15.2.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் :: புள்ளமங்கை-ஆடுதுறையார் கோயில்: நெல்லைத்தமிழன்

 

 

தமிழக கோயில்களின் சுருக்கமான வரலாற்றை எழுத இது தகுந்த இடம் என்று நினைக்கிறேன்.

பல்லவர் காலத்தில் (3ம் நூற்றாண்டிலிருந்து) மூன்று வகையான கோயில்கள் கட்டப்பட்டன. அவை  குடைவித்த கோயில்கள் (குடவரைக்கோயில்), செதுக்குவித்த கோயில்கள் (ஒற்றைக் கற்கோயில்கள்) மற்றும் கட்டுவித்த கோயில்கள் (கட்டடக் கோயில்கள்).  குடைவரைக் கோயில்களை நாம் மகாபலிபுரத் தொடரின் பார்த்திருக்கிறோம். ஒற்றைக் கற்கோயில்கள் என்பன, ஐந்து ரதங்கள் பகுதியில் உள்ள கோயில்களாகும்இதில் (ஐந்து ரதக் கோயில்கள்), தர்மராஜா ரதம் மூன்று சிகரங்களையும் எண்பட்டைகளையும் கொண்டதுநீண்ட சாலை வடிவில் உள்ளது பீமரதம். இது திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அர்ஜுன ரதம் இரு நிலைகளை உடையதுசிவபிரானுக்கு அர்பணிக்கப்பட்ட கோயில். குடிசை வடிவில் இருக்கக் கூடிய ரதம் திரௌபதி ரதம் அல்லது கொற்றவைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில். எதிரே உள்ள சகாதேவ ரதம் தூங்கானை மாடக் கோயில். கட்ட டக் கோயிலுக்கு உதாரணம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களிலேயே பெரியதும் மிகச் சிறப்புற்றதும் காஞ்சியில் இருக்கும் கைலாசநாதர் கோயில். அன்று இதுதான் மிகப் பெரிய கோயில் என்பதால் பெரிய திருக்கற்றளி என்று அழைக்கப்பட்டதுஇது இராஜசிம்மேச்வரம் எனப்பட்ட து. எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று கருவறைகள் கொண்ட பெரிய கோயில் பரமேச்வர விண்ணகரம் எனப்படும். இந்தக் கோயிலின் விமானம் பெரியது. கோயிலின் திருச்சுற்றில் பல்லவர்களது வரலாறு சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த பல்லவர் காலக் கோயில்கள் எல்லாவற்றிலும் விமானம் பெரியவை. ஆயினும் அவை 30-40 அடிகளுக்கு மேல் இருக்காது. கற்களை அடுக்கிச் சுவரை எழுப்பிய பிறகு அதன் மீது சிற்பங்களை உண்டாக்குவது பல்லவர் காலக் கலை.

பாண்டியர் காலத்திலும் குடுமியான்மலை, கழுகுமலை, திருப்பரங்குன்றம், ஆனைமலை போன்ற பல இடங்களிலும் மலைகளைக் குடைவித்து மண்டபக் கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இதுபோல, தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த அதியமான் மன்னர்கள் நாமக்கல்லில் நரசிம்மப் பெருமாளுக்கும் பள்ளிகொண்ட பெருமானுக்கும் இரண்டு குடைவரைக் கோயில்களை உண்டாக்கியுள்ளார்கள்.

அடுத்து சோழர் காலம். விஜயாலயச் சோழன் தொடங்கி இராஜராஜ சோழன் காலம் வரை, பல்லவர் மரபை ஒட்டியே சிறிய அளவில் கோயில்கள் எழுப்பப் பட்டன. செங்கற்களினால் ஆன கோயில்கள் கற்றளிகளாக ஆக்கப்பட்டன. இருந்த போதிலும் எந்தக் கோயிலின் விமானமும் 30 அடியைத் தாண்டவில்லை (சுமாராக). அப்படிப் பார்த்தால், இராஜசிம்ம பல்லவனால் காஞ்சீபுரத்தில் கட்டப்பெற்றிருந்த கைலாசநாதர் கோயில்தான் இராஜராஜ சோழன் காலத்துக்கு முன்பு வரை மிக உயரமான கோயில். அதன் காரணமாகவே அந்தக் கோயில் மாத்திரம் பெரிய திருக்கற்றளி  என்று அழைக்கப்பட்டது (10ம் நூற்றாண்டு வரை)

சோழர் காலக் கோயில்கள் உயரம் குறைவு என்று சொன்னாலும் (அதாவது 10ம் நூற்றாண்டு வரை), கோயிலின் அடிப்பகுதியில் இராமாயணம் மற்றும் புராணக் காட்சிகள் சிறுசிறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மிகச் சிறிய இட த்தில் எப்படி இவ்வளவு அழகாகச் செதுக்கியுள்ளார்கள் என்று நாம் பார்த்தாலே வியப்பு தோன்றும். இதனை சோழர் கால ஒப்பற்ற கலைப்படைப்புகள் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிட முடியும். இதற்கு உதாரணம் கும்பகோணம் நாகேசுவரஸ்வாமி கோயில் (இதனை குடந்தை கீழ்க்கோட்டம் என்று வரலாறு குறிப்பிடும்), திருப்புறம்பியம் சிவன் கோயில், பசுபதி கோயில் என்று அழைக்கப்படும் புள்ளமங்கை போன்றவற்றைக் குறிப்பிடலாம்சுருக்கமாகச் சொல்வதானால், அழகிய சிறிய சிற்பங்கள் பல இருந்தாலும், இராஜராஜசோழன் காலத்துக்கு முன்பு வரை கோயிலின் விமானம் 30 அடியைத் தாண்டவில்லை. சில கோயில்களில் விமானம் செங்கல் கட்டுமானமாகவும் இருந்தனசெங்கல்லினால் கட்டப்படுவதால் எடை குறைவாக இருந்தன. அதனால் ஒரு சில கோயில்கள் 40 அடியையும் எட்டின.

