கேள்வி பதில்கள் :
கீதா சாம்பசிவம்:
1. அதிர்ஷ்டம் என்றால் என்ன? ஒரு சிலருக்கு மட்டுமே அதிர்ஷ்டம் என்பது வருமா?
# யாருக்காவது எப்போதாவது வந்தால்தான் அது அதிர்ஷ்டம்.
& ஜாதகத்தில் கிரகங்கள் சாதகமான நிலையில் இருந்தால், அதிர்ஷ்டம் வரும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறது **saroja ஜோதிடம் ( அடுத்த வாரம் முதல் kgg புதன் பகிவில் வரும் கதையைப் படிக்கவும்!)
நிற்க - ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரம் அதன் பின் வரும் அடுத்த ஒன்பதாவது நாள் (நட்சத்திரம்) பிறகு, 18 ஆவது நாள் (நட்சத்திரம்) அதிர்ஷ்டம் வர வாய்ப்பு இருக்கிறது என்று படித்தேன். இது ஓரளவுக்கு சரியாக உள்ளது.
உதாரணமாக பூராட நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு, உத்திராடம், கார்த்திகை மற்றும் உத்திரம் அதிஷ்ட நட்சத்திரங்கள். அந்த நட்சத்திரம் வருகின்ற நாட்களில் அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படும்.
2. ஒரு பெற்றோருக்கு 2, 3 குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தையை மட்டுமோ அல்லது இரண்டு குழந்தைகளை மட்டுமே தனிக்கவனம் அல்லது முக்கியத்துவம் கொடுப்பது சரியானதா?
# சரியில்லை என்று தெரிந்தும் மாறாத விஷயம் உலகில் நிறையவே உண்டு . அதில் இதுவும் ஒன்று.
3. பெற்றோர் தாங்கள் பெற்ற குழந்தைகளிடமே பாரபட்சம் காட்டுவது சரியா?
# பாரபட்சம் என்பது வருவித்துக் கொள்வது அல்ல. நம்மிடம் இயல்பாக இருப்பது . அது காரணத்துடனும் இருக்கலாம் அகாரணமாகவும் இருக்கலாம். ஆனால் நம்மால் தவிர்க்க இயலாதது.
4. பெரும்பாலான குடும்பங்களில் மூத்த மகன் மட்டுமே பொறுப்புக்களை ஏற்பது ஏன்? மற்றவர்களுக்கும் பிரிச்சுக் கொடுப்பது சரியாக வராதா?
# பொறுப்புகளை ஏற்று நிறைவேற்றுவது என்பது எல்லோருக்கும் இயல்பாக வருவது இல்லை. எங்கு பார்த்தாலும் மூத்த மகன்கள் மட்டுமே பொறுப்புகளை வகிக்கிறார்கள் என்பதும் சரியானதாக இருக்காது.
" வேறு யாராவது பார்க்கட்டுமே. நான் மட்டுமே ஏன் செய்ய வேண்டும் " என்று நினைப்பது சரியல்ல என்ற எண்ணம் நம் மனதில் பலமாக இருக்கும் வரை, யாரோ ஒருவரிடம் பொறுப்புகளை வகிக்கும் பெரும் பொறுப்பு வந்து தங்கி விடுகிறது.
5. சாப்பாடு விஷயத்தில் நான்கைந்து பேர் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுகையில் பாரபட்சம் பார்ப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அதை எப்படிக் கையாளுவது?
# " சாப்பாடு போன்ற மிகச் சாதாரண விஷயத்தில் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டுமே என்று ஏன் என்னால் சற்று விலகி இருக்க முடியவில்லை " என்று யோசித்து ப் பார்ப்பது சுவாரஸ்யமான விஷயம்.
6. குழந்தைகளுக்கெதிரே பெற்றோர் வாக்குவாதம் நடத்துவது நல்லதா? அதில் நியாயம் இருந்தால் கூட சரியானதா?
