24.2.26

சிறுகதை - பொக்கிஷம் - பனி முடி மீது ஒரு கண்ணகி - M V வெங்கட்ராம்

பனி முடி மீது ஒரு கண்ணகி   

M V வெங்கட்ராம்

ஹிமாசலத்தின் அந்தரங்கமான அந்தப்புரம். 'உயிர் உருவங்களில்தான் இருக்க வேண்டிய நிலைமை என்று மட்டும் அல்ல, உருவற்றும் உயிர் தோன்றி வளர்ந்து உலாவும்' என்னும் ரகஸியத்தை மலையரசன் மறைத்து வைத்திருந்த இடம் அது.

பாறைக் கருப்பைகளை விரித்து உயிருக்கு ஒரு தொடக்கமோ, ஒரு முடிவோ இல்லை என்பதைத் தூலமாய்க் காட்டிக் கொண்டிருந்தது இயற்கை...

சிருஷ்டிக்கு ஆணும் பெண்ணும் தேவை என்ற மனிதக் கற்பனையில் பொருளற்ற தன்மையை விளக்குவதற்காக, பாறைகள் ஈரமாகி, கருத்தாங்கி, வயிறு பிளந்து ஈன்ற விருட்ச ராசிகள். மதம் கொண்ட அஞ்ஞானிகள் போல் உண்டுகொழித்துப் பருத்து உயர்ந்து விரிந்து, விரிந்தும், உயரத்தை எட்ட முடியாமல் தவித்து, உயரத்துக்குமேல் உயரமும், பெருமைக்கு மேல் பெருமையும் இருப்பதை அறியாமல், மேலும் உயர்ந்து, மேலும் விரிந்து மேலும் தவிக்க;

நீண்டு வளைந்து நெளிந்து ஓடோடியும் முடியாமல் களைத்துச் சுருண்டு துவண்டு கிடந்த கொடிகள், 'ஆழத்தின் கீழ் ஆழம் உண்டு; அந்த ஆழம் கண்டால் அற்புதம் காணலாம்' என்று தேடுவனவே போல் பாறைச் சந்துகளிலும், பள்ளத்தாக்குகளிலும், இறங்கிக் குனிந்து தேடும்போது, தம்மை அறியாமல், தாம் பெற்ற மணத்தை 'ஃகும்' என்று பரப்பிக் கொண்டு மகிழ:

தேடியதைக் கண்டறிந்து பரவசமுற்றவர்களைப் போல், 'மேடும் பள்ளமும் எமக்கு இல்லை என்று கலகலவென நகைத்தவண்ணம் சிற்றருவிகள் களித்து வெறித்துக் குதித்தாட:

என்ன என்பதையும், ஏன் என்பதையும் நிரூபிப்பதற்காக அறிவில் புதுப்புது ஆராய்ச்சிகள் தொடுத்து ஓயாத வாதப்போர் புரியும் தர்க்கவாதிகளைப் போன்று வண்ணப் பறவைகள் மரங்கள்மீதும், பாறைகள் மீதும் அமர்ந்தும், ஆகாசத்தில் பறந்தும் ஓயாமல் ஆரவாரம் செய்ய,

சிகரங்கள் மீது அலை அலையாக வந்த வெண் முகில்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருவதும், ஒன்றன் மீது ஒன்று அமருவதும், ஒன்றும் ஒன்றும் ஒன்றாய்க் கலப்பதுமாய் இருப்பது ஓர் ஒன்றுதான் என்பதை வரையறுக்கும் ஒரு தோற்றம் எழுப்ப.

ஓர் அமைதி மலையாக அங்கு நிற்கிறது.

*
ந்த இடத்திலும் மனிதக் குரல் கேட்கிறது.

ஆகா...! மனிதன் ஏறாத உயரம் இல்லையா? கம்பீரமும் இனிமையும் செறிந்த அந்தக் குரல் பாடுகிறது:

ஒளியில் விளைந்த உயர் ஞானப்
பூதரத்துச்சியின் மேல்
அளியில் விளைந்த தோர்
ஆனந்தத் தேனை அனாதியிலே​
வெளியில் விளைந்த வெறும் பாழைப்
பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பியலா முகமாறுடைத்
தேசிகனே!"


திரை கடல் ஓடித் திரவியம் தேட முற்படாமல், பருவத்தின் உச்சி ஏறி அறிவு தேட முனைந்த தமிழகத்து இளைஞன் அவன். இல்லாவிட்டால், தமிழில் இனிமை அந்த மலைப் பிரதேசத்தில் இவ்வளவு பாங்காக எவ்வாறு இசையும்?

அவன் பெயர் கண்ணன்.

ஆரோக்கியமே வடிவெடுத்தது போன்ற உடற்கட்டு; அப்போதுதான் அருவியில் குளித்த புது மெருகு. அந்த உடலுக்கு ஒரு பொலிவு அளித்தது. கெளபீனதாரியாக, தன் இசையில் பரவசமுற்றவனாக, செடிகொடிகளையும் மலைப் பாம்புகளையும் மிதித்துக் கொண்டும், எதிர்ப்பட்ட விலங்குகளைத் தடவிக் கொடுத்தவாறும் அவன் நடத்தான்.

பாட்டு முடியும்போது அவன் எதிரில் ஒரு குடிசை நின்றது.

அடைத்திருந்த கதவிடம் அவன் குரல் கொடுத்தான்.

"கண்ணகி! சூரியோதயம் ஆகிவிட்டது.  இன்னுமா தூக்கம்?"

"ஏன் வெளியில் நின்று கூச்சல் போடுகிறாய்? உள்ளே வந்தால் என்ன?" என்ற பதில் குரல், பெண் குரல்: அதுவும் தமிழ்க் குரல்தான்.

"கதவு மூடியிருக்கிறதே!!"

"என்னடா புதிய கேள்வி இது? தாழில்லாத கதவு என்று இன்று புதிதாகத் தெரிந்து கொள்கிறாயா? மிருகங்களின் அல்லலுக்காகத்தான் கதவை
அடைத்தேன். நீ மிருகம் இல்லையே.. "

கதவைத் தள்ளிக் கொண்டு கண்ணன் உள்ளே நுழைந்தான்.

குடிலுக்குள் இருபது வயதுப் பெண் ஒருத்தி; இரண்டாயிரம் ஆண்டு இளமைப் பாறை மீது இரண்டு முழத் துண்டு ஒன்றைப் பெயருக்கு'ப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

கண்ணன் பார்த்தான். கண்கள் இருக்கின்றனவே! ஒரு பெருமூச்சைத் தொண்டைக்குள் நெறித்து மறைத்துக் கொண்டான்.

"இப்போதுதான் எழுந்தாயா கண்ணகி"

"என்னைப் பார்த்தால் அப்படித் தோன்றுகிறதா?

"குளிக்க வரலில்லையே நீ என்று கேட்டால் -"

"குளிக்க வேண்டுமா?"

"வேண்டாமா? மனசுக்கு ஒரு கலகலப்பு:  தியானத்துக்கு ஒரு தெளிவு"

''அப்படியா? குளித்தால் கலகலப்பும் தெளிவும் வருமா" என்று முறுவலித்தாள் கண்ணகி,

"என்ன இன்று இடக்காகவே பேசுகிறய், முதலில் என்னை மிருகம் என்றாய்."

"நீ மட்டும் உள்ளே வர வழி தெரியாமல் தயங்கலாமா?"

"கதவு மூடியிருக்கிறதே. நீ உள்ளே என்ன செய்கிறாயோ என்று தயங்கினேன்.....!"

"உனக்குத் தெரியாமல் என்னிடம் இன்று வரையில் ரகசியம் ஏதாவது இருந்திருக்கிறதா?

"அதற்கல்ல.. என்ன இருந்தாலும் நீ ஒரு பெண்!"

"திடீரென்று இன்று நீ ஆணாகி விட்டாயாக்கும். அது போகட்டும். நாம் நம் குருதேவரோடு ஹிமாசலம் வந்து நேற்றோடு பன்னிரண்டு ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன: இல்லையா கண்ணா?"

கண்ணன் கூறினான்: "எனக்கு ஞாபகம் இருக்கிறது. குருதேவர் நம்முடன் ஒன்பது ஆண்டுகள் இருந்தார். எல்லா விதப் பயிற்சிகளையும் கூட இருந்து சொல்லிக் கொடுத்தார்; செய்ய வைத்தார். தியானம், பிராணயாமம், யோக சாதனைகள்........

"குளிக்கவும் சாப்பிடவும் தூங்கவும் கூடத்தான் கற்பித்தார். நமக்கு ஒரு சின்னக் குறை கூட அவர் வைக்கவில்லை. இல்லையா கண்ணா?"

"நாம் எங்கிருந்து எங்கு வந்திருக்கிறோம் என்பதை இந்த நல்ல நாளில் நினைத்துப் பார்க்க வேண்டாமா?"

"நான் எதையும் மறக்கவில்லை. பன்னிரண்டு வருடங்களுக்கு முன், நான் பதினான்கு வயதுச் சிறுவன். அனாதை; ஆண்டி. பெற்றவர்கள் யார் என்கிற செய்தியே எனக்குத் தெரியாது. அதைப் பற்றி அப்போது நான் கவலைப்பட்டதாகவும் ஞாபகம் இல்லை, பசி ஒன்றுதான்: ஊரார் ஊட்டினார்கள். யாரோ சில பாடல்களைச் சொல்லித் தந்தார்கள், நல்ல குரல் இருந்ததால். பாட்டு வயிற்றுப் பையை நிறைத்தது.  திருச்செந்தூரில் இருந்தேன் ஒரு முறை.  'தெள்ளிய ஏனலிற்கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் நான் வேட்டிலை' என்று ஆனந்தமாகப் பாடிக் கொண்டே ஒரு நாள் அலையாடிக் கொண்டிருந்தேன். அலையின் குடலுக்குள் சிக்கி மூச்சுக்குத் தவிக்கும்போது, யாரோ என் கரம் பற்றி வெளியில் இழுத்தார்கள். ஒரு பெரியவர்; நான் அதற்கு முன் பார்த்ததில்லை. 'என்னோடு வருகிறாயா தம்பி?" என்றார். "எங்கே!" என்றேன். 'அங்கேதான்' என்றார் சிரித்துக் கொண்டே.. அலைகளுக்கு வெளியில் வந்து அவரைப் பார்த்தேன். ஏதோ ஒன்று. அவருடன் போகும்படி, உள்ளிருந்து உந்தியது. பிச்சை எடுக்கிற பிழைப்பு, எங்கு நடத்தால் என்ன என்று முடிவு செய்தேன். கால்களில் விழுந்து கும்பிட்டேன். அவரோடு கிளம்பினேன்."

