும் உள்ளே செல்லத் தோன்றியது.
பல்லவர் காலத்திலிருந்து இருக்கும் கோயில் இது. இந்தப் பெயரைப் பார்த்ததும் கோயிலுக்கு உள்ளே சென்றோம். அங்கு சிறிய திருப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. அதனால் முழுமையாக தரிசனம் செய்ய இயலவில்லை. கோயிலில் உள்ள பதாகை, கோயில் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்று சொல்கிறது. இராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டுவதற்கு முன்பே, இங்கு கருவூர் சித்தருடன் வந்து கோயிலில் சந்தனம் அரைத்து இறைவனை வழிபட்டான் என்று சொல்கின்றனர். ஒரு காலத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழமங்கை ஊரே அழிந்தது, மிஞ்சியது இந்தக் கோயில் மாத்திரமே என்று சொல்கின்றனர். சில நேரங்களில் நாம் எதிர்பாராமல் சில கோயில்களில் தரிசனம் கிடைக்கும். தரிசனம் துரை செல்வராஜு சாரினாலும் கிடைத்திருக்கலாம். யாரே அறிவர்?
மிகச் சிறிய கோயில். ஒரு காலத்தில் ஓஹோ என்றிருந்து, காவிரி வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டிருந்திருக்கலாம்.
அங்கிருந்த தகவல் பலகை சொன்னது, இந்தப் பூவுலகில் ஸ்ரீராஜராஜேஸ்வரி என்ற பெயரில் ஆதிபராசக்தி அருளும் கோயில்கள் மிகக் குறைவே. ஆயிரங்கோடி நவராத்திரி பூஜைகள் செவ்வனே நிகழ்ந்தால்தான் ஒரு ராஜராஜேஸ்வரி ஆலயம் நாம் வாழும் பூமியில் தோன்றுமாம். அவ்வகையில் ராஜராஜேஸ்வரி அருள் புரியும் தாழமங்கை தலத்தை தரிசிப்பதே பெரும் புண்ணியம்.
ஸ்ரீராஜராஜேஸ்வரி உடனுறை சந்திரமௌலீஸ்வரர், தாழமங்கை.
ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர், ராஜராஜேஸ்வரி அம்மன் – தாழமங்கை
ராஜராஜேஸ்வரி அம்மனையும் சந்திரமௌலீச்வர ரையும் வணங்கிவிட்டு அடுத்தது நாங்கள் (அந்தச் சமயத்தில்) புள்ளமங்கை கோயிலுக்குச் சென்றோம். இந்தப் பகுதியிலேயே அன்று காலையில் சென்றிருந்த தஞ்சபுரீஸ்வரர் கோயில் படங்களையும் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் கோயில், வெண்ணாற்றங்கரை, தஞ்சை
2023 அக்டோபரில் நான் துரை செல்வராஜு அவர்களை திருக்கண்டியூர் ஹரசாப விமோசனர் ஆலயத்தில் முதல் முறை சந்தித்தேன். அன்று நாங்கள் வெண்ணாற்றங்கரையில் இருக்கும் வைணவ திவ்யதேசமான தஞ்சை மாமணிக் கோயிலை (அது மூன்று வெவ்வேறு கோயில்களாக அமைந்துள்ளது) சேவித்துவிட்டு பிறகு சில பல கோயில்களுக்குச் செல்வதாக எண்ணம். வெண்ணாற்றங்கரை அருகில் செல்லும்போதே முதலில் நாங்கள் குபேரன் வழிபட்ட தலமான ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். இந்தக் கோயிலைக் கண்டதுமே எனக்கு இது சோழர் காலக் கோயில் என்பது தெளிவாக விளங்கியது. இந்தப் பதிவு அந்தக் கோயிலைப் பற்றியது இல்லை என்றாலும், அங்கு நான் எடுத்த சில படங்களை இங்கு பகிர்கிறேன். சோழர் கால சிற்பக் கலையை வெளிப்படுத்துமாறு அவை அமையும்.
தஞ்சபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் மற்றும் கொடிமரம்
பல்வேறு லிங்கத் திருமேனிகள்… மற்ற கோயில்களைச் சார்ந்தவைகளாக இருக்கலாம்.
பஞ்சமுக ஆஞ்சநேயர், வராஹி.
துவாரபாலகர்கள் – சோழர் காலக் கலையின்
வெளிப்பாடு.
