15.4.26

திருமண விருந்துகளில் அங்கு உள்ள உணவு உங்களைக் கவருமா இல்லை ஸ்வீட் பாக்ஸா?


கேள்வி பதில்கள் : 

நெல்லைத்தமிழன் : 

1. திருமண மண்டபத்தில், அதிலும் தாலி கட்டும் நேரத்தில், புகைப்படம், வீடியோ எடுப்பவர்களுக்குத் தொந்தரவாக, மண்டபத்தில் அமர்ந்திருக்கும் மற்றவர்களும் காணவேண்டுமே என்ற நினைப்பு இல்லாமல், ஏன் எல்லோரும் மொய்க்கிறார்கள்? புகைப்படம்/வீடியோ எடுக்கிறார்கள் என்று கூட மனதில் படாமல் செல்ஃபி எடுக்கும் மோகம் ஏன் இப்படி அதிகரித்துவிட்டது?  

# கிட்டப் போய் அட்சதை போடுவது என்ற விருப்பத்தினால் இருக்கலாம்.  எட்டத்திலிருந்து பார்க்க இயலாமல் கூட்டம் மொய்ப்பதாலுமிருக்கலாம்.  படம் பிடித்து வேண்டியவர்களுக்கு அனுப்பும் ஆர்வம் காரணமாகவும் இருக்கலாம்.

& அதெல்லாம் அப்படித்தான் .. ! எவ்வளவு எழுதினாலும், எவ்வளவு படித்தாலும் - அந்த நேரத்திற்கு அதெல்லாம் நினைவு வராது! 

2.  பெங்களூர் திருமண மண்டபங்களில் மேடையில் திருமண நிகழ்வு நடக்கும்போது-அதிலும் தாலி கட்டும் வைபவம் நடக்கப்போகும்போது, மூன்றாம் பாலினத்தவர் உள்ளே வந்து பணம் தரணும் என்று டிமாண்ட் பண்ணுவதுபோல தமிழகத்தில் நடக்கிறதா?   

# நான் அறிந்த வரையில் இல்லை.

& பெங்களூர் உள்பட எந்த திருமணத்திலும் நான் இதை இதுவரை கண்டது இல்லை. Thank God.  

3. நம் திருமண நிகழ்வுகள் ஏன் இவ்வளவு செலவு பிடிக்கும் விஷயமாகிவிட்டது? இதற்குப் பயந்தே, சமூகத்தில் காதல் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கட்டும் என்ற நல்ல எண்ணத்திலா?   

# ஆடம்பர மோகம்,  " என்னாலும் முடியும் " எனும் மனோபாவம்.

4.  திருமணங்களுக்கு நீங்கள் செல்லும்போது, அங்கு உள்ள உணவு உங்களைக் கவருமா இல்லை ஸ்வீட் பாக்ஸா?  

# என்னைப்போல் திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருக்கும் சுற்றம்-நட்பு  மக்களுடன் பேசுவது.  அவர்களுடன் சேர்ந்து சாப்பிடும் அவகாசம்.

& ஸ்வீட் ஒன்லி !! 

5. சீர் பட்சணங்கள் என்ற பெயரில், பெரிய பெரிய அளவில் இனிப்புகள் மாப்பிள்ளை வீட்டிற்குக் கொடுக்கும் வழக்கம் எப்போதிலிருந்து வந்திருக்கும்?  

# மாப்பிள்ளை கிடைப்பது அரிதான நாளிலிருந்து.  அவர் விஷ்ணு அம்சம் என்பதால் நைவேத்தியம் இருப்பதுதானே சிறப்பு ?

& எப்போ தொடங்கியதோ - ஆனால் பெரிய அளவு சீர் முறுக்குகள் என்பது தனி அட்ராக்ஷன்! 

6. எதிர்காலத்தில்,  அரை நாள் தான் மண்டபம் எடுப்பது, உணவுக்கு வெளியில் ஹோட்டலில் டோக்கன் கொடுத்துவிடுவது என்று நம் திருமணங்கள் சுருங்கினால் உங்கள் ஆதரவு உண்டா?

# முடிந்த அளவு செலவைத் தவிர்த்த மணவிழாக்களைக்காண ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்.

& கொரானா காலத்தில் நடந்த சில உறவினர் திருமணங்களை கூகிள் zoom போன்ற app மூலம் பார்த்து மனதார வாழ்த்தியிருக்கிறோம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பார்ப்போம்! 

= = = = = = = = =

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : 


எபி ஆசிரியர்களுள் ஒருவர், பஹ்ரைனில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது. 