கண்ணகி தொடர்ந்தாள்: "நீங்கள் இருவரும் எங்கெல்லாமோ சுற்றி விட்டுப் பழனிக்கு வந்தீர்கள். உன்னைப் போல் நானும் அனாதைதான். பெற்றவள் முகம் மட்டும் நிழலாய் நினைவிலிருக்கிறது. பழனி அடிவாரத்தில், நடு வீதியில் என்னை எறிந்து விட்டு, 'பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்' என்று உபதேசம் அளித்துப் போய் விட்டாள். எட்டு, ஒன்பது வயசு இருக்கும் எனக்கு. 'முருகா, முருகா' என்றும் 'தண்டபாணிக்கு அரோகரா' என்றும் கத்துவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. பிச்சைக்காரர்களின் வரிசையில் உட்கார்ந்திருந்தபோது, நீங்கள் இருவரும் என் பக்கத்தில் வந்து நின்றீர்கள். குருநாதர் அன்புடன் என் தலையும் முதுகும் வருடினார். "என்னோடு வா. இந்தப் பிழைப்புக்காக நீ பிறக்கவில்லை" என்றார். . ஓர் அப்பா கிடைத்த நிம்மதியோடு அவருடன் நடந்தேன்"

"ஒவ்வொரு ஷேத்திரமாகத் தரிசனம் செய்துகொண்டே, இந்த உச்சிக்கு அழைத்து வந்தார். ஆறு ஆண்டுகள் தமக்குத் தமிழ் ஞானம் முழுவதும் அளித்தார். மூன்று ஆண்டுகள் மௌன சாதனை செய்வித்தார்."

"பிறகு. மூன்று ஆண்டுகள் நீயும் நானும் தனித்திருந்து சாதனை செய்ய வேண்டும் என்று கூறி நம்மை நம் பொறுப்பில் விட்டு விட்டு எங்கோ போயிருக்கிறார்."

நூறாவது பெருமூச்சைத் தொண்டைக்குள் நெறித்துக் கண்ணன் சொன்னான்: ''ஆனால் நம்மைத் தனியாகச் சாதனை செய்ய விட்டு அவர் போனது தவறு என்று தோன்றுகிறது. இல்லையா, கண்ணகி"

"தவமே தவறு என்று உனக்குத் தோன்றவில்லையா, கண்ணா!-"

"பார்த்தாயா, நீ என்னைப் பரிகசிக்கிறாய்."

"குருநாதர் தவறு செய்கிறார் என்று சொல்லும் அளவுக்கு நீ உயர்ந்த சித்தி அடைந்து விட்டாயே. அதனால் கேட்டேன்."

"அதல்ல கண்ணகி. நான் அப்படிச் சொல்வேனா? அவரைக் குறை சொல்வேனா?  குருநாதர் எவ்வளவு பெரியவர்! நான் நன்றி கெட்டவனா? குறை சொல்வேனா? ஆனால் -"​

"ஆனால் என்ன?

"இந்தத் தனிமை..."

"தனிமைதானே சாதனைக்கு அவசியம்?"

"நான் தனியாகவா இருக்கிறேன்?" என்றான் கண்ணன்.

"ஓ.. நான் உன் தவத்துக்கு இடை இருக்கிறேன் என்கிறாயா? என்னை உன்னுடன் பெரியவர் விட்டுச் சென்றது தவறு என்கிறய். நான் வெளியேறி விடுகிறேன். சரிதானே?" அவள், அரையில் சேலைத் துண்டு கட்டிக் கொண்டு எழுந்து குடிசை வாயில் நோக்கி நடக்கலானாள்,

அவன் பாய்ந்து, வழிமறித்தான்.  இரு கரங்களைப் பரப்பி எதிர்நின்று,
"எங்கே போகிறாய், கண்...ணகி?"

அவள் பதில் சொல்லவில்லை.

"என்னைத் தனியாக விட்டு நீ போய் விடுவாயா?"

"நான் இடையூறு என்றாயே நீ."

"எப்போது சொன்னேன் ?"

"தனிமை, அதாவது நீயும் நானும் இருக்கும் தனிமை பிடிக்கவில்லை என்று கூறினாய்."​

"நான் அப்படிக் கூறினேனா?   உட்கார்ந்து கொள்."

அவளுடைய இரண்டு தோள்களையும் பிடித்து அமுக்கி, அவளை உட்கார வைத்தான். மலர் மிருது! பாறை உறுதி; ஆனால் பூவின் மென்மையும் பாறையின் திண்மையும் அவள் உடலுக்கு எப்படி வந்தன ஏக காலத்தில்?
அவள் இரு கால்களையும் நீட்டிக் கொண்டு உட்கார்ந்தாள். அவன் வாசலை அடைத்துக் கொண்டு உட்கார்ந்தான் எதிரில்,

அவள் சிரித்தாள்.

"ஏன் சிரிக்கிறாய், கண்ணகி?"

" என் உடலைத் தொட்டாயா? எனக்குச் சிரிப்பு வருகிறது."

"நான் தொட்டால் உனக்குச் சிரிப்பு வருகிறதா?"

உட்கார்ந்தவாறே நகர்ந்து அவன் அருகில் போனாள். அவனுடைய இரண்டு கைகளையும் எடுத்து வருடினாள்; அவன் மார்பகத்தைத் தடவிக் கொடுத்தாள்; தலையைக் கோதி விட்டாள். "என்னைத் தொட்டாயா, எனக்கும் சிரிப்பு வருகிறது!" என்று அவள் கிளி மிழற்றுவது போல் 'கீ கீ' என்று சிரித்தாள்.

"நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய் கண்ணா!".

"நான் அழகா?"  என்று குரங்கு போல் இளித்தான் அவன்.

"பிராணாயாமமும், யோக சாதனைகளும் உடம்மை நன்கு உரப்படுத்தி​
விட்டன. பாவம், அதனால் நீ எவ்வளவு சிரமப்படுகிறாய்!"

அவன் கண்களில் சிருஷ்டி வெறி வெறித்தது.

"பாவம்!" என்றாள் கண்ணகி:

அவன் கண்களில் சிருஷ்டி வெறி வெறித்தது.

*

"ஹிமாசலத்துக்கு  நாம் வந்து பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. இல்லையா, கண்ணா!'"

'ஆம்' என்பதுபோல் கண்ணன் தலையாட்டினான்.

"நம் பாக்கியம் தமக்கு ஒரு மகாப் பெரியவர் குருவாகக் கிடைத்தார். அவர் ஆதரவிலும், ஹிமவானின் அரவணைப்பிலும் இருந்து கொண்டு நாம் பன்னிரண்டு ஆண்டுகளாக அறிவுத் தேட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இல்லையா கண்ணா?"

'ஆம்' என்பது போல் கண்ணன் மறுமுறை தலையாட்டினன்.

"ஆனாலும் நீ என்னை ஏன் இப்படி வெறித்துப் பார்க்கிறாய்"

கண்ணன் திடுக்கிட்டான். எங்கோ பார்த்து விழித்தான்.

"அஞ்சாமல் என்னைப் பார், கண்ணா! சில நாட்களாக நான் உன்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். எந்த நேரத்திலும் உன் உடல் என் உடலைத் தியானித்துக் கொண்டிருக்கிறது. இரவு நேரம் தான் உனக்கு மிகவும் கொடுமையாக இருக்கிறது. இந்தக் குடிசையின் அடர்த்தியும், ஆண் பெண் ஏகாந்தமும் தான். நேற்று இரவு, உடலை விடுத்து, உயிர் நிலையில் நின்று, ஆத்மானந்தம் நுகர்ந்து கொண்டிருந்தேன், உணர்வு வந்து என் உடல் புரண்டபோது, நீ எட்டிச் சென்று எழுந்து வெளியில் ஓடுவதைக் கண்டேன்"

உனக்குத் தெரியுமா என்று கேட்பவன் போல் அவன் அவளை நோக்கினான்,

"இந்த உடம்பு ஒரு விந்தைப் பொருள். எந்தப் பயன் கருதி இது சிருஷ்டிக்கப்பட்டதோ, அந்தப் பயனைக் குருதேவரின் துணையால் நான் அடைந்து விட்டேன். இனி இந்த உடல் எனக்குத் தேவையில்லை. உனக்கு இதனிடம் கவர்ச்சி ஏற்பட்டுள்ளது. நீ உன் விருப்பம் போல் இதை உபயோகித்துக் கொள்ளலாம்.  ஆனால் பன்னிரண்டு வருஷங்களாக நீ தேடிய பொருள் இதனுள் கிடைக்கும் என்று ஏமாந்து விடாதே!"

கண்ணன் கேட்டுக் கொண்டிருந்தான். கேட்டு முடிந்ததும் திரும்பினான்.

எதிரில் மலைச் சிகரங்கள் தீப்பற்றி எரிந்தன. மரங்கள், பறவைகள், ஆகாசம், செடிகள், கொடிகள், பாறைகள் அனைத்திலும் தீ தொத்திப் பரவி எங்கும் நிறைந்தது.

மீண்டும் திரும்பினான்.

எதிரில் சிவப்பு, நெருப்பு.....

*
"ஹர ஹர மஹாதேவ்!" என்று - கணீரென வாசலில் கேட்டது குருதேவரின் குரல்.


- கல்கி தீபாவளி மலர் 1964

==========================================================================================

பாலகுமாரன் கடைசி பேட்டி..

ஃபேஸ்புக்கில் படித்தது...