ஆனந்தவல்லி அம்மை, மஹாலக்ஷ்மி.
இராஜகோபுரம்
சிறியதாக இருந்தாலும் கோயில் பரந்து விரிந்துள்ளது
கோயிலை பெயிண்ட் அடித்து நவீனப்படுத்தியிருந்தாலும், இந்தக் கோயிலும் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது. சுந்தரர் பாசுரங்கள் பாடியிருப்பதால் இது ஒரு வைப்புத்தலம். தஞ்சை என்ற பெயரே இந்தக் கோவிலின் காரணமாக வந்திருக்கவேண்டும் என்றால், இது முத்தரையர் காலத்திற்கும் முற்பட்ட து என்று திடமாகச் சொல்லலாம். அந்தச் சமயத்தில் இந்த தஞ்சபுரீஸ்வர ர் கோயிலைத் தரிசனம் செய்துவிட்டு, தஞ்சை மாமணிக் கோயில் என்று பிரபந்தங்களில் அழைக்கப்படும் மூன்று கோயில்களையும் தரிசனம் செய்தோம். பிறகு நாங்கள் புள்ளமங்கை கோயிலுக்குச் சென்றோம்.
புள்ளமங்கை-ஆடுதுறையார் கோயிலுக்கு நாங்கள் ஜனவரி 2019, அக்டோபர் 2023 மற்றும் ஜனவரி 2025ல் சென்றிருக்கிறோம்.
புள்ளமங்கை-ஆடுதுறையார் கோயில்
பழங்காலத்தில் இந்தக் கோயில் புள்ளமங்கை என்று வழங்கப்பட்ட து. கழுகுகள் வந்து வணங்கும் தலம் என்பதால் அந்தப் பெயர். ஆலமரம் இந்த த் தலத்தின் விருட்சம் என்பதால் ஆலந்துறை. பிரமன் வழிபட்ட தலம் என்பதால் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர். இந்தக் கோயில் முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது (அதற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த கோயில் என்பது பொருள்). ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது.
இறைவன் திருநாமம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர். இறைவி பெயர்கள் சௌந்தர நாயகி மற்றும் அல்லியங்கோதை.
ஆரம்பகால சோழர் கோயிலான இது கல்வெட்டில் திருஆலந்துறை மஹாதேவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பராந்தக சோழனால் கற்றளியாக மாற்றப்பட்ட இந்தக் கோயில் அதற்கு முன்பு செங்கலால் கட்டப்பட்ட கோயிலாக இருந்திருக்கவேண்டும் (7ம் நூற்றாண்டு)
இந்தக் கோயிலில் கருவறையும், அர்த்த மண்டபமும் மிகவும் பழைமையானவை. இந்தக் கோயில் வெளிப்புறச் சுவற்றில் (தேவகோஷ்டம் என்று குறிப்பிடப்படும்) விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன் மற்றும் துர்கை உருவங்கள் இருக்கின்றன.
இந்தக் கோயிலின் சிறப்பு இங்கு அமைந்துள்ள மிகச் சிறிய அறுபதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள். கோயில் அமைந்த காலத்தில் காணக் கண் போதாத அற்புதக் காட்சியை இந்தச் சிற்பங்கள் தந்திருக்கவேண்டும். காலத்தால் சிறிது மங்கியிருந்தாலும் சிற்பங்கள் இப்போதும் அழகுற அமைந்துள்ளன.
இந்தக் கோயிலின் சிற்பங்கள், கல்கியில் வந்த பொன்னியின் செல்வன் தொடருக்கான ஓவியங்களுக்கு ஆதர்சமாக அமைந்திருந்தது என்று எங்கோ படித்த நினைவு.
கோயில் என்பது என்ன? ஏன் அரசர்கள் கோயில்களைக் கட்டினார்கள்? ஒரு நிலத்தை வென்றவுடன், அரசர்கள் மக்களின் மனதை வெல்லவும், தங்களின் ஆதிக்கத்தை ஏற்கவும் கோயில்கள் கட்டுவது மரபு. இந்தக் கோயில்கள் மக்களின் சமய நம்பிக்கைப்படியும் அரசனின் சமய நம்பிக்கைப்படியும் அமைந்திருக்கும். இதைத் தவிர இந்தக் கோயில்கள் அரசு அலுவலகமாகவும் செயல்பட்டன. ஊர் நடைமுறை, இறையிலி நிலங்கள், நிவந்தங்கள் போன்றவற்றையும் அரசு நடைமுறைகளையும் கல்வெட்டுகளாக வெட்டி ஆவணப்படுத்தும் இடங்களாகவும் அவை செயல்பட்டன.
