கேள்வி பதில்கள் :
பானுமதி வெங்கடேஸ்வரன்:
சிறப்பு பட்டிமன்றத்தில் தலைப்பு கொடுக்கச் சொன்னால் என்னென்ன தலைப்புகள் தருவீர்கள்?
நெல்லைத்தமிழன் :
1. பழைய காலத்தில் கிணற்று, ஆற்று நீரைத்தான் உபயோகித்தார்கள், அரணிக்கட்டையைத்தான் உபயோகித்தார்கள் (நெருப்பு உண்டாக்க), நடந்துதான் போனார்கள் என்று இப்போதைய காலத்திலும் அதையே தொடர்வது சரியா? (சன்னியாசிகளும்)
# சரி தப்பு என்று சொல்ல நாம் யார் ? " நீயும் ஏன் அப்படிச் செய்வதில்லை " என்று கேட்டால் பதில் சொல்லலாம். இஷ்டப்பட்டுச் செய்வதும் வேண்டாம் என்று தவிர்ப்பதும் அவரவர் இஷ்டம். எனக்கு அப்படிப் பழைய வழக்கங்களை கஷ்டப்பட்டு தொடர்ந்தாக வேண்டும் என்ற எண்ணம் சரியாகத் தோன்றவில்லை.
என் நண்பரின் தந்தையார் ஆசாரசீலர். மகன் வசிக்கும் ஃப்ளாட்டில் தங்க மாட்டார். நீர் அருந்த மாட்டார். கிணற்று நீர் மட்டுமே குடியல் குளியல். அவர் ஆசாரம் அப்படி. பெரிய வித்வான். சநாதனி.
& அந்தக் காலத்துக்கு சரியாக இருந்த பல விஷயங்கள் இந்தக் காலத்துக்குப் பொருந்தாது.
2. இரண்டு நாட்களில் வாக்கு செலுத்தும் நாள், நாளைக்கு வாக்கு எண்ணிக்கை, என்று இருந்தாலும், கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பு என்று அதில் நாம் ஆர்வம் காட்டுவதன் காரணம் என்ன?
# எனக்கும் அது புரியவில்லை. சில நாட்களில் சரியான தகவல் வரும் என்று இருக்கும் போது செலவு செய்து ஊகங்களைப் பெறுவது என்ன பிரயோசனம் ? அது சரியாகவும் இருப்பதில்லை.
& சும்மா பொழுதுபோக்குதான் !
3. யாராக இருந்தாலும், நம்ம ஆளு, நம்ம ஊரு, நம்ம மொழி, நம்ம மாநிலம், தென்னிந்தியா, நம்ம நாடு என்று பாகுபாடு பார்த்து நட்புக் கொள்கிறோமே அதன் காரணம் என்ன?
# மனிதருக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் இருக்கிற குழுப் பிடிமானம்தான். பாதுகாப்பை நாடுவது உயிர்களின் இயல்பு. அது சாதி முதலான உள்வட்டங்களில் இருப்பதாக நினைப்பது பழக்க வழக்கத்தினால் தொடர்கின்ற குணவிசேஷம்.
4. அரசின் இலவசங்களை நீங்கள் வாங்கியிருக்கீங்களா? நம்மால் பணம் கொடுத்து வாங்க முடியும் என்ற நிலையிலும் ரேஷன் பொருட்கள், இலவசங்களை நாம் வாங்கிக்கொள்வது நியாயமா?
# எனக்கு விருப்பமில்லாமலே நான் இல்லாத சமயம் வீட்டுக்கு வந்து தரப்பட்ட மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வெவ்வேறு கிடைக்காதவர்களுக்குக் கொடுத்து சரி செய்ததாகத் திருப்திப் பட்டேன் ! இலவச ரேஷன் நான் வாங்கியதில்லை.
& சென்னையில் இருந்தவரை எந்த இலவசப் பொருட்களையும் நான் வாங்கியதில்லை. வோட்டுக்குப் பணம் வாங்கியது இல்லை. எனக்கு ரேஷன் கார்டு கூட எப்பொழுதோ இருந்ததை அ தி மு க காலத்திலேயே ஏதோ ஒரு அரசனங்க அலுவலகத்தில் கொடுத்து - அதன் பிறகு அவர்கள் திருப்பித் தரவில்லை. சில நாட்கள் தொடர்ந்து கேட்டதும் கிடைக்காததால், அதன் பிறகு அதை மறந்துவிட்டேன்.