எங்கள் கம்பெனி சூப்பர்மார்க்கெட் உட்பட பல இடங்களுக்குச் சென்றிருந்தோம். ஆபீஸ் அல்லாத இடங்களில் இதுதான் என் உடை. 


இது எந்த இடம் என்று தெரிகிறதா? எப்போதாவதுதான் இந்த மாதிரி புகைப்படங்கள் அமையும். இது ஒரு முறை நான் கேதே பசிபிக் ஏர்லைன்ஸில், துபாயிலிருந்து தாய்வானுக்குச் சென்றபோது தேரா, பர்துபாய் ஆகிய இரண்டு பகுதிகளுக்கு இடையில் கடல்நீர் (backwater),இதனை க்ரீக் என்பர், செல்லும் பாதையுடன் எடுத்த படம். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கட்டிடம் இருக்கிறது. அங்குதான் நான் 1993ல் முதல் முதலில் சென்றபோது வேலை செய்த அலுவலகம் இருந்தது. கடல்நீரின் கீழ்ப்பகுதியில் தேரா பகுதி. மேல் பகுதியில் பர்துபாய் பகுதி. 


கேதே பசிஃபிக், ஹாங்காங் செல்லும். பிறகு அங்கிருந்து டிராகன் ஏர் என்ற விமானத்தில் தாய்பேய் (தாய் எப்போதும் பேயல்ல.. அது தாய்வானின் தலைநகரம்) சென்றேன். இது கேதே பசிஃபிக் விமானத்தில் நான் எடுத்துக்கொண்ட படம்.

= = = = = = =

படம் 1 - ஸ்ரீராம் 

தாயைக் காணோம் என்று குட்டி காட்ஸில்லா எங்கள் ஏரியாவைத்த தாண்டிச் சென்றபோது மறைந்து நின்று நின்று எடுத்த போட்டோ..


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படம் 2

ஓடி, ஓடி எல்லா இடங்களையும் பார்த்து ரசித்து மனதுக்குள் பூட்டி வைத்து, போதாதற்கு கேமிராவிலும் சிறைப் பிடித்து, வெயில் தாங்காமல் மர நிழலில் அமர்ந்தபோது...
மரத்தின் வேரிலிருந்து யாரோ என்னைப் பார்ப்பது போலப் பிரமை. திரும்பிப் பார்த்தால் யாருமில்லை. மறுபடியும் அதே போலத் தோன்றவே திரும்பி உற்று கவனித்தால் மரத்தின் வேரில் இந்த உருவம்! சில சித்தர்கள் மரத்தில் இருப்பா இருப்பார்களாமே...  மரமாகவே மாறி விடுவார்களாமே... உங்களுக்கு உருவம் தெரிகிறதோ? 🙂
தாராசுரத்தில் எடுத்த புகைப்படம். 2014



== = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

KGG பக்கம் : 

சென்ற இரண்டு வாரங்கள் சென்னை விஜயம் பற்றி எழுதி வருகிறேன். 

சென்னை சென்றதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள். 

1) சென்ற வருடம் செப்டெம்பர் மாதத்திலேயே நான் என் குரோம்பேட்டை வீட்டைக்  காலி செய்து, வீட்டை ரிப்பேர் செய்ய ஏற்பாடு செய்தேன். 

வீடு முழுவதையும் சுத்தம் செய்து, வேண்டிய செப்பனிடல்கள் எல்லாம் முடித்து repainting, ஒயிட் வாஷிங் எல்லாம் முடித்து மின்சார உபகரணங்கள், மின் இணைப்புகள் எல்லாவற்றையும் செப்பனிட்டு, வீட்டை வாடகைக்கு விட என் நண்பர் திரு இளங்கோவன் - (Proprietor - Rajam Housing - Urappakkam) அவர்கள் உதவியுடன்  ஏற்பாடு செய்தேன். 

எல்லாம் முடித்து, வீட்டை வாடகைக்கு வர ஒருவரிடம் முன் பணம் பெற்றேன். வீட்டுக்கு குடி வரும் குடும்பத்தை, அவர்கள் குடியேறும் முன்பு காணவேண்டும் என்ற உந்துதலில், சென்னைப் பயணம் மேற்கொண்டேன். 

எல்லாம் வெற்றிகரமாக முடிந்தது.

