26.6.26

நரேந்திரன் ஓடிப்போனதன் காரணம் 

இளையவன் திருமண விஷயமாக ஜவுளிக்கடைக்குச் சென்றபோது பாஸ் புடவைகள், பிளவுஸ் பிட் என்று பிஸியாக, நான் ரெடிமேட் ஷர்ட்ஸ் பக்கம் ஒதுங்கி விரைவாக வேலையை முடித்து விட்டு நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்க்காத தொடங்கினேன்.

நடுவில் சற்றே ஓய்வு எடுப்பதற்கு கூட விற்பனையாளர்கள் சக விற்பனையாளர்களை நம்பி இருக்க வேண்டி இருந்தது என்பதை பார்த்தேன். பிணைக்கு ஒருவரைக் காட்டி விட்டுதான் ஒருவர் வெளியே நகரமுடியும்.  'நான் உனக்கு போன வாரம் கூட இப்படி ஹெல்ப் பண்ணினேனே..',  'நேத்து சரின்னு சொன்னேனே' என்றெல்லாம் வசனங்கள் போய்க்கொண்டிருந்தன.

முதலாளி தரப்போ, கண்காணிப்பாளர்களோ பார்ப்பார்களே, நம் டெக்னிக்கெல்லாம் வெளி வந்து விடுமே என்கிற அச்சமே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று பார்த்தால், கண்காணிப்பாளர்கள் கூட வந்து ஜமாவில் சேர்ந்து கொண்டார்கள்.

ஒருவர் 'மாத்திரை சாப்பிட்டேன், மயக்கமா இருக்கு,,, இருபது நிமிஷம் தலையை சாய்ச்சுட்டு வர்றேன்' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதென்ன கால்மணி அரைமணி என்றில்லாமல் இருபது நிமிஷ கணக்கோ! இன்னொருவரும் காஃபி சாப்பிட்டு வருகிறேன் என்று இருபது நிமிஷம்தான் கேட்டுக் கொண்டிருந்தார். ஒருவழியாய் சிறிய போட்டி, விவாதங்களுக்கு பின்னர் அவர் அனுப்பி வைக்கப்பட்டாலும் அவர் தலை மறைந்தததும் இங்கே கிண்டலும், நக்கலும், கேலியுமாயாக பேச்சு ஆரம்பித்தது. நாளை நாம் அந்தப் பக்கம் சென்றதும் கூட எல்லோரும் இப்படிதான் பேசுவார்கள் என்பதை மறந்து பெண் ஊழியர்கள் உட்பட கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார்கள்! அவர்களுக்கும் பொழுது போக வேண்டுமே...

அப்போது பார்த்த காட்சி ஒன்று..

ஒரே குடும்பத்திலிருந்து சற்றே பருமனாக நான்கு ஐந்து பேர்கள் வந்து புடவை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சற்று வயதானவராக தெரிந்த சேல்ஸ்மேன் பொறுமையாக எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட அலமாரியில் இருந்து 70% புடவைகளை பார்த்து விட்டார்கள். பிறகு எதுவும் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு அகன்று விட்டார்கள். அவர்கள் அகன்றதும் அந்த இடத்தில் வேறு கஸ்டமர்கள் இல்லாததால் இரண்டு சேல்ஸ்மேன்களும் பேசிக் கொண்டார்கள்.

"என்ன ஒன்றும் வாங்கவில்லையா?" என்று அருகில் இருந்தவர் கேட்க, இவர் கைகளை வீசிக்காட்டி, "இவ்வளவு பார்த்தார்கள் எதுவும் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு போய் விட்டார்கள். இதில் நான் சரியாக எடுத்துக் காட்டவில்லை என்று குறை வேறு.." என்று சொன்னவர் கொஞ்சம் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லாததால் "புளி மூட்டை மாதிரி இருக்கிறார்கள். இவர்களுக்கு நான் புடவை சரியாக காட்ட வேண்டுமாம்..." என்ற சொல்லிவிட்டு சேல்ஸ் டேபிளில் கலைந்து கிடந்த புடைவைகளை எடுத்து மடித்து வைக்க ஆரம்பித்தார்!

நம்மையெல்லாம் பற்றி என்ன பேசுவார்களோ என்கிற எண்ணமும் என் மனதில் ஓடியது.

அந்தக் குடும்பம் சற்றுத்தள்ளி இருந்த இன்னொரு டேபிளை துவம்சம் பண்ணிக் கொண்டிருந்தது.  அங்கும் எதுவும் எடுத்த மாதிரி தெரியவில்லை.

இங்கு எல்லாத் துணிகளையும் நீட்டாக மடித்து, மீண்டும் அதனதன் இடத்தில் அடுக்கி வைத்து விட்டு திரும்பினார் இந்த சேல்ஸ்மேன். அவர் முகம் வியர்த்தது. மீண்டும் அதே கும்பல் அவர் எதிரே நின்று கொண்டிருந்தது.

"இப்போ காமிச்சதுல ரெண்டு மூணு பிடிச்சிருந்தது..  அதை எல்லாம் கொஞ்சம் திரும்ப எடுங்களேன்..."

அவர் எப்படி Feel செய்திருப்பார் என்று என் மனதில் காட்சி தோன்றினாலும், அவர் மௌனமாகத் திரும்பி, அடுக்கிய புடவைகளை கடமையாக எடுத்து போடத் தொடங்கினார்.

அவர்கள் பாடும் கஷ்டம்தான் இல்லை?!

=======================================================================================

 எனக்கு மிகவும் பிடித்த கதை!  இதைத் தழுவிதான் மௌனராகம் எடுக்கப்பட்டது.  ஆனால் க்ரெடிட் கொடுக்கப்படவில்லை.

=======================================================================================================

1966 ஆம் வருட விகடன் இதழ் ஒன்றிலிருந்து...



பிரியமுள்ள நரேந்திரா,

உடனே வீட்டிற்கு திரும்பு. உன் தாயும் சகோதரியும் உள்னைக் காணாமல் நாள் முழுவதும் அழுதுக்கொண்டே இருக்கிறார்கள். நீ ஓடிப்போனதின் காரணத்தை அந்ததத் தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். உன் விருப்பப்படி, முதல் நாள் முதல் (Premiere Show) 'ஜோஹர் இன் காஷ்மீர்' என்ற படத்தை நீ பார்க்க தயாரிப்பாளர்களும் சம்மதித்தனர்.

உன் பிரியமுள்ள, அப்பா.

இது தமாஷல்ல! ஒரு புகைப் படத்தின் கீழ் மேற்கண்டவாறு வெளி கொடுத்தது . 24-8-66 அன்று பம்பாயிலிருந்து வெளிவரும் 'இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான விளம்பரம்.  கொடுத்தது   உண்மையில் மகனைக் காணாது வருந்தும் தந்தையா, அல்லது படத்தை எடுத்த தயாரிப்பாளர்களா என்றுதான் புரியவில்லை  

எஸ். வி.ராம்.

===========================================================================================

பாஹே பக்கம்  :



*******************************


அப்பா - 
புலவர் கீரன் 

*********************

அப்பாவின் சிறுகதைத் தொகுப்பு பற்றி கலாரசிகன் என்கிற பெயரில் தினமணியில் அதன் ஆசிரியர் கி வைத்யநாதன் எழுதியது.


 நன்றி தினமணி "இந்த வார கலாரசிகன்" (31/1/2016).  நன்றி வைத்தியநாதன் ஸார்.

===========================================

நீதிபதி ராமசுப்பிரமணியனின் "சொல் வேட்டை' புத்தக வெளியீட்டு விழாவிற்கும், மதுரை செந்தமிழ்க் கல்லூரி விழாவுக்கும் சென்றவாரம் மதுரைக்குச் சென்றிருந்தபோது, எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியத்தைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் மட்டும் நிறைவேறவில்லை. மதுரையில் நான் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் தவறாமல் வந்துவிடுவார் அவர். வயோதிகமும் தள்ளாமையும் அவரது உற்சாகத்துக்குத் தடையாக இருந்ததே இல்லை.

தன் மனைவி ஹேமலதா மீது அவருக்கிருந்த தாளாக் காதல் அபரிமிதமானது. அவரது மறைவு பாலசுப்பிரமணியத்தைத் தளர்ந்து போகச்செய்துள்ளது. அந்த நிலையிலும், மதுரையில் ஒரு விடுதியில் அறை எடுத்துக்கொண்டு தங்கி இருந்து, தன் மனைவியின் நினைவுடன் கழித்து வந்தவர் பாலசுப்பிரமணியம். இப்போது உடல்நலம் குன்றியிருப்பதால் தன் குழந்தைகளுடன் தங்கி இருக்கிறார்.

பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்திக்க முடியவில்லையே என்கிற மனவருத்தத்துடன்தான் மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்தேன். இங்கே அலுவலகத்திற்கு வந்து, புத்தக விமர்சனத்திற்கு வந்திருந்த புத்தகங்களை பரிசீலித்துக் கொண்டிருந்தபோது, எனக்கு வியப்பொன்று காத்திருந்தது.

எழுத்தாளர் கர்ணன், ஹேமலதா பாலசுப்பிரமணியம் எழுதிய "இவனும் அவனும்' என்கிற அவரது சிறுகதைத் தொகுப்பை அனுப்பித் தந்திருந்தார். கூடவே அவர் உடல்நலம் குன்றியிருப்பது பற்றிய சிறு குறிப்பையும் இணைத்திருந்தார்.

வழக்கம் போல தன் மனைவி ஹேமலதாவிற்கு அர்ப்பணித்திருந்த அந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் கர்ணன் அணிந்துரை எழுதியிருக்கிறார். கும்பகோணத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் கு.ப.ராஜகோபாலன், நா.பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் பாலசுப்பிரமணியம்.

கடந்த ஆண்டு வெளிவந்திருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளைப் படித்தால் ஒரு சிறிய வருத்தம் மேலோங்குகிறது. இந்த அருமையான சிறுகதை எழுத்தாளரை ஏன் இதழியல் உலகம் அடையாளம் கண்டு சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் அது.

அடுத்த முறை மதுரை செல்லும்போது, எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து, இந்தப் புத்தகத்தில் அவரது வாழ்த்தை எழுதி வாங்கிக்கொள்ள வேண்டும் என்று, அந்தச் சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும் தீர்மானித்துக் கொண்டேன்.

==============================================================================================

1965 ல் சுஜாதா எழுதியுள்ள "நான் படிச்ச கதை' டைப் கட்டுரை...

நிழல்கள்

'நிழல்கள்' என்ற ஒரு நாவல் - எழுதியவர் நகுலன் (டி.கே.துரைஸ்வாமி). இந்த நாவல் எனக்கு ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் அளித்தது. இந்த ஆசிரியரை நான் புதிதாகக் கண்டு பிடித்த அனுபவம் ஏற்பட்டது. நிழல்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு 77 பக்க நாவல். ஒரு அப்பா-பையன் இதில் முக்கிய மானவர்கள். அப்பா பட்டை சாராயம் குடிக்கும் ஒரு பிராமணர். 

இவரைக் கிழக்குரங்கு என்று அழைக்கும் மகன் குடும்பத்தில் பதியாமல், பொறுப்பில்லாமல், படிப்புவராமல் இஷ்டப்படி சுற்றும் மகன். இவன் தன் அனுபவங்களை அலட்சியமாகச் சொல்லிக் கொண்டு வருகிறான். தான் சந்திக்கும் வித வித மனிதர்களை, அவர்கள் நல்லவர் கெட்டவர் என்று பாகுபடுத்தாமல் அவர்கள் குணங்களை விமர்சனம் செய்யாமல் நேராகச் சொல்லிக் கொண்டு போகி றான். அவன் உடன் பிறந்தவர்கள் இருவர். இலங்கைக்குச் சென்று விட்ட முகம் தெரியாத குபேரன் ஒருவன், வேசி மகளைச் சம்பிரதாயப்படி கல்யாணம் செய்து கொண்டு ஒதுங்கிப் போய் விட்டவன் இன்னொருவன். 

இரண்டு பெண்கள் பொருத்தமில்லாத விவாகங்களிலிருந்து விடுபட்டுத் திரும்ப வந்தவர்கள். இவன் சந்திக்கும் மனிதர்கள் யார் யார்? ஒரு ஐ. ஸி. எஸ். பெரியப்பா, ஒரு சமூக சேவகி- பைல்ஸ் ஆபரேஷனுக்கு உதவியாக இவனைத் தனியே அழைக்கிறாள்-ஒருகம்யூனிஸ்ட்-ஸ்டாலின் செத்ததற்கு ஒப்பாரி வைத்து அழுது விட்டுக் கட்சி மாறுகிறார். இவனுக்குச் கடைசியில் மனைவியாக வாய்த்த பெண் - உன் வக்கிரங்களைச் சமாளிக்க எனக்குத் திடம் உண்டு என்று சொல்லும் துணிவுள்ள பெண். 

எல்லோரும் தமிழ் நாவலுக்குப் புதிய மனிதர்கள். ஆனால் எல்லோரும் நம்பக் கூடிய பாத்திரங்கள்.  கதையின் இறுதியில் அப்பா இறந்தவுடன் அவர் மரணத்தின் எதிரில் மகன் மாறுகிறான்.  சாராயம் குடித்த கிழக் குரங்கு நிஜம் அப்பாவாக பரிணமிக்கிறார்.  அவருக்காக உண்மையாக வருத்தப்படுகிறான். 

இந்த நாவலின் நடை தமிழில் நிச்சயம் புதிது வார்த்தை சாதுரியமும் குழப்பமும் இல்லாமல் சாதாரண வார்த்தைகளை வைத்துக்கொண்டு விளையாடியிருக்கிறார் நகுலன்.

=====================


நிழல்கள்
பக்கங்கள்: 64
໙໙: 50
நகுலனின் கலைஊற்று மிக வளமானது எனும் நம்பிக்கையை இந்நாவல் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழின் இலக்கியத்தரமான நாவலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துக்கொள்ளும் இவ்வாசிரியர், எதிர்காலத்தில் நாம் எண்ணிப் பெருமைப்படத்தகுந்த சிருஷ்டிகளைப் படைத்துவிட்டார் என்றால், நான் ஆச்சரியம் அடையமாட்டேன். என் நம்பிக்கை பலித்து விட்டதை எண்ணித் திருப்திப்படுவதே அப்பொழுது என்னுடைய காரியமாக இருக்கும்.

- சுந்தர ராமசாமி

========================================================================================

கண்ணதாசன் பற்றி நெல்லை கண்ணன் 


=============================================================================================

சிறிய கவிதையில் கவிஞன் வாசகனை ஒரு மலையுச்சிக்கு ஒரு கழுகு தன் குஞ்சை எடுத்துச் செல்வது போல அழைத்துச்சென்று, அங்கே தொபுக் என்று போட்டு விடுகிறான்! கற்பனை உள்ள வாசகன் பறக்கிறான். இல்லாதவன் விழுந்து சாகிறான்" - ராபர்ட் ப்ளை


சுஜாதாவின் ஹைகூ கவிதைகள்.

வாடவில்லை.                                                                
மேசையில் 
கடதாசிப்பூக்கள்

விதைக்காமல் 
பழுத்தது 
நிலவு


தினம் புலம்பெயர்வால் 
முகவரி தேடுகிறது 
மேகம்


நாய்கள் 
குரைக்கவில்லை. 
பாதையில் இராணுவம்

சாயம் போகாமல் 
நனைந்தது 
வானவில்


ஏன் உடல் இளைத்தாய்? 
வயதான 
கருவாடே!


எதிரிக்கு வாழ்த்து அட்டை 
ஒட்டவில்லை 
முத்திரை

முத்தமிட்டாள் காதலி. 
எழும்பவேயில்லை 
பிணம்


பச்சைக் குழந்தை போல் 
உள்ளாடை அணிவதில்லை 
வெங்காயம்


என் மனத்திரையில் 
உன் நினைவலைகளாக 
காதல்

ஒரு காலை வேளை 
பல் துலக்கப்பட்டது 
சீப்பு

சுதந்திரதின விழாவில் 
வழங்கப்பட்டது 
கூண்டிலடைத்த வெண்புறா


சீக்கிரம் எழுந்து கொள். 
இன்றுனக்கு 
தூக்கு.


உலக வர்த்தக மையம் முன்னால் 
என்னைக் கைது செய்தது 
உன் புன்னகை


இடுப்பைப் பிடிக்கையில்
  சிலிர்க்காதே 
வெண்டிக்காயே!


சட்டெனக் குதித்தது 
நதிக்குள் 
நீர் வீழ்ச்சி


விபச்சாரி விரும்பவில்லை 
பல நிறங்களில் 
ரோஜாச் செடியை.

கிணற்றைப்போல் 
தொட்டிக்குள்ளும் 
நிலவு.