5. இலவசமாகக் கிடைப்பதை நாம் ஏன் இவ்வளவு ஆசைப்பட்டு பெற்றுக்கொள்கிறோம், தேவை இல்லாவிடினும்? இயல்பாகவே மனித மனம் கஞ்சத்தனமானது என்று எடுத்துக்கொள்ளலாமா?
# " கடனாகக் கிடைத்தால் கனவானுக்கு இரண்டு யானை " என்று ஒரு சொல் வழக்கு உண்டு. மலிவு, இலவசம் இரண்டுக்கும் ஒரு கவர்ச்சி உண்டு. பொது மேடையில் நம்மை அழைத்து ஒரு அறுபது ரூபாய் பூப்போட்ட டவலை பொன்னாடை என்று சொல்லி அணிவித்தால் ஒரு திருப்தி உண்டாவது போல். (எனக்கு ஒருமுறை நிகழ்ந்தது) இது கஞ்சத் தனமல்ல மலிவான ஆசை.
= = = = =
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
விதவிதமான இராணுவ உடைகள். பெண்கள் அணியும் சுடிதாரின் பாட்டம் போல இருக்கிறதே என எண்ணாதீர்கள். பெண்கள், ஆண்களிடமிருந்துதான் நாகரீகங்களைக் காப்பியடித்தார்கள் என்று சொன்னால், மறுக்க இயலுமா?
இல்லை..இல்லை... நான் இன்னும் அந்த வேலைக்குப் போகலை. அரசர்கள்லாம் இருந்திருந்தால் அவங்க பக்கத்துல நின்னு படம் பிடிச்சிருக்கலாம். இல்லையே.. இருந்தது சிப்பாய்கள்தாம். சரி போனாப் போகுதுன்னு போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன்.
நெப்போலியன் போனபர்ட் - சமாதி.. ஃப்ரான்ஸ். யாருப்பா அந்த நெப்போலியன்னு கேட்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். ஃப்ரெஞ்ச் தளபதி, அரசர். ஃப்ரான்ஸின் 17ம் நூற்றாண்டு வரலாற்றில் முக்கியமானவர். இவருடைய கதை சுவாரசியமானது. அவர் செயிண்ட் ஹெலெனா தீவில் புதைக்கப்பட்டார் (ஆஃப்ரிகா, 1821). பிறகு 1840ல் அங்கிருந்து அவரது சவப்பெட்டி அகழ்ந்து எடுக்கப்பட்டு பாரிஸில் இந்த இடத்தில் வைக்கப்பட்டது.
அங்கு சாதாரண (அதாவது இராணுவத்தில் முக்கியஸ்தர்கள், ஆனால் அரசர்கள் அல்லர்) மற்றவர்களுக்கும் சுவற்றில் சமாதி இருந்தது. அந்தப் பகுதியே கொஞ்சம் அமானுஷ்யமாகத் தெரியுதா?
நெப்போலியன் சமாதி: அதில் சேர்க்கவேண்டிய விஷயங்கள்: வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர் என்று எடுத்துக்கொண்டால் அதில் முதலாவதாக இருப்பது நெபோலியன் போனபர்ட். அவனது வாழ்நாட்களைவிட அதிகமாக அவனைப்பற்றி புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. சுமார் 30,000. அவனை, அவனுடைய கடைசி காலத்தில் ஆர்சனிக் விஷத்தை வைத்து அவனுடைய ஜெனெரல் மோந்தோலன் கொன்றுவிட்டான் என்று அபிப்ராயப்படுகின்றனர். செயிண்ட் ஹெலெனா தீவில் இருந்த அவனது சமாதியை அகழ்ந்தெடுத்து பாரிசில், இராணுவ மியூசியம் அருகே அடக்கம் செய்த படத்தைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். அகழ்ந்தெடுக்கும்போது, சவப்பெட்டியையும் திறந்து பார்த்தார்களாம். அவனுடனிருந்தவர்கள் மிக வயதாகியிருந்தபோதும், நெபோலியனின் சவம் கிட்டத்தட்ட அப்படியே இருந்ததாம். இதன் காரணம் செயிண்ட் ஹெலெனா தீவின் வெப்பநிலை அல்லது ஆர்சனிக் விஷம் நெப்போலியன் உடலில் இருந்த தண்ணீரை உறிஞ்சியது இருக்கலாம் என்கின்றனர்.
