17.2.26

சிறுகதை : நாய் வால் - ஹேமலதா பாலசுப்ரமணியம்

 

நாய் வால்

ஹேமலதா பாலசுப்ரமணியம்


டாக்டர்கள் குழு அறையை விட்டு மௌனமாக வெளியேறி, ஹால் மூலையில் நின்று கிசுகிசுத்தது. தலைமை டாக்டர் தன் மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தார்- "மிஞ்சிப் போனா,

ஒரு செயற்கையான அமைதி சூழ்நிலையில் ஆழமான இறுக்கம்.

தலைவர் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார். தலைமாட்டில் சலைன் ஸ்டாண்டிலிருந்து டியூப்பில் வெண் முத்துக்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. பக்கத்து நாற்காலியில், அகல நெற்றியில் பெரிய குங்கும அப்பலுடன், அவர் மனைவி கண்மூடி இன்னொரு தடவை சந்தசஷ்டிக் கவசத்தை மனசுக்குள் சொல்ல ஆரம்பித்தார்.

அறை நிரம்பியிருந்தது. மூலை அறைகளில் நாலைந்து டெலிபோன்கள் ஓய்வு ஒழிவற்று அலறிக் கொண்டிருந்தன. பங்களா காம்பவுண்டுக்குள், வெளியே தெருவில், எதிர்ச்சாரியில், மூலைத் திருப்பத்து பங்க் கடையில் எங்கும் ஜனத் திரள். செயற்கைச் சோகம் பல முகங்களில் சிரிப்பா, அழுகையா என்று குழம்ப வைக்கும் நடிப்புத் திறன் மொத்த ஜனக் கூட்டத்திலும்.

புதிதாக வருபவர்களிடம் கிசுகிசுத் தகவல்கள். "நாப்பத்தெட்டு மணி நேரமா கோமா- மூத்த மகன் அமெரிக்காவிலிருந்து வரணும்."

"கடைசிப் பொண்ணு ஆஸ்திரேலியாவிலே 'மெடிகல்' படிக்கிறாளாம்.. கெளம்பியாச்சாம்_"

“நடுவுல இன்னும் மூணு பசங்க உண்டாமே..?"

"ஆமாமாம்.. நீங்க சொல்றது அதிகாரபூர்வமா..  அவுங்களும் பெரிய பெரிய படிப்பா படிக்கிறவங்கதான். லீவு கெடைக்கல்லியாம்.."

அறைக்குள்ளிருந்த அமைதிக்கு நேர் மாறாக வீட்டின் வெளிப்புறம் இருக்கிறது. நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் அமைதியற்றுத் தவிப்புடன் காத்திருக்கிறார்கள். தம் அன்புத் தலைவரின் இறுதி நேரம் பற்றிய தகவல்கள் அவர்களைச் செயலற்றவர்களாக்கியிருக்கின்றன.

"எனக்கு இந்த மனுஷனை நாப்பது வருஷமா தெரியும். ஒரு காலத்துல சிங்கிள் டீக்கு டிங்கியடிச்சவரு...  இப்பப் பாரு, பத்து தலைமுறைக்கு சொத்து தேறும்."

"இவரை விட்டா வேற தலைவர் ஏதுங்க ? மக்களுக்காக நிறைய தியாகம் பண்ணியவராச்சே_"

பண்ணியிருக்கிற அக்கிரமம் ஒண்ணா ரெண்டா?  புண்ணியவான் எத்தனை குடியைக் கெடுத்திருக்காரு தெரியுமா? பேசறதுக்கும் செய்றதுக்கும் சம்பந்தமே இருக்காது.

ஹாலில் திடீர்ச் சலனம். “நகருங்க.. நகருங்கட வழி... வழி வேகமாக இன்னொரு தலைவர் தன் சகாக்கள் சூழ அறைக்குள் நுழைகிறார் பத்திரிகை நிருபர்களிடம் சொல்ல வேண்டிய அனுதாபச் செய்தியை மனக இலக்கியத் தரத்துடன் ஒத்திகை பார்க்க, திடீர் சோக பாவம் முகத்தில் செயற்கை தெரியாத இயற்கைப் போலத் தெரிய, மேல் துண்டால் வசதியாக வாயை மூடிய படி அவர் கட்டிலருகில் சென்று நிற்கிறார்...  சுற்றிலும் பல மெல்லிய முணுமுணுப்புகள் "என்னமா நடிக்கிறான் பாரு"

வெளி ஹாலில் விட்டுவிட்டு மறுபடி மறுபடி சலசலப்புகள்.  வேறொரு பிரமுகர், சற்றுக் கழிந்து இன்னொரு வி.ஐ.பி.   காம்பவுண்டில் நிற்க இடமின்றி மற்ற கார்களுக்கிடையே புகுந்து நெளிந்து தடுமாறித் திரும்பும் கார்களின் பேரோசை - கூட்டத்தில் திடீர் ஆரவாரங்கள்.. கால் முளைத்து உலா வரும் வதந்திகள்.  நிஜமேக் அப்பைக் கலைக்காமலேயே ஸ்டுடியோவிலிருந்து நேராகப் பாசத்துடன் ஓடி வருகிற நடிகர் நடிகைகள்.  அவர்களுக்காகவே அங்கே அலை மோதுகிற இன்னொருவகைக் கூட்டம். உரிய மேக்கப்களை வழக்கத்தைவிட அதிகமாகவே போட்டுக் கொண்டு வந்து போகிற, அரசியல் தலைவர்கள்..   அவர்களுக்காக தனித்தனிக் கூட்டங்கள், முன்னைப் பரம்பரையின் முழுவதன மந்தகாசத்துடன், தரையில் இடமில்லாமல், மரக்கிளைகளில் தொத்தித் தொங்கும் இளவட்டங்கள். தினுசு தினுசான ஒப்பாரி மெட்டுகளை ஒலிபரப்ப, கூலி பேசி அழைத்து வரப்பட்டிருக்கும் மூத்த பெண்களின் கூட்டம்.

திடீரென்று அறையில் சலசலப்பு. "கண்ணைத் தொறந்து பாக்குறாரு.".    மனைவி அவசரமாக அருகில் வருகிறாள்.

மெல்லிய முனகல் - "சோமு வந்தாச்சா?"

"இதோ வந்துடுவானுங்க"

கண்கள் மறுபடி மூடிக்கொள்ள உதடுகளில் புன்னகைக் கீற்றுகள். 'சோமுவோட முதலாவது ஆண்டு நிறைவு அன்னைக்கு ராத்திரி அந்தத் தெலுங்கு நடிகையோடவே தங்கியிருந்தது' அவர் நினைவை ஆக்ரமிக்கிறது. பதவி தந்த போதையில் இந்த ரக போனஸ் சுகங்கள் கொஞ்ச நஞ்சமா என்ன ?  பகலில் கண்ணகியையும் தமிழ்ப் பண்பாட்டையும் பற்றி பட்டி மண்டபங்கள் இரவின் இருட்டில் காணாமல் போய் விடுபவை. உதடுகளில் மறுபடியும் புன்னகை

கட்டிலுக்குக் கொஞ்ச தொலைவில் யாரோ பேசிக் கொள்கிறார்கள். “பேச்சும் மூச்சும் தமிழ், தமிழ்ப் பண்பாடுதாங்க...  ஆகா, எவ்வளவு உயர்ந்த லட்சியப் பிடிப்பு.."

டாக்டர் மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்துக் கொள்கிறார். மிக மெலிதாக பக்கத்து ஸ்பெஷலிஸ்டிடம் முணுமுணுக்கிறார் - “இருபது நிமிஷமே ஜாஸ்தி.."