தமிழின் மிக முக்கியமான தொடர்கதை எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி பேட்டி எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தது விகடன் டீம். சீனியர் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவரான பாலகுமாரன் வருவாரா, வரமாட்டாரா, அவர் வந்தால்தானே நிறைவாக இருக்கும் என டீமுக்குள் நிறைய உரையாடல்கள். "எத்தனை மணிக்கு வரணும், எங்க வரணும்னு மட்டும் சொல்லுங்க. " என சர்ப்ரைஸ் கொடுத்தார் பாலகுமாரன். ஆனால் ஆனந்த விகடனுக்கு அவர் தரும் கடைசி பேட்டி அதுவாகத்தான் இருக்கும் என்று அப்போது தெரியாது... நெகிழ்ச்சியான அந்த கடைசி சந்திப்பில் நடந்தவை இங்கே!
`விகடனில் நீங்கள் எழுதி வெளிவந்த முதல் கதை எது’ எனக் கேட்டபோது, கண்களை மூடி நீண்ட தாடியைத் தடவிக்கொடுத்தபடியே யோசித்தவர், ``இப்போல்லாம் ஞாபகம் மறதி அதிமாய்ட்டு வருது" என்று அமைதியுடன் இருந்தார். அருகிலிருந்த மனைவியைப் பார்த்து ``சாந்தா... விகடன்ல..." என அவர் கேட்க ஆரம்பிக்கும்போதே ``தாயுமானவன் தொடர்தான் விகடன்ல மொதல்ல வந்தது" என மனைவி சாந்தா ஞாபகப்படுத்த `சபாஷ்’ என்று சிரித்தார் பாலகுமாரன்.
`ஒரே நேரத்தில் நீங்கள் பல தொடர்கள் எழுதினீர்களே அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்’ எனக் கேட்டதும் குழந்தையின் உற்சாகத்துடன்.. ``அப்படிக் கேளுங்க" என்றவர், ``நான், ஒரே நேரத்தில் ஏழு தொடர்கள் எழுதினேன். தொடர்கதை படிச்ச வாசகர்களெல்லாம் இப்ப சீரியல் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க... வாசகர்கள் மேல அந்த வருத்தம் மட்டும் எனக்கு உண்டு. ஆனாலும், அவங்களைச் சொல்லி என்ன இருக்கு. இது விஷ்வல்ஸுக்கான காலம். நான் அந்த ஏழு தொடர்கள் எழுதின சமயம், எனக்கான வாசகப்பரப்பு உச்சத்தில இருந்த சமயம். நானும் என்னை ரொம்பவும் தயார்ப்படுத்திட்டு எழுதினேன். அந்தந்த தொடர்களுக்கான குறிப்பை, கதாபாத்திரத்தின் பெயர்களை வீட்ல இருந்த மர பீரோவுல, செல்ப்ல, ஏன் பாத்ரூம்ல கூட எழுதி ஒட்டி வெச்சுருப்பேன். பல்லு தேய்க்கிறபோது, தலையைத் துவட்டுறபோதுன்னு எல்லா நேரத்திலயும் என் கண்ணு அங்கயேதான் இருக்கும். எந்தத் தொடர் எழுத உட்கார்றனோ அதை எழுதும்போது ஒரு கிளான்ஸ் அவ்ளோதான்" என்றார்.
`இப்பவும் எழுதுறீங்களா சார்’ எனக் கேட்டதுதான் தாமதம், ``என்ன இப்படிக் கேட்டுடீங்க? எழுதலன்னா, எழுத முடியலைன்னா செத்துப் போயிடுவேன். பழைய மாதிரி ஒரே சமயத்துல பல பத்திரிகைகளுக்குத் தொடர்கள் எழுத முடியலையே தவிர, எழுதாம ஒருபோதும் என்னால இருக்க முடியாது" என்று ஆவேசப்பட்டார்.
``ஜனங்களோட விருப்பம் என்னவோ அதுதான் சினிமா, அதுதான் பத்திரிகை, அதுதான் நாடகம். ஆனா, இலக்கியம் மட்டும்தான் நான் சொல்றத கேளுன்னு மக்கள்கிட்ட சொல்லும். அதுக்கு அந்தச் சக்தியும் இருக்கு. அந்தச் சக்தியில ஒருபகுதியாக நான் இருந்திருக்கிறேன், இருப்பேன்னு என்னாலே பெருமையா சொல்லிக்க முடியும்." என்றவரின் குரலில் இருந்த உறுதியைக் கேட்டு கூடியிருந்த மற்ற எழுத்தாளர்கள் அனைவரும் கைதட்டினர்.
சந்திப்பு முடிந்ததும், இரண்டு கட்டைப் பை நிறைய கொண்டு வந்த புத்தகங்களை அங்கு வந்த எழுத்தாளர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ``நம்ம எல்லாம் அப்பப்போ சந்திச்சு உறவை வலுப்படுத்திக்கணும். அதுக்கு விகடன் ஒரு வாய்ப்பைக் கொடுத்து இருக்கு" என்றவர் அங்கு தேநீர் பரிமாறிய தம்பி உட்பட கூடியிருந்த அனைவரையும் அழைத்து ``வாங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம்" என்றார். போட்டோ எடுத்து முடிந்ததும், அனைவரிடமும் சொல்லிக் கிளம்புகையில் ``இந்தச் சந்திப்பு விகடன்ல எப்போ வரும்னு சொல்லுங்க ஆவலா இருக்கேன்" என்றவர் பிரம்பைப் பிடித்து மனைவியின் கைத்தாங்கலாக நடந்தபடியே காரில் ஏறிச் சென்றார்.

நன்றி: விகடன்  -  நன்றி R. கந்தசாமி ஸார்.

===============================================================================

சுபாஷிதச் செல்வம் - உலகால் போற்றப்படுவது எப்படி?  -  ச. நாகராஜன் = தமிழ்வேதாஸ்.காம்

கர்மணா மனஸா வாசா சக்ஷுஷா ச சதுர்விதம் |
ப்ரசாதயதி யோ லோகம் தம் லோகோனுப்ரஸீததி ||


எவன் ஒருவன் தனது செயலாலும் மனதாலும் வாக்காலும் கண்களாலும் உலகை சந்தோஷப்படுத்துகிறானோ அவன் உலகால் போற்றப்படுவான்.

இனிமையாகப் பேசு!

ப்ரியவாக்யப்ரதாநேன சர்வம் துஷ்யந்தி ஜந்தவ: |
அதஸ்ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா ||


பிரியமான வார்த்தைகளைப் பேசுவதால் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே அப்படி மட்டுமே பேச வேண்டும். ஒருவன் ஏன் வார்த்தைகளில் தரித்திரத்தைக் காட்ட வேண்டும்?!

“வார்த்தைகளில் கஞ்சத்தனமாக இருக்காமல் இனிய வார்த்தைகளையே பேசு” என்பதே இதன் பொருள்

இனியவை கூறல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று” (குறள் 100)


பொருள்:

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகள் இருக்கும்போது அவற்றைத் தவிர்த்துப் காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்ற முட்டாள்தனமாகும்.

====================================================================================

138 கருத்துகள்:

  1. கதை மிகவும் நன்று. மிகுந்த த்த்துவார்த்தமாகச் செல்கிறது.

    உடல் அமைந்த பயன் என்ன? என்ற கேள்வியைத் தூண்டுகிறது. அதே சமயம் ஒவ்வொரு ஆத்தாவிற்குமான கடமை, எதை நோக்கி அது செல்லவேண்டும் என்பதில் பிரபஞ்ச சக்தியின் கை இருக்கிறதா அல்லது நம் கருமங்களுக்கு (முன்வினைகளின் பயன்) மாத்திரமான பலனா அது என யோசிக்க வைக்கிறது.

    ஆனாலும் வாழ்க்கையில் விதிவிலக்குகள் அபூர்வம்தான். பெரும்பான்மை சமூகம் செய்வதே சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.. நல்ல வாசிப்பு நேர்த்தி..

      நீக்கு
    2. //ஆத்தாவிற்குமான //ஆத்மா?

      நீக்கு
    3. ஆத்மாதான். அது சரி..அந்தப் பராசக்தி நம் ஆத்மாவில் உள்ளுறைந்திருந்தால், ஆத்தாவிற்குமான என்று எழுதியிருப்பது சரியாக வருமோ?

      நீக்கு
    4. :-))

      நான் படிக்கும்போது ஆத்மா என்று புரிந்து கொண்டு படித்தேன்.

      நீக்கு
  2. தியானத்தில் ஒரு நிலையை அடைந்த பாலகுமாரன் பற்றிய செய்தி ரசிக்க வைத்தது. அவருடன் கலந்துகொண்ட எழுத்தாளர்கள் படம் இல்லையே.

    எழுத்தாளர்களுக்குள்ளேயும், நாமும்தான் எழுதுகிறோம், ஆனால் இவனுக்கு மாத்திரம் இவ்வளவு பெருமையா? ரசிகர்களா என்ற பொறாமை மனதுக்குள் இருக்காது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ குண்டலினியை எழுப்பி விட்டேன் என்று அவர் எதிலோ எழுதி இருந்ததாக படித்த ஞாபகம்.

      நீக்கு
  3. இனி நேரமில்லை. வரிசையாக்க் கடமைகள். பிறகு வருகிறேன், நான் கதையைப் புரிந்துகொண்ட விதம் தவறோ? கீசா மேடம் என்ன நினைக்கிறார்கள், கஹ, கீர போன்றோரின் கருத்துகள் என்ன என்று தெரிந்துகொள்ள.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, என்னைப் போய் இந்த லிஸ்டில் சேர்த்திருக்கீங்களே! பானுக்காவை விட்டுட்டீங்க.

      எனக்குச் சுத்தமாக இது பற்றிய அறிவு கிடையாது!

      கீதா

      நீக்கு
    2. கோமதிக்காவையும் விட்டுவிட்டீங்களே! அவங்களும் சொல்வாங்க. அவங்க கற்றுக் கொண்ட ஆன்மீகம் சார்ந்து.

      கீதா

      நீக்கு
    3. எழுத்தாளர்களுக்குள்ளேயும், நாமும்தான் எழுதுகிறோம், ஆனால் இவனுக்கு மாத்திரம் இவ்வளவு பெருமையா? ரசிகர்களா என்ற பொறாமை மனதுக்குள் இருக்காது?//

      நெல்லை எழலாம். சிலர் வெளிப்படையாகவே சொல்கிறார்களே பேட்டிகளில் அல்லது செய்தித் துணுக்குகளில்வ் வருவதை வைத்துச் சொல்கிறேன்.

      ஆனால் என் சம்பந்தப்பட்ட தனிப்பட்டக் கருத்தைச் சொல்ல முடியும். நான் ஒன்றும் பெரிய எழுத்தாளினி அல்ல. ஆனால் ஏதோ எழுதுகிறேன் . ஒரு சிலரது எழுத்து ரொம்ப ஸோ ஸோ ஆனால் அவை பெருவெளியில் புகழப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு, ஏன் இங்குமே கூட.....பேசப்பட்ட போது....
      அப்ப தோன்றியதுண்டு. பொறாமை என்று சொல்ல மாட்டேன். ஓர் ஆதங்கம்....இருந்தது. எழுதுவதை விட்டுவிடலாம் என்றும் கூட....காரணம் சிறுவயதிலிருந்தே சூழலின் காரணமாக விழுந்திருந்த தாழ்வுமனப்பான்மை.

      ஆனால் இப்போது இல்லை. நம் எழுத்து நமக்கு. யார் என்ன சொன்னால் என்ன? சரியாக இருந்தால் எடுத்துக்கலாம் இல்லைனா கடந்து சென்று விடலாம் என்ற self worth ற்குப் பழகிக் கொண்டு வருகிறேன்.

      கீதா

      நீக்கு
    4. நீங்கள் எல்லோருமே மேம்பட்ட வாசகர்கள்.  எனக்கு முதலில் இது கதையா, கட்டுரையா என்று சந்தேகம் வந்து விட்டது.  இரண்டு முறை படித்தேன்.  அப்புறம் முடிவு அதுதானா என்றும் சந்தேகம் வந்து விட்டது.  கதை எதைப்பற்றி என்று புரியாததே காரணம்.  அப்புறம் பிழைகளை திருத்திக் கொண்டே மீண்டும் மீண்டும் வாசித்ததில் புரிந்தது.  அதுவும் பாதிதான் புரிந்திருக்கும் என்று தோன்றுகிறது.  எம் வி வி எல்லாம் பெரிய ஆள்.

      நீக்கு
    5. சுமார் ஐந்துமுறைகள் பிழைகளைத் திருத்தி இருப்பேன்.  அந்தக் கால எழுத்தில் ள, ன, எழுத்து வித்யாசங்கள் - ஒரே மாதிரி இருப்பது போல தோன்றுவதால் -, ந் த் ஆனது..  நிறைய  ந த வித்தியாசங்கள்.. 

      அம்மாடி பிழை திருத்த படாத படாத பாடு பட்டேன்.  இன்னும் கூட பிழைகள் இருக்குமோ என்னவோ..  நேற்று இரண்டு முறை படித்துத் திருத்தியபின் இன்று கீதா சொன்ன பிழைகள், அப்புறம் மறுபடி இன்றும் ஒருமுறை மறுபடி முழுதும் வாசித்து..  இதோ கடைசி திருத்தம் ஐந்து நிமிடங்கள் முன்பு முடிந்தது.

