12.6.26

ஜெமினியின் ஒளவையாரும் சந்திரலேகாவும்

 





சென்ற ஏப்ரலில் சித்தூருக்கு ஒரு திருமணத்துக்கு சென்றபோது அங்கு பார்க்கக் கூடிய இடங்கள் என்னென்ன இருக்கும் என்று மனம் யோசித்தபோது ராணி பத்மினியின் கோட்டை இருக்கும் என்று கணக்கு போட்டேன்.  அப்புறம் தெரிந்தது, அது வடநாட்டு சித்தூராம்.  இது ஆந்திரா சித்தூர்.  இங்கு விசேஷம் ஒரு சுயம்பு விநாயகர் கோவில்.  சுயம்புவாகத்தோன்றி வளர்ந்துகொண்டே வருகிறது, ரொம்பப் பழமையான கோவில், மகா வரப்பிரசாதி என்றார்கள்.

முதல் நாள் மாலை கேஷுவலாக கிளம்பி கோவிலுக்குச் சென்ற எங்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.  கொஞ்சம் சிறிய திருப்பதி போன்ற சுற்றுப்புற, கட்டுப்பாடுகளுடன் கோவில் வளாகம் பெரிதாக, மிகப் பெரிதாக இருந்தது.  அலைபேசிக்கு உள்ளே அனுமதி இல்லை.  கையில் எடுத்துச் சென்றாலும் பாதகமில்லை.  உங்கள் உடம்பு பூரா கிச்சுகிச்சு மூட்டி உள்ளே அனுப்பும் போலீஸு அதை பறிமுதல் செய்து விடுவார்.  அங்கே எதுத்தாப்புல கைகாட்டி ஒப்படைத்து ரசீது பெற்று வரும்படி சொல்வார்.  அவ்வளவுதான்.  முன்னரே நாம் அங்கு ஒப்படைத்து எளிதாக திரும்ப வாங்கலாம்.  பத்து ரூபாய் கட்டணம்.

முதல் நாள் திருமண வரவேற்புக்கு முன்னால் சென்று வரலாம் என்று மாலை ஐந்தரை வாக்கில் கெத்தாக அங்கு சென்றோம்.  உள்ளே அனுமதி மறுத்து விட்டார்கள்.  அடுத்த தரிசனம் இரவு 7 மணிக்கு என்றார்கள்.  இப்போது திருமஞ்சனம் நடந்து கொண்டிருக்கிறது என்றார்கள்.  ஒரு மணி நேரம் தரிசனம், அடுத்த ஒன்றரை மணிநேரம் திருமஞ்சனம் என்று நாள் முழுக்க நீராடுகிறார் விநாயகர்.   சரி, 7 மணி வரை காத்திருக்க பொறுமை இல்லை, காலை வரலாம் என்று கிளம்பி வரவேற்புக்கு வந்து ரிஸப்ஷன் உணவுகளை ஒரு கை என்ன, பல கை பார்த்தோம்.  அரங்கில் தெலுங்குப் பாடல்களாக ஒலித்தது ஒரு வித்யாசம்!  அங்கு ஆடப்பட்ட நடனமும் ஓரளவு பாலகிருஷ்ணா நடனமாகவே இருந்தது!

அறைக்குத் திரும்பும்போது காணிப்பாக்கம் விநாயகரே மனதில் நின்றார். 

திருப்பதியில் திருப்பி அனுப்பிய பெருமாள் கதை போல் ஆகிவிடப்போகிறதே என்று விடாமல் மறுநாள் காலை நான்கு மணிக்கே எழுந்து குளித்து தயாராகி கோவில் கிளம்பினோம்.  அதிலும் சில தடைகள் இருந்தாலும் நாங்கள் மனம் தளரவில்லை.  நாங்கள் சென்ற நேரம் நல்ல நேரம்.  எங்களுடன் அப்போதைய தரிசன டைம் முடிந்து திருமஞ்சன டைம் ஆரம்பிக்கும் நேரம்.  இன்னொரு இடத்தில் தங்கியிருந்த கேஜிஜி, கே ஜி ஒய் இன்னொரு மாமா மற்றும் சில உறவுகளும் சேர்ந்துகொள்ள 150 ரூபாய் ஸ்பெஷல் தரிசன டிக்கெட்டில் வரிசையில் நகர்ந்து விநாயகரை - விநாயகர் போன்ற உருவத்தை - தரிசித்தோம்.  இங்கும் ரொம்ப நேரம் நிற்கவிடாமல் துரத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.

பெருமாளுக்கு விநாயகர் பரவாயில்லை.  மன்னித்து தரிசனம் தந்தருளினார்.  பெருமாளும் சீக்கிரமே மனம் இரங்குவார் என்று ஆசை வருகிறது.

வெளியே வந்தால் பிரசாத தீர்த்தம் வாங்குமிடம், பிரசாதம் வாங்குமிடம் என்று தனித்தனியாக வெளியே ஸ்டால்கள் இருந்தன.  உள்ளேயே இருந்த வேறு சில இடங்களையும் பார்த்து ரசித்தோம்.  பிரம்மாண்ட விநாயகர், முருகன், சிவன் என்று பார்த்து ரசித்தோம்.  ஏதோ ஒரு சோழ மன்னனால் கட்டப்பட்டதாக பட்டர் சொன்ன ஒரு பெருமாள் கோவிலையும் பார்த்தோம்.  அங்கே ஒரு காஃபி கடையில் அற்புதமான பில்ட்டர் காஃபி குடித்து மண்டபம் மீண்டோம்.

சில வாரங்கள் முன்பு நான் சொன்ன வித்தியாசமான Use and throw தட்டுகள் பார்த்து டிரைவர் மகாத்மியத்தால் வாங்காமல் வந்தது மறுபடியும் நினைவுக்கு வருகிறது. 

காணிப்பாக்கம் எதற்காக புகழ் பெற்றது? 

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கனிபாகம் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயில், காலப்போக்கில் அளவில் பெரிதாக வளரும் என்று பக்தர்களால் நம்பப்படும், தானாகத் தோன்றிய (சுயம்பு) விநாயகர் சிலைக்குப் புகழ் பெற்றது.

காணிப்பாக்கம் அருகில் உள்ள ரயில் நிலையம் எது? 

அருகிலுள்ள வசதியான ரயில் நிலையம் சித்தூர் ஆகும், இது 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

















==========================================================================================

Form இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் டூர்.  அங்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் பற்றி கவாஸ்கர் சொல்வது சுவாரஸ்யமானது.


==========================================================================================

சாண்டில்யன் பக்கம்  :

"இப்படி மக்கள் அன்பைப் பெருவாரியாகப் பெற்றதால், இந்தத் தலைப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்றவர்களும் உண்டு. அந்த நாகரிக மற்ற நடவடிக்கையை நாணயமான பத்திரிகைகளெல்லாம் கண்டித்ததும் மக்கள் அறிந்த விஷயம்"  என்கிறார் சாண்டில்யன்.  மன்னன் மக கதைத்தலைப்பில் என்ன விவகாரம் நடந்தது?  