ஓ நயாகரா! 
என்னை நனைத்தது 
கண்ணீர்

கடிக்கும் கொசு 
அடிக்க மனசில்லை 
வெள்ளை ஆடை 

=================================================================================

கங்கை அமரனின் சுவாரஸ்யமான பேட்டி.  பேட்டி காணும் இளைஞர் மிகவும் விஷயம் தெரிந்தவராக இருப்பதோடு ரசனையுடன் அளவாக பேசுகிறார்.

================================================================================================

இப்படி எழுதிய ஜ ரா சுவும் கிளம்பி விட்டார்.   சுஜாதாவை மேலே இந்நேரம் பார்த்து பேசி இருப்பாரோ என்னவோ...  

அப்புறம்.... இந்த வாரம் சுஜாதாவாக இருக்கிறதே என்று கமெண்ட்  டைப் செய்பவர்களுக்கு...  இது தற்செயல்தான்!

கீழே இருப்பது 'பசுபதி பக்கங்களி'ருந்து எடுத்தது.

டியர் சுஜாதா,
தாங்கள் புறப்பட்டுப் போய் ஒன்பது வருடமாகிறது. இலக்கியத்தில் நீங்கள் வசித்த பகுதிக்கு இன்னும் யாரும் குடித்தனம் வரவில்லை.
எனது ஏக்கத்தின் பிரதிபலிப்பாக இந்த அஞ்சலி.
அய்யா சுஜாதா, உனக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து நாங்கள் மகிழவில்லை. சாஹித்திய அகாடமி சாத்திக்கொண்டது.
பத்மஸ்ரீ பதுங்கிக் கொண்டது. வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த வாத்தியாருக்கு கெளரவம் தர வக்கில்லை நமக்கு.
ஞான பீடத்தில் அவரை ஏற்றிப் பாராட்டும் ஞானம் நமக்கு முற்றவில்லை.
திருப்பாவை அருளிய ஆண்டாளும், திருப்புகழ் தந்த அருணகிரியும், தேசிய மகாகவி பாரதியும், தமிழ்த்தாய் தொலைத்துவிட்ட காப்பியச் சுவடிகளை, அவளுக்குத் தேடித் தந்த டாக்டர் உ.வே.சா.வும், பட்டங்களுக்காகப் பாடுபட வில்லை.
அவரது நட்பு வட்டாரத்தின் விஸ்தீரணம் பலப் பல ஹெக்டேர்கள். சுஜாதாவுக்கு நாடு பூரா பெரிய இடத்து ரசிகர்கள்.
ஆனால், தானொரு வி.ஐ.பி. என்ற எண்ணமே அவருக்கு எழுந்ததில்லை என்பதற்குச் சான்று வேண்டுமா? ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவன் ஓட்டலில் ஓர் ஒதுக்குப்புறமான சாளரத்தருகே நின்றவாறு மதிய நேர சிற்றுண்டியைப் பொறுமையாக ஸ்பூனினால் சாம்பாரின் கொத்துமல்லிகளையும், கறிவேப்பிலைகளையும் இதர ஜட வஸ்துக் களையும், சீராக எடுத்துத் தட்டின் ஒரு மூலையில் போடுவதைப் பார்த்திருக்கிறேன்.
அவரை அங்கே சந்தித்தபோது, அந்தக் கல்விக் கடலுடன் பேச அறிவார்ந்த வார்த்தைகளின்றி மிகச் சாதாரண வசனங்களை, ‘எப்படி யிருக்கீங்க, சவுக்கியமா, டிபன் இங்கேதான் சாப்பிடுவீங்களா?’ என்பது போன்ற குழந்தைத்தனமான கேள்விகளையே கேட்டிருக்கிறேனென்றாலும், அவரது உயிரைக் காப்பாற்றிய ஓர் அதி உன்னதமான சாகஸத்தையும் நான் செய்திருக்கிறேன்.
அவர் குமுதத்தில் எழுதிய ‘ சிவப்பு கறுப்பு வெளுப்பு’ என்ற ஓர் அற்புதமான சரித்திர நாவலில் சில வரிகள் ஒரு சிலரின் மனம் புண்படுமாறு அமைந்திருந்ததாக ஒரு கலவரம் ஏற்பட்டது.
‘எங்கே அந்த சுஜாதா?’ என்று வெறித் தனமான கூட்டம் அன்று குமுதம் அச்சகத்துக்குள் மூர்க்கத்தனமாகப் பிரவேசித்தது.
ஏறக்குறைய முற்றுகை இட்டுக் கொண்டிருந்தது.
‘சுஜாதாவை அனுப்பு வெளியே’ என்று வெறிக் கூச்சல்.
எவருடைய மனத்தையும் புண்படுத்தக்கூடிய விஷயங்களைப் போட விரும்பாத நெறியைக் கடைப்பிடித்து வந்த குமுதம் ஆசிரியர் அவர்கள், மேற்படி தொடர்கதையை அன்றே, அங்கே அப்பொழுதே நிறுத்திவிட்டு, அதை நிறுத்திவிட்டதான அறிவிப்பையும் மாலைப் பத்திரிகையான ‘மாலை முரசு’வில் அறிவிப்பு விடும்படி செய்தார்.
மாலை முரசு பத்திரிகைக்கு விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு, அந்த சமாசாரத்தை குமுதம் அச்சகத்தில் சொல்லிவிடலாம் என்று நான் அச்சகம் வந்தால், காம்பவுண்டு பூரா கோபக் கும்பல் கைகளில் கிடைத்த உருட் டுக் கட்டைகள் சகிதம்.
உள்ளே செல்ல முடியாது. கதவு உட்புறம் தாழிடப்பட்டுள்ளது. ‘சரி, வாபஸாவதே விவேகம்’ என்று திரும்புவதற்குள் சிலர் (என்னையும் என் உதவி ஆசிரியர் பணியையும் அறிந்த வர்கள்) ‘அந்த ஆளைப் பிடியுங்கள்’ என்று குரல் கொடுத்ததும், ஒரு கும்பல் என்னைச் சூழ்ந்து கொண்டு ‘சுஜாதாவை வெளியே வரச் சொல். இல்லாவிட்டால் குத்திவிடுவோம், கொன்று விடுவோம்’ என்று மிரட்டினர்.
தொடர்கதை எழுதுகிறவர்கள் பத்திரிகை ஆபீஸுக்குள்தான் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான புத்திசாலித்தனம் கும்பலில் சிலருக்கு.
நான், ‘சுஜாதா இங்கிருந்து எழுதமாட்டார். வெளியூரிலிருந்து எழுதுவார்’ என்றேன்.
அதுகள் என் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘எந்த ஊர் என்று சொல்லு. அட்ரஸ் என்ன? எங்க ஆளுங்க எல்லா ஊரிலும் இருக்காங்க. கிழிச்சுடணும் கிழிச்சு’ என்று ஆவேசப்பட்டார்கள்.
நான் நிதானமாக சட்டையை விடுவித்துக்கொண்டு நிதானமாக யோசித்து., நிதானமாக ஒரு பொய்யான முகவரியை மனசுக்குள் சிருஷ்டித்து மனப்பாடம் செய்துகொண்டு, அவர் களிடம் இன்ன நம்பர், இன்ன தெரு, பெங்களூர் என்றேன்.
குறித்து வைத்துக் கொண்டு கும்பல் கலைந்தது.
குமுதம் ஆசிரியருக்கு சுஜாதாவின்மீது அளவு கடந்த பிரியம், மதிப்பு, பாசம்.
சுஜாதாவைப் பாராட்ட எடிட்டர் எஸ்.ஏ.பி.க்கு எப்போதுமே வெகு பிரியம். ஆனாலும் அடிக்கடி அவருக்கு போனில் தன் அபிப்பிராயத்தைக் கூறிக் கொண்டிருக்கமாட்டார். ரசனை தாங்க முடியாதபோது ரா.கி.ர. அவர்களிடம், ‘அவருக்கு வேணும்னா லைன் போடறீங்களா, ‘நான் பேசறேன்’ என்று தொலைபேசியில் கூப்பிடச் செய்து பேசி மகிழ்வார்.
ஒரு கெட்டிக்கார எழுத்தாளனது மதிப்பு, ஒரு பத்திரிகை முதலாளியின் அந்தஸ்தைவிடவோ, சினிமா டைரக் டரின் அந்தஸ்தை விடவோ உயர்ந்தது என்பது போன்ற சுயமரியாதை உடைய வராகவே சுஜாதா கடைசி வரை இருந்தார்.
இத்தனைக்கும் அவர் தன் விளம்பரத்துக்காக ஓர் உள்ளங்கை அளவு சின்னத் தம்பட்டத்தைக் கூட உபயோகித்தது இல்லை. அவரது ஓரோர் எழுத்துமே அவரது புகழைப் பாடின. இனியும் பாடிக்கொண்டிருக்கும்..
- பாக்கியம் ராமசாமி
( நன்றி: குமுதம் 12)

=================================================================

1962 ல் வெளியான நெஞ்சில் ஒரு ஆலயம் ஒரு ட்ரெண்ட் செட்டர்.  இதன் பாடல்கள் கண்ணதாசனால் எழுதப்பட்டு, விஸ்வநாதன் ராமமூர்த்தியால் ஒரே நாளில் ஏழு பாடல்களும் படமாக்கப்பட்டனவாம்.

