நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 65
ராஜேந்திர விண்ணகரம் – மன்னார்கோயில் - திருநெல்வேலி
குலசேகர ஆழ்வார் பாடிய திவ்யப்பிரபந்தப் பாசுரங்களைக் காணாமல் போகிறோமே என்று மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் சனிக்கிழமை, வாரம் ஒரு பாசுரம் பகுதியில் பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானப்படுத்திக்கொள்கிறேன். சேர அரச வரலாற்றை விட்டுவிடக் கூடாது என்று தோன்றுகிறது. அதைச் சொல்ல வேறு இடம் எப்போது அகப்படும் என்பது தெரியவில்லை.
முதலாம் சேரமான் பெருமாளுக்குப் பிறகு (668-712) அவர் மகன் தம்பிரான் தோழர் பெருமாள், சுமார் 42 வருடங்கள் அரசாண்டார். (712-754) அவருக்குப் பிறகு அவரது தாயாதியான குலசேகரன், இரண்டாம் சேரமான் பெருமாள் என்ற பெயரில் அரசாண்டார் (754-798). பிறகு தன்னுடைய மகன் மார்த்தாண்ட வர்மனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, பக்தி மார்க்கத்தில் சென்று குலசேகர ஆழ்வார் என்ற அழியாப் புகழைப் பெற்றார்.
இரண்டாம் சேரமான் பெருமாள், 798ல் தன் மகன் மார்த்தாண்டவர்மனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த சமயத்தில், தாயாதிகளுக்குள் மனவேற்றுமை வந்தது. அப்போது சேர நாட்டில் யூதர்களும், சிரியன் கிறித்துவர்களும், முகமதியர்களும் நிறைய இருந்தனர். வாணிபத்திற்காக வந்த இவர்கள் சேர நாட்டில் பல இடங்களைக் கைப்பற்றி, தங்கள் பாதுகாப்பிற்காக படைகளும் வைத்திருந்தனர்.
இரண்டாம் சேரமான் பெருமாள், தமிழகம் சென்றுவிட்டதும், தாயாதியான பாஸ்கர வர்மன், நம்பூதிரிகள், யூதர், கிறித்துவர் மற்றும் முகமதியர்களிடம், தான் அரசாட்சிக்கு வந்தால் வேண்டும் உதவிகளைச் செய்வதாக வாக்களித்து, அரசாட்சியைக் கைப்பற்றி, மூன்றாம் சேரமான் பெருமாள் என்ற பெயரில் அரசனானான். உள்நாட்டுக் குழப்பத்தையும் கலகத்தையும் தவிர்க்கும் பொருட்டு, மார்த்தாண்ட வர்மனுக்கு சேரநாட்டின் தென் பகுதியான வேணாட்டைக் (திருவிதாங்கோடு) கொடுத்து, அதற்கு அரசனாக்கித், தன் கீழ் இருக்கும்படிச் செய்தான். பாஸ்கரவர்மன் செய்தது அரசியல் சூழ்ச்சி.
மார்த்தாண்டவர்மன் ஆட்சிக் காலம் 798 முதல் 850 வரை. பரம வைணவரான இரண்டாம் சேரமான் பெருமாளின் மகனாக இருந்தபோதும், சேர அரச பரம்பரையின் வழக்கப்படி, சைவ நெறியில் ஒழுகினான். இருந்தாலும் வைணவ மதத்திலும் வெறுப்புறாமல், திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி கோயிலைப் புதுப்பித்து, கோயிலுக்கு நிறைய தானங்கள் வழங்கியுள்ளான். அதனால் இவனுக்கு பத்மநாப தாசன் என்ற பட்டமும் ஏற்பட்டது.
தன் தந்தையைப் போலவே இரு மொழிகளிலும் சிறந்து விளங்கினான். கல்வியறிவு பெற்ற இவனுடைய சபையில், பல தமிழ்ப்புலவர்களும் வடமொழிப் புலவர்களும் சிறப்புப் பெற்றனர். வேணாடு வளங்களைப் பெற்றது. வாணிபம் சிறந்துவிளங்கியது. பகைவரைப் பற்றிய கவலை இன்றி அரசு செய்தான்.
இரண்டாம் சேரமான் பெருமாளின் (குலசேகர ஆழ்வார்) தாயாதியான பாஸ்கரவர்மன், சேர நாட்டிற்கு மூன்றாம் சேரமான் பெருமாள் என்ற பெயரில் அரசனானான். (குலசேகர ஆழ்வார் மகனான மார்த்தாண்டவர்மனை தன் கீழ், வேணாட்டிற்கு அரசனாகினான் என்று பார்த்தோம்). இவருக்கு ஐந்து சகோதரிகளும் ஒரு சகோதரனும் உண்டு. ஐந்து சகோதரிகள் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. சேர அரச மகளிரைத் திருமணம் செய்த பாஸ்கரவர்மனுக்கு குழந்தைகள் இல்லை. பட்டமேற்ற பிறகு வாக்களித்தபடி யூதர்கள், கிறித்துவர்கள் மற்றும் முகமதியர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்து தந்தார். இவர், முகமதியர்களுடன் அதிகமான பழக்கம் வைத்துக்கொண்டிருந்தார். பழக்கத்தில் முகமதியப் பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுவிட்டது. இது வெளியே பரவலாகத் தெரிந்தவுடன், நாட்டு மக்கள் மற்றும் நம்பூதிரிகளின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் ஆளானார். ஏனைய செல்வந்தர்களுக்கும் அரசன் மீது கசப்பு ஏற்பட்டுவிட்டது.