மன்னன் மகள்' மக்களால் மிகவும் விரும்பிப் படிக்கப் பட்ட கதைகளுள் ஒன்று. மூன்று லட்சம் பிரதிகளுக்கு மேல் ஒவ்வோர் இதழும் செலவாகும் 'குமுதம்' பத்திரிகையில் 1958, ஜனவரி மாதம் முதல் 1959, நவம்பர் மாதம் முடிய அதாவது சுமார் இரண்டு வருஷ காலம் தொடர்ச்சியாக வெளியான கதை இது. தமிழ்ப்பெரு மக்கள், தொடர்ச்சியாக அந்த இரண்டு வருஷ காலமும் அலுப்பில்லாமல் இக்கதையைப் படித்தார்கள். இரண்டு வருஷ காலத்திற்குப் பிறகு 'கதை மிகவும் நீண்டு விட்டதே' என்று பயந்து நானே இதை முடித்தபோதும், 'இதற்குள் யார் முடிக்கச் சொன்னது?' என்று கோபித்துக் கடிதம் எழுதியவர்களும் உண்டு. இதைப் பாராட்டிக் குமுதம் காரியால யத்துக்கு வந்த கடிதங்கள் கணக்கிலடங்கா. 

இப்படி மக்கள் அன்பைப் பெருவாரியாகப் பெற்றதால், இந்தத் தலைப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்றவர்களும் உண்டு. அந்த நாகரிக மற்ற நடவடிக்கையை நாணயமான பத்திரிகைகளெல்லாம் கண்டித்ததும் மக்கள் அறிந்த விஷயம்.அத்தகைய 'மன்னன் மகள்' கதையை இப்பொழுது புத்தக ரூபத்தில் வெளியிட வானதி பதிப்பகத்தார் முன்வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றி. இதைப் புத்தக உருவில் வெளியிட அனுமதி தந்த 'குமுதம்' காரியாலயத்துக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்ப் பெருமக்களுக்கு மட்டும் எனது நன்றியைத் தெரிவிக்கப்போவதில்லை. அவர்கள் ஆதரவால் நான் வளர்ந்தவன். வளர்ந்த குழந்தை தன்னை வளர்த்த பெற்றோர்களுக்கு நன்றியுரைப்பது கேலியாகத் தெரியும்; சம்பிரதாய விரோதமுங்கூட. மக்களில்லையேல் எழுத்தாளன் இல்லை. இவன் என்ன அவர்களுக்கு வாய் வார்த்தையாக நன்றியுரைப்பது? உள்ளூர மனதார வாழ்த்திக் கொண்டிருந்தாலே போதுமே!

=========================================================================================

படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கேரக்டர் அல்மோஸ்ட் ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதப்பட்டதுதான்.  அதை ஜெ வே பார்க்க விரும்பினால்?  விரும்பினார்.  ரஜினியும் அனுப்பி வைத்தார்!


===================================================================================================

பாஹே பக்கம்...

அப்பாவின் பிறந்தநாள் அன்று குடும்பக் குழுமத்தில் பகிர்ந்தது!


அப்பாவின் பள்ளி நாட்களில் அவர் கைவண்ணம்!






===============================================================================================

நான் டைரக்டரானேன்
கொத்தமங்கலம் சுப்பு

[தொடர்ச்சி]



இப்படி எனக்கு நந்தனார் சம்பந்தமாக ஏற்கெனவே ஏற்பட்டிருந்த அனுபவமும் பயிற்சியும் ஜெமினி நந்தனாருக்குப் பாடுபட பெரிதும் உதவியாயிருந்தன. த மிழில் வெளி வந்த சிறந்த படங்களுள் ஒன்று ஜெமினி தயாரித்த 'நந்தனார்'. நான் அதற்குப் பெரிதும் பாடுபட்டேன். அடுத்தபடியாக 'தாசி அபரஞ்சி' தயாராகியது. அதற்கு வசனமும் பாடல்களும் நான் அமைத்தேன். வசனம் ரொம்பவும் உயர்தரமாக இருந்ததாக எல்லா பத்திரிகைகளும் ஒரு முகமாகப் பாராட்டி எழுதின. 

இதனிடையே 'பக்த காந்தா' படத்திலும் நான் பங்கு கொண்டேன்
தொடர்ந்து ஜெமினியின் 'மங்கம்மா சபதம்' வந்தது, அந்தப் படத்திலே எனக்கு ஒருசிறு வேஷம், மஹாராஜா தூங்கி வழிந்தபடி ராமாயணம் கேட்கிறார். உச்சிக்குடுமியுடன் ஒருவர் ராமாயணம் சொல்கிறார், எனக்கோ கிராப்புத்தலை. மொட்டையடித்துக் கொண்டு உச்சுக்குடுமி வைத்துக் கொள்ளவேண்டும். படத்தில் அந்தக் காட்சியே சுமார் நாற்பது வினாடிகள்தான் வரும். சரியென்று மொட்டையடித்துக்கொண்டு உச்சிக் குடுமியும் வைத்துக்கொண்டேன். படமெடுத்தாகி விட்டது. ஆனால் சில சில காரணங்களால் அந்தக் காட்சி வெட்டப்பட்டு விட்டது ! தலையும் கத்தரித்துக் கொண்டாகி விட்டது. நடித்த காட்சியும் கத்தரிக்கப்பட்டு விட்டது! ஆனாலும் படத்திற்காக தலையை தியாகம் செய்தோம் என்ற ஆத்மதிருப்தி எனக்கு !

இது முழுக்க முழு ஹாஸ்யப்படம்.  இதை கடைச் சித்தி சொல்லவேண் டும். ஹாஸ்யம் இதிலே அற்புதமாக ஒரு காரணம் நான். எல். நாராயணராவ் அவர்களை மனதில் நிளைத்துக் கொண்டு எழுதினால் அதில் ஹாஸ்யம் அற்புதமாக அமையத்தான் செய்கிறது, கண்ணம்மா என் காதலியின் சிறப்பு நாராயணராவைத்தான் சேரும்.  முதன் முதலாக நான் தனி படப் பொறுப்பேற்று டைரக்ட் செய்த படம்தான் கண்ணம்மா என் காதலி .  எழுதினேன். பாடல்களை சோமயாஜூலுவும் நானும் எழுதினோம். கே ராம்னாத் அவர்கள் எனக்கு நிறைய உதவி புரிந்தார்கள், அப்போது யுத்த சமயம், அதில் ஒருடைரக்டர் என்ற அளவில் பிரமாதமாக ஒன்றும் செய்ய சந்தர்ப்பம் இல்லை.

