3.4.26

பூமிக்கு தீர்ந்தது தாபம்

சென்ற வார குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடையைச் சொன்ன ஒரே நண்பர் சூர்யா.  விடையை என் மெயில் ஐடிக்கு அனுப்பி இருந்தார்.


இந்த வாரம் நண்பர் சூர்யா அனுப்பி இருக்கும் குறுக்கெழுத்துப் புதிர். 


மேலிருந்து கீழ்

1 ஆறில் ஒன்று. அடைமொழியையும் குளிர்ச்சியையும் நடுவில் சந்தியுடன்
இணையுங்கள் (5)

2 தமிழ் மொழியின் அந்தக்கால டிக்ஷனரி (5)

3 பீடாதிபதியை இப்படி அழைப்பதும் உண்டு (5)

5 வெள்ளையும் சொள்ளையுமாய்த் திரியும் ஆசாமிகளின் உடை நிறத்தை இதற்கு ஒப்பிடுவது உண்டு (3)

6 முன்னாள் ஜனாதிபதி காலை இழந்தார். பாத்திரம் என்றும் சொல்லலாம் (3)
8 ஆசிரியருக்கு இன்னொரு பெயர் (2)

இடமிருந்து வலம்

1 கீதா மாமியின் ஸ்பெஷலாக்கும் இது (5)​

4 பழுத்த பழம் (4)

6 முருகதாஸுக்கும் விஜய்க்கும் இந்தப் படம் அப்படி ஒன்றும் சோபிக்கவில்லை (3)

7 ஆரம்ப 70களில் வந்த பிரபல ஹிந்திப் பாடல் இப்படித்தான் ஆரம்பிக்கும் (2)

7 ஒரு வகையான நாட்டிய போஸ். குழம்பியுள்ளது. முதலிரண்டு எழுத்துக்கும்
தோனி மற்றும் அஜித்துக்கும் சம்பந்தமுண்டு. கடைசி மூன்றெழுத்து எண்ஜாண் உடம்பில் ஒரு ஜாணாக்கும் (5)

வலமிருந்து இடம்

4. யுத்தத்தை செந்தமிழில் சொல்லுங்கள் (2)

5. ஆபத்து வந்தால் எல்லோரும் செய்வதுதான். ஆனால் இங்கே குழம்பியுள்ளது (3)

8 அந்தக் காலத்தில் வரன் பார்க்கையில் இது முக்கியம் (3)

9 இளநீரோ நுங்கோ, இப்படி இருந்தால்தான் சுவையாக இருக்கும் (4)

கீழிருந்து மேல்

9. அந்தக் காலத்துப் பிரபல பெண் எழுத்தாளர் (திருச்சிக்காரர்). ஒரு பூவையும்
(ஸ்ரேயாவைப் பார்த்து ரஜினி “சிவாஜி” படத்தில் பாடுவாரே) இந்தப் பெயர் கொண்டு அழைப்பதுண்டு. (4)

==================================================================================================

இது என்ன தெரிகிறதோ?


========================================================================================

கவிதை :  கண்ணதாசன் 

நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை

நீ கேட்டது உடனே கிடைக்காது
மண்ணில் போட்டதும்
உடனே முளைக்காது
கிழக்குகள் வெளுக்கும்
காலை வந்தால்
நீ நினைப்பது நடக்கும்
வேளை வந்தால்
இருட்டினில் வாடும்
உயிர்களுக்கு
அந்த இறைவன் தானே
கைவிளக்கு
விடிந்தபின்னால்
அந்த விளக்கெதற்கு?
எல்லாம் முடிந்த பின்னால்
அவன் அருள் எதற்கு?



அந்தப் பார்த்திபன்
கேட்க கீதை சொன்னான்
அந்த கீதையில் நமக்கும்
பாதை சொன்னான்
கடன்களைப் புரிந்து கவலை விடு
வரும் பலன்களை
இறைவன் கையில் கொடு

இதுவரை பொறுத்தேன்
லாபமில்லை
இந்தப் பொறுமைக்கு
இனிமேல் ஏது எல்லை?
அழுது விட்டேன்
கண்ணில் நீருமில்லை
இங்கு அவனை விட்டால்
துணை யாருமில்லை


அவனுக்குதான் தெரியும் ஒரு
ஆரம்பமும் அதன் முடிவும்
அட யாருக்காம்மா புரியும் அவன்
வேடிக்கையும் அதன் விளைவும்

==========================================================================


சில படைப்பாளிகளுக்கு, அதுவும் மிக மிகத் திறமையான,  எவ்வளவோ தெரிந்த  படைப்பாளிகளுக்கு கர்வம் உண்டு.  அந்த கர்வம்.....   சில வார்த்தைகள்....    அதை நீங்க தப்பா எடுத்துகிட்டீங்கன்னா தப்புதான்.  ரைட்டா எடுத்துகிட்டீங்கன்னா ரைட்டுதான். 

