சென்ற வார குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடையைச் சொன்ன ஒரே நண்பர் சூர்யா. விடையை என் மெயில் ஐடிக்கு அனுப்பி இருந்தார்.

1 ஆறில் ஒன்று. அடைமொழியையும் குளிர்ச்சியையும் நடுவில் சந்தியுடன்
இணையுங்கள் (5)
2 தமிழ் மொழியின் அந்தக்கால டிக்ஷனரி (5)
3 பீடாதிபதியை இப்படி அழைப்பதும் உண்டு (5)
5 வெள்ளையும் சொள்ளையுமாய்த் திரியும் ஆசாமிகளின் உடை நிறத்தை இதற்கு ஒப்பிடுவது உண்டு (3)
6 முன்னாள் ஜனாதிபதி காலை இழந்தார். பாத்திரம் என்றும் சொல்லலாம் (3)
8 ஆசிரியருக்கு இன்னொரு பெயர் (2)
இடமிருந்து வலம்
1 கீதா மாமியின் ஸ்பெஷலாக்கும் இது (5)
4 பழுத்த பழம் (4)
6 முருகதாஸுக்கும் விஜய்க்கும் இந்தப் படம் அப்படி ஒன்றும் சோபிக்கவில்லை (3)
7 ஆரம்ப 70களில் வந்த பிரபல ஹிந்திப் பாடல் இப்படித்தான் ஆரம்பிக்கும் (2)
7 ஒரு வகையான நாட்டிய போஸ். குழம்பியுள்ளது. முதலிரண்டு எழுத்துக்கும்
தோனி மற்றும் அஜித்துக்கும் சம்பந்தமுண்டு. கடைசி மூன்றெழுத்து எண்ஜாண் உடம்பில் ஒரு ஜாணாக்கும் (5)
வலமிருந்து இடம்
4. யுத்தத்தை செந்தமிழில் சொல்லுங்கள் (2)
5. ஆபத்து வந்தால் எல்லோரும் செய்வதுதான். ஆனால் இங்கே குழம்பியுள்ளது (3)
8 அந்தக் காலத்தில் வரன் பார்க்கையில் இது முக்கியம் (3)
9 இளநீரோ நுங்கோ, இப்படி இருந்தால்தான் சுவையாக இருக்கும் (4)
கீழிருந்து மேல்
9. அந்தக் காலத்துப் பிரபல பெண் எழுத்தாளர் (திருச்சிக்காரர்). ஒரு பூவையும்
(ஸ்ரேயாவைப் பார்த்து ரஜினி “சிவாஜி” படத்தில் பாடுவாரே) இந்தப் பெயர் கொண்டு அழைப்பதுண்டு. (4)
மண்ணில் போட்டதும்
உடனே முளைக்காது
கிழக்குகள் வெளுக்கும்
காலை வந்தால்
நீ நினைப்பது நடக்கும்
வேளை வந்தால்
அந்தப் பார்த்திபன்
கேட்க கீதை சொன்னான்
அந்த கீதையில் நமக்கும்
பாதை சொன்னான்
கடன்களைப் புரிந்து கவலை விடு
வரும் பலன்களை
இறைவன் கையில் கொடு
அவனுக்குதான் தெரியும் ஒரு
ஆரம்பமும் அதன் முடிவும்
அட யாருக்காம்மா புரியும் அவன்
வேடிக்கையும் அதன் விளைவும்
‘இந்தக் கதாநாயகருக்கு இரண்டு படம் புக் ஆகியிருக்கிறது, இன்னாருக்கு வாய்ப்புகள் இல்லாததால் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்' என்கிற ரீதியில்தான் முன்பெல்லாம் வார இதழ்களில் சினிமாச் செய்திகள் இடம் பெறுவது வழக்கம்.
'ஸ்டார் டஸ்ட்' படிக்கும் வழக்கம் உள்ள எடிட்டர் எஸ்.ஏ.பி. ஒருநாள், எங்களிடம் அதில் வெளியாகி இருந்த திரைப்படச் செய்திகளைக் காட்டி, "மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கிறது. ஸ்டார் டஸ்ட்டில் இதைத்தான் நான் முதலில் படிப்பது வழக்கம். ஒரு சினிமாச் செய்தியை ரத்தினச் சுருக்கமாக, சுவாரஸ்யமாகக் கொடுத்து, அதில் ஒரு பூனை படத்தையும் போட்டு... ம்ஹும்... நம்முடைய குமுதத்தில் இது மாதிரியெல்லாம் வருவதில்லையே!” என்று ஆதங்கப்பட்டார். கேட்டுக் கொண்டிருந்த ரா.கி.ரங்கராஜன் ஒரு முடிவு செய்தார்.