2) கூடுவாஞ்சேரியில் மிகப் பழங்காலத்தில் - கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பிளாட் வாங்கியிருந்தேன். அந்த இரண்டு பிளாட்களுக்கும் 4 வருடங்களுக்கு முன்பு காம்பவுண்ட் சுவர் கட்டி, க்ரில் gate அமைத்திருந்தேன். அவைகள் தற்சமயம் எப்படி உள்ளன என்பதைப் பார்க்க அங்கு சென்றேன். 

அதற்காகத்தான் ஊரப்பாக்கம் / கூடுவாஞ்சேரி பகுதியில், தங்குவதற்கு ஏற்ற இடம் எது என்று ஆராய்ச்சி செய்தேன். 

என் நண்பர் இளங்கோவன் - எங்கள் (அதாவது அவர்கள் ) ராஜம் ஹோம் ஸ்டேயில் தங்குங்கள் என்று அழைப்பு விடுத்தார். 

அந்த இடம் பற்றி உடனே இணையத்தில் கூகிள் search செய்து விவரங்கள் தெரிந்துகொண்டேன். 

   link : <<<<<< Click here

அடுத்த வாரம் மீதி விவரங்கள் தொடரும். 

= = = = = = = = = = = = =


52 கருத்துகள்:

  1. வீட்டை ரிப்பேர்்செய்து புதிதாக்குவது மிகச் செலவு பிடிக்கும் வேலை. அந்தச் செலவுக்கான வட்டி கூட வாடகைப் பணத்தில் கிடைக்காது. ஒரே ஒரு ஆறுதல் வீட்டின் மதிப்பு உயர்வதுதான்.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப வருடங்களுக்குப் பிறகு உங்களுக்கு அடிக்கடி பயணம் வாய்க்கிறது. வாழ்த்துகள். விசேஷங்களுக்குச் சென்றால் மாறுதலுக்கு சுவையான உணவு கிடைக்கும் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன உணவாக இருந்தாலும் சிலவற்றை மட்டும்தான்
      வயிறு ஏற்றுக் கொள்கின்றது. இல்லையேல் கடாமுடாதான்!

      நீக்கு
  3. இந்த மாதிரி காட்சில்லா தெருவுக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காக இப்படி ரோட்டின் குறுக்கே இவ்வளவு காபிளைக் கட்டியிருக்கிறார்களா இல்லை வந்தால் மாட்டிக்கொள்ளட்டும் என்ற நல்லெண்ணமா?

    பதிலளிநீக்கு
  4. இந்த மாதிரி வேர்பகுதியைப் பார்த்தால் அதில் ஏதேனும் இடைவெளி, பொந்து போன்று இருக்கா எனப் பார்ப்பேன். நாகங்கள் தங்கும், வாழும் இடமாக இருக்கக்கூடும்.

    பதிலளிநீக்கு
  5. இரண்டாவது கேள்வி.... பதில் ஆச்சர்யம். பெங்களூரில் இந்த அடாவடி எல்லா மண்டபங்களிலும் இருப்பதாக்க் கேள்விப்படுகிறேன். சென்னையிலும் சமீபத்தில் ... ஒரு மாத்த்துக்குள், பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்தூரில் அது எதுவும் பார்க்கவில்லை. பெங்களூரில் சமீப காலத்தில் திருமணம் எதுவும் சென்றதில்லை. பார்த்தால் சொல்கிறேன்.

      நீக்கு
  6. இரண்டாவது கேள்வி போல இதுவரை பெங்களூரிலோ, வேறு ஊர்களிலோ பார்க்கவில்லை.
    வட பழனி கோவிலில் திருமணம் நடத்தும் சிலர் அருகிலிருக்கும் சரவண் பவனில் விருந்துக்கு ஏற்பாடு செய்து, நான் கூட கலந்து கொண்டிருக்கிறேன். டோக்கன் கொடுக்கவில்லை, மொத்தமாக சில டேபிள்களை ரிசர்வ் செய்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  7. காட்சிலா அழகு! மரத்தில் சித்தர்கள் சரியாக புலப்படவில்லை. உற்றுப் பார்த்ததில் முதல் படத்தில் ஒரு பெண்ணின் உருவம் தெரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜடாமுடியுடன் கூடிய பெண் சித்தராக இருக்கப்போகிறது. எதற்கும் கன்னத்தில் போட்டுக்கொண்டுவிடுங்கள்.

      நீக்கு
    2. ஹையோ நெல்லை சிரித்துவிட்டேன்!!!