அடுத்த படம் மிஸ் மாலினி. எனக்கு மகத்தான புகழ் தந்தபடம் இது வசனமும் பாடல்களும் ரொம்பவும் பிரபலமாகி விட்டன. நானே கதாநாயகன் சம்பத்தாக நடிக்கவும் செய்தேன் நானே சம்பத்தாகி விட்டேன் என்று பாராட்டினார்கள். வாழ்க்கையிலும் நீங்கள் சம்பத் தானா? எப்படி இவ்வளவு இயற்கை யாக நடிக்க முடியும் என்று விசிறிகள் எழுதிக் கேட்டார்கள்! ஆறு மாதகாலத்தில் ஒரு நாளைக்கு இரு முறை மிஸ் மாலினி பாடல்கள் ரேடியோவில் அமர்க்களப்பட்டன.  எனக்கு மட்டும் ஒரே ஒரு குறை.  என்னதான் இருந்தாலும் சம்பத்துவின் பாத்திரமே ஒரு வஞ்சகனின் பாத்திரமதானே என்பதுதான் அது.

ஜெமினியின் பிரம்மாண்ட தயாரிப்பு சந்திரலேகா'  'அதில் என் பங்கு நிறைய இருந்தது. 'நாட்டியக் கலையே' பாடல் ஒரே நாளில் மிகப் பிரபலமாகி விட்டது. ஜெமினியின் வெற்றிக்கே கூட்டு முயற்சிதான் காரணம் என்பதை அடுத்தது இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.   கண்ணமா என் காதலி'  நான் அள்ளிக் கொடுப்பேன், ஸ்ரீ வாஸன்  அதில் அவசியமானதை அளந்து எடுத்துக் கொள்வார். எனக்கு எழுதத் தெரியும். எது யாவருக்கும் பிடிக்கும் என்பது அவருக்குத்தான் தெரியும். இப்படி ஒவ்வொன்னும் வடிகட்டி வெளி வருவதனால்தான் ஜெமினி தயாரிப்புகள் சோபிக்கினறன அபூர்வ சகோதரர்கள் படத்திலும் நான் பணிபுரிந்தேன்.
நந்தனார் முடிந்தவுடனேய ஒரு பிரம்மாண்டமான பாட்டு படம் தயாரிக்கத் கிட்டமிட்டோம்  கே. பி. சுந்தராம்பாளைத் தோக்தெடுத்ததும் அதன் விளைவு தான்  இப்போது வெளி வந்துள்ள அளவுக்குப் படம் அமையுமென்று நாங்கள் அப்போது எதிர்பார்க்கவில்லை.

ஒளவையாரில் பல தொல்லைகள். முதலாவது பல ஒளவைகளின் சரித்திரங்கள் இருந்தன. கதையை ஒழுங்காக அமைப்பதில் நிரம்ப சிரமம் இருந்தது. கதையை உருப்படியாக அமைக்க முடியாது என்று தெரிந்ததும் கருத்துக்களுக்குப் பிரதானம் அளித்துக் கதையைத் தொகுத்தோம். ஒளவையின் கதையிலே தொடர்பு கிடையாது. நிகழ்ச்சிகள் தனித்தனியே பல சந்தர்ப்பங்களில் நடைபெற்றவை, அவைகளைக் கட்டுக் கோப்புடன் அமைப்பதிலேயே பல நாட்கள் செலவழிந்தன.

முத்துக்குளிப்பவன், முத்து இருக்கும் சிப்பியுடன் மற்ற வெறும் சிப்பிகளையும் திரட்டி வருவான்.  கரை சேர்ந்த பிறகே முத்துச் சிப்பியைத் தெரிந்தெடுக்க முடியும், ஒளவை கதையை அமைப்பதில் எனக்கு இந்த அனுபவமதான் ஏற்பட்டது. ஒன்றல்ல. இரண்டல்ல. ஏழு வருஷங்கள் முழுக்க முழுக்க நாங்கள் ஒளவையை உருவாக்குவதில் படாத பாடுபட்டோம். இடையே எத்தனை சிரமம், மனத்தாங்கல் உண்டாகும் விஷயங்கள்? அப்பப்பா. அதைச் சொல்லி முடியாது. உண்மையில ஆகஸ்ட் சுதத்திர நாளை முதன் முதலாக இந்த வருஷம்தான் நான் மனமாரக் கொண்டாடினேன் என் தலையிலே ஒரே கனம் - இரவு பகலலாக எந்நேரமும் ஔவையைப் பற்றிய சிந்தனை.

மனத்தாங்கல் என்றேன். ஆமாம். பலவிதமான வதந்திகள் கிளப்பி விடப்பட்டன. வதந்தி கிளப்பின அன்பர்களுக்கு என்னிடம் விரோதம் கிடையாது. எண்ணமும் கெட்டதல்ல. கற்பனையைத் தவறாக உபயோகித்த நான் என் மனம் விண்டுபோகும் படியான வதந்திகள் கிளம்பின. நான் வருத்தத்துடன் மனமொடிந்து போய்விட்டேன்.
ஒளவை குறவஞ்சி நடனத்தில் ராஜலக்ஷ்மி என்பவருக்குப் பாட வாய்ப்பு கிடைத்திருந்தது. அவர் பாடி இரண்டு வாரங்களான பின் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்தார். அவர் மனதில ஏதோ வருத்தம் ஏற்பட்டிருந்ததை முகபாவமே எடுத் துக் காட்டியது.

"செளக்கியமா? என்ன விசேஷம்?" என்று மேலுக்குக் குசலம் விசாரித்தேன். எனக்கு ஓரளவு அவர் முகத்திலிருந்து உள்ளிருப்பது தெரிந்தாலும் கேட்டு வைத்தேன்

அவர் முகம் வாடியது. "சௌக்கியத்துக்கு என்னங்க குறைச்சல்? நீங்களும் எவ்வளவோ அக்கறையுடன்தான் பாடச் சொன்னீங்க. என் அதிருஷ்டம் இப்படி ஆச்சுது" என்னு அலுத்துக்கொண்டார்.

"விஷயத்த சொல்லம்மா' எனறேன் நான்.

படம் எரிஞ்சு போச்சாமே? நான் பாடினதெல்லாம்கூட சாம்பலாயிடுச்சாமே?என்றார்.

எனக்கு உள்ளம் பற்றி எரிந்தது.  விஷயம் நெருப்பு பற்ற வைக்கு வரை வளர்ந்து விட்டதா?

அத்துடன் விஷயம் நின்றதா? தெரிந்தவர்களும், நண்பர்களும் கூடி போன் மூலமும் நேரிலும் துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். என் மனம்  பட்ட பாட்டை ஈசனே அறியார்.

ஒளவை ஒரு மகோன்னத படமாக வெளிவர வேண்டுமென்று நாங்கள் விரும்பியதால், சிக்கல் நிறைந்த கதையாகவும் அது இருந்ததால் பல அறிஞர்களுக்கு அவ்வப்போது போட்டு காட்டினோம். அவற்றில் உருப்படியான அபிப்பிராயங்கள் இருந்தால் ஏற்று மாற்றியமைத்தோம்.
பாத்திரத்திற்கு மெருகு போடும்போது அதைச் சீவுவது உண்டு மோதிரத்திற்கு உருவம் கொடுக்கும் போது அதை ராவுவது உண்டு ஒளவையிலும் கட்டுக் கோப்புக்காய் வெட்டு ஓட்டுகள் இருந்தன அவ்வளவுதான்.

