29.5.26

பேசாமல் பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண் டெல்லோரும்...

சமீபத்தில் என் அண்ணன் எங்கள் அப்பா அம்மா பற்றி பேஸ்புக்கில் ஏதோ பதிவு செய்ய, அதை  திருப்பூர் கிருஷ்ணன் படித்திருந்திருக்கிறார்.
இன்றைய பத்திரிகையுலகில் மதிக்கத்தகுந்தவர், மரியாதையானவர், மரியாதை தெரிந்தவர், பண்பாளர்.

உடனே மெசஞ்சரில் வந்து அண்ணன் தொலைபேசி எண் வாங்கி தொடர்பு கொண்டிருந்திருக்கிறார்.  ஏனெனில் அப்பாவை அவருக்குத் தெரியும்.  அப்பாவின் 'தூறல்கள்' புத்தகத்துக்கு அவர்தான் முன்னுரை எழுதியிருந்தார்..

விவரங்கள் விசாரித்தபின், பாஹேயின் புதல்வர் என்று அறிந்து அண்ணனிடம் அப்பா அம்மா பற்றி நானூறு வார்த்தைகளில் ஒரு கட்டுரை எழுதித்தரச் சொல்லியிருந்திருக்கிறார்.

"எழுதி என் வாட்ஸாப் நம்பருக்கு அனுப்பி விடுங்கள்.  உடனே தொல்லை செய்ய வேண்டாம்.  ஆறு மாத காலத்துக்குள் நான் அதை அமுதசுரபியில் போடுகிறேன்" என்று சொல்லியிருந்திருக்கிறார்.

அண்ணனும் ப்ராம்ப்ட்டாக "ஸார்..  எனக்கு எழுத வராது.  என் தம்பி ஸ்ரீராம் எழுதுவான்.  அவன் கதை, கவிதை எல்லாம் எழுதுவான், பிளாக்ல எழுதறான்..  அவனை விட்டு எழுதித் தரச்சொல்லவா ?" என்று கேட்க, அவரும் 'சரி' என்று சம்மதித்திருக்கிறார்.

என்னிடம் அண்ணன் சொல்ல, மெதுவாக டைம் எடுத்துக் கொண்டு அப்பா அம்மா பற்றி எழுதி திருப்பூர் மொபைல் வாட்ஸாப்ப்புக்கு அனுப்பினேன். 

அண்ணனிடமிருந்து திருப்பூரார் அலைபேசி எண் வாங்கியதாகச் சொல்லவில்லையே என்று நீங்கள் யோசித்திருக்கலாம். ஆமாம், கேட்கவில்லை, அவரும் தரவில்லை.  ஏனென்றால் என்னிடம் ஏற்கனவே அது இருந்ததது.  சில வருடங்களுக்குமுன் இதேபோல அவர் என்னையும் தொடர்பு கொண்டிருந்தார்.  பார்க்க வேண்டும் என்று சொன்னாரே தவிர எதுவும் எழுதித்தா என்று அப்போது கேட்கவில்லை.

இப்போது அவர் வாட்சாப்ப்புக்கு நான் எழுதியதை அனுப்பிவிட்டு அவர் இன்று பார்ப்பார், இதோ பார்ப்பார், இப்போது பார்ப்பார் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறேன், 25 நாட்களுக்கும் மேலாகிறது.  ஊஹூம்... அலைபேசி எண் அவருடையதாக இருக்காது என்று உங்களுக்குத் தோன்றும்.  இல்லை அவருடைய எண்தான்.  பேஸ்புக் மெசஞ்ஜரில் சென்று சொல்லிப் பார்த்தேன்.  ஊஹூம்.  அழைத்துப் பார்த்தேன்.  போனை எடுக்கவில்லை.  அண்ணனிடம் சொல்லி அவரையும் விஷயம் சொல்லச் சொன்னேன்.  அவரும் என் வழியிலேயே முயன்று தோல்வி கண்டார்.

என்னதான் அதிக வேலையிருக்கும், பிஸி என்றாலும் இப்படியா இருப்பார்கள் மக்கள் என்று அதிசயமாகத்தான் இருக்கிறது.  'கிடைத்தது, பார்த்து விட்டேன்' என்று கூடவா டைப் செய்ய மாட்டார்?  ப்ளூ டிக்கே விழவில்லை.  சரி மறைவில் இருக்கிறார், படித்திருப்பார், பார்த்திருப்பார் என்று வைத்துக் கொண்டாலும்...  ஆமாம், எதை வைத்துக்கொண்டு அப்படி வைத்துக்கொள்ள?!

ஏதாவது நடந்தால் பின்னர் சொல்கிறேன்.


பின் குறிப்பு  :

ஒரு வழியாக அண்ணனின் செய்தியை அவர் படித்து, கீழே ஒரே வரியில் பதில் அளித்திருக்கிறார்.  "மே மாத அமுதசுரபி தலையங்கத்தில் கீழ்ப்பகுதியை பார்க்கவும்"

சொன்னதே மே 26 தேதியில்.  அமுதசுரபியை எங்கே தேடுவேன்?  இணையத்திலும் பார்க்க முடையவில்லை.

=======================================================================================

சாண்டில்யன் பக்கம்.

சாண்டில்யன் ஆண் வர்ணனை அழகாக மட்டுமல்ல அருவருப்பாக இருப்பவனையும் வர்ணிக்கிறார்.  கதை விலைராணி 

புதியவன் என்பதை அவன் முகத்தின் குழப்பமே பறைசாற்றியதென்றாலும், காவலன் அதைக் கவனிக்காமல் அந்த முகத்தின் அமைப்பையே கவனித்தான். அப்படிக் காவலன் கவனித்ததற்கும், கவனித்தபின் காட்டிய அருவருப்புக்கும் காரணம் இருக்கவே செய்தது.

* கன்னிப் பெண்கள் விற்பனைச் சந்தைக்கு வழிகேட்ட அந்தப் பயணியின் முகம் பரம விகாரமாயிருந்தது. அவன் அளவுக்கு அதிகமான உயரத்துடனும் நல்ல சிவப்பான முகத்துடனும் இருந்தாலும், அந்த முகத்தை அம்மை வடுக்கள் பல விகாரப்படுத்தியிருந்தன. உடல் உயரமாயிருந்தாலும், லேசாக விழுந்திருந்த கூன் அதன் கம்பீரத்துக்குத் தடை விதித்தது. போதாக்குறைக்கு அவன் நாசி ஆரம்பத்தில் சிறிது சப்பையாக ஆழ்ந்து திடீரென எழுந்து கூர்மையாக இறங்கியதால் ஏறக்குறைய கருட பகவானை நினைக்கும்படிச் செய்தது. மூக்கின் அடியில் தெரிந்த அகலமான தடித்த உதடுகளும் குச்சி குச்சியாக வெட்டிவிடப் பட்டிருந்த கட்டை மயிர்களைக் கொண்ட மீசையும் முக விகாரத்தை அதிகப்படுத்தின. கண்களில் ஈட்டியின் தீக்ஷண்யம் மட்டு மின்றிக் கடுமையும் அதிகமாக ஒளி விட்டதால் கண்கள் அச்சத்தையே அள்ளித் தெளித்தன. அவன் யவனர்களைப் போல உடையணிந்திருந்தாலும் நெற்றியிலிருந்த இரட்டை வரி சந்தனக் கோடுகள் அவன் இந்துவென்பதை நிரூபித்தன. அம்மை வடு இல்லாத நுதலின் நடுவில் அந்தக் கோடுகள் தீட்டப்பட்டிருந்தாலும், முகத்தின் நிலை காரணமாக அவையும் அவன் கோரத்தை மிகைப்படுத்தவே செய்தன. அவன் அப்படி ஒன்றும் பணக்காரனாகவும் தெரியவில்லை. அங்கியின் மேல் புறம் சிறிது கிழிந்திருந்தது. அவன் நீண்ட கைகளும் கால்களும் உறுதியாயிருந்தாலும் அவை அவன் பொது சொரூபத்தை