திருக்கோயில் இல்லாத
திருவில் ஊரும்
திருவெண்ணீறு அணியாத
திருவில் ஊரும்
பருக்கு கோடிப்
பத்திமையால் பாடா ஊரும்
பாங்கினோடு பல தளிகள்
இல்லா ஊரும்
விருப்போடு வெண் சங்கம்
ஊதா ஊரும்
விதானமும் வெண் கொடியும்
இல்லா ஊரும்
அருப்போடு மலர்
பறித்திட்டு உண்ணா ஊரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே
திருநாவுகரசர் அருளிய இந்தப் பாசுரம், (தேவாரம், தனி திருத்தாண்டகம், ஆறாம் திருமுறை) கோயில் என்பது ஒரு ஊருக்கு எவ்வளவு இன்றியமையாதது, பக்தி வாழ்வின் நெறி என்பதையெல்லாம் உணர்த்துகிறது. இங்கு வெண்ணீறு என்று சொல்லியிருப்பதால் சிவன் கோயிலைக் குறிப்பிட்டிருந்தாலும் எந்தக் கோயிலுக்கும் இது பொருத்தமான பாசுரம்தான்.
திருவில் ஊர்- திரு இல் ஊர் – லக்ஷ்மி கடாக்ஷம் இல்லத ஊர், நன்மை இல்லாத ஊர் என்று பொருள் கொள்ளலாம். பருக்கு கோடி – வளர்ந்து பருத்துள்ள உடம்பை வளைத்து பக்தியால் இறைவன் நாமத்தைப் பாடாத ஊர். பல தளிகள்-கோயில்கள் இல்லாத, மலர்ந்த மலரைப் பறிப்பதைக் காட்டிலு, அரும்பாக உள்ள (அருப்பு) மலரைப் பறித்து இறைவனுக்கு அர்ப்பணிக்கவேண்டும். காடு என்றாலே அது நாடல்ல, விலங்குகள் வாழும் இடம் என்பது புரியும். அடவி என்பது வடமொழியில் பெருங்காட்டைக் குறிப்பது. அதனால் பெரும் காடு என்பதைக் குறிக்க இங்கு அடவி காடே என்று உபயோகித்துள்ளார்.
நாட்டை ஏன் இவை இல்லாவிட்டால் காடு என்று சொல்கிறார்? அதற்கு புறநானூற்றில் உள்ள ஔவையார் பாடலை நாம் துணைக்கு அழைக்கலாம்.
நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!
ஒரு நிலத்தின் வாழ்வும் தாழ்வும் அதில் வாழ்கின்ற ஆடவரை (மக்களை) பொறுத்தது. ஒரு நாட்டின் நிலத்திற்கும் வளத்திற்கும் புகழுக்கும் காரணமாவது நற்பண்பும் நல்லொழுக்கமும் நற்செயலும் உடைய ஆடவரே. நற்பண்பு இல்லாதவர்கள் வாழும் நிலம், நல்லதாகவே இருந்தாலும் தீய நிலமாகவே கொள்ளப்படும். நற்பண்பு உடையவர்கள் தீய நிலத்தில் வாழ்ந்தாலும் அது நல்ல நிலமாகவே கொள்ளப்படும். இதுவே உலக இயற்கை.
கோயில்கள் ஆன்ம அறிவை, கலையோடும் உணர்வோடும் சடங்குகள் வாயிலாக வெளிப்படுத்தும் இடமாகும். இதன் முக்கியத்துவத்தை அரசர்கள் உணர்ந்ததாலேயே, கோயில்களைக் கற்றளியாக எடுப்பித்தவர்கள், அரண்மனைக்கு அத்தகைய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
பொதுவாக தமிழகத்தில் 2-4ம் நூற்றாண்டிலிருந்து கோயில்கள் உருவாக ஆரம்பித்தன என்று கொள்ளலாம் (இருக்கும் கோயில்களை வைத்து. அதற்கு முன்பு அவை எந்த மாதிரியான நிலையில் இருந்தன, மண்ணினால் கட்டப்பட்டவையா, செங்கல்லினால் கட்டப்பட்டவையா என்பதெல்லாம் ஆய்வுக்குரியவை. )
இதுதான்
மிகப் பழங்காலத்தின் கட்டிடமுறை (கற்றளிக்கு முன்பு)
மிகவும் புகழ் பெற்ற விநாயகர் சிற்பம்.