உதாரணமாக ஒளவை எட்டே கால் லக்ஷணமே!" என்று பாடுவதைப் படமாக்கியிருந்தோம். ஒளவை இப்படிச் சொல்வது சரியாகப் படவில்லை வெட்டித் தள்ளிவிட்டோம். சங்கம் காட்சி பல ஆயிரம் அடிகள் எடுக்கப் பட்டது. பிறகு அவ்வளவு தேவையில்லை என்று வெட்டினோம். ஏராளமான பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப் பட்டன. பின்னர் சுமார் சுப்பு.
இதெல்லாம் எதற்காக? படம் திரைபிடப்பட்டபின் குறைபாடுகள் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் அத்தனை பாடுபட்டோம். ஆனால் வதந்தி அன்பர்கள் தெரிந்தோ தெரியாமலோ வதந்திகளைக் கிளப்பி விட்டனர். சீனிமாப் பற்றித் தெரிந்தவர்கள் இப்படிப் பொறுப்பற்ற தன்மையில் நடந்து கொண்டிருப்பார்கள் என்று கண்டோமா? அதன் பலன்?  மனமறிந்து ஒரு பிழை செய்யாத-இடைவிடாத உழைப்பிலேயே இன்பத்தைக்கண்டு பாடுபட்ட என் மனம் உடைந்து போய் விட்டது. இது எனக்கு ஆறாத புண். இதனால் வதந்தி அன்பர்கள் அடைந்த பலன் என்ன என்றுதான் எனக்குப் புரியவில்லை.

ஒளவையார் யாரும் எதிர்பாராத அளவுக்குச் சிறந்த படமாக வெளிவந்து விட்டது. இன்றுதான் நான் மூச்சு விடுகிறேன்.  ஓரளவு சரியாக இல்லா விடில் என்னை உலகம் தூற்றியிருக்கும். ஸ்ரீ வாஸன் ஒளவையாரை சிறந்த படமாக மட்டும் கொண்டு வரவில்லை. எனக்கிருந்த அபவாதத்தை
மாற்றிக் காட்டிய கதை..!

கற்பத்தெட்  டைத்தான் படத்திற்கு உயோகித்தோம். கயிலாயத்திலே சிவகடனம் ஒன்று இருந்தது அது தேவையில்லை என்று அறிஞர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். வெட்டி த் தள்ளினோம்.  இதெல்லாம் எதற்காக?  படம் திரையிடப்பட்டபின் குறைபாடுகள் இருக்கக் கூடாது என்பதற்காகத் அத்தனை பாடுபட்டோம். ஆனால் வதந்தி அன்பர்கள் தெரிந்தோ தெரியாமலோ வதந்திகளைக் கிளப்பி விட்டனர். சினிமாப் பற்றித் தெரிந்தவர்கள் இப்படிப் பொறுப்பற்ற தன்மையில் நடந்து கொண்டிருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. அதன் பலன்?  மனமறிந்து ஒரு பிழையும் செய்யாத-இடைவிடாத உழைப்பிலேயே இன்பத்தைக் கண்டு பாடு பட்ட என் மனம் உடைந்து போய விட்டது. இது எனக்கு ஆறாத புண். இதனால் வதந்தி அன்பர்கள் அடைந்த பலன் என்ன என்றுதான் எனக்குப் புரியவில்லை.

ஒளவையார் யாரும் எதிர்பாராத அளவுக்குச் சிறந்த படமாக வெளி வந்து விட்டது. இன்றுதான் நான் இன்றுதான் நன் மூச்சு விடுகிறேன். அது ஓரளவு சரியாக இல்லாவிடில் என்னை உலகம் தூற்றியிருக்கும். ஸ்ரீ வாஸன் ஒளவை மட் டும் கொண்டுவரவில்லை. . எனக்கிருந்த அபவாதத்தையும் போக்கி விட்டார். என் உயிருள்ளவரை அதற்காக அவருக்குக் கடமைப் பட்டவன் நான். இந்தப் படத்திற்காக இரண்டு மூன்று தடவை ஸ்ரீ வாஸனின் உயிருக்கே ஹானி ஏற்பட்டது.

ஒளவைக்காக யானைக் காட்சி தயாரிக்கப்பட்டதே. அது ஒரு  விசேஷமான கதை பின்னொரு சமயம் விவரமாக அதைப் பற்றிக் கூறுகிறேன். ஓரிரு சம்பவங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். தெய்வீகனாக ஜெமினி கணேசன் நடித்தாரல்லவா? அவரைத் தூக்கி வரும் யானையின் முன்பு அவரை நிற்கவைத்து 'ஸ்டில் போட்டோ' எடுக்க ஏற்பாடாயிற்று. கணேசன் யானையிடம் கொஞ்ச ஆரம்பித்தார். முதலில் துதிக்கையைத் தட்டிக் கொடுத்தார். யானை சும்மா இருக்தது.  தந்தத்தைப் பிடித்து அசைத்தார். அப்போதும் சும்மாயிருந்தது.  பிறகு கன்றுக்குட்டியை அணைப்பதுபோல் அணைத்து முத்தமிட்டார். கடைக்கண்ணால் அவரைப் பார்த்தது. துதிக்கையைச் சிறிது அசைத்தது. கணேசன் காமிராவுக்குப் பின்னால் போய் விழுந்தார். என்னதான் சும்மா இருந்தாலும் என்னைக் கன்றுக்குட்டி என்றா நினைத்து முத்த மிட்டு விட்டாய்?" என்று கேட்பது போல் நின்றது அந்த யானை!

யானைகளுக்கு விபூதி பட்டைபோட பெயிண்டர்களை அழைத்துச் சென்றிருந்தோம். யானைத் தந்தத்தில் நின்று பிரஷ்ஷினால் பெயிண்ட் அடிப்பார்கள்.  யானை குறும்புக்கு அசைக்கும். அவ்வளவுதான்! பெயிண்ட் நிறைந்த வாளியுடன் கீழ விழுவார் பெயிண்டர். அவர் உடம்பு முழுதும் 'பெயிண்டாபிஷேகம் நடக்கும்.  அப்படி சும்மாயிருந்தாலும் பொட்டிடுவதற்குள் விபூதியை மண்ணாலடித்துக் கலைத்துவிடும் இந்த யானைகள், அவைகளுக்கு குஷி,  நமக்குப் பிராணன் போய்விடும்!
நடிகர்களுக்குத்தான் இப்படி  என்றால் யானைகளுக்கும் ரிஹர்ஸல்" உண்டு.  சிலருக்கு காமிராக் கூச்சம் இருப்பது. போல யானைகளுக்கும் உண்டு. சில யானைகள் காமிராவைக் கண்டதும் பிளறிக்கொண்டு ஓட ஆரம்பித்து விடும்.  