அவர்கள் தூண்டுதலின் பேரில், பாண்டிய அரசனாக இருந்த கிபி 830ல் பட்டத்திற்கு வந்திருந்த ஸ்ரீமாறன் பரச்சக்ர கோலாகலன் என்ற ஏகவீரன் என்ற ஸ்ரீவல்லபன் மூன்றாம் சேரமான் பெருமாளோடு போர் செய்து, விழிஞம் என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடித்தான். விழிஞம் என்பது திருவிதாங்கூருக்கு அருகே பத்து மைல் தொலைவில் இருந்த கடற்கரைப் பட்டினம். அங்குதான் சேரர்களின் கடற்படை இருந்தது. (இந்த ஸ்ரீவல்லபன் காலத்திலிருந்துதான் பாண்டிய நாட்டு அரசர்களுக்கு வடமொழியில் பெயர் வைத்துக்கொள்ளும் பழக்கம் ஆரம்பித்தது என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்)
சொந்த மக்களுக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டது. தன்னைச் சுற்றியிருக்கும் அமைச்சர் பெருமக்களில் பலர் மற்றும் முக்கியத்துவம் நிறைந்த நம்பூதிரிகளுக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டது என்பதை மூன்றாம் சேரமான் பெருமாள் புரிந்துகொண்டார். பாண்டியப் படைகள் வஞ்சிநகர் நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள் என்பதை அறிந்த மூன்றாம் சேரமான் பெருமாள் (பாஸ்கரவர்மன்), அரசாட்சியில் வெறுப்புற்று, தன்னுடைய நாட்டை பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து, வேணாட்டையும் ஒட்டநாட்டையும் மார்த்தாண்டவர்மன் மற்றும் அவன் சந்ததிகளுக்கும், ஏரநாட்டை தன் தம்பியின் சந்ததிகளுக்கும், குட்ட நாட்டை (கொச்சின்) தன் சகோதரிகள் ஐவருக்கும், ஏனைய நாடுகளை தன் சுற்றத்தார் மற்றும் நண்பர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு, இரவோடு இரவாக, தன் முகமதிய மனைவியுடன் அரேபியாவிற்குச் செல்லும் கப்பலில் ஏறிச் சென்றுவிட்டான்.
அங்கு சகர்முகல் என்ற துறைமுகத்தில் இறங்கி, மெக்காவை அடைந்து, இஸ்லாமியனாக மதம் மாறி, அப்துல் ரஹ்மான் சாமரின் என்ற பெயரை வைத்துக்கொண்டான். அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவை நோக்கித் திரும்பும் வழியில் விஷக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, ஓமான் தேசத்தில் சலாலா பகுதியில் இறந்தான். சலாலாவில் அவன் சமாதியில், 834ல் வந்து 838ல் மறைந்த சேர அரசன் அப்துல் ரஹ்மான் சாமரின் என்று எழுதப்பட்டுள்ளது (ஹிஜ்ரி ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. நம் புரிதலுக்காக பொது ஆண்டைக் குறிப்பிட்டுள்ளேன்) அவனுடன் கூட வந்தவர்கள் பிறகு கேரளா திரும்பி, கொடுங்களூரில் அவன் நினைவாக ஒரு பள்ளிவாசலை நிறுவினார்கள்.
சலாலா (ஓமன்) அருகில் உள்ள ஸாஃபர் என்ற இடத்தில் உள்ள சேரமான் மூன்றாம் பெருமாளின் சமாதி
நான் சலாலா சென்றிருந்தபோது இந்த சமாதியைப் பார்க்கவில்லை.
ஆனால் நான் பார்த்தது நபி இம்ரான் என்பவரின்
சமாதி. இந்த நபி இம்ரான் என்பவர், இயேசுவின் அன்னையான மரியத்தின் தந்தை. (அதாவது இயேசுவின்
தாத்தாவின் சமாதி). இதில் உள்ள சிறப்பு அல்லது வித்தியாசம் என்னவென்றால், சமாதி 40
அடி நீளமுள்ளது, நபி இம்ரான் அவ்வளவு உயரமானவர் என்று நம்புகிறார்கள். (அந்தப் படத்தை
விரைவில் பதிவு செய்கிறேன்)
சேரமான் மூன்றாம் பெருமாளுடன் திரும்ப இந்தியா பயணித்த ஒருவர் கொடுங்களூரில் கிபி 840ல் கட்டிய முதல் மசூதி. (அதன் தற்போதைய நிலையைக் கீழே கொடுத்துள்ளேன்)
வேணாட்டோடு ஒட்ட நாட்டையும் சேர்த்துக் கொடுத்த பிறகு, தனி அரசாக திருவிதாங்கூர் அரசு ஆனது. அதற்கு அரசனாக இருந்தவர் மார்த்தாண்டவர்மர். இவருக்கு வேணாட்டடிகள் என்ற பெயர் ஏற்பட்டது. அதுமுதல் சமீப காலம் வரை திருவிதாங்கூர் அரசராக இருந்தவர்கள் இவரின் சந்ததியினர்தான். திருவிதாங்கூர் அரசருக்கு வேணாட்டடிகள் என்ற பட்டப்பெயர் இப்போதும் உண்டு.
மார்த்தாண்டவர்மன் கிபி 850 வரை வேணாடு மற்றும் ஒட்டநாட்டின் அரசனாக இருந்தான் என்று பார்த்தோம். கிபி 850ல் இவருக்கு அரசனாக இருப்பதில் வெறுப்பு ஏற்பட்டு, தன் மகனை அரசனாக்கிவிட்டு, தவக்கோலம் பூண்டு தில்லைக்குச் சென்று திருவிசைப்பா என்ற பாமாலையைப் பாடினார்.