For the Marriage Mart of Taxila of Takshasila Refer STRABO'S BOOK

எந்தவிதத்திலும் அபிவிருத்தி செய்ய இயலாமல் திண்டாடின. அவன் தலைக்குழலும் முரட்டுத்தனமாக வெட்டப்பட்டுக் காற்றில் கண்டபடி அலைந்தன. இத்தனையிலும் அவன் பெரிய வீரனாக இருக்க வேண்டுமென்பதை அவன் இடைக் கச்சையில் தொங்கிய நீண்ட வாள் நிரூபித்தது. ஆனால் அவன் வயதை நிர்ணயிக்க முடியவில்லை. அவன் வாலிபனா, நடுவயதை எட்டிக் கொண்டிருந்தானா என்பது சந்தேகமாயிருந்தது.

இப்படித் தன்னை நோட்டம் பார்த்த வீரனைச் சில விநாடிகள் அலசவிட்ட அந்த வீரன் குரல் மீண்டும் கடுமையாக ஒலித்தது, "உன்னை ஒரு கேள்வி கேட்டேன்" என்று.

======================================================================================

சுவாரஸ்யம்...


=========================================================================================

என்ன ஒரு கேலிக்கூத்து!

ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கைதிகள் தங்களை வெளியுலகிற்கு அடையாளம் காட்டாமல் தலைமறைவாகவே வாழ முயற்சிப்பார்கள்.. ஆனால் குஜராத்தை ஹேமந்த் நகீந்தாஸ் மோடி என்கிற கொலை வழக்குக் குற்றவாளியின் கதை ரொம்பவே சுவாரஸ்யமானது. ஆயுள் தண்டனை கைதியான இவர் 12 வருடங்களுக்கு முன் பரோலில் வந்தபோது தப்பித்து சென்றாலும் முழுமையாக தலைமறைவாகாமல் தனது பெயரை ட்விங்கிள் தேவ் என மாற்றிக்கொண்டு சினிமா மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வந்துள்ளார். மோகன்லால் நடித்த 'எம்புரான், லாகூர் 1947' உள்ளிட்ட பல படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சமூக வலைதளங்களிலும் தான் பல்வேறு வேடங்களில் நடித்த புகைப்படங்களை வெளியிட்டு இவர் ஆக்டிவாக இருந்துள்ளார். ஆனாலும் போலீசார் கண்களில் இவர் சிக்கவே இல்லை.. இந்த நிலையில் தான் ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீசாருக்கு அவர் மீண்டும் சொந்த ஊருக்கு வந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, கீகண்டா மெட்ரோ நிலையம் அருகே கைது செய்யப்பட்டு மீதமுள்ள ஆயுள் தண்டனையை அனுபவிக்க மீண்டும் மெஹ்சானா சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

==========================================================================================

நா காமராசன் :  இரவுப்பாடகன் ஒருவன் வந்தான் பாடல், போய்வா நதியலையே, பாடும் வானம்பாடி ஆகிய திரைப்பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?  அவை கவிஞர் நா காமராசன் பாடல்கள்.  அவர் படைப்பிலிருந்து சில...


விலை மகளிர் குறித்த இவரது கவிதை அனைவராலும் பாராட்டப்பெறும் ஒன்றாகும்.

"பாற்கடல் அமுதத்தைதேவர்கள் சுவைத்து 
விட்டதால்தான் 
எங்கள் இதழ் அமுதத்தை அரக்கர்களுக்கு 
வழங்குகிறோம்.
எங்களுடைய நீதிமன்றத்தில்தான் 
வழுக்கம் தண்டிக்கப்படுகிறது.
நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் 
ஆடை வாங்கவதற்காக."

கருப்பு மலர்கள் என்னும் கவிதைத்தொகுப்பு இவரது புகழ்பெற்ற நூல்.  அதில் மூன்றாம் பாலின மாந்தர் பற்றிய இவர் கவிதை ...

காலமழைத்தூறலிலே
களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாய்ப்பாலின் சரித்திரத்தில்
சதுராடும் புதிரானோம்
விதை வளர்த்த முள்ளானோம்
விளக்கின் இருளானோம்
சதைவளர்க்கும்பிணம் நாங்கள்
சாவின் சிரிப்புகள்

மூங்கையொருபாட்டிசைக்க 
முடவனதைஎழுதிவைக்க 
முடவன்கைஎழுதியதை 
முழுக்குருடர் படித்ததுண்டோ?

மூங்கையின்பாட்டானோம் 
முடவன்கைஎழுத்தானோம்
 முழுக்குருடர் படிக்கின்றார்

சந்திப்பிழை போன்ற 
சந்ததிப்பிழை நாங்கள் 
காலத்தின்; பேரேட்டைக் 
கடவுள் திருத்தட்டும்

தலைமீது பூவைப்போம் 
தாரணியோர் கல்லறையில் 
பூவைத்தல்முறைதானே? 
பூத்தஉயிர்க் கல்லறைகள் நாங்கள்

தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ 
தனிமலடி தாழம்பூ 
வாய்ப்பந்தல்போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்.

==========================================================================================

பாஹே பக்கம் :  மே 6 அப்பாவின் பிறந்த நாளையொட்டி குடும்பக் குழுமத்தில் பகிர்ந்த சில அவரது எழுத்துகள் சிலவற்றை இங்கு ஒவ்வொன்றாய் பகிர்கிறேன்!



=====================================================================================

ஜாலிமுத்து ராஜ் என்பவர் பேஸ்புக்கில் பகிர்ந்த பதிவு.