இராஜராஜன் தன்னுடைய வெற்றிப் பெருமிதத்தையும், பக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் , தக்ஷிண மேரு என்று சொல்லப்பட்ட  தஞ்சைப் பெரிய கோயிலை முற்றிலும் கற்றளியாக 200 அடிகளுக்கு மேல் கட்டினான். பரந்த திருச்சுற்றும், திருக்கோயிலுக்கு இரண்டு வாயில்களையும் வைத்துக் கட்டினான். அந்தச் சமயத்தில் இந்தியாவிலேயே மிகப் பெரிய விமானம் அமைந்த கோயில் அதுதான்.

இதனை இப்போது ஒப்பிட்டால், அதுவரை காணப்பட்ட கோயில்களைப் போல் ஆறு மடங்குக்கும் அதிகமான உயரம்.  14 மாடி எல்..சி கட்டிடத்தையே அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் ஒருவர் 100 மாடிக் கட்டிடத்தை எழுப்புவதற்கு ஒப்பானது. சரியாமல் நிமிர்ந்து நிற்கவேண்டும், அதற்கு என்ன என்ன செய்யவேண்டும், அதற்குத் தேவையான கற்களை எங்கிருந்து எப்படிக் கொண்டுவரவேண்டும் என்று பலரும் ஆராய்ந்து ஆரம்பித்து வெற்றிகரமாகச் செய்த பணி அது. இப்போது யோசித்தாலும், எவ்வளவு பெரிய முயற்சியை இராஜராஜ சோழன் மேற்கொண்டிருந்தான் என்பது நமக்குப் புரியும்.

அவனது காலத்துக்குப் பிறகு அவன் மகன் இராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழபுரத்தில் மிகப் பெரிய கோயிலை எடுப்பித்தாலும் அதன் உயரம், தக்ஷிண மேருவைவிடக் குறைவாகவே இருக்கும்படிப் பார்த்துக்கொண்டான்.

சோழர் காலம் வரை, கருவறை விமானமே (ஸ்ரீவிமானம் என்று குறிப்பிடப்படும்) மிக உயரமாக இருந்துவந்தது. கோபுரம் என்ற சொல்லே தமிழகத்துக்கு உரிய சொல்.  (இதில் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. பழையாறை வட தளிக் கோயிலில் (சோமநாதேஸ்வரர் கோயில்) இராஜகோபுரம் என்று சொல்லப்படும் முன் கோபுரம் மிகப் பெரியதாக இருந்திருக்கவேண்டும். கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், பிறகு மேற்பகுதி செங்கற்களாலும் கட்டப்பட்டிருந்தாலும் தற்போது பாதி கோபுரம்கூட இல்லாமல் பழுதடைந்து காணப்படுகிறது. இதுபோலவே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு முன்பு இராஜகோபுரம் போன்ற அமைப்பு அரைகுறையாக இருப்பதை அந்தப் பகுதியில் பார்த்திருக்கிறோம். இவை எந்தக் காலத்தில் கட்டப்பெற்றன என்பதே அந்தச் சந்தேகம்).

12, 13ம் நூற்றாண்டில், அதாவது இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்திலிருந்து நான்கு புறமும் கோபுரம் கட்டும் மரபு உண்டானது. அப்போதும் அடிப்பகுதி மிக அகலமாகவும் மேற்புறம் செங்கல் கட்டுமானம் கொண்டும் 100 அடிகளுக்கு மிகாமல் கோபுரம் கட்டப்பட்ட து. தில்லை நடராஜர் கோயிலில் இப்படிப்பட்ட கோபுரங்கள் எழுப்பப்பட்டன. அதனால் அந்தக் கோயில் எழுநிலைக் கோபுரம் என்று பெயர் பெற்றது.

சோழர் காலத்திற்குப் பிறகு விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் புகழ்வாய்ந்த கோயில்கள் அனைத்திலும் வானளாவும் கோபுரம் எழுப்பும் மரபு தோன்றியது. இப்படி, காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை போன்று பல கோயில்களில் பெரிய இராஜகோபுரங்கள் எழுப்பப்பட்டன. அடிப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி செங்கற்களாலும் அமைந்தன. விஜயநகர மன்னர்களில் கிருஷ்ணதேவராயர் 180 அடிக்கு மேல் கோபுரங்களை திருவண்ணாமலை, காஞ்சி, தில்லை கோயில்களில் அமைத்தார். அவருடைய காலத்தில் கோபுரம் எழுப்பும் பணி சிறப்புற்று விளங்கியது. சில கோயில்களில் அடிப்பகுதி கருங்கற்களைக்கொண்டு எழுப்பி, மேல் பகுதியை முடிப்பதற்குள் அவரது காலம் முடிந்துவிடவே, மேற்கொண்டு பணி நடைபெறவில்லை. இத்தகைய கோபுரங்களையும் மக்கள் இராயர் கோபுரம் என்றே அழைத்தனர் (திருவெள்ளறை, திருவரங்கம் போன்ற கோயில்களில் இத்தகைய அரைகுறை கோபுரங்களைக் காணலாம்-திருவரங்கத்தில் தற்காலத்தில் மிகப் பெரிய கோபுரம் எழுப்பப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்)

விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகளாக வந்த நாயக்க மன்னர்களும் இத்தகைய கோபுரப் பணிகளைச் செய்திருக்கின்றனர்.