விநாயகருடன்
பதிவை முடித்துக்கொள்வது நல்லதுதானே. அடுத்த வாரம் தொடரலாம்.
(தொடரும்)
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா.
நீக்குதஞ்சைக்கு அருகிலுள்ள கோயில்களில்
பதிலளிநீக்குஇதுவே தலை சிறந்த கலைப்
படைப்பு....
திருக்கோயிலின் பராமரிப்பில் மனம் கலங்கும்
வாங்க துரை செல்வராஜு சார். பக்தர்கள் ஒரு கோயிலுக்குத் தொடர்ந்து சென்றால்தான் கோயில் பொலிவு பெறும். எங்களுக்கு தஞ்சை பெரியகோயில் வழிகாட்டி சொல்லியிருக்கவில்லை என்றால் நாங்கள் சென்றிருந்திருக்க மாட்டோம்.
நீக்குஅழகிய படங்கள்...
பதிலளிநீக்குசிறந்த பதிவு...
மிக்க நன்றி. சில வாரங்களில் ஒரு சாதாரணத் தொடர் எழுதிவிட்டுப் பிறகு தொடரலாம் என்ற எண்ணம் உள்ளது. சோழர் கோயில்கள் பற்றி இன்னும் பதினாறு வாரங்களுக்கு எழுத டெம்ப்ளட் உள்ளது. இந்த வருடமாவது பயண, யாத்திரைத் தொடர்கள் எழுத ஆரம்பிக்கவேண்டும்.
நீக்குபுள்ள மங்கைக்கு நேரிடையாக பேருந்து வசதி கிடையாது...
பதிலளிநீக்குஆமாம், ஆனால் பக்தர்கள் வரவு இதனைத் தீர்மானிக்கும். பசுபதி கோயிலுக்கு பேருந்து உண்டு.
நீக்குஊரல்ல அடவி காடே!...
பதிலளிநீக்குஅந்த நிலைக்குப் போய்க்
கொண்டிருக்கின்றோம்...
ஆஹா... ஒருவர் சொன்னார், ஐந்து லட்சம் வருடங்கள் கலிகாலம். அதில் ஐயாயிரம்தான் முடிந்திருக்கிறது. அதனால் இப்போதே அலுத்துக்எஒள்ளக் கூடாது என்றார்.
நீக்குஎனது தஞ்சைப்பயணம், மதுரைப்பயணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது! புனே செல்லும் எண்ணமும் அப்படியே! நெல்லை கொடுத்து வைத்தவர். எண்ணிய எண்ணியங்கெய்துகிறார்.
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். ஏன் தள்ளிப் போகின்றன? அது சரி புனேக்கு எதற்காகப் பயணம்?
நீக்கு
பதிலளிநீக்குபாஸ்கர தொண்டைமான், பரணீதரன் வரிசையில் அறியாத கோயில்களையும் உலகுக்கு காட்சிப்படுத்தியவர் என்று உங்களையும் சேர்க்கலாம். வணிக, வெகு ஜன பத்திரிக்கைகளில் வெளிவராததால் கட்டுரைகள் பிரபலம் அடையவில்லை. உங்கள் பதிவுகளை ஒருவகை திருப்பணி என்று சொல்லலாம். வாழ்க.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். விளையாட்டாக ஞாயிறு படப் பதிவுகளில் நான் நுழைந்தான். கேஜிஎஸ் சார் இருந்திருந்தால் அவருடைய பயணப் படங்கள் வந்திருக்கும். எழுத எழுத விஷயத்தோடு உருப்படியா எழுதணும் என்ற எண்ணம் வருது.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன்.
நீக்குதாழமங்கை சந்திரமௌலீஸ்வரர் கோயில் மட்டும் பார்த்தது இல்லை. மற்ற கோயில்களை பார்த்து இருக்கிறோம்.
பதிலளிநீக்குஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் கோயில், வெண்ணாற்றங்கரை, தஞ்சை கோயிலை காரில் பயணம் செய்த போது இறங்கி பார்த்து வந்தோம்.