மறுநாள்! சினிமாச் செய்தி நிருபர் வழக்கமாக எழுதிக் கொடுத்ததை, ரங்கராஜன் எடுத்துக் கொண்டு போய் உட்கார்ந்து, தானே விசாரித்து வந்த மாதிரி கற்பனை செய்து ஒரு புது பாணியில் ஜாலியாக எழுதினார்.
எடிட்டர் அதைப் படித்து விட்டு, "அற்புதமாயிருக்கிறது. யார் எழுதியது? அவரை உபயோகப்படுத்திக்கலாம்..." என்று ஆவலுடன் ரங்கராஜனிடமே விசாரித்தார்.
"நான்தான் எழுதினேன்..." என்று ரங்கராஜன் கூறினார்.
அதில் இருந்து சூடு பிடித்தது.
ரங்கராஜன் 'வினோத்' என்னும் புது புனைபெயருடன் சினிமாச் செய்திகளை எழுத, அவை, 'லைட்ஸ் ஆன்' என்ற தலைப்பில் குமுதத்தில் வெளிவரத் தொடங்கின.
திரைப்பட செய்திகளைத் தொகுத்து வர 'செல்லப்பா' என்னும் ஒரே ஒரு நிருபர்தான்.
ஒரு முறை அவர், "செய்திக்காக நடிகை சீதா வீட்டுக்குப் போயிருந்தேன். பூட்டியிருந்தது. வந்துவிட்டேன்." என்று கூறினார்.
ரங்கராஜன் அவரிடம் “என்ன பூட்டு போட்டிருந்தது? அது என்ன நிறத்தில் இருந்தது?" என்று கேட்டார்.
"அய்யோ, பார்க்கவில்லையே சார்..."
"போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்."
உடனே செல்லப்பா மாங்கு மாங்கென்று சீதா வீட்டுக்குப் போய்ப் பார்த்து விட்டு என்ன கலர் பூட்டு யாருடைய தயாரிப்பு என்றெல்லாம் எழுதிக் கொண்டு வந்தார்.
அந்தச் செய்தி, 'சீதா வீட்டுக் கதவில் பச்சை நிற திண்டுக்கல் பூட்டு என்னை வரவேற்றது' என்று அடுத்த இதழ் லைட்ஸ் ஆன் பகுதியில் வெளியானது.
கொஞ்சம் பழகினதற்குப் பிறகு செல்லப்பாவுக்கே புரிந்து விட்டது. தானே எல்லாத் தகவல்களையும் சேகரித்துச் சொல்லத் தொடங்கினார். செல்லப்பா சேகரித்துக் கொண்டு வந்த சில அந்தரங்கமான விஷயங்களை எல்லாம் ரங்கராஜன் ஆபத்தில்லாமல் வடிகட்டி எழுதி இருக்கிறார். சில விஷயங்களை ரங்கராஜன் ஃபோன் மூலம் உறுதி செய்து கொள்வார்.
கே.பாலசந்தரிடம் 'துணை நடிகையின் கதைதான் நீங்க எடுக்கற ஒரு வீடு இரு வாசல் கதையா?’ என்று ஒரு கேள்வி. ரஜினியிடம், 'உங்கள் படங்களை டப்பிங் செய்யக்கூடாது என்று சொன்னீர்களாமே, என்னென்ன படங்கள்...?' என்று ஒரு விசாரிப்பு!
சினிமாத் துறையை எட்டிக் கூடப் பார்க்காமல், அறைக்குள் அமர்ந்தவாறே, இருபத்து நான்கு மணி நேரமும் சினிமாக்காரர்களுடனேயே பழகிக் கொண்டிருப்பது போலவே எழுதுவார்.