இதற்காக ஒரு திடலில் யானைகளையும் காயிராவுக்கு முன் நிறுத்தினோம். யானைகள் பல திக்கிலும் ஓடாதிருக்க பாதைபின் இரு புறமும் வேலியமைக்கப்பட்டது. யானை அந்தப் பாதைக்கு நேராக காமிராமேல் வந்து விழக்கூடாதே! அதற்காக மண்டயம் என்ற ஊரிலிருந்து லாரிகளில் வெல்லம் தேங்காய் கரும்பு இவைகளை வரவழைத்தோம்.  எங்கே யானைகள் நிற்கவேண்டுமோ அங்கே தேங்காய் முதலியவைகளை கொண்ட லாரி நிற்கும். யானை எவ்வளவு வேகமாக வந்தாலும் அந்த இடம் வந்ததும் நின்றுவிடும். அளவுக்கு மிஞ்சிய தீனியால் சில யானைகளுக்கு உடம்புக்கு ஒத்துக்கொள்ளவில்லையென்றால் எவ்வளவு செலவாகியிருக்கும் பாருங்களேன்! ஒளவைக்காக ஸ்ரீ வாஸன் யானை கட்டித் தீனிபோட்டார்!

யானை காட்சி முடியும்போது யானைகள் பருத்திருந்தன. வால் மயிர் ஈறுத்து மொட்டையாகவும் ஆகிவிட் டது. பல காரணங்களுக்காக யானை வால் மயிரை எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள் பலர். 

ஸ்ரீமதி கே. பி. சுந்தராம்பாள் எங்களுடன் ஒத்துழைத்ததைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. சிறிது கேரம் கூட தவறாமல் வேண்டிய போதெல்லாம் வந்து எங்களுடன் பரிபூரணமாக ஒத்துழைத்தார் அவர். நாலு மணிக்கு வருகிறேன் என்றால் அவர் கார் அதே நாலு மணிக்கு வந்து ஸெட்டிலே நிற்கும். அவர் வருவதைக் கண்டு நான் மணியை தெரிந்து கொள்வேன். இப்படி ஒரு நாளா இரண்டு நாளா? ஏழு வருஷங்கள் ஒத்துமைத்தார்கே. பி.சுந்தராம்பாள். மற்றும் ஸ்தாபன நடிகர்கள் அத்தனை பேரும் இதைச் சொந்த விஷயமாகப் பாவித்து ஒத்துழைத்தார்கள். பலரது ஒத்துழைப்பும் இன்றி இப்படிப்பட்டதொரு படம் வெளிவர முடியுமா?

ஸ்ரீ வாஸன் ஒரு சிறந்த அறிவாளி. அறிவு, தமிழன்பு, பணம் மூன்றும் அவரிடம் இருந்தன. கொத்த மங்கலம் சுப்பு ஒரு டைரக்டர் என்றால் அப்படி என்னை மாற்றிய பெருமை ஸ்ரீ வாஸன் அவாகளைத் தான் சேரும். இலக்கியத் துறையிலே காந்தி மகான் கதையும், பட உலகிலே ஒளவையும் என் இரு கண்கள். ஸ்ரீ வாஸனின் அரவணைப்பிலே பிறந்தவைதான் இவை.
பிறந்த கதை வேண்டுமா, வளர்ந்த கதை வேண்டுமா என்பார்கள் பெரியோர்கள்.  நான் பெரியோனில் லேனாயினும் நான் பிறந்து, வளர்ந்து, டைரக்டரான கதை இது

============================================================================================

நடிகர், தயாரிப்பாளர் விகடனில் எழுதிய தொடர்கதை!


உங்களிடம் உங்கள் பழைய கல்யாண VCD போன்றவை இருக்கிறதா?  அதை நவீன CD, DVD வடிவத்துக்கு மாற்றித்தருபவர்.  தேவைப்பட்டால் படத்தில் அவர் தொடர்பு எண் இருக்கிறது.


தேன் மிட்டாய் 

நாச்சியார் கோவிலில் வாங்கியது!

சேங்காலிபுரம் அக்ரஹாரம் 

=====================================================================================================

கண்டசாலாவா சீர்காழியா என்று யோசித்து இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பார்த்து சீர்காழியை தெரிவு செய்து விட்டேன்!  ஜகதலப்ரதாபன் படம்.  காட்சியில் N T ராமராவ் .  இசை நாகேஸ்வரராவ்.  தர்பாரி கானடா ராகம்.  விரைவில் இதே ராகத்தில் இன்னொரு பாடல் பகிர்வேன்!

86 கருத்துகள்:

  1. என்ன வெள்ளியையும் கோவில் உலாவாக மாற்ற முயலுகிறீர்களா?

    கேஜிஒய் அவர்களை பல வருடங்களுக்குப் பிறகு படத்தில் பார்க்கிறேன். பஹ்ரைன் நினைவு படங்களை புதனுக்கு அனுப்பி கேஜிஜி வெளியிடலைனு நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இல்லை. இது லாங் பெண்டிங். சொல்லப்போனால் இன்னும் விளக்கமாக எழுதி இருக்க வேண்டும்.

      நீக்கு
    2. நெ த அனுப்பிய படங்கள் படமும் பதமும் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன என்று தெரிவித்துககொள்கிறேன்.

      நீக்கு
    3. 15.4.2026 புதன் பதிவைப் பார்க்கவும்
      அதில் கீ ரெ கமெண்ட் " geethar15/4/26 8:15 AM
      நெல்லை அந்த எபி ஆசிரியரோடான படங்கள் நல்லாருக்கு. நீங்கள் முன்னர் கருத்தில் சொல்லியிருந்த நினைவு.

      கீதா.

      நீக்கு
  2. அட இன்னொரு சாண்டில்யன் பகுதியானு பார்த்தேன்

    சாண்டில்யன் ரொம்ப ரசிக்கும்படி எழுதுவார். அவரது நாவலை மீண்டும் எடுத்துப் படிக்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது மன்னன் மகள் கதையின் முன்னுரையில் முதல் பகுதி! சொல்ல மறந்து விட்டேன்!

      நீக்கு
  3. தேன் மிட்டாய் படம் ஆசையைத் தூண்டுது. சுகாதாரமற்றது என்றாலும் யம்மி. இதை ரசிக்க குழந்தை மனது வேண்டும். கீதா ரங்கன் க்கா வுக்கு இல்லை ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அஷ்வின் கடையில். வாங்கியது.  சுகாதாரமானது!