எனக்கு மன்னார்குடி இராஜகோபால ஸ்வாமி கோயிலின் கோபுரங்களை ஒரு உதாரணத்திற்குக் காட்டவேண்டும் என்ற ஆசையால் இங்கு கொடுத்துள்ளேன். அந்தக் கோவிலில் ஐந்து பெரிய கோபுரங்களும், சிறிது உயரம் குறைவான நான்கு கோபுரங்களும் உள்ளன. அதைத் தொடர்ந்து நாம் புள்ளமங்கை கோயில் சிற்பங்களைப் பார்ப்போம்.

 

இராஜகோபுரம் முன்புறம் மற்றும் உள்ளிருந்து எடுத்த புகைப்படம்

 

வேறு இரண்டு கோபுரங்கள்

இனி வருவது, புள்ளமங்கை கோவில் சிற்பங்கள்.

 

 

 

A stone structure with many statues

AI-generated content may be incorrect.

 

A stone wall with a stone ledge

AI-generated content may be incorrect.

 

 

 

A stone structure with a statue

AI-generated content may be incorrect.

 

A stone wall with a carved stone surface

AI-generated content may be incorrect.

 

அர்த்தமண்டபத்தின் வெளிப்புறச் சுவர்கள், விமானத்தின் அதிஷ்டானம் மற்றும் கண்டப் படைப் பகுதிகளில் பல்வேறு சிறிய அளவிலான சிற்பங்கள் இருக்கின்றன. சுமார் 60க்கும் மேற்பட்ட சிற்பங்கள்அவையே இந்தக் கோயிலின் பெருமைக்கு அழகு சேர்க்கின்றன. இவை இராமாயணம், பாகவதம் போன்றவற்றிலிருந்து அமைந்த காட்சிகள்

நாம் இன்னும் கோயிலின் வெளிப்புற அழகை ரசித்துக்கொண்டு இருந்தாலும், இன்றைய பதிவின் ஆரம்பத்தில் சிவ தரிசனத்தைப் பெற்றுக்கொண்டு பிறகு வெளிப்புற அழகை ரசிப்பதைத் தொடரலாம் என்று எண்ணுகிறேன்.

கருவறைக்கு முந்தைய அர்த்த மண்டபத்தில் இருக்கும் தூண்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்டது. அந்தத் தூண்களில் அழகிய சிறிய சிற்பங்கள் இருக்கின்றன. ஆனால் அர்த்தமண்டபத்தின் கதவுகள் சார்த்தப்பட்டிருந்ததால் தெளிவாக படம் பிடிக்க இயலவில்லை.

A long shot of a stone room

AI-generated content may be incorrect.

ஆடுதுறைப் பெருமானே.. உன் அருளால் உன் தரிசனம் எங்களுக்கு வாய்த்தது.

 

 

 

 

 

 

A stone building with sculptures on the side

AI-generated content may be incorrect.

 

 

 

A stone wall with a stone ledge

AI-generated content may be incorrect.

 

A stone carving of people on a wall

AI-generated content may be incorrect.


A stone with writing on it

AI-generated content may be incorrect.

இந்தக் கல்வெட்டைப் பார்த்தபோது எனக்கு பாரிஸ் லூவர் மியூசியத்தில் பார்த்த ஹாமுராபி சட்டம் நினைவுக்கு வருகிறது. அதில் அரசின் சட்டங்களை பெரிய ஒரு கருங்கல்லில் செதுக்கியிருப்பார்கள். அதையெல்லாம் ஒரு பதிவுத் தொடரில் பகிரவேண்டும் என்பது என் ஆசை. ஆனால் லூவர் மியூசியத்தில் எடுத்த பல சிற்பங்கள் ஓவியங்கள் கொஞ்சம் நிர்வாணத்தன்மை கொண்டவை. கலாச்சாரத்தில் அது ஒரு பெரிய விஷயம் அல்ல. இருந்தாலும் எங்கள் பிளாக்கில் அவைகள் வெளிவருவதில் கஷ்டம் இருக்கிறது. இருந்தாலும் அவ்வளவு அழகிய சிற்பங்களை எப்படிப் பகிர்வது என்று யோசிக்கிறேன்.

A stone structure with a rectangular object

AI-generated content may be incorrect.

 

 

 

 


 

 

A stone structure with statues on it

AI-generated content may be incorrect.

A stone building with sculptures with Banteay Srei in the background

AI-generated content may be incorrect.

இன்று பதிவு ரொம்பவே நீளமாக ஆகிவிட்டதல்லவா? அடுத்தவாரம் தொடரலாமா?