சிறப்புப் பட்டிமன்றத் தலைப்பில்,
பதிலளிநீக்குஇன்றைய இளைய தலைமுறைக்கு பக்தியை ஏற்படுத்துவதில் யாருக்குப் பங்கு அதிகம், பெற்றோர்களுக்கா அல்லது சமூகத்துக்கா?
பள்ளியில் நீதிபோதனை, தமிழ் பக்தி இலக்கியங்களின் பாடல்கள் மாணவர்களை நல்வழிப்படுத்துமா இல்லை தற்காலத்துக்குச் சம்பந்தமில்லாதவைகளா?
போன்ற நல்ல தலைப்பெல்லாம் நினைவுக்கு வரவில்லையா?
ஆஹா நல்ல தலைப்புகள்!
நீக்குதிருக்குறளில் இந்து தத்துவ வெளிப்பாடு -- உதாரணத்திற்கு பொட்டில் அடித்த மாதிரி நான்கு குறள்கள் சொல்லி எதிராளியின் வாயை அடைக்கவும். அடுத்த வாரத்தில் ஆரானும் முயற்சி செய்யவும்.
நீக்குமலர் மிசை ஏகினான் மாணடி சேர்வார்
நீக்குநிலமிசை நீடுவாழ் வார்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாயது எல்லாம் ஒருங்கு
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
முகநூலில் இப்போ வள்ளுவரும் குறளும் தான் ட்ரென்ட். அதான் ஓடிக் கொண்டிருக்கு விதம் விதமா. அநேகமாகக் குறள்கள் அனைத்துமே வருகின்றன.
நீக்குஇனி சரோஜாவைப் பிடிக்கும் என்று சொல்லி யாரேனும் அடிக்க வந்தால் இப்படிச் சொல்லித் தப்பிக்க முடியுமா என்று பார்க்கணும்.
பதிலளிநீக்குசிந்துபாத் படக் கதையை வரியா எழுதினால் ஒரு வாரத்துக்கு ஒரு பத்தி கூடத் தேறாது. அந்த டெக்னிக்கில் நீங்க கதை எழுதறீங்க.
இரண்டு மூன்று மடங்குகள் ஒரு வாரத்தில் எழுதினால் பெட்டரா இருக்கும்.
முயற்சி செய்கிறேன்.
நீக்குஉரையாடல் வடிவாக எழுதினால் சுலபமாக இருக்கிறது.
நீக்குநான் ஒரு சோம்பேறி!
நீக்குஅப்புறம் ஒரு கட்டத்தில் யோசிக்க சோம்பேறித்தனப் பட்டு, சட்னு முடிச்சுடப் போறீங்க.
நீக்குகேஜிஜியின் அலுவலக அனுபவங்கள் இதைக் காட்டிலும் சுவாரசியமாக இருந்தது. கதை இன்னமும் சூடு பிடிக்கலை.
நீக்குகருத்துரைகளுக்கு நன்றி.
நீக்குஅந்தக் காலத்தில் சரியாகிருந்த விஷயம் இப்போது பொருந்தாது என்று தெரிந்தும் கல்லுரல், குமுட்டி அடுப்பு, மண்பானை பரணி என பின்னோக்கிப் போறாங்களே. அதற்கு என்ன சொல்றீங்க?
பதிலளிநீக்குஅடுத்த புதனுக்கான கேள்வியா?