லைட்ஸ் ஆனில் இடம் பெறும் துணுக்குகளுக்குத் தனி அந்தஸ்து கிடைத்ததென்றால் அதற்குக் காரணம் ஒவ்வொரு செய்தியின் இறுதியிலும் முத்தாய்ப்பாக ஆங்கிலத்தில் அவர் எழுதிய பன்ச் லைன்தான்! அந்த இங்கிலீஷ் வாக்கியங்கள் எப்படி லைட்ஸ் ஆனில் இடம் பெற்றன?
'மறுபடியும் தேவகி' என்னும் அவருடைய தொடர்கதையில் கதாநாயகனான சக்கரபாணி அடிக்கடி ஷேக்ஸ்பியரின் வாக்கியங்களை சொல்லிக் காட்டுவான். கதையில் ஓரிடத்தில் ஷேக்ஸ்பியர் வாக்கியத்தைச் சொல்லி வில்லனிடம் மாட்டிக் கொள்வான்.
அந்தப் பாணி எழுத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. லைட்ஸ் ஆன் பகுதியிலும் அதே போல் ஆங்கில வாக்கியம் எழுதினால் என்ன என்று யோசித்தார். அவருக்கும் புத்திசாலித்தனமாக எழுத அந்தப் பாணி ஒரு வாய்ப்பாக அமைந்தது. மக்களுக்கும் வியப்பைக் கொடுத்தது.
ரங்கராஜன் ஒரு மகாவித்துவானின் பிள்ளை. மகத்தான இலக்கியங்களை எல்லாம் படைத்தவர். இருந்தாலும், துணுக்குச் செய்திதானே என்று அலட்சியமாகச் செய்யாமல் லைட்ஸ் ஆனையும் சிரத்தையோடு, ஒரு முக்கியத்துவம் கொடுத்து எழுதினார். திரைப்படத் துறையினருக்கு லைட்ஸ் ஆன் ஒரு தனி மரியாதையை அளித்தது.
லைட்ஸ் ஆன் எழுதும் ஒவ்வொரு முறையும் அவருக்கு உயிர் போய், உயிர் வரும். நாவலுக்குச் சேகரிப்பது போல் குறிப்புகள் என்ன, இங்கிலீஷ் சொற்றொடர்கள் என்ன? வேள்வி போல்தான் செய்தார்.
வினோத் எழுதுவதைப் படித்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியதே இந்தப் பாணிதான்.
அன்புடன்,
ஜ.ரா.சுந்தரேசன்,
நிழல்கள் ரவி:
இந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் இருந்து கிட்டேஇருந்தது. நாம தமிழ்ப் படத்தில் நடிச்சுக்கிட்டிருக்கோமா இல்லை ஏதாவது இங்கிலீஷ் படத்தில் நடிக்கிறோமாங்கற சந்தேகம்தான் அறு. மணிரதனம் ஒரு மகத்தான கலைஞர் என்பதை பகல் நிலவு,. மௌனராகம் படங்களைப் பார்த்தவர்கள் நிச்சயமா ஒத்துப்பாங்க. மணிரதனம் செட்ல யார் கூடயும் அதிகமா பேச மாட்டார்
கமலின் மகள்:
கமல் என்ற அற்புத கலைஞரோடு நடிக்கும்போது சூரியனிலிருந்து ஒளியை வாங்கிக்கற சந் திரன் மாதிரி என்னை போல நடிகர்களும் அவர்கிட்டயிருந்து கொஞ்சம் நடிப்பை வாங்கிக்த முடிகிறது. நாயகன்' படத்தில் நான் கமலின் மகளாக நடித்திருக்கிறேன். சின்ன கேரக்டர். ஆனா சிறப்பான கோக்டர். படம் பார்த்தவங்க நான் கூட நான் நல்லா நடிச்சிருந்ததா சொன்னாங்க அந்தப் பாராட்டு உண்மையிலேயே டைரக்டர் சாருக்குத்தான் போய்ச்
சேரணும். ஏன்னா ன் மணிரத்னம் எப்படி செய்யச் சொன்னாரோ அப்படி செஞ்சேன் நான். என் பங்கு அவ்வளவுதான்.