(தொடரும்) 

55 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி.

      நீக்கு
  2. அதியமான் மன்னர்கள் நாமக்கல்லில் நரசிம்மப் பெருமாளுக்கும் பள்ளிகொண்ட பெருமானுக்கும் இரண்டு குடைவரைக் கோயில்களை உண்டாக்கியுள்ளார்கள்.//

    இதையும் சொல்ல வந்தேன்...கூடவே திருமய்யம் கோவிலும் கோட்டைக்குள் குடைவரைக் கோயில் பாண்டியர்கள் காலத்தில் கட்டபட்டது என்று தெரிந்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமய்யம் எங்கிருக்கிறது?

      நீக்கு
    2. முன்னால் கமல் வைத்திருந்தார்! ஹா..  ஹா..  ஹா...   அது கூகுள்பிழை!

      நீக்கு
    3. அது ஆரானும் கூகுள்?

      நீக்கு
    4. தேனாம்பேட்டைக்காரரா?

      நீக்கு
    5. திருமய்யம் புதுக்கோட்டை செல்லும் வழியில் வரும். திருமய்யம் போகாமலும் புதுக்கோட்டை போகலாம் என்றாலும் நாங்க திருமய்யம் போகவென்றே அந்த வழியில் போனோம். அப்படியே செட்டிநாடு பக்கம் என்பதால் காரைக்குடியில் நண்பர் அன்புச் சகோதரர் காளைராஜன் அவர்களையும் திரு இன்னம்புராரையும் சந்திக்க வேண்டி அங்கே போனோம். போகும் வழியில் திருக்கோஷ்டியூருக்கு 3 ஆவது முறையாகப் போனோம். :))))

      நீக்கு
    6. நல்ல வெயில் வந்து விட்டதால் திருமய்யம் கோட்டை மேலே ஏற முடியலை. நம்ம ரங்க்ஸ் மட்டும் கொஞ்ச தூரம் போயிட்டுப் பார்த்துட்டுத் திரும்பி வந்தார். பெருமாள் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பெருமாள். சிவன் கோயிலும் அருகே தான் இருக்கிறது. திருக்கோஷ்டியூரில் சிவன் சந்நிதியில் அபிஷேஹ ஆராதனைகள் செய்து வந்தது ஒரு வைணவச் சிறுவர். நாங்க 3 முறை போனப்போவும் அவர் தான் இருந்தார்.அங்கே அஷ்டாங்க விமானத்தில் விளக்கேற்றி வைத்தால் குழந்தை பிறக்கும் எனத் தெரிந்தவர்கள் மூலம் தெரிய வந்ததால் எங்க பையருக்குக் குழந்தை பிறக்க வேண்டி 3 ஆம் முறை போயிருந்தோம்.

      நீக்கு
    7. https://en.wikipedia.org/wiki/Sathyamurthi_Perumal_Temple,_Thirumayam

      நீக்கு
    8. திருமெய்யத்தில், நான் இதுவரை வைணவக் கோயிலுக்கு மாத்திரமே சென்றிருக்கிறேன். சில மாதங்கள் முன்பு என் அண்ணனுடன் சென்றிருந்தபோது, அருகிலேயே இருந்த குடவரைக் கோயிலான சிவன் கோயிலுக்கும் சென்றிருந்தேன். அவற்றையெல்லாம் பார்த்தால்தான் சிற்பிகளின் அற்புதம் தெரியும்

      நீக்கு
    9. கீசா மேடம்... இந்த முறை இராமேஸ்வரம் சென்றிருந்தபோது, வழியில் இன்னம்பூர் என்ற பெயர் பலகையைப் பார்த்தே. எனக்கு உங்கள் நினைவுதான் வந்தது. நீங்கதான் இன்னம்பூரார்னு உங்கள் பதிவுகள்ல எழுதியிருக்கீங்க

      நீக்கு
    10. //திருமய்யம் கோட்டை மேலே ஏற முடியலை.// நான் ஏற முயலவில்லை. இந்த முறை அண்ணனுடன் சென்றிருந்தபோது வாய்ப்பு இருந்தது. ஆனால் அண்ணன் இந்த மாதிரி சாகச வேலைகள் செய்வதில்லை, நேரமும் அப்போது இல்லை. திருமெய்யம் சத்யமூர்த்திப் பெருமாள் கோயிலுக்குப் பல முறை சென்றிருக்கிறேன்.

      நீக்கு
  3. முதல் இரண்டு படங்கள்..  குறிப்பாக வெளியிலிருந்து எடுக்கப்பட்ட மன்னார்குடி கோவிலின் கோபுரம் படம் அற்புதம்.  இந்த மாதிரி கோபுரம் படங்களின்மேல் எனக்கும் மயக்கம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்... மன்னார்குடி கோயில் பற்றியும் எழுதணும். படங்கள் உண்டு. வேளை வரவில்லை.