சிவாஜி தி மு கவை விட்டு விலகி இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்த சமயம் அது.  அறிஞர் அண்ணா ஒரு பொதுக்கூட்டத்தில் "சிவாஜி..  எங்கிருந்தாலும் நீ வாழ்க" என்று வாழ்த்தியதைக் கேட்ட கண்ணதாசன் அதையே பல்லவியாக வைத்து எழுதிய பாடல்.  ஏ எல் ராகவன் குரல்.

125 கருத்துகள்:

  1. தந்தையர் தின ஸ்பெஷலா என்ன?
    தடுக்கி விழுந்தால் ஒரு அப்பாவின் மீது தான் விழ வேண்டும் போல நிறைய அப்பாக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... அப்படியா.. கவனமில்லை! பார்க்கிறேன்.

      இல்லையே.. இரண்டு விஷயங்கள் தந்தை சம்பந்தப்பட்டவை. அவ்வளவுதானே!

      நீக்கு
  2. கோகிலா என்ன செய்து விட்டாள்? -- பழைய நினைவுகளை மீட்டியது.
    நிறைய சொல்லலாம். சொல்பவர்களே எல்லாருமாகி கேட்பவர்கள் இல்லாத காலம் இது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  நானும் ஏதோ சொல்ல நினைத்து, அப்படியே விட்டு அடுத்த விஷயத்துக்கு சென்று விட்டேன்.  அவசரம்!  இதை வைத்து ஒரு பதிவே எழுதலாம். சொல்லப்போனால் அங்கு உங்களை நான் குறிப்பிட நினைத்து மறந்து போனேன்.

      நீக்கு
  3. சிவாஜி அல்ல அது ஈ.வி.கே. சம்பத்.
    எங்கிருந்தாலும் வாழ்க -- படத்தலைப்புக்கான வரி கொண்ட பாடல் அவ்வளவே.
    முக சொன்ன காலமும் இந்தப் படம் ரிலிஸான காலமும் வெவ்வேறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?  அங்கு போட்டிருந்ததைப் பகிர்ந்தேன்.  அண்ணாவுக்கு சிவாஜி எல்லாம் ஒரு பொருட்டே இல்லையோ? 

      அந்நாளில் கருணாநிதியைக் காட்டிலும் பிரபலமானவர்களாக சம்பத், நெடுஞ்செழியன் போன்றோர் இருந்தனர் என்று படித்திருக்கிறேன். 

      நீக்கு
    2. எங்கிருந்தாலும் வாழ்க -- அண்ணா சொன்னது.
      நானும் அண்ணாவுக்கு பதில் முக என்று தவறாக குறிப்பிட்டு விட்டேன். ஸாரி.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  5. இன்றைய பகுதிகள் பழைய வியாழன் பதிவு போலச் சிறப்பாக வந்துள்ளது.

    படிக்கும்படியாக இருக்கும் சுந்தர ராமசாமியை மெனெக்கிட்டு தட்டச்சு செய்த நீங்கள் தினமணியில் வைத்தியநாதன் எழுதியதைத் தட்டச்சு செய்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.  நன்றி. 

      அப்படித் தட்டச்சியது எங்கோ இருக்கிறது.  தேடவேண்டும்.

      நீக்கு
    2. என்ன நெல்லை? பசுவய்யாவைத் தெரியாது உங்களுக்கு?

      நீக்கு
    3. // ள் தினமணியில் வைத்தியநாதன் எழுதியதைத் தட்டச்சு செய்திருக்கலாம். //

      இப்போது கொடுத்திருக்கிறேன்.

      நீக்கு
    4. 2021 ல் ஒருமுறையும், இந்த வருடமே பிப்ரவரியில் ஒரு முறையும் நானே ஏற்கனவே இரு முறை இதைப் பகிர்ந்திருக்கிறேன்.  எனவேதான் படம் மட்டும் வெளியிட்டேன்.

      நீக்கு
    5. தினமணி வைத்யநாதன் சொன்னதும், பாக்கியம் ராமசாமி எழுதி இருப்பதும் பல முறை படிச்சது தான். உங்க அப்பாவைப் பத்தி வைத்யநாதன் சொன்னது ஆச்சரியமாய் இல்லை. ஆனால் கீரன் மரியாதை செய்வதைப்பார்த்ததும் ஆச்சரியம் அடைந்தேன். இவ்வளவு பிரபலமானவர் ஏன் எனக்கு முன்னரே தெரியவில்லை? என நினைத்தேன். மஹாபாரதம் அதுவும் வில்லி பாரதம் என்றால் அது கீரன் தான் என ஓடி ஓடிக் கேட்டிருக்கோம். அதெல்லாம் ஒரு காலம்.

      நீக்கு
    6. நான் பள்ளிப்பாடங்களிலும் பொது அறிவிலும் சிறப்பாக இருந்ததுக்குக் கிருபானந்தவாரியார், கிரிதாரி பிரசாத், ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் மற்றும் புலவர் கீரன் போன்றோரே காரணம். எங்க பள்ளியில் கூட ஒரு தரம் தமிழ்க் கலை நிகழ்ச்சியில் கீரனை அழைத்துச் சொற்பொழிவு செய்ய வைத்திருந்தார்கள்.

      நீக்கு
    7. வாங்க கீதா அக்கா..  ஆமாம்..  ஏற்கனவே இரண்டு முறை ஷேர் செய்திருக்கிறேனே..  

      அது கீரனா, திருச்சி கல்யாணராமனா என்கிற சந்தேகத்தோடேயே வெளியிட்டேன்.  பானு அக்கா அது தி க என்று சொல்கிறார்.  இருவருடனுமே அப்பாவுக்கு நல்ல பழக்கம் உண்டு.  வாரியார் எங்கள் வீட்டுக்கு ஒருமுறை வந்திருந்தார்.

      நீக்கு
    8. No confusion.  அது திருச்சி கல்யாணராமன்தான்/

      நீக்கு
  6. நகுலனை சுஜாதா பாராட்டியிருப்பது அர்த்தமுள்ளது.
    நகுலனைப் பாராட்ட வேண்டுமானால் வித்தியாசமான சிந்தனை வேண்டும்.
    பரவலான வாசகர்களைக் கவர தன் எழுத்துப் போக்கையே சுஜாதா மாற்றிக் கொண்டிருக்கிறார் போலிருக்கு. யார் கண்டார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் எழுத்துப் போக்கு எந்த இடத்தில மாறத்தொடங்கியது என்கிற விவரங்களை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
    2. கணையாழி to குமுதம் காலமாக இருக்கலாம்.
      எங்களுக்கு இரவு. பின்னால் சாவகாசமாக பேசலாம்.

      நீக்கு
    3. எனக்கென்னவோ ஆதாரமான அவர் பாணி கடைசிவரை மாறாமல் இருந்தது என்று தோன்றும்.

      நீக்கு
    4. கணையாழியில் கொஞ்சம் இலக்கியவாடை அடித்தது. ஆனால் நாளாவட்டத்தில் சுஜாதா அவர்கள் அந்தப் போக்கைக் கைவிட்டுவிட்டுப் பொது ஜன, ஜனரஞ்சகமான எழுத்தாளர் வரிசையில் சேர்ந்துவிட்டார். கணையாழி அந்தச் சமயம் நிறுத்தப்பட்டுக் கணையாழி கஸ்தூரி ரங்கன் சென்னைக்கு வந்து வேறே ஏதோ பத்திரிகையில் பொறுப்பேற்றதும் காரணமாக இருக்கலாம். பின்னர் சில வருடங்கள் நின்றே போன கணையாழி பின்னர் நாங்க வடக்கே இருக்கும்போது திரும்ப வந்ததாகச் சொன்னார்கள். இப்போவும் வருது, இடதுசாரி வாசனைகளோடு. தனித்தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்படுகிறதுனு நினைக்கிறேன். மின் தமிழில் இருந்து வெளியே வந்த சமயம் அதுவும் வர ஆரம்பிச்சதுனு நினைவு.