சகோ துரை செல்வராஜூ அவர்கள் இந்த கோயிலை பதிவு செய்து இருக்கிறார்கள் முன்பு.
திருநாவுகரசர் அருளிய இந்தப் பாடல் எல்லா கோயில்களுக்கும் பொருந்தும். பகிர்வுக்கு நன்றி.
//கோயில்கள் ஆன்ம அறிவை, கலையோடும் உணர்வோடும் சடங்குகள் வாயிலாக வெளிப்படுத்தும் இடமாகும். இதன் முக்கியத்துவத்தை அரசர்கள் உணர்ந்ததாலேயே, கோயில்களைக் கற்றளியாக எடுப்பித்தவர்கள், அரண்மனைக்கு அத்தகைய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.//
அவர்கள் அரண்மனை காலத்தை வென்று நிற்கவில்லை.
ஆனால் அவர்கள் கட்டிய கோயில்கள் காலத்தை வென்று இறைவனின் புகழையும் கட்டிய மன்னனின் புகழையும் பாடி கொண்டு நிற்கிறது.
மன்னன் மாளிகை மண்மேடு ஆனாலும் ! என்ற பதிவில்
மன்னர் இராஜேந்திர சோழன் மாளிகை இருந்த இடம் !
"மாளிகைமேடு "என்று இந்த இடத்தைக் குறிப்பிடுகிறார்கள்.
https://mathysblog.blogspot.com/2014/07/blog-post_27.html
மன்னனின் மாளிகை மண்மேடு ஆனாலும் மகேசனின் வீடு காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாக மன்னன் புகழ்பாடுதே!
என்று எழுதி இருந்தேன்.
நான் இன்னும் மாளிகை மேடு பார்த்ததில்லை. பழையாறு அரண்மனை இருந்த இடத்தையும் பார்த்ததில்லை. இந்தத் தடவை அமையுமா என்று பார்க்கணும். உங்கள் பதிவைப் படித்த நினைவு இருக்கிறது.
நீக்குகோயில் படங்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குபழங்காலத்தின் கட்டிடமுறை கோயில் சிதைந்து புற்கள் முலைத்து கிடக்கிறதே!
கல்வெட்டுகள் நன்றாக தெரிகிறது. கோயிலின் அவசியம் ஏண் கட்டினார்கள் எல்லாம் அழகாய் சொன்னீர்கள்.
தொடரட்டும் ஆன்மீக உலா.
மிக்க நன்றி கோமதி அரசு மேடம். முன்பெல்லாம் உழவாரப்பணி என்று சொல்வர். இப்போது அப்படிப்பட்ட உழவாரப் பணிகள் பரவலாக நடப்பதில்லை போலிருக்கிறது.
நீக்குவணக்கம் சகோதரி.
நீக்குநேற்று என் பதிவுக்கு உங்களின் பல கருத்துக்கள் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உங்களது ஊக்கம் நிறைந்த கருத்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி சகோதரி. சனி ஞாயறு என்பதினால், உடனே பதில்கள் தர தாமதமாகிறது. மன்னிக்கவும். கண்டிப்பாக பதிலளிக்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//முன்பெல்லாம் உழவாரப்பணி என்று சொல்வர். இப்போது அப்படிப்பட்ட உழவாரப் பணிகள் பரவலாக நடப்பதில்லை போலிருக்கிறது.//
நீக்குசில கோயில்களில் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த கோயிலை உழவாரப் பணி செய்தால் கோயில் சேதம் அடைந்து விடுமே! அதனால் திருப்பணி செய்யும் போது செய்யட்டும் என்று விட்டு விட்டார்கள் போலும்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குமெதுவா வந்து பதில் அளிக்கலாம்.
மன்னிப்பு எல்லாம் கேட்காதீர்கள்.
புள்ளமங்கைக்கு நானும் தங்களுடன் வந்திருக்கின்றேன்..
பதிலளிநீக்குயான் பெற்ற பேறு...
நான் இரண்டாவது தடவை சென்றபோது உங்களுடன் வந்தேன். அதற்கு முன்பு தாழ மங்கை போன்ற கோயில்களைத் தரிசித்தோம்.