அக்ராஹாரத்தில் கழுதை :-

அக்ரகாரத்தில் கழுதை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோன் ஆப்ரஹாம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். பி. ஸ்ரீனிவாசன்,சுவாதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
தயாரிப்பு
ஜோன் ஆப்ரஹாம்
நிமிதி பிலிம்ஸ்
கதை
வெங்கட் சாமிநாதன்
இசை
எம். பி. ஸ்ரீனிவாசன்
நடிப்பு
எம். பி. ஸ்ரீனிவாசன்
சுவாதி
மலையாள சிறுகதையாசிரியரும் பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்ற திரைக்கதை எழுத்தாளருமான ஜான் ஆபிரஹாம் இயக்கிய ஒரே தமிழ்த் திரைப்படம் இது. தமிழ் இலக்கியப் பரப்பில் கவனிக்கத் தக்க கலை விமர்சகரான வெங்கட் சாமிநாதன் இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதினார்.
சிறந்த படத்துக்கான தேசிய விருதுபெற்றது இப்படம். 70களின் தமிழ் கிராமம் ஒன்றில் கதை நிகழ்கிறது. சென்னை மாநகரில் கல்லூரிப்பேராசியராக பணியாற்றும் கதையின் நாயகன், தாயை இழந்து நிராதரவாக விடப்படும் கழுதைக் குட்டி ஒன்றை தனது செல்ல விலங்காக வளர்க்கத் தொடங்குகிறார். ஆனால் மாநகரில் தொடர்ந்து கழுதையை வளர்க்கமுடியாதபடி அவரை நெருக்கடிகள் அழுத்துகின்றன. எனவே கிராமத்திலிருக்கும் தனது அக்ரஹாரதுக்கு (பிராமணர் வாழும் தெரு) கழுதையை அழைத்து வருகிறார். அங்கே வசித்துவரும் தன் பெற்றோரின் கண்காணிப்பில் கழுதையைக் பராமரிக்கும் பொறுப்பை ஒரு வாய் பேசவியலாத பெண்ணிடம் ஒப்படைத்து திரும்புகிறார். ஆச்சார அனுஷ்டானங்களும் பழமைவாதமும் மிக்க அந்த அக்ரஹாரம் கழுதையின் வரவை எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் திரைக்கதை.
அக்ரகாரத்தில் கழுதை சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது . இப்படம் பிராமணர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதப்பட்டு சர்ச்சைக்குள்ளானதுடன் , அதன் ஆரம்ப வெளியீட்டின்போது பெருமளவில் புறக்கணிக்கப்பட்ட போதிலும், பிற்காலங்களில் ஒரு தனித்துவமான அந்தஸ்தைப் பெற்றது.
நடிகர்கள்
நாராயணசாமியாக எம்பி ஸ்ரீனிவாசன்
சுவாதி உமாவாக
ஸ்ரீலலிதா
கோபாலி
வெங்கட்டாக ராமன்
வீரராகவன் ஸ்ரீனிவாச ஐயராக
நரசிம்மன்
தில்லை ராஜன்
கிருஷ்ணராஜ்
ராஜன்
அக்ரஹரத்தில் கழுதை சர்வதேச அளவில் பாராட்டுக்களைப் பெற்றது. 1978 இல், 25வது தேசிய திரைப்பட விருதுகளில் அக்ரஹரத்தில் கழுதை சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது . "ஒரு பிராமண கிராம சமூகத்தின் மரபுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு நீதிக்கதையை உருவாக்க" தமிழ் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளை ஜான் பயன்படுத்தியதை நடுவர் குழு குறிப்பிட்டது . இது 1978 இல் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவின் கீழ் திரையிடப்பட்டது. வேறு சில படங்களுடன் சேர்ந்து, இது தென்னிந்திய சினிமாவில் "புதிய அலை" இயக்கத்திற்கு முன்னோடியாக இருந்தது . இப்படம் பிராமணர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதப்பட்டதால் சர்ச்சைக்குரியதாக மாறியது, மேலும் பல பிராமண அமைப்புகள் இதைத் தடை செய்ய அழைப்பு விடுத்தன. 1989 இல், சர்ச்சையைத் தவிர்ப்பதற்காக தூர்தர்ஷன் இப்படத்தின் திட்டமிடப்பட்ட ஒளிபரப்பை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் வெளியானபோது பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டாலும், பிற்காலங்களில் இது ஒரு வழிபாட்டு அந்தஸ்தைப் பெற்றது. இந்தத் திரைப்படம் ஜான் ஆபிரகாமுக்கு மிகவும் தேவையான திருப்புமுனையைக் கொடுத்தது. 2013 இல், IBN லைவ் இதை இந்திய சினிமாவின் எல்லா காலத்திலும் சிறந்த 100 படங்களில் ஒன்றாகச் சேர்த்தது.

=================================================================


நாகேஷ், சின்னப்பா தேவர் பற்றி சித்ரா லக்ஷ்மணன் சொல்லும் சில தகவல்கள்.  அவர் பேசியதிலிருந்து இது சிறிய ஒரு பகுதி என்று தெரிகிறது.  முக்கியமான நேரத்தில் காணொளி அறுந்து விடுகிறது!


========================================================================================

பூவா தலையா?