      நீக்கு
  4. கோவில் என்றால் இப்படி முன்னால் இந்த வடிவில் கோபுரம் வைக்க வேண்டும் என்று எப்போது தோன்றி இருக்கும்? இந்த வடிவத்துக்கு இடி தாங்கும் என்பதைத்தவிர வேறேதும் சிறப்புகள் உண்டா?  முதன்முதலில் மனிதன் கடவுள் என்ற வடிவத்தை எப்படி யோசித்திருப்பான்?  முதலில் மரத்தடியில் வைத்து பூஜித்திருப்பானோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /முதன்முதலில் மனிதன் கடவுள் என்ற வடிவத்தை எப்படி யோசித்திருப்பான்? முதலில் மரத்தடியில் வைத்து பூஜித்திருப்பானோ/

      மரத்தடிக்கும் முன்னால், மனதில் வைத்து பூஜித்திருப்பானோ? இந்த கேள்வி என் மனதிலும் வந்துள்ளது. இன்றும் மனதில் இறைவன் தங்கியிருப்பது எவ்வளவு சுகம்..!அந்தக்கால ரிஷிகளின் இறை சம்பந்தபட்ட பூஜைகளே அதிகாலை நேரத்தில் நீரோட்டமுள்ள நதிகளிலும், அவர்களின் மனதிலும்தானே ..!

      நீக்கு
    2. நல்ல சிந்தனை. மனிதனின் மனதில் கூட கடவுள் என்ற பிம்பம் எப்படி, ஏன் உருவாகி இருக்கும்?

      நீக்கு
    3. இறைவன் ஜோதிஸ்ரூபமானவன். அவனின் பிம்பத்தை பல புராணங்களை படித்ததினால், பல வகையிலும் மனதில் வரைந்தது , மனிதர்களாகிய நாம்தான் எனவும் படித்துள்ளோமே ..! எனினும் இறைவனின் பிம்பங்கள் நம் மனதிற்கு நாம் தரும் ஒரு ஆறுதல்.இப்போதைய ஊக்கப் பரிசுகள் போல...! எனவும் சிலர் விவாதிக்கின்றனர். ஆனால், எல்லாமே படைத்தவனின் சித்தம். சித்தம் போக்கும் சிவன் போக்கு. 🙏. தங்களுக்கு சிவராத்திரி வாழ்த்துகள்.

      நீக்கு
    4. வாங்க ஶ்ரீராம். கோயிலில் விமானம் மாத்திரமே உயரமாக இருக்கும். ராஜகோபுரம் என்ற கான்சப்டே பிற்காலத்தில் வந்தது. அது பற்றி எழுதுகிறேன்.

      நீக்கு
    5. மனதில் கோயில் கட்டி அநுதினமும் பூஜித்து?.
      பூசலார் நினைவுக்கு வந்து விட்டார்.
      காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயிலை மகேந்திரவர்ம பல்லவன் கட்டுவதற்கு முன்பே அவனுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த பூசலார்...

      நீக்கு
    6. மன்னார்குடிக்காரன், வடுவூரான் (ஸ்ரீராமன் இல்லை. இவனும் ராஜகோபாலனே) பின்னர் ஆறுபாதி என்னும் வளநகரில் இருக்கும் 3 ராஜகோபாலர்களும் ஒரே மாதிரியான சிலைகள். ஒன்றை ஒன்று பார்த்தால் வித்தியாசம் தெரியாத அளவுக்குச் சிற்பி வடித்திருக்கார். இதைப் பற்றி உ.வே.சா. நினைவு மஞ்சரியில் குறிப்பிட்டிருந்ததைப் படிச்சுட்டு இங்கெல்லாம் போகணும் என்ற எங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்ளவே இங்கெல்லாம் போனோம். அப்போ வடுவூரில் ஸ்ரீராமர் பரிவாரங்களின் சிலை கிடைச்சப்புறமா முக்கியத்துவம் அவருக்கே என அங்கே இருந்த பட்டாசாரியார் சொன்னார். உண்மையில் வடுவூர் ஸ்ரீராமரும் அழகோ அழகு, கொள்ளை அழகு.

      நீக்கு
    7. //முதன்முதலில் மனிதன் கடவுள் என்ற வடிவத்தை எப்படி யோசித்திருப்பான்? // ஆதித்யோ ஜ்யோதிராதித்ய.... மனிதன் தன் அளவுக்கு எட்டாததை வைத்துத்தான் கடவுளை உருவகம் செய்திருப்பான். அதனால்தான் பல்வேறு சமூகத்திற்கும் சூரியன் ஒரு கடவுள். நெருப்பைக் கண்டுபிடித்ததும் அவனுக்கு கடவுளின் நினைவு வந்திருக்கும்.

      நீக்கு
    8. //இறைவனின் பிம்பங்கள் நம் மனதிற்கு நாம் தரும் ஒரு ஆறுதல்// ஒருவரை நம் மனதில் இருத்த பிம்பங்கள் உருவங்கள் தேவை. உருவமில்லாமல் நம்மால் கடவுளை உணர்ந்து வணங்க முடிந்தால் அது தனிச் சிறப்பு. ஆனாலும் பிம்பங்கள் உருவகங்கள் நம் மனதில் பக்தியை அதிகரிக்கின்றன. அதனால்தான் பாரதீய சமயங்களால் மக்களின் மனதில் தர்மம் அதர்மம் என்ற விதையை ஊன்ற முடிந்தது.