      நீக்கு
    2. கீதா ரங்கன் க்கா வுக்கு இல்லை ஹா ஹா ஹா//

      நினைச்சேன்! என்னடா வம்பைக் காணலியேன்னு, அந்த மானைப் பிடிக்க போயாச்சு போலன்னு....மேலே வந்தா கண்ணுல பட்டுவிட்டது! போகிற இடைவெளியிலா இல்லை போய்ச் சேர்ந்த இடைவெளியிலா இங்க கமென்ட்ஸும்.....

      ம்ஹூக்கும் அதுசரி தேன்மிட்டாயை ரசிக்க மட்டுட்ம்தான் குழந்தை மனசு வேணுமாக்கும்!!! அண்ணே அதுக்கு எங்களுக்கு நிறைய விஷயங்கள் இருக்குங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!

      வீட்டிலயே செய்யலாமே நெல்லை. நீங்க செஞ்சு பார்த்திருப்பீங்கன்னு நினைச்சேன்.

      கீதா

      நீக்கு
  4. வரசித்தி விநாயகர் தரிசனம் நன்று

    பிரசாத ஸ்டாலில் என்ன என்ன இருந்தன என்ற விவரம் இல்லை.

    ரொம்ப வருடங்களுக்கு பிறகு ஒய், ஜி சந்தித்த விழானு நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரசாத ஸ்டாலில் பிரசாதம் கிடைக்கும்!! நாங்கள் போன நேரம் காலை ஐந்து மணி. கடை மூடியிருந்தது!

      நீக்கு
  5. கல்யாண விசிடி.. மிக உபயோகம் விரைவில் தொடர்பு கொள்ளணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், யாருக்காவது உபயோகபப்டும் என்றுதான் விடியோவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்தேன்.

      நீக்கு
  6. நேற்று காணாமல் போன ஸ்ரீராம் இன்று வருவாரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிமிர்ந்தே பார்க்காமல் கோலம் போட்டுச் செல்கிறீர்கள் என்பது தெரிகிறது!!

      நீக்கு
    2. வேண்டுமென்றே எழுதினேன் ஸ்ரீராம் ஹிஹி

      நீக்கு
  7. கொத்தமங்கலம் சுப்பு பகுதி அருமை. ரசித்துப் படித்தேன். நல்ல பகிர்வு

    நான் நந்தனார் படத்தை நிறைய முறை பார்த்திருக்கிறேன். அதுவும் மீரா போன்ற பக்தி படங்களும் ஏகப்பட்ட முறைகள் பசங்களுக்குப் போட்டிருக்கிறேன்.

    தண்டபாணி தேசிகர் பாடல்கள் ரொம்பவே ரசிக்கும்படி இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லையே..  நந்தனார் படத்தை பொறுமையாக பார்த்திருக்கிறீரகள்.

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    உங்கள் இளைய மகனின் திருமணம் சிறப்பாக நடைப்பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி. திருமணமான தம்பதிகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். ஆசிகள். திருமணவிழா இனிதே நடைப்பெற்ற அடுத்த நாளே சிரமம் பாராமல் வந்த தங்களின் வருகை கண்டும் மிக்க மகிழ்வடைகிறேன். (கோலம் போடும் போதும், ஆசுவாசமாக அடிக்கடி நிமிர்ந்து பார்த்துக் கொள்கிறேன்.:))) தங்களுக்கே உரிய அந்த அழகான உவமானத்தை ரசித்தேன்.) நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​// ஆசுவாசமாக அடிக்கடி நிமிர்ந்து பார்த்துக் கொள்கிறேன் //

      .ஆஹா. நல்ல விஷயம்! நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி சிதறல்கள் எப்போதும் போல் அருமை. பதிவின் ஆரம்பத்திலேயே விநாயகரின் படம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். சுயம்புவாக உருவாகி கொண்டிருக்கும் விநாயகரையும், கோவில் கோபுரங்களை யும் தரிசனம் செய்து கொண்டேன். அந்த விநாயகர் கோவில் பற்றிய விபரங்களும், கோவிலின் படங்களும், மிக அழகாக உள்ளது. உங்கள் மாமாக்களின் புகைப்படங்களும் அழகாக வந்துள்ளது. அனைத்திற்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா. இந்த கோவில் நீங்கள் சென்றிருக்கிறீர்களா?

      நீக்கு
    2. இதுவரை இல்லை. "அவன்" அழைத்தால் அல்லவா செல்ல முடியும்.

      நீக்கு
    3. என்னை என் மாமா மகன் (அவன் மகன் திருமணத்துக்கு) அழைத்து, நான் சென்று அங்கு இவர் இருப்பதை அப்போதுதான் உணர்ந்து சென்று பார்த்து ஆசிபெற்று  வந்தேன்.

      நீக்கு
    4. ஓ.. அப்படியா.? நல்லது. எப்படியோ தன்னை தரிசிக்க ஒரு காரணத்தை வைத்து உங்களை "அவன்"அழைத்து விட்டான். வாழ்த்துகள்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    தேன் மிட்டாய் படம் கண்களை கவர்கிறது. சிறுவயதில் இதைச் சாப்பிட வீட்டில் தடை. ஏதேதோ காரணங்களை சொல்வார்கள். அதனால் சாப்பிட்டதில்லை. பார்ப்பது சரி.

    தீப தட்டுக்கள் படம் ஜொலிக்கிறது. மங்களகரமான படம்.

    சேங்காலிபுரம் அக்ரஹாரம் சாலை அழகாக உள்ளது. இது எங்குள்ளது. நான் சோழிங்கபுரம் என படித்து விட்டேன். பிற செய்திகளையும், சீர்காழி அவர்களின் பாடலையும் படித்து, கேட்டு விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் தேன்மிட்டாய் நான் சிறுவயதிலேயே சாப்பிட்டதில்லை.  பெரிய விருப்பம் எதுவும் இருந்ததில்லை.  இப்போது வாங்கியதும் போட்டோ எடுத்ததும் எனக்கே அந்த போட்டோ ரஃம்பப் பிடித்து விட்டது.  எனவே பகிர்ந்தேன்!!

      சேங்காலிபுரத்தை விட அழகான நீட்டான அக்ராஹாரன்கள் உண்டு.  என் கண்ணில் பட்டது - அங்கு என் உறவினர் இருந்த காரணத்தால்-  இதுதான்!!

      நீக்கு
  12. ஔவையார் திருவடிகளே சரணம்

    பதிலளிநீக்கு
  13. ஜெமினியின் ஔவையார் பகுதிகள்
    சிறப்பு...

    பதிலளிநீக்கு
  14. முதல் படம் ரொம்ப மனதை ஈர்க்கிறது. அருமையான அழகான படம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் லிங்கம் என்று நினைத்தேன்...விநாயகர்!

      கீதா

      நீக்கு
    2. விநாயகர் என்று நாம் கற்பனை செய்யுமளவுதான் இருக்கும்.