இப்போ இளையராஜா சாரை எனக்குத் தெரியும். அவருக்கு என்னைத் தெரியாது. "கண்ணா உன்னைத் தேடுகிறேன்" பாட்டுல, புருஷோத்தமன் இருக்காரு இல்லையா அவரோட Co ஸா போயிருக்கோம்.  லேட்டா போனா இளையராஜா உள்ளே விடமாட்டார். நாங்க மூணு பேர் கொஞ்சம் லேட்டா போயிட்டோம்.  அவர் கன்டக்ட் பண்ணிக்கிட்டிருக்கார். ஃபுல் இருட்டு. நாங்க உள்ளே உட்கார்ந்து பார்த்துகிட்டு இருக்கோம். அப்புறம் ஸாங் முடிச்சு உள்ளே வரும்போது உள்ளே போகப்போனவர், சட்டென திரும்பி எங்களை பார்த்தார். கூப்பிட்டார்.. 

"See.. we are doing music ஓகே? . Dont disturb. Get lost

நாம என்ன நினைப்போம்.. அவர் சொல்றது நியாயம்.  நாம ஒரு மூலைல உட்கார்ந்து பார்க்கிறோம்.. ஆனால் அன்னிக்கி நாங்க வெளில போயிட்டோம். ஆனா அவர் கண்டக்டிங் முழுசா நாங்க பார்த்தோம்.

ஜானகி அம்மா கணவர் ஏகப்பட்ட கேள்விகள் கேட்டார்,  யார் அவர், என்ன படம் இதற்கு முன்னாடி பண்ணி இருக்கார் இப்படி..  டியூன் கேட்டதும் ஜானகி அம்மா 'சால பாக உந்தி' என்கிறார். பாடல் முடிந்ததும் வந்து கையைப் பிடித்துக் கொண்டார். 'நல்லவேளை நான் இந்தப் பாட்டை மிஸ் பண்ணி இருப்பேன்' என்றார்.  அவர் கணவரும் இதையே சொன்னார். .  முதல் டேக்கிலேயே எனக்கு ஓகே என்றாலும், சொல்லச் சொல்ல கேட்காமல் ஜானகி அம்மா மூன்று டேக் பாடினார்.  அவருக்கு முதல் இரண்டு டேக்கில் திருப்தி இல்லை.  ஆனால் அதுவே நல்லாதான் இருந்தது.

ரு ஸ்டேஜ்ல நான் விலக ஆரம்பிச்சுட்டேன். நீலாமாலா சீரியல் மியூசிக் நான்தான். அதில் கூட பாட்டெல்லாம் உண்டு.  ஹிட்.   நான் அதுக்கப்புறம் படங்கள் பண்ணினேன்.  விளம்பரங்கள் இல்லை,  யாருக்கும் தெரியவில்லை. அப்புறம் என்கிட்டே வந்த தயாரிப்பாளர்கள் என் கிட்ட காசே இல்லைன்னாங்க.. நான் எப்படி ஃப்ரீயா பண்ணித்தர முடியும்? இளையராஜா பண்றாருன்னா அவரு 500 படங்களுக்கு மேல பண்ணிக்கிட்டிருக்கார்.. நான் மூன்று நான்கு படங்கள்தானே பண்ணி இருக்கேன்!  நான் ரெண்டு புள்ளைங்களை பெத்து வச்சிருக்கேனே...  ஒரு தயாரிப்பாளர் வந்தாரு.. "சார்.. இந்த படம் பண்ணுங்க.. உங்க பேர் எங்கேயோ போயிடும்" னார். 

 "யோவ்.. என் பேர் ஏற்கனவே எங்கேயோ போயிடுச்சு.. நான் பழைய ஆள். நீதான் புதுசு.. உனக்கு பேர் வரணும் கைல காசு இல்ல.. அதுதானே" னேன். ஆமாம்னார். "ஸ்டுடியோ பார்த்தியா"..  "பார்த்தேன் சார்." .  "ஒரு ஐம்பது ரூபாய் கொடுத்துட்டு 'கிளம்பு" ன்னேன். ஜோக்காத்தான்.. பின்ன என்ன சார் சொல்ல முடியும்!

மிகத்திறமையான இசை அமைப்பாளர்களின் ஒருவரான பாலபாரதி ஒரு பேட்டியில்......


========================================================================================

மறைந்த மயில்சாமி பற்றி விவேக் சொல்லும் சுவாரஸ்யமான தகவல்.  மயில்சாமி ஒரு அபூர்வ மனிதர்தான்.


=========================================================================================

சாண்டில்யன் பக்கங்கள்...  சாண்டில்யனின் ஹீரோ எம் ஜி ஆர் மாதிரி.  பார்க்கும் பெண்களெல்லாம் மனதைப் பறிகொடுப்பார்கள்.  "மனதைப் பறி கொடுத்தேன்.. மறந்து வாழ முடியாது" என்று பாடுவார்கள்!  இதிலும் யவன ராணி ஏற்கனவே பூவழகியின் மேல் காதலாகி கசியும் இளஞ்செழியன் மேல் காதல் கொள்ள, நடுவில் அலீமா என்றொரு பெண்ணும் இளஞ்செழியனை காதலிக்கத் தொடங்குகிறாள்.  அவள் யவனாராணியின் முன்னாள் சேடி, தோழி.   அடிமை நாடான சாம்பிராணி நாட்டிலிருந்து தானும் தப்பி, அவளையும் மீட்டு வந்திருப்பான் இளஞ்செழியன்.  அப்போது அலீமா சொல்லும் ஒரு விஷயம்..  இளஞ்செழியன் பூவழகியை விரும்பினாலும் லேசுபாசாய் இவர்களையும் தொட்டுக் கொள்வான்.