=======================================================================

சுஜாதா - மரணத்துக்குப்பின் துவாயிருந்தால் என்ன? -  அப்புறம் கவிதை ஒன்று 

பிறந்ததிலிருந்தே இறந்துகொண்டே இருக்கிறோம்!
-எழுத்தாளர் சுஜாதா
செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? - சுஜாதாவிடம் கேட்கப்பட்ட கேள்வி.
அதற்கு அவர் அளித்த பதில்.
“நான் செத்த பின் நானாக இருந்தால் தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை, என் புத்தகங்கள், என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும்.
செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.
நான் நானாகவே தொடர வேண்டும்.
அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும். கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும். அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன, முடிந்தால் என்ன?
எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான்.
ஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில்,
”Nobody dies; they live in memories and in the genes of their children”. _
How True?
மனைவி, மக்கள், பழைய பள்ளி, தெரிந்த பாட்டுகள், திறமைகள், கவிதைகள், கடிதங்கள், காதல்கள் எல்லாம் மறந்து போய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்காக மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்கு வாயசைப்பதையும் மறந்து விடுவோமாம்.
உயிருடன் இருப்பது என்பது இது தான். உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம்தான்”.
‘யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்த போது அப்பா சொன்னது. அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக் கொள்ள வேண்டும்?
அவள் குரல் என் பேத்தியிடம் இருக்கிறது. அவள் சாயல் உன்னிடம் இருக்கிறது. குணம், பிடிவாதங்கள், அழகு, டயபடிஸ் எல்லாவற்றையும் அங்கங்கே பாகம் பிரித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள். அவள் நினைவுகள் நம் எல்லோரிடமும் உள்ளது’' என்று சொல்வார்.
மரணம் தொடர்பாக சுஜாதா ஆயத்தமாகவே இருந்தார் எனச் சொல்ல வேண்டும்.
"இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்க்கிறேன். இறந்தவர் என்னை விட இளையவர் என்றால் பரவாயில்லை, நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டு கொள்கிறேன். என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது.”
அவர் ஒரு விஞ்ஞான எழுத்தாளர் என்பதால் அவரிடம் திரும்ப திரும்ப மரணத்தை வெல்வது பற்றி பல்வேறு கேள்வி பதில்களில் பல்வேறு விதங்களில் கேட்கப்பட்டதுண்டு.
அதற்கு அவரின் பதில், “மரணிக்காமல் வாழ்ந்து கொண்டே இருந்தால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் போய்விடும். மிக நெருக்கமானவர்கள் மரணத்தில் தான், நமக்கு உண்மையான தரிசனம் கிடைக்கிறது. தினம் தினம் பல பேர் இறக்கிறார்கள். அந்தச் சாவெல்லாம் நம்மைப் பாதிப்பதில்லை.”
‘மரணம் ௭ன்பது கடவுளுக்கு வாசல்’ என்று ரஜனீஷ் சொல்லியிருக்கிறார்.
மனிதனால் இதுவரை களங்கப்படாத ஒரே ஒரு சங்கதி மரணம். அதை அவன் இன்னமும் கொச்சைப்படுத்தவில்லை. கொச்சைப்படுத்தவும் முடியாது. அது துல்லியமானது. அதை அவனால் அறியவே முடியாது.
அதை அவனால் ஒரு விஞ்ஞானமாகவோ, வேதாந்தமாகவோ மாற்ற முடியாது. அது அவன் கைப்பிடியிலிருந்து எப்போதும் வழுக்கிச் செல்கிறது.
உங்கள் வாழ்வில் எதிர்பாராமல் மரணம் குறுக்கிடும்போது உங்கள் வாழ்வு அர்த்தமற்றதாகிறது. ஆம், வாழ்வு அர்த்தமற்றது தான். ஒவ்வொருவரும் கொஞ்சம் இறக்கிறோம்.”
என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது:
"உங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை உண்டா? இதன் கிளையாக ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா? அது உடலில் எங்கு இருக்கிறது? சாவை வெல்ல முடியுமா?
நாம் சாசுவதமாக வாழ முடியுமா என்பவை."
அந்தக் கேள்வியின் பல வடிவங்கள். நாற்பது வயசுக்குப்புறம் பலர் மனத்தை இது குடைகிறது.
நீங்கள் சாசுவதமாக வாழ முடியும் என்பதை ஏன் சந்தேகிக்கிறீர்கள்?
நீங்கள் உயிர் வாழ்வதே ஒரு அதிசயம் அல்லவா, வியப்பல்லவா?
உயிரெனும் அற்புதத்தைக் கொடுத்தவனால் அதன் முடிவை ரத்து செய்ய முடியாதா? இதில் என்ன அதிசயம் !”
"சாவுங்கறதே ஒரு முடிவு இல்லை. ஒரு தொடர்ச்சிதானாம். நம்ம உடம்பில் அறுநூறு கோடி செல் உயிரணுக்கள் இருக்கு. ஒவ்வொரு இருபத்து நாலு மணி நேரமும் அதில ஒரு பகுதி செத்துக்கிட்டே இருக்கு.
முப்பது வயசுக்கப்புறம் நம்முடைய மூளை வருஷத்துக்கு ஒரு பர்சென்ட் செத்துக்கிட்டு இருக்காம். கொஞ்சம் கொஞ்சமா, செதில் செதிலா அழிஞ்சுண்டு வர்றோம். அதனால நாம எப்போ சாகறோம். எப்போ உயிரோட இருக்கோம்கிறதே சரியா சொல்ல முடியாது."
" பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கிறோம்."

நன்றி: தாய்


மீசா மறைந்து எமர்ஜென்சி விட்டுப் போய்   
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் – பேசாமல்   
பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண் டெல்லோரும்   
……………. குடிக்க வாரும். .

===================================================================================

நேற்று ஜீவி ஸாரின் நேயர் விருப்பம்..  லேட்டஸ்ட் குமுதம்..  புத்தகம் முழுதும் விஜய் மற்றும் சினிமா செய்திகள்.  விகடனின் அதே வடிவமைப்பு.  அதாவது தற்போதைய விகடன்.  ஒருவேளை திமுக அதிமுக மாதிரி இவையும் ஒன்று சேர்ந்து விட்டனவோ என்னவோ...!  அப்புறம் ஜோக்ஸ் மாயம்.  சிறுகதைகள் இருக்கிறதா என்று கணேஷ் வஸந்த்தை வைத்துதான் தேடவேண்டும்!








=========================================================================================

1966 ல் வெளியான இசைக்காவியம் கஹாகவி காளிதாஸ்.  கண்ணதாசன் பாடலுக்கு கே வி மகாதேவன் இசையில் கே பி சுந்தராம்பாள் குரலில் ஒரு பாடல் 

காலத்தில் அழியாத..

92 கருத்துகள்:

  1. இன்று காரைக்குடியில். நூறாண்டு கடந்த நாட்டுக்கோட்டை செட்டியார் வீடு (அரண்மனை) கொண்டாட்டம் மற்றும் விசேஷங்களில் கலந்துகொள்கிறேன். இரு நாட்கள் இங்குதான். மொபைலில் படிப்பது கஷ்டம்

    பதிலளிநீக்கு
  2. என்ன ஒரு பாடல்? இந்த மாதிரி சூப்பர் பாடல்களையும் ஸ்ரீராம் பகிர்வாரா? ஆச்சர்யம். மிக நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூட ரசித்ததில் மெத்த மகிழ்ச்சி.

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர். இந்த மாதிரி பாடல்கள் எனக்கு மிக விருப்பமானவை. அவங்க குரல் ஆஹா

      நீக்கு
    3. வரிகளை பார்த்ததும் என்ன பாடல் என்று தெரிந்து கொண்டு மட்டும் எழுதுகிறீர்கள் என்றுதான் இன்னமும் நம்புகிறேன்!  இப்போது கேட்டீர்களா என்ன!

      நீக்கு
    4. Today I saw in mobile. Normally I use iPad in the mornings. iPad is ten plus years old. So no updates possible. Now a days it doesn't show vide embedded in a பதிவு

      நீக்கு
  3. ந முத்துராமலிங்கம் அவர்களின் சோழர் கால கோவில் சுவாரசியம். சென்று பார்க்கும் ஆர்வம் வருகிறது. கன்டூர சோழர்கள் பற்றிக் கேள்விப்பட்டதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். உண்மையிலேயே ஆர்வத்தைத் தூண்டுகிறது.

      நீக்கு
  4. திருப்பூர் கிருஷ்ணன், பாஹே பற்றி மற்றும் அவர் ரெஸ்பான்ஸ்.. ம்ம் பெரிய ஆட்கள் ரொம்ப பிஸி போலிருக்கு. அல்லது அவர்கள் ஆர்வம் மாறிக்கொண்டே இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். அப்பாவை அவருக்குத் தெரியும். அப்பாவின் தூறல்கள் புத்தகத்துக்கு அவர்தான் முன்னுரை எழுதிக் கொடுத்தார். என்னவோ இப்படி பிஹேவ் செய்கிறார்கள்.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கம். இன்றைய பதிவு , புத்தகமாக வந்தால் 30 பக்கமாவது தேறி இருக்கும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... வாங்க வல்லிம்மா.. வணக்கம். இன்று கொஞ்சம் கம்மிதான் இல்லை?
      பாதி படங்களிலேயே போய்விடும்!