      நீக்கு
  4. எம்விவி--யின் கதை ஒன்று.
    பாலாவின் பேட்டி மற்றொன்று.
    --- பிறர் வாசிப்பு நேர்த்தி பற்றி அறிந்து கொள்வதில் என்றைக்குமே எனக்கு ஆர்வமுண்டு. இந்த இரண்டும் பற்றி வாசிப்பவர்கள் என்னன்ன கருத்துகள் சொல்லப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்வைகள் வித்தியாசம் தான் யாரையுமே தனித்து அடையாளப்படுத்துகுறது. ஒருவர் சொன்னக் கருத்திலிருந்து விலகி எந்தளவுக்கு ஒன்றை வாசித்ததில் புதுப்புது கருத்துக்கள் வெளிப்படுகின்றன என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் இன்னும் கூடுகிறது.

      நீக்கு
    2. வாங்க ஜீவி ஸார்...   எல்லோருமே சிறந்த முறையில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...  நீங்கள் அதையெல்லாம் படித்திருப்பீர்கள்.  உங்கள் கருத்துகளுக்காக வெயிட்டிங்.

      நீக்கு
  5. தத்துவார்த்தமான கதை. கதையின் தொடக்கத்திலேயே கதை எதைப்பற்றிச் செல்கிறது...சொல்கிறது என்று வாசித்து வந்தேன். இரு பருவ உயிர்களின் யதார்த்தமான சஞ்சலங்கள். இதை வெற்றிக் கொள்வதுதானே ஆத்மபலம்.

    கடைசியில் கண்ணகி சொல்கிறாள் பாருங்க....//இந்த உடம்பு ஒரு விந்தைப் பொருள். எந்தப் பயன் கருதி இது சிருஷ்டிக்கப்பட்டதோ, அந்தப் பயனைக் குருதேவரின் துணையால் நான் அடைந்து விட்டேன். இனி இந்த உடல் எனக்குத் தேவையில்லை. "//

    ஸோ அது எப்படி ஆளப்பட்டாலும் எந்த உணர்வும் இருக்காது! //ஆனால் பன்னிரண்டு வருஷங்களாக நீ தேடிய பொருள் இதனுள் கிடைக்கும் என்று ஏமாந்து விடாதே!// அருமையான தத்துவம். அந்த ஒரு துளி நொடி கண்ணனிடம் உருவாக்கும் மாற்றம்!

    முடிவு நன்றாக இருக்கிறது. அதுதான் குருதேவர் அவர்கள் இருவருக்கும் வைத்திருந்த பரீட்சை என்று தோன்றுகிறது. இந்த உணர்வை வெல்வது எளிதல்லவே....

    இராமகிருஷ்ணர், சாரதா தேவி டக்கென்று நினைவுக்கு வந்தார்கள்.

    ஆனால் இது எல்லாருக்கும் சாத்தியமா என்றால்....இல்லை அதற்கு அந்த பிரபஞ்ச சக்தியை நோக்கிய மனம் வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்ருதான் தோன்றுகிறது கீதா.

      நீக்கு
    2. நன்றி பானுக்கா.

      கீதா

      நீக்கு
    3. வாங்க கீதா..  வாங்க பானுக்கா...   கீதா..  நன்றாகவே அலசி இருக்கிறீர்கள் மொத்தத்தில்.

      நீக்கு
  6. மற்றொரு நிலையிலும் - அதாவது குடும்பஸ்தனாக இருந்தாலும் இந்த நிலையை அடைய முடியுமா? முடியும் என்றுதான் சொல்லப்படுகிறது அதற்கு சில உதாரணங்களும் உண்டுதான். அதாவது உலக வாழ்வியலை அனுபவித்தும், மனம் அதிலிருந்து விலகி இருப்பதாக தாமரை இலைத்தண்ணீர் போல....

    மீண்டும் வருகிறேன். ஆனால் விரிவாகக் கருத்திட முடியுமா என்று பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அதாவது குடும்பஸ்தனாக இருந்தாலும் இந்த நிலையை அடைய முடியுமா? //

      அதுதானே அத்வைதம்?

      நீக்கு
    2. //குடும்பஸ்தனாக இருந்தாலும் இந்த நிலையை அடைய முடியுமா? முடியும் என்றுதான் சொல்லப்படுகிறது// அப்புறம் எதுக்கு திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற கேள்வி எழாதா? அதாவது குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால், அவங்க நல்ல நிலையை அடையும்வரை கடமை இல்லையா? ஏதோ இறைவன் கொடுத்தான், நான் உலகியல் வாழ்க்கையை விட்டு நீங்கிவிட்டேன் என்று தாமரை இலைத் தண்ணீராக 'குடும்பத்தில்' இருந்துகொண்டு சொல்லமுடியுமா? சொன்னால், அது மனைவியை வருத்தும் செயலாகிவிடாதா?

      நீக்கு
    3. மனைவி வருந்துவதற்கு அவர் கர்மவினைதான் காரணம்!! 

      ஒன்றை அனுபவிக்காமல் இருந்து அதைத் துறப்பதைவிட, அதை அனுபவித்து அதிலிருந்து வெளியே வருவது சிறந்ததுதானே!!

      நீக்கு
    4. //ஒன்றை அனுபவிக்காமல் இருந்து அதைத் துறப்பதைவிட, அதை அனுபவித்து அதிலிருந்து வெளியே வருவது சிறந்ததுதானே!!// அத்வைத சந்நியாசிகள் சிறு வயதிலிருந்தே சன்னியாசி ஆகிவிடுகிறார்கள் (காஞ்சி சங்கரமடம்). த்வைத, விசிஷ்டாத்வைத சந்நியாசிகள் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகே சந்நியாசியாகிறார்கள்.

      நீக்கு
    5. ஓ..  மாற்றிச் சொல்லி விட்டேனோ...!!

      நீக்கு
  7. பேரானந்தத்தை அடைவது என்பது வேறு, பக்தி, தியானம், பிரபஞ்ச சக்தியின் மகத்துவத்தைப் பரப்புவது என்பது வேறு என்பது என் புரிதல்.

    கதையில் சொல்லப்படுவது அது பேரானந்தத்தை அடைவது. அதற்கு மதச்சடங்குகள் தேவையில்லை. ஆனால் கடினமான வழி அது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்மீகம் என்பது முற்றிலும் வேறு. மதங்களுக்கும் அப்பாற்பட்டது என்பது என் புரிதல்

      கீதா

      நீக்கு
    2. திருமணம் செய்து கொண்டு தேடுதல் என்று மனைவியைப் பிரிவதோ, குழந்தைகள் பிறந்ததும் தேடுதல் என்று பிரிவதோ, இல்லை இருவருக்குமே எண்ணங்கள் ஒத்துப் போனாலும், குழந்தை வளர்ப்பு எனும் பொறுப்பைத் துறப்பதோ, விலகுவதோ சரியல்ல என்பது என் தனிப்ப்ட்டக் கருத்து. ஒரு வயதிற்கு மேல் ஓகே. குழந்தைகள் வளர்ந்து பெற்றோரின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளும் நிலைக்குப் பிறகு ஓகே! அப்போதும் கூடச் சில பொறுப்புகள் உண்டு. அதை விட்டு விலகுவது சரியல்ல என்பது இது என் தனிப்பட்டக் கருத்து. எல்லாரும் என்னை அடிக்க வருவதற்குள் அப்பீட்டு.

      வேலை வந்துவிட்டால் பின்னால் வர முடியுமா என்று தெரியவில்லை

      கீதா

      நீக்கு
    3. பொறுப்பை மறந்து துறவறம் ஏற்பது எனக்கும் பிடிக்காது

      நீக்கு
    4. ஹைஃபைவ் கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
    5. பொறுப்பை மறந்து துறவறம் ஏற்பது...  மனிதன் பற்றற்று இருக்கிறானா என்று சோதிக்கிறாரோ கடவுள்?  அதில்தான் இருக்கிறதோ சூட்சுமம்!

      நீக்கு
    6. //பொறுப்பை மறந்து துறவறம் ஏற்பது...// சித்தார்த்தன்.

      நீக்கு
    7. //அதை விட்டு விலகுவது சரியல்ல என்பது // முந்தைய கருத்தில் குடும்பஸ்தனாக இருந்துகொண்டு இந்த நிலை அடையமுடியும்னு சொல்றது. இங்க அது கூடாதுன்னு சொல்றது. அந்நியனும் அம்பையும் ஒரே பெயர்ல ஒளிந்திருக்காங்களோ?

      நீக்கு
    8. இரண்டு நிலைகளில் நின்றும் யோசிக்க வேண்டும் இல்லையா?

      நீக்கு
  8. அறிவார்ந்த சிந்தனையாளருக்கான கதை...

    சில வரிகளுக்கு மேல் படிக்க இயலவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெதுவாக படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  9. ஒவ்வொரு நாளையும்
    கதம்பம் போல ஆக்கி விட்டீர்கள்...
    நன்று.. நன்று..

    பதிலளிநீக்கு
  10. உங்களது தளம்..
    உங்களது விருப்பம்...

    பதிலளிநீக்கு
  11. செவ்வாய் என்றால் சிறுகதை
    மட்டும் என்று இருந்ததே...

    இப்போது சிறுகதையோடு
    கதம்பம் கூடுதல் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  12. பாலகுமாரன் பகுதி சிறப்பு....சுவாரசியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஆனால் ஆனந்த விகடனுக்கு அவர் தரும் கடைசிப்பேட்டி அதுவாகத்தான் இருக்கும் என்று அப்போது தெரியாது... நெகிழ்ச்சியான அந்த கடைசி சந்திப்பில் நடந்தவை இங்கே!//

    கடைசியில் விகடனில் வந்தால் சொல்லுங்கன்னு சொன்னது....வந்ததும் அதைப் பார்க்க இருந்தாரா? வருடம் தெரியவில்லையே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெகிழ்ச்சியான சம்பவம்.

      கீதா

      நீக்கு
    2. // வருடம் தெரியவில்லையே. //

      அவர் மறைந்த வருடம் கீதா!!!

      கேள்வி  :  "திப்பு சுல்தான் எந்தப் போரில் இறந்தார்?"

      மாணவன் : "அவர் கலந்துகொண்ட கடைசிப் போரில் ஸார்"

      நீக்கு
  14. வித்தியாசமான சிறுகதையை தேர்ந்தெடுத்து வெளியிட்டதற்கு பாராட்டுகளும், நன்றிகளும் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வித்தியாசமான சிறுகதை, பானுக்கா. ப்ளஸ் 1

      கீதா

      நீக்கு
    2. நன்றி பானு அக்கா. நன்றி கீதா. R.

      நீக்கு
  15. M.V. வெங்கட்ராம்.. கேள்விப்பட்டிருக்கிறேன். வாசித்த நினைவு இல்லை. மஞ்சரி, கலைமகள் போன்ற பத்திரிகைகளில் எழுதுவாறோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ...   பானு அக்கா..  என்னை அதிர்ச்சி அடைய வைத்து விட்டீர்கள்...  கும்பகோணம் தந்த இன்னொரு மாபெரும் இலக்கியவாதி.  சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர்.  புடைவை  வியாபாரத்திலும் இருந்தார்.  ஜெமோ அறம் என்கிற கதையை  இவரை வைத்துதான் எழுதினார் என்று சொல்வார்கள்.