யவன ராணியின் பொறாமை

அலீமாவின் நினைப்பு மீண்டும் அடுலீஸுக்குப் பறந்து விட்டதை அவள் கண்கள் சுட்டிக் காட்டின. 

"என்ன ஆயிற்றென்றா கேட்கிறீர்கள்? அதை அடுலீஸுக்குச் சென்று இன்னும் ஐம்பது வருஷம் கழித்துக் கேளுங்கள். அப் பொழுதும் மக்கள் சொல்வார்கள். 'யாரோ எதிர்பாராத ஒரு தமிழன், எங்கிருந்தோ வந்தான்; புரவிகளா புயற்காற்றா என்பது தெரியாதபடி அடுலீஸ் பந்தய வெளியில் பறக்க விட்டான்! யவன, அராபிய, எகிப்திய தங்கங்களைக் குவியலாகக் கொண்டு போய்விட்டான்' என்று மக்கள் கதை போல் சொல்வார்கள். அவர்களுக்குக் கதை அது. ஆனால், எனக்கு அது கனவு போலிருக்கிறது ராணி. 

அந்தப் பந்தய வெளியில் லட்சக்கணக்கான மக்களின் ஆரவாரத்தைக் கேட்டேன். வெறி பிடித்தவர்கள் கைகளை ஆட்டி ஆர்ப்பரித்ததைக் கண்டேன். கடைசியில் அந்தப் பொன் மூட்டையை அவிழ்த்து அத்தனை மக்களின் எதிரில் என் கால்களில் கொட்டினார் படைத்தலைவர். பிறகு என்னால் எதையும் பார்க்க முடியவில்லை ராணி. என் கால்களில் பொற்குவியல். பக்கத்தில் யவனர்களின் பட்டத்து இளவரசர் ! எதிரே அன்றைய மாவீரர் படைத் தலைவர் ! சுற்றிலும் ஜன சமுத்திரம். எனக்கு எதுவுமே விளங்கவில்லை. 'அலீமா' என்று என்னை யாரோ அழைத்ததால் பெயரை அறிந்து கொண்ட அந்த ஜன சமுத்திரம், 'அலீமா, அலீமா!' என்று மகிழ்ச்சிக் கோஷத்தைக் கிளப்பியது. எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காத அந்த மகோன்னதப் பதவியைத் தாங்க முடியாமல் நான் மூர்ச்சையானேன்” என்று சொல்லி நிறுத்தினாள் அலீமா.

யவன ராணியின் முகத்தில் பொறாமை கொழுந்து விட்டது. அடுலீஸ் ரதப்போட்டியில் வெற்றி கொள்பவனின் காதலிக்குக் கிடைக்கும் பாராட்டு சக்ரவர்த்தினிக்குக்கூடக் கிடைக்காதென்பதை அறிந்திருந்த ராணி, 'அங்கு அலீமாவுக்குப் பதில் தான் இருந்திருந்தால் எத்தனை பெருமை கிடைத்திருக்கும் தனக்கு' என்று எண்ணிப் பெருமூச்செறிந்து, "பிறகு?" என்று கேட்டாள்....

==============================================================================================

அப்புசாமி - சீதாப்பாட்டி கதையில் வரும் கேரக்டர் ரசகுண்டு!  ஜ ரா சுவின் கற்பனை.  ஆனால் அந்தப் பெயரில் ஒரு எழுத்தாளரா?  கேள்விப்பட்டிருக்கிறீர்களா ஜீவி ஸார்?  ஒருவேளை ஜ ரா சு வே அந்தப் பெயரில் எழுதினாரோ, ரா கி ர மாதிரி!





==========================================================================================


புத்தக முன்னுரையில் சில விவரங்கள்..



‘இந்தக் கதாநாயகருக்கு இரண்டு படம் புக் ஆகியிருக்கிறது, இன்னாருக்கு வாய்ப்புகள் இல்லாததால் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்' என்கிற ரீதியில்தான் முன்பெல்லாம் வார இதழ்களில் சினிமாச் செய்திகள் இடம் பெறுவது வழக்கம்.