திருவிசைப்பாவில், இந்த பத்து பதிகங்களை இயற்றியவர் வேணாட்டடிகள் என்று குறிப்பிடுகின்றனர். வரலாற்றின்படி இதனை இயற்றியது மார்த்தாண்ட வர்மன் என்கின்றனர். ஆனால் சில நூல்களில் இந்தத் திருவிசைப்பா பத்தாம் நூற்றாண்டில் பாடப்பட்ட து என்று சொல்கிறார்கள். (வேணாட்ட டிகள் என்பது திருவிதாங்கூர் இராச்சியத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடுகின்றனர்). அதில் இரண்டு பதிகங்களைப் பார்த்துவிடுவோம்.
துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே
ஆளுகப்பார்
கைச்சாலும் சிறுகதலி இலைவேம்பும் கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீயறிந்தும் எனதுபணி
நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே!
பொருள்: தில்லையம்பலத்தில் நடனமாடும் என் தலைவனே!, அடியவனான நான் தீய செயல்களைச் செய்தாலும் என்னை ஆளும் அப்பனே, நீ பொறுப்பாய் அல்லவா? அடியவர்கள் மனமுகப்புடன் கொடுக்கக்கூடிய சிறு வாழைக்காய் (கச்சக்காய்), வேப்பமர இலை, கறிவகைகளை ஏற்றுக்கொள்ளக்கூடியவனே. உன்னைத் தவிர எனக்கு வேறு புகல் இல்லை என்பதை அறிந்தும், என்னுடைய சேவைகளை நீ மனமுவந்து ஏற்றுக்கொள்கிறாய். (ஏற்றுக்கொண்டு என்னை நீ ஆட்கொள்ளவேண்டும் என்பது உள்ளுறைப் பொருள்)
விளக்கம்: துச்சான – தகாத செயல்களை, கைச்சாலும்-கசந்தாலும், எச்சார்வு-வேறு புகலிடம் அல்லது பற்றுக்கோடு, நம்பான் – அன்பன்.
படுமதமும் மிடவயிறும் உடையகளி றுடையபிரான்
அடியறிய உணர்த்துவதும் அகத்தியனுக்(கு) ஓத்தன்றே
இடுவதுபுல்
ஓர்எருதுக்(கு) ஒன்றினுக்கு வையிடுதல்
நடுஇதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
பொருள்: தில்லையில் நடனமாடும் நடராஜப் பெருமானே!, கண்ணில் வழியும் மதநீரையும் பானை போன்ற பெரு வயிற்றையும் உடைய விநாயகனை மகனாக உடைய தலைவனே, அகத்திய முனிவருக்கு சிவஞானத்தை உணர்த்தியது எவ்வளவு பெருமைக்கு உரியது. இரண்டு எருதுகளில் ஒன்றினுக்கு சத்தான புல்லை இட்டுவிட்டு, இன்னொன்றினுக்கு வெறும் வைக்கோலை இடுவது நடுநிலைமை ஆகாதல்லவா? அதுபோல அகத்திய முனிவருக்கு உம்மை உணர்ந்துகொள்ளும் உயர்ந்த ஞானத்தை அருளிவிட்டு, அடியேனுக்கு அடியேனுக்கு ஞானத்தை அருளாமல் இருப்பது (மிக க் குறைந்த ஞானத்தை அருளியிருப்பது) நடுநிலைமையாகுமா? இது நியாயம்தானா?
விளக்கம்: படுமதம்- மதநீர் பெருகிய, மிடவயிறு-பானை போன்ற பெரிய வயிறு, ஓத்தன்றே-ஒத்தது, பெருமை உடையது, புல்-சத்தான புல், வை-வைக்கோல், சாதாரண புல் என்ற அர்த்தம்,
வெறும்ன பட உலா மாதிரி புகைப்படங்களை மாத்திரம் பகிர்வதை விட, ஏதேனும் நல்ல விஷயங்கள், செய்திகள் தெரிந்துகொள்ளலாமே என்ற எண்ணத்தில் இவற்றையெல்லாம் எழுதுகிறேன்.
பொது ஆண்டுக்கு முன்பு, ரோமப் பேரரசில், ஆரம்பகால ‘Bra’ – அடிப்படை டிசைன், உபயோகப்படுத்தினார்கள், ஆனால் ஃப்ரெஞ்சுக்காரன் 1850ல் மாடர்னாக கண்டுபிடித்தான் என்று சொல்கிறார்கள். இப்படிச் சொல்பவர்கள் யாருமே இந்தியாவின் பாரம்பர்யத்தைத் தெரிந்துகொள்ளாமல், அவங்க கிராமத்தில் இருந்துகொண்டே கூசாமல் எழுதுகிறார்கள். ஒரு பயலுக்காவது நம்முடைய தென்னிந்தியச் சிற்பங்களைப் பார்த்தால் இப்படி பட்டவர்தனமாகப் புளுகத் தோன்றுமா? உலகத்திலேயே மிகவும் குறைவாகக் குளிப்பவர்கள், பல் தேய்ப்பவர்கள், சுத்தமில்லாதவர்கள் யார்னு பார்த்தீங்கன்னா, இந்த நாகரீக தேசம்தான் என்று சொல்லிவிடலாம்.
ஒரு காலத்தில் ஏகப்பட்ட வைணவர்கள் வாழ்ந்த ஊர் இது.