நீக்குமண்பானைத் தண்ணீரின் சுவை உங்களுக்குப் பழக்கமில்லைனு நினைக்கிறேன். எங்க வீட்டில் வைச்சிருந்தோம் ராமேஸ்வரம் போனப்போ மானாமதுரை வழியா வந்தப்போ அங்கே இருந்த சந்தையில் வாங்கினோம். மானாமதுரை மண் வைகை ஆற்றின் மண் பிரபலமானது. அந்தப்பானை 2023 வரை வந்தது. பின்னர் எப்படியோ எச்சிலும், தீட்டும் பட்டிருந்திருக்கு. பானை வீணாகிவிட்டது. தண்ணீர் ஊற்றி வைச்சால் ஜில்லுனு இருக்கும். ஆனால் குடிக்க முடியாமல் துர் நாற்றம் வந்திருந்தது. பானையைத் தூக்கிப் போட்டோம். :( திருச்சிப் பானை எல்லாம் தண்ணீர் ஒழுகி விடுகிறது. அப்புறம் பானையே வாங்கலை.
நீக்குகல்லுரலை 2025 இல் தான் கொடுத்தேன். குமுட்டி பயன்படுத்தாமல் வீணாகி விட்டது. அதில் டிகாக்ஷன் போட்டுப் பால் காய்ச்சிக் காஃபி கலந்தால் அந்த மணமும் ருசியுமே தனி தான். அதே போல் அப்போல்லாம் பீங்கான் பாத்திரம் மங்குக் கிண்ணம் என்பார்கள் அதிலே தேநீர் போடுவாங்க. இத்தனைக்கும் மளிகைக்கடைகளில் தொங்கும் அரையணாப் பாக்கெட் தான். சிட்டுக்குருவி போட்டிருக்கும். குருவி டீ பாக்கெட் என்பார்கள். அதிலேயே தேநீர் சுவை அருமையா இருக்கும். இப்போவும் அரிசி உப்புமா, பொங்கல் என்றால் வெண்கலப் பானை அல்லது உருளி தான். மற்றப் பித்தளைப் பாத்திரங்கள் பெரிய பெரிய வெண்கலப்பானைகள் எல்லாம் தானம் கொடுத்தாச்சு.
நீக்குஇந்த அல்பமான ஆசையைத்தான் கவுண்டமணி, ஃப்ரீயா குடுத்தா மக்கள் பினாயிலயும் குடிக்கத் தயங்க மாட்டாங்கன்னு சொன்னாரோ?
பதிலளிநீக்குஆம், அதே அதே!
நீக்குசரோஜாதேவிக்கு பதில் எல்.விஜயலெஷ்மினா எங்க காலத்து சுவாரஸ்யம் கிட்டியிருக்கும். தவிர எல்.வி.க்கு கூட இப்படி வார்த்தைக்கு வார்த்தை.
பதிலளிநீக்குகொஞ்சம் இருங்க.வாசல்பக்க காலிங் பெல் அடிக்குது..
அநேகமாக நா.நா.வாகத் தான் இருக்கும்.
பார்த்துட்டு வர்றேன்.
ஜீவி சார், சரோஜா தேவி பெயரைப் படித்து வந்தாரா இல்லை விஜயலக்ஷ்மி (வரலெக்ஷ்மி கேள்விப்பட்டிருக்கேன்) பற்றிக் குறிப்பிய வந்தாரா இல்லை தொடர்கதை படிக்கும் ஆசையில் வந்தாரா என்று பட்டிமன்றம் வைக்கலாம் போலிருக்கே
நீக்குஎல்.விஜயலக்ஷ்மி பற்றி கேள்விப் பட்டதில்லையா? நன்றாக நடனம் ஆடுவார். குடியிருந்த கோயில் படத்தில் 'ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்..' பாடலுக்கு எம்.ஜி.ஆரோடு நடனம் ஆடியவர். திருமணமாகி மலேஷியா சென்றதும், சி.ஏ., சி.பி.ஏ. எல்லாம் படித்து கம்பெனி வைத்து நடத்தினாராம்(ஹிந்துவில் இவரைப் பற்றிய கட்டுரை வந்தது)
நீக்குஜெய்சங்கரின் படங்களில் முக்கால் வாசி அவரோடு தான் நெல்லை.
நீக்குசகலகலாவல்லி.
வாங்க ஜீவி சார். வணக்கம்!