      நீக்கு
  15. ஒரு மணி நேரம் தரிசனம், அடுத்த ஒன்றரை மணிநேரம் திருமஞ்சனம் என்று நாள் முழுக்க நீராடுகிறார் விநாயகர். //

    ஹாஹாஹாஹா சித்தூர் எப்பவும் கோடைகால இடம் இல்லையோ!!! விக்ன விநாயகர் கூலா இருக்க வேண்டாமா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா.. இங்கேதான் கோவில் முறைகளை முறைப்படி செய்கிறார்கள் என்று மாமா சொல்லிக் கொண்டிருந்தார்.

      நீக்கு
    2. ஓ! தகவல் இது!

      கீதா

      நீக்கு
  16. காணிப்பாக்கம் விநாயகரே மனதில் நின்றார். //

    காணி நிலம் வேண்டும் என்று பாடியிருப்பாரோ!!!!!! விநாயக பக்தர் யார் கனவிலாவது போய் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்!

    காணிப்பாக்கம் பிள்ளையார் கோயில் பத்தின தகவல்கள் நோட்டட்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அது போன்ற ரெகுலர் கதை ஏதாவது இருக்கும்.

      நீக்கு
  17. நந்தி, முருகன் படங்கள் செமையா இருக்கு

    கீழ் விநாயகர் சிவன் என்று குடும்ப போட்டோக்க்கள் நல்லாருக்கு ஆனா அம்மாவைக் காணலையே

    கேஜி விய் மாமா, கௌஅண்ணா (மாமா!!) எல்லாம் சூப்பர்.... பின்னாடி நெல்லை போல இருக்குல்ல!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னபிறகு எனக்கும் அப்படி தோன்றுகிறது.  ஆமாம், அம்மா எங்கே காணோம்...  உள்ளே சமைத்துக் கொண்டிருக்கிறாரே என்னவோ!  இந்த உலகை!

      நீக்கு
    2. உள்ளே சமைத்துக் கொண்டிருக்கிறாரே என்னவோ! இந்த உலகை!//

      ஹாஹாஹா....

      ரசித்துச் சிரித்தேன், ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  18. 'மன்னன் மகள்' கதையை இப்பொழுது புத்தக ரூபத்தில் வெளியிட வானதி பதிப்பகத்தார் முன்வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றி. //

    இந்த முறை சாண்டில்யன் அவர்களின் நன்றியுரை....நல்லாருக்கு ரசித்து வாசித்தேன் குறிப்பாக....இதோ கீழெ உள்ளதை

    //. தமிழ்ப் பெருமக்களுக்கு மட்டும் எனது நன்றியைத் தெரிவிக்கப்போவதில்லை. அவர்கள் ஆதரவால் நான் வளர்ந்தவன். வளர்ந்த குழந்தை தன்னை வளர்த்த பெற்றோர்களுக்கு நன்றியுரைப்பது கேலியாகத் தெரியும்; சம்பிரதாய விரோதமுங்கூட.//

    நம்ம வீட்டுல இது சொல்லப்படுவதுண்டு அதாவது வீட்டுக்குள்ளயும் இது பொருந்தும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது 68 ஆம் ஆண்டு எழுதிய முன்னுரை!

      நீக்கு
    2. அதான் அப்பவே இப்படியான நல்ல கருத்து!!!

      கீதா

      நீக்கு
  19. ரவிகுமார் பேட்டி ரொம்ப சுவாரசியம். முழு வீடியோவும் பார்க்க வேந்டும் இப்பகுதி மிஸ் ஆகியிருக்கிறது. வேறு பகுதிகள் பார்த்த நினைவு.,.

    ரஜனி - மே ல் இருந்த மதிப்பு இப்ப கொஞ்சம் குறைந்த ஒரு ஃபீல். அதுவும் சமீபத்தில் ச க வீட்டிற்குப் போய் அது கோவில் போல இருக்குன்னு சொன்னது....போனது அவர் தனிப்பட்ட விஷயம். ஆனால் பொதுவெளியில் அதுவும் அரசியல் களத்தில் இது பல அர்த்தங்களைச் சொல்லும் பேச்சு. he lost his authenticity!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் அந்த ச க என்று யோசிக்கிறேன்.  ரஜினி மேல் இருந்த மதிப்பு சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியாலும் குறைந்தது.

      நீக்கு
    2. சசிகலாதான்! அந்த ரீல் உங்க கண்ணுல பட்டிருக்குமே ஸ்ரீராம்.

      யெஸ் சமீபத்திய பேட்டியில் மதிப்பு குறைந்தது.

      கீதா

      நீக்கு
  20. பாஹே அவர்களின் பக்கம் - செம உளவியல்!!!! கருத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ந்த அமாவாசை முடியாது.  அடுத்த அமாவாய்க்கு அப்பாவிடம் சொல்லி விடுகிறேன்!

      நீக்கு
    2. புன்சிரித்தேன்

      கீதா

      நீக்கு
  21. அப்பாவின் பள்ளி நாட்கள் ஓவியம் கூட இன்னும் பொக்கிஷமாக வைத்திருக்கீங்களே ஸ்ரீராம்...சூப்பர். இதை அப்படியே laminate பண்ணிடுங்க முடிஞ்சா.. ரொம்ப அழகா வரைந்திருக்கிறார்.!

    இப்ப இதுக்கு வேற அர்த்தம் கற்பிக்கப்பட்டுவிடும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. சுபாஷ் சந்திரன் பட்ட பெயர் என்பது புரிந்தது. ஸ்கௌட் னு புரிந்தது.

    ஸ்ரீராம் படத்தை ஸ்கான் பண்ணிடு ஒரிஜினல்னு சூஸ் பண்ணிட்டீங்களோ ப்ளாக்ல போடும் போது?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எல்லாம் இல்லை கீதா.

      அவர் சுபாஷ் சந்திரன் பக்தர்.

      நீக்கு
    2. படங்கள் ரொம்ப பெரிசா ப்ளாக் எல்லையை மீறி இருப்பதால் கேட்டேன் ஸ்ரீராம்.

      அப்புறம் நினைவு வந்தது சுபாஷ் சந்திரன் பக்தர் என்பது...எப்பவோ சொல்லியிருக்கீங்களோ?!!

      கீதா

      நீக்கு
    3. ஆம்.  அவர் நேதாஜி பக்தர் என்பதால் தான் சுபாஷ் சந்திரன் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டார்.

      நீக்கு
  23. ஒரு வழியாக கொத்த மங்கலம் சுப்பு அவர்களின் பகுதியை கண் சொக்க சொக்க ஹாஹாஹாஹா வாசித்து முடித்துவிடேன்!!!!

    ஔவையார் படம் பற்றியது வாசித்த போது இப்படியான வதந்திகள் எவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கும் மனதை. அதுவும் ஔவையார் பற்றிய குறிப்புகள் அவர் சொல்வது போல் வெவ்வேறு ஔவாயார் குறித்து இருக்கும் போது ரொம்ப ஆய்ந்துதானே எடுக்க முடியும்?!