      நீக்கு
  6. திரு.கிருஷ்ணன்?????? மென்மை எல்லாம் எப்போதும் மென்மை இல்லை போலிருக்கிறது:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  வாசகர்களை இப்படி படுத்தினால் எப்படி!

      நீக்கு
  7. காலத்தில் அழியாத பாடல் மிகச் சிறப்பு. சுந்தராம்பாள் அம்மாவின் நடிப்பும் அருமை . குரலில் உணர்ச்சி பெருகி வரும். நன்றி ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் ரொம்பப் பிடித்த பாடல் அம்மா.

      நீக்கு
  8. குமுதம் தலையங்கம் அருமையான புத்திமதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தற்போதைய குமுதம். ஜீவி ஸார் நேற்று கேட்டார். அதனால்!

      நீக்கு
    2. அரசு பதில்கள் என்று பெயர் வைத்துக் கொண்டால் போதுமா?
      பழைய பெருங்காய டப்பாவின் வாசம் பெருங்காயம் அடைக்கப் பட்டிருந்த்ச் வாசமே தவிர பெருங்காயத்தின் வாசமில்லை. கொஞ்ச காலத்திற்கு பிறகு அந்த வாசமும் போய் வெத்து டப்பாவாக பல்லிளிக்கும். பெருங்காய வாசமே அறியாதோருக்கு வேறொரு வாசத்தை அறிமுகப்படுத்தி 'இன்றிருலிருந்து புதிதாய்ப் பிறந்தோம்' என்று புத்தம் புதுசாய் மலர்வதே...... ஜஸ்ட் எ மினிட்.. சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் கொள்ள வேண்டி யோசனைகளையெல்லாம் நாம் சுமப்பானேன்? சந்தையில் நமக்குப் பிடித்தமானவற்றை சுகிப்போம்.மகிழ்வோம்.

      நீக்கு
  9. சுஜாதா சாரின் இந்தப் பதிவை படித்திருக்கிறேன். அவர் மறைவுக்கு முந்திய வருடம் வந்ததோ? அறிவான அன்னியர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் தெரியவில்லை. ஆனால் ஒரு கேள்வி பதில் பதிவில் சொல்லி இருந்தார்.

      நீக்கு
  10. “நான் செத்த பின் நானாக இருந்தால் தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை, என் புத்தகங்கள், என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும்.
    செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.
    நான் நானாகவே தொடர வேண்டும்.
    அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும். கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும். அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன, முடிந்தால் என்ன?
    எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான்.''' அச்சோ சார்:(((((((((((((((((((((((((((((((((((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்கலான சிந்தனை. அது நம் மண்தஜுக்குள்ளும் புகுந்து விடுகிறது, நம்மையும் சிக்கலாக யோசிக்க வைக்கிறது! ஆமாம், நான் என்றால் யார்?

      நீக்கு
    2. நான் என்றால் என் எண்ணங்கள் தான்.

      நீக்கு
  11. பூவா தலையா படம் நான் அடிக்கடி பார்க்கும் படம். நாகேஷ் ஜஸ்ட் சுபர்ப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். உண்மையில் அவர்தான் படத்தின் ஹீரோ! இதே வேடத்தை பின்னாட்களில் வடிவேலு ஒரு படத்தில் செய்திருப்பார். V. சேகர் படம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. ஓ. நாகேஷை யாராலும் மிஞ முடியாது.

      நீக்கு
  12. அப்போது வந்த படங்களின் பெயர்களே முழ நீளம். பெற்ற மகனை விற்ற அன்னை, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, உத்தமி பெற்ற ரத்தினம்:)))))) எங்கள் குடும்பம் பெரிசு,தலை கொடுத்தான் தம்பி.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலாவுதீனும் அற்புத விளக்கும், இதில் அல்லது என்று போட்டு இரண்டாவது பெயர் வேறு இருக்கும்!

      நீக்கு
  13. ஶ்ரீ பாஹே அவர்களுக்கு நமஸ்காரங்கள். நல்ல மகனைப் பெற்ற நல்ல தந்தை.

    பதிலளிநீக்கு
  14. என்னதான் அதிக வேலையிருக்கும், பிஸி என்றாலும் இப்படியா இருப்பார்கள் மக்கள் என்று அதிசயமாகத்தான் இருக்கிறது. 'கிடைத்தது, பார்த்து விட்டேன்' என்று கூடவா டைப் செய்ய மாட்டார்?//

    இது எனக்கும் தோன்றும் ஒன்று ஸ்ரீராம். ஒரு ஷார்ட் வரி...acknowledgement, இது நமக்கு அனுப்பித் தரும் ஒருவருக்கான மரியாதை basic courtesy சகமனிதருக்கு அளிக்கும் மரியாதை...இதுவும் பலருக்கும் இருப்பதில்லை. அதுவும் உயர் பதவியில் இருப்பவர்களுக்கும்.

    நான் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகைக்கு ஒரு கதை அனுப்பினேன். குறும் புதினம். மின்னஞ்சலில்.

    ஒரு மாதம் மேல் ஆகியும் பதில் இல்லை. சரி மீண்டும் கேட்டுப் பார்ப்போம் என்று கேட்டேன்....ம்ஹூம்.

    ஒரு வேளை நானெழுதிய கதை ஏற்புடையது இல்லை என்றாலும் தெரிவித்திருக்கலாமே இல்லையா? தவறில்லை. அடிப்படை மரியாதைக்குக் கூட கிடைக்கப்பெற்றோம் பார்க்கிறோம் என்று கூட இல்லை. பிரசுரிப்பதும் பிரசுரிக்காததும் அவர்களுடைய முடிவு. அது கவலையில்லை. ஆனால் பதில் எப்படி இருந்தாலும் தெரிவிக்கலாம் இல்லையா?

    எனவே நாம் நம்மை மரியாதையுடன் விலகி இருப்பது நல்லது என்றே தோன்றியது. நம் மனசை நாம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா.. ஆனால் நான் திருப்பூராரிடம் மரியாதை வைத்திருக்கிறேன். அவர் இப்படி நடந்து கொள்வது ஆச்சர்யமாக இருக்கிறது.

      நீக்கு
  15. பின் குறிப்பு :// நல்ல விஷயம் ஸ்ரீராம் எப்படியோ போட்டாங்களெ.....இருங்க பார்க்கிறென். மே மாத இதழில்தானே?

    https://amudhasurabi.in/magazine/current-issue/

    உங்கள் பெயர் இருக்குமா? எந்தப் பகுதியில் வந்திருக்கும்? ஸ்ரீராம் என்று தேடினேன்...முதல் பக்கப் பொருளடக்கத்தில் இல்லை எனவே உள்ளே போய் பார்க்கிறேன், ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வேளை ஆன்லைன் இதழில் தலையங்கம் வராதோ? தலையங்கம் என்றால் ஆசிரியர் எழுதுவதுதானே? ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. கடைசியில் டோட்டலா கண்டுக்கலை. அதானே! என்ன மேனர்சோ..