      நீக்கு
    5. கஸ்தூரிரங்கன் உட்பட இன்னும் ஓரிருவர் முஸ்தபா என்கிற  தி ஜா ஆண்டாளு என்கிற பெயரிலும்,  இந்திரா பார்த்தசாரதி பா...... (வார்த்தை நினைவுக்கு வரவில்லை) ஜீயர் என்கிற பெயரிலும் சில காலம் கடைசிப் பக்கங்களை நிரப்பினர்.

      சுஜாதாவின் ஆரம்பகால க க எழுத்தில் இலக்கியவாடை அடித்ததாக நீங்கள் நினைப்பவைகளை பகிரக் கோருகிறேன்.

      நீக்கு
    6. ரொம்பக் கஷ்டம் ஸ்ரீராம். முதல்லே அவ்வளவெல்லாம் நினைவில் இல்லை. கணையாழிப் பத்திரிகை நான் பள்ளி மாணவியாக இருந்தப்போவில் இருந்தே வந்து கொண்டிருந்தது. கஸ்தூரி ரங்கன் அப்போ நியூயார்க் டைம்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்தார்னு நினைக்கிறேன். சித்தப்பா சென்னை தி.நகர் வீட்டிலிருந்து அதன் பொறுப்பாசிரியராக இருந்து வந்தார். சுமார் 75 வரையுமே என்னமோ கஸ்தூரி ரங்கனின் மேற்பார்வையில் வந்தது. பின்னர் பல கைகள் மாறிச் சில ஆண்டுகள் நடுவில் நின்று பின்னர் ஏதோ ஒரு அறக்கட்டளை ஏற்று நடத்திப் பின்னர் இப்போது 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்தப் புதிய ஆர்வலர்களால் அதே பெயரில் வருகிறது.இப்போதைய கணையாழிக்கும் அறுபது/எழுபதுகளில் இருந்த கணையாழிக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். கஸ்தூரி ரங்கன் இருந்திருந்தால் அழுதிருப்பார். அந்தப் பழைய கணையாழி இதழ்கள் சித்தப்பாவிடமிருந்து வாங்கிக் கொண்டிருக்கணும். ஆனால் நாங்க தான் வடக்கே இருந்துட்டோமே! சித்தப்பா யாருக்கோ அவற்றைக் கொடுத்துட்டார். பழைய விக்டன், கல்கி இதழ்களும் அப்படித் தான். :( தில்லானா மோகனாம்பாள் தான் ஏபிஎன்னே கேட்டு வாங்கிக் கொண்டு போனார் என்பார்கள்.

      நீக்கு
    7. அப்போ பாலகுமாரன், சுப்ரமண்யராஜூ, இந்துமதி மூவரின் பங்களிப்பும் அருமையாக இருக்கும். பாலகுமாரன் ஏனோ பின்னால் ஒதுங்கிக் கொண்டார். சுஜாதாவோடு ஒத்துவராததும் ஒரு காரணமாக இருக்கலாம். சுஜாதாவை இவர் தனக்குப் போட்டியாக நினைச்சுட்டார் போல! சுப்ரமண்யராஜூ தான் வண்டி விபத்துக்குள்ளானதில் இறந்துவிட்டார். அதுவும் பாலகுமாரனைப் பார்த்துட்டுப் பேசிட்டுத் திரும்பிப் போகும்போது. பின்னர் இவங்க பிர்ஞ்சுட்டாங்க. இந்துமதி வேறே லைனில், பாலகுமாரன் வேறே லைனில். ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாகவே காட்டிக் கொண்டதில்லை.

      நீக்கு
    8. நீங்கள் சொல்லி இருப்பது அத்தனையும் நான் 99 சதவிகிதம் அறிந்திருக்கிறேன்.

      நீக்கு
    9. ஹிஹிஹி, ரொம்பவே போர் அடிச்சுட்டேன் போல! :)))))) சகிச்சுக்குங்க/ வேறே வ்ழி?

      நீக்கு
    10. அதெல்லாம் இல்லை..  நீங்களா அப்படி நினைச்க்கறீங்க...

      நீக்கு
  7. புலவர் கீரனுடன் அப்பா...
    மேன்மக்கள்...

    பதிலளிநீக்கு
  8. ஜவுளிக்கடைச் சிப்பந்திகள் பாவம். எனக்கு பலவற்றை அவங்க எடுத்துப் போடுஙதே பிடிக்காது. கூடாது, நானே புடவை நிறத்தைப் பார்த்துச் சொல்லறேன், பிறகு காண்பிங்க என்று சொல்லிவிடுவேன்.

    அதே சமயம் சில கடைகளில் (துணிக்கடை அல்ல) கஸ்டமர்களுக்கு விளக்கம் சொல்லாமல் தங்களுக்குள் பேசிப் பொழுதுபோக்குபவர்களைப் பார்த்து கடுப்பாகியிருக்கேன். அலட்சியமா அது இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில கடைகளில் அந்த அலட்சியம் நானும் பார்த்திருக்கிறேன்.  இந்த மாதிரி கேட்கும்போதெல்லாம் பொறுமையாக எல்லாவற்றையும் எடுத்துக் போட்டு கடைபரப்பும் பொறுமைசாலிகள்தான்  அதிகம்.  எனக்கு ஒருமுறை பீரோவை ஒழுங்கு படுத்தவே சோம்பேறித்தனமாக இருக்கிறது!

      நீக்கு
    2. அவங்களுக்கு உட்காரக் கூட ஸ்டூலோ வேறே நாற்காலிகளோ கிடையாது. வேலை செய்யும் நேரம் முழுவதும் நின்று கொண்டே இருக்கணும். இது ரொம்பவே கொடுமை. :(

      நீக்கு
    3. சரவணா ஜெயச்சந்திரன் போன்றவற்றில் அப்படிதான்.  சில நகைக்கடைகளில். 

      நல்லி, குமரன், போத்திஸில் ஆளில்லாவிட்டால் அமரலாம்.

      நீக்கு
    4. சென்னை சில்க்ஸ், சுந்தரி சில்க்ஸ் போன்றவற்றிலும் அப்படித் தான். கீழே உட்கார்ந்து துணிகளைப் பார்க்கும் வழக்கம் இன்னும் சில கடைகளில் இருக்கின்றன. அப்படிப் பட்ட கடைகளில் பரவாயில்லை. இங்கே திருச்சியிலும் பழைய கடைகளான நாச்சிமுத்து இன்னும் சில கடைகள் வீதிகளில் இருப்பவை எல்லாம் இப்படித் தான். அதே கோட்டைப்பக்கம் வந்துவிட்டால் நின்னுட்டுத் தான் பார்க்கணும். நாயுடு ஹாலில் கேட்கவே வேண்டாம். ஆகவே நான் கவுன்டர் அருகே ஒரு நாற்காலியைக் கேட்டு வாங்கிப் போட்டுக் கொண்டு உட்கார்ந்துடுவேன்.

      நீக்கு
    5. // கீழே உட்கார்ந்து துணிகளைப் பார்க்கும் வழக்கம் இன்னும் சில கடைகளில் இருக்கின்றன. //

      வரமஹாலக்ஷ்மி

      நீக்கு
  9. ​அரட்டை மன்னன் நீங்கள்.
    சுஜாதாவின் ஹைக்கூ அவர் எழுதியதாக தோன்றவில்லை. இன்றைய பதிவை வாசித்தபின் மனதில் நிற்பது அப்பா, மற்றும் நகுலனின் நிழல்கள் பற்றி சுந்தர ராமசாமியின் விமரிசனம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் ஸார்... நன்றி. சுஜாதா ஹைக்கூ அவர் எழுதிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

      நீக்கு
    2. நகுலன் பெயர் கேள்விப்பட்டிருக்கேன். படிச்சது இல்லைனு நினைக்கிறேன். பார்க்கணும்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளிச் சிதறல்கள் பதிவு அருமையாக உள்ளது.

    ஜவுளி கடை படம் நன்று. பொறுமையில்லாதவர்கள் இவ்வேலைகளுக்கு வருவது கடினம். ஒரு தடவை பீரோவில் கலைந்து போன துணிகளையும், தினமும் துவைத்து காயவைத்த துணிகளையும் மடித்து சீராக வைக்கும் பணியே நமக்கு தினமும் ஒரு பெரும் வேலையாக உள்ளது. அங்குள்ள சிப்பந்திகள் நிலை சற்று கடினந்தான். தேவைக்கேற்ற தரத்தை, கலரை வரும் கஸ்டமர்களுக்கு எடுத்துத் தர அவர்கள் படும் சிரமங்கள் என் மனதையும் உறுத்தும். அதனால்தான் பெரிய பெரிய மால்களில் ஜவுளி கடைகள் உருவானாதோ என நினைத்துக் கொள்வேன். அங்கும் அவர்கள் படும் பாட்டை அறிவேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்..  அதேதான் நானும் சொல்லி இருக்கிறேன் கமலா அக்கா.   ஆமாம்..  இப்படி கடையில் பொறுமையாக பனி புரிபவர்கள் வீட்டில் எப்படி இருப்பார்கள்?