      நீக்கு
    9. //வடுவூரில் ஸ்ரீராமர் பரிவாரங்களின் சிலை கிடைச்சப்புறமா முக்கியத்துவம் அவருக்கே// கீசா மேடம்... பரிவாரங்களில் லக்ஷ்மணர் இல்லை. லக்ஷ்மணருக்கு சிலை வடிக்க முயன்றபோது அது பெண் வடிவமாக வந்து, அருகில் உள்ள அம்மன் கோயிலில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன் (செல்லவில்லை).

      மன்னார்குடி ராஜகோபாலர் சிலை போல இன்னும் இரண்டு இடங்களில் பார்த்திருக்கிறேன். எழுதணும், படங்கள் பகிரணும், வேளை வரணும்.

      நீக்கு
  5. தில்லை நடராஜர் கோவில் கோபுரம் நல்ல பெரிதாக அகலமாகவும் இருக்கும்.

    அக்கோபுரங்களைப் பார்க்கறப்ப ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். எப்படி இப்படி எல்லாம் கட்டத் தோன்றியது என்று. ஆனால் பிரமிடுகள் போன்ற வடிவங்கள் அதாவது கூம்பு வடிவங்கள் அறிவியல் ரீதியாக புவியீர்ப்பு விசையை காந்த சக்தியை ஈர்க்கக் கூடியவை என்பதால் அதன் கீழ் அமர்ந்து தியானம் செய்வது நல்லது என்று கூடப் படித்ததுண்டு. அதனால் தான் கருவறை விமானம்/கோபுரம் கூட அப்படியான வடிவில் இருக்கும்.
    கோபுரங்களை மட்டுமே கூட தனி படங்களாக எடுத்தவை உண்டு. போடுவதற்கும் வைத்திருக்கிறேன். ஆனால் என்னவோ போடவில்லை.

    நான் பதிவு எழுதினாலும் எழுதாவிட்டாலும் யாரும் கண்டுக்கப் போவதில்லையே. அந்த அளவுக்கு பெரிய அப்படக்கரா என்ன?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன் க்கா... நாம் எழுதுவது, முதலில் நமக்கு உபயோகமாக இருக்கும். படிப்பவர்கள் படிப்பார்கள். கருத்து இருந்தால் நாம் பதில் கொடுப்போம், கேள்விகளுக்கு விடை கொடுப்போம். மற்றபடி, எழுத்தாளர்கள் மாத்திரம், அதிலும் சுஜாதா, பாலகுமாரன் போன்ற கவர்ச்சி எழுத்தாளர்கள் மாத்திரம்தான் பதிவு போடணும்னு இருக்கா என்ன?

      நீக்கு
  6. கோபுரங்கள் என்னை மிகவும் கவரும். பிரமித்துப் பார்ப்பேன். உடனே பல ஆங்கிளில் படங்களும் எடுப்பேன் .

    புள்ளமங்கை கோவில் சிற்பங்கள் செமையா இருக்கு நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல ஆங்கிள்களில் படமெடுத்த கீதா ரங்கனுக்கு, கோபுரத்தின் வலது பக்க ஓரத்தில் என்ன இருக்கும், இடது பக்க ஓரத்தில் என்ன இருக்கும் என்று சொல்லத் தெரியுமா?

      நீக்கு
  7. ஆடுதுறை பெருமான் அந்த சன்னதி என்ன ஒரு அழகியல் அந்த இடம் ரம்மியமாக இருக்கிறது. பார்த்தவுடனேயே கவர்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதியான இடம். ஆள் அரவம் கிடையாது. நிச்சயம் தரிசனம் செய்யவேண்டிய கோயில் அது.

      நீக்கு
  8. பெரிய நிலையை கழுத்தில் தாங்கி நிற்பது போன்ற அந்தச் சிற்பங்கள் வாவ் போட வைக்கின்றன. அன்தக் கல்வெட்டெழுத்துகளுக்கு மேலே உள்ள படம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில், கழுத்துக்கு மேல் உள்ள பகுதி, மேலே உள்ள கல்லில் செதுக்கப்பட்டது. கூர்ந்து கவனித்தால்தான் அது புரியும்.

      நீக்கு
  9. இருந்தாலும் எங்கள் பிளாக்கில் அவைகள் வெளிவருவதில் கஷ்டம் இருக்கிறது. இருந்தாலும் அவ்வளவு அழகிய சிற்பங்களை எப்படிப் பகிர்வது என்று யோசிக்கிறேன்.//

    கலைக்கண்ணோடு பார்க்கணும். ஏன் நம்ம ஊரில் மட்டும் என்னவாம்? கலவி கூட சிற்பங்களில் இருக்கின்றனவே! பெண் நிர்வாணம் ஆண் நிர்வாணம் சிற்பங்களில் உள்ளனவே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் அக்கா.. தபாலை மறந்துபோய் என் அட்ரசுக்கு அனுப்பிட்டீங்க. எங்கள் பிளாக்கின் சென்சார் அதிகாரி கௌதமன் சார். ஒருவேளை அவர் மறந்துவிட்டால் அவருடைய அண்ணன் அபூர்வமாக வருவார்.

      நீக்கு
  10. கோபுரம் படங்கள் சூப்பர், நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன் அக்கா. அடுத்த முறை கோபுரங்களை உன்னிப்பாகப் பாருங்கள். அவைகளில் என்ன சிற்பங்கள் எங்கே இருக்கவேண்டும் என்பதற்கும் நியதி இருக்கிறது. ஒரு முறை பகிர்கிறேன்.