"குருக்கள் சாமி.. சீக்கிரமா பாத்துட்டுப் போயிடுங்க."

பூர்வீகக் கிராமத்துச் சிவன் கோவிலில் பூஜை செய்யும் சிவாச்சாரியார். தலைவரின் தந்தைக்குச் சினேகிதர், 'நம்ம ஊர்ப் பையன் எப்படிப் பிரமாதமா வந்துட்டான்!'' எழுபது வயதின் தள்ளாமையிலும் பழுப்பேறிய பஞ்சகச்ச உடை, பட்டை பட்டையான விபூதிப் பூச்சுகள்,  மாசக்கணக்கான தாடி மீசைக்கு மேல் குழி விழுந்த, ஆனால் வைராக்கிய ஒளிசிந்தும் கண்கள். நாற்பது வருஷமாக நாத்திகம் பேசிப் பேசியே வளர்ந்து விட்ட தலைவரைப் பார்க்க, கிராமத்து ஆத்திக வயோதிகர் வந்திருப்பது கூட்டத்தில் ஒரு புதுச் செய்தியாக சுவாரஸ்யத்துடன் முணுமுணுக்கப் படுகிறது. விபூதிப் பையைத் திறந்து குருக்கள் தலைவரின் மனைவியிடம் பிரசாதம் தருவது, மற்றொரு பக்கம் 'பெட்டிச் செய்தி'யாகத் தயாராகிறது. போலித்தனமில்லாத, உள்ளார்ந்த ஆழ்ந்த சோகத்துடன் ஒரு ஒதுக்குப்புறமாக நின்றுவிட்டு யாரும் லட்சியம் செய்யாததைச் சட்டை செய்யாமல் அவர் திரும்பி நடக்கிறார்.

இன்னொரு கிராமவாசி இப்போது கட்டிவருகே வந்து நிற்கிறார்.வி.ஐ.பி.களுக்கு மத்தியில் சட்டை போடாத இவரை யார் அனுமதித்தது என்று எளிமையைச் சட்டை செய்யாத சில முணுமுணுப்புகள்.  தலைவரின் கிராமத்துப் பண்ணையில் தன் இளமை முதலே விசுவாசமாக உழைக்கும் அந்தக் கிராமத்து மனிதரை தலைவரின் மனைவி மென்ன சோகத்துடன் வணங்கி வரவேற்கிறாள். அதே நேரம், மறுபடி கண்ணைத் திறந்த தலைவரின்பார்வையில் இந்தப் பண்ணையாள் பட்டுவிட அவர் இமையோரம் இரு முத்துகள் உதிக்கின்றன.."கந்தசாமி!" என்று ஈனஸ்வரத்தில், முனகுகிறார். நேரங்கெட்டு நெஞ்சில் எழுகிறது அந்த நினைவு- 'இவன் மகள் கருப்பாயி நாட்டுக் கட்டையானாலும் கொள்ளை அழகு.  ஒரு ராத்திரி தென்னந்தோப்பு சவுக்கண்டியில், 'வயிறும் வாயுமாக ஊரார் தூற்ற அவள் அதே தோப்புக் கிணற்றில் மிதந்த முடிவு.

உயர் அதிகாரிகளின் கூட்டம் ஒன்று உள்ளே நுழைகிறது. தலைவர் லேசாகக் கண் திறந்து பார்க்கிறார். அந்தக் கூட்டத்திலும் ஓரமாக ஒதுங்கி நிற்கும் அந்த அதிகாரி ஒரு டெண்டரில் தன் விருப்பப்படி பைலில் எழுத மறுத்ததற்காக அவரை சம்பந்தமில்லாத வம்புகளில் சிக்க வைத்து கட்டாய ஓய்வு பெற வைத்தது நினைவு வருகிறது. அதையும் பொருட்படுத்தாமல் தனக்கு மிக அறிமுகமான ஒருவரின் அந்திமக் காலம் பற்றிய கவலையுடன் அவர் வந்திருப்பது இவருக்கே கூச்சமாக இருக்கிறது. அவரின் கண்கள், ஒரு புதிய வெளிச்சத் தாக்குதலைத் தாங்கும் சக்தியற்றவனவாக வேகமாக மூடிக் கொண்டுவிட, அதே பொழுது உள்ளே ஒரு கண் திறந்து கொள்கிறது.

இறைவா!  என் மோசமான வெளி வாழ்க்கையை மன்னித்து விடு. நான் செய்துள்ள அத்தனை பாவங்களையும் மன்னித்து விடு.  எனக்கு இனி ஒரு வாழ்வு கிடைத்தால், நிச்சயமாக இதற்கெல்லாம் பிராயச்சித்தம் செய்து விடுகிறேன். ஒரு மறுவாழ்வு கிட்டினால் - சத்தியமாக - இத்தகைய தவறுகள் எதையுமே செய்ய மாட்டேன். இறைவா, என்னை மன்னித்து, அருள் செய்.. என்னை மன்னித்து விடு.. இறைவா இறைவா!

மனசுக்குள் தேம்பல்கள், வெளியே விக்கல்கள். டாக்டர்கள் அருகே ஓடி வருகிறார்கள்.

விக்கல்கள் உரத்துத் தொடர்கின்றன. வெளியே பரபரப்பு.. வதந்திகள்...

போயாச்சு.. தெருவெல்லாம் சலசலப்புட

தலைமை டாக்டர் மணிக்கட்டைத் திருப்பிப் பார்க்கிறார். "ஹார்ட்லி ஃபைவ் மினிட்ஸ்." ஒரு கடைசிச் சடங்கை சட்டப்பூர்வமாகவும், அவர் அடிக்கடி சொல்லி வந்துள்ள விஞ்ஞானபூர்வமாகவும் நிறைவேற்றி வெளி உலகிற்குப் பிரகடனப்படுத்த அவர்கள் காத்திருக்கிறார்கள்.

மறுபடி விசிட்டர்கள், பிரபலங்கள், அடுத்தகட்டப் பிரமுகர்கள், ஊருக்காக விளம்பரத்திற்காக, உயிரற்ற உப்புசப்பற்ற வெறும் சம்பிரதாயத்திற்காக உள்ளபடி அழ, ஒரு மனைவி நெஞ்சார்ந்த வேதனையில் மகன்கள், மகள்கள் மட்டும்.  நாட்டுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தலைவரின் அந்திம யதார்த்தம்.

உயரமான ஒற்றைக் குத்துவிளக்கின் தனிச் சுடர் திடீரென அதன் ஒளிப் பிரபை பெரிதாகி சடசடவென சப்திக்கிறது. மனைவி நெஞ்சை அழுத்திக் கொண்டு அதை வெறித்துப் பார்க்கிறார். தலைவர் மறுபடி கண் திறக்க, கட்டிலைச் சுற்றி அவர் பார்வை ஒரு வெறுமையுடன் மேய்கிறது. இரண்டாவது வரிசையில் அந்த நபர் போனவாரம் இன்னொரு 'ஜேம்ஸ் பான்ட்' கொடுத்தேனே. நஷ்டம் தானா ? இடது கால் பக்கம் சல்வார் கமீசுடன் அந்தப் பஞ்சாபிப் பெண், செழுமையின் கோதுமைப் பளபளப்பு, பல வருஷங்களுக்க முன் வடநாட்டுச் சுற்றுப் பயணத்தில் ஒரு நாள் விளையாட்டில் கிடைத்த வாரிசு. 'எமோஷனல் நேஷனல் இண்டக்ரேஷனை'ப் பற்றி அவர் வெகுவாகப் பேசிய நாட்கள் அவை. ஆமாம், எப்போதும் எமோஷனல் அதனால் 'இன்டக்ரேஷனும்' இருந்து தொலைத்தது. பாவம், காணாமல் போனது, 'நேஷனல்' மட்டும் தான்.