ரஜினியின் பாராட்டு:
'நாயகன்' படத்தை ரஜினிகாந்த் பார்த்தாராம். "பரவாயில்லையே நம்ம ரவி கூட நடிப்ப நல்லா டெவலப் பண்ணிட்டாரு." என்று என்னைப் பாராட்டினராம். இந்த விஷயத்தை முந்தா சீனிவாசன் அவர்கள் வாசன் கூறியபோது உண்மையிலேயே உள்ளம் குளிர்ந்து போனேன். அந்தப் பாராட்டை எனக்குப் பெற்றுத்த காரணமாயிருந்த மணிரத்னம் முக்தா சீனிவாசன். ஜீவி ஆகியோருக்கு என் தன் நியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் நிழல்கள் ரவி.
-குரு. சம்பத்குமார்
ஆழ்வார் பேட்டையில கிரிக்கெட்விளையாடிக்கிட்டிருந்த குரூப் தான்.
மாணவர்கள் மூவர்
பம்பாயில் படப்பிடிப்பு. காலை ஆறு மணிக் கெல்லாம் துவங்கி விடும். ஆறரை மணிக்கு முதல் ஷாட் எடுத்து விடுவோம். நான் அதிகாலை நாலரைக்கே எழுந்து கிளம்பி விடுவேன். குறைந்த நாட்களில், இருக்கின்ற வசதிகளை வைத்துக் கொண்டு சிறப்பாக எடுக்க வேண்டுமென்ற சுய ஆர்வத்தில் செயல்பட்டோம். மூன்று மாணவர்கள் (கமல், மணிரத்னம், ஸ்ரீராம்) சேர்ந்து படித்த பாடம் இது. சேர்ந்து எழுதிய பரிட்சை என்று சொல்ல முடியாது. என்ன... பரிட்சை எழுதப் போறோம்… பயத்திருப்போம். மூவரும் சேர்ந்து சத்தமாக படிச்சோம். மூவரும் வெட்கப்படாமல் விவாதிச்சோம். நான் நடிகனோ, மணிரதனம் டைரக்டர்னோ ஸ்ரீராம் கேமராமேன் அப்படீன்னோ யோசிக்காம இருந்தோம்....
துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி ஆஹ்
துளி துளி துளி துளி மழைத்துளி…….
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி
இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்
எந்தன் சாமிக்கு ஏனின்னும் கோபம்…….ஆ….ஆ….ஆ….
இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்
எந்தன் சாமிக்கு ஏனின்னும் கோபம்…….
நான் வாழ்வது வேறொரு உலகம்
அங்கு நீயின்றி எனக்கது நரகம்
நான் வாழ்வது வேறொரு உலகம்
அங்கு நீயின்றி எனக்கது நரகம்
என்னை வாட்டுது வாலிப விரகம்
என்னை வாட்டுது வாலிப விரகம்
அது நீ அணைத்தால் கொஞ்சம் விலகும்
லாலாலா லாலலல லாலலல லாலலல
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஹூம் ம்ஹூம் ம்ஹூம்……ம்…..ம்…..ம்…..ம்…
துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி
துளி துளி துளி துளி மழைத்துளி…….
இங்கு சில்லென வீசிடும் காற்று
என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு
இங்கு சில்லென வீசிடும் காற்று
என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு
உந்தன் கையெனும் போர்வையைப் போர்த்து
உந்தன் கையெனும் போர்வையைப் போர்த்து
கொஞ்சம் கதகதப்பை நீ ஊட்டு
துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி
துளி துளி துளி துளி மழைத்துளி…….
லாலாலா லாலலல லாலலல லாலலல
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
லாலாலலா ஆ…..













இன்றாவது குறுக்கெழுத்தை Solve பண்ணிட்டுத்தான் மறுவேலைன்னு ஒரு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்!!!!! ஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா... ஆல் தி பெஸ்ட்!
நீக்குஇன்றைய பகுதிகள் அனைத்தும் நன்று. அதிலும் சினிமா பற்றிய செய்திகள்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை.. நன்றி.
நீக்குஇது வரை 3 தான் கண்டு பிடிக்க முடிந்தது. அதுக்கு மேல No time at present. ரொம்பக் கஷ்டமா கீது...
பதிலளிநீக்குகீதா
புன்னகை.
நீக்குமெல்ல மெல்ல குறுக்கெழுத்து அனைவராலும் கவனிக்க பட்டால் சரி.
வாழைப்பூ ... கெஸ் பண்ண முடியலை.