      நீக்கு
  16. விகாரமான தோற்றமுடையவனையும் அழகாகவே வர்ணித்திருக்கிறார், சாண்டில்யன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ ஒரு அழகு அவனிடமும் இருக்கிறது என்கிறார்.! கதையில் அந்த விலைராணி அவனிடம் பைத்தியமாக இருக்கிறாள்.

      நீக்கு
  17. சாயா சோமேஸ்வரர் கோயில் ஆச்சரியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. பரோலில் தப்பிய கைதி 12 வருடங்கள் நடித்திருப்பது என்பது எதைச் சொல்கிறது என்றால் நம்ம போலீஸின் தரத்தை. அசிரத்தையை....இல்லை அப்போதைய காவல்துறை கண்டும் காணமல் இருந்தது? நிஜமாகவே கேலிக் கூத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம சட்டங்களும், அதிகாரிகளும், அவர்கள் கடமையுணர்வும்...!

      நீக்கு
  19. போய்வா நதியலையே, பாடும் வானம்பாடி ஆகிய திரைப்பாடல்கள்//

    இரண்டும் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். நான் ஒரு இரவுப்பாடகன் கேட்டிருப்பேன் ஆனா டக்கென்று வரவில்லை நினைவிற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்... நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்...

      நீக்கு
  20. நா காமராசன் கவிதைகளை மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம்.

    எடுத்தும் வைத்துக் கொண்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  21. தூறல்களில் பாஹே அவர்களின் வரிகளை வாசித்த நினைவு இருக்கிறது.

    பாஹே, இலக்கிய உலகில் கவனிக்கப்படாதது மிகப் பெரிய இழப்பு என்றே தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிப்பட தோதான இடமில்லாமல் போனது!

      நீக்கு
    2. அதுவும் சரிதான் ஸ்ரீராம்...ஆனால் இப்ப விட அப்ப இன்னும் கொஞ்சம் பெட்டரோ? இலக்கிய உலகம்?

      கீதா

      நீக்கு
  22. அக்ரஹாரத்தில் கழுதை - கதை நல்லாருக்கே ஸ்ரீராம்.

    கிடைத்தால் பார்க்க வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுமை இருக்காது!

      நீக்கு
    2. அப்படியா! அப்ப லிஸ்ட்ல ஒன்னு குறைச்சாச்சு!!!ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  23. சுஜாதாவின் பக்கம் ரசித்தேன்.

    எனக்கும் அவரது கேள்விகள் தோன்றும் //செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.
    நான் நானாகவே தொடர வேண்டும்.//

    இதுவும்...

    உயிருடன் இருப்பது என்பது இது தான். உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம்தான்”//

    யோசித்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. அப்ப இன்னும் குமுகம் போட்டி முடிவுகள் வரவில்லை!

    வெள்ளைத்தாள் என்றார் விஜய்....வந்ததோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ம்ம்ம்ம் பொதுவாக எல்லாப் பத்திரிகை ஆசிரியர்களும் இப்படித் தான். அமுதசுரபிக்கு அண்ணா கண்ணன் ஆசிரியராக இருந்த காலத்திலும் இப்படித் தான் என் அண்ணா பெண்ணின் ஒரு கவிதையை அனுப்பி இருந்தேன். அண்ணா கண்ணன் அறிமுகம் ஆனவர் தான். ஆனாலும் பதிலே சொல்லலை. பின்னர் சித்தப்பா மூலம் அணுகினேன். உடனடியாக அந்த மாத அமுதசுரபியை அனுப்பி வைச்சு மேலும் படைப்புக்கள் இருந்தால் அனுப்பும்படி சொல்லி இருந்தார். ஆனால் அண்ணா பெண்ணோ ஜர்னலிசம் படிச்சாலும் எழுத்தில் இறங்காமல் பத்திரிகை நிருபராக (அப்போல்லாம் அவளுடைய ரோல் மாடல் பர்கா தத்) ஆகணும்னு சன் தொலைக்காட்சியில் ராடனில் ராதிகா குழுமத்தில், பின்னர் கல்கி குழுமம், பின்னர் தினமலர்னு வேலை செய்து தினமலரில் ஒரு கருத்து வேறுபாட்டால் வெளியே வந்துட்டா. பட்டம் என்ற பெயரில் சென்னைப் பதிப்பு தினமலரில் வந்து கொண்டிருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... குறிப்பாக அவரே ஒன்று எழுதிக் கொடு என்று கேட்டு விட்டு அப்புறம் இப்படி பாராமுகமாக இருப்பது நியாயமல்ல.

      நீக்கு
  26. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  27. அதே அண்ணா பெண்ணின் இப்போதைய கதாநாயகி பால்கி ஷர்மா. :))))) நான் எப்போவுமே செய்திகள் என்றால் வான்டேஜில் வந்தால் மட்டுமே நம்பும் ரகம். :))) இப்போல்லாம் அவளும் இப்படி மாறிட்டா.

    சாண்டில்யன் அநேஎகமாக எல்லா நாவல்களிலும் கதாநாயகன், முக்கியப் பாத்திரங்கள், அப்புறமாக் கட்டாயமாய் ஒரு மதகுரு அல்லது சிவனடியார் போல யாரானும் இருப்பாங்க. அவங்களுக்கும் போர்த் தொழில் கைவாஅரப் பெற்றிருக்கும். எல்லோரையுமே அவர் வர்ணிப்பார். வர்ணனையே சமயங்களில் 2 பக்கமாவது போயிடும்.
    ந.முத்துராமலிங்கம் எழுதின இந்தப்பதிவை நான் முகநூலில் படிச்ச நினைவு இருக்கு. பரோலில் தப்பிய கைதி திரைப்படங்கள், சீரியல்களில் நடிச்சும் யாருமே அடையாளம் கண்டுபிடிக்கலைனா அவருடைய மேக்கப்பினாலா? என்னவோ நம்ம நாட்டில் தான் இப்படி எல்லாம் நடக்கும். குற்றவாளிகளிடம் கடுமையே காட்டாத நாடு இது.

    நா.காமராஜனின் கவிதைகள் முன்னரே படிச்சிருக்கேன். எதிலேனு நினைவில் இல்லை. அந்த மூன்றாம் பாலினம் பற்றிப் படிக்கையில் கண்ணீர் வந்துடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா பெண்ணின் ஆதர்சங்கள் மாறிக்கொண்டே இருக்கும்!

      சாண்டில்யன் கடத்தி உத்தி பற்றி அழகாக சொல்லி இருக்கிறீர்கள். முற்றிலும் உண்மை.