கட்டிலின் இன்னொரு பக்கம் கட்சியின் மூத்த தலைவர்கள், உள்ளுக்குள் மோசமாக அடித்துக் கொண்டாலும், வெளியில் கட்டிக் கொண்டு ஆலிங்கனம் செய்வதை தினசரி 'ஷோ'வாக நடத்துபவர்கள். வசூல் கணக்கில்.  பல வழக்குகள் முடியாத கவலை அவர்களின் 'பாச' முகங்களில் பளிச்சிடுகிறது.

தலைமை டாக்டர், தன் குழுவினரை அர்த்தபுஷ்டியுடன் பார்க்கிறார். காமிராக்கள் 'ரெடி ப்ளீ'ஸ்' சொல்கிற பாவனை.

ஐந்து நிமிடம் நான்காகி, மூன்றாகக் குறைந்து இரண்டுக்கு வந்து-தலைவரின் கண்கள் மறுபடி சொருகிக் கொள்ள தொடர் விக்கல்கள் டாக்டர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்

லைவரின் பங்களர இப்போது மேலும் மெருகேறி ஒளிர்கிறது. புதிதாக வண்ணங்கண்ட சுவர்கள் பளபளக்கின்றன. காம்பவுண்ட் கொள்ளாத கார்கள். போவோரும் வருவோருமாக ஏகக் கூட்டம் உள்ளறையில் ஒவ்வொருவராக அழைத்துப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் தலைவர்.

"நீங்க பொழைச்சதே புனர்ஜன்மங்க. கடவுள் கிருபையால்.."

"மண்ணாங்கட்டி... கடவுளாவது கத்தரிக்காயாவது ! இயற்கை விட்டபடினு சொல்லுங்க..  டாக்டருங்க ரொம்பக் கெட்டிக்காரங்களா இருந்ததுல பொழச்சிகிட்டேன், 'சாமி'ங்கிறதெல்லாம் வெறும் மூட நம்பிக்கை!"

"சரியாச் சொன்னீங்க. அப்ப இந்தப் பெட்டியை எடுத்து வைக்கச் சொல்லுங்க.. நீங்க கேட்டபடியே கொண்டாந்திருக்கேன்...”

"முடிச்சிப்பிடறேங்க..."

"மறுபடி சுற்றுப்பயணம் எப்போங்க?"

"தோ... நாளைக்கே.. மொதல்லே உங்க மாவட்டம்தான். எல்லா ஏற்பாடும் வழக்கப்படி செஞ்சுடுங்க..."

சந்தோஷ ஆரவாரங்கள்... நிறைய பெட்டிகள். உடனுக்குடன் உதவியாளர் உள் அறைக்குக் கொண்டு செல்கிறார். தொடர் பேட்டிகளுக்கிடையே உள்ளே செல்லும் பெட்டிகளின் எண்ணிக்கையிலும் தலைவர் படுகவனமாக இருக்கிறார்.

உள்ளே __

நெற்றிக் குங்குமம் மின்ன,  முருகன் படத்தின் முன் அமர்ந்து கூப்பிய கரங்களுடன் தன்னில் கரைந்து கண்ணீர் மல்க, அந்த அம்மையார் கந்தசஷ்டிக் கவசத்தை மனம் ஒன்றிச் சொல்லிக் கொண்டிருக்க-

எதிரே பளபளத்து ஓங்கி நிற்கும் வெண்கலக் குத்து விளக்கில் ஒற்றைத் தனிச் சுடர் சோபையுடன் ஒளிர -

கீழே தாழ்த்த நேரமில்லாததுபோல, மேலுயர்ந்த கரங்களுடன் முருகன் படத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறான்.

பங்களா காம்பவுண்டை ஒட்டியிருந்த குப்பைமேட்டிலிருந்து தூங்கியெழுந்த அந்தச் சொறி நாய், தண்டால் எடுப்பது போல உடலை வளைத்து சோம்பல் முறித்துவிட்டு, தன் வளைந்த வாலைத் திரும்பித் திரும்பி நிமிர்த்தி நிமிர்த்தி முயன்று முயன்று...  மறுபடியும் அது...




=====================================================================================================

வர்ணனை :  இது தேவன் ஸ்டைல்!

ஒருவரைப் பற்றிய வர்ணனை என்னும்போது எழுத்தாளர்களிடையே வித்தியாசம் இருக்கும்.  சுஜாதா அதிகம் வர்ணிக்க மாட்டார். சாண்டில்யன் பக்கம் பக்கமாக வர்ணிப்பார்.  நா பா ஹீரோக்களுக்கு எப்போதும் தாமரைப் பூ போல பாதம் இருக்கும்.  அரவிந்தன் என்று பெயர் இருக்கும்!  எழுத்தாளர் தேவன் பற்றி சில வாரங்கள் முன்பு பார்த்தோம்.  அவர் வர்ணனை எப்படி என்று பார்ப்போமா?


ஸி ஐ டி சந்துரு பற்றிய தேவன் அவர்களின் வர்ணனை 

அவன் அடுத்தபடி என்ன செய்வான், அவன் வாயிலிருந்து என்ன வார்த்தை வரும் என்று யாருக்குமே சொல்லத் தெரியாது. அவனுக்கே தெரியுமோ என்னமோ என்றுகூட யோசிக்கும்படி இருக்கும். ஆனால் அவன் சொன்ன பிறகு எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள். அவன் மட்டும் கல்லுப் பிள்ளையார் போல இருப்பான். அவன் வார்த்தைகளில் வேகம் இருந்தது; கனம் இருந்தது; பேசினால் முகத்தைப் பெயர்க்கிற மாதிரி இருக்கும். அதைக் கண்டு எல்லாருமே அஞ்சினார்கள். அவன் ஆபீஸில் மேலதிகாரிகளுக்குக் கூட அச்சம்தான். 'சந்துரு' என்றால் ஜாக்கிரதையாக, வேறு யாரையாவது அனுப்பிப் பேசச் சொன்னார்கள். இவனிடம் அப்படி என்ன அசாதாரணமான சக்தி இருக்கிறது என்று ஒரு முடிவு செய்வதற்குள் அந்தச் சக்தியைக் காட்டி விடுவான்.

ஒரு தடவை பார்த்து விட்டால் மறக்க முடியாத உருவம் அவனுடையது. 'அழகு' என்று ஏமாந்து விட வேண்டாம். ஏதோ ஒரு கவர்ச்சி மட்டும் இருந்தது. நல்ல உயரம், கொஞ்ச குட்டையாக இருந்திருந்தால் ஆசாமி பருமன் என்று சொல்லி விடுவோம். இப்போது அந்தக் குறை இல்லை. மூக்கு கூர்மையாக இருக்கும்; கண்விழிகள் நேரில் பார்க்க முடியாதபடி உள்ளடங்கிக் காணும் எனினும், பார்வையால் குத்தும் திறன் அவற்றிற்கு உண்டு. சட்டையைக் கழட்டினால் மார்பெல்லாம் இரும்பு என்று தோன்றும்படி கடினமாக இருக்கும். யாரையேனும் சந்துரு ஒரு முறை குத்தினால் அவன் எழுந்திருப்பதில்லை என்று சிலர் சொல்லுவதுண்டு; அவன் யாரையும் குத்தி வீழ்த்தினதாகச் செய்திகளில் காண முடியாது.