பதிலளிநீக்குஆம். அதனால்தான் பகிர்ந்தேன்.. புதன் படப் பதிவில் சேர்க்கலாமா என்கிற எண்ணம் இருந்தது. இங்கேயே கொடுத்து விட்டேன். நேற்று போல படுத்தாமல் கீழேயே விடை கொடுத்து விட்டேன்!
நீக்குகுமுதம்... அந்தக் காலம்.... திரும்ப வருமா? அருமையான டீம். நல்ல தலைவர்.. இப்போ ஏதேனும் பத்திரிகை படிக்கும்படியா இருக்கா?
பதிலளிநீக்குஆமாம். உண்மை. ஆனால் அப்போ குமுதம் பற்றி நிறைய விமர்சனம் செய்துக்கிட்டிருந்தோம்!
நீக்குபடித்துக்கொண்டிருக்கும் யவனராணியைப் பகிர்ந்திருக்கீங்க. படித்து முடிச்சாச்சா?
பதிலளிநீக்குஎப்பவோ முடிச்சாச்சு. எழுத, பகிர இன்னும் விஷயங்கள் இருக்கின்றன!
நீக்குஇது என்ன தெரியுதா? = வாழைப்பூ உட்பகுதி
பதிலளிநீக்குகீதா
100/100
நீக்குகவிஞரின் கவிதைகள் தத்துவம் சொலல்வும் வேண்டுமா!
பதிலளிநீக்குமுதல் கவிதையில் கடைசி வரி எல்லாம் இப்பப் பொருந்துமா!!! ஹிஹிஹி இப்ப இருந்திருந்தா என்ன எழுதியிருப்பார் என்று யோசிக்க வைக்குது. ஆனால் கவிதைகள் என்பவை கொஞ்சம் யதார்த்தத்திலிருந்து விலகி ஒரு கற்பனை உலகம் தானே இல்லையா?
கீதா
ஆமாம். அமரகாதல் இப்போல்லாம் ரொம்ப அபூர்வம்!
நீக்குபாலபாரதி இசையமைப்பாளரா...என்ன பாடல்கள் ஸ்ரீராம், நீங்க இங்க பகிர்
பதிலளிநீக்குபகிர்ந்திருக்கீங்களஆ? நான் தவறவிட்டுவிட்டேனோ?
நீக்குகீதா
தலைவாசல், அமராவதி இன்னும் சில படங்கள்..
நீக்குவிரைவில் அவர் பாடல்கள் பகிர்வேன்.
லேசாக நினைவுக்கு வருகிறது பாலபாரதி இசையமைப்பாளர் என்பது ஆனால் பாடல்கள் நினைவுக்கு வரவில்லை
நீக்குதலைவாசல், அமராவதி இன்னும் சில படங்கள்..
நீக்குவிரைவில் அவர் பாடல்கள் பகிர்வேன்.//
ஓஹோ...
கீதா
பகிரும்வரை காத்திருங்கள். நிச்சயம் பகிர்வேன்! :))
நீக்குஅதுக்கும்ம் உன்ன கேட்டு வைச்சுக்கிட்டாதானே அங்கு சொல்ல முடியும் சில விஷயங்கள்!! ஆனால் இப்ப உடனே கேட்க முடியாத நிலை.
நீக்குகீதா
"அதுக்கு முன்ன" என்பதுதான் இப்படி வந்திருக்கிறது என்பது புரிகிறது!
நீக்குவீடியோக்கள் கேட்க முடிகிறதா என்று பார்க்கிறேன்...ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
பார்த்து சொல்லுங்கள். நேற்றைய பாடல்கள் நெல்லைக்கு ஓபன் ஆகவில்லை என்றார்.
நீக்குஎனக்குத் திறந்தது....பாடியது....ஆனால் எனக்குத்தான் கேட்க இயலவில்லை, ஸ்ரீராம்
நீக்குகீதா
Ok...Ok..
நீக்குயவன ராணி இன்னும் என் வாசிப்பில் இன்னும் யவனமாகவே இருக்கிறாள்!!
பதிலளிநீக்குகீதா
ஹா. ஹா.. ஹா.. நான் வாசித்ததே மீள் மீள் மீள் மீள் வாசிப்பு!