      மற்றவைகளையும் படித்து கட்டுத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  28. நாகேஷ், சின்னப்பதேவர், முருகன், மயில் எல்லாம் செம சுவாரசியம். சித்ரா பேசினால் தகவல்கள் நிறைய கொட்டும். கடைசில "நாகேஷ் திகைத்துப் போனார் என்றுதான் சொல்ல வேண்டும்" முருகா இப்படி சஸ்பென்ஸ்ல நிறுத்தறதே உன் வேலையா!! சரி இதை யுட்யூப்ல பார்த்துட வேண்டியதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள். அட்லீஸ்ட் அது என்ன என்றாவது சொல்லுங்கள்!

      நீக்கு
    2. சொல்கிறேன், ம். ஸ்ரீராயுட்யூப் லிங் கிடைச்சதும்

      கீதா

      நீக்கு
  29. தூறல்கள் புத்தகம் என்னிடம் இருக்கே. அதிலே இதைப் படிச்சிருக்கேன். அக்ரஹாரத்தில் கழுதை வந்தப்போ நான் மதுரையில் இருந்தேன். பையர் பிறந்த சமயம் அது. அப்போல்லாம் இதைப் பற்றி அவ்வளவு தெரியாது. ஆனாலும் பார்த்தவங்க படம் நல்லா இருக்கும்னு சொல்லிட்டிருந்தாங்.க. வேடிக்கை என்னன்னா நான் 2007/2008 ஆம் வருடம் மின் தமிழ்க் குழுமத்தில் சேர்ந்தப்போ அங்கே திரு வெங்கட் சாமிநாதனும் இருந்தார். அதோடு வடக்கு வாசல் பெண்ணேஸ்வரனும் இருந்தார். பெண்ணேஸ்வரன் எனக்கப்புறமா வந்தார்னு நினைவு. ஆனால் வெங்கட் சாமிநாதனின் சீடர்னு அவரைச் சொல்லலாம். இப்படி டெல்லியைச் சேர்ந்த சில தமிழர்கள் அங்கே இருந்தனர். வெங்கட் சாமிநாதன் பல விமரிசனக்கட்டுரைகள் எழுதி இருக்கார். சில மின் தமிழில் வந்தாலும் (நானே வெளியிட்டிருக்கேன்.) தொகுப்பு ஒண்ணு இருந்தது. அதை மின் தமிழில் மரபு விக்கியில் முழுக்க முழுக்க நான் தான் வலை ஏற்றம் செய்திருக்கேன்.

    ஹெஹெஹெ, ஜிவாஜியைப் பற்றிய அவர் கருத்து, டைரக்டர் ஸ்ரீதர் பற்றி அவர் எழுதினது எல்லாம் படிச்சீங்கன்னா இங்கே பலருக்கும் கோபம் வரும். நான் ஜிவாஜி நடிப்பைப் பத்திச் சொன்னதெல்லாம் ஒண்ணுமே இல்லை. அந்த அளவுக்கு மோசமாக அவரை விவரித்திருப்பார். முக்கியமாய் அவர் நடிப்பை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது கூகுள் ப்ளஸ்ஸோ.. அதில் திரு வெ.சா இருந்தததாக நினைவு,

      நீக்கு
    2. அதெல்லாம் இல்லை. விமரிசனங்கள் தான் எழுதிக்கொண்டிருந்தார். மின் தமிழில் அவரை வலியக் கூப்பிட்டுச் சேர்த்துக் கொண்டார்கள். பொதுவாக விமரிசனங்கள் தவிர்த்து வேறே ஏதும் அவருக்கு அவ்வளவாத் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் தமிழில் கொஞ்சம் இலக்கிய ரீதியாகவோ, ஆன்மிக ரீதியாகவோ ஆழமாகத் தெரியாது.

      நீக்கு
  30. ஆனால் வெங்கட் சாமிநாதனுக்கு மனிதர்களின் மறைமுகக் கேலி, கிண்டல், அவங்க செய்யும் அரசியல், விருதுகள் வாங்கச் செய்யப்படும் லாபியிசம் இதெல்லாம் தெரியாது. நெருங்கிப் பழகினால் மிக நல்ல மனிதர். அவர் கருத்தை மனதில் வைத்து ஒளிக்காமல் சொல்லுவார் பொதுவாகத் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தோ, தமிழக அரசியல் குறித்தோ அவருக்குப் பெரிதும் அபிமானம் இருந்ததில்லை. அதனாலேயே சென்னைப் பக்கம் வரலைனு நினைக்கிறேன். பெங்களூரிலோ எங்கேயோ இருந்தார் கடைசியில். அவர் பெண்ணிடம்னு நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் ஏதோ ஒரு பத்திரிகைக்கு கூட ஆசிரியராக இருந்தார் இல்லை?

      நீக்கு
    2. அதெல்லாம் இல்லை. விமரிசனங்கள் தான் எழுதிக்கொண்டிருந்தார். மின் தமிழில் அவரை வலியக் கூப்பிட்டுச் சேர்த்துக் கொண்டார்கள். பொதுவாக விமரிசனங்கள் தவிர்த்து வேறே ஏதும் அவருக்கு அவ்வளவாத் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் தமிழில் கொஞ்சம் இலக்கிய ரீதியாகவோ, ஆன்மிக ரீதியாகவோ ஆழமாகத் தெரியாது.

      நீக்கு
  31. படம் பூவா தலையா வா? சீன்? படம் பார்க்கணும் போல இருக்கிறதே. (கீதா இபப்டி எத்தனைப் படங்கள் உன் லிஸ்ட்ல இருக்கு?!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... இதையும் சீட்டுல எழுதி மூட்டைல கட்டி உள்ள போடுங்க!

      நீக்கு
  32. காணொளி மத்தியானமாகப் பார்க்கணும். பூவா, தலையா பலமுறை பார்த்த நல்ல படம். லாஜிக் இருக்கும் கதையம்சம். சுஜாதா கட்டுரை படிச்சது தான். ஜீவி சாரின் நேயர் விருப்பத்தினால் இன்னிக்குக்குமுதம் பார்க்கும் வாய்ப்பு. பிரின்டிங்கோ பக்க வடிவமைப்போ நல்லாவே இல்லை. ஆனால் வெளியிடுபவரை மாத்தலை போல. அதே முன்னர் இருந்த பார்த்தசாரதியின் மகனா இந்த வரதராஜன்? ஆசிரியர் எஸ்.ஏ.பி.யின் மகன் ஜவஹர் பழனியப்பன் இருந்தார். இப்போ அவர் இல்லை போல. ஏதோ புத்தகம்னு ஒண்ணை வெளியே கொண்டு வந்திருக்காங்க. அவ்வளவு தான்.