மன்னார்கோயிலைச் சேவித்த பிறகு சுமார் 20 கிமீ தூரத்தில் இருக்கும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதரைச் சேவிக்கச் சென்றோம். கோடகநல்லூர், அத்தாளநல்லூர், மன்னார்கோயில் போன்றவை ஒரே திசையில் உள்ளன. அத்தாளநல்லூர் மற்றும் மன்னார்கோயில் இரண்டையும் என்னுடைய சித்தி சொன்ன பிறகுதான் சென்று சேவித்தோம். அதுவரை இந்த இரண்டு கோயில்களைப் பற்றியும் எனக்குத் தெரியாது. அதன் பிறகு, ஒவ்வொரு முறை திருநெல்வேலி செல்லும்போதும் இந்த இரண்டு கோயில்களுக்கும் சென்று வருவோம்.
அடுத்த வாரம் நாம் காணப்போவது, அத்தாளநல்லூர் கஜேந்திர
வரதர் கோயில். தொடர்ந்து இணைந்திருங்கள்.
(தொடரும்)
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா. வாங்க துரை செல்வராஜு சார்.
நீக்குநலமே வாழ்க..
பதிலளிநீக்குவாழிய நலம்.
நீக்கு/// தாயாதியான பாஸ்கர வர்மன், நம்பூதிரிகள், யூதர், கிறித்துவர் மற்றும் முகமதியர்களிடம், தான் அரசாட்சிக்கு வந்தால் வேண்டும் உதவிகளைச் செய்வதாக வாக்களித்து, அரசாட்சியைக் கைப்பற்றி,//
பதிலளிநீக்குஓ... அப்போது ஊன்றப்பட்ட விதையா!..
ஆஹா... எதை எதையோ கற்றுக்கொள்வதற்குப் பதிலாக வரலாற்றிலிருந்து நம் மக்கள் இதனைக் கற்றுக்கொண்டுவிட்டார்களே
நீக்கும்ம்ம்ம் கோடகநல்லூர் போனோமே, அங்கே யாரும் இந்தப் பெருமாள் கோயில்கள் பத்திச் சொல்லவே இல்லை. :( ஒரே வரிசையில் இருப்பதால் பார்த்திருக்கலாம். இதெல்லாம் நம் கையில் இல்லை.
நீக்குஇந்தத் தென் பாண்டிய நாட்டு அரசர்கள் தான் வலுவில் தொல்லையை இழுத்துப் போக்குக் கொண்டது எனலாம். சேர நாட்டில் பாஸ்கர வர்மன் எனில் தென்பாண்டிய நாட்டில் பாண்டியர்களின் தாயாதிகள். ஒருத்தொருக்கொருத்தர் சண்டையினால் வம்பை விலைக்கு வாங்கினார்கள்.
கோடகநல்லூரில் இன்னும் என் சித்தப்பா இருக்கிறார் (வெகு வெகு வயதான நிலையில்). நாங்கள் திருநெல்வேலிக்கு இன்னும் ஏழு வாரங்களுக்குள் செல்வோம். கோடகநல்லூரிலிருந்து வெகு அருகில்தான் எங்கள் வம்சத்தவர் காஞ்சீபுரத்திலிருந்து மன்னர் கேட்டுக்கொண்டதற்கிணங்க வந்து சேர்ந்த கோபாலசமுத்திரம் இருக்கிறது.
நீக்குநாங்களும் கோடகநல்லூர் சென்றிருக்கிறோம். கோடகநல்லூர் நவ கைலாச தலங்களில் செவ்வாய் கிரகத்திற்கு உரியது. அதை மட்டும் தரிசனம் செய்தோம்.
நீக்குஅங்கு புராதானமான பெருமாள் கோயில் உண்டு. வர்ணகலாபர். புஷ்கரத்துக்கு அந்த ஊரில்தான் தாமிரவருணி ஸ்நாநம் ஆச்சு. அப்போ குமுதம் ஜோதிடர் இராஜகோபாலன் அவர்களும் வந்திருந்தார்கள்.
நீக்கு/// சேரமான் மூன்றாம் பெருமாளுடன் திரும்ப இந்தியா பயணித்த ஒருவர் கொடுங்களூரில் கிபி 840ல் கட்டிய முதல் மசூதி.///
பதிலளிநீக்குஇது புரியாமல் தான் இங்கே பிதற்றித் திரிகின்றனர்
வரலாற்றை அரைகுறையாகப் படித்துவிட்டு பலரும் பலவாறு சொல்லித் திரிகின்றனர். என்ன செய்ய?
நீக்குஅதான் அதைத் திருத்தினவங்களை எல்லாம் விரட்டியாச்சே! முக்கியமா இந்தக் காரணத்துக்காகவே இவரை நீக்கினார்கள். நம்ம ஜனங்களுக்கு அடுத்தவங்க காலில் விழுந்து கிடப்பது தான் பிடிக்கிறது.
நீக்குஉலகத்திலேயே மிகவும் குறைவாகக் குளிக்கின்ற வழக்கத்தை உடையோர் தான் அன்றாடம் வைகறையில் எழுந்து குளிக்கின்றோரைப் பழிக்கின்றனர்..
பதிலளிநீக்குகொடுமை..
இந்தியர்கள் நாகரீகமற்றவர்கள் என்பது பொதுவாக மேற்கத்தையவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு. அவர்களைப் போன்ற நாகரீகம் நமக்கு வேண்டாம் என்பதே நான் நினைப்பது. அவர்களிடம் கற்றுக்கொள்ள ஒன்றும் இல்லையா? பண்டைக் காலத்தில் நாம் கடைபிடித்துப் பிறகு மறந்துபோன, பெண்ணுக்கும் சம உரிமை, மதிப்பு கொடுக்கும் தன்மை.