'ஸ்டார் டஸ்ட்' படிக்கும் வழக்கம் உள்ள எடிட்டர் எஸ்.ஏ.பி. ஒருநாள், எங்களிடம் அதில் வெளியாகி இருந்த திரைப்படச் செய்திகளைக் காட்டி, "மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கிறது. ஸ்டார் டஸ்ட்டில் இதைத்தான் நான் முதலில் படிப்பது வழக்கம். ஒரு சினிமாச் செய்தியை ரத்தினச் சுருக்கமாக, சுவாரஸ்யமாகக் கொடுத்து, அதில் ஒரு பூனை படத்தையும் போட்டு... ம்ஹும்... நம்முடைய குமுதத்தில் இது மாதிரியெல்லாம் வருவதில்லையே!” என்று ஆதங்கப்பட்டார். கேட்டுக் கொண்டிருந்த ரா.கி.ரங்கராஜன் ஒரு முடிவு செய்தார்.

மறுநாள்! சினிமாச் செய்தி நிருபர் வழக்கமாக எழுதிக் கொடுத்ததை, ரங்கராஜன் எடுத்துக் கொண்டு போய் உட்கார்ந்து, தானே விசாரித்து வந்த மாதிரி கற்பனை செய்து ஒரு புது பாணியில் ஜாலியாக எழுதினார்.

எடிட்டர் அதைப் படித்து விட்டு, "அற்புதமாயிருக்கிறது. யார் எழுதியது? அவரை உபயோகப்படுத்திக்கலாம்..." என்று ஆவலுடன் ரங்கராஜனிடமே விசாரித்தார்.

"நான்தான் எழுதினேன்..." என்று ரங்கராஜன் கூறினார்.

அதில் இருந்து சூடு பிடித்தது.

ரங்கராஜன் 'வினோத்' என்னும் புது புனைபெயருடன் சினிமாச் செய்திகளை எழுத, அவை, 'லைட்ஸ் ஆன்' என்ற தலைப்பில் குமுதத்தில் வெளிவரத் தொடங்கின.

திரைப்பட செய்திகளைத் தொகுத்து வர 'செல்லப்பா' என்னும் ஒரே ஒரு நிருபர்தான்.

ஒரு முறை அவர், "செய்திக்காக நடிகை சீதா வீட்டுக்குப் போயிருந்தேன். பூட்டியிருந்தது. வந்துவிட்டேன்." என்று கூறினார்.

ரங்கராஜன் அவரிடம் “என்ன பூட்டு போட்டிருந்தது? அது என்ன நிறத்தில் இருந்தது?" என்று கேட்டார்.

"அய்யோ, பார்க்கவில்லையே சார்..."

"போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்."

உடனே செல்லப்பா மாங்கு மாங்கென்று சீதா வீட்டுக்குப் போய்ப் பார்த்து விட்டு என்ன கலர் பூட்டு யாருடைய தயாரிப்பு என்றெல்லாம் எழுதிக் கொண்டு வந்தார்.

அந்தச் செய்தி, 'சீதா வீட்டுக் கதவில் பச்சை நிற திண்டுக்கல் பூட்டு என்னை வரவேற்றது' என்று அடுத்த இதழ் லைட்ஸ் ஆன் பகுதியில் வெளியானது.

கொஞ்சம் பழகினதற்குப் பிறகு செல்லப்பாவுக்கே புரிந்து விட்டது. தானே எல்லாத் தகவல்களையும் சேகரித்துச் சொல்லத் தொடங்கினார். செல்லப்பா சேகரித்துக் கொண்டு வந்த சில அந்தரங்கமான விஷயங்களை எல்லாம் ரங்கராஜன் ஆபத்தில்லாமல் வடிகட்டி எழுதி இருக்கிறார். சில விஷயங்களை ரங்கராஜன் ஃபோன் மூலம் உறுதி செய்து கொள்வார்.

கே.பாலசந்தரிடம் 'துணை நடிகையின் கதைதான் நீங்க எடுக்கற ஒரு வீடு இரு வாசல் கதையா?’ என்று ஒரு கேள்வி. ரஜினியிடம், 'உங்கள் படங்களை டப்பிங் செய்யக்கூடாது என்று சொன்னீர்களாமே, என்னென்ன படங்கள்...?' என்று ஒரு விசாரிப்பு!

சினிமாத் துறையை எட்டிக் கூடப் பார்க்காமல், அறைக்குள் அமர்ந்தவாறே, இருபத்து நான்கு மணி நேரமும் சினிமாக்காரர்களுடனேயே பழகிக் கொண்டிருப்பது போலவே எழுதுவார்.

லைட்ஸ் ஆனில் இடம் பெறும் துணுக்குகளுக்குத் தனி அந்தஸ்து கிடைத்ததென்றால் அதற்குக் காரணம் ஒவ்வொரு செய்தியின் இறுதியிலும் முத்தாய்ப்பாக ஆங்கிலத்தில் அவர் எழுதிய பன்ச் லைன்தான்! அந்த இங்கிலீஷ் வாக்கியங்கள் எப்படி லைட்ஸ் ஆனில் இடம் பெற்றன?

'மறுபடியும் தேவகி' என்னும் அவருடைய தொடர்கதையில் கதாநாயகனான சக்கரபாணி அடிக்கடி ஷேக்ஸ்பியரின் வாக்கியங்களை சொல்லிக் காட்டுவான். கதையில் ஓரிடத்தில் ஷேக்ஸ்பியர் வாக்கியத்தைச் சொல்லி வில்லனிடம் மாட்டிக் கொள்வான்.