இவன் உண்மையிலேயே அத்தனை கெட்டிக்காரனா, இவனுடைய மூளை எப்படி வேலை செய்கிறது என்று அனேகர் சிந்தனை செய்திருக்க வேண்டும். ஒரு கேள்வி கேட்டு முடிப்பதற்குள் அவன் பதில் கொடுத்திருக்கிறான்.  எதிர்பாராத விஷயங்களைத் திடும் என்று சொல்லி திகைக்கச் செய்திருக்கிறான். இந்த வகையில் பிறர் பார்த்துத் தன்னை மேதாவி என்று சொல்ல வேண்டும் என்று அவன் காத்திருந்ததில்லை. "என்னைவிட மேதாவி கிடையாது!" என்று திடமாக அவனே சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் செய்த காரியங்களோ எந்தவித பரிசிரமமும் இல்லாமல் நடைபெற்றதாகத் தோன்றினவாகையால், அவனைப் பார்த்து ஒரு "வந்தனம்' கூறக் கூடத் தயங்க வேண்டி வந்தது. அவனும் தனது வெற்றிகளைப் பற்றி அதிகம் நினைப்பவனாகத் தோன்ற வில்லை. சென்னை நகரம் எல்லாம் அவன் பெருமை பாடிக் கொண்டிருந்த சமயம், சிந்தாதிரிப்பேட்டையில் அவன் ஜாகையில் இரண்டாம் மாடிப் பெஞ்சியில் விரித்த ஜமக்காளத்தில் காலை நீட்டிப் படுத்து, பெரிய கொட்டாவியாக ஒன்றை வெளியிட்டு, நித்திரையில் ஆழ்ந்து விடுவான். உலகத்தைப் பார்த்துப் 'பயித்தியக் காரர்களா!' என்று ஏசுவது போல் குறட்டைகளை அனுப்பிக் கொண்டிருப்பான்.

அவன் ஜாகை இருந்த அறையே ஒரு விசித்திரம். அதன் ஜன்னலடியிலேயே நாற்காலியைப் போட்டுக் கொண்டு அவன் உட்கார்ந்து விட்டால் தெருவெல்லாம் தெரியும். அந்த இடத்தில் இருந்தபடியே போவோர் வருவோரை யெல்லாம் கண்காணிக்கலாம். “ஐயா, அரை ஜன்னலுக்குத் தானா கம்பி? பந்தோபஸ்து போதாதே!" என்று கேட்டால், "உங்கள் வீடுகளில் திருடர்களையும், போக்கிரிகளையும், கதவுக்குத் தாழ்ப்பாளும் பூட்டும் போட்டுத் தடுத்து வைத்திருக்கிறீர்கள். நான் அவர்களை வரவேற்கிறேன்; அவர்கள் தானே என் தொழிலை வளம் படுத்துகிறவர்கள்" என்பான்.

இனி ஸி.ஐ.டி.சந்துரு நம் கதையில் தாராளமாகப் பிரவேசிக்கலாம்.


அடுத்து கதையில் சந்துருவை சந்திக்க வரும் ஒரு இளம்பெண் பற்றி மூன்றாம் நபர் வர்ணனை.

பத்மா சொல்லுகிறாள்..." "டாக்டர் மாதிரியும் இருக்கிறார்; வக்கீல் மாதிரியு இருக்கிறார்... பத்மா அவரை அந்த மாமியின் காதலன்

"ஏது, ரொம்ப சர்ச்சை நடந்திருக்கிற மாதிரி இருக்கிறம் அவர்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்கிறார்களா?""

"ஆமாம்... 'இப்போது முடியாது. இருக்கிறார்' என்றேன். அந்த மாமிதான் சொன்னால் 'எப்படியானும் உடனே பேசியாக வேண்டும். கொஞ்சம் போய்ச்சொல்லு' என்கிறாள். உடனே பத்மா என்னிடம், சந்துர இந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டால் மாடிப்படி யெல்லாம் இறங்கி வரவேற்கவே வந்து விடுவார்' என்கிறாள் 

"பத்மாவிடம் நான் பிறகு பேசிக் கொள்கிறேன். அவர்களை இங்கே வரச்சொல்!" என்றான் சந்துரு.

இப்போது சந்துருவின் பார்வை வழியாக தேவன் அவர்கள் அந்தப் பெண்ணைப் பற்றி வர்ணனை.  ஆனால் பெண்ணைப் பற்றிய அவர் வர்ணனைகள் ஆணைப் பற்றிய அவர் வர்ணனைகளை விட குறைவாகத்தான் இருக்கின்றன!

இரண்டு நிமிஷங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் அறையில் பிரவேசித்தார்கள்.

சம்பா வர்ணித்தது அவ்வளவும் உண்மைதான்; பத்மா முகத்தைச் சுளித்ததும் மிகவும் நியாயமேதான். இந்த மாதிரி பிரமாத அழகிகனைக் கண்டு சாதாரணப் பெண்கள் பொருமுவதும் இயற்கையே. சந்துரு பெண்களின் முக லட்சணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கும் பேர்வழி இல்லை; அவன் மனக்கதவு அந்தத் துறையில் அடைபட்டுத் துரு ஏறிவிட்டது. எனினும், இவளைப் போன்ற ஒரு பேரெழில் கொண்ட மங்கையை அபூர்வமாகத் தான் காண முடியும் என்பதை உணர்ந்து கொண்டான்.

இருபது முதல் இருபத்திரண்டு வரை அவள் வயதை மதிக்கலாம். நடையிலேயே ஒரு அடக்கம் தெரிந்தது; குழந்தை போன்ற சங்கோஜமும் பயந்த சுபாவமும், அவள் அழகுக்கு ஒரு மெருகு கொடுத்த மாதிரி அமைந்துவிட்டன. உடுத்தியிருந்த புடவை மிக விலை பெற்றதுதான்; ஆனால், அதில் டாம்பீகம் இரண்டு அதிசயமான பேட்டிகள்

இல்லை. சுருள் கருளாக இருந்த கேசம், மான் குட்டியினுடையதைப் போன்ற கண்ரோஜா இதழைப் போல  மேனி    இருக்கும்...  இப்படி எல்லாம் அவளை ஒரு கவி வர்ணித்திருப்பான். சந்துரு உட்கார்ந்தபடி முகத்தை நிமிர்த்தி, புருவத்தை நெரிக்காமல், "வாருங்கள்" என்றான்.

அடுத்து இன்னொரு பெண்ணைப் பற்றிய அவர் வர்ணனை.

மாடியிலிருந்து இந்திராவுடன் இறங்கி வந்த ஸ்திரீதான் திலகவதி - அந்த வீட்டு எஜமானி என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

பார்வைக்கு வெகு அழகி. ஒருமுறைக்குப் பதினைந்து முறை பார்க்க வேண்டியவள். இந்திராவைப் போன்று அடக்கமான அழகு இல்லை அவளுடையது.  ஒருவித பகட்டு, படாடோபம் அதிலே இருந்தது.  'நான் நன்றாக இருக்கிறேன். என்னை முறைத்துப் பாருங்கள். நான் அலங்காரம் செய்து கொண்டு வந்திருக்கிறேனே, அதைக் காண உங்களுக்குக் கண் இல்லையா?' என்று அதட்டிக் கேட்பதுபோல் இருந்தது அவள் நடை!  படம் பிடித்துப் பார்த்தால் இந்த சோபை குன்றியே காணும். பத்தில் ஒரு பங்கு எழில்தான் அதில் வரும். முழு வனப்பையும் எதிரில் பார்க்க வேணும் - பளிச் சென்ற சிரிப்பு, இமைகளின் சுழற்சி, புருவத்தின் வளைவுகள், தலையின் குலுக்கல்- எல்லாம் ஒரு புதிய பாணி.