      கீதா

      நீக்கு
  8. நெல்லை அந்த எபி ஆசிரியரோடான படங்கள் நல்லாருக்கு. நீங்கள் முன்னர் கருத்தில் சொல்லியிருந்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. விமானத்திலிருந்து இப்படி எடுக்கும் படங்கள் செமையா இருக்கும் . படம் சூப்பர். பறவைப்பார்வை! விவரங்களோடு படம் சூப்பர், நெல்லை.

    தில்லியில் விமானம் தரையிறங்கும் போது சாலைகள், யமுனை நதி என்று நினைக்கிறேன் கீழே அப்படி படங்கள் எடுத்திருக்கிறேன்.

    அது போல நாக்பூரோ இல்லை அதன் அருகில் செல்லும் போதோ அப்போதும் கீழே நதிகளும், சில water bodies தெரிந்த போது எடுத்தேன். பகிர வேண்டும் என்று வைத்து பகிரவே இல்லை.

    அது போல பெங்களூரில் விமானம் மேலே செல்லும் போதும் சரி, இறங்கும் போதும் எடுத்தவை இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்ல நினைப்பதை முழுமையாக எழுதுங்க.

      எடுத்தவை இருக்கின்றன. எங்கு இருக்கின்றன என்று தேட வேண்டும். ஒருவேளை பழைய ஹார்ட் டிஸ்க் போனபோது அதோட போயிருச்சான்னு தெரியலை. ஹா ஹா ஹா

      நீக்கு
  10. simple marriages - is what I also want to watch. Lavish spending is what is happening now.

    விதம் விதமான உணவு இருந்தாலும் சுவைப்பதென்னவோ குறைவே.

    சென்ற வருடம் கோவையில் கலந்து கொண்ட திருமணம் ஒன்றில் மூன்று திருநங்கைகள் வந்து பணம் வாங்கிக் கொண்டு சென்றார்கள் - இரு வீட்டினரிடமும். அதிக ஆர்ப்பாட்டம் இல்லை என்பதில் கொஞ்சம் நிம்மதி. அவர்கள் பாணியில் பெண் மற்றும் மாப்பிள்ளைக்கு ஏதோ சடங்குகள் செய்து பணம் வாங்கிக் கொண்டு சென்றார்கள்.

    படங்கள் சிறப்பு. மரத்தில் உருவங்கள் - பல சமயங்களில் பார்க்கும் மரங்களில், வேர்களில், மேகத்தில் உருவங்கள் தெரியும். கற்பனைக்கு எட்டியவரை உருவங்களும் காண முடியும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாராவதி ஆடம்பரத்்திருமணம் என்ற பூனைக்கு மணி கட்டினால் தேவலை. பார்க்க அசிங்கமாக இருக்கு. ஒவ்வொருவருக்கும் பணத் தேவை அதிகமாக இருக்கும் இந்தச் சமயத்தில் எதற்கு வெட்டி, வீண் செலவு? யாரேனும் வெளியாட்களுக்கு பத்து லட்ச ரூபாய் தானம் செய்ய மனசு வருமா? பிறகு எதற்கு கேடரிங்? மாலை அலங்காரம், மேடை அலங்காரம், மண்டப வாடகை + அங்கிருக்கும் இருபத்தைந்து ஊழியர்களுக்கும் எல்லா வேளைகளிலும் சாப்பாடு அது இது என. இப்படிச் செலவு பண்ணற நாம, தினமும் ஒருவருக்காவது உணவிடணும்னு நினைக்கறோமா?

      நீக்கு
  11. ஸ்ரீராம் கை கொடுங்க! காட்சில்லா படங்கள் அதற்கான வரி சூப்பர். ரசித்தேம். அந்த வயர்கள் மட்டும் இல்லைனா, இன்னும் எவ்வளவு நல்லா இருக்கும் இல்ல?

    //தாயைக் காணோம் என்று குட்டி காட்ஸில்லா எங்கள் ஏரியாவைத்த தாண்டிச் சென்றபோது // உங்க ஏரியா வில்லன்கள் வயர்களை வைத்து அதைக் கட்டித் தடுக்க நினைக்கறாங்க பாருங்க!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீராம் அந்த மர வேர்கள் படம் முன்ன வியாழனில் பகிர்ந்த நினைவு!! கிட்டத்தட்ட இதே வரிகளுடன்

    உருவம் தெரிகிறது ஸ்ரீராம். கையில் ஜால்ரா வைத்துக் கொண்டு பஜனை செய்வது போல்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. இரண்டாவது படத்தில் வேறொரு / சில உருவமும்/ங்களும் தெரிகின்றன ஸ்ரீராம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வேர் படங்கள் நல்லாருக்கு.