      நீக்கு
  11. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய கோவில் தரிசன பகிர்வு எப்போதும் போல அருமை. ஆடுதுறை பெருமானை இன்றைய சிவராத்திரி நாளில் தரிசிக்க வைத்து விட்டீர்கள். நானும் முதலில் எம்பெருமானை தரிசித்துக் கொண்டேன். நன்றி.

    தமிழக கோவிலகளின் கட்டுமானங்கள் பற்றிய படிப்படியான விளக்கம் அருமை. ஒவ்வொரு மன்னர்கள் காலத்திலும் அவர்களது முயற்சியாலும், இறைவனின் அருளினாலும் எழும்பிய கோவில் கோபுரங்கள் பற்றிய விளக்கம் நன்றாக உள்ளது. மன்னார்குடி இராஜகோபால சுவாமி பெரிய கோபுர தரிசனங்களை பெற்றுக் கொண்டேன். கோபுரங்கள் ரசிப்பதே ஒரு இறைத் தொண்டு இதில்தான் எத்தனை கதை சொல்லும் சிற்பங்கள் என வியந்து ரசிக்க வைக்கும்

    /அவனது காலத்துக்குப் பிறகு அவன் மகன் இராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழபுரத்தில் மிகப் பெரிய கோயிலை எடுப்பித்தாலும் அதன் உயரம், தக்ஷிண மேருவைவிடக் குறைவாகவே இருக்கும்படிப் பார்த்துக்கொண்டான்./

    தந்தையின் புகழை என்றும் நிலைத்திருக்க வைக்கும் ஒரு மதிப்பான மரியாதை. நங்கள் இன்னும் இந்தக் கோவிலை காணும் பேறு பெறவில்லை.

    புள்ளமங்கை கோவில் படங்கள், சிற்பங்கள் என அனைத்துமே மிக அழகாகவும், தெளிவாகவும் இருக்கிறது. பார்த்து ரசித்தேன். கோபுரங்கள், விமானங்களின் இடையிடையே செடிகள் வளர்வதை தடுக்க உபாயங்கள் செய்ய வேண்டும்.எல்லா படங்களுமே நன்றாக உள்ளது.

    நான் உங்களின் நேற்றைய பதிவை இன்னமும் படிக்க நேரம் வாய்க்கவில்லை மன்னிக்கவும் பிறகு படித்து விட்டு வருகிறேன். ஏதேதோ வேலைகள் என வந்து விட்டன. இன்றும் காலை ராகி குண்டா கோவிலுக்குச் செல்ல இறைவன் அருளால் வீட்டில் நினைத்திருக்கிறோம் . இறைவன் நல்லபடியாக அழைக்க வேணும். 🙏. தங்கள் கோவில் தரிசனங்கள் நல்லபடியாக நடைப்பெற்றதா ? பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம் நானும் மதியத்துக்கு மேல்தான் இணையம் வருவேன். இப்போதான் ஜிம் முடிந்தது. இப்போ நீச்சலுக்குச் செல்ல வேண்டும்.

      டயட் நினைவில் ராகி குண்டா எனக் குறிப்படிட்டுவிட்டீர்கள். ராகி Gகுட்டா. ராகி வயல்களாக இருந்த இடத்தின் நடுவில் சிறு குன்று.என்னுடைய அரை கிரவுண்ட் வீடு கோயிலின் முன் சுமார் நூறு அல்லது நூற்றைம்பது மீட்டர் தொலைவில் உள்ளது. அந்தக் கோயிலுக்குச் சென்றால் அரிசி தானம் செய்ய பொதுவா மறப்பதில்லை.

      நீக்கு
    2. சிவராத்திரியின் போது இந்தப் பதிவு வரணும் என்று நான் நினைக்கவில்லை. அதுவாக அமைந்திருக்கிறது.

      எனக்கும் ஆரம்பத்தில் தந்தைக்குப் போட்டியாக எழுப்பிய கோயிலோ என்ற சந்தேகம் இருந்தது.

      இந்த முறை கும்பகோணப் பயணத்தின்போது மீண்டும் இந்தக் கோயிலை (கங்கைகொண்ட சோழபுரத்தை) தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

      நன்றி கமலா ஹரிஹரன் மேடம். ராகிகுட்டா கோயில் புளியோதரை பிடித்திருந்ததா?

      நீக்கு
    3. நாங்கள் இங்கு வந்ததிலிருந்து பல முறை இந்தக் கோவிலுக்கு வந்துள்ளோம். பன்னிரண்டு மணி வாக்கில் கோவிலில் நல்ல இறை தரிசனம் கிடைத்தது. இப்போதும் இங்குதான் அருகில் உள்ள ஒரு கடையொன்றில் (துணிக்கடை) உள்ளோம்.

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. தமிழக கோயில்களின் சுருக்கமான வரலாறு அருமை.
    பல்லவ, பாண்டிய , சோழ கோயில்களை , பற்றிய செய்திகள் அருமை.
    வரலாறு சிறப்பு பாடத்தில் பல்லவ, பாண்டிய , சோழர்களின் கலைகளை , கட்டிடகலைகளை பற்றியும், அவர்கள் கட்டிய குடவரை கோயில்கள், மற்றும் கலை நுணுக்கம் உள்ள கோயில்கள் பல்லவர் பாணி, சோழர்கள் பாணி, பாண்டியர்கள் பாணி என்று படித்து இருக்கிறோம்.