நீக்குவெளிப்படையாய்ப் பார்த்தால் அவங்க பெண்ணுக்குச் சம உரிமை கொடுப்பதாகத் தான் தெரியும். :)) ஆனால் !!!!!
நீக்குஎன்ன இப்படி பொசுக்குனு சொல்லிட்டீங்க கீசா மேடம்.. ஆண், பெண் எப்போ வேண்டுமானாலும் பிரிந்துவிடலாமே... சமூகம் ஒன்றும் சொல்லாதே... இருவரின் வேலைகளையும் இருவருமே பகிர்ந்துதானே செய்யறாங்க? நீ குடிக்கறயா, நானும்... என்று எல்லாவற்றிலும் சம உரிமை இருக்கிறதே.
நீக்குமன்னார்கோயில் படங்கள் சிறப்பு..
பதிலளிநீக்குஇனி வேறு கோயிலுக்குச் செல்ல இருக்கிறோம் வேறு வரலாறுடன்.
நீக்குவரலாற்றுச் செய்திகளுடன் கூடிய பதிவு..
பதிலளிநீக்குமிக்க நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குசாதாரண (ஹி)இந்தியரின் கணிப்பு முகலாயர்கள் இஸ்லாம் மதத்தை கொண்டு வந்தார்கள், போர்துகீசியரும் ஆங்கிலேயரும் கிறிஸ்துவ மதத்தை கொண்டு வந்தார்கள் என்பதாகும். இக்கணிப்பை மாற்றி இஸ்லாமும் கிறிஸ்துவமும் சேர நாட்டில் (கேரளத்தில்) முன்பே வந்துவிட்டது என்று இன்றைய பதிவு சுட்டிக்காட்டுகிறது. நல்லது.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஜெயகுமார் சார்.. வாசனைப் பொருட்களை எடுத்துக்கொண்டு போய், குதிரைகள் மற்ற பொருட்களை இங்கு விற்பதற்காக அராபியர்களும் ஆங்கிலேயர்களும் இந்தியா வந்தார்கள். அராபியர்களுக்கு கேரளாவில்தான் வாசனைப் பொருட்கள் கிடைக்கும், தமிழக கடற்கரை நகரங்களில் முத்து கிடைக்கும் என்பது தெரியும். ஆங்கிலேய வகையறாக்களும் அப்படித்தான். பிறகு மெதுவாக அவர்கள் நாட்டைப் பிடிக்க மதம் மாற்றினார்கள். அராபியர்களும் ஹிந்துக்களும் கலந்து முஸ்லீம் மத மக்கள் உருவானார்கள். இதுதான் வரலாறு. அதனால் பதிவு வேறு புதிதாக எதையும் சொல்லவில்லை. இந்த இரண்டு மதங்களையும் வளர்த்து, ஹிந்து மக்களை சிறுபான்மையினராக ஆக்கவேண்டும் என்ற அரசியல் நோக்கம்தான் அரசியல்வாதிகளை அவர்களுக்கு சலுகைகள் கொடுக்க வைத்தது.
நீக்குநமக்குப் பிடிக்காவிட்டாலும் இதுதானே உண்மை. இல்லையா சார்?
இது பற்றி ஓரளவு தெரியும் என்றாலும் இவ்வளவு விரிவாகத் தெரியாது. ஆனால் சேர நாட்டுக்கடற்கரையும், தமிழ்நாட்டுக் கடற்கரையும் தான் இவங்கல்லாம் உள்ளே வந்து மக்கள் மனதை மாற்ற உதவியது. அதோடு அரசர்களின் கேடுகெட்ட தாயாதிச் சண்டையும் கூட.
நீக்குசேரமான் பெருமாள் நாயனாரையும், குலசேகர ஆழ்வாரையும் தான் தெரியும். மற்றவர் பற்றிய வரலாறும் அதனால் கேரளாவில் எழுப்பப் பட்ட முதல் மசூதி பற்றியும் இன்றே அறிந்தேன். அநேகமாகத் தென்னிந்தியாவின் முதல் மசூதி அது தான் எனலாமோ? இந்த வரலாற்றை எல்லாம் படிக்கையில் மனம் வேதனை அடைவதைத் தவிர்க்க முடியலை. இது எப்போ ஆரம்பிச்சது? இப்போ என்னவென்றால் நிலைமை தலைகீழாகி இருக்கு. :(
ஆமாம்.. தென்னிந்தியாவின் முதல் மசூதி அதுதான்.
நீக்குஇதுக்கெல்லாம் கலங்கலாமா? பிடித்த பெண்ணைத் திருமணம் செய்வது தவறா? அதனால் மதம் மாற வேண்டி வந்தது. அவ்ளோதான்.
மதம் மாறிய பிறகு பெயரும் மாறி விட்டது...
பதிலளிநீக்குபிறகு எதற்கு சேரமான்?..
அவரே மதம் மாறிவிட்டார் என்பதைக் காட்டவும் வரலாற்றைச் சுட்டிக் காட்டவும்தான்.
நீக்குவக்கிரமாகவும் இருக்கலாம்..
நீக்குஇதைச் சொல்லலைனால் யாருக்கும் வரலாறு தெரியாமலே போயிடும். இப்போ மட்டும் என்ன வாழ்ந்தது?
நீக்குபாஸ்கரத் தொண்டைமான் மதம் மாறியது, இன்னொரு மதம் பிடித்து அல்ல, முஸ்லீமைத் திருமணம் செய்துகொண்டான் (அல்லது தொடர்பு வைத்திருந்தான்), வேறு வழி கிடையாது.