# சரியானதல்ல என்பது மட்டுமல்ல தவறானதும் கூட.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
ஃப்ரிட்ஜில் வைத்த ஜில் குலாப் ஜாமூன் பிரிட்ஜில் வைத்ததை மைக்ரா வேவ் அவனில் சூடாக்கிய குலாப் ஜாமூன் அந்த சூடான குலாப் ஜாமூன் மீது வெனிலா ஐஸ்க்ரீம். எப்படி ரசிப்பீர்கள்?
(எனக்கு டயபடீஸ் ஸ்வீட் பக்கம் போக முடியாது என்று பதில் சொல்லக் கூடாது!)
# எனக்கு டயபடிஸ் கிடையாது. (கடவுளுக்கு நன்றி - தாய் தந்தையர்க்கு நன்றி). குலாப் ஜாமுன் ஐஸ்கிரீம் இரண்டுமே நன்றாக செய்யப் பட்டிருந்தால் அருமையாக இருக்கும் தான். ஒன்றிரண்டு முறை சாப்பிட்டிருக்கிறேன்.
& சில கல்யாண விருந்துகளில், பஃபேயில் சுவைத்தது உண்டு. நன்றாக இருந்தது! (சூடு கு ஜா & ஜில் ஐஸ் கிரீம்) வீட்டில் எல்லாம் செய்வது இல்லை!
நம்முடைய தேர்தல் முறையில் எந்த வித சீர்திருத்தங்கள் செய்யலாம்?
உதாரணமாக 18 வயதானவர்கள் ஓட்டு போடலாம் என்பதே தவறு. எந்த பொறுப்பும் இல்லாமல் கண்டதே காட்சி,கொண்டதே கோலம் என்றிருப்பவர்கள் எப்படி சரியான ஆளைத் தேர்ந்தெடுப்பார்கள்?
# இனிமேல் 18 வயதுத் தகுதியை மாற்ற இயலாது. வாக்காளர்களை வழிப்படுத்துவது பற்றி யோசிக்க வேண்டும்.
ஒவ்வொரு பூத்திலும் எந்தக் கட்சிக்கு எவ்வளவு வோட்டு விழுந்தது என்பது வெளியில் தெரியாதவாறு செய்ய வேண்டும். இலவசமாக அது இது வழங்கப் படும் என்று தேர்தல் அறிக்கையிலோ பிரசாரத்திலோ சொல்வதைத் தடை செய்ய வேண்டும்.
& முன்பு - அதாவது ஐம்பது வருடங்களுக்கு முன்பு வோட்டுப் போட இருபத்தொரு வயது ஆகியிருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது. பதினெட்டு வயது வந்தாலே மேஜர் என்று இருப்பதைக் காட்டி, வோட்டுப் போடும் வயதை 18 ஆகக் குறைத்தார்கள்.
சீர்திருத்தம் என்று பார்த்தால் தேர்தலில் குற்றப் பின்னணி உள்ளவர்கள், ஜாமீனில் இருப்பவர்கள் ஆகியோர் வேட்பாளராகப் போட்டியிடக் கூடாது என்று சட்டம் கொண்டு வரலாம்.
நெல்லைத்தமிழன் :
1. உங்கள் சொந்த ஊரிலிருந்து டிக்கெட் எடுக்காமல் நீங்கள் சென்னைக்கு வந்திருந்தால், உங்களுக்கும் ஆயிரக்கணக்கான கோடிகள் சொத்து வந்திருக்குமே. ஏன் அப்படிச் செய்யவில்லையே என்று வருந்துகிறீர்களா?
# எல்லாருக்கும் வீசினால் அது அதிருஷ்டக் காற்றல்ல.
2. எதற்காக தேர்தலில் நிற்பவர்கள் சொத்துக்கணக்கைக் காட்டச் சொல்லுகிறார்கள்? சொல்லவில்லை என்றால், முதலமைச்சருக்கே வங்கியில் 40,000 ரூதான் இருக்கிறது, பாக்கெட்டில் 10,000 ரூதான் இருக்கிறது என்று தெரிந்து மக்கள் வருத்தப்பட மாட்டார்களே.