சந்துருவை அவள் முதலில் நோக்கியதும் ஒருகணம் மௌனமாக நிதானித்தாள். பிறகு, "வாருங்கள்! நம் நீங்கள் வருகிறது, ஒரு பெருமை என்றில்லா விட்டாலும் எங்களுக்கெல்லாம நல்லது, ஒரு தென்பு!" என்றபடி எதிரில் வந்து உட்கார்ந்தாள். பிறகு இந்திரா உட்காருவதற்கு ஒரு நாற்காலியைக் காட்டினாள்.

சந்துரு அவளிடம் ஒன்றுமே பதில் சொல்லவில்லை. தலையை ஒருமுறை குனிந்து நிமிர்ந்து, "நீயே யெல்லாம் பேசு; நான் கேட்டுவிட்டுப் போகிறேன்" என்கிற தோரணையில் விறைப்பாக உட்கார்ந்தான்.

கணேஷுக்கு வஸந்த் போல ஸி ஐ டி சந்துருவுக்கு இன்ஸ்பெக்டர் சரளா.  அவர் பற்றிய வர்ணனை.

மிஸ் சரளாவுக்கு இருபத்தெட்டு வயது இருக்கும். ஒரு மனித உடலுக்கு எத்தனை சதை அத்தியாவசியமோ அவ்வளவே . தான் அவளுக்கு இருந்தது. பார்த்தவுடனே “ஓ! இவர் மிகவும் படித்தவர்" என்று தோன்றும்படி முகத்தில் ஒரு குறுகுறுப்பு காணப்பட்டது. கூர்மையான மூக்கு! அழகிய வாய். கண்களில் ஒளி, எதிரில் நிற்பவரை ஊடுருவிப் பாயும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. அரையில் ஒரு சாதாரண நூல் புடவையே உடுத்தியிருந்தாள். எனினும், அதற்கு ஒரு சோபை இருந்தது. நகைகள் அதிகம் தேவை இல்லை என்று மனப் பான்மை கொண்டவளாகக் காட்டின, அவள் அணிந்திருந்த ஆபரணங்கள்.


================================================================================================

69 கருத்துகள்:

  1. நாய்வால் கதையில் இப்போதுள்ள, மறைந்த பல அரசியல்வாதிகளின் பெயரைப் போட்டே எழுதலாம். அவ்வளவு அருமையாக உண்மைக்கு நெருக்கத்தில் எழுதப்பட்ட கதை.

    போகப்போகும் கணத்திற்கும், உயிர் பிழைத்த கணத்திற்கும் இடைவெளி இல்லாமல் வெளியிட்டிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... நீங்கள் சொன்ன இடம் மட்டுமின்றி, கதை முழுவதும் இருந்த நிறைய பிழைகளைத் திருத்தி இருக்கிறேன்!

      நீக்கு
  2. கரு காலத்தில் எழுதப்பட்ட கதையா இல்லை சுடவை மனதில் வைத்து எழுதப்பட்ட கதையா என பட்டிமன்றமே வைக்கலாம். தீர்ப்புச் சொல்வதற்குள் நடுவருக்கு வேர்த்து விறுவிறுத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையெல்லாம் யார் விவாதிக்கிறார்கள், தீர்ப்பு சொல்ல...  திருத்தப்படும் தீர்ப்புகள்தானே அதிகம்!

      நீக்கு
  3. வர்ணனை... முதல் பத்தி இரு தடவை வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  4. வர்ணனைகள் முக்கியம்தான். ஒரு கேரக்டரைப் பற்றிய பிம்பத்தை வாசகர் மனதில் ஏற்படுத்துவதற்கு, அதைவிட ஓவியம் வரைபவர்களுக்கு. ஆனால் வெறும்ன வர்ணனைகளைப் படித்தது ரசிக்கும்படி இல்லை. அதைவிட, வர்ணனை, அதற்கு ஓவியர் வரைந்தருந்த சித்திரம் எனப் பகிர்ந்திருந்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு பைண்டிங் புத்தகத்தை - அப்பா விட்டுச் சென்ற என் கலெக்ஷனில் இருந்தால் - தேடி எடுக்க வேண்டும்!  இது அல்லயன்ஸ் வெளியீட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

      அதே சமயம், இப்போது கணேஷ் பாலா உதவியுடன் ஜஸ்டிஸ் ஜெகந்நாதன் போன்ற கதைகள் அப்போது பத்திரிகையில் வந்த படங்களுடன் வெளியாகி இருக்கின்றன.  நான் கண்காட்சி போன அன்றுதான் வெளியானது.  இந்தச் சிறப்பு எனக்கு அப்புறம்தான் தெரியும்!

      நீக்கு
  5. ஹி..ஹி.. கதை எழுதப்பட்ட காலத்தைப் பற்றி என்ன நெல்லை? எல்லா காலத்திற்கும் பொருந்தும் கதை என்று எடுத்துக் கொள்ளுங்களேன்
    சில எழுத்தாளர்களின் எழுத்துச் சிறப்பு இது தச்ன். காலம் தாண்டிய சிறப்பு பெற்று விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்...  நன்றி.  அவர் அந்த வருடத்தில் யாரை மனதில் வைத்து எழுதினாரோ...

      நீக்கு
  6. ஆரம்பமே அட்டகாசமான ஆரம்பம். சிறுகதைக்கான ஆரம்பம். முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன், ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...   ரெஃப்ரெஷ் செய்து வாசியுங்கள்.  நிறைய பிழைகள் திருத்தப்பட்டிருக்கும்.

      நீக்கு
  7. @ நெல்லை
    ///அருமையாக உண்மைக்கு
    நெருக்கத்தில் எழுதப்பட்ட கதை..///

    உண்மை..

    பதிலளிநீக்கு
  8. தேர்ந்த எழுத்தாளரின் நடை, விவிரிப்பு, வர்ணனை, சிறப்பான கதை. உங்கள் தந்தையார் பிரபலமாயிருக்க வேண்டும். இடது கால் பக்கம் சல்வார் கமீசுடன் அந்தப் பஞ்சாபிப் பெண், செழுமையின் கோதுமைப் பளபளப்பு, பல வருஷங்களுக்க முன் வடநாட்டுச் சுற்றுப் பயணத்தில் ஒரு நாள் விளையாட்டில் கிடைத்த வாரிசு. 'எமோஷனல் நேஷனல் இண்டக்ரேஷனை'ப் பற்றி அவர் வெகுவாகப் பேசிய நாட்கள் அவை. ஆமாம், எப்போதும் எமோஷனல் அதனால் 'இன்டக்ரேஷனும்' இருந்து தொலைத்தது. பாவம், காணாமல் போனது, 'நேஷனல்' மட்டும் தான்.// :)) அரசியல்வாதிகள் எப்போதும் இப்படித்தானோ?
    //

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா..   ஆமாம் அரசியல்வாதிகள் எப்போதும் சமூக வியாதிகள்தானே!

      நீக்கு
    2. //உங்கள் தந்தையார்..//
      முதன் முதலில் கண்டுபிடித்தது பா.வெ. இவர் உன்னிப்பான கவனத்தை சொல்லவே இதைச் சொன்னேன். பின்னால் வரும் பின்னூட்டங்கள்
      முன்னாலிட்டது போலப் பல சமயங்களில் முந்திக் கொள்வதால் இதைதும் சொல்ல வேண்டியதாயிற்று. பா செ.க்க் ஒரு சபாஷ்!