நீக்குஎல்.விஜயலக்ஷ்மியின் அப்பா நம்ம ரங்க்ஸின் ராணுவக் கணக்குத் துறை அதிகாரி. அவருக்குத் தெரிஞ்சவர் தான். ஆனால் கமான்ட் வேறே என்பார். புனேயில் பார்த்திருக்கார். எல்.வி.யும் அங்கே தான் இருந்திருக்கார். அவங்க அண்ணாவின் சிநேகிதர் வங்காளியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு அம்பேரிக்கா போனதாகத் தான் சொல்வார்கள். இப்போ பதிவு பெற்ற சார்டர்ட் அக்கவுன்டன்ட் என்பார்கள். சமீபத்தில் சித்ராலயா கோபுவைப் பார்க்க வந்திருந்ததாகக் காலச்சக்கரம் நரசிம்மா எழுதி இருந்த நினைவு. திரைப்படத்தை விட நேரில் இன்னும் அழகாக இருப்பாராம். அவர் யு.எஸ். போனதாகத் தான் விக்கி விக்கிச் சொல்றாங்க. :))))
நீக்குதிருநெல்வேலிக்காரங்க. அம்மாவும் வீணை வித்வானாம்.
நீக்குமக்களை அதிகம் கெடுப்பது இரண்டுமல்ல. இணையம்.
பதிலளிநீக்குஆண் பெண் திருமணத் தடைக்குக் காரணம் பெற்றோர்கள். இருவருக்கும் 23,24 க்குள் திருமணம் செய்துவைக்காமல் காலத்தை நீட்டிக்கிட்டே போனால், இருவரும் ரொம்பவே மெச்சூராகி, எதிர்பார்ப்புகள் எங்கோ போய், குடும்ப அமைப்பு சிதைவதில் முடியுது.
அதுவும் சரிதான்.
நீக்குநான் சந்தித்தவர்களில் மூன்றுக்கும் மேற்பட்டோர் என்ன சொன்னாங்கன்னா... என்ன சார் செய்யறது... நல்லா வேலைக்குப் போயிடறாங்க, நல்லா சம்பாதிப்பதால் வீடு கார் வாங்கறாங்க. அப்புறம், எதுக்கு இந்தக் கம்பெனியைவிட்டு வேற வேலை தேடணும்? எதுக்கு கல்யாணம் என்ற தலைவலி, இப்போதே சௌகரியமா, நல்லா சந்தோஷமா, கடமைகளினால் சிறைப்படுத்தப் படாமல் வாழறோமே என்று நினைத்து திருமணம் வேண்டாம் என்று சொல்லிடறாங்க என்று சொல்றாங்க.
நீக்கு100% True. especially girls
நீக்குபட்டிமன்றத் தலைப்புகள் சுவாரஸ்யம். முதலிரண்டு தலைப்புகளுக்கு எ.பி. வாசகர்கள் பதில் அளிப்பார்களா?
பதிலளிநீக்குபாஜக வளரணும்னா கட்சிக்கு புதுத் தலைவர்கள் இளைஞர்கள் வேணும். அண்ணாமலையை, குறுகிய கால லாபம் எனக் கருதிக்கொண்டு கூட்டணி மாற்றி டம்மியாக்கி, அவர் விலகும் வரை போனது பெரும் பின்னடைவு. பாஜகவை அது இருபது வருடங்கள் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிட்டது. பாஜகவின் தமிழக, தபிழிசை, முருகன், நயினார், வானதி கட்சிக்கும் தமிழர்களுக்கும் எதுவும் செய்த மாதிரித் தெரியவில்லை.
நீக்குபாஜக யுக்தியாக இருக்காது. அண்ணாமலை தன்னைப் பலியிட, சம்மதிக்க மாட்டார். ரஜினி போன்ற தேசத்தின்மீது பிடிப்புக் கொண்ட பிரபலங்களுக்கும் பாஜகவை ஆதரிப்பதில் இருக்கும் தயக்கம் தனிக்கட்சி அண்ணாமலையை ஆதரிப்பதில் இருக்காது.
நல்ல கருத்துரை. நன்றி.