    இப்பவும் கூடப் பாருங்க கன்னா பின்னான்னு வதந்திகள் மத்தவங்க மனசை அவை கீறுமேன்னு அக்கறை இல்லாமல் இப்படி...

    கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பகுதியை ரசித்து வாசித்தேன், ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.  ஒரு விஷயம் கமலா அக்கா சொல்வார் என்று எதிர்பார்த்தேன். 

      அவர் சொல்லவில்லை என்றதும் நீக்கினாலாவது சொல்வீர்கள் என்று நினைத்தேன்! 

      வேண்டுமென்று செய்ததில்லை.  யதேச்சைதான்.  பெரிதாக ஒன்றுமில்லை.  ஹிஹிஹி 

      நீக்கு
  24. பழைய வீசிடி டிவிடி - நல்ல தகவல் பலருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. பாலாஜி எழுதிய தொடர்கதை முழுவதும் கிடைக்குமஆ? பார்க்க வேண்டும். ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி இருக்குமோ...  ரொம்ப சுமாராகத்தான் இருக்கும் என்கிறது மனம்!  பின்னாட்களில் ஜெயலலிதா, அம்பிகா எல்லாம் கூட பத்திரிகையில் கதை எழுதினார்கள்.

      நீக்கு
  26. தேன்மிட்டாய் படம் செமையா இருக்கு. சின்ன வயசில் சாப்பிட்டது. அப்பவே அதன் அதிகமான தித்திப்பு நான் தள்ளி நிற்பேன்....அது எப்படி இருக்கும் எனும் ஆர்வத்தில் சுவைத்ததோடு சரி, மைதாவில் செய்வது..

    நாச்சியார் கோயில் விளக்குகள் செம அழகு.

    சேங்காலிபுரம் கிராமம் யாருமில்லையோ? பழைமை நல்லாருக்கு கார் ஒன்று நிற்பதைப் பார்த்தால் யாரோ குடியிருக்காங்களா இல்லை பார்க்கிங்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணையும் மனதையும் கவர்ந்ததால்தான் படங்கள்!!

      நீக்கு
  27. சுயம்பு வரசித்தி விநாயகர் அதிசயம் .வணங்கிக் கொண்டோம்.

    தேன் மிட்டாய் எமக்கு புதிதாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி...  தேன்மிட்டாயை சந்தித்ததில்லையா?!

      நீக்கு
  28. தர்பாரி கானடா பாடல் கேட்டிருக்கிறேனோ என்று தோன்றியது...

    தபலாவும், சரோதும்? இந்துஸ்தானியைக் கொண்டு வந்துவிடுகிறது கூடவே சீர்காழியின் தொண்டை உருள்வதும் ...அந்த ஃபீல் கூடவே ஸ்வரங்களும் அந்த ஃப்ஃபிலை கொண்டு வந்துவிடுகிறது. தர்பாரிக்கான அந்த ஃபீல்!

    ரசித்துக் கேட்டேன் ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  29. வியாழன் பதிவை மெதுவா பார்க்கிறேன் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  30. மிக அருமையான பதிவு. அவ்வையார் பட சங்கடங்கள். பாவம் சுப்பு சார். எத்தனை சிரமப்பட்டு இருக்கிறார்!! இப்போது மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். யானைகள் இத்தனை பாடு படுத்துமா!!!!! சாமீ ஈஈஈஈஈஈ!!!!

    பதிலளிநீக்கு
  31. சிடி விசிடி மீட்கும் செய்திக்கு நன்றி. எங்கள் திருமண புகைப்படங்களை செம்மைப் படுத்திய ஸ்டூடியோ அபிராம புரத்தில் இருந்தது. இந்தத் தகவலைப் பத்திரப் படுத்திக்கொண்டேன். நன்றி மா.

    பதிலளிநீக்கு
  32. காணிப்பாக்கம் வினாயகர் மிக அருமை. எங்கள் உச்சிக் கோட்டை பிள்ளையாரை எப்போதும் மனசில் வணங்கிக் கொள்வேன். லஸ் கணேசரும் தான். நன்றி மா.

    பதிலளிநீக்கு
  33. சிவசங்கரி மறக்க முடியாத பாடல் குரல். என்ன ஒரு கார்வை.!! வணக்கம் சீர்காழி சார்.

    பதிலளிநீக்கு
  34. உங்கள் தந்தையின் படங்களும் ஓவியங்களும் சூப்பர்._////

    பதிலளிநீக்கு
  35. பாலாஜி யின் கதை எப்படி இருந்ததோ. இப்பதான் அவரை விதி படத்தில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  36. கொஞ்சம் பெரியதாக இருந்தாலும் சுவாரஸ்யமான பல விஷயங்கள் அடங்கிய பதிவு.
    கவாஸ்கர், ரவிகுமார் காணொலிகள் interestng.
    கொத்தமங்கலம் சுப்புவின் அனுபவங்கள் சினிமாவைப் பற்றி பல விஷயங்களைத் தெறிவிக்கிறது. ஔவையார் படம் எடுக்க ஏழு வருடங்கள் உழைத்தார்களா??!! அதில் நடிக்க கே.பி.சுந்தராம்பாளுக்கு ஒரு லட்சம் சம்பளம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் ஏழு வருடங்களுக்கு ஒரு லட்சம் என்பது அதிகம் இல்லை. சினிமா உலகத்தின் பொறாமை எப்போதும் ஒரே மாதிரிதான் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  37. அப்பாவின் நினைவுகள் நெகிழச் செய்கிறது. 'மனம் பிளவுபட்டே இருக்கிறது' எப்பேர்பட்ட சிந்தனை! உங்கள் தந்தை ஒரு சிந்தனாவாதி என்பதை ஆவர் இருந்த பொழுது உணர்ந்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  38. Choosing the best online forex broker is a crucial step toward achieving success in the financial markets. A top-quality broker offers competitive spreads, fast trade execution, advanced trading platforms, and access to a wide range of currency pairs. In addition to reliable technology, the best online forex brokers provide strong security measures, transparent pricing, educational resources, and responsive customer support to help traders make informed decisions. Whether you are a beginner exploring forex trading or an experienced investor seeking enhanced trading conditions, partnering with a trusted broker can help you trade with confidence and maximize your market opportunities.

    பதிலளிநீக்கு
  39. Top Forex Brokers in India offer traders a secure and efficient way to participate in the global currency market while providing advanced trading tools, competitive spreads, and reliable customer support. The best brokers are known for their transparent pricing, fast trade execution, user-friendly platforms, and access to educational resources that help both beginners and experienced traders improve their skills. Whether you are interested in currency trading, market analysis, or risk management, choosing a reputable forex broker can make a significant difference in your trading experience. By selecting a trusted broker that aligns with your trading goals, you can access global market opportunities with greater confidence and convenience.
    Contact us Address — 1st Floor, The Sotheby Building, Rodney Bay, Gros-Islet, SAINT Lucia P.O Box 838, Castries, Saint Lucia Phone no — +97144471894 Website — https://winprofx.com/

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!