நீக்கு/நூறுமுறை பிறந்தாலும்
பதிலளிநீக்குநூறுமுறை இறந்தாலும்/
"ஓராயிரம் பார்வையிலே" பாட்டுக்கு முன் விருத்தமாக வரும் வரிகள். எனக்கும் பிடித்த வரிகள். பாடலும் அருமையான பாடல். மாடர்ன் தியேட்டர் ஆஸ்தான இசையமைப்பாளர் வேதா ஒரிஜினல் ஹிந்தி ட்யூனை விட்டு இம்மியும் பிறளாமல் போட்ட ட்யூனுக்குக் கண்ணதாசன் என்ன அற்புதமாக வரிகளைக் கொடுத்திருந்தார்! காட்சியில் மணிமாலாவும் வெகு அழகாக இருப்பார்.
சூப்பர்... சூப்பர். சரியா பிடிசீங்க... வாங்க சூர்யா ஸார்.
நீக்குரசகுண்டு பெயர் பார்த்திருக்கிறேன். ஒரு வேளை எழுத்தாளர் ஜராசந்தன் அவர்கள் தான் ரசகுண்டு என்ற பெயரில் எழுதினாரோ என்ற சந்தேகம் எனக்கும் உண்டு. ஆனால் கதைகள் வாசித்ததில்லை.
பதிலளிநீக்குகீதா
நான் இப்போதுதான் பார்க்கிறேன். அவர் கதை எதுவும் நான் படித்ததில்லை.
நீக்குபாடல் வரிகளுக்குத் தகுந்தாற்போல் வாயசைப்பதில் ஜிவாஜிக்கு ஈடு இணை இல்லை. பாடலுக்குப் ப்ராம்ப்டிங்க் என்று இப்போதுதான் கேள்விப் படுகின்றேன். அந்த வீடியோவில் இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் டைரக்டர் யாரோ?
பதிலளிநீக்குஅதானே... நல்லவேளை கீதா அக்கா இன்னும் வரவில்லை!
நீக்குகண்ணதாசன் மகன் என்று நினைக்கிறேன். காந்தி கண்ணதாசன்.
"லைட்ஸ் ஆன்" தொகுப்பு புத்தகமாக வெளிவந்ததை சமீபத்தில் படித்தேன். அது குமுதத்தில் வாராவாரம் வந்தபோது "வினோத்" தான் ராகிர என்று தெரியாது. நிஜமாகவே ராகிர பல்துறை வித்தகர்தான்.
பதிலளிநீக்குஆமாம். ரொம்ப சுவாரஸ்யமாய் அந்தப் பகுதியை வழங்கினார். ஒவ்வொரு செய்தியின் கடைசியிலும் ஒரு ஆங்கில வாக்கியம் முத்தாய்ப்பாய் இடம் பெறும்!
நீக்கு//ஒவ்வொரு செய்தியின் கடைசியிலும் ஒரு ஆங்கில வாக்கியம் முத்தாய்ப்பாய் இடம் பெறும்!// அது ரொம்ப ஃபேமஸாகி விட்டது.
நீக்கு//நிஜமாகவே ராகிர பல்துறை வித்தகர்தான்.// but so under rated என்று தோன்றும்.
முருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா .. வணக்கம்.
நீக்குரா.கி.ரா. நூலுக்கு ஜ.ரா.சு.வின் முன்னுரை சுவாரஸ்யம். ஆனால் ரசகுண்டு கதையைப் படிப்பது கஷ்டமாகைருக்கிறது. அதே போல காணொளிகள் பார்க்கலாம் என்றால் பின்ணானியில் ஏதோ இசை, பேச்சு சரியாக கேட்கவில்லை. எங்க்கு மட்டும்தானா? எல்லோருக்குமா?
பதிலளிநீக்குவாழைப்பூவா? நான் பலாப்பழமோ என்று நினைத்தேன். ஹி ஹி!
பதிலளிநீக்குதுளித் துளித் துளித் துளி மழைத்துளி..பாடல் ரொம்ப பிடிக்கும். சுசிலா மிக இனிமையாக பாடியிருப்பார். ஆனால் பள்ளிப்பருவத்தில் வந்த அந்தப் பாடலை பாட அப்போதெல்லாம் அனுமதி கிடையாது.
பதிலளிநீக்கு