# அடுத்த முறை கணக்குக் காட்டும்போது ஒப்பிட்டு கூட்டணி நடவடிக்கையை சரியாக எடுக்கலாம் என்றிருக்கும்.
3. நம் வயதான பெற்றோர்களை நம்மிடம் வைத்துக்கொண்டிருக்கும்போது, அவர்கள் ஆசைப்படுவது போல சாப்பிட வாங்கித் தருவது, செய்து கொடுப்பது சரியா? இல்லை அவங்களுக்கு உடல்நிலை மோசமானால் நமக்குனா கஷ்டம் என்று நினைத்து ரொம்பவே கண்ட்ரோல் செய்வது நல்லதா?
# அளவாக அனுமதிப்பதே சரி. " இனியும் இவர்கள் இருந்து கஷ்டப்பட வேண்டுமா " என்று நினைக்கத் தோன்றும்போது மாற்றிக் கொள்ளலாம்.
4. சிறிய வயதில் நமக்கு அப்பா என்றால் அதீத அன்பும், அவருக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் இருக்கும். திரும்ப எந்த வயதில் நமக்கு அப்படித் தோன்றும்?
# தோன்றாது.
5. பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு ஒரு தடவையாவது விமானத்தில் பயணிக்கணும் என்ற ஆசையும், விமானத்தில் பயணிப்பவர்களுக்கு ஒரு தடவையாவது கப்பலில் பயணிக்கணும், பிறகு நீர் மூழ்கிக் கப்பலில் பயணிக்கணும், விண்வெளிக்குப் போகணும் என்று ஆசை மாறிக்கொண்டே இருக்கிறதே தவிர, திருப்தி என்ற ஒன்று வராததன் காரணம் என்ன?
# இன்னும் உயர்வானது என்று கருதும் ஒன்று இருக்கும் வரை ஆசை எப்படி இடம் மாறாமல் இருக்கும் ?
படமும் பதமும் :
KGG பக்கம் :
தொடர்ந்து அலுவலகம் செல்ல வேண்டியது இருந்ததால், தினமும் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தவுடன் அந்தப் பையன் என்ன செய்தான் என்ற விவரங்கள் மனைவி சொல்லுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
முதல் நாள் மாலை அவன், யூ கே ஜி படித்துக் கொண்டிருந்த என் பெண்ணுக்கு பாடம் சொல்லித் தருகிறேன் என்று சொல்லி அவளுடைய ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி, அதைப் பார்த்து, அதில் இருக்கும் படங்களின் பெயர் சொல்லத் தெரியாமல் திணறியிருக்கிறான். பிறகு அ ஆ புத்தகத்தை வாங்கிப் பார்த்து அதில் உள்ள எழுத்துக்களைப் படிக்கத் தெரியாமல் திருப்பிக் கொடுத்துவிட்டானாம். ஒருவேளை பாம்பேயில் இந்தி எழுத்துகள் மட்டும் படித்திருப்பான் போலிருக்கு.
மூன்று நாட்கள் சென்ற பிறகு, எங்கள் வீட்டிற்கு பக்கத்து காம்பவுண்ட் (நடுவில் இருந்த சுவர் 4 அடி உயரம் மட்டுமே ) வீட்டில் - (ஆனால் அவர்களின் வீடு இருந்தது எங்கள் தெருவிற்கு பின் பக்கத்து தெரு !!) செந்தில் அம்மா - அவரை என் மனைவி அப்படித்தான் அழைப்பார்கள். அவர்கள் இவளை என் பையன் பெயர் சொல்லி அவனுடைய அம்மா என்று அழைப்பார்கள்.
அந்தப் பெண்மணி என் மனைவியிடம் உங்க வீட்டுல ஒரு பையன் இரண்டு மூணு நாளாக இருக்கானே அவன் யாரு? சொந்தக்காரப் பையனா என்று கேட்டிருக்கிறார்கள். என் மனைவி உடனே அந்தப் பையனின் கதையை முழுவதுமாகச் சொல்லியிருக்கிறாள்.