    எனக்கு இம்மாதிரி இடங்களில் வேர்களில் பொந்து இருந்தால் சின்னதா இருந்தாலும் கூட பார்த்து தள்ளி நிற்பேன்!!!! இல்லைனா உட்கார்வது கூட பார்த்து. உள்ளே ஏதாச்சும் பூச்சி பொட்டு இருந்தாலோன்னு!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  15. கௌ அண்ணா, home stay நல்லாருக்கே. அதுவும் அடுக்களை இங்கு வாடகை வீடுகளில் (இப்ப சென்னையும் அப்படித்தான்னு சொல்றாங்க) கூட இவ்வளவு பெரிசா இல்லை.

    குறிப்பாக SRM, மற்றும் IT வேலை பண்ணும் இளைஞர்களுக்கு வசதியாக bachelors ரூம் வாடகையை விட கட்டுப்படியாகும் வாடகையில்னு போட்டிருக்காங்க!

    அப்ப நீங்களும் இளைஞர்னு சொல்லுங்க...!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப சுலபமா சொல்லிட்டீங்க. பிஜி பற்றி எழுதறேன். இந்தக் கால இளைஞ இளைஞிகளை மேனேஜ் பண்ணுவது சுலபமல்ல.

      நீக்கு
  16. ஒரு நாள் என்ன ரேட்? அங்கு இருப்பதாகத் தெரியவில்லையே. தொடர்பு கொண்டால் சொல்வாங்களோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நாளைக்கு ரூ 1600. தங்கும் வாடகை மட்டும்.

      நீக்கு
    2. ஓ! அப்படினா, சாப்பாடு தனியாக இல்லையா? அங்கு கிடைக்குமா? இல்லை நாம் சமைத்துக் கொள்ளலாமா?

      கீதா

      நீக்கு
    3. அங்கிருந்து அரை கி மீ தூரத்தில் ஜி எஸ் டி
      சாலையில் அற்புதமான உணவகங்கள் உள்ளன.
      சமைக்கத் தெரிந்தவர்கள், ராஜம் ஹோம் ஸ்டேயில் இருக்கும் சில பாத்திரங்கள், induction ஸ்டவ் கொண்டு சமைத்துக் கொள்ளலாம்.

      நீக்கு
    4. //சாலையில் அற்புதமான உணவகங்கள் உள்ளன.// இதைக் கேட்டு யாரும் பதட்டமடைய வேண்டாம். பெங்களூரில் வசிப்பவங்களுக்கு தமிழக சாப்பாடு, வடை, சாம்பார், தோசைலாம் ஏதோ அதிசய உணவு. அதுனால யார் கடை போட்டு விற்றாலும் 'அற்புதம்' என்ற வார்த்தைதான் மனதில் அவங்களுக்கு உதிக்கும். ஹா ஹா ஹா

      நீக்கு
  17. என்னைப் பொருத்தவரை மிக எளிமையான திருமணம் தான் பிடித்திருக்கிறது. இப்போது பல திருமணங்கள் மிக மிக அதிகமாகச் செலவு செய்கிறார்கள். தேவையில்லாத ஏற்பாடுகள்....செலவுகள்...ஒரு நாள் ஒரு சில நிமிடங்கள் அந்தத் தாலி கட்டும் நிகழ்வுக்கு இவ்வளவு செலவா என்று எனக்குத் தோன்றும். உடைகள் உட்பட...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாலி கட்டும் நிகழ்வு சாதாரணமானதில்லை. அதோடு நம் திருமணங்களில் தாலி கட்டுவதெல்லாம் பின்னால் வந்தது தான். சப்தபதி நடந்து முடிந்தால் தான் அது அந்தணர் வீட்டுக் கல்யாணமோ, மற்ற ஜாதியினர் கல்யாணமோ செல்லுபடி ஆகும். இந்துத் திருமணச் சட்டத்தில் சப்தபதி தான் முக்கியம். தாலி கட்டுவது முக்கியம் இல்லை.

      நீக்கு
  18. அப்புறம் அந்த உடைகளை அவங்க எப்ப போட்டுக்குவாங்கன்னு தெரியலை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்குத்தான் மேலை நாடுகளில், அவங்க அவங்க திருமணத்துக்கு அவங்களே செலவு செய்யணும்னு வச்சிருக்காங்க.