      நீக்கு
  11. ஒவ்வொரு வெள்ளியும் வித்தியாசமாக இருப்பது பாராட்டுக்குரியது.
    ஹைகூ கவிதைகள் சிறப்பு. "சீக்கிரம் எழுந்து கொள் இன்று எனக்கு தூக்கு" என்னும் ஹைகூ மனதை அசைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  12. நகுலனுக்கு சுஜாதா அளித்திருக்கும் பாராட்டும், சுஜாதாவை ஜ.ரா.சு. நினைவு கூர்ந்திருப்பதும், கங்கை அமரனின் பேட்டியும் ரசனைக்குரியவை.

    பதிலளிநீக்கு
  13. கோகிலா என்ன செய்து விட்டாள்? கதையை செவ்வாய் அன்று முழுமையாக வெளியிடுவீர்களா? இதைத் தழுவி எடுக்கப்பட்டதுதான் மௌனராகம் என்று எழுதியிருக்கிறீர்கள், 'மனைவியைத் தேடி' என்னும் சுஜாதாவின் கதையைத்தான் அலை பாயுதே என்று எடுத்தார். அதிலும் சுஜாதாவிற்கு எந்த க்ரெடிட்டும் கொடுக்கவில்லை மணிரத்தினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனைவியைத் தேடி கதைதான் அலைபாயுதே படம் என்று நானும் படித்திருக்கிறேன்.  படம் நான் முழுமையாக பார்த்ததில்லை.  கோகிலா என்ன செய்து விட்டாள் கதை சற்றே நீளமானது என்று நினைக்கிறேன்.  இரண்டு வாரங்களாக வெளியிட வேண்டி இருக்கலாம்.  முடிகிறதா என்று பார்க்கிறேன்.

      நீக்கு
    2. இந்தக் கதைகள் படிச்சிருக்கேன். முக்கியமாய் "மனைவியைத் தேடி" என்னிடம் உள்ள ஒரு கல்கி தீபாவளி மலரில் இருக்கு. கோகிலா என்ன செய்துவிட்டாள்? குறுநாவல் விகடனில் வந்தப்போப் படிச்ச நினைவு. ஆனால் நினைவில் இல்லை. :( பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

      நீக்கு
    3. ஆமாம்.  அது குறுநாவல்.  சிறுகதை அல்ல.  எங்கள் வீட்டு பைண்டிங்கில் உள்ளது.

      நீக்கு
  14. அப்பாவோடு இருப்பது கீரன் இல்லை, திருச்சி கே.கல்யாணராமன்.

    பதிலளிநீக்கு
  15. உங்கள் அப்பாவைப் பற்றிக் கலாரசிகன் எழுதியிருந்தது சிறப்பு.

    அதனால்தான் உங்களுக்கு எழுத்தில் ஆர்வம் எழுத்து இயல்பாக வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். ஆனால் 2009 க்குப் பின் கே ஜி ஜி என்னை வற்புறுத்தி எழுத அழைத்த பின் தான் எழுத ஆரம்பித்தேன். என்னை பாட சொன்னவர் ஒருவர் என்ற எம் ஜி ஆர் பாட்டு போல என்னை எழுதச் சொன்னவர் ஒருவர்...!

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. ஆரம்ப காலத்தில் கேஜிஜியும் த்ரில்லர் கதைகளாக முக்கியமாய்ப் பேய்க்கதைகளாக எழுதுவார். அதுவும் அந்தப் பால்காரர் பற்றிய கதை ஒண்ணு. காலம்பர காஃபி குடிக்கும்போதெல்லாம் நினைவில் வந்து கொண்டிருந்தது. நிறையப் போட்டிகள் இருக்கும்.

      நீக்கு
  16. புடவைக் கடைச் சிப்பந்திகள்.... நமக்கு மற்றவர்களை மனிதனாக நடத்தத் தெரிந்திருக்கவேண்டும். நம் அதிருஷ்டம் நாம் வாங்கும் நிலையிலும் அவர்கள் எடுத்துப் போட்டுக் காண்பிக்கும் நிலையிலும் இருக்கிறோம், றார்கள்.

    பரிமாறுபவர்கள் டேபிள் துடைப்பவர்கள் வீட்டு உதவி செய்பவர்கள் என எளியவர்கள் பலரிடமும் ஒரு கண்ணீர் கதை இருக்கும். யாரையும் எளிதாக நினைக்கக் கூடாது.

    காஞ்சியில் புடவைக் கடை பெண் ஒருத்தி எனக்கு அங்கிருக்கும் சுரஹரீஸ்வர்ர் கோயில் பற்றிச் சொல்லி நான் சென்று தரிசனம் பெறக் காரணமாக இருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  எனக்கும் உங்கள் கருத்தில் உடன்பாடு.  அனுபவங்களும் உண்டு.

      நீக்கு
  17. 26.6.26 அன்று என்னுடைய வார்ஷிக பிறந்த நாள்(தமிழ் மாதத்தில், நட்சத்திரம்). வயதில் மூத்தவர்களுக்கு என் நமஸ்காரங்கள் __/\__ __/\__ __/\__
    Palindrome ஆக வந்திருக்கும் நாளில் Palindrome பிறந்தநாள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசேஷம்தான்.    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

      நீக்கு
    2. Blessings and prayers are with you.@Banumathy Venkateswaran.

      நீக்கு
    3. சிறப்பானதொரு செய்தி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி.

      நீக்கு
  18. சமீபத்தில் அந்தபான் ஹோட்டல் ஓனர் (நாங்கள் தங்கியிருந்த இடம்) அவருக்கு 75 வயது இருக்கலாம், வாழ்க்கையைப் பற்றியும் மனிதர்கள் ஜாதி இனம் பற்றியும் பல கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். என்ன விசாலமான மனம் என நினைத்துக்கொண்டேன் (உ.பிரதேசம். ஹிந்தியில் பேசினார். ஒரு குன்ஸா புரிஞ்சிக்கிட்டேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்ததை புரிந்தவரை ஏதாவது எழுத முயற்சிக்கலாமே...

      நீக்கு
  19. வாடாத மலரும்
    உண்டல்லவோ
    பிளாஸ்டிக் பூ.

    அனுமனைப் பார்த்து
    சிரித்தது
    வெண்ணிலா

    பாஸ்போர்ட் இல்லை
    ஆதார் இல்லை
    எங்கும் செல்லலாம்
    முகில்

    நாய்கள் குறைக்கவில்லை
    கடிக்கவில்லை
    இராணுவ ரோபோக்கள்.

    மழையில் நனைந்தும்
    புதுப்பொலிவுடன்
    வானவில்

    மீன்களுக்கும் உண்டு
    மம்மி
    கருவாடு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸ்போர்ட் ஆதார் இல்லை 
      எங்கும் செல்லலாம் 
      முகில் 

      மூன்று வரிக்குள் அடக்கவேண்டி!  

      ஆனாலும் எல்லாமே நன்றாய் இருக்கின்றன.

      நீக்கு
    2. தங்கள் ஹைக்கூ அருமை. ரசித்தேன். .

      நீக்கு
  20. புலவர் கீரன் என்று போட்டு என்னையும் குழப்பி விட்டீர்கள்...
    இத்தனைக்கும் புலவர் கீரன் அவர்களைப் பார்த்திருக்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும். கவனக்குறைவு.

      நீக்கு
    2. அதே தான். நானும் பார்த்திருக்கேன். கீரன் திடீரென இறந்து போனதால் இது எப்போ எடுத்திருப்பாங்க என்னும் எண்ணமும் இருந்தது தான். ஆனாலும் பொதுவாகவே எனக்கு அடையாளக் குழப்பம் இருப்பதால் புரியலை. ஸ்ரீராமையே யார்னு கேட்கும் ஆள் நான். அதே அவர் பாஸை எளிதாக அடையாளம் கண்டு கொள்வேன். :))))))

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    சுஜாதா அவர்களின் ஹைக்கூ கவிதைகள் நன்றாக உள்ளது. ரசித்தேன். அவரைப்பற்றிய பாக்கியம் ராமசாமி அவர்களின் கட்டுரை படித்து தெரிந்து கொண்டேன்.