அந்தப் பாணி எழுத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. லைட்ஸ் ஆன் பகுதியிலும் அதே போல் ஆங்கில வாக்கியம் எழுதினால் என்ன என்று யோசித்தார். அவருக்கும் புத்திசாலித்தனமாக எழுத அந்தப் பாணி ஒரு வாய்ப்பாக அமைந்தது. மக்களுக்கும் வியப்பைக் கொடுத்தது.

ரங்கராஜன் ஒரு மகாவித்துவானின் பிள்ளை. மகத்தான இலக்கியங்களை எல்லாம் படைத்தவர். இருந்தாலும், துணுக்குச் செய்திதானே என்று அலட்சியமாகச் செய்யாமல் லைட்ஸ் ஆனையும் சிரத்தையோடு, ஒரு முக்கியத்துவம் கொடுத்து எழுதினார். திரைப்படத் துறையினருக்கு லைட்ஸ் ஆன் ஒரு தனி மரியாதையை அளித்தது.

லைட்ஸ் ஆன் எழுதும் ஒவ்வொரு முறையும் அவருக்கு உயிர் போய், உயிர் வரும். நாவலுக்குச் சேகரிப்பது போல் குறிப்புகள் என்ன, இங்கிலீஷ் சொற்றொடர்கள் என்ன? வேள்வி போல்தான் செய்தார்.

வினோத் எழுதுவதைப் படித்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியதே இந்தப் பாணிதான்.

அன்புடன்,
ஜ.ரா.சுந்தரேசன்,

===========================================================================================

“சொன்னதைச் செய்தேன்"  'நாயகன்' சிறப்பு மலர்  - ஜெமினி சினிமா 1987  1

நிழல்கள் ரவி:

இந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் இருந்து கிட்டேஇருந்தது.  நாம தமிழ்ப் படத்தில் நடிச்சுக்கிட்டிருக்கோமா இல்லை ஏதாவது இங்கிலீஷ் படத்தில் நடிக்கிறோமாங்கற சந்தேகம்தான் அறு. மணிரதனம் ஒரு மகத்தான கலைஞர் என்பதை பகல் நிலவு,. மௌனராகம் படங்களைப் பார்த்தவர்கள் நிச்சயமா ஒத்துப்பாங்க.  மணிரதனம் செட்ல யார் கூடயும் அதிகமா பேச மாட்டார்

ஆழமான இடத்தில் அலைகள் இருக்காது. அந்த மாதிரி அறிவு நிறைய இருக்கறதால இவர் அதை செயல்ல காட்டத்தான் விரும்புகிறாரே தவிர, வீணா பேசிக்கிட்டருக்கறதுல என்ன பிரயோசனம் என்று நினைக்கின்றார்.  குடித்தவன்தான ஆட வேண்டுமே தவிர, விஸ்கி பாட்டில் ஆடக்கூடாது என்பார் கவிஞர் கண்ணதாசன்.  அதுபோல மணிரத்னம் ஆற்றலை, புதிய சிந்தனையை எல்லோரும் பாராட்டுகிறர்கள். அவர் தன்னானே பாராட்டி நான் பார்த்ததில்லை

கமலின் மகள்:
கமல் என்ற அற்புத கலைஞரோடு நடிக்கும்போது சூரியனிலிருந்து ஒளியை வாங்கிக்கற சந் திரன் மாதிரி என்னை போல நடிகர்களும் அவர்கிட்டயிருந்து கொஞ்சம் நடிப்பை வாங்கிக்த முடிகிறது. நாயகன்' படத்தில் நான் கமலின் மகளாக நடித்திருக்கிறேன்.  சின்ன கேரக்டர்.  ஆனா சிறப்பான கோக்டர்.  படம் பார்த்தவங்க நான் கூட நான் நல்லா நடிச்சிருந்ததா சொன்னாங்க  அந்தப் பாராட்டு உண்மையிலேயே டைரக்டர் சாருக்குத்தான் போய்ச்
சேரணும்.  ஏன்னா ன் மணிரத்னம் எப்படி செய்யச் சொன்னாரோ அப்படி செஞ்சேன் நான்.  என் பங்கு அவ்வளவுதான்.

ரஜினியின் பாராட்டு:
'நாயகன்' படத்தை ரஜினிகாந்த் பார்த்தாராம். "பரவாயில்லையே நம்ம ரவி கூட நடிப்ப நல்லா டெவலப் பண்ணிட்டாரு." என்று என்னைப் பாராட்டினராம். இந்த விஷயத்தை முந்தா சீனிவாசன் அவர்கள் வாசன் கூறியபோது உண்மையிலேயே உள்ளம் குளிர்ந்து போனேன். அந்தப் பாராட்டை எனக்குப் பெற்றுத்த காரணமாயிருந்த மணிரத்னம் முக்தா சீனிவாசன். ஜீவி ஆகியோருக்கு என் தன் நியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் நிழல்கள் ரவி.