      அவருடைய ஒரு படைப்புக்கு சாஹித்ய அகாடமி பரிசு கிடைத்திருக்கிறது.  'காதுகள்' என்று நினைக்கிறேன்.  அல்லது மகாபாரதக்கதை சம்பந்தப்பட்ட படைப்பு.  நினைவில்லை.

      நீக்கு
    2. மிகப் பெரிய எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் . மணிக்கொடி எழுத்தாளர் வட்டத்தைச் சார்ந்தவர். தொழில் நெசவு. சௌராஷ்டிர சமூகம். கும்பகோணம் வாசம். என்றாலும் தமிழின் மீது அபார பற்று. மணிக்கொடி தவிர்த்து இவர் ஆரம்ப காலத்தில் கலைமகள், அமுதசுரபியில் எழுதி இருக்கார்னு நினைக்கிறேன். ஆனந்தவிகடனில் ஒரு தொடர் எழுதினார். இவரின் வேள்வித் தீ இவர் சார்ந்த சௌராஷ்டிர சமூகம் பற்றிய ஒரு நாவல். மிகவும் பிரபலமானது. வேள்வித் தீ நாவலின் முடிவு இப்போ நினைச்சாலும் என் நெஞ்சைப் பதற வைக்கும். :( பள்ளிப் பிள்ளைகளுக்கான பாடப் புத்தகங்களைப் பழனியப்பா ப்ரதர்ஸ் பதிப்பகத்துக்காக ஒப்பந்த அடிப்படையில் எழுதினார். இதை வைச்சுத் தான் ஜெயமோகன் இவரைப் பற்றி "அறம்" என்னும் சிறு/நெடுங்(?) கதை ஒன்றை எழுதி இருக்கார். இவரை ஜெயமோகன் பேட்டி காணும்போது காது பிரச்னை. அப்போத் தான் "காதுகளும்" எழுதி இருக்கார். "காதுகள்" என்னிடம் இருந்தது: இப்போத் தொலைந்த புத்தகங்களில் ஒன்று. ஸ்ரீராமின் ஆரோக்கிய சிநேகிதி ஹேமாவின் கணவர் சஷ்டிஅப்தபூர்த்திக்கு ஸ்ரீரங்கம் வந்தப்போ ஸ்ரீராம் எனக்கு எம்.வி.வெங்கட்ராமின் சிறுகதைத் தொகுப்புக்கள் அடங்கிய ஒரு பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈய புத்தகம் கொடுத்திருக்கார். கையீல் தூக்கிப் படிக்கணும். :) மற்றபடி இந்தப் புத்தகத்தால் எனக்கும் என் தம்பிக்கும் புத்தகச் சண்டை வந்து இன்னமும் முடியலை. இஃகி,இஃகி,இஃகி. அவர் எனக்குத் தெரியாமல் எடுத்துண்டு போன இந்தப் புத்தகத்தை நான் வாதத்தில் வென்று திரும்ப வாங்கி வெற்றி அடைந்தேன். :)))

      நீக்கு
    3. மணிக்கொடி காலம் புத்தகத்திலும் இவர் சிறுகதை ஒன்று படித்த ஞாபகம். ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் நூலகத்தில் இவரின் சில புத்தகங்கள் உண்டு. இவர் வீட்டுக்கு வராத இலக்கியப் பேச்சு வார்த்தைகள் நடத்தாத எழுத்தாளர்களே இருக்க மாட்டார்கள். எழுத்தாளர் மௌனிக்காகவென்றே இவர் "தேனீ" என்றொரு இலக்கிய இதழை நடத்தினார் என்பார்கள். தேனீ நான் கேள்விப் பட்டிருக்கேன். பார்த்ததோ படிச்சதோ இல்லை.

      நீக்கு
    4. "ஆர்வி" "எல்லார்வி" ஆர்.சூடாமணி. பிரேமா நந்தகுமார் இவங்கல்லாம் அந்தக் காலத்துக் கலைமகளில் விடாமல் எழுதினவர்கள். அப்போ எல்லாம் எனக்குக் கலைமகள், கண்ணன்,, மஞ்சரி படிக்கத் தடை இல்லாததால் அதிகம் இவற்றை வாசித்திருக்கிறேன். என் அம்மாவால் அறிமுகம் ஆன எழுத்தாளர்கள் இவர்கள் எல்லாம். ராஜம் கிருஷ்ணனும் கலைமகளில் எழுதுவார். இவரையும் அம்மாதான் அறிமுகம் செய்து வைத்தார். எம்.வி.வெங்கட்ராமையும் அம்மாதான் அறிமுகம் செய்து வைத்தார்.

      நீக்கு
    5. அட...கீசா மேடம்.... உங்க அம்மா நிறைய வாசித்திருக்கிறாரா? இதிலெல்லாம் நிறைய ஆர்வம் உடையவரா?

      நீக்கு
    6. அம்மா மட்டுமா? அம்மாவைப் பெற்ற எங்க பாட்டியும் கூட. ஆறு வயதில் 15 வயதுப் பையரான எங்க தாத்தாவை மணந்தவர். ப்ரமக்குடி ஊர். எங்க பாட்டியின் மாமனார் பக்கத்து ஊர். தினமும் காலையில் பரமக்குடி வந்து மருமகளைத் தூக்கிச் சுமந்து கொண்டு தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வாராம். தாத்தா சென்னை சட்டக்கல்லூரியில் படிச்சிட்டு இருந்திருக்கார். அந்தக்கால வழக்கப்படி மாமனார் வீட்டில் படிக்க வைச்சிருக்காங்க. படிப்பறிவ்ய் இல்லாத பாட்டி கணவனுடன் குடித்தனம் செய்யும் போது கணவனால் படிப்புக் கற்றுக் கொண்டு ஆங்கில நாவல்கள் படிக்கும் அளவுக்குத் தேறினார். எங்க அம்மாவைப் பெற்ற தாத்தா வீட்டிலும் சரி, அப்பாவின் அப்பா வீட்டிலும் சரி எல்லோருமே புத்தகப்புழுக்கள். காசு, பணமோ, நகை நட்டோ தேவை இல்லை. புத்தகம் ஒண்ணும் போதும். எங்க மாமாக்கள் மூலமே மு.வரதராசனாரைச் சின்ன வயசிலேயே பள்ளி நாட்களிலே அறிந்திருக்கேன். படிச்சும் இருக்கேன். இதை எல்லாம் முன்னாடியே சொல்லியும் எழுதியும் இருக்கேன். பாட்டிக்குச்சொந்தமாகப் பாடல்கள் இட்டுக்கட்டிப் பாடும் திறன் உண்டு.

      நீக்கு
    7. //அவருடைய ஒரு படைப்புக்கு சாஹித்ய அகாடமி பரிசு கிடைத்திருக்கிறது. 'காதுகள்' // yes

      நீக்கு
    8. சொல்ல வெட்கமாகுது. அம்மாவின் அப்பா அந்தக் காலத்தில் சேதுபதி ராஜாவின் நிதி ஆலோசகர். அவர் அப்பா காலம் வரை திவான் என்னும் பட்டம் இருந்தது. பின்னாட்களில் அது ஒழிக்கப்படவே எங்க தாத்தா சட்ட ஆலோசகர், நிதி ஆலோசகராக இருந்தார். மதுரை ஆரப்பாளையமே சேதுபதி அவர்களால் தாத்தாவுக்குக் கொடுக்கப்பட்டது. எங்க சித்தி கல்யாணத்தின் போது தான் ஆக்கிரமிப்புக்கள் ஆரம்பித்துவிட்டபடியால் விற்றார்கள். என் அம்மாவின் ச்கோதர, சகோதரிகளான நாங்கள் எங்கள் குடும்பத்தின் வாட்சப் குழுவிற்கு "ஆரப்பாளையம் ஜமீன் ஃபாமில்ய்" என்றே பெயர் வைச்சிருக்கோம். அம்மாவுடன் கூடப்பிறந்த நாலு சகோதரர்கள், அம்மாவைச் சேர்த்து ஐந்து சகோதரிகள் இவர்களின் பெண்கள், பிள்ளைகளான நாங்கள் அனைவரும் சேர்ந்து அந்தக் குழுமத்தில் பங்கேற்று வருகிறோம்.

      நீக்கு
    9. Please bear with me for spelling mistakes. :(

      நீக்கு
    10. வாங்க கீதா அக்கா...  ஏகப்பட்ட விவரங்கள்...  ஆஹா... கடைசியில் நான் தந்த புத்தகம் உங்களும்தானே இருக்கிறது?  இங்கே கையில் கொண்டு வந்திருக்கிறீர்களா?  எப்போதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களிடம் நான் தந்த பைண்டிங் புத்தகங்களை திரும்ப வாங்கிக்கொள்ள ஆசை!!

      நீக்கு
    11. உங்க பைன்டிங் புத்தகங்களைத் தனியாக எடுத்து வைச்சிருக்கேன் ஸ்ரீராம். நீங்க பரிசளித்த புத்தகம் இப்போ என்னிடம் இங்கே தான் இருக்கு. கொண்டு வந்திருக்கேன்.

      நீக்கு
    12. // மதுரை ஆரப்பாளையமே சேதுபதி அவர்களால் தாத்தாவுக்குக் கொடுக்கப்பட்டது. எங்க சித்தி கல்யாணத்தின் போது தான் ஆக்கிரமிப்புக்கள் ஆரம்பித்துவிட்டபடியால் விற்றார்கள். //

      ஆ.....

      நீக்கு
    13. // உங்க பைன்டிங் புத்தகங்களைத் தனியாக எடுத்து வைச்சிருக்கேன் ஸ்ரீராம். //

      __/\__

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. வித்தியாசமான சிறுகதைத் தேர்வு. பாராட்டுகள்.

    பாலகுமாரன் - விகடனில் கடைசி பேட்டி - பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஒரு காலத்தில் அவரது நூல்களைத் தேடித் தேடி வாசித்ததுண்டு.

    சுபாஷிதம் - சிறப்பு. முன்பு தொடர்ந்து தினம் ஒரு சுபாஷிதம் என்று ஒரு நண்பர் பகிர்வார், அர்த்தத்துடன். சிறப்பான பல சுபாஷிதங்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
  18. பனி முடி மீது ஒரு கண்ணகி அருமையான கதை பகிர்வு.
    கண்ணகி ஞான வைராக்கியம் அடைந்து விட்டாள்.
    இருவரும் இந்த நிலையை அடைந்து விட்டார்களா என்று சோதிக்க கூட குருதேவர் அவர்களை தனிமையில் விட்டு விட்டு போய் இருக்கலாம்.

    கண்ணனுக்கு நல்ல குருவாக கண்ணகி எனக்கு காட்சி அளித்தாள்.
    சிறு சபலத்தையும் கண்ணன் அந்த கண்ணகி என்ற அக்கினி பிழம்பில் பொசுக்கி விட்டான் கண்ணதாசன் பாடலில் வருவது போல "மேனியை கொல்வாய் மேனியை கொல்வாய் "

    *
    //"ஹர ஹர மஹாதேவ்!" என்று -கணீரேன வாசலில் கேட்டது குரு தேவரின் குரல்.//

    உடல் தேவையை விட்டு விட்டதும் ஞானம் பெற்றதும் சரியான நேரத்தில் குரு வந்து விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் ஞானம் பெற்று விட்டார்கள் என்று குருதேவருக்கு தெரியும் அளவு அவருக்கு ஞானதிருஷ்டி இருந்திருக்கிறது.