    நீங்கள் நல்ல விளக்கமாக அவற்றை சொன்னது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம். இதைச் சாக்கிட்டு நானும் பலவற்றைத் தெரிந்துகொண்டேன்.

      நீக்கு
  14. மன்னார்குடி இராஜகோபால ஸ்வாமி கோபுர தரிசனம் கிடைத்தது அழகான கோபுர தரிசனம்.

    இராஜகோபுரம் முன்புறம் மற்றும் உள்ளிருந்து எடுத்த புகைப்படம் எல்லாம் அருமை.
    வேறு இரண்டு கோபுர படங்களும் அழகு.

    புள்ளமங்கை கோயில் பார்த்து பல ஆண்டு ஆச்சு மீண்டும் தரிசனம் செய்து கொண்டேன்.

    ஆடுதுறைப் பெருமானை உங்கள் தயவால் சிவன் ராத்திரி அன்று தரிசனம் செய்து கொண்டேன் நன்றி.
    கோயில் சிற்பங்கள் படங்கள் அனைத்தும் அருமை.
    கல்வெட்டு படம் நன்றாக இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இந்த முறை நாதமுனிகள் திருவரசு, குருகைக்காவலப்பர் திருவரசு மற்றும் அருகிலிருந்த பள்ளிகொண்ட பெருமாள் கோயில், காட்டுமன்னார் கோயில் என்று பல இடங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விரைவில் எழுதணும்.

      நீக்கு
  15. //பாண்டியர் காலத்திலும் // பிள்ளையார் பட்டிக் கற்பக விநாயகர் கோயில் பல்லவர் காலத்தையும் விடக் காலத்தால் மூத்த குடவரைக் கோயில். முற்காலப் பாண்டியர் காலத்தில் எழுப்பப் பட்டிருக்கலாம். திருப்பரங்குன்றம் கோயிலும் அப்படித் தான். திருப்பரங்குன்றம் போயே பல வருடங்கள் ஆகி விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்.... பிள்ளையார்பட்டியில் கற்பகவிநாயகர் சன்னிதிப் பகுதி மாத்திரம் நீங்கள் சொல்லும் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். மற்றபடி சிவன் மற்றும் அம்பாள் கோயில்கள் சமீபத்தில் கட்டப்பட்டது என்று எனக்குத் தோன்றியது. விரைவில் இந்தப் பயணத்தையும் எழுதணும்.

      நீக்கு
  16. கோபுரங்களின் உயரங்களில் பெரிது என்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலே முன்னெல்லாம் இருந்தது. இப்போ இல்லை, தற்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீரங்கம் ராஜ கோபுரமே என்கின்றார்கள். தமிழ்நாடு அரசின் சின்னமாக இருந்துவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரச் சின்னத்தை மாற்றப் போவதாகச் சொல்லிட்டு இருந்தார்கள். மாத்தியாச்சா என்னனு தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். கருணாநிதி தன் ஆட்சியில் எல்லாவற்றையும் மாற்றி (பாரம்பர்யங்களை), பிற்காலத்தில் இதற்கெல்லாம் காரணம் தான் என்று மற்றவர்கள் பேசவேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட விஷயங்கள் செய்ய ஆரம்பித்தார். அப்படி இதனையும் மாற்ற நினைத்தபோது எழுந்த எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போட்டுவிட்டார். பிறகு இரண்டு வருடம் பேச முடியாமல் இருந்து பிறகு இறந்தார்.

      நீக்கு
  17. சிவராத்திரியான இன்றைக்கு சிவ தரிசனம் நெல்லையின் தயவால் கிடைச்சது. ரொம்பவே நன்றி நெல்லை. நீங்கள் செய்வது ஓர் அருமையான அற்புதமான ஈடு இணையற்ற இறைத் தொண்டு. உங்களுக்கு இறையருள் பரிபூரணமாக சித்தித்து இருக்கிறது. நமஸ்காரங்களும், வாழ்த்துகளும், ஆசிகளும் என்றென்றும். சில சமயங்கள் உங்கள் பதிவைப் படிக்கையில் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்துடும். இன்னிக்கும் அப்படித் தான். நன்றி பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா சாம்பசிவம் மேடம் எழுதுவது எனக்கு மனதை உருகவைக்கிறது. உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிகளுக்கு மேல் வேறு என்ன வேண்டும்? எழுதும்போது எனக்குப் பிடித்திருப்பதைத்தான் (அதாவது நன்கு புரிந்தவைகளைத்தா) எழுதுகிறேன். மிக்க நன்றி.

      நீக்கு
  18. அனைவருக்கும் சிவராத்திரி வாழ்த்துகள். ஓம் சிவாய நமக.

    கோவில் கோபுரங்கள் பற்றிய வரலாறுகள் அருமை.

    கோபுரப் படங்கள் அழகாக இருக்கின்றன. இந்திய பயணங்களில் கோவில் கோபுரங்களைப் பார்த்து வியந்திருக்கிறோம்.

    புள்ள மங்கை கோவில் சிற்பங்கள் அழகு பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். ஓம் நம சிவாய.

      பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!