நீக்குபாஸ்கர வர்மன் என்றே சொல்லுங்க நெல்லை. பாஸ்கரத் தொண்டைமான் என்றால் தொ.மு. நினைவில் வருகிறார். :)
நீக்குபாஸ்கர வர்மன்.... வேற ஏதோ நினைத்தபோது இந்தப் பெயர் வந்துவிட்டது. நன்றி கீசா மேடம்
நீக்குகுலசேகர ஆழ்வாரின் வம்சாவளியில் ஒருவர் புறச்சமயம் சார்ந்தார் என்பதை அறிந்து பின்னாளில் வந்த ஸ்ரீ உடையவர மனம் என்ன பாடு பட்டிருக்கும்?..
பதிலளிநீக்குஹூம், சோழ இளவரசி குந்தவை கூட மதம் மாறியதாகச் சில கட்டுரைகள், பதிவுகள், பதிவுலகுக்கு வந்த புதிசில் படிச்சிருக்கேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் பதில் ஏதும் கொடுத்ததில்லை. ஆகவே ஸ்ரீ உடையவருக்கு இதெல்லாம் புதுசாக இருந்திருக்காது. மேலும் சுல்தானின் மகள் மேல்கோட்டை செலுவப்பிள்ளையை விரும்பினாளே. இது எப்போ நடந்தது நெல்லை? ஸ்ரீராமானுஜர் காலத்தில் தானே? அவர் தானே போய் செலுவப்பிள்ளையை மீட்டுக் கொண்டு வந்தார்?
நீக்குஇறைவன் ஒன்றே. இப்படித்தான் நாம் மோட்சம் பெற வேண்டும். அதற்கு இதை இதைச் செய்யவேண்டும், இப்படி இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் இராமானுஜர் சொல்கிறார். அது எல்லாருக்குமே பொது துரை செல்வராஜு சார். திருமால், வைணவம் பிராமணர்களுக்கு மட்டும்தான் என்று அவர் சொல்லவில்லை. எல்லோரையும் உள்ளடக்கியது வைணவம்.
நீக்குகேரள கோயில்கள் ஓரளவு தாந்திரீக வழிபாட்டை உள்ளடக்கியது. இராமானுஜர் வரலாறில் அவர் அதனை மாற்ற முயன்றபோது இறைவனின் அனுமதி கிடைக்கவில்லை என்றே வருகிறது.
வாங்க கீசா மேடம்..ஏதோ நாம் செய்த புண்ணியம், இராஜராஜ சோழன் முஸ்லீமாக மதம் மாறினான், கிறித்துவனாக மதம் மாறினான் என்று இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. வருங்கால மக்கள் மாக்களாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்ததனால்தான் அவங்கள்லாம் நிறைய கோயில்கள் கட்டினார்கள் போலிருக்கிறது.
நீக்குஇராமானுஜர் வரலாற்றில் வரும். ஸ்ரீரங்கத்தில் துலுக்க நாச்சியார் சன்னிதி இருப்பதும், மேல்கோட்டை செல்வப்பிள்ளை திருவடிகளில் பீவி நாச்சியார் விக்ரஹம் இருப்பதும் உண்மைதானே
வணிகத்திற்கென இந்தியாவுக்கு அந்நிய நாட்டினர் வர, வர... ஒரு விதமாக ’வர’லாறு உண்டாகியிருக்கிறது இங்கே. Interesting!
பதிலளிநீக்குஆனால்.. உலகின் பலவேறு பிரதேசங்களிலும், கதை இப்படித்தான், கிட்டத்தட்ட . அங்கு உள்ளூர் ஜனங்கள் - மண்ணின் மக்களான ஆதிவாசிகள் ஆக்ரமிப்பாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்கள். அல்லது அந்நிய ஆக்ரமிப்பாளர்களால் அடக்கி, ஒடுக்கப்பட்டு ஆக்ரமிப்பாளர்களின் மதத்துக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ‘வர’லாறு அப்படிச் செல்கிறது அங்கே
வாங்க ஏகாந்தன் சார்... உலகில் எல்லா இடங்களிலும் இப்படித்தான். வல்லான் வகுத்ததே வாய்க்கால். அந்த வல்லான் இடத்தைப் பிடித்துக்கொண்டதும், ஒழுக்க சீலராக புதிது புதிதாக நல்ல சட்டங்கள் போடுவதும் உண்டு. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா என்று எந்த தேசத்தை எடுத்துக்கொண்டாலும் (மெக்சிகோ, ஆஃப்ரிக்கா உட்பட) அதுதான் உண்மை. ஏன்.. சென்னையிலும் ஆதிகுடிகளை விரட்டிவிட்டு, வந்தேறிகள்தானே ஆக்கிரமித்துக்கொண்டுள்ளார்கள். 'வல்லான் வகுத்ததே'
நீக்குகடலோரப் பரப்பில் மதத்தைப் பரப்பியதன் காரணமும் அரசியல்தான்.
இராஜராஜ சோழரின் அக்கா குந்தவை நாச்சியார் முஸ்லீமாக மாறினார் என்றொரு செய்தியும் திருச்சியில் உண்டு..
பதிலளிநீக்குவிவரிக்க விரும்ப வில்லை..