-குரு. சம்பத்குமார்



“சிவாஜி சார் பாராட்டினார்!”  "நாயகன்" சிறப்பு மலர் - ஜெமினி சினிமா 

கமல்ஹாசன்

 ஆழ்வார் பேட்டையில கிரிக்கெட்விளையாடிக்கிட்டிருந்த குரூப் தான்.
மணிரத்னம். ஸ்ரீராம். நான் மூணு பேரும் - அதனால இந்த டீம் ஒண்ணும் புதுசில்ல. மணிரத்னம் என்கிட்ட ரெண்டு கதை சொன்னாரு. ரெண்டாவதா சொன்ன கதை தான் நாயகன்.  முதல் கதையைப் படமாக்க மௌனராகத்திற்கு என்ன செலவு செய்தாரோ அவ்வளவுதான் ஆகியிருக்கும். செலவுக்காக மட்டுமில்ல... நாயகன் கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. கதையைக் கூட முழுசா சொல்லல.  ஒரு சின்ன ரவுண்ட் போட்டுக் காட்டினார் அவ்வளவுதான். "இந்தக் கதையைப் படமாக்கினா செலவு கொஞ்சம் அதிகமாகும்.  பம்பாய் எல்லாம் போக வேண்டியிருக்கும்.  அங்க குறைந்தது 15 நாட்களாவது தங்கியிருக்க வேண்டியிருக்கும். பரவாயில்லையா?" என்று தயாரிப்பாளரிடம் கேட்டோம். "நான் சிம்லாவிலேயே போய் ஷூட்டிங் நடத்திட்டு வந்திருக்கேன். இது என்ன பம்பாய்தானே பரவாயில்லை!" என்று தயாரிப்பாளர் சொல்லி விட பணி துவங்கியது.

மாணவர்கள் மூவர்

பம்பாயில் படப்பிடிப்பு. காலை ஆறு மணிக் கெல்லாம் துவங்கி விடும். ஆறரை மணிக்கு முதல் ஷாட் எடுத்து விடுவோம். நான் அதிகாலை நாலரைக்கே எழுந்து கிளம்பி விடுவேன். குறைந்த நாட்களில், இருக்கின்ற வசதிகளை வைத்துக் கொண்டு சிறப்பாக எடுக்க வேண்டுமென்ற சுய ஆர்வத்தில் செயல்பட்டோம். மூன்று மாணவர்கள் (கமல், மணிரத்னம், ஸ்ரீராம்) சேர்ந்து படித்த பாடம் இது.  சேர்ந்து எழுதிய பரிட்சை என்று சொல்ல முடியாது. என்ன... பரிட்சை எழுதப் போறோம்… பயத்திருப்போம். மூவரும் சேர்ந்து சத்தமாக படிச்சோம். மூவரும் வெட்கப்படாமல் விவாதிச்சோம். நான் நடிகனோ, மணிரதனம் டைரக்டர்னோ  ஸ்ரீராம் கேமராமேன் அப்படீன்னோ யோசிக்காம இருந்தோம்....

(இதன் கதை எப்படி உருவானது என்று பாலகுமாரன் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.  அதை எடுத்து வைத்து சில மாதங்கள் ஆகிவிட்டன.  தேடவேண்டும்!  அதே போல கிடைத்த பக்கங்களிலிருந்து கிடைத்ததை பகிர்ந்திருக்கிறேன்.. 'சிவாஜி ஸார் என்ன சொன்னார்" என்று கேட்கக்கூடாது!  அந்தப் பக்கம் காணோம்!)

========================================================================================

சிவாஜிக்கு ப்ராம்ப்ட்டிங் சிரமங்கள்...

 

=================================================================================

P சுசீலாவின் குரலில் ஒரு இனிமையான பாடல்.  வாலியின் வரிகளுக்கு M B ஸ்ரீனிவாசன் இசை.  1975 ல் வெளிவந்த புதுவெள்ளம் படம்.  இது வந்த புதிதில் மன்னார்குடியில் நான் பார்க்க விரும்பியபோது எனக்கு பார்க்கக் கிடைத்தது வீர அபிமன்யு!  அப்புறமும் (நல்லவேளையாக) நான் பார்க்கவில்லை.  இதில் இடுப்ப பாடல் மட்டும் பிடிக்கும்.  சுசீலாம்மாவின் குரல் ஜாலம்.  காட்சியில் சிவகுமார், கன்னட மஞ்சுளா.

பெண்மையின் விரகம்.  அதை  வாலி நன்றாக கையாண்டிருக்கிறார். 

துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி ஆஹ்
துளி துளி துளி துளி மழைத்துளி…….
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி

இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்
எந்தன் சாமிக்கு ஏனின்னும் கோபம்…….ஆ….ஆ….ஆ….
இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்
எந்தன் சாமிக்கு ஏனின்னும் கோபம்…….