      நீக்கு
  19. கல்யாணங்களில் ஜஸ்ட் ஒரு சில மணி நேரங்களுக்காக கோட் சூட்! வேலையில் இருப்பவர்களுக்கு, சில வேலைகளில் இருப்பவர்களுக்கு அது உதவலாம் பின்னர். ஆனால் எல்லாருக்கும் உதவுமா?

    இப்ப பார்த்தீங்கனா யுட்யூப் சானல்களில் கூட பேட்டி என்றால் கோட் சூட், பொது நிகழ்வுகள் என்றால் கோட் சூட், நிகழ்ச்சி நடத்துபவரும் சரி , பங்கு பெருபவர்களும் சரி...இது எதற்கு casual ஆக நல்ல descent உடையில் வந்து செல்லலாமே!!!

    ஆண்களும் சரி பெண்களும் சரி! இதற்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகத்துல மைதா பெயின்ட் பூசிக்கிட்டு, பீட்டர் விட்டால் ஆங்கிலேயப் பெண்மணி என பெண்கள் நினைத்துக்கொள்வதுபோல, கோட் சூட் அணிந்தால் தாமும் ஆங்கிலேயர் ஆகிவிட்டோம் என்ற நினைப்புக்காகத்தான்னு.... சொன்னா நீங்க நம்பணும்.

      நீக்கு
  20. திருமணங்களில் மட்டுமில்லை. ஸ்வாமி ஊர்வலங்களிலும் இப்படித்தான். எல்லோருமாகச் சேர்ந்து என்னைப் போல் உயரம் குறைவானவர்கள் தரிசிக்க முடியாமல் மறைச்சுடுவாங்க. எல்லாம் இந்த ஃபோட்டோ எடுக்கும் ஆசை தான். வேறே என்ன?

    பதிலளிநீக்கு
  21. இந்த மாதிரித் திருநங்கைகள், திருநம்பிகள் வருவதும் பணம் வசூல் செய்கிறார்கள் என்பதும் முதல் தரமாகக் கேள்விப் படுகிறேன். ஆனால் சமீபத்தில் திருமணம் எதுக்கும் போகவில்லையே! ஆண் குழந்தை பிறந்தால் அதை எப்படியானும் தெரிந்து கொண்டு வந்து வசூல் செய்து கொண்டு போவார்கள். மதுரையிலும் எனக்குப் பையர் பிறந்தப்போ நடந்தது. அதே போல் ராஜஸ்தானுக்குக் குழந்தையைத் தூக்கிண்டு போனப்புறமா அங்கேயும் வந்தார்கள். என்ன, மதுரையில் தமிழில் பேசினாங்க, இங்கே ஹிந்தியில். :))))

    பதிலளிநீக்கு
  22. கலப்புத் திருமணங்களிலேயே ஆடம்பரங்கள் எப்போவோ வந்தாச்சே. அதிலும் பெண் வீட்டுக்காரர்கள் அந்தணர்கள் எனில் பெண்ணுக்கு அலங்காரம் அவங்க பாணியில் மடிசாரோடு இருக்கும். ஐயங்கார்கள் எனில் ஆண்டாள் கொண்டை போட்டு விடுவார்கள்.கல்யாணம் தடபுடலாகத் தான் இருக்கும். ஒரு தமிழ்ப் பெண் கேரளத்து இளைஞரைத் திருமணம் செய்து கொண்டாள். முதலில் பெண் வீட்டுப் பாணியில் திருமணம். பின்னர் மலையாளிகளின் வழக்கப்படி திருமணம்.

    தமிழ்நாட்டுக்குள்ளேயான வேறு ஜாதி கலப்புத் திருமணம் எனில் அதிகம் மாற்றங்கள் இருப்பதில்லை. ஏனெனில் வேற்று ஜாதிக்காரங்களுக்கும் காசி யாத்திரை, மாலை மாற்றுதல், திருமங்கல்யம் பூட்டுதல், அம்மி மிதிச்சு அருந்ததி பார்த்தல், பொரி இடுவது என எல்லாமும் உண்டு. மந்திரங்களிலேயும் இன்னும் சில பழக்கங்களும் மட்டுமே மாறும்.