பிறகு அவர் சொன்ன விவரம் என் மனைவியைக் குழப்பிவிட்டது ! 'அந்தப் பையன் உங்க வீட்டுக்கு வந்த போஸ்ட் மேனிடமிருந்து ஏதோ ஒரு கடிதத்தை மத்தியானம் வாங்கினதைப் பார்த்தேன். (அந்த நேரம் என் மனைவி, என் பையன் பெண் இருவருக்கும் மதிய உணவு கொடுக்கச் சென்றிருந்தாள்; அப்பா மறைமலை நகரில் இருந்த அண்ணன் வீட்டுக்குச் சென்றிருந்தார்) ஆனால் அவன் அதை உங்களிடம் கொடுக்காமல் வாங்கிக் கொண்டு உங்கள் வீட்டு வாசல் பக்கம் சென்றுவிட்டான்' இதுதான் அவர் கூறியது.
உடனடியாக என் மனைவி, வீட்டிற்குள் இருந்த அந்தப் பையனை வெளியில் அழைத்து, பக்கத்து வீட்டுப் பெண்மணி முன்னிலையில் கடிதம் பற்றி விசாரித்திருக்கிறாள்.
" யாரிடமிருந்து வந்த கடிதம்? "
" தெரியாது "
" யார் பெயருக்கு வந்த கடிதம்? "
" தெரியாது"
" கடிதத்தை என்ன செய்தாய்? "
கொஞ்சம் தயங்கி, பிறகு " கிழித்துப் போட்டுவிட்டேன் "
பக்கத்து வீட்டு பெண்மணியும் கடிதம் பற்றி விசாரித்துப் பார்த்திருக்கிறார். ஊஹூம் எந்த அதிகப்படி தகவலும் கிடைக்கவில்லை.
அவன் முகத்தை கொஞ்ச நேரம் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண்மணி, அவனிடம் திடீரென்று " உன் அம்மா பெயர் பார்வதியா " என்று கேட்டாராம்.
அந்தப் பையன் ஆமாம் என்று சொல்லியிருக்கிறான்.
"உன் அம்மா ஊரு பாலக்காடுதானே?"
" ஆமாம்"
உடனே செந்தில் அம்மா தன் வீட்டிற்குள் சென்று அவர் பள்ளிக்கூட இறுதி வகுப்பு படித்தபோது எடுக்கப்பட்ட குரூப் ஃபோட்டோவைக் கொண்டு வந்து அதில் அவனுடைய அம்மாவைக் காட்டி, 'இதுதானே உன் அம்மா?' என்று கேட்க, அவனுக்கு ஒரே சந்தோஷம். ஆமாம் என்று சொன்னானாம். இது எல்லாம் நடந்தது ஒரு சனிக்கிழமையில். எனக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை ஒருநாள் மட்டுமே விடுமுறை.
அதன் பிறகு செந்தில்அம்மா என் மனைவியிடம் (மட்டும்) அந்தப் பையனின் அம்மா பற்றி சுருக்கமாக - பள்ளிக்கூட இறுதி வகுப்பு முடித்த சில வருடங்களில் யாரையோ லவ் செய்து கல்யாணம் செய்துகொண்டு ஊரை விட்டு ஓடிப்போனது பற்றி சொல்லியிருக்கிறார்கள்.
நான் இருந்த அந்தப் பகுதியில் இருந்த வீட்டு சொந்தக்காரர்கள் பலரும் ரயில்வே துறை ஊழியர்கள். அந்தக் காலத்தில் அந்தப் பகுதி டெவலப் ஆக ஆரம்பிக்கும் சமயத்தில் மிகவும் குறைந்த விலையில் இடம் வாங்கி, கடன் தொகையில் வீடு கட்டி குடியேறியவர்கள்.
