காஞ்சிபுரம் இட்லி அடை!
ஹா............. ஹா................. ஹா................. என்ன பெயர் வைக்கிறதுனு யோசிச்சுட்டு இந்தப் பெயரை வைச்சுட்டேன். காஞ்சிபுரம் இட்லிமாவு மிஞ்சினதுனு சொன்னேன் இல்லையா? அதோட கூடக் கொஞ்சம் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஊற வைத்துக் கொஞ்சமாய் மி.வத்தல், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்து இந்த இட்லி மாவோடு சேர்த்துக் கொண்டு அடையாக வார்த்தேன். ஒருநாள் பாடு தீர்ந்தது. :)))) கீழே படங்கள் பார்க்கலாம்.

===========================================================================================
ஒரு பூனையின் புத்திமதி!
"ஐயோ உலகம் தினம் திமை அவ்வளவு சின்னதாகி கொண்டே வருகிறது! முதலில் ரொம்ப பெரிதாக நான் பயப்படும்படியாக அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே இருந்தேன். ஓடிய வண்ணம் இருந்தேன். இரண்டு பக்கத்து சுவர்களும் தூரத்திலயேதான் தெரிந்தன. ஆனால் அந்தச் சுவர்கள் எவ்வளவு வேகமாக நெருங்கி விட்டன? கடைசியாக அறைக்குள்ளேயே வந்து விட்டேனே..
அதோதெரிகிறதே பொறி, அதில் அல்லவா நான் போய் விழவேண்டும்?
நீ இந்தப் பக்கமாக திரும்பி ஓடினால் பொறியில் விழவேண்டியிருக்காது" என்று சொல்லிக்கொண்டே அதைப் பிடித்து விழுங்கி விட்டது ஒரு பூனை. - பிரான்ஸ் காஃப்கா - தமிழில் புதுமைப்பித்தன்.
======================================================================================
கோபுலுவின் படத்திலிருந்து இது யார், என்ன கதை என்று சொல்ல முடிகிறதா?
துணைக்கு இந்த இருவரின் படங்களையும் கொடுத்தால் யூகிக்க முடிகிறதா?
என்னதான் சொல்லுங்கள்.. ஒரு படம்தான் என்றிருந்தாலும், சில சமயம் ஒன்றுக்குமேல் இரண்டு படங்கள் இருந்தாலும் படம் பார்த்துக் கொண்டே கதை படிக்கும் சுவாரஸ்யம் தனிதான், இல்லை?






காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்... வணக்கம்.
நீக்குசில நேரங்களில் சில மனிதர்கள் கங்காவின் ஓவியத் தோற்றம் மா
பதிலளிநீக்குகங்கை எங்கே போகிறாள் கதையில் மாறி விடக்கூடாதல்லவா?
அதற்காகவே கோபுலு குமுதத்தில் வரைந்திருக்கிறார்.
ஆக, குமுதத்திற்கு ஜெயகாந்தனும் புதுசு கோபுலுவும் புதுசு என்று
ஆகிவிட்ட நேர்த்தி.
ஜெயகாந்தன் இதற்கு முன் குமுதத்தில் எழுதியது இல்லையா? இதுதான் முதலா?
நீக்குஆமாம். (முத்து உதிர்ந்தாற்போல.. கேஜிஜியிடமிருந்து கற்றது!)
நீக்குஅப்புறம் தொடர்ந்து எழுதினாரா?
நீக்குஇல்லை. அவரது எழுத்தும் குமுதம் வாசகர்களுக்கானது இல்லை.
நீக்குகங்கை எங்கே போகிறாள் கதை குமுதத்தில் தொடராக வந்தது என்று உங்கள் முக நூல் பதிவுக்கு நான் கருத்திட்டதிற்கு குங்குமம் என்றீர்கள், இப்போது பதில் பேசாமல் ஒப்புக் கொள்கிறீர்கள்..கர்ர்ர்!
நீக்குகோபுலுவின் முதல் படம். Repetition.
பதிலளிநீக்குஓகோ.. அடுத்த படக்கண்டுபிடிப்புக்காக இந்தப் படம் இரண்டாம் தடவை வந்திருக்கோ?
நீக்கு// கோபுலுவின் முதல் படம். Repetition. //
நீக்குபுரியவில்லை ஜீவி ஸார்.. மூன்றும் வெவ்வேறு படங்கள்தானே? FaceBook கொடு கன்பியூஸ் ஆகி விட்டதோ...
இரண்டாவத்ய் படத்தின் மேலிருக்கும்'-துணைக்கு இந்த இருவரின்........யூகிக்க முடிகிறதா' வார்த்தைகள்!..