    பதிலளிநீக்கு
  23. இப்போல்லாம் சீர் பக்ஷணங்கள் பெரும்பாலும் அதிகம் வைப்பதில்லை. எனக்கெல்லாம் இரட்டைச் சீர் எனச் சொல்லப்படும் சீர் வரிசை. எல்லா பக்ஷணங்களும் இரண்டு வெவ்வேறு கல்யாணங்களுக்கு வைப்பது போல் இரண்டு இரண்டு வைத்தார்கள். முறுக்கு 108 எனில் இரண்டு கூடை 108, 108 முறுக்குகள். பருப்புத் தேங்காய் உள்பட எல்லாமும் இரட்டை தான். கோலம் உள்பட. மதுரைப் பக்கங்களில் இரட்டைக் கோலம் தான் போடுவார்கள். இந்த பக்ஷணங்களை எல்லாம் விட காலை டிஃபன், மதியம் சாப்பாடு, மதியம் டிஃபன், இரவுச் சாப்பாடு இவற்றில் போடப்படும் தித்திப்பு வகைகளே மனதைக் கவரும். பெரும்பாலும் முன்னெல்லாம் கல்யாணங்களில் கல்யாணத்தன்று மதியம் பாசந்தி போட்டு விடுவார்கள். இப்போல்லாம் தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீர் பட்சணம் ஐயர் ஆம் கல்யாணம்னா 51, ஐயங்கார்னா 13.

      நீக்கு
    2. எங்களுக்கு அதாவது ஸ்மார்த்தர்களுக்கு எல்லாமும் 108 வைக்கணும். முழுச் சீர் என்பார்கள் இதை. இதைத் தவிர்த்தும் கட்டுச்சாதக் கூடை மூன்றாம் நாள் வைக்கையில் அதோடு 31 எல்லா பக்ஷணங்களும் வைக்கணும். பொதுவாக இதான் முறை. முடியாதவங்க. 51 வைக்கிறாங்க. இப்போல்லாம் அதுவும் குறைஞ்சு போய் பக்ஷணங்களுக்கு முக்கியத்துவமே இருப்பதில்லை என்பதே உண்மை. ஏதோ பெயருக்கு வைக்கிறாங்க.

      நீக்கு
    3. இதையெல்லாம் படிக்கும்போது எவ்வளவு அநியாயம்னு தோணுது. (ஆனால் மனசுல சீர் மைசூர்பாக்குன்னு வைக்கிற அரை கிலோ ஒரே மைசூர்பாக் நினைவுக்கு வருது). வீட்டுல பண்ணும் அந்தக் காலக் கல்யாணத்துல ஓகே. இப்போ வியாபாரம் மாதிரி ஆன திருமணங்கள், கேடரர் நடத்தும் திருமணங்கள்ல இது தேவையா?

      நீக்கு
  24. இது எந்த வருஷம் நெல்லை? அதாவது ஸ்ரீராமின் மாமா பஹைன் வந்தது. நீங்கள் சொல்லி இருக்கும் எந்த இடங்களும் நான் பார்த்தது இல்லை. இனிமேலும் போவதெல்லாம் முடியாத காரியம். படங்கள் மிக அழகாக நன்கு ரசித்து எடுக்கிறீர்கள். எப்படி வரணும் என்பதை முன்கூட்டித் தீர்மானிச்சுடுவீங்க போல. அதே போல் வந்தும் விடுகிறது.

    @ஸ்ரீராம் காட்சில்லா பாவம். அம்மாவைத் தேடும்போது ஏன் தொந்திரவு பண்ணணும்? போகட்டும் விட்டுடுங்க. இது தாராசுரத்தில் எந்த இடம்? மரங்களின் முண்டு முடிச்சுகள் இம்மாதிரிக் காட்சி அளிப்பதை நிறையப் பார்த்திருக்கேன். இங்கே ஓர் சித்தர் மாதிரியாவே இருக்கார். அதிலும் முதல் படத்தில் கையைக் கூப்பியவண்ணம்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2016-17. அவருக்கு காசி அல்வா பண்ணியிருந்தேன்.

      நீக்கு
  25. வீடு வேறே ஊரிலும், நாம் இன்னொரு ஊரிலும் இருந்தால் பராமரிப்பது கடினமாகத் தான் இருக்கும். இ-ப்படித் தான் அம்பத்தூர் வீட்டைக் கைவிடாமல் எப்படியேனும் திரும்பக் கட்டணும்னு நினைச்சுட்டு இருந்தோம். ஆனால் அதுக்குள்ளாகப் பையர் ஸ்ரீரங்கம் வீட்டை வாங்கி விட்டதால் அம்பத்தூர் இனி வேண்டாம்னு தீர்மானம் பண்ணி விற்றோம். அப்போக் கூட பில்டர் எங்களுக்காகக் கொடுக்க இருந்த ஃப்ளாட்டை வேண்டாம்னு மறுத்துட்டுப் பணமாகவே வாங்கிக் கொண்டோம். அம்பத்தூரில் வீடு இருந்தால் அடிக்கடி வந்து பார்க்கச் சொல்லும் என்பதோடு குடித்தனக்காரங்க காலி செய்தால் சுத்தம் செய்யும் வேலைகள். எல்லாமும் சரியா வராதுனு விற்று விட்டோம்.