நீக்குபுள்ளமங்கை கேள்விப்பட்டது தான். போனதில்லை. கங்கை கொண்ட சோழபுரமும் போக வாய்க்கலை. இன்றளவும் வருத்தம் தான். அதே தஞ்சைப் பெரிய கோயிலுக்கு ஏழெட்டுத் தரமாவது போயிருப்போம். நெல்லை இங்கெல்லாம் போய்விட்டு எழுதுவதன் மூலம் பல அறியாத தலங்கள் குறித்து அறியத் தருகிறார். நல்லதொரு இறைப்பணி. செவ்வனே செய்து வருகிறார். எது எழுதினாலும் சரியான தகவல்கள் இல்லாமல் எழுதுவதில்லை என்பதோடு தகவல்களைச் சரியாகத் திரட்டிப் படங்களோடும், சரியான வரலாற்றுப் பின்னணியோடும் அறியத் தருகிறார். கடின உழைப்பு என்றாலும் ஜென்ம ஜென்மாந்திரத்தின் தவப்பலனாகவே இவை எல்லாம் அவரால் நடந்து வருகிறது. தமிழகத்திலேயே பார்க்காமல் இத்தனை தலங்கள் உள்ளன. நெல்லைக்கு இறைவன் அருள் பரிபூரணமாய் இருக்கு. வாழ்த்துகள்/ஆசிகள்.
பதிலளிநீக்குஈவாங்க கீதா சாம்பசிவம் மேடம். கங்கைகொண்ட சோழபுரம் நீங்கள் பார்த்ததில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. தாராசுரம் போயிருக்குறீர்களா?
நீக்குஞாயிறு படப் பதிவாக ஆரம்பித்தது வரலாற்றுத் தகவல்களாக மாற்றுரு பெற்றுவிட்டது. அதற்கு தளத்திற்கு வந்து படிப்பவர்கள்தாம் காரணம்.
Went to Darasuram 2 or 3 times.
நீக்குஅப்புறம் எப்படி கங்கை கொண்ட சோழபுரத்தைத் தவற விட்டீர்கள்?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். இன்று காலை வணக்கத்தை மதியத்தில் கூறியிருக்கிறீர்களே. கரன்ட் பிரச்சனையா? நலமா?
நீக்கு:))) நலந்தான் . இன்று எந்த பிரச்சனையுமில்லை. நேற்று வீட்டில் மகன் குடும்பத்தினர் மாலை வாக்கில், கோவிலுக்கு கூட்டி செல்வதாக சொல்லி விட்டு, அவர்களே சென்ற இன்னொரு மகன் வீட்டில் சற்று தாமதப்படுத்தி விட்டு, பல ஆலோசனைகள் செய்து ஒரு துணிக்கடைக்குள் சென்று சுற்றிப் பார்க்க வைத்து விட்டனர்.. அதை யோசித்தபடி வேலைகளில் ஆழ்ந்து விட்டேன்.
நீக்குநீங்கள் செல்லும்/ சென்ற கோவில்களை நான் இன்னமும் காண எத்தனை வருடங்கள், இல்லை எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும் என யோசித்தே களைப்பாகி விட்டேன் மிக அருமையான விளக்கங்களுடன் புள்ளமங்கை, மற்றும் தாழ மங்கை, என பல கோவில்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். தஞ்சை பெரிய கோவிலை ஒரு தடவை ஓடுஓடு என்ற ரீதியில் சென்று வந்திருக்கிறோம் . பிறகு கும்பகோணத்தில் பல கோவில்களும், திட்டமிட்ட அந்த நேரத்தில் சென்று தரிசனம் செய்துள்ளோம். நீங்கள் சொல்லும் கோவில்களுக்கு இன்னமும் செல்லும் வாய்ப்பு வருமா என்பது "அவன்" விருப்பம்.