நீக்குவார்த்தையைச் சொல்கிறீர்களா? படம் என்று நீங்கள் சொன்னதால் குழம்பி விட்டேன்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா. வணக்கம்.
நீக்குகாஞ்சிபுரம் இடலி கீதா சாம்பசிவம் அவர்கள்பதிவு தவறுதலாக இடம் பெற்று விட்டதோ?
பதிலளிநீக்குஅவர்களின் வேறு சமையல் குறிப்பு இடம் பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.
பதறி விட்டேன். இப்போ இவ்வளவு நேரம் ஆச்சே.. எல்லாவற்றையும் மாற்ற வேண்டுமா என்று சட்டென பதட்டமாகி விட்டது.
நீக்கு6.7.26 அன்று இந்த சமையல் குறிப்பு இடம் பெற்று இருக்கிறது ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஅடுத்த கமெண்ட்டையும் படித்து விட்டேன் என்பதால் பதட்டமின்றி கடக்கிறேன். ஏனெனில் சமீப காலங்களில் நான் இது மாதிரி தவறுகள் செய்கிறேன். "நானாக நானில்லை தாயே.." என்று பாடிக்கொண்டிருக்கிறேன்!
நீக்கு/"நானாக நானில்லை தாயே.." என்று பாடிக்கொண்டிருக்கிறேன்!/
நீக்குஇந்த மாதிரி பாடும் மனதுதான் எனக்கும் வருகிறது. ஒரே வயதாவதால் இருக்குமோ.? என்ன ஒன்று..! சட்டென உடனே நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. (சற்று தாமதமாக..அதற்குள் முன்னேறுபவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லிக் கொண்டேதான் நினைவை தட்டிக் கொடுத்து கொள்கிறேன். )
ஆஹா! நான் தான் சரியாக படிக்கவில்லை மன்னிக்கவும். அவசர குடுக்கை போல பின்னூட்டம் போட்டு விட்டேன்.
பதிலளிநீக்குஇது காஞ்சிபுரம் இட்லி அடை!
ஹிஹிஹி நன்றி கோமதி அக்கா... இது கீதா அக்காவின் திப்பிசங்களில் ஒன்று!
நீக்குகாஞ்சிபுரம் இட்லி அடை! செய்முறை குறிப்பு அருமை.
பதிலளிநீக்குமிகஞ்ச்சிமாவு படமும் மறு சேர்ப்பு படமும் அருமை.
திப்பிச சமையல் குறிப்பு என்று கீழே இருப்பதையும் படிக்காமல் விட்டு விட்டேன் ஸ்ரீராம்.
பரவாயில்லை அக்கா.. எல்லோருக்கும் இது நேரும்.
நீக்குகாஞ்சீபுரம் இட்லி அடை.... அட... மாவு மிஞ்சினால் அதை அடையாக்கிடறீங்களா.. பரவாயில்லையே
பதிலளிநீக்குஎன்ன ஒண்ணு.. உங்க வீட்டில் சாப்பிடும்போது, இது தொசைக்காக அரைத்ததா இல்லை வேறு ஒன்று தோசையாகுருமாறியிருக்கிறதா என்ற சந்தேகம் எழும்.
மிஸ்டர் எக்ஸ் ஒருதரம் ஒரு மருந்து கம்பெனிக்கு லெட்டர் எழுதினாராம் "அன்புள்ள மானேஜர் அவர்களுக்கு.. உங்கள் கம்பெனித் தயாரிப்பான முழங்கால் வலி தைலத்தை தேய்த்துக்கொண்டதும் தலைவலி போய்விட்டது. முழங்கால்வலி தைலத்தை எந்தப் பெயரில் விற்கிறீர்கள் என்று சொல்லவும்"
நீக்கு:-))
வாங்க நெல்லை!
: - ) )
நீக்குஎனக்கென்னவோ இந்த அடைமாவு கொஞ்சம் மிஞ்சி, அதில் ரவை, நுணிக்கிய வெங்காயம் சேர்த்து குனுக்கு போட்டிருப்பீங்கன்னு தோணுது.
பதிலளிநீக்கு'போட்டிருக்கலாம்னு தோணுது'ன்னு சொல்லுங்க.. அவங்கதான் அடை தட்டிட்டேன்னு படங்களோட கொடுத்துட்டாங்களே...!