    ஆனால் கவிதைகள் அருமை. ராஜேஷ் குமாரை இப்போல்லாம் முகநூலிலே அடிக்கடி பார்க்க முடியுதே. பட்டுக்கோட்டை பிரபாகரும் அப்படித் தான். என்ன இருந்தாலும் ஐம்பது வருடங்கள் முன்னர் இருந்த குமுதம் போல் வருமா? சிறுகதைக்கான படம் நன்றாக உள்ளது. அரசு பதில்கள் சுமார் ரகம். (யார் இப்போ இந்தப் பெயரில் எழுதறாங்க) ஒரு காலத்தில் பாபுராவ் படேலுடன் ஒப்பீடு செய்து வந்த கேள்வி பதில்கள் பக்கம் இப்போ இப்படி. தலையங்கம் ஓகே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைய குமுதம், விகடன் பக்கங்கள் ஒரே மாதிரி இருப்பது போல எனக்குத் தோன்றியது. அரசு பதில்கள் என்று இன்னமும் அவர்கள் தொடர்வது நியாயம் இல்லைன்னு நினைக்கிறேன்.

      நீக்கு
  33. கேபிஎஸ். அம்மாவின் குரலில் பாடல். அருமை. காளியாக வருவார்னு கேள்விப் பட்டிருக்கேன். படம் பார்க்கலை. தொலைக்காட்சியில் வந்தப்போக் கூடப் பார்க்க முடியலை. பாடலையும் மத்தியானமாக் கேட்கிறேன். இப்போ வரேன் அப்புறமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படம் பார்க்கவில்லை. பாடல்கள் யாவும் பிடிக்கும்.

      நீக்கு
  34. சுஜாதாவின் அரசியல் கவிதை இது போல கற்றதும் பெற்றதும் பகுதியில் எழுதியிருப்பார்ல...அந்த கோடிட்ட இடத்தை நிரப்புகவில் என்ன வார்த்தை வரும்? புரிந்துவிட்டது!!! அதை நீங்க சொல்லலை...தேசாய் என்றது முதலில் நினைவுக்கு வரும் சொல்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிண்டல் தொனி!!!

      கீதா

      நீக்கு
    2. ஹா.. ஹா.. ஹா... அதேதான்... தேசாய், ராஜ்நாராயண்...

      நீக்கு
  35. அந்த சோமேஸ்வரர் கோயில் ரகசியம் முன்னரே இங்கு வந்திருக்கோ இல்லை இதைப் போன்று வேறொரு சித்தர்களின் குரல் என்று சிவன் கோயில் பற்றி பகிர்ந்திருந்தீங்களஒ? கோயிலைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை...இப்படி லிஸ்டில் சேர்த்துக் கொள்பவை நிறைய.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை போன தடவை போட்டது வேற,,, செங்குத்தான மழைல கால் வைக்கக் கூட இடமில்லாத இடத்துல ஏறிப்போவது... 

      நீக்கு
    2. அது புரிந்தது ஸ்ரீராம் அக்கோயில் இல்லை என்று தெரியும்....அதற்கும் முன்னஏ முன்னே...ஒரு வியாழன் பதிவில் அல்லது புதிய மாற்றத்தில் வெள்ளி பதிவில்?

      கீதா

      நீக்கு
  36. கனமான காத்ரமான காந்தக் குரலில் ஹைய் பிச் பாடல்களைக் கேட்கக் கசக்குமா!! திறந்த தொண்டை! இந்தப் பாட்டு இப்பதான் கேட்கிறேன் ஸ்ரீராம். ராகம் பிரமாதம். வித்தியாசமான ராகம் விஜயநகரியோ என்று தோன்றுகிறது. தங்கையிடம் கேட்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒரு ராகம் கேள்விப்பட்டதில்லை. ஆனால் ஹை பிட்சில் அழகிய பாடல்.

      நீக்கு
  37. " அக்கிரகாரத்தில் கழுதை' பேசப்பட்ட படம் இங்கும் பகிர்ந்தது நன்று.

    சாயா சோமேஸ்வரர் கோயில் தகவல்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன..

    பஹே பக்கம் அருமை பாராட்டுகள்.

    சிம்மக் குரல் சுந்தராம்பாள் பாடல் அருமை . எங்கள் அப்பா ஒலிக்க விடுவார் கேட்டு இருக்கிறோம்.

    சுஜாத்தா பக்கம் இறப்பும் நானும் "நான் நானாகவே தொடரவேண்டும்" நல்ல சிந்தனை.

    பதிலளிநீக்கு
  38. " அக்கிரகாரத்தில் கழுதை' பேசப்பட்ட படம் இங்கும் பகிர்ந்தது நன்று.

    சாயா சோமேஸ்வரர் கோயில் தகவல்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன..

    பஹே பக்கம் அருமை பாராட்டுகள்.

    சிம்மக் குரல் சுந்தராம்பாள் பாடல் அருமை . எங்கள் அப்பா ஒலிக்க விடுவார் கேட்டு இருக்கிறோம்.

    சுஜாத்தா பக்கம் இறப்பும் நானும் "நான் நானாகவே தொடரவேண்டும்" நல்ல சிந்தனை.

    பதிலளிநீக்கு
  39. கீதா.. நீங்கள் கொடுத்திருந்த பக்கத்துக்கு சென்று பார்த்தேன். எனக்குப் புரிந்தது. கீழே அந்தப் அப்பகுதியைக் கொடுத்திருக்கிறேன். இப்போது உங்களுக்கும் புரியும்!


    "எழுத்தாளர்கள் கவனத்திற்கு: அமுதகரபி அச்சு வடிவ இதழ். இதற்குப் பக்க
    வரையறை உண்டு. எனவே குறுநாவல் போன்ற நீண்ட படைப்புகளுக்கு இடமளிக்க இயலாது. தேர்ந்தெடுக்கப் பட்ட சிறுகதைகளும் கட்டுரைகளும் நேர்காணல்களும் அதிக எண்ணிக்கையில் தேங்கி நிற்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகத்தான் வெளியிட இயலும். எழுத்தாளர்கள் காத்திருக்கத்தான் வேண்டும். ஒருவருக்கே அடுத்தடுத்து வாய்ப்புகள் தர இயலாது. ஏராளமான பேருக்கு இடமளிக்க வேண்டியுள்ளது."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! இம்புட்டுத்தானா? நானும் இண்டு இடுக்கு விடாமல் தேடிப் பார்த்தேன்...மீண்டும் இங்கு வந்து தலையங்கம் என்பதைப் பார்த்து அதிலும் பார்த்தேன்....அதில் இதுதான் இருந்ததே அல்லாமல் ம்ம்ம்ம் அதில் இருந்ததைத்தான் உங்ககிட்ட சொன்னேன்...இதுக்குத்தான் தலையங்கத்தைப் பாருங்கன்னு பதிலா........அட போங்கப்பா...

      ஸ்ரீராம் எதுவாக இருந்தாலும் அதை ஒரு சின்ன பதில் கொடுத்திருக்கலாம் இல்லையா? இல்லை, ஆசிரியருக்கு நேரமில்லை என்றால் இதற்கெல்லாம் பதிலளிக்க என்று ஒருவரை நியமித்திருக்கலாம் இல்லையா?

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!