      நீக்கு
    2. கண்ணதாசன் வரிகளை அற்புதமாக பொருத்தமான இடத்தில நினைவுகூர்ந்திருக்கிறீர்கள் கோமதி அக்கா.   கண்ணனுக்கு முன்பே கண்ணகி ஞான நிலை அடைந்து விட்டாள் என்று சொல்கிறீர்களா?

      நீக்கு
    3. ஆமாம், அதனால் தான் கண்ணனை வழி நடத்துகிறாள்.

      நீக்கு
  19. //குருநாதர் அன்புடன் என் தலையும் முதுகும் வருடினார். "என்னோடு வா. இந்தப் பிழைப்புக்காக நீ பிறக்கவில்லை" என்றார். . ஓர் அப்பா கிடைத்த நிம்மதியோடு அவருடன் நடந்தேன்"//

    குரு தானாக வருவார் என்பார் மகரிஷி

    கண்ணகியை அறிந்து கொண்டதால்தான் குரு "இந்த பிழைப்புக்கு நீ பிறக்கவில்லை" என்று ஞான மார்க்கத்திற்கு அழைத்து வந்தார்
    அதை சரிவர செய்தாள் கண்ணகி. நல்ல பாதையை கண்ணனுக்கு காட்டினாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் குரு கிடைப்பதில்லை.  அல்லது நல்ல வழிகாட்ட எல்லோருக்கும் குரு கிடைப்பதில்லை. 

      இதைப் படித்ததும் கீதா அக்கா தன் குரு பற்றி பிரஸ்தாபிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.  அவர் தரிசனம் கிடைத்து சில வருடங்கள் ஆகி விட்டன என்றும் சொல்வார்.

      நீக்கு
    2. நேத்திக்குத் தான் நெல்லையின் பதிவில் எங்க குருநாதர் பற்றி நினைவு கூர்ந்திருந்தேன். இந்தக் கதையில் குருநாதர் சரியான தேர்வு செய்து மாணாக்கர்களை/சீடர்களை அடைந்திருக்கார். அதிலும் கண்ணகி உடலை வெல்லும் நில்லையை நினைக்கவே உடல் சிலிர்க்கிறது. நாமெல்லாம் எப்படி இருக்கோம்னு நினைச்சு மனமும் உடலும் கூசுகிறது. கண்ணனோ எனில் உடலாலும் மனதாலும் போராட்டத்துக்கு உள்ளாகிறான். கடைசியில் கண்ணகி மூலமே அவனும் ஞானசித்தி அடைகிறான். சரியாக அந்த நேரத்தில் குருவும் திரும்பி விடுகிறார். ஓர் அக்னிப் பரிட்சையில் இருவரும் தேறி விடுகின்றனர் என்றாலும் எவ்வளவு சோதனைகள்?

      நீக்கு
    3. ஆனால் கீதா அக்கா...  ஞான நிலையை அடைய ஒரு வழிதானா?  பல வழிகள் உண்டே...  எனவே உடம்பு கூச தேவையில்லை. 

      நீக்கு
    4. சிலவற்றை விரிவாக எழுத முடியலை ஸ்ரீராம். புத்தகத்தில் யோகியின் தந்தை குழந்தை வேண்டும் என்பதற்காக மட்டுமே மனைவியுடன் கூடுவார் என யோகியே எழுதி இருக்கார். அந்த மாதிரி ஒரு நண்பர் எங்க நம்பிக்கை குழுமத்தில் இருந்தார். சிறு வயது தான். கல்யாணம் ஆனாலும் மனதில் துறவு நிலை. ஆஞ்சநேய உபாசகர். ஒரே ஒரு பெண் குழந்தை. அதுக்கப்புறம் கணவன்,, மனைவி என்பது மற்றவர்களுக்குத் தான். இவங்க இருவரும் துறவு நிலை ஆழ் மனதில். வெளிப்படையாகப் பார்த்தால் எதுவும் தெரியாது. இன்னொரு இளைய சிநேகிதர் முத்துசாமி என்று. கான்பூர் ஐஐடியில் படிச்சவர். சென்னை ஐஐடியில் வேலையில் இருந்தவர் இப்போ திருச்சி ரீஜனல் காலேஜில் வேலை. மாமா மறைந்ததும் பார்க்க வந்திருந்தார். 40 வயது கடந்தாச்சு. திருமணம் இல்லை. அம்பாள் உபாசகர். ஆனால் அவர் அம்மாவோ எனில் அவரை ரொம்பவும் படுத்துவதாகச் சொல்லுவார்கள். இவருக்கும் எங்க குருதான் குருநாதர். மேலே சொன்ன ஆஞ்சநேய உபாசகருக்கும் எங்க குருதான் குருநாதர். இவங்களை எல்லாம் பார்க்கையில் எனக்கு ரொம்பவே வெட்கமாக இருக்கும். இருக்கு.

      நீக்கு
    5. இந்த இடத்தில் நெல்லைக்கு ஒரு விண்ணப்பம்.  நீங்கள் சொன்ன யோகி புத்தகம் ஒன்று எனக்கு ஆர்டர் போடுங்களேன்.  நான் பணம் தந்து விடுகிறேன்..  புத்தகம் பெயரும் நினைவில் இருக்க மாட்டேன் என்கிறது.  ஆசிரியர் பெயரும் நினைவில் இருக்க மாட்டேன் என்கிறது.  ஞாபகம் வரும்போதே சொல்லி விடவேண்டும் என்று சொல்கிறேன்...

      நீக்கு
    6. அவ்வளவு ஏன்? தக்குடுவைத் தெரியும் இல்லையா உங்களுக்கு? அவரே ஓர் ஸ்ரீவித்யா உபாசகர். அவர் அண்ணா அம்பி நரசிம்ம உபாசகர். மந்திரம் உபதேசிக்கப் பெற்றிருக்கார். இன்னொரு நண்பர் "பெண்"களூரிலேயே இருக்கு சந்திரமௌலி என்பவர் (முன்னால் சத்யத்தில் இருந்தார். இப்போ தெரியாது) தீவிர அம்பாள் உபாசகர். இவங்க எல்லோருமே கிரஹதாச்ரமத்திலேயே ஆன்மிக ஞானம் கிடைக்கப் பெற்றவர்கள். எல்லோருமே ஒரு காலத்தில் சேர்ந்து ஆசார்ய ஹ்ருதயம் என்றொரு வலைத்தளம் ஆரம்பித்து நடத்தி வந்தோம். எல்லாம் ஓரிரு ஆண்டுகள் தான். பின்னர் ஒவ்வொருவராகக் காணாமல் போயிட்டாங்க. :(

      நீக்கு
    7. அருணகிரிநாதர் அதிலிருந்து மீண்டு வந்துதான் உய்வு அடைந்தார் என்பது ஒருபுறம் இருக்கட்டும்,   ஆண் பெண்ணுடனும், பெண் ஆணுடனும் உடல் தொடர்பு வைத்துக் கொண்டால் அது ஞான நிலைக்கு எதிரானது என்று பொருளா?

      நீக்கு
    8. நெல்லை சொல்லுவது திரு எம். எனப்படும் யோகி. இவர் புத்தகம் தமிழில் வந்திருக்கு. அதைத் தான் எனக்குக் கொடுத்திருந்தார் படிக்க. நான் சொல்வது இமயமலை பிரபல யோகி பாபா. இவர் ஆங்கிலத்தில் எழுதி இருக்கார். என் சம்பந்தி எனக்கு இதைப் பரிசாகக் கொடுத்தார். இப்போ ஸ்ரீரங்கத்தில் இருக்கு. அவர் வேறே. நேல்லை சொல்பவர் வேறே. நெல்லை சொல்லுபவர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கார்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    9. பட்டினத்தார் படியுங்கள் ஸ்ரீராம். புரியலாம். ஆனால் இறைவன் சிருஷ்டிக்கெனவே ஆண், பெண் என எல்லாவற்றிலும் இரட்டையாகப் படைச்சிருக்கான். ஆகவே எல்லோருமே உடல் உறவைத் துறப்பது என்பது ரொம்பவே ஆக்ஷேபத்துக்கு உரியது. ஸ்ரீராமானுஜர், ராகவேந்திரர் போன்றோரெல்லாம் இல்லற வாழ்க்கைக்குப் பின்னரே ஞானசித்தி கிடைக்கப் பெற்றார்கள். நமக்கும் அப்படி ஓர் கொடுப்பினை இருந்தால் நம்மையும் அறியாமலேயே இவை எல்லாம் தானாகவே நடக்கும்.

      நீக்கு
  20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  21. கதையின் முதல் பகுதியில் சாண்டில்யன் பாணியில் வர்ணனை. சிறுகதைக்கு அளவிற்கு அதிகம் என்று தோன்றியது.
    தான் யார்? எதற்கு வந்திருக்கிறோம் என்று தெரியாத ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை. அந்த இருவரையும்(ஜீவன்கள்) தேர்ந்தெடுக்கும் ஒரு பெரியவர்(குரு) அவர்களை பல கோவிலகளுக்கு அழைத்துச் சென்று(பக்தி மார்க்கம்) அவர்களுக்கு தியானம், யோக மார்க்கம், பிராணாயாமம் போன்ற பல சாதனை பயிற்ச்சிகளை(ஞான மார்க்கம்) பயிற்றுவிக்கிறார். அதை பயிற்சி செய்ய்து கொண்டிருக்கும் பொழுதும் தடுமாற்றங்கள் வரும், அதை மீறி முன்னேறுவதுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதைத்தான் சொல்கிறாரோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்றின்பங்களைத் துறந்து பேரின்ப நிலையை அடைவது என்று சுருக்கமாக சொல்லலாம் இல்லையா?  கதையை சுருக்கி அழகாக கொடுத்து விட்டீர்கள்.

      எது நமக்கு பிடித்தமானதாக, இன்பமாக இருக்கிறதோ அதெல்லாம் விலக்கபப்ட்ட வேண்டியவை.  எது சிரமமாக, சுவையில்லாமல் கசப்பாக இருக்கிறதோ அவற்றை எல்லாம் அனுபவிக்க வேண்டும்!

      கடவுள் என்பவன் இருந்தால் அவன் கொடுமைக்காரன்தான்!   சில சமயங்களில் எனக்கு இல்லுமினாட்டிகளின் கருத்து சரிதானோ என்று தொன்று,

      நீக்கு
    2. //கதையின் முதல் பகுதியில் சாண்டில்யன் பாணியில் வர்ணனை. சிறுகதைக்கு அளவிற்கு அதிகம் என்று தோன்றியது.// பொதுவாக உரையாடல்களிலேயே கதையை நகர்த்துவார். இந்தக் கதையின் தாத்பரியத்தை உத்தேசித்து இத்தனை இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் தனித்திருக்கும் இரு இளம் வயதுக்காரர்கள் உடலையும் மனதையும் வெல்கிறார்களா என்பதைச் சொல்ல வேண்டி வர்ணித்திருக்கலாம்.