நீக்குகனடாவில் இருக்கும் தமிழர்கள் ஒருவிஷயம் சொல்கிறார்கள், மற்ற மாநில மக்களிடம் இருக்கும் ஒற்றுமை தமிழர்களிடம் கிடையாதம், எதிரே இருப்பவன் தமிழன் என்று தெரிந்து விட்டால் நகர்ந்து போய் விடுவார்களாம். :00
பதிலளிநீக்குமற்ற மாநில மக்கள், தன் மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று அறிந்துகொண்டால் அவங்க தாய்மொழில பேச ஆரம்பிப்பாங்க. தமிழர்கள் மாத்திரம் உடனே ஆங்கிலத்தில் பேசிக்க ஆரம்பிப்பாங்க. இதுதான் வெளிநாடுகளில் என் அனுபவம்.
நீக்குஆம், உண்மை.
நீக்குஜப்பானியர் கருத்துப்படி பொதுவாக இந்தியர்களே சுயநலம் தான் முக்கியம் என்பவர்களாகச் சொல்லப்படுகிறது. ஜலியாவாலா பாக் துப்பாக்கிச் சூடின் போது சுட்டவர்கள் அனைவரும் இந்தியர்கள் தானே? இந்திய மக்களைத் தானே சுட்டுக் கொன்றார்கள்? அவங்க ஏன் நாங்க எங்க தேசத்து மக்களையே சுடமாட்டோம்னு சொல்லலை? ஏன் எதிர்க்கவில்லை? அவ்வளவு பேரின் எதிர்ப்பையும் பிரிட்டிஷ் ஆட்சியாளரால் சமாளிக்க முடிந்திருக்குமா? ஒற்றுமையாக் அனைவரும் எதிர்த்திருக்கலாம். என்று ஜப்பானியர் சொல்லுவதாகப் படிச்சிருக்கேன். அதே போல் பகத்சிங் குழுவினரின் மரணத்தையும் இந்தியாவில் யாருமே பெரிய தலைவர்கள் உள்பட எதிர்க்கவில்லை. பின்னர் வந்தது கடற்படையின் புரட்சி. அங்கேயும் இந்தியக் கடற்படைச் சிப்பாய்கள் ஆதரவின்றி அநாதையாக்கப்பட்டார்கள். இப்படி நம் மக்களே நம் மக்களுக்கு துரோகம் செய்தால்? இப்போவும் தமிழகத்தில் இது தானே நடக்கிறது.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் முருகா, சண்முகா!
நீக்குபல நாட்கள் கழிச்சுப் பார்க்கிறேன். உடல் நலமா? முக்கியமாக் கண் பிரச்னை?
நீக்கு///தமிழர்கள் மாத்திரம் ஆங்கிலத்தில் பேசிக்க
பதிலளிநீக்குஆரம்பிப்பாங்க... ///
தமிழ்நாட்டிலும் இந்த நிலை
வர இருக்கின்றதே...
இப்போ தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் எல்லாமே ததிங்கிணதோம்!
நீக்குஇதை ஆரம்பித்த பெருமை, நகர்ப்புறங்களில் படித்த பெண்கள். அவங்கதான் பீட்டர் விட ஆரம்பித்தவர்கள்.
நீக்கு:))))
நீக்குநெல்லை, படங்கள் எல்லாம் சூப்பர். விவரங்களையும் சேர்த்து வாசிக்கும் போது படங்கள் இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த இருட்டு (ஜெயில் ) தூரத்தில் தெரியும் ஒரு கதவு அப்பகுதி படம் அமானுஷ்யமாகத்தான் இருக்கிறது. டக்குனு பார்க்க அந்தமான் சிறைச்சாலை நினைவுக்கு வருது சிறைச்சாலை படத்தில் வரும் படம் போல. நான் படம் பார்க்கலைங்க...படத்துக்கான போஸ்டர் மற்றும் ஸ்டில்ஸ்
பதிலளிநீக்குகீதா
அம்மணி... அது ஜெயில் இல்லை. இரண்டு பக்கச் சுவர்களிலும், மூன்றடி சதுரத்தில் ஒவ்வொருவரின் சவப்பெட்டி சுவற்றுக்குள் இருக்கிறது. அவங்க நிம்மதியாத் தூங்க, லைட் இல்லாமல் இருட்டா வச்சிருக்காங்க.