நீங்கள் மிக அழகாகவும், பொறுமையாகவும் கோவில்களையும், அங்கிருக்கும் சிற்பங்களின் வரலாறுகளையும் விவரித்து கூறியுள்ளீர்கள். வீட்டிலிருந்தபடியே நாங்களும் தரிசனம் செய்து கொள்கிறோம். உங்களின் அற்புதமான இந்த எழுத்துக்கள் இறைவன் உங்களுக்கு தந்த வரம். இதற்கு எப்படி நன்றி சொல்வதென எனக்குத் தெரியவில்லை. தொடருங்கள் உங்கள் ஆன்மீக பணியை. நாங்களும் சனி, ஞாயறென தொடர்ந்து வந்து உங்களுடன் ஆன்மீகத்தில் கலந்து கொள்கிறோம். இதுவே எங்களுக்கு ஒரு பெரும் பேறு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எப்போதுமே உறவினர்களுடன் வெளியில் செல்வதே மிகப் பெரிய விஷயம். சந்தோஷத்தைத் தரும். அதில் ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா (என்னைப் பொறுத்தவரையில்), ஒருவேளை வெளியில் சாப்பிடாவிட்டால், வீட்டிற்கு வந்து கிச்சன் வேலைகள் பெண்கள் தலையில் விழும். நான் முடிந்தவரை வெளியில் செல்லும்போது நான் சாப்பிடுகிறேனோ இல்லையோ மனைவியைச் சாப்பிட வைத்துவிடுவேன்.
நீக்குஇதோ நாளை மறுநாள் எனக்கு அவன் விருப்பம் இருந்தால், ஒப்பிலியப்பன் தரிசனம் கிடைக்கும். அன்றே வேறு என்ன என்ன கோயில்களுக்குப் பயணிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம்.
எந்தக் கோயிலையும் ஓடு ஓடு என்று ஓடி மூலவரைத் தரிசிக்கலாம், ஆனால் தஞ்சைப் பெரிய கோயிலை ஆற அமர நிதானித்துப் பார்த்தால்தான் மகிழ்ச்சி.
உங்கள் கருத்து எப்போதுமே பிறரை உற்சாகப்படுத்தும் கருத்து. மிக்க நன்றி.
இன்று தாழமங்கை எனும் தலம் இல்லை..
பதிலளிநீக்குகோயில் மட்டுமே தஞ்சை பாபநாசம் வழித்தடத்தில்
உள்ளது..
அந்தத் தலம்தான் காவிரி வெள்ளப்பெருக்கில் அழிந்துவிட்டது என்று சொன்னார்களோ?
நீக்குதலைப்பு -
பதிலளிநீக்குபுள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்
என்றிருக்க வேண்டும்...
ஸ்ரீராம் வரும் வாரங்களில் மாற்றட்டும். நன்றி
நீக்குவரலாறுகளுடன் சம்பந்தப்பட்ட பல கோவில்கள் பற்றி உங்கள் பகிர்வின் மூலம் அறிந்து கொள்கிறோம்.
பதிலளிநீக்குபடங்கள் மூலம் தரிசித்துக் கொண்டோம். நன்றி.
வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி
நீக்குஇராஜராஜ சோழன் சந்தனம் அரைத்து இறைவனை வழிபட்டான்//
பதிலளிநீக்குஅரசனே அரைத்திருப்பானா? கற்பனையில் எப்படி செய்திருப்பான் என்று விரிந்தது...சிவாஜி நடையில்...உடல் மொழியில்!
கீதா
கோவில் படங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன.
பதிலளிநீக்குதாழமங்கை பெயரே கவர்ச்சி!
சின்ன கோவில்னாலும் அழகாக இருக்கு
கீதா
தஞ்சபுரீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் 3 நிலைகள் சின்ன கோபுரம் சோழர் கோவிலா? ஆனால் கலர் எல்லாம் அடிச்சு சமீபத்துக் கோவில் போல இருக்கிறதே
பதிலளிநீக்குகீதா
மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது போல கோபுரம் சின்னது ஆனால் கோவில் உள் பெரிதாக இருக்கிறது. கோவில் தூண்கள் மட்டும் தான் அக்காலம் என் சொல்கின்றன.
பதிலளிநீக்குகீதா
பிரம்மா வழிபட்ட தலம் என்றால் பிரம்மபுரீஸ்வரர் என்று சொல்லப்படும் போலத் தெரிகிறது. வேறு சில இடங்களிலும் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயருடன் கோவில்கள் இருக்கின்றதால் தோன்றுகிறது.
பதிலளிநீக்குகீதா
கோவில்கள் கண்டிப்பாக ஆவணங்கள்.
பதிலளிநீக்குபிள்ளையார், சுற்றி அந்தச் சிற்பங்கள் செமையா இருக்கு. பிள்ளையாருக்குக் குடை கூட வைச்சு ரொம்ப அழகா செதுக்கியிருக்காங்க. இந்தச் சிற்பங்கள் குறிப்பாக சுற்றியிருப்பவை வித்தியாசமாக இருக்கின்றன.
கீதா