    /தொடர்கதை எழுதுகிறவர்கள் பத்திரிகை ஆபீஸுக்குள்தான் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான புத்திசாலித்தனம் கும்பலில் சிலருக்கு./

    இதைப்போன்ற பல வரிகளை ரசித்தேன்.

    சுஜாதா அவர்கள் நகுலனைப்பற்றி எழுதிய கட்டுரையும் அருமை. சுஜாதா அவர்கள் காலத்தால் மறக்க முடியாத நல்ல எழுத்தாளர். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  ஜராசுவையும் நகுலன் பற்றிய சுஜாதா எழுத்தையும் தாராளமாக ரசிக்கலாம். 

      நீக்கு
  22. கீரன் அவர்களைப் போல இல்லையே என அப்போதே
    நினைத்தேன்...

    பதிலளிநீக்கு
  23. அதே தான். நானும் பார்த்திருக்கேன். கீரன் திடீரென இறந்து போனதால் இது எப்போ எடுத்திருப்பாங்க என்னும் எண்ணமும் இருந்தது தான். ஆனாலும் பொதுவாகவே எனக்கு அடையாளக் குழப்பம் இருப்பதால் புரியலை. ஸ்ரீராமையே யார்னு கேட்கும் ஆள் நான். அதே அவர் பாஸை எளிதாக அடையாளம் கண்டு கொள்வேன். :))))))

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    தங்கள் அப்பாவின் சிறப்புக்களை தொகுத்து தந்திருப்பதற்கு மிக்க நன்றி. நானும் தங்கள் அப்பாவுக்கு முத்து மாலை பரிசாக தருபவர் படத்தைப் பார்த்ததும் திருச்சி கே கல்யாணராமன் போல் இருக்கிறதே என நினைத்தேன்.இவரின் உரையாடல்களை முன்பு தினமும் தவறாது டி. வியில் கேட்போம். சிறப்புடன் எழுத்துலகில் தன் ஆற்றலை பகிர்ந்து வந்துள்ள உங்கள் தந்தைக்கு என் நமஸ்காரங்கள்.

    அந்த ஆற்றல் தங்களிடம் உள்ளது. அதன் பலனறித்து உங்களை ஊக்குவித்த உங்கள் மாமாவுக்கும் என் மனமார்ந்த நன்றியும்,நமஸ்காரங்களும். தங்களது பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. இங்க கொடுத்துக்கறேன், நம்ம தளத்துல அடுத்த பதிவு வந்திருக்கிறது.

    "என்னது? அடுத்த பதிவா? கீதாவா? சுறு சுறுப்பாகிட்டாளா" என்று உங்க குரல் எல்லாம் சத்தமில்லாம கேக்குது!!

    இங்கு இன்னும் நம்ம தளம் அப்டேட் ஆகவே இல்லை...அதனால்தான் இங்கு பார்த்து வருபவர்களுக்காக..

    https://thillaiakathuchronicles.blogspot.com/2026/06/common-coot-eurasian-coot-2.html

    முடிஞ்சா வந்திட்டுப் போங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அல்ரெடி வந்து வந்துட்டேன்.

      நீக்கு
    2. யெஸ்!!! ஸ்ரீராம் நானும் மெதுவா மெதுவா பதில்களும் கொடுத்துவிட்டேன்!!!! ஹிஹிஹி...

      கீதா

      நீக்கு
  26. ஓ!! பானுக்கா, மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. ஜவுளிக் கடைகளில் வேலை செய்பவர்கள் குறிப்பாக இப்படி எடுத்துப் போட்டுக் காட்டுபவர்கள் பாவம் பவாம்!! நம்ம வீட்டுல் ஒரு நாள் துணி ஷெல்ஃபை சுத்தம் செய்து சரியா அடுக்கி வைக்கறதுக்கே போதும் போதும்னு ஆயுடுது....அப்ப தினமும் இந்த வேலை அதுவும் சும்மா மடிக்க முடியாது மடிப்பு கலையாமல் அதை பாந்தமாக மடிச்சு வைக்கணும்...ரொம்பக் கஷ்டமான வேலை.
    ஆனா பாவம் அவங்க. அவங்களுக்கு வயிற்றுப் பிழைப்பு பாருங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்னவோ உண்மைதான்.  நமக்கு ஒருநாள் கூத்து.  அவர்களுக்கு தினசரி கடமை.

      நீக்கு
  28. ஒரு கடையில் சென்னையில் நல்ல படிச்ச ஒரு இளைஞர் இந்த வேலையில் இருந்தார். பாவம் அவருக்கு, என்ன ஸாரி என்ன மெட்டீரியல் எதுவும் தெரிந்திருக்கவில்லை....அப்போதுதான் புதிது...வேலை கிடைக்கவில்லை கிடைக்கும் வரை இப்படி செஞ்சுக்கலாம் வீட்டு வறுமையாம் அதனால் வந்திருந்தார். படிப்பு என்ன தெரியுமா? எம் எஸ் ஸி கணக்குப்பாடம். பேங்க் வேலை மத்திய அரசு வேலைக்கான தேர்வு எல்லாம் எழுதினாராம் அதுவரை கிடைக்கவில்லை. இப்பவும் எழுதியிருக்கிறேன்....கிடைக்கிறதா என்று..நான் வாழ்த்தினேன்.

    ஜவுளிக் கடைக்குப் போவதே அபூர்வம் புடவை கட்டுவதில்லையே அப்படியே போனாலும், அவர்களை எடுத்துப் போடச் சொல்வதில்லை. முதலிலேயே சொல்லிவிடுவதுண்டு என்னைப் பார்க்க விடுங்க, நான் சொல்வதை மட்டும் எடுத்துக் காட்டினால் போதும் என்று. அப்புறம் அவங்களா, இன்னொன்னு இருக்கு நலலருக்கும் பார்க்கறீங்களான்னு வற்புறுத்தினா மட்டும் காட்டச் சொல்வேன். பட்ஜெட்டும் சொல்லிவிடுவது வழக்கம்.

    ஏனென்றால் ஒவ்வொன்றாக அவங்க மடிச்சு வைப்பதைப் பார்க்கக் கஷ்டமாக இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறையபேர் - குறிப்பாக பெண் விற்பனையாளர்கள் ஜித்தாதி ஜித்தர்களாக இருப்பார்கள்.  எப்படியும் நம்மை ஒன்றிரண்டாவது வாங்க வைத்து விடுவார்கள். 

      நயமான பேச்சு, கொடுக்கும் மரியாதை  சிரித்த முகம் இத்யாதி இத்யாதி...

      நீக்கு
    2. ஆமாம் ரொம்பவே பெண் விற்பனையாளர்கள் ஒரு சில ஆண் விற்பனையாளர்கள் நம்ம இன்ட்ரெஸ்ட் பிடிச்சிட்டாங்கனா டக்குனு எடுத்துப் போடுவாங்க, ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  29. ஸ்ரீராம், கீரனா அவர்? வேறு ஒரு பரிச்சயமான முகம் போல இருக்கிறதே. பெயர் டக்கென்று வர மாட்டேங்குது...

    எனிவே, அப்புகைப்படம் பொக்கிஷம்.

    நான் உயரமோ குள்ளமோ....இந்த வரியில் ஆழ்ந்த விஷயம் இருக்கிறதே

    கீதா

    பதிலளிநீக்கு
  30. கலாரசிகன் விஷயம், முன்னரும் வாசித்த நினைவு. ஸ்கேன் கொடுக்காமல் விஷயம் மட்டும் சொல்லி வாசித்த நினைவு....
    இப்பவும் அந்த ஸ்கேன் வாசித்தேன். கூடவே இன்னொரு செய்தியும் இருக்கிறதே அதில்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அடுத்த மேட்டருக்கு தாவி விட்டார் வைத்யநாதன் ஸார்.

      நீக்கு
  31. அட! நகுலன் - டி கே துரைசாமி அவர்களின் கதை பற்றி சுஜாதா.

    என்ன பொருத்தம் சமீபத்தில் அழியாச்சுடர்களில் கதைகள் பார்த்த போது அறிந்தேன்...நகுலன் எனும் பெயர் கேட்டது போல இருக்கே என்று......டி கே துரைசாமி அவர்கள் திருவனந்தபுரம் மலையாளத்தாருக்கு அவர் ஆங்கிலப்பேராசிரியர்...தமிழ் மக்களுக்குக் கும்பகோணத்தைச் சேர்ந்த நகுலன் என்றுதான் அங்கு அறிமுகமே இவரைப் பற்றி!