    ஆனால் சிகிந்திராபாதில் நாங்க இருந்த எழுபதுகளிலேயே வீட்டுக்காரங்க கறார். அது ஆந்திரவாடுவாக இருந்தாலும் சரி, சுத்தத் தமிழராகவோ, கேரளத்தவராகவோ இருந்தாலும் சரி, சொந்த வீட்டுக்காரங்க எனில் அங்கே தனி மரியாதை கொடுக்கணும். வீட்டைச் சுத்தமாக வைச்சுக்கணும். வாரா வாரம் சனிக்கிழமை நமக்குக் கொடுத்திருக்கும் பகுதியை எல்லாம் சுத்திப் பார்த்துட்டு எந்த எந்த இடங்கள் சரியா இல்லை என்பதைச் சுட்டிக் காட்டி அதை எல்லாம் சரி செய்யச் சொல்வார்கள். முக்கியமாய்க் கழிவறை. திறந்து பார்த்து ஆசிட் போட்டுச் சுத்தம் செய்தே ஆகணும் என்பார்கள். சமையலறையில் எண்ணெய்க் கறை இருக்கக் கூடாது. மேடையும் சுத்தமாகக் கழுவுகிறோமா எனப் பார்ப்பார்கள்> இரண்டு வருடம் அவதிப் பட்டோம். வீட்டுக்காரங்க தொந்திரவு அங்கே அதிகம். அதுக்காகவே அங்கேயே வீடு வாங்கி நிரந்தரமாக இருக்க நினைச்சு இடம் எல்லாம் பார்த்து வாங்கப் பணத்துக்கு அட்வான்ஸ் எல்லாம் போட்டு விட்டோம். கடைசியில் மாமியார் சென்னைக்குக் குடித்தனம் வந்து விட்டதால் அவங்களால் சமாளிக்க முடியலைனு எங்களை சென்னைக்கே மாத்திக் கொண்டு வரும்படி வற்புறுத்தினாங்க. அந்த முறை அரசாங்கச் செலவில்லாமல் கையை விட்டுச் செலவு செய்து கொண்டு சென்னை வந்தோம். செகந்திராபாதில் ஆரம்பிச்ச என்னோட அழுகை பின்னர் எட்டரை வருடங்கள் தொடர்ந்தது.மறுபடி ராஜஸ்தான் போனதும் தான் சரியாச்சு. :)))

    பதிலளிநீக்கு
  26. கௌதமன் சார் தொடரக் காத்திருக்கேன். ராஜம் ஸ்டே போய்ப்பார்த்தேன். சென்னையில் இருப்பது போலவே ஸ்ரீரங்கத்திலும் இம்மாதிரி வந்து சில வருடங்கள் ஆகின்றன. சாப்பாடு மட்டும் சில இடங்களில் வெளியில் ஆர்டர் கொடுக்கணும். சிலர் சமைக்க அனுமதிப்பார்கள். என்றாலும் கொஞ்ச நாட்களுக்காகத் தங்கும்போது பெரும்பாலும் வாங்கித் தான் சாப்பிடுவது வசதி என நினைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  27. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  28. கேள்விகளும், பதில்களும் அருமை.

    படமும் பதமும் பகுதிக்கு

    நெல்லைத்தமிழன் அனுப்பிய படங்கள் அதுவும் விமானத்திலிருந்து எடுத்த படம் விமானத்திலிருந்து கீழே கட்டிங்களை எடுத்த படம் அருமை.
    ,

    தாயைக் காணோம் என்று குட்டி காட்ஸில்லா தவிப்பில் செல்லும் போது ஸ்ரீராம் மறைந்து நின்று எடுத்த போட்டோ அருமை.

    மரங்களில் சித்தர்கள் அழைத்தார்களா என்ன சொன்னார்கள் ?
    சில ஜடாமுனிவர்கள் தெரிகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  29. வீட்டை ரிப்பேர் செய்வது பெரிய வேலை , நல்ல மனிதர்கள் ஒத்துழைப்பால் நல்லபடியாக எல்லாம் வெற்றிகரமாக முடித்து வந்து இருக்கிறீர்கள்.
    சென்னையில் வெயில் கடுமையாக இருந்து இருக்குமே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!