செந்தில் அப்பா எக்மோரில் ரயில்வே ஸ்டோரில் கிளார்க் ஆக இருந்தார். ரயில்வே யூனியனில் தெரிந்த ஆட்கள் இருந்தனர். அவர்கள் மூலம் ஏதாவது ஏற்பாடு செய்து, பையனை திங்கட்கிழமை அன்று திரும்ப பாம்பே அனுப்பலாம் என்று செந்தில் அம்மா கூறியுள்ளார்.
நான் சனிக்கிழமை வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், நடந்தது எல்லாவற்றையும் என்னிடம் கூறினாள் என் மனைவி.
பாலசுப்ரமணியனிடம் கடிதம் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கும் முன்பு என் மனைவியிடம் சொன்ன அதே பதில்களைத்தான் அவன் சொன்னான்.
ஒரு சிறிய தாளில் பென்சில் கொண்டு ஏதோ எழுதி வைத்திருந்தான். அது என்ன என்று வாங்கிப் பார்த்தேன்.
அதில், செந்தில் அம்மாவின் பெயர் மற்றும் அவனுடைய அம்மாவும் செந்தில் அம்மாவும் படித்த ஸ்கூல் பெயர் இரண்டையும் எழுதி வைத்திருந்தான். ஊருக்குப் போனதும் அவனுடைய அம்மாவுக்கு அதைக் காட்டுவானோ என்னவோ.
ஞாயிற்றுக் கிழமை நான் ஆபீசிலிருந்து திரும்பி வந்து அந்தப் பையனைத் தேடினேன்.
என் மனைவி என்னிடம் சொன்னாள் :
இன்றைக்கு அவன் குளித்த பிறகு, அவன் வந்தபோது போட்டு டியாயர் சட்டையையே அணிந்துகொண்டு, டிஃபன் சாப்பிட்டு முடித்தவுடன், சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போய்விட்டான் போலிருக்கு. எங்கேயோ பக்கத்தில் இருப்பான் - திரும்ப வந்துவிடுவான் என்று நினைத்து காத்திருந்து பார்த்திருக்கிறாள்.
ஆனால் அவன் வரவில்லை.
எங்கே சென்றான், என்ன ஆனான் என்று எங்கள் யாருக்கும் தெரியவில்லை.
பிறகு அவனைப் பற்றிய தகவல்களோ அல்லது பாம்பேயிலிருந்து கடிதமோ எதுவும் வரவில்லை!
= = = = == = = = = = =
அதிசயமாக்க் காணாமல் போனவனின் கதையே அதிசயமாக இருக்கிறது.
பதிலளிநீக்குநீங்க பெரிய ரிஸ்க் எடுத்திருக்கீங்க.
தங்களுக்குப் பிறந்த குழந்தையாக இருந்தாலும், மனதிலாவது செயலிலாவது பாரபட்சம் காண்பிக்காமல் இருத்தல் இயலாது. எல்லோரும் எனக்கு ஒன்றே என்று சொல்பவர்கள் உண்மையை பட்டவர்த்தனமாகச் சொல்வதில்லை.
பதிலளிநீக்குஇதன் காரணம் சூட்சும்ம். அந்த ஆன்மாக்கள் நம்முடன் இருந்து வாழணும் என்று இருந்திருக்கிறது.
//பொறுப்பும் இல்லாமல், கண்டதே காட்சி கொண்டதே கோலம்//- இவங்க எந்த உலகத்துல இருக்காங்க? எந்த வயதிலும் பொறுப்பு கொஞ்சம்கூட இல்லாமல், நாட்டைப்பற்றி நினைக்காமல் சுயநலமா வாக்களிக்கும் மக்கள் குறைந்தது நாற்பது சதவிகிதம் உண்டு. இதில் 18 வயசுக்காரங்க செய்வதுதான் தவறா?
பதிலளிநீக்குசாப்பாட்டின்போது பாரபட்சம்..... இதெல்லாம் நாம் கடந்து வரவேண்டிய சபாச்சாரங்கள். செய்பவர்களுக்கு பாவம். அனுபவிப்பவர்களுக்கு கர்மவினை குறைகிறது
பதிலளிநீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்கு