      நீக்கு
    3. ஜனரஞ்சகமான பல சிறுகதைகளும், நாவல்களும் எழுதி இருக்கார். அதில் ஒரு சிறுகதை தகப்பனை இழந்த வீட்டுக்கு மூத்த இளைஞன் ஒருவன் தாயின் பேராசையால் ரயிலில் விழுந்து உயிரை விட்டது. இயல்பான பேச்சு நடை. நடு நடுவில் சௌராஷ்டிர மொழியிலும் வரும். அவன் மணக்க இருந்த பெண் கடைசியில் நல்லவேளையா இவனைக் கல்யாணம் பண்ணிக்கலையே எனச் சொல்வதாக வரும். என்னைப் பொறுத்தவரை மனதை உலுக்கும் முடிவு. கதை படித்த சில நாட்கள் வரை இது நீடிக்கும். அப்படி ஒரு நாவல் முடிவும் எனக்கு மனதில் பாரத்தை ஏற்படுத்தி இருக்கு. நீல.பத்மநாபனின் "தலைமுறைகள்" நாவல். வந்த திரைப்படத்துக்கும் நாவலுக்கும் சம்பந்தமே இருக்காது.

      நீக்கு
    4. தலைமுறைகள் நாவல் படமானதா? என்ன படம்?

      நீக்கு
  22. கதையை வாசித்து விட்டேன்...

    ஏதோ வித்தியாசமாகப் புலப்பட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன அது?

      களவும் கற்று மற ;   பெற்றுத் துற!

      நீக்கு
    2. கூகுள் படுத்தல்...

      களவும் கற்று மற ; காமமும்பெற்றுத் துற !

      நீக்கு
  23. ஆனந்த விகடனில் பாலகுமாரனின் கடைசி பேட்டியா? எந்த வருடம்? உடன் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் யார் யார்? என்ற விவரங்கள் தெரிந்தால் நன்றாக இருக்கும்.
    இதைப் படிக்கும் பொழுது யூ டியூபில் 'சாய் வித் சித்ரா' வில் நேற்று பார்த்த 'ரவுண்ட் டேபிள்' என்னும் காணொளியோடு ஒப்பிடத் தோன்றுகிறது. அதில் பவா செல்லதுரை, தமிழ் பிரபா, என்ற சீரியஸ் எழுத்தாளர்களும், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா(சுரேஷ்,பாலகிருஷ்ணன்) பொன்ற ஜனரஞ்சக எழுத்தாளர்களும் கலந்து கொண்டார்கள். சுபா கூலாக பேச, ப.பிரபாகர் கணையாழியில் எழுதினால்தான் எழுத்தாளர்களா? என்று கோபப்பட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் காணொளி இன்னும் என் பார்வைக்கு வரவில்லை. விரைவில் வந்து விடும்! பா கு பேட்டி எந்த வருடம், யார் யார் பார்ட்டிசிபன்ட்ஸ் என்றெல்லாம் தெரியவில்லை. இவ்வளவுதான் கிடைத்தது!

      நீக்கு
    2. ஹிஹிஹி பாலகுமாரன் எந்த வருடம் இறந்தாரோ, அந்த வருடம் தான் விகடனில் வந்திருக்கணும். இல்லையோ? ஆரம்ப காலத்தில் ரொம்ப ரசித்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். பின்னால் பிடிக்கலை. என்றாலும் இவரின் முதல் சிறுகதை குமுதத்தில் "கெட்டாலும் ஆண்மக்கள் ஆண்மக்களே" என்னும் தலைப்பில் வந்திருந்தது இன்னமும் நினைவில் இருக்கு. வெகுஜனப்பத்திரிகையில் எழுதியவர்களில் இவர் வெற்றியடைந்த அளவுக்கு "சுப்ரமண்ய ராஜு" வெற்றியடையவில்லை. விபத்தில் இறந்தும் போயிட்டார். இந்துமதி கூட இவங்களோட நெருங்கிய நட்பில் இருந்தவர்னு நினைவு. சித்தப்பா வீட்டில் இந்துமதியைப் பார்த்திருக்கேன். கைகள், கழுத்து, காதுகளில் ஆபரணங்களே அணிந்ததில்லை. பின்னாட்களில் காஞ்சிப் பெரியவர் சொல்லிப் போட்டுக் கொள்ள ஆரம்பித்தார் என அவரே ஏதோ பேட்டியில் சொல்லி இருந்தார்.

      நீக்கு
    3. 2018 ஆம் ஆண்டில் எல்லாம் நான் விகடனே பார்ப்பதில்லை. அதுக்கும் பல ஆண்டுகள் முன்னரே சுமார் 2000 ஆம் ஆண்டின் போது நிறுத்தியாச்சு. ஆகவே எனக்கு இதைப் பற்றித் தெரியலை.

      நீக்கு
    4. நான் வாங்கி கொண்டிருந்தேன் என்று ஞாபகம்.  நான் படித்ததும் அப்போது நான் வாங்கி கொண்டிருந்த புத்தகங்களை மாமா வந்து அக்காவுக்கு படிக்க எடுத்துக் கொண்டு போய்விடுவார்.  திருப்பித்தர வேண்டாம் என்றே நானும் சொல்லி இருந்தேன். 

      நீக்கு
  24. எ.பி.யில் முதல் முறையாக சம்ஸ்கிருதம். சிறுகதையில் தத்துவம்.. எ.பி. காவியாகிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1964 ல் எழுதப்பட்ட கதை.  அப்போது இந்த காவி என்னும் அடைமொழி இருந்திருக்குமா?  காவி, சங்கி என்பதெல்லாம் இப்போது அரசியலில் ஆத்திரக்காரர்களால் சொல்லப்படும் வசைமொழிகள் ஆகி விட்டது வேதனை.

      நீக்கு
    2. சுபாஷிதம் அங்கேயே படிச்சிருக்கேன். இங்கே கொடுப்பதும் நன்று. என்னைக் கேட்டால் தினம் ஒன்று எனப் பதிவு ஆரம்பிக்கையில் போட்டு வரலாம். என்னோட ஒரு பைசாக் கருத்து. நான் கொஞ்ச நாட்களுக்கு நகைச்சுவைத் துணுக்கள் போட்டு வந்தேன். பின்னர் விட்டுப் போச்சு.

      நீக்கு
    3. அதைப் பற்றி நான் பெரிதாக ஒன்றும் அறிந்திலேன். பார்க்க வேண்டும்.

      நீக்கு
  25. சுபாஷிதச் செல்வம் - நல்ல கருத்து.

    பல வகை சுபாஷிதங்கள் உண்டோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  26. / அவன் கண்களில் சிருஷ்டி
    வெறி வெறித்தது... ///

    புறப்பட்ட இடத்துக்கு
    வந்தாயிற்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பமாவதும் பெண்ணுக்குள்ளே மனிதன் போறதும் அந்த மண்ணுக்குள்ளே!

      "கண்களில் தொடங்கி கண்களில்  முடித்தான்.  பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்.  மண்ணிலே பிறந்ததை மண்ணுக்கே கொடுத்தான்.  வானத்தில் இருந்தே கவிதையை முடித்தான்" என்று பாடினார் கவியரசர். 

      நீக்கு
  27. கதையில் ஒரே ஒரு குறை கொஞ்சம் போர் என்றால் அதீதமான வர்ணனைகள் என்று தோன்றியது. சொல்ல வரும் கருத்திற்கு அது அவ்வளவு உதவுவதாகவும் தெரியவில்லை.

    இந்த ஆன்மீக உணர்வை அடைவது அத்தனை எளிதல்ல. நிறைய கஷ்டங்களைக் குறிப்பாக மனதை அடக்கத் தெரிந்தால் மட்டுமே சாத்தியம்..

    மனதை அடக்க வழி ஒன்றும் அறிந்திலேன் நான்// ஸ்கந்த குரு கவச வரி நினைவுக்கு வருகிறது.

    மனதை அடக்குவது என்று சொல்கிறோம்...ஆனால் அடக்குவதை விட முழுவதுமாக விடுதலை பெறுவது என்பதுதான்...அடக்கினால் என்றேனும் மீண்டும் டகார்னு பிச்சுக்கும். அப்பப்ப மனம் பெண்டுலம் ஆகும்....அப்பப்ப மனதின் எதிர்மறைகள் போட்டி போட்டுக் கொண்டு தலை நீட்டும்....எனவே அதிலிருந்து முழுவதும் விடுபடுவது என்பதுதான்.....அப்பெண் கண்ணகி சொல்கிறாளே அது போல.....இனி என்ன எது நடந்தாலும் என்னை பாதிக்காது என்ற நிலையை அடைதல் சுற்றிலுமிருந்து விலகி நின்று பார்த்தல். ஆன்மீகத் தத்துவத்தில் சொல்லப்படும் be an observer என்று சொல்லப்படும் மிகப் பெரிய நிலை!

    இந்தக் கருத்தைக் காலையிலேயே கொடுத்தேன் இரு ஐடிகளுக்கும் மாறி மாறி போக வேண்டியதானதால் விட்டிருக்கு என்பதை இப்பதான் தேடிப் பார்த்தும் இல்லையே என்றதும்....மீண்டும் போடுகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கதையில் ஒரே ஒரு குறை கொஞ்சம் போர் என்றால் அதீதமான வர்ணனைகள் என்று தோன்றியது. //

      கதை எழுதப்பட்ட காலம். அதை எழுதுபவர் பாணி.

      //மனதை அடக்க வழி ஒன்றும் அறிந்திலேன் நான் //

      ஸ்கந்தகுரு கவசம் ஒரு பொக்கிஷம்.

      "அடக்கு.. மனதை அடக்கு" என்றொரு பாட்டு இருக்கிறது. கேட்க வேண்டும்!

      நீக்கு
    2. சுபாஷிதம் அங்கேயே படிச்சிருக்கேன். இங்கே கொடுப்பதும் நன்று. என்னைக் கேட்டால் தினம் ஒன்று எனப் பதிவு ஆரம்பிக்கையில் போட்டு வரலாம். என்னோட ஒரு பைசாக் கருத்து. நான் கொஞ்ச நாட்களுக்கு நகைச்சுவைத் துணுக்கள் போட்டு வந்தேன். பின்னர் விட்டுப் போச்சு.

      நீக்கு
    3. அதைப்பற்றி நான் பெரிதாக ஒன்றும் அறிந்திலேன். பார்க்க வேண்டும்.

      ஹிஹிஹி.. நானும் ரெண்டு வாட்டி அதையே கொடுத்துட்டேன்!

      நீக்கு
  28. எபியில் எம் வி வி குறித்து சில பகுதிகள் வியாழனில் பகிரப்படுவதுண்டு.

    நம்ம ஜெ கே அண்ணா இங்கு சனிக்கிழமை நான் படிச்ச கதையில் எம் வி வி அவர்களின் கதை ஒன்றை பகிர்ந்த நினைவு.