ஆமாம், கிருஷ்ணவேல் என்று பெயர் கொண்ட தன்னை சரித்திர ஆசிரியர் என்று கூறிக்கொண்டு தப்பும் தவறுமாக யூ டியூபில் செய்திகளை பரப்பி வருகிறார். திருச்சி சிங்காரத்தோப்பில் முஸ்லீமாக மதம் மாறிய குதவைக்கு சமாதி இருக்கிறதாம். அந்த குந்தவைக்குத்தான் திருவரங்கம் கோவிலில் இருக்கும் துலுக்க நாச்சியார் சன்னிதியாம்
நீக்குகுந்தவையின் சமாதி பஞ்சவன் மாதேவி கோயிலில் முன்பு இருந்தது என்று கோவிலைப் பார்த்துக்கொள்ளுபவர் முன்பு சொன்னார். எனக்கு என்னவோ அவர் ராஜராஜனின் மகள் குந்தவை எனத் தோன்றியது. அரைகுறை யூடியூபர்கள் பார்வையாளர்கள் வேணும் என்பதற்காக கண்டதையும் உளறுவார்கள்.
நீக்குதுலுக்க நாச்சியார் சந்நிதியின் பின்னணி வேறு..
பதிலளிநீக்குஇறைவன் மீது அதீத அன்பு கொண்ட யாருமே அவன் பக்தர்கள்தாம். குலம் மதம் குறுக்கே வராது
நீக்குஆவுரித்துத் தின்பவர் கங்கை வார் சடையர்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுள்!...
பதிலளிநீக்குஎன்று அப்பர் பெருமான் முழங்கியதற்குப் பின் நம்மிடையே வேறு பூசல்கள் எதற்கு?...
ஆனால் அவர்கள் கங்கை வார் சடையர்க்கோ கடல் கிடந்தார்க்கோ அன்பர் அல்லவே!...
துலுக்க நாச்சியார் அரங்கன் மீது பற்று வைத்துக் கிடந்தார்..
அந்த அன்பினுக்குத் தான் தலை வணங்குகின்றோம்..
உண்மைதான். ஆனால் நாம் பிறர் மீது வெறுப்பு கொள்ளத் தேவையில்லை. நம் தாயைப் போற்றும் நாம், பிறரை வெறுக்க வேண்டாம், அவர்கள் செயல்கள் கோபமுண்டாக்கினாலும்
நீக்குபாஸ்கரத் தொண்டைமான் மதம் மாறியது, இன்னொரு மதம் பிடித்து அல்ல, முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான்...
பதிலளிநீக்குசிறப்பு..
வற்புறுத்தலுக்காகச் செய்தது அது.
நீக்குகுந்தவை நாச்சியார் புறச்சமயம் சார்ந்தார் என்பதன் பின்னணியை முடிந்தால் விளக்கவும்..
பதிலளிநீக்குஎனக்குத் தெரிந்து அப்படி எதுவுமே கிடையாது. குந்தவை, புத்த விகாரத்திற்கு நிறைய நிவந்தங்கள் அளித்தார். இதற்கும் தக்க காரணங்கள் இருக்கும். புத்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஒரு அரசு ஆதரிக்கவேண்டும் என்ற எண்ணத்தினால். மற்றும் சோழப் பேரரசின் நன்மைக்காகவும்
நீக்குமதுரைக்கு குருதை கொண்டு வந்த 'சுக்கூர்' ங்கற அரபுக்காரனைத்தான்
பதிலளிநீக்குபாண்டிய இளவரசி கண்ணாலம் கட்டிக்கினாள்..
இந்த வரலாறு தெரியாது. இப்படி இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை. சோழர்கள் வடபுலம் வரை படையெடுத்தபோது சோழ சேனாதிபதி ஒருவன் வங்காளத்தில் தங்கிவிட்டதாகவும் பிறகு ஒரு சமயம் அவனை வைத்து ஒரு அரசகிளை முளைத்தது என்றும் படித்திருக்கிறேன்.
நீக்குசுக்கூர் தான் சொக்கர், சொக்கநாதர்... என்று உருட்டப்பட்டது என்று கூட உருட்டு ஒன்றும் உள்ளது..
பதிலளிநீக்குஉள்ளூர் தமிழனுங்க புளியம்பழம் பறிச்சிக்கினு இருந்தப்போ
பதிலளிநீக்குஆரிய வந்தேறிங்க ஒன்னு கூடி
குதிரைக்காரன் சுக்கூரை சொக்கர் ன்னு உருட்டிட்டானுவளாம்...
நம்ம அருணகிரிநாதர் கூட முருகனை மயிலேறிய @#₹%& என்று பாடி வைத்திருக்கின்றார்...
பதிலளிநீக்குமுருகனுக்கு இன்னும் என்னென்ன
பிரச்னை வரப் போவுதோ!?...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசேரவரலாறுகள் நன்றாக தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குமன்னார் கோவில் படங்கள் கண்டோம். நன்றாக உள்ளது.
வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி
நீக்குமுருகேசன் என்பதற்கு புது அர்த்தம் சொல்லிக் கொண்டு
பதிலளிநீக்குவந்து விட்டார்கள்..
இவற்றையெல்லாம் நினைத்தால், எதைச் செய்தாவது தங்கள் மத்த்தைப் பரப்ப வேண்டும் என்ற ஆசைதான். இவங்களுக்கும், பெற்றோர்களை வற்புறுத்தி த.வெ.கவுக்கு வாக்களிக்கச் சொன்ன சிறுவர்களுக்கும் வித்தியாசம் கிடையாது.
நீக்கு/// நாம், பிறரை வெறுக்க வேண்டாம், அவர்கள் செயல்கள் கோபமுண்டாக்கினாலும்.. ///
பதிலளிநீக்குஅற்புதம்!..