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. ஜீவி ஸார்..  சொல்லவில்லையே தவிர, மற்றவர்களும் அறிவார்கள்!

      நீக்கு
    5. ஜீ வி அண்ணா, எங்க எல்லாருக்குமே நன்றாகத் தெரியும் கதை எழுதியவர் ஸ்ரீராமின் தந்தை என்று. பல பதிவுகளில் அவர் அப்பாவைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரே. கூடவே அப்பாவின் கதை ஒன்று முன்னரே ஒரு வியாழன் பதிவில் என்று நினைவு. வந்திருக்கிறது.

      கீதா

      நீக்கு
    6. இந்தப் பதிவு விசேஷமான பதிவு. பெரியவரின் சிறுகதை ஒன்று முதன் முதலாக எபியில். வெளியாகிற சிறப்புப் பதிவு. அதனால் அதை யார் முதலில் சொல்லப் போகிறார்கள் என்பதற்காக நான் காத்திரும்தேன்.
      அந்தக் காத்திருப்பு அர்த்தமுள்ள காத்திருப்பு. அதனால் மன நிறைவோடு பாராட்டினேன். அவ்வளவு தான்.

      நீக்கு
    7. நன்றி ஜீவி ஸார்...   நீங்கள் பல நாட்களாகவே சொல்லிக் கொண்டிருந்தீர்கள்.  

      எனக்கென்னவோ ஏற்கனவே ஒருமுறை அப்பாவின் கதையை இங்கு பகிர்ந்திருப்பதாய் ஒரு ஞாபகம்.

      நீக்கு
  9. ​கதையின் ஒன் லைன் 'கடவுள் மறுப்பாளரையும் கடவுள் காப்பாற்றுகிறார், எல்லாம் அவன் செயல்.

    திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை, வர்ணனைகள் அதிகம், என்று சில குறைகள் தென்பட்டாலும் கதை வாசிக்க அலுப்பு தட்டாமல் சீராக உள்ளது. செவ்வாய் கதை சீரியல் ஆக வெளியிட போகிறீர்களா?

    காரெக்டர் வருணனை என்றால் சாவியை மிஞ்ச முடியாது. அதே போல் அவருடைய விவரிப்புகளுக்கு ஏற்றவாறு படம் வரைந்தவரும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்...  

      // செவ்வாய் கதை சீரியல் ஆக வெளியிட போகிறீர்களா?//

      அதெல்லாம் ஒன்றும் இல்லை. 

      சாவி, 'கேரக்டர்' என்றே ஒரு தொடர் எழுதினார்..

      நீக்கு
    2. கதையின் ஒன் லைன் 'கடவுள் மறுப்பாளரையும் கடவுள் காப்பாற்றுகிறார், எல்லாம் அவன் செயல்.//

      ஜெ கே அண்ணா, எனக்குத் தோன்றிய மெயின் கருத்து தலைப்பிற்குரியது. சாகக் கிடக்கும் தருவாயில் சங்கரா சங்கரான்னவரு பிழைச்சதும் மறுபடியும் பழைய குருடி பாருங்க...எல்லா ஏற்பாடுகளும் செய்ங்கந்னு சொல்கிறாரே தலைவர் அந்த எல்லா என்பதில் பல அர்த்தங்கள். ....திருந்தாத ஜென்மங்கள்! என்பதுதான் கதையின் பொருள்.

      கீதா

      நீக்கு
    3. திருத்த முடியாத ஜென்மங்கள் என்றும் கொள்ளலாம்...அப்படிப் பார்த்தா, சாகக் கிடக்கும் தருவாயில், கடவுளை விளித்து பாவமன்னிப்பு வேறு கோருகிறார்...பிழைத்ததும் அது நினைவில் வர வேண்டுமே! கடவுள் அதை அல்லவா செய்திருக்கணும்!!!!!

      கடவுள் எனும் வார்த்தையை இங்கு கொண்டு வந்தால் நிறைய கேள்விகள் எழும். பலவற்றை tally செய்ய வேண்டி வரும்!!!!

      கீதா

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. சூப்பராக, கண் முன்னே விரியும் காட்சிகள்....நான் நினைச்சேன் ஓகே அவுட் போலருக்குன்னு வாசித்துக் கொண்டே வரப்ப...ஓ! அப்ப பிழைச்சுக்குவார் போல....என்று தோன்றுகிறது. டாக்டர்கள் அர்த்தபுஷ்டியுடன் பார்த்துக் கொண்டு நிமிடங்களை, நொடிகளை கவுன்ட் செய்வது மட்டும் புரியலை.

    அழகான நடை. விவரிப்பு. தத்ரூபம். ரசித்து வாசித்தேன் ஸ்ரீராம். ஒரே ஒரு வருத்தம், அப்பாவின் காலத்தில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படாததுதான். ஒரு சிலருக்குத்தான் க்ளிக் ஆகும் போல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாக்டரின் கணிப்புகளையும் மீறி பிழைத்து விடுகிறார்.  இவர்களெல்லாம் தொண்ணூறு வயதுக்கு மேல் கூட வாழ்வார்கள்!

      நீக்கு
  12. தலைப்புக்கு ஏற்ற கதை. அப்பாவின் கதை பகிர்வு நன்றாக இருக்கிறது.

    /இறைவா, என்னை மன்னித்து, அருள் செய்.. என்னை மன்னித்து விடு.. இறைவா இறைவா!//

    இவர் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து பிழைக்க வைத்து இருக்கமாட்டார் இறைவன் அவர் மனைவியின் இடைவிடாத பக்திக்கு தான் பிழைக்க வைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

    இறைவன் பிழைக்க வைத்து நல்லவராக திருத்தி அனுப்பி இருக்கலாம்.
    சந்திர சேகரன் சார் சொல்வது போல எல்லாம் அவன் செயல் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே...  மனிதன் நினைக்கலா,..  கடவுள்தான் முடிப்பான்!

      நீக்கு
  13. பாவம், காணாமல் போனது, 'நேஷனல்' மட்டும் தான்.//

    வார்த்தையாடல்களை ரொம்பவே ரசித்தேன். இது ஒரு உதாரணம்!

    பாருங்க போய்டுவோமோன்னு இருந்தப்ப, சாமியெல்லாம் வே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாமியெல்லாம் வேண்டிக்கிடறார்.....பாவம் புண்ணியம்....அது இதுன்னு...பிழைச்சு வந்ததும் டபால்னு மாறுவது....அதான் நாய்வால்! கடைசில அந்த முடிவு மறைமுகமாகச் சொல்வது நல்லாருக்கு.

      கீதா

      நீக்கு
    2. ஆமாம். அதுவும் குப்பைத் தொட்டி சொறி நாய்!!!!

      நீக்கு
    3. யெஸ் அதேதான் ஸ்ரீராம். சொறி!!!!!!