நான் வாழ்வது வேறொரு உலகம்
அங்கு நீயின்றி எனக்கது நரகம்
நான் வாழ்வது வேறொரு உலகம்
அங்கு நீயின்றி எனக்கது நரகம்

என்னை வாட்டுது வாலிப விரகம்
என்னை வாட்டுது வாலிப விரகம்
அது நீ அணைத்தால் கொஞ்சம் விலகும்

லாலாலா லாலலல லாலலல லாலலல
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஹூம் ம்ஹூம் ம்ஹூம்……ம்…..ம்…..ம்…..ம்…

துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி
துளி துளி துளி துளி மழைத்துளி…….

இங்கு சில்லென வீசிடும் காற்று
என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு
இங்கு சில்லென வீசிடும் காற்று
என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு

உந்தன் கையெனும் போர்வையைப் போர்த்து
உந்தன் கையெனும் போர்வையைப் போர்த்து
கொஞ்சம் கதகதப்பை நீ ஊட்டு

துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி
துளி துளி துளி துளி மழைத்துளி…….

லாலாலா லாலலல லாலலல லாலலல
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
லாலாலலா ஆ…..
ஹூம் ம்ஹூம் ம்ஹூம்……
ம்…..ம்…..ம்…..ம்…


======================================================================================

இது என்ன தெரிகிறதோ விடை!

44 கருத்துகள்:

  1. இன்றாவது குறுக்கெழுத்தை Solve பண்ணிட்டுத்தான் மறுவேலைன்னு ஒரு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்!!!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  2. இன்றைய பகுதிகள் அனைத்தும் நன்று. அதிலும் சினிமா பற்றிய செய்திகள்.

    பதிலளிநீக்கு
  3. இது வரை 3 தான் கண்டு பிடிக்க முடிந்தது. அதுக்கு மேல No time at present. ரொம்பக் கஷ்டமா கீது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புன்னகை.

      மெல்ல மெல்ல குறுக்கெழுத்து அனைவராலும் கவனிக்க பட்டால் சரி.

      நீக்கு
  4. வாழைப்பூ ... கெஸ் பண்ண முடியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அதனால்தான் பகிர்ந்தேன்..  புதன் படப் பதிவில் சேர்க்கலாமா என்கிற எண்ணம் இருந்தது.  இங்கேயே கொடுத்து விட்டேன்.  நேற்று போல படுத்தாமல் கீழேயே விடை கொடுத்து விட்டேன்!

      நீக்கு
  5. குமுதம்... அந்தக் காலம்.... திரும்ப வருமா? அருமையான டீம். நல்ல தலைவர்.. இப்போ ஏதேனும் பத்திரிகை படிக்கும்படியா இருக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  உண்மை.  ஆனால் அப்போ குமுதம் பற்றி நிறைய விமர்சனம் செய்துக்கிட்டிருந்தோம்!

      நீக்கு
  6. படித்துக்கொண்டிருக்கும் யவனராணியைப் பகிர்ந்திருக்கீங்க. படித்து முடிச்சாச்சா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பவோ முடிச்சாச்சு.  எழுத, பகிர இன்னும் விஷயங்கள் இருக்கின்றன!

      நீக்கு
  7. இது என்ன தெரியுதா? = வாழைப்பூ உட்பகுதி

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கவிஞரின் கவிதைகள் தத்துவம் சொலல்வும் வேண்டுமா!

    முதல் கவிதையில் கடைசி வரி எல்லாம் இப்பப் பொருந்துமா!!! ஹிஹிஹி இப்ப இருந்திருந்தா என்ன எழுதியிருப்பார் என்று யோசிக்க வைக்குது. ஆனால் கவிதைகள் என்பவை கொஞ்சம் யதார்த்தத்திலிருந்து விலகி ஒரு கற்பனை உலகம் தானே இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அமரகாதல் இப்போல்லாம் ரொம்ப அபூர்வம்!

      நீக்கு
  9. பாலபாரதி இசையமைப்பாளரா...என்ன பாடல்கள் ஸ்ரீராம், நீங்க இங்க பகிர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்ந்திருக்கீங்களஆ? நான் தவறவிட்டுவிட்டேனோ?

      கீதா

      நீக்கு
    2. தலைவாசல், அமராவதி இன்னும் சில படங்கள்..
      விரைவில் அவர் பாடல்கள் பகிர்வேன்.

      நீக்கு
    3. லேசாக நினைவுக்கு வருகிறது பாலபாரதி இசையமைப்பாளர் என்பது ஆனால் பாடல்கள் நினைவுக்கு வரவில்லை

      நீக்கு
    4. தலைவாசல், அமராவதி இன்னும் சில படங்கள்..
      விரைவில் அவர் பாடல்கள் பகிர்வேன்.//

      ஓஹோ...

      கீதா

      நீக்கு
    5. பகிரும்வரை காத்திருங்கள். நிச்சயம் பகிர்வேன்! :))

      நீக்கு
    6. அதுக்கும்ம் உன்ன கேட்டு வைச்சுக்கிட்டாதானே அங்கு சொல்ல முடியும் சில விஷயங்கள்!! ஆனால் இப்ப உடனே கேட்க முடியாத நிலை.