நீக்குஆமாம், நெல்லைக்கு இதெல்லாம் பார்க்கும் வாய்ப்பும் அதை நம்மிடம் பகிரும் மனதும் அமைந்திருப்பது இறை அருளே.
நீக்குஅந்த அமானுஷ்ய படத்தின் ஷாட் ரொம்ப பிரமாதம் நெல்லை.
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா ரங்கன்... வார இறுதியில் வந்தால் உங்களை என்ன பண்ணித் தரச் சொல்லலாம் என்ற யோசனையில் இருக்கிறேன்.
நீக்குகௌ அண்ணா, ஜோதிடத்தில் வந்து நிறுத்தியிருக்கீங்க. கதை எப்படிப் போகப் போகுது? உரையாடல் வழி கதையை நகர்த்துவது நல்லாருக்கு. எனக்கும் அது பிடித்த விஷயம் அப்படிக் கதை எழுதுவது..
பதிலளிநீக்குகீதா
நன்றி, நன்றி!
நீக்குகேள்வி பதில்கள் கண்டோம். அந்தக்காலம் இந்தக்காலம் பழக்க தோசம் சிலரை மாற்றுவதில்லை.
பதிலளிநீக்குகதை தொடர்கிறோம். அடுத்த வாரம் விறுவிறுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நெல்லையின் படங்கள் தகவல்கள் அறிந்தோம்.
பட்டிமன்றத் தலைப்புகளுக்கு யார் பதில் சொல்லப் போறாங்க? அம்பத்தூரில் கிணறும் இருந்தது. பின்னாட்களில் போர்வெல்லும் போட்டோம். ஆனாலும் குளிக்கவெல்லாம் மோட்டார் போடாமல் கிணற்று நீரைப் பயன்படுத்துவோம். தினமும் கிணற்றில் நீர் இறைச்சால் தான் தண்ணீர் ஊறும் என்பதால் கிணற்றையும் அதிகம் பயன்படுத்தினோம்.
பதிலளிநீக்குதேர்தல் கருத்துக்கணிப்புக்களில் நான் ஆர்வம் காட்டியதில்லை.
பதிலளிநீக்குஅரசால் கொடுக்கப்படும் இலவசங்களை வாங்கியதே இல்லை. தேர்தல் சமயத்தில் கூடப் புடைவை, வேஷ்டி, கட்டுக் கட்டாகப் பணம் எல்லாம் எடுத்து வந்து கெஞ்சினாங்க. கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளேயே போயிட்டோம். பின்னர் திறக்கவே இல்லை. எல்லோரும் சொன்னாங்க. வாங்கிக் கொண்டு இல்லாதவங்களுக்குக் கொடுக்கலாமே. அது நம்ம பணம் தானே என்று. ஆனாலும் மனம் ஒப்பவில்லை.
ரேஷன் கார்ட் சிலவற்றிற்கு அவசியத் தேவை என்பதால் வாங்கி வைச்சிருந்தோம். பின்னர் 2012க்குப் பின்னர் இங்கே ஸ்ரீரங்கத்தில் நாங்க பொருட்கள் வாங்குவதில்லைனு தெரிஞ்சதும் நிறையப் பேர் கேட்க ஆரம்பித்தனர். அதுவும் பொங்கல் சமயம் இலவசங்கள் நிறையக் கிடைச்சதால் போட்டா போட்டி. வேறு வழி தெரியாமல் ரேஷன் கார்டை சரண்டர் பண்ணிட்டோம்.
நெப்போலியனின் சமாதியும் மற்றப்படங்களும் முக்கியமா அமானுஷ்யப் படமும் அருமையாக எடுத்திருக்கார். சிறந்த ஃபோட்டோகிராஃபர் நெல்லை. கேஜிஜியின் கதைப்போக்கு எனக்கு இன்னமும் பிடிபடலை. அவ்வளவு சுவாரசியமா இல்லையோனு ஒரு எண்ணம். போகப் போகப்பார்க்கணும். ஆனால் உரையாடலிலேயே கதையை நகர்த்தி இருப்பது எழுத்தாளர் பிவிஆரை நினைவூட்டியது.
பதிலளிநீக்கு