    கதைகளும் நெட்டில் பார்த்தேன். நானும் வாசித்து நா ப கவிற்கும் கொடுக்கலாம் என்று

    இக்கதை கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. கூடவே சுந்தரராமசாமி அவர்களின் வரிகள் ஆர்வத்தைத் தூண்டுகிறது. எனவே கண்டிப்பாக வாசித்துவிட வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
  33. கண்ணதாசன் பற்றி நெல்லைக்கண்ணன் - நல்லா ரசித்துக் கேட்டேன் ஸ்ரீராம்...அதுல என்ன ஒரு லைன் பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்....ஆழ்ந்த தத்துவம்ல...அவர் சொல்வது போல்.

    செல்வங்கள் - உள்ளங்கள்....செம ஆழம்.

    இப்ப ஒன்னுமே இல்ல....உண்மைல...

    கீதா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன மாதிரி வரிகளுக்கு சொந்தக்காரர் அவர்...

      நீக்கு
  34. சுஜாதா கூட ஹைக்கூ பற்றி சொல்லியிருப்பார்ல எப்படி எழுத வேண்டும் என்று...கற்றதும் பெற்றதும் பகுதியில்.

    அவர் எழுதிய ஹைக்கூக்கள் எல்லாமே பிரமாதம்.

    நாய்கள்
    குரைக்கவில்லை.
    பாதையில் இராணுவம்

    சாயம் போகாமல்
    நனைந்தது
    வானவில்

    சுதந்திரதின விழாவில்
    வழங்கப்பட்டது
    கூண்டிலடைத்த வெண்புறா

    இவை செமையான எண்ணப் பிரதிபலிப்பு கற்பனையும்..வாசித்ததும் ஹையோ நச்! அப்படின்னு சொல்லத் தோன்றியது.

    இரு முறை வாசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  35. கங்கை அமரன் எந்த வித ஈகோவும் இல்லாம தன் அண்ணனைப் பெருமையாகச் சொல்கிறார்!

    இவரிடம் பிடித்ததே இதுதான். - ஒத்துமையா சேர்ந்திருக்கும் இந்த ரெண்டு தம்பிதான்....இடைல ரொம்ப பிரச்சனை வந்தது இல்லையா....

    நீதானா நிஜந்தானா - பாட்டு செம பாட்டு...

    அவர் சொல்வது போல் கங்கை அமரன் பாட்டுகளில் ராஜா நிறைய தெரிவார்!!!

    ரொம்ப ரசித்துக் கேட்டேன். கேட்கும் பையன் அடக்கி வாசிக்கிறார். சிலர் சும்மா உள்ள நுழைஞ்சு ரொம்ப எரிச்சல்படுத்துவாங்க பேசவிடாம.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பையன் ரொம்ப திறமைசாலியா தெரியுது.  நிறைய விஷயம் தெரியுது.  ரசனையான பேட்டி.  பிட்டு பிட்டா எடுத்து வச்சிருக்கேன்!

      நீக்கு
    2. ஓ! நான் அதை நெட்டில் கேட்டு பார்க்க எடுத்து வைச்சிருக்கேன்

      கீதா

      நீக்கு
  36. இந்த வாரம் சுஜாதாவாக இருக்கிறதே என்று கமெண்ட் டைப் செய்பவர்களுக்கு// me not in the list!!! ஹிஹிஹி

    பின்ன இதெல்லாம் எவ்வளவு சொன்னாலும் ரசித்து வாசிப்போமல!

    ஜரசு அவர்களின் இப்பதிவை முன்னரும் வாசித்த நினைவு இருக்கு ஸ்ரீராம் இருந்தாலும் மீண்டும் வாசிச்சுருவமே...கசக்குமா!

    சுஜாதா highly authentic மனிதர். அதனால்தான் அவர் அபப்டிமிளிர்ந்தார். கூடவே தலைக்கனம் சற்றும் இல்லாத வெகுஇயல்பான சாதாரணமான நம்மைப் போன்ற நம் அடுத்த வீட்டு மனிதர் போன்ற எளிமையான மனிதர். அதனால்தான் அவர் உச்சத்தைத் தொட்டார் இப்பவும் உச்சத்தில்!

    ஜராசு அவர்களின் பதிவும் சுவாரஸியம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யதேச்சையாகத்தான் அவர் சம்பந்தப்பட்டவையாக சேர்ந்தன.  பகிர்ந்து விட்டேன்!

      நீக்கு
    2. எப்பவுமே வாசிக்க சந்தோஷமாக இருக்கும் விஷயங்கள் ஸ்ரீராம். குறிப்பாக சுஜாதா பத்தின்னா...

      கீதா

      நீக்கு
  37. எங்கிருந்தாலும் வாழ்க - பாடல் ரொம்ப ரசித்த பாடல் இப்பவும் கேட்டாச்ஹ்கு. அது பிறந்த பின்னணியும் புதிய தகவல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஏதாவது கதை சொல்கிறார்கள். இதெல்லாம் எந்த அளவு உண்மையாக இருக்கும் என்று எனக்கு சந்தேகம் வரும்!

      நீக்கு
    2. எனக்கும் வந்தது ஸ்ரீராம் அந்த சந்தேகம்

      கீதா

      நீக்கு
  38. ஜவுளிக்கடை காட்சிகள் 70 % எடுத்துப் போட்டும் திருப்தி அடையாத ஜனங்கள் :(
    நாங்கள் சுட்டிக் காட்டுவதை மட்டும் எடுத்துப் போட்ச் சொல்வோம் அவற்றிலும் எல்லாவற்றையும் விரித்துக் காட்டும் படியும் கேட்பதில்லை அவர்களும் மனிதர்கள்தானே..

    அப்பாவின் பக்கம் பலதையும் அறிந்தோம்.

    சுஜாதா அவர்களின் ஹைக்கூ கவிதைகள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி..   நிறையபேர் உள்ளே அலமாரியில் இருக்கும் மொத்த துணிகளையும் எடுத்து விரித்துப் பார்க்கிறார்கள்.  பாவம் அவர்கள்.  நன்றி சகோதரி.

      நீக்கு
  39. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  40. துணிக்கடை ஊழியர்களின் சிரமத்தை கண்முன் கொண்டு வந்தது எழுத்து.

    மெளனராகம் குறித்த செய்தி புதிது.

    தங்கள் அப்பா குறித்து தினமணி ஆசிரியர் எழுதியிருப்பது, மற்றும் புலவர் கீரனுடன்... சிறப்பு!

    ஹைக்கூ பகிர்வு நன்று. இவற்றில் பெரும்பாலானவை சென்ரியு (Senryu) வகையைச் சார்ந்தவை.

    ஹைக்கூ பற்றி முன்னர் நான் பகிர்ந்த சிறு குறிப்பு “இங்கே”.

    எனது சமீபத்தியப் பதிவில் நீங்கள் இட்டிருந்த கருத்துகளையொட்டி பேசிக் கொண்டிருந்த போது ஐயப்பன் கிருஷ்ணன் (ஜீவ்ஸ்), இது குறித்து விரிவாக ஒரு தொடரை ‘பண்புடன்’ மின்னிதழில் எழுத உள்ளார். ஹைக்கூவின் வேர், இலக்கணங்கள், தற்கால ஹைக்கூ மற்றும் தவறான புரிதல்கள் ஆகியவற்றை அலசும் தொடர். நேரம் இருப்பின் தொடருங்கள்.

    பகிர்வுகள் யாவும் சுவாரஸ்யம். தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராமலக்ஷ்மி..  நன்றி.  பெரும்பாலும் வியாழன் பதிவுகளுக்குதான் வருவீர்கள்.  இன்று மாறுதலாக வெள்ளி பதிவுக்கு வந்திருக்கிறீர்கள்.  நன்றி.

      அது புலவர் கீரன் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளேன்.  அவர் திருச்சி கல்யாணராமன்!

      பண்புடன் இதழில் அநேகமாக ஞாயிறுகளில்தான் தொடர் வெளியாகும் என்று நினைக்கிறேன், எதிர்பார்க்கிறேன்.  நான் ஞாயிறுகளில் மட்டும் பண்புடன் மின்னிதழுக்கு வருகிறேன்!

      நீக்கு
  41. முன்னர் போட்ட கமெண்ட் வரவில்லை. இண்டர்னெட் ஸ்பீட் இஷ்யூ!

    வெள்ளி கதம்பம் வெகு சுவாரஸ்யம். உங்கள் அப்பா பற்றி மேலும் தகவல்கள் நன்று. சுஜாதாவின் ஹைக்கூ...!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!