      கீதா

      நீக்கு
  14. "ஹார்ட்லி ஃபைவ் மினிட்ஸ்." ஒரு கடைசிச் சடங்கை சட்டப்பூர்வமாகவும், அவர் அடிக்கடி சொல்லி வந்துள்ள விஞ்ஞானபூர்வமாகவும் நிறைவேற்றி வெளி உலகிற்குப் பிரகடனப்படுத்த அவர்கள் காத்திருக்கிறார்கள்.//

    இப்பகுதிதான் கொஞ்சம் புரியலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியுலகுக்கு அனவுன்ஸ் பண்ணும் சடங்கு..  தன்னிச்சையாக சொல்லாமல் மருத்துவர்களின் டெக்னிகல் வார்த்தைகளுடன் 

      நீக்கு
  15. முகநூலில் ஓவியர் ஜெயராஜ் அவர்களை பற்றி ஒருவர் பகிர்ந்து இருந்ததை படித்தேன்.
    கதை ஆசிரியர் கதைக்கு ஏற்ப அழகான ஓவியம் வரைவதில் சமர்த்தர் என்று புகழ்ந்து இருந்தார்.
    வர்ணனைகளுக்கு ஏற்ப வரைவதில் ஒவ்வொரு ஒவியரும் ஒவ்வொரு விதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைக்கு ஏற்ப ஓவியர் ஜெ பெரும்பாலும் வரைவதில்லை. பதின்ம வயதில் நாங்க அவர் வரையும் பெண் படத்தைப் பார்ப்பதில்தான் ஆர்வம் கொண்டிருந்தோமே தவிர, கதைக்குப் பொருத்தமான்னு பார்த்ததில்லை. அவரும் வாசகர்களுக்காகத்தான் படம் வரைந்தாரே தவிர கதைக்கல்ல (பெரும்பாலும்)

      நீக்கு
    2. எனக்கும் நெல்லையின் கருத்துதான் கோமதி அக்கா...   எந்த இடத்தில் தன் கைவரிசையைக் காட்டலாம் என்று ஓவியர் முடிவு செய்து கொள்வார்.  மிகச் சில சமயங்களில் பத்திரிகை ஆசிரியரோ, படைப்பாளியோ இன்ன இடத்தில்  படம் வேண்டும் என்று கேட்பார்கள்!

      நீக்கு
    3. ஆமாம் நீங்கள் இருவரும் சொல்வது சரிதான்.

      எனக்கு ஜெயராஜின் எனக்கு சீதா பாட்டி , அப்புசாமி , ரசம் , பீமாராவ் படங்கள் பிடிக்கும் படத்தை பார்த்தாலே சிரிப்பாக இருக்கும். சார் மிக அழகாய் அப்படியே ஜெயராஜ் வரைந்த ஓவியம் மாதிரி சீதா பாட்டியை, அப்புசாமியை வரைந்து இருந்தார்கள் ஒரு நோட்டில்.

      ஒரு குடும்ப நண்பர் தன் தங்கைக்கு காட்டிவிட்டு தருகிறேன் என்று வாங்கி போனவர்கள் கொடுக்கவில்லை. பல முறை கேட்டுப்பார்த்தும் தரவில்லை.

      நீக்கு
    4. கொடுத்திருக்கவே கூடாது!  சிலருக்கு அருமை தெரிவதில்லை கோமதி அக்கா.

      நீக்கு
  16. மென்ன சோகம் என்பது கவித்துவமான சொற்கள்!

    கதை வெளிவந்த பத்திரிகை பெயர் என்ன ஸ்ரீராம்? அந்தப் படத்தில் க்ளியரா தெரியலையே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் தெரியவில்லை கீதா. ஏதோ மதுரையில் வெளியாகும் சிறு பத்திரிகை.

      நீக்கு
  17. சந்துருவின் பார்வை வழியாக தேவன் அவர்கள் அந்தப் பெண்ணைப் பற்றி வர்ணனை. ஆனால் பெண்ணைப் பற்றிய அவர் வர்ணனைகள் ஆணைப் பற்றிய அவர் வர்ணனைகளை விட குறைவாகத்தான் இருக்கின்றன!//

    காரணம், தேவன் அவர்களுக்குப் பரிச்சயமில்லாமல் இருக்கலாம் இல்லைனா இப்படிப் பாருங்க....சந்துருவின் பார்வை வழியாக என்பதால் அந்தக் கதாபாத்திரம்

    //சந்துரு பெண்களின் முக லட்சணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கும் பேர்வழி இல்லை; அவன் மனக்கதவு அந்தத் துறையில் அடைபட்டுத் துரு ஏறிவிட்டது. //

    சந்துருவின் கதாபாத்திரம் இப்படி இருக்க அப்புறம் எப்படி வர்ணிக்க முடியும்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. சரளமான நடை. நல்ல கதைக்கரு. எக்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் உள்ளது. இவர் ஏன் பிரபலமாகவில்லை என்னும் கேள்விக்கு பதில் சொல்வது கஷ்டம். ஒருவேளை காக்காய் பிடிக்கத் தெரியலையோ?

    நா.பா.வின் கதாநாயகன் குறிஞ்சி மலரில் மட்டும் தான் அரவிந்தன். பொன்விலங்கில் சத்தியமூர்த்தி. மணிபல்லவத்தில் இளங்குமரன். இப்படிச் சொல்லிண்டே போகலாம். மணிவண்ணன் என்ற புனைப்பெயரில் தான் பெரும்பாலான சரித்திர நாவல்கள் எழுதப்பட்டன. அப்போல்லாம் இந்தப் புனைப்பெயரையும் எழுதும் பாணியையும் வைத்து ஒரிஜினலாக யார் அது எனக் கண்டுபிடிப்பது எங்களுக்குள் ஓர் போட்டியாக இருக்கும். அப்படிக் கண்டு பிடித்தவர்களில் நா.பா. சுஜாதா போன்ற சிலர் அடங்குவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... அப்போதெல்லாம் கதைகளும் எழுத்தாளர்களுமே நல்ல பொழுதுபோக்கு.

      நீக்கு
  19. அப்பா, அம்மாவின் படங்களோடு கதை வெளியிட்டிருக்காங்க. கீழே ஓரத்தில் ஸ்ரீதேவிசதன் என்றோ என்னமோ ஒரு பெயர் காணப்படுகிறது. ஸ்ரீதேவி வரைக்கும் சரி. அதுக்கப்புறம் உள்ள எழுத்துக்கள் சரியாத் தெரியலை. 2011 இல் கதை வெளிவந்திருப்பதால் அப்போதைய தலைவர்களில் யாராய் இருக்கக் கூடும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்கேன் செய்த பின் பேப்பரைத் தொலைத்து விட்டேன்.  அப்பா ஜெராக்ஸ் எடுத்து அனுப்பி இருந்தார். 

      நீக்கு
  20. சந்துரு பற்றிய குறிப்புக்கு நன்றி. கிட்டத்தட்ட மனப்பாடம் செய்த பகுதி. ஒரு இடத்தில் சென்னையில் அப்போப் பிரபலமான சாம்பு இருந்ததால் சந்துருவால் பிரபலம் ஆக முடியலை என வரும். தேவனின் லக்ஷ்மி கடாக்ஷம் மட்டும் கொஞ்சம் தீவிரமான சிந்தனையைக் கிளப்பும் நாவல். மிஸ்டர் வேதாந்தமும் கொஞ்சம் வருத்தத்தைத் தரும் என்றாலும் கதையமைப்பு நன்றாக இருக்கும். எங்க குழந்தைங்க தேவனின் நாவல்களில் மிஸ்டர் வேதாந்தம் படிச்சுச் சொல்லும்போது வேண்டாம்மா, ரொம்பக் கஷ்டமா இருக்கு, கேட்கவே என்பார்கள். நல்லவேளையாக லக்ஷ்மி கடாக்ஷம் எல்லாம் அவங்களுக்குச் சொன்னதில்லை. பொன்னியின் செல்வன் படிச்சுச் சொல்லும்போதும் ரொம்பவே வருந்துவார்கள். பின்னால் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானதும் கிரி ட்ரேடர்ஸ் மூலமா அவற்றை வரவழைச்சுக் கொடுத்தேன் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாம்புவும் சந்துருவும் க்ளாஷ் ஆகவில்லையா என்று எனக்கும் படிக்கும்போது தோன்றியது.  இன்ஸ்பெக்டர் கோபாலன் காமன் போலிருக்கு.  அவரும் குறிப்பிட மாட்டேங்கறார்!