      கீதா

      நீக்கு
    7. "அதுக்கு முன்ன" என்பதுதான் இப்படி வந்திருக்கிறது என்பது புரிகிறது!

      நீக்கு
  10. வீடியோக்கள் கேட்க முடிகிறதா என்று பார்க்கிறேன்...ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்து சொல்லுங்கள். நேற்றைய பாடல்கள் நெல்லைக்கு ஓபன் ஆகவில்லை என்றார்.

      நீக்கு
    2. எனக்குத் திறந்தது....பாடியது....ஆனால் எனக்குத்தான் கேட்க இயலவில்லை, ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  11. யவன ராணி இன்னும் என் வாசிப்பில் இன்னும் யவனமாகவே இருக்கிறாள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.  ஹா..  ஹா..  நான் வாசித்ததே மீள் மீள் மீள் மீள் வாசிப்பு!

      நீக்கு
  12. /நூறுமுறை பிறந்தாலும்
    நூறுமுறை இறந்தாலும்/
    "ஓராயிரம் பார்வையிலே" பாட்டுக்கு முன் விருத்தமாக வரும் வரிகள். எனக்கும் பிடித்த வரிகள். பாடலும் அருமையான பாடல். மாடர்ன் தியேட்டர் ஆஸ்தான இசையமைப்பாளர் வேதா ஒரிஜினல் ஹிந்தி ட்யூனை விட்டு இம்மியும் பிறளாமல் போட்ட ட்யூனுக்குக் கண்ணதாசன் என்ன அற்புதமாக வரிகளைக் கொடுத்திருந்தார்! காட்சியில் மணிமாலாவும் வெகு அழகாக இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர்... சூப்பர். சரியா பிடிசீங்க... வாங்க சூர்யா ஸார்.

      நீக்கு
  13. ரசகுண்டு பெயர் பார்த்திருக்கிறேன். ஒரு வேளை எழுத்தாளர் ஜராசந்தன் அவர்கள் தான் ரசகுண்டு என்ற பெயரில் எழுதினாரோ என்ற சந்தேகம் எனக்கும் உண்டு. ஆனால் கதைகள் வாசித்ததில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இப்போதுதான் பார்க்கிறேன். அவர் கதை எதுவும் நான் படித்ததில்லை.

      நீக்கு
  14. பாடல் வரிகளுக்குத் தகுந்தாற்போல் வாயசைப்பதில் ஜிவாஜிக்கு ஈடு இணை இல்லை. பாடலுக்குப் ப்ராம்ப்டிங்க் என்று இப்போதுதான் கேள்விப் படுகின்றேன். அந்த வீடியோவில் இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் டைரக்டர் யாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே...  நல்லவேளை கீதா அக்கா இன்னும் வரவில்லை!

      கண்ணதாசன் மகன் என்று நினைக்கிறேன். காந்தி கண்ணதாசன்.

      நீக்கு
  15. "லைட்ஸ் ஆன்" தொகுப்பு புத்தகமாக வெளிவந்ததை சமீபத்தில் படித்தேன். அது குமுதத்தில் வாராவாரம் வந்தபோது "வினோத்" தான் ராகிர என்று தெரியாது. நிஜமாகவே ராகிர பல்துறை வித்தகர்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  ரொம்ப சுவாரஸ்யமாய் அந்தப் பகுதியை வழங்கினார்.  ஒவ்வொரு செய்தியின் கடைசியிலும் ஒரு ஆங்கில வாக்கியம் முத்தாய்ப்பாய் இடம் பெறும்!

      நீக்கு
    2. //ஒவ்வொரு செய்தியின் கடைசியிலும் ஒரு ஆங்கில வாக்கியம் முத்தாய்ப்பாய் இடம் பெறும்!// அது ரொம்ப ஃபேமஸாகி விட்டது.
      //நிஜமாகவே ராகிர பல்துறை வித்தகர்தான்.// but so under rated என்று தோன்றும்.

      நீக்கு
  16. ரா.கி.ரா. நூலுக்கு ஜ.ரா.சு.வின் முன்னுரை சுவாரஸ்யம். ஆனால் ரசகுண்டு கதையைப் படிப்பது கஷ்டமாகைருக்கிறது. அதே போல காணொளிகள் பார்க்கலாம் என்றால் பின்ணானியில் ஏதோ இசை, பேச்சு சரியாக கேட்கவில்லை. எங்க்கு மட்டும்தானா? எல்லோருக்குமா?

    பதிலளிநீக்கு
  17. வாழைப்பூவா? நான் பலாப்பழமோ என்று நினைத்தேன். ஹி ஹி!

    பதிலளிநீக்கு
  18. துளித் துளித் துளித் துளி மழைத்துளி..பாடல் ரொம்ப பிடிக்கும். சுசிலா மிக இனிமையாக பாடியிருப்பார். ஆனால் பள்ளிப்பருவத்தில் வந்த அந்தப் பாடலை பாட அப்போதெல்லாம் அனுமதி கிடையாது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!