    பைத்தியக்காரப்பிள்ளை கதை என்று நினைக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். காலையிலேயே இந்தக்கதை யை படித்து விட்டேன். கதை நன்றாக உள்ளது. முதலில் தொடங்கிய இயற்கையின் வர்ணனை அருமை. அதனுடன் அதை ஒப்பிடுவது போல யாருமில்லாத ஒரு தனிமையுடன், ஆண், பெண்ணாக இருமனித ஜீவன்களின் பிறந்து வளர்ந்து, அங்கு வாழ்ந்து கொண்டிருப்பதின் காரணங்களை மெள்ள மெள்ள சுட்டிக்காட்டியபடி கதையை நகர்த்திய லாவகம் நன்றாக இருந்தது

    மன இச்சைகளை உடல் கட்டுப்படுத்தும் ஞான மார்க்கத்தை இருவருக்கும் முறையே பல வழிகளில் கற்றுத்தந்த குருவிற்கு, குருதட்சணையாக தான் பெற்ற ஞானத்தை கண்ணகி சமர்பித்து விடுகிறாள். ஆனால், கண்ணனின் மனநிலை, ஒரு சாதாரண மனிதரின் மனநிலையாக வழுக்குவதை கண்ணகி கண்டறிந்து கொண்டது அவளின் ஞானம் முழுமையை அடைந்த வெற்றியின் அடையாளம்.

    இறுதியில் கண்ணனின் சிருஷ்டி வெறிப்பார்வையை தன் வார்த்தைகளினால் அமைதிபடுத்திய கண்ணகியின் முற்றுப் பெற்ற ஞானத்தை ஒரு தீப்பிளம்பாக உருவகபடுத்தியது கதாசிரியரின் சிறப்பு. அவருக்குத் துணையாக கண்ணன், கண்ணகியை அதுநாள் வரை சோதித்த குருவும் அந்த ஷணத்தில் வாசலில் தன் தெய்வீக குரல் ஒலிக்க வருவதும் கதையின் முக்கியத் திருப்பம். உண்மையிலேயே வித்தியாசமான கதைதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வார்த்தைகளில் இன்னும் கொஞ்சம் தெளிவு உண்டாகிறது எனக்கு.  வாங்க கமலா அக்கா..  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. //மன இச்சைகளை உடல் கட்டுப்படுத்தும் ஞான மார்க்கத்தை//மிகத் தெளிவான பார்வை கமலா. ஆனால் உடல் தானே இச்சைகளுக்கு உட்படுகிறது இல்லையோ? மனம் அவற்றை விரும்பி அதையே நாடுகிறது என்பதால் மன இச்சை என்றீர்களோ? இச்சைகள் உடலளவில் தீர்ந்தாலும் மனம் நிம்மதி அடைகிறதோ? இல்லையல்லவா? மனம் எப்போதும் ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டே தான் இருக்கும்.

      நீக்கு
    3. ஹையோ..  குழப்பறீங்களே..  எனக்கு அந்த அளவு புரிதல் இல்லையோ...

      நீக்கு
    4. வணக்கம் சகோதரி

      நம் மனந்தானே ஒரு பொருளையோ, காட்சியையோ கண்கள் மூலம் கண்டவுடன் ஆசைகளை(இச்சையை) முதலில் தூண்டுகிறது. உடல் தன்னிச்சையாக இயங்கி அதற்கு ஒத்துழைப்பை தருகிறது என்றுதான் எனக்குத் தோன்றியதை சொன்னேன் சகோதரி. நீங்கள் பல விஷயங்களை கற்று அறிந்தவர். உங்களுக்குத் தெரியாததா..! தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  30. பைத்தியக்கார பிள்ளை எழுதிய M V V யா இந்தக்கதையையும் எழுதினார் என்பது ஆச்சர்யமாக உள்ளது.
    உயிர் என்பது யாது என்பது ஒரு முடிவில்லாத கேள்வி அல்லது விசாரம். ஆத்மா என்று ஒரு சாரார் கூற, பிராண வாயு அல்லது ஜீவ சுவாசம் கிரிஸ்துவர் கூற பலரும் பலவித முடிவில்லாத தர்க்கங்களில் “நான் சொல்வதே சரி” என்ற நிலையில் நிற்க,.... முடிவில்
    உயிர் உள்ளவரையே உயிரை உணர முடியும்
    உயிர் போயினபின் எந்த உயிர் போன உயிரை
    அறிய முடியும்? என்ற ஒரு உண்மையே நிலை நிற்கிறது.

    இன்றைய கதையில் கண்ட முக்கிய உண்மைகள்…

    அகல்யை கதையின் தாக்கம் இக்கதையில் தென்படுகிறது.
    அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம் ஆசிரியர்க்கு மிகவும் பிடிக்கும்
    ஆண் பெண் கவர்ச்சி நித்தியம். அது இல்லை என்றால் ஜீவராசிகள் இல்லை.
    தவம், சாதனை என்பதில் இந்தக்கவர்ச்சியை முறியடிப்பதும் முயற்சியும் ஒன்றாகும்.

    கண்ணனும் கண்ணகியும் கவர்ச்சிக்கு அடிமையாகும் தருணத்தில் தவம், சாதனை என்ற அவர்களின் இலக்கு நினைவில் வர அதற்கு காரணமான அவர்களது குரு வாசலில் நிற்கிறார்.

    இந்தக்கதையின் ஆசிரியர் பெயர் குறிப்பிடாமல் விட்டிருந்தால் கதையின் ஆசிரியர் புதுமைப் பித்தன் என்றே நான் கூறியிருப்பேன். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்...   ஒன்றை அனுபவித்து, அலுத்து வெளியேறி ஞானம் அடைய வேண்டும் என்று கதாசிரியர் சொல்கிறாரோ...

      நீக்கு
    2. ​//ஒன்றை அனுபவித்து, அலுத்து வெளியேறி ஞானம் அடைய வேண்டும் என்று கதாசிரியர் சொல்கிறாரோ...//
      ஆதி சங்கரர் கூறியது, செயல்படுத்தியது.

      Jayakumar

      நீக்கு
    3. அது சரி என்றுதானே படுகிறது!

      நீக்கு
    4. ஆதி சங்கரர் எதை எப்போது அனுபவித்துவிட்டு அலுத்து வெளியேறினார். தவறான கருத்து. சரசவாணி இல்லற இன்பம் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதற்காகத் தன் உயிரை உடலை விட்டு வெளியேற்றி காட்டில் இறந்திருந்த மன்னன் உடலில் புகுந்து கொண்டு அரண்மனைக்கு வந்து சில நாட்கள் அரசியோடு இருந்துவிட்டுப்பின்னர் மீண்டு வந்தார். ஒருவேளை இதைச் சொல்கிறீர்கள் எனில் அவர் அலுத்துப் போய் எல்லாம் வரவில்லை. மண்டன மிஸ்ரரோடு நடந்த விவாதத்தில் தன்னால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்விக்குப் பதில் சொல்லவே இப்படி நடந்தார்.

      நீக்கு
    5. அதோடு இதுக்கும் அகல்யா கதைக்கும் பொருத்தம் இருப்பதாகத் தெரியலை. அதன் தொடர்ச்சினும் அதன் தாக்கம்னும் சொல்ல முடியாது. அகல்யை தன் வாழ்நாளில் முனிவரோடு இல்லற வாழ்க்கையில் தான் இருந்தாள். அதனாலேயே முனிவர் வேடத்தில் இந்திரன் அழைத்தபோது ஒரு கணம் மயங்கினாலும் பின்னர் இந்திரன் என்பதைப் புரிந்து கொண்டே அவனுடன் சேர்ந்தாள்.

      நீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களது பேட்டி பகிர்வு நன்றாக உள்ளது. அதுதான் அவரது கடைசி பேட்டி என்பது நெகிழ்ச்சியடைய செய்கிறது. மனித வாழ்வு என்றும் சாஸ்வதமில்லையே..! என்று அழைப்பு வருமென்பதே புரியாத புதிர்.

    சுபாஷித செல்வம் பகுதியும் அருமை. நல்ல இனிமையான வார்த்தைகளை இயன்ற வரை பேசுவோம். கெடுதலான வார்த்தைகளை நம்மையறியாமல் சொல்லும் போது, இறைவனும் "அப்படியே" என ஆசிர்வதித்து விடுவான் என பெரியவர்கள் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம். நல்ல கருத்துள்ள பகுதி பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  32. பாலகுமாரன் கடைசி பேட்டி நன்றாக இருந்தது.

    ச. நாகராஜன் = தமிழ்வேதாஸ்,காம் பகிர்வும் அருமை.
    இன்று தத்துவ விசாரம் அருமை.

    பதிலளிநீக்கு
  33. ஓவியர் விஜயானு நினைக்கிறேன். பொன்விலங்கு கதாநாயகன் சத்தியமூர்த்தியையும், கதாநாயகி மோகினியையும் நினைவூட்டுகி
    ரது.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை வித்தியாசமான பாணியில் என்றால், வந்த கருத்துக்கள் அனைத்தும் அவரவர் பார்வையில் அருமையாக உள்ளது. படித்தேன். ரசித்தேன். (பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர அழைத்தேன். என்ற பாடல் நினைவு வருகிறது.)

    இதில் தேன் என்பது ஒருவகை இனிப்பின் சுவையை சுட்டுகிறது. பொதுவாக இனிப்பே அதிகம் உண்டால் மயக்கத்தை ஏற்படுத்துவது. ஆனால் தேன் மருந்தென /அதிலும் மருந்துக்காக மட்டுமே உட்கொள்வது. கதையிலும், இந்த தேன் மாதிரிதான் கண்ணகி பேசுகிறாள். அதிகம் நீ மனச் சபலப்பட்டால், பன்னிரண்டு வருடம் அரும்பாடுபட்ட பெற்ற உன் ஞானமெனும் தேன் மருந்தாக இருக்க வேண்டியது விஷமாக மாறி விடுமென கண்ணனுக்கு அறிவுறுத்துகிறாள். ஏனெனில் அவள் தேனின் (ஞான மார்க்கம்) சுபாவம் குறித்து முழுதாக கற்றுத் தேர்ந்தவளாக கதையில்.காட்டப்படுகிறாள்.கதையை மீண்டும் படித்தேன். மனித மனங்களுக்குள் எத்தனை வித்தியாசங்கள் சட்டென புகுந்து விடுகிறது. படிக்கப்படிக்க பல வகையான கருத்துக்களை மனதில் தோற்றுவிக்கும் கதை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /எதிரில் மலைச் சிகரங்கள் தீப்பற்றி எரிந்தன. மரங்கள், பறவைகள், ஆகாசம், செடிகள், கொடிகள், பாறைகள் அனைத்திலும் தீ தொத்திப் பரவி எங்கும் நிறைந்தது.

      மீண்டும் திரும்பினான்.

      எதிரில் சிவப்பு, நெருப்பு..../

      .அந்த நெருப்பில் அவன் மனதில் எழுந்த "காமத்தீயும்" (இதையும் தீ எனச் சொல்வதும் இதுவும் தன் மனம் போனபடி கொழுந்து விட்டு எரிந்து அடங்குவதால்தானோ..!) சாம்பலாகி போகும் நேரத்திற்காகவே அங்கு மீண்டும் பிரச்சனமாகிறார் அவர்களின் குரு. நல்ல முடிவு. நன்றி.

      நீக்கு
  35. ஒருத்தர் விடாமல் அன்பர்களின் கருத்துக்களை அந்தந்த பதிவுகளுக்கான குறிப்புகளாக எடுத்துக் கொண்டேன். எழுதத் துவங்கிய ஒரு புதுக்கதைக்காக இவை தேவைப்பட்டன. உதவிய அன்பர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!