      நீக்கு
  21. பாண்டிமாதேவியும், கபாடபுரமும் நா.பா. எழுதியவற்றில் எனக்குப் பிடிச்ச சரித்திர நாவல்கள். இவர் மதுரையில் பிறக்கலைனாலும் மதுரை நகர் மேல் ஆழ்ந்த காதல், பக்தி உள்ளவர். ஒருவேளை அதனால் கூடப் பிடித்த எழுத்தாளராக ஆனாரோ எனத் தோன்றும். சித்தப்பா வீட்டில் அவரை நேரில் பார்த்தப்போ ஏதோ ஜென்ம சாபல்யம் அடைந்தது போல் ஓர் உணர்வு. அப்போ வாசகர் வட்டம் என்னும் குழு மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது, பெரும்பாலான பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் வாசகர் வட்டம் மூலமே வெளிவரும். வந்ததும் சித்தப்பாவுக்குக் கிடைக்கும் முதல் காப்பியைப் படிச்சுடுவேன். அம்பை, ஆதவன், சுஜாதா, எஸ்.கஸ்தூரிரங்கன், பாலகுமாரன், விபத்தில் இறந்த அவர் நண்பர் சுப்ரமண்ய ராஜூ, வெங்கட் சாமிநாதன், தி.சா.ராஜூ, தி.ஜானகிராமன், போன்ற பலர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வாய்ப்பு, நல்ல அனுபவங்கள் கீதா அக்கா...   உங்களிடம் ஒரு கேள்வி..  சரித்திர நாவல்களில் சோழர் சரித்திர நாவல் சுவாரஸ்யமா, பாண்டியர் அல்லது பல்லவர் சரித்திரக் கதை சுவாரஸ்யமா? 

      எழுத்தாளர்களைக் கொண்டு முடிவு செய்வீர்களோ?

      நீக்கு
    2. குறிப்பா அப்படி எல்லாம் எதுவும் இல்லை. பாலகுமாரனின் சமூக நாவல்கள் கவர்ந்த அளவுக்குச் சரித்திர நாவல்கள் கவரவில்லை. கோ.வி.மணிசேகரனும் சுமார் ரகம் தான். கௌசிகன் கொஞ்சம் பரவாயில்லை ரகம். அகிலன்,நா.பா., சாண்டில்யன், ஜெகசிற்பியன், விக்கிரமன், கல்கி. இந்த வரிசையில் தான் எனக்குப் பிடித்த சரித்திர எழுத்தாளர்கள். கல்கி எப்போவும் முன்னுரிமை. அடுத்து அகிலன், நா.பா. பின்னர் ஜெகசிற்பியன், சாண்டில்யன், விக்கிரமன். கௌசிகன், கோவி.மணிசேகரன் எல்லாம் பின்னர்.

      நீக்கு
    3. கௌதம நீலாம்பரன் என்று கூட  சரித்திர நாவல்கள் எழுதினார்.  மகுட நிலா என்று மு மேத்தா ஒரு சரித்திர நாவல் எழுதினார்.   சுஜாதா இரண்டு எழுதினார் என்று நமக்கெல்லாம் தெரியும்!   சாலையக்குறிச்சி வெற்றிவேல் இப்போது புகழ்பெற்ற சரித்திரக்கதை எழுத்தாளர்.  வானதியில் அவர் எழுதிய பல புத்தகங்கள் கிடைக்கின்றன.

      நீக்கு
  22. பாண்டிய நாடு பற்றிய சரித்திர நாவல்கள் மிகக் குறைவு ஸ்ரீராம். எனக்குத் தெரிந்து ஜெகசிற்பியன்,நா.பா., அகிலன் போன்ற மிகச் சிலரே பாண்டிய சரித்திரத்தை அலசி இருக்கின்றனர். இத்தனைக்கும் மிகத் தொன்மை வாய்ந்தது பாண்டிய நாடு. ராமாயண, மஹாபாரத காலத்திலேயே இருந்தது. அங்கிருந்து பிரிந்த சிலர் தான் சேரநாடு என ஒன்றை அமைத்தார்கள் என்பார்கள். சோழநாடு வடக்கே இருந்து வந்தவர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதன் ஆழமான உண்மையான வரலாற்றைத் திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் மிக விரிவாக அலசி இருப்பார். அதில் பார்க்கலாம். பொன்னியின் செல்வனில் கூட சோழநாட்டு வம்சாவளி பற்றி கட்டியக்காரர்கள் கூறும்போது மனு மாந்தாதாவில் இருந்து சிபிச் சக்கரவர்த்தியை ஆரம்பிச்சுச் சொல்லுவதாக இரண்டு பத்திகள் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாண்டியர்களுக்கு விளம்பரம் பிடிக்கவில்லையோ...  சோழர்கள் நிறைய கல்வெட்டுகள் வைத்திருந்தார்களோ...  பாண்டியர் போலவே பல்லவ வம்சமும் பழைய பரம்பரைதான் இல்லையா?

      நீக்கு
  23. ஆனால் வரலாற்றில் முதல் இடம் சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் தான். முன்னர் எழுதிக் கொண்டிருந்த சரித்திர எழுத்தாளர்களும் சரி, (சாண்டில்யன் ஓரிரு சரித்திர நாவல்கள் பாண்டியர் பற்றி எழுதியிருப்பதைச் சொல்ல மறந்து போனேன்.) இப்போது எழுதும் காலச்சக்கரம் நரசிம்மாவும் சோழர்கள், பல்லவர்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை சரித்திர நாவல்கள் படிப்பதே அரிய சரித்திர உண்மைகளைத் தெரிந்து கொள்ளத் தான். நான் படிச்ச சரித்திர நாவல்கள் மூலம் பள்ளிப்படிப்புப் படிக்கும்போது நிறைய பலன்கள் ஏற்பட்டிருந்தன. ஆகவே சரித்திரம் பற்றிய ஆர்வம் தான் தூண்டுகிறது. அது சோழர்களோ, பல்லவர்களோ, பாண்டியர்களோ யாராய் இருந்தாலும். ஆனால் தமிழகத்திற்கு வலியப் போய் ஆபத்தை வரவழைத்துத் தமிழ்நாட்டைக்குட்டிச் சுவராய் மாற்றியது பிற்காலப் பாண்டியர்களே என்பதில் எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடம் இல்லை. பொதுவாக இந்திய சரித்திரத்திலேயே வடக்கே ராஜபுத்திர அரசுகள் உள்பட இப்படியான தாயாதிச் சண்டைகள் தான் என்றாலும் தமிழகம் அடிமைப்பட்டது முழுக்க முழுக்கப் பாண்டியர்களால் மட்டுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் நாவல்கள் மூலம் சில சரித்திர சம்பவங்கள், விஷயங்கள் அறிந்து கொண்டிருக்கிறேன்.  உதாரணமாக கனோஜி ஆங்கரே, பாலாஜி பேஷ்வா போல...

      நீக்கு
  24. //https://jayasreesaranathan.blogspot.com/2023/12/blog-post.html//

    நான் அடிக்கடி படிக்கும் தளங்களில் இது முதன்மையானது. பல அரிய தகவல்களைக் கொடுத்து வருகிறார். இவரின் ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவைத் தேடிப் பிடித்துப் படித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி பதிவு 2023 டிசம்பருடன் நிற்கிறது.  பார்க்கிறேன் கீதா அக்கா.

      நீக்கு
  25. நாய் வால்...

    நாய் வால் நிமிர்ந்து என்ன ஆகப் போகின்றது!?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!