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம்... வாழ்க வளமுடன்
நீக்குநிறைய வரலாற்று செய்திகள் தந்து விட்டீர்கள். நிறைய படித்து இருக்கிறீர்கள். அறியாத செய்திகள் படித்து அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குநன்றி.
//சலாலா (ஓமன்) அருகில் உள்ள ஸாஃபர் என்ற இடத்தில் உள்ள சேரமான் மூன்றாம் பெருமாளின் சமாதி
நபி இம்ரான் என்பவரின் சமாதி. இந்த நபி இம்ரான் என்பவர், இயேசுவின் அன்னையான மரியத்தின் தந்தை. (அதாவது இயேசுவின் தாத்தாவின் சமாதி).
கொடுங்களூரில் கிபி 840ல் கட்டிய முதல் மசூதி.//
வேணாட்டடிகள் பற்றி தெரிந்து கொண்டேன்.
அனைத்தையும் . தேடி தந்து விட்டீர்கள், எவ்வளவு விவரங்கள். உங்கள் உழைப்பு அதிகம் தான்.
வாங்க கோமதி அரசு மேடம். நானுமே படிக்கும்போது சில விஷயங்களை புதியதாகத் தெரிந்துகொண்டேன். ஒரு நாள் மரியத்தின் தந்தையின் சமாதி படத்தைப் பகிர்கிறேன் (அது புதனில்தான் வரும் ஸ்லாட் இருக்கிறது)
நீக்குதிருவிசைப்பா பதிகங்கள் பகிர்வு அதன் விளக்கம் அருமை.
பதிலளிநீக்குமன்னார் கோயில் படங்கள் எல்லாம் அருமை.
//வெறும்ன பட உலா மாதிரி புகைப்படங்களை மாத்திரம் பகிர்வதை விட, ஏதேனும் நல்ல விஷயங்கள், செய்திகள் தெரிந்துகொள்ளலாமே என்ற எண்ணத்தில் இவற்றையெல்லாம் எழுதுகிறேன். //
நல்ல விஷயங்களை நீங்கள் படித்து அதை பகிர்வது நல்லது, நன்றி.
உங்கள் பணி தொடர வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.
நீக்குஇதுவரை அறியாத பல செய்திகள், தகவல்கள் கொண்ட சிறப்பான பதிவு. ஓமானில் பல வருடங்கள் இருந்தாலும் சலாலா செல்லும் வாய்ப்பு ஏனோ அமையவில்லை.
பதிலளிநீக்குசலாலா மாதிரி ஒரு இடத்தை கல்ஃபில் காண முடியாது. கரீப் சீசனில் அங்கு போகவே முடியாது, அவ்வளவு வாடகை உயர்ந்துவிடும் என்பார்கள். மஸ்கட்டிலிருந்து ஆயிரம் கிமீ.
நீக்குவரலாறு ஆன்மிகம் இரண்டையும் ஒரு நிபுணத்துவத்துடன் எழுதும் நெ.த மிகவும் கவர்கிறார். நடுநிலைமை அவரது மற்றுமொரு பெருமை.
பதிலளிநீக்குவாங்க ராமன் சார். நேற்று பார்க்க விட்டுப்போயிடுத்து. மிக்க நன்றி
நீக்குநமக்குத் தெரிந்ததே மிக்க் குறைவு. இதுல இதுதான் சரி, அது தவறு எனச் சொல்ல நாம் யார்? அதனாலத்தான் பக்தி உணர்வு என்பதற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
இரண்டு பதிகங்களும் சுவாரஸ்யம். நல்ல சந்தநடை. கேரளத்தில் அரசாண்ட மன்னன் இஸ்லாமிய மதத்தைத் தழுவினான் என்பது எனக்கு செய்தி. அங்கு கிறித்தவமும், யூதர்களும், முகமதியர்களும் ராஜராஜன் காலத்துக்கு முன்பிருந்தே இருந்தனர் என்பதும் ஆச்சர்யம்.
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம்.. அதற்கு முன்பே...ய இஸ்லாத்திற்கு முன்பே வியாபாரத் தொடர்புகள் இருந்திருக்க வேண்டும். பிறகு குழுவாக இங்கே தங்கி இடம் வாங்கி, பாதுகாவலர்களை படைகளை வைத்திருந்திருக்க வேண்டும்.
நீக்குபடங்கள் வழக்கம்போல தெளிவு, அழகு. சின்னச்சின்ன ஊர்களைக் கூட விடாமல் சென்று பார்த்திருக்கிறீர்கள் என்பது வியப்பு. பிரமிக்கிறேன்.
பதிலளிநீக்குஆனால் ஶ்ரீராம்.. இது மிகப் பெரிய கோயில். ஆழ்வார் திருவரசு உள்ளதால் முக்கியமானது. திருக்குறுங்குடில திருமங்கையாழ்வார் திருவரசு வயல்களின் பகுதியில் உள்ளது.
நீக்குநிறைய நுண்ணிய விவரங்களை தேடிப்பிடித்துப் படித்து பகைர்ந்திருக்கிறீர்கள். இன்னும் கொஞ்ச காலம் போனால் படித்தவற்றில் என்னென்ன எனக்கு நுண்ணிய விவரங்கள் நினைவில் இருக்கும் என்பது கேள்விக்குறிதான். இவற்றை எல்லாம் எங்கு எப்படி தேடிப்பிடித்தீர்கள் என்பதும் பிரமிப்பு.
பதிலளிநீக்குபின்பு இவற்றையும், குரு பரம்பரையையும் சீர் செய்தால் நல்ல புத்தகமாக வரும்.
நீக்கு