நீக்குகோபுலுவின் படத்திலிருந்து இது யார், என்ன கதை என்று சொல்ல முடிகிறதா?//
பதிலளிநீக்குமுகநூலில் படித்து விட்டேன். இங்கு மேலும் படங்களை பார்த்து விட்டேன். நான் இந்த கதையை தொடர் கதையாக படிக்கவில்லை. நாவலாக வெளி வந்த போது படித்தேன். அம்மா வீட்டில் இருக்கிறது நாவல்.
யானும் அவ்வண்ணமே...!!
நீக்குகோபுலுவின் படங்கள் அருமை... கதைக்கு படம் இருந்தால்தான் சுவாரசியம். கற்பனை செய்ய எளிது.
பதிலளிநீக்குஆமாம்.
நீக்குபரம்புமலையின் வளம் அங்கு வசிப்போருக்கு தெரியாது என்பார்கள். அதே போலர் தான் காஞ்சீபுரம் இட்லியும். சொந்த ஊரில் அவ்வளவு ஃபேமஸ் கிடையாது.
பதிலளிநீக்குநம் அருகே உள்ள உயரங்கள் நமக்குத் தெரியாது என்று சொல்வதைப்போல...!!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குநலமே வாழ்க
பதிலளிநீக்குவாழ்க...
நீக்குகாஞ்சிபுரம் இட்லி அடை சிறப்பு..
பதிலளிநீக்குதிப்பிசத் திலகம் கீதா மாமியின் மற்றுமோர் திப்பிசம். இட்லி மாவை அடைமாவாக்கி இருக்கிறார்கள். அடுத்து அடைமாவை கொழுக்கட்டை மாவாக்குவார்கள் , கொழுக்கட்டையை சேவையாக்குவார்கள் என்று நீண்டு கொண்டே போகும் தானே.
பதிலளிநீக்குவம்பிழுக்க ஆசை . ஹி ஹி .
Jayakumar
ஹாஹாஹா ஜேகேசி சார், ;அடை மாவைக் கிளறிக்கொட்டி அதை உருண்டையாகப் பிடிச்சு உப்புமாக் கொழுக்கட்டை செய்திருக்கேன். அதே அடைமாவை இட்லித்தட்டில் வேக வைத்துக்கொண்டு டைமன்ட் மாதிரி வெட்டிக் கொண்டு, தாளிதத்துடன் சீராளமாகவும் பண்ணி இருக்கேன். உங்களுக்கு எது பிடிக்கும்? உப்புமாக் கொழுக்கட்டை அல்லது சீராளம்? திடீர்னு எதையானும் அனுப்பினாலும் அனுப்பிடுவேன். :))))
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் காஞ்சீபுரம் இட்லி, அடை திப்பிசப்பதிவு வெகு அருமையாக உள்ளது. படங்களும் நன்றாக உள்ளது. நானும் டிபன் வகையறாக்கள் செய்யும் போது இப்படித்தான் ஒன்றுடன் ஒன்றை கலந்து, வேறொன்றை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஒருநாள் செய்தது போலவே இல்லாமல், மறுநாள் வேறு மாதிரியான சிற்றுண்டி பக்குவங்கள், செய்முறைகள் கிடைக்கும் போது சாப்பிடுகிறவர்களுக்கும் வித்தியாசமாகத்தானே இருக்கும்..! சகோதரியின் திப்பிசங்கள் அருமையாக உள்ளது. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காஞ்சீபுரம் இட்லி அடை... என்னவோ புதிதாக இருக்கப் போகிறது என்று நினைத்து ஆசையாக வந்தால்....
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப்பின் தங்களுடைய இன்றைய பதிவைக்கண்டேன். யாரையும் புண்படுத்தாமல் நல்லதையே சுட்டி பாராட்டும் தங்கள் மனப்பாங்கு போற்றற்குரியது. என்னுடைய பெயரையும் சுட்டி பாராட்டியதற்கு நன்றி.
பதிலளிநீக்குJayakumar
இது யாருக்கு? பெயரைப்போட்டிருக்கலாமே!
நீக்குகங்கை எங்கே போகிறாள் -ஐ த் தொடராக பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன். கோபுலுவின் முத்தாய்ப்பான சித்திரங்கள் துணை! இம்மாதிரி நல்ல விஷயங்கள் பல நிகழ்ந்தவாறிருந்தன அந்தக் கால வார,மாத இதழ்களில். அதனால்தான் பழையப் பத்திரிக்கைகளைத் தூக்கி எறிய மனம் வந்ததில்லை..
பதிலளிநீக்குஇட்லியோ, வடையோ, அடையோ.. சாப்பிட ஏதுவாகத் தட்டில் வந்து விழுந்தால் .. சரி!